முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கி றிஸ்தவர்கள்


முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)

கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்

கேரளாவில் ஜோசப் என்ற பேராசிரியர், முஹம்மதுவை அவமதிக்கும் விதத்தில் கேள்வித் தாளை தயாரித்ததற்காக, இஸ்லாமியர்களில் சிலர் அவரது கையை துண்டித்தனர்.

இது சரியா தவறா?

ஒரு சாரார் "இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தியதால், இந்த தண்டனை அவருக்கு சரியானது" என்று கூறுவார்கள்.

இன்னொரு சாரார் "அவர் தான் மன்னிப்பு கேட்டுவிட்டாரே, கல்லூரியும் அவரை சஸ்பண்ஸ் செய்துவிட்டதே, பின் ஏன் அவருக்கு இந்த தண்டனையை தரவேண்டும்?" என்று கேட்பார்கள்.

இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இதை படிக்கும் நீங்கள் இஸ்லாமியராக இருப்பீர்களானால், உங்கள் கருத்தென்ன?

ஒரு மார்க்கத்தினரின் மனதை புண்படுத்தினால், இதற்கு காரணமாக இருந்தவருக்கு இந்த தண்டனை சரியானது தான் (அவர் மன்னிப்பு கேட்டுவிட்டாலும் சரி) என்று கூறுகிறீர்களா?

அல்லது

கைகளை துண்டித்தவர்கள் கொடுமைவாதிகள் என்றுச் சொல்வீர்களா?

மேற்கொண்டு இந்த கட்டுரையை படிக்கலாமா வேண்டாமா?

ஒரு மார்க்கத்தை விமர்சித்து, அம்மார்க்கத்தவர்களின் மனதை புண்படுத்துபவருக்கு இந்த தண்டனை சரி தான், அவர் மன்னிப்பு கோரினாலும் விடக்கூடாது, இப்படித்தான் செய்யவேண்டும் என்றுச் சொல்பவர்கள் மட்டுமே மேற்கொண்டு இந்த கட்டுரையை படியுங்கள். அவர்களுக்காகத் தான் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

இது கொடூரம், ஒரு சின்ன விஷயத்திற்காக, அதுவும் மன்னிப்பு கேட்டுவிட்ட பிறகும், சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு கொடூரமாக நடந்துக்கொள்வது காட்டுமிராண்டித் தனம் என்றுச் சொல்பவர்கள், மீதமுள்ள இந்த கட்டுரையை படிக்கவேண்டாம்.

.
.
.
.
.
.
இந்த வரியை படிக்கும் நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்தால், நிதானத்தை இழக்காமல், நேர்மையான முறையில், ஒரு அமைதி மார்க்கத்தை பின்பற்றுகின்றவர்கள் என்றுச் சொல்லிக்கொள்ளுகின்றவர்கள் நீங்கள் என்ற விவரத்தை மறந்துவிடாமல் மீதமுள்ள வரிகளை படிக்கவும்.

அதாவது, நாங்கள் அதிகமாக நேசிக்கும் நபியை அவர் எப்படி கேலி செய்யலாம்? எப்படி விமர்சிக்கலாம், எப்படி அவதூறாக எழுதலாம் என்பது தானே உங்கள் கோபம்.

உங்கள் கோபம் நியாயமானதா என்று சிந்தித்துப்பார்க்க உங்களுக்கு விருப்பமா?

உங்களின் கருத்துப்படி, ஒருவர் இன்னொருவரின் மார்க்கத்தை, அதன் ஆன்மீக தலைவரை விமர்சித்தால் (தெரிந்தும், தெரியாமலும் செய்தாலும் சரி) அவருக்கு தண்டனை தரவேண்டும்.

இந்த நிலையில் உள்ள நீங்கள் நேர்மையானவர்களாக இருப்பீர்களானால் மிகவும் நன்றாக இருக்கும், அது தான் நியாயமும் கூட. இதுவரை நிதானமாக படித்த நீங்கள், கீழ்கண்ட விவரங்களை படித்து கொதித்து எழவேண்டாம், அதற்கு பதிலாக, ஓர் இடத்தில் அமைதியாக உட்கார்ந்துக்கொண்டு, சிந்தித்துப் பாருங்கள்.

இதே மனநிலையில் இருந்த மக்கா மக்கள் (குறைஷிகள்):

நீங்கள் மிகவும் நேசிக்கும் உங்கள் முஹம்மது வாழ்ந்த காலத்தில், அவர் இஸ்லாமை பரப்பும் போது, குறைஷிகளின் தெய்வங்கள் பற்றியும், நம்பிக்கைகள் பற்றியும் அவதூறாக பேசினார், அவர்களின் தெய்வங்கள் வெறும் கற்கள் என்றுச் சொன்னார்.

