Monthly Archives: மார்ச் 2011

விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல்! கடைசிவரை பி ரபாகரன் சிக்கவில்லை!

இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை!
விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல்!

prabhakaran123.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள்.

அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். அதன் காரணமாகவே போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறிப்பு அரசாங்கமோ பாதுகாப்புப் படைகளோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.

ஆனாலும் ராஜபக்சேவுக்கும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாயவுக்கும் போர் களத்தின் உண்மையான நிலவரம் பற்றிய சரியான தகவல்

ஒருங்கிணைப்பு கிடைக்கவில்லை. இதனால் இலங்கை அரசு விரும்பியதுபோல பிரபாகரன் உயிருடன் அராசங்கப் படைகளிடம் சிக்கவில்லை, என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 25, 2009 ல் புலிகளுடனான போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரிடம் ராஜபக்சே கூறியதாகவும், இந்தத் தகவல் இந்திய வெளியுறவுச்செயலர் நாராயணனுக்கு தெரியும் என்றும், ஆனால் கடைசி வரை அதனை வெளியிடாமலேயே விட்டுவிட்டதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

source:nakkheeran

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

“நிர்வாண நகரத்தில் கோவணம் கட்டியவன் ஆண்ட ி’

large_215057.jpg

"நிர்வாண நகரத்தில் கோவணம் கட்டியவன் ஆண்டி’ என்ற கதையாக, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வைப் பின்பற்றி, சட்டசபை தேர்தலையொட்டி, பா.ஜ., இலவசங்களை அறிவித்துள்ளது. இது, ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியாக உள்ளது.என்னதான் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினாலும், தலையால் தண்ணீர் குடித்தாலும், மூன்று தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறுவதே பெரிய விஷயம். நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்கப் போவதில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, திராவிடக் கட்சிகளுக்கு, நாங்களும் சளைத்தவர்களல்ல என்ற ரீதியில் இலவசங்களை அறிவித்துள்ளது வேதனையாக உள்ளது. நெஞ்சை நெருடுவது போல உள்ளது. "யூ டூ பி.ஜே.பி.,’ என கேட்கத் தோன்றுகிறது.குஜராத்தில் கடந்த சட்டசபை தேர்தலின்போது, தமிழகத்தைப் பின்பற்றி, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இலவச கலர் "டிவி’ தருவோம்’ என்றதாம் காங்கிரஸ். நரேந்திர மோடியோ, "அந்தக் கலர் "டிவி’க்கு வரி விதிப்பேன்’ என்றாராம்.ஓசியில் "டிவி’ கொடுப்போம் என்ற காங்கிரஸ் தோற்றது. இலவச "டிவி’க்கு வரி விதிப்பேன் என்ற நரேந்திர மோடி வென்றார்.கடந்த 2006 சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., அறிவித்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும், இரண்டு ஏக்கர் நிலமும், ஒரு ரூபாய் அரிசியும் தான் தங்களை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதாக, கருணாநிதியும், அவர் கட்சியினரும் கருதிக்கொண்டு இருக்கின்றனர்.ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் தான், தி.மு.க.,வை மீண்டும் அரியணையில் அமர்த்தியது.இலவசங்களுக்காக இளித்துக்கொண்டு மக்கள் ஓட்டளித்து விடுவர் என்றால், தி.மு.க., போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடியிருக்க வேண்டுமே! மைனாரிட்டி அரசாகத் தானே கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்து இருந்தது.இலவசங்கள் ஆட்சியில் அமர்த்திவிடும் என்றால், தலைநகரில் உள்ள தொகுதிகளில் தலைவர்கள் போட்டியிடாமல், ஏன் வெளி மாவட்டங்களைத் தேடி ஓடுகின்றனர். அவர்களைப் பின்பற்றி, பா.ஜ.,வும் இலவசங்களை அறிவித்துள்ளது, கேட்பதற்கே கேவலமாக உள்ளது.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மனித மூளைக்கு கட்டுப்பட்டு இயங்கும் புத ிய கார்.(வீடியோ இணைப்பு)

ஜேர்மனியைச் சேர்ந்த அடானமஸ் லேப் மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இக்கருவி மூலம் மனித மூளையின் விருப்பபடி வாகனங்களை இயக்கலாம். வாகன ஓட்டி சென்சார் கேப் ஒன்றை அணிந்து கொள்வதன் மூலம் மூளையின் எலக்ட்ரோ மேக்னடிக் மின் காந்த அலைகளை வைத்து தங்கள் மூளையின் செயல்பாட்டை கம்ப்யூட்டர் அறிந்து கொள்ள முடியும்.

மூளையின் வலது இடது வழி முறைகளை, மூளையின் கட்டுப்பாட்டோடு இணைந்து கணணியின் மென்பொருள் செயல்படும். இது தவிர வேகப்படுத்தல், வேகத்தைக் குறைத்தல், போன்றவற்றை அடையாளம் கண்டுகொள்ளவும் பயிற்சி கொடுக்க ஆராய்ச்சியாளர்கள் வழிகளை கண்டுபிடித்துள்ளனர்.

வாகன ஓட்டிகள் இந்த சென்சார் கேப்பை தலையில் பொருத்தியவுடன் வாகனத்திற்கு உத்தரவிடத் தொடங்கும். அந்த வாகனமும் 360 கோணத்தில் தன்னைச் சுற்றியுள்ளவற்றை அறியும் விதமாக வீடியோ காமிராக்கள் ராடார்கள் லேசர் சென்சார்களைக் கொண்டிருக்கும். ஒரு புற மற்றும் இரு புற சந்திப்பு வரும் இடத்தில் கார் தன்னைத் தானே செலுத்திக் கொல்லும். பின்னர் வடது, இடது பக்கம் வாகன ஓட்டியின் உத்தரவுப்படி திரும்பும்

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கம்ப்யூட்டர் கேள்வி பதில்

E_1300074588.jpeg
கேள்வி: சிடி மற்றும் டிவிடிக்களில் டேட்டா எழுதும் இலவச பர்னிங் புரோகிராம் ஒன்று கூறவும். அதில் அனைத்து வசதிகளும் இலவசமாகவே கிடைக்க வேண்டும். நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன்.
-எஸ். சிக்கந்தர், திண்டுக்கல்.
பதில்: ஒன்றென்ன மூன்று தருகிறேன். 1. அஷாம்பு சிடி பர்னிங், 2. சி.டி. பர்னர் எக்ஸ்பி புரோ மற்றும் 3. டீப் பர்னர். இவற்றை கீழ்க்காணும் தளங்களில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். அவை தரும் இலவச வசதிகளுக்கு அந்த தளங்களில் அல்லது புரோகிராம் ஹெல்ப் பக்கங்களில் படிக்கவும்.
http://www2. ashampoo.com/webcache/html/1/ product_2_1110__.htm
http://cdburnerxp.se/download.php
http://www.deepburner. com/?r=download