இன்று இஸ்லாமியர்களுக்கு கோபம் வருவது போலவே அவர்களுக்கும் வந்தது, அவர்கள் முஹம்மதுவையும் , அவர்களின் அடியார்களையும், தோழர்களையும் கொல்லவும், கொடுமைப்படுத்தவும் ஆரம்பித்தனர். இதனால், உயிருக்கு பயந்து முஹம்மது மதினாவிற்கு இடம்பெயர்ந்துச் சென்றார்.

இப்போது நேர்மையானவர்களாகிய இஸ்லாமியர்களுக்கு சில கேள்விகள்:

1) மக்காவினரின் தெய்வங்கள் பற்றி அவதூறாக பேசியதற்காக, உங்கள் முஹம்மதுவை அவர்கள் வெறுத்து,கொலை செய்ய முயற்சி செய்தது சரியா தவறா? (கேரளாவின் ஜோசப்பிற்கு செய்தது சரி என்றுச் சொன்னால், முஹம்மதுவை மக்காவினர் விரட்டி அடித்ததும் சரியானது, நியாயமானது தானே) இதை அங்கீகரிக்கின்றீர்களா? இல்லையா?

2) ஒரு மார்க்கத்தாரின் மனதை புண்படுத்தியவர் யாராக இருந்தாலும், அவர் கைகள் துண்டிக்கப்படவேண்டும், இது தானே இஸ்லாமியராகிய உங்களின் மனநிலை. இதே மனநிலையில் அக்காலத்தில் மக்காவினரும் இருந்தனர். ஆக, இஸ்லாமியர்களும் முஹம்மதுவிற்கு தொல்லை கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்த மக்காவினரும் ஒரே இரகத்தைச் சார்ந்தவர்கள். இதை அங்கீகரிக்கின்றீர்களா?

இல்லை! நாங்கள் அங்கீகரிக்கமாட்டோம் என்றுச் சொல்வீர்களானால், எந்த வகையில் நீங்கள் அவர்களை விட வித்தியாசமானவர்கள் என்று இஸ்லாமியரல்லாதவர்களாகிய எங்களுக்கு தெரிவியுங்கள்.

இப்போது நீங்கள் என்ன முடிவை எடுக்கப்போகிறீர்கள்?

அன்றைய மக்காவினரும், இன்றைய இஸ்லாமியர்களும் ஒன்றா? அவர்கள் நடந்துக்கொண்ட விதமாகவே அல்லவா நீங்களும் இன்று நடந்துக்கொள்கிறீர்கள்! அப்படியானால், உங்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசமென்ன?

இன்று கேரளாவில் நடந்தது சரியே என்றுச் சொல்வீர்களானால், அன்று மக்காவில் நடந்ததும் சரியே.

ஜோசப்பை சட்டத்தையும் மீறி இன்று இஸ்லாமியர்களில் சிலர் கொடூரமாக தாக்கியது சரியே என்றுச் சொன்னால், அன்று மக்காவினர் முஹம்மதுவை கொடுமைப்படுத்தியதும் சரியே?

இதற்கு உங்களுடைய பதில் என்ன?

(எந்த தெய்வம் உண்மை, எது பொய் என்பது இப்போது கேள்வி இல்லை, இங்கு பிரச்சனை – ஒரு மார்க்கத்தை ஒன்னொரு மார்க்கத்தவர்கள் விமர்சிக்கலாமா என்பது தான். அப்படி விமர்சித்தால், அவர் யாராக இருந்தாலும் [முஹம்மதுவாக இருந்தாலும் சரியே] இப்படியே சட்டத்தை மீறி தாக்கலாமா என்பது தான்).

உங்களுக்கும், மக்காவின் மக்களுக்கும் இடையே ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. நீங்கள் இருவரும் ஒரே வழியில் செல்கின்றவர்களாகவே தெரிகின்றனர்.

முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள்:

கிறிஸ்தவர்கள் உயிரினும் மேலாக மதிக்கும் இயேசுவைப் பற்றி அவதூறாக முஹம்மது பேசினார், குர்‍ஆனில் இன்றும வசனங்கள் உண்டு. இயேசு இறைவன் அல்ல என்றுச் சொல்லும் போதெல்லாம் கிறிஸ்தவ மார்க்கத்தார்களின் மனது புண்பட்டு இருக்கும்? இன்றும் புண்பட்டுக்கொண்டே இருக்கிறது, வேதனை அடைந்துக் கொண்டே இருக்கிறது. அப்படி இருக்கும் போது, கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவின் கைகளை அன்று வெட்டவில்லை. ஏனென்றால், கிறிஸ்தவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் இயேசுக் கிறிஸ்து "என்னை அவமானப்படுத்தும் நபர்களை நீங்களே தண்டியுங்கள்" என்றுச் சொல்லவில்லை. ஆகையால், அவர்கள் முஹம்மதுவின் கைகளை வெட்டவில்லை, வெட்ட மாட்டார்களும் கூட.

அது அப்படி இல்லை, உண்மையாகவே இயேசு ஒரு நபி மட்டும் தான், அவர் இறைவன் இல்லையே! அதைத் தான் முஹம்மது விமர்சித்தார் என்று இஸ்லாமியர்கள் இன்று சொல்லுவார்கள். ஆனால், கேள்வி என்னவென்றால், சொல்லப்பட்ட செய்தி உண்மையா இல்லையா என்பது இப்போது பிரச்சனை இல்லை, ஒருவர் இன்னொரு மார்க்கத்தவர்களின் மனதை புண்படுத்தினால், அவருக்கு இந்த தண்டனையை அனைத்து மார்க்கத்தவர்ளும் கொடுக்கலாமா? முஹம்மதுவை ஒரு நபி என்று நீங்கள் மட்டும் தான் நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள், இதை நம்பாதவர்கள் முஹம்மதுவை விமர்சிக்கலாமா?

உலகத்தில் இஸ்லாமியர்கள் தவிர வேறு எந்த மார்க்கத்தவர்களும் முஹம்மதுவை ஒரு நபி என்று ஏற்றுக்கொள்வதில்லை, அல்லாஹ்வை ஒரு இறைவன் என்று ஏற்றுக்கொள்வதில்லை, காரணம் அவர் ஒரு பொய் நபி என்று அவர்கள் நம்புகின்றனர். அவரவருக்கு அவரவர் நம்பிக்கை உண்மையானதாக தெரியும்.

இன்று இஸ்லாமியர்களின் கருத்தின்படி, அன்று கிறிஸ்தவர்கள் செய்தது தவறு, அதாவது தங்கள் மார்க்கத்தை முஹம்மது விமர்சித்தால், அவர்களின் மனதை புண்படுத்தினால், ஒரு எட்டுப்பேர் சென்று அவரது கைகளை பிடித்து வெட்டியிருக்கவேண்டும், அது தான் சரியானது என்று இஸ்லாமியர்களாகிய நீங்கள் சொல்லமுடியுமா? (நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால்?).

இன்று கூட கிறிஸ்தவத்தை விமர்சிக்கும் இஸ்லாமிய அறிஞர்களின் கைகளை கிறிஸ்தவர்கள் வெட்டவேண்டும்? ஆனால், செய்வதில்லை?

பைபிளை விமர்சிக்கும் ஜாகிர் நாயக்கின் கைகளை வெட்டித் தள்ளவும், அதே போல, விமர்சிக்கும் பீஜே அவர்களின் கைகளையும் வெட்டிவிடவும்
வேண்டுமென்று, எந்த ஒரு கிறிஸ்தவ குழுவாவது கோஷமிட்டுக்கொண்டு வருகின்றதை பார்க்கமுடியுமா?

நம்முடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்கு விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்லப்போகிறோம், அதுவே போதும் . அதை விட்டுவிட்டு, கத்தியோடும், குண்டுகளோடும் திரிய கிறிஸ்தவர்கள் என்ன காட்டுமிராண்டிகளா? மத நம்பிக்கயுள்ளவர்கள் மிருகத்திலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கோட்பாட்டை நம்புவதில்லை, ஆனால், இஸ்லாமியர்களில் சில நல்ல இஸ்லாமியர்கள் மிருகங்களைப்போலவே நடந்துக்கொள்கிறார்கள்.

முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய யூதர்கள் (ஆண்கள்):

முஹம்மது யூதர்களையும்,அவர்களின் நம்பிக்கையையும் விமர்சித்தார், இஸ்லாமியர்களைப்போல யூதர்களும் கற்றுக்கொண்டு இருந்திருந்தால், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று ஒரு கை பார்த்து இருப்பார்கள், ஆனால், அவர்கள் செய்யவில்லை.