கேள்வி: என் வீட்டில் இரண்டு பிரிண்டர் களை இணைத்துள்ளோம். ஒன்று லேசர்; இன்னொன்று இங்க் ஜெட். இரண்டும் ஒரே நிறுவனம். அச்செடுக்கையில் அடிக்கடி பிரிண்டரை மாற்றி தேர்ந்தெடுக்கும் படி ஆகிவிடுகிறது. பிரிண்டருக்கு நாம் பெயர் கொடுத்தால், இந்த குழப்பம் நீங்கும். எப்படி பெயரை மாற்றலாம்? என விளக்கவும்.
-கே. சியாமளா, திருப்புவனம்.
பதில்: இந்த குழப்பம் எங்கள் அலுவலகத்திலும் உண்டு. நாங்கள் என இரண்டின் பெயரை இப்போது இங்க்ஜெட் மற்றும் லேசர் என மாற்றி உள்ளோம். உங்கள் சிஸ்டம் விண்டோஸ் 7 என எழுதி உள்ளீர்கள். இந்த சிஸ்டத்தில் இந்த பெயர் மாற்றுவது மிக எளிது.
1. Start, Devices and Printers எனச் செல்லவும்.
2. நீங்கள் பெயர் மாற்ற விரும்பும் பிரிண்டர் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் Printer properties என்பதில் கிளிக் செய்திடவும்.
3. அந்த பிரிண்டரின் பெயர் ஹைலைட் செய்யப்பட வேண்டும். இப்போது, அழுத்தினால், ஏற்கனவே உள்ள பெயர் மறையும். அடுத்து நீங்கள் தர விரும்பும் பெயரை டைப் செய்திடவும்.
4. அடுத்து, ஓகே கிளிக் செய்து முடித்து வெளியே வரவும். இனி பிரச்னை இருக்காது.

கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரார் 9 சோதனை பதிப்பு இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகிறேன். இதில் அதிக டேப்கள் திறந்திருந்தால், அவற்றை இரண்டு அடுக்குகளாக அமைக்கலாம் என்று ஒரு செய்தி படித்தேன். இதனை எப்படி செட் செய்வது?
-என். சிக்கந்தர், மதுரை.
பதில்: மிக எளிதான ஒரு வேலை. ஏற்கனவே அமைந்துள்ள டேப்களில் ஏதேனும் ஒன்றில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Show Tabs on a separate row” என்பதில் கிளிக் செய்திடுங்கள். அவ்வளவுதான். இப்போது டேப்கள் இன்னொரு வரிசை யிலும் அமைக்கப் பட்டிருப்பதனக் காணலாம்.

கேள்வி: வேர்ட் ப்ராசசர்களிடையே டெக்ஸ்ட் பரிமாறிக் கொள்வது எளிதாகிறது. ஆனால், எக்ஸெல் தொகுப்பில் சற்றுப் பெரிய டெக்ஸ்ட் காப்பி செய்து ஒட்டினால், மீண்டும் முழுவதுமாக எடிட் செய்திட வேண்டியுள்ளது. ஏன் இப்படி ஏற்படுகிறது? இதனை எப்படி எளிதாக்கலாம்?
-மீ. பழனியப்பன், காரைக்குடி.
பதில்: முதலில் எக்ஸெல் டெக்ஸ்ட்டினை, அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும் காப்பி செய்து கொள்ளுங்கள். பின் வேர்ட் பைலைத் திறந்திடுங்கள். எங்கு பேஸ்ட் செய்திட வேண்டுமோ அங்கு கர்சரைக் கொண்டு செல்லுங்கள். அதன் பின் வழக்கம்போல் பேஸ்ட் செய்திடாமல் எடிட் மெனு செல்லுங்கள். விரியும் மெனுவில் Paste Special என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைக் கிளிக் செய்தால் பேஸ்ட் ஸ்பெஷல் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் Microsoft Excel Worksheet Object என்பதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் டெக்ஸ்ட் அநாவசியச் சிக்கல் இன்றி ஒட்டப்படும். ஒட்டப்பட்ட டெக்ஸ்ட் பாக்ஸில் அதனை ரீசைஸ் செய்வதற்கான ஹேண்டில்களும் காணப்படும். இதனைப் பயன்படுத்தி டெக்ஸ்ட்டை உங்களுக்குத் தேவையான வகையில் மாற்றி அமைத்து ஒட்டி வைக்கலாம்.

கேள்வி: வேர்டில் டேபிள் பெரியதாக இரண்டு பக்கங்களில் இருக்கையில், முழுவதையும் காப்பி செய்வது கடினமாக உள்ளது. எப்படி எளிதாகக் காப்பி செய்வது?
-ஆ. சந்தோஷ் குமார், சென்னை.
பதில்: டேபிளில் ஏதாவது ஒரு செல்லில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்துங்கள். இப்போது ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு பின் நியூமெரிக் கீ பேடில் நடுவே உள்ள கீ 5 ஐ அழுத்துங்கள். (அப்போது நம் லாக் அழுத்தப்பட்டிருக்கக் கூடாது) முழு டேபிளும் செலக்ட் செய்யப்பட்ட நிலையில் இருக்கும். இதனை காப்பி செய்யலாம்; அழிக்கலாம்; நகர்த்தலாம். இன்னொரு எளிய வழியும் உள்ளது. இது மவுஸ் கொண்டு செயல்படுத்தும் வழி. அதே ஆல்ட் கீயை அழுத்திய நிலையில் மவுஸின் கர்சரை டேபிளில் எங்காவது வைத்துக் கொண்டு இருமுறை கிளிக் செய்திடுங்கள். முழு டேபிளும் சடக் கென்று தேர்ந்தெடுக்கப் படும். பின் நீங்கள் நினைத்த காரியத்தை முடிக்கலாம்.

கேள்வி: ரன் டைம் எர்ரர் என்று சில வேளைகளில் செய்தி கிடைத்து, அந்த புரோகிராம் மூடப்படுகிறது. பின் மீண்டும் இயக்கினால், புரோகிராம் நன்றாக இயங்குகிறது. இதன் பிரச்னை என்ன?
-சி. ஏ. உத்தம் குமார், கோயம்புத்தூர்.
பதில்: ரன் டைம் எர்ரர் என்பது, அடிப்படையில் பொதுவாக புரோகிராம் கள் இயங்குகையில் ஏற்படக் கூடிய சிறிய தடுமாற்றமே ஆகும். நீங்கள் பயன்படுத்தும் புரோகிராமில் சில பிழைகள் உள்ளன என்று சுட்டிக் காட்டுவதுதான் இந்த செய்தி. இத்தகைய பிழைகளை புரோகிராம் எழுதியவர்கள் எதிர்பார்த்திருந்திருப்பார்கள். ஆனால் அதனை நிவர்த்தி செய்திட முடியாமல் புரோகிராமினை வெளியிட்டிருப்பார்கள். எப்போதாவது தான் இது ஏற்படும் என்ற நிலையில் அதனைச் சாதாரணமாக எண்ணியிருப்பார்கள். உங்கள் நீண்ட கடிதத்திலிருந்து, நீங்கள் குறிப்பிடும் ரன் டைம் எர்ரர் "மெமரி போதவில்லை’ என்பதுதான். இயங்கத் தொடங்கி பின் அதனை அப்படியே விட்டுவிட்டு பின் பல புரோகிராம்களுக்குச் செல்கையில் இந்த பிழைச் செய்தி கிடைக்கும். அப்போதைக்குத் தேவைப்படாத புரோகிராம் களை மூடி இதற்குத் தீர்வு காணலாம்.

கேள்வி: என் அலுவலகத்தில் பணி யாற்றுகையில், சிலவற்றை ரகசியமாக என் சிடியிலிருக்கும் பைல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றாமல் செயல்படுத்துகிறேன். ஆனால், அலுவலகக் கம்ப்யூட்டரில் அவை My Recent Documents என்ற பட்டியலில் காட்டப் படுகின்றன. இதனால், ரகசிய பைல்களை மற்றவர்கள் அறியும் வழி உருவாகிறது. இதனை எப்படி நீக்குவது?
-எம். மாணிக்க ராஜ், பொள்ளாச்சி.
பதில்: திரையில் கீழாக உள்ள டாஸ்க் பார் செல்லுங்கள். அங்கு எதுவும் இல்லாத இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் புராபர்ட்டீஸ் தேர்ந்தெடுங்கள். “Taskbar and Start Menu Properties” என்னும் விண்டோ கிடைக்கும். இதில் “ Start Menu” என்னும் டேபில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Customize என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் Customize Start Menu என்ற விண்டோ கிடைக்கும். இதில் Advanced என்ற பட்டனில் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் கீழாக Recent Documents என்ற பிரிவு இருக்கும். அதில் List my most recently opened documents என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அதன் அருகே Clear List என்று உள்ள பெட்டியில் கிளிக் செய்திடவும். Recent Documents என்ற பிரிவில் உள்ள பைல்கள் அனைத்தும் காலி செய்யப்பட்டிருக்கும்.