இன்றைய இஸ்லாமியர்களின் மனநிலையின்படி, அவர்கள் முஹம்மதுவை தாக்கி,கொன்று அல்லவா இருக்கவேண்டும்? ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை. (ஆனால், ஒரு யூதப்பெண் முஹம்மதுவிற்கு விஷம் வைத்து கொன்று விட்டாள், இந்தப் பெண்ணும் முஹம்மதுவை கொல்ல வேண்டும் என்பதற்காக விஷம் வைக்கவில்லை, தன்னை பைபிளின் தேவன் தான் அனுப்பினார் என்றுச் சொல்லிக்கொண்டு இருக்கிறாரே இவர், இது உண்மையா என்பதை சோதிக்க விஷம், வைத்தாள், ஜெயித்தாள். முஹம்மதுவும் அல்லாஹ்வும் தோற்றனர்).

துண்டிக்கப்பட்டது கையா அல்லது இஸ்லாம் மீது மற்றவர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையா?

இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, பல இலட்சங்கள் செலவு செய்து,அனேக நிகழ்ச்சிகளை இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்பாடு செய்து, படாத பாடு படுகின்றார்கள். ஆனால், ஒரு சிலர் உங்கள் முஹம்மதுவின் வழியில் நடந்து இப்படி வெட்டிச் சாய்க்கிறார்கள். இஸ்லாமியரல்லாதவர்கள் இந்த நிகழ்ச்சி பற்றி என்ன நினைப்பார்கள்? இஸ்லாம் அமைதி மார்க்கமென்று நினைப்பார்களா அல்லது வன்முறை மார்க்கமென்பார்களா?

இஸ்லாமியர்கள் சிந்திக்கவேண்டும், எத்தனை அமைதி நிகழ்ச்சிகளை இஸ்லாமியர்கள் நடத்தினாலும், சில நாட்களில் இஸ்லாமியரல்லாதவர்கள் மறந்துவிடுவார்கள், ஆனால், கேரளாவில் நடந்த நிகழ்ச்சியை மக்கள் முக்கியமாக இஸ்லாமியரல்லாதவர்கள் என்றென்றும் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். நல்ல பெயர் எடுக்க ஆண்டுகள் பிடிக்கும், கெட்ட பெயர் எடுக்க ஒரு நாள் போதும்.

ஆக, இந்த நிகழ்ச்சி மூலமாக மக்கள் புரிந்துக்கொண்டது என்ன? இஸ்லாமியர்களில் சிலர் வன்முறைவாதிகளாக இருக்கிறார்கள், இதற்கு அவர்களின் இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் காரணமாக இருக்கிறார்கள். மொத்தமாக பார்த்தால், ஜனநாயக நாட்டிலும், உண்மை இஸ்லாமிய முகம் காட்டப்பட்டுவிட்டது.

முடிவுரை: இதை நிதானமாக படித்த இஸ்லாமியரே, உங்கள் மார்க்கத்தை விமர்சித்தால், அவருக்கு தண்டனைத்தரவேண்டும் என்று அவேசம் கொள்ளும் நீங்கள், மற்றவர்களின் மார்க்கத்தை விமர்சிப்பது ஏன்?

உங்கள் முஹம்மது குறைஷிகளின் தெய்வங்களை ஏன் விமர்சித்தார், கிறிஸ்தவத்தையும், யூதர்களையும் ஏன் விமர்சித்தார்? உங்களுக்கு ஒரு நியாயம்,மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?

மற்றவர்கள் கையில் வாளை எடுக்கவில்லை என்ற காரணத்தால் நீங்கள் தப்பித்துக்கொண்டு உலகில் வாழ்ந்துக்கொண்டு வருகிறீர்கள். உங்களைப்போன்றே மற்றவர்களும் செய்தால், நாட்டில் இரத்தவெள்ளம் அல்லவா ஓடும்?

இனியும், கொடுமையையும், வன்முறையையும் பின்பற்றுவதை விட்டுவிட்டு, மனிதர்களாக வாழ முயற்சி எடுங்கள்.. முடிந்தால்..!!!


7/20/2010 10:21:00 AM அன்று ஈஸா குர்-ஆன் – Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது

1 பின்னூட்டம்

Filed under Uncategorized

One response to “முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கி றிஸ்தவர்கள்

 1. islamiyan

  தமிழ் முஸ்லிம் அவர்களே!

  முதலிலே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ஒரு சிலரோ அல்லது சில குழுக்களோ செய்யும் தவறுகளுக்கு அவர்கள் சார்ந்த ஒட்டு மொத்த சமுதாயத்தையும் குற்றம் சுமத்தக்கூடாது! ஏனென்றால் அந்த (கேரளாவில் நடந்த) கை வெட்டு சம்பவத்தை உலகமுலுவதுமோ, இந்தியா முழுவதுமோ உள்ள முஸ்லிம்கள் ஆதரிக்கிறார்களா? இல்லை எனபது உங்கள் மூலமே வெளிவந்து இருக்கின்றது. ஒரு சிலர் செயத தவறுக்காக இஸ்லாத்தையே பலிகடாக்க நினைப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. அவ்வாறு வெளியிடுவது மூலம் நீங்கள் இஸ்லாத்தின் மீது காழ்புணர்ச்சியோடு செயல்படுகிறீர்கள் எனபது உண்மையாகிறது!

  முஹம்மது நபி (ஸல்) அவர்களை விமர்சிப்பதற்காக கைகளை வெட்ட வேண்டும் என்றால் இதற்கு முன்னாள் டென்மார்க்கிலே ஒரு பாத்திரிக்கையில் கிருஸ்துவமதத்தை சார்ந்த ஒருவர் கேலி சித்திரம் வரைந்து தனது விமர்சனத்தை வெளியிட்டு இருந்தார். எந்த முஸ்லிம் அவருடைய கைகளை வெட்டினான்! உங்களால் கூறமுடியுமா? தமிழ்நாட்டிலேயும் நக்கீரன்,தினமலர்,முத்தாரம் போன்ற இதழ்களிலும் நபிகள் நாயகத்தை விமர்சித்து செய்திகள் வெளிவந்தன எந்த முஸ்லிமாவது அந்த பத்திரிகைகளின் ஆசிரியர் கைகளை வெட்டினானா? அவ்வாறு ஏதும் சம்பவம் நடந்ததாக உங்களால் கூறமுடியுமா? ஆகவே எங்கோ நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவத்திற்கு ஒட்டு மொத்த இஸ்லாத்தையும் குற்றம் சுமத்த நினைப்பது தவறு என்பதை முதலில் விளங்கி கொள்ளுங்கள் .

  இஸ்லாத்தையும், நபிகள் நாயகத்தையும் காலம் காலமாக கிருஸ்தவர்கள் விமர்சித்துதான் வந்து கொண்டிருகின்றார்கள் அவர்களை எல்லாம் இஸ்லாமியர்கள் உங்கள் பார்வையில் வெட்டி வீழ்த்திவிட்டனரா? முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறைசிகளின் தெய்வங்களை விமர்சித்ததாக அவர்களின் கைகளை வெட்ட சொல்லும் நீங்கள் இன்று உலகம் முழுவதும் இஸ்லாத்தையும், இறைத்தூதரையும் படு கேவலமாக விமர்சிக்கும் கிறிஸ்தவர்களையும், மற்றவர்களையும் உங்கள் பார்வையில் என்ன செய்யவேண்டும் என்கிறீர்கள்? அவ்வாறு விமர்சிப்பவர்களை மன்னித்தும் அவர்களுக்கு அமைதியாக (தேவை பட்டால் ஜனநாயக வழியில்) அந்த தவறை சுட்டிக்காட்டியும் சகோதரத்துத்வதோடும் வாழ்ந்துவரும் இந்த அமைதியைதான் இஸ்லாம் வலியுறுத்துகிறது எனபது ஏன் உங்களுக்கு விளங்கவில்லை? அல்லது விளங்கியும் இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக விமர்சிக்கிறீர்களா?

  ஒவ்வொரு முஸ்லிமும் ஏதோ கையிலே வாலை எடுத்துக்கொண்டு இஸ்லாத்தை யார் விமர்சித்தாலும் அல்லது இஸ்லாத்திற்கு எதிராக நடந்தாலும் வெட்டி வீழ்த்துவோம் என்று திரிவது போல் உங்கள் வார்த்தையை அமைத்து இருகின்றீர்கள்! இன்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களையும், கிறிஸ்த்துவர்களையும் எடுத்துகொண்டால் உங்களுக்கே தெரியும் யார் தீவிரவாதத்தை கையில் எடுத்துக்கொண்டு அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றார்கள் என்று? இஸ்லாம் ஒருபோதும் வன்முறையை ஆதரிக்காத மார்க்கம். அமைதியை மட்டுமே விரும்பும் மார்க்கம் இஸ்லாம் என்பதற்கு அடுக்கடுக்கான பல சம்பவங்கள் உண்டு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s