கேள்வி: பிரவுசிங் செய்வதற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துகிறேன். வழக்கமாக இதன் வலது கீழ் புறத்தில், வெப்சைட்டுகள் இறங்கும் செயலை ஒரு நீளக் கட்டம் பச்சை நிறத்தில் சிறு கட்டங்களாகக் காட்டும். அது இப்போது காணப்படவில்லை. அது என்ன நடக்கிறது என்பதைக் காட்டும் ஆதலால், அது தேவையாய் உள்ளது. எப்படி அதனைப் பெறலாம்?
-சி. இராசேந்திரன், திருப்பூர்.
பதில்: நீங்கள் கேட்பது ஸ்டேட்டஸ் மற்றும் புராக்ரஸ் பார் என அழைக்கப் படுகிறது. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் ஸ்டேட் டஸ் பார் காட்டப்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனைக் காட்டும் வகையிலும் அமைத்துவிடலாம். இதனைப் பெற இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மெனு பாரில் வியூ (“View”) என்ற பிரிவில் கிளிக் செய்து பின் கிடைக்கும் சிறிய மெனுவில் “Status Bar” என்பதில் கிளிக் செய்து டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இப்போது கீழாக ஸ்டேட்டஸ் பார் மற்றும் அதில் புராக்ரஸ் பாரினைக் காணலாம்.

கேள்வி: சாலிட் ஸ்டேட் ட்ரைவ் என்பது எந்த வகையில் தற்போது கிடைக்கும் ஹார்ட் ட்ரைவினைக் காட்டிலும் உயர்ந்தது? இதனை வாங்கிப் பயன்படுத்தலாமா? வாரன்டி உண்டா?
-என். மணிமேகலை, செங்கல்பட்டு.
பதில்: இனி எதிர்காலத்தில் சாலிட் ஸ்டேட் டிஸ்க்குகளே பயன்பாட்டில் இருக்கும். இது பிளாஷ் மெமரி தொழில் நுட்பத்தில் செயல்படுகின்றன. ஹார்ட் டிஸ்க்குகளைப் போல, நிமிடத்திற்கு இத்தனை சுற்றுக்கள் என்று இது செயல்படாது. நகரும் பகுதிகள் இந்த ட்ரைவில் இல்லை என்பதால், ஹார்ட் டிஸ்க் போல விரைவில் கெட்டுப் போகும் வாய்ப்பு இல்லை. பல ஹார்ட் டிஸ்க் தயாரிக்கும் நிறுவனங்கள் இவற்றைத் தயாரித்து வெளியிடும் பணியில் ஈடுபட்டு, இவற்றை அறிமுகப் படுத்தியுள்ளன. தாராளமாக சாலிட் ஸ்டேட் டிஸ்க்குகளை வாங்கிப் பயன்படுத்தலாம்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !

‘கிச்சன் கில்லாடி’ பகுதிக்கு வந்து குவிந்த ‘ரெசிபி’க்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, இங்கே பரிமாறுகிறார் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்… கூடவே அவருடைய கமென்ட்ஸ்!

வாசகிகள் பக்கம்

பாசிப்பருப்பு கோசுமல்லி

100 கிராம் ஊறிய பாசிப்பருப்பு, 100 கிராம் வெள்ளரி துருவல், 100 கிராம் மாங்காய் துருவல், 100 கிராம் தேங்காய் துருவல் ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு… கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, அதை பாசிப்பருப்பு கலவையில் சேர்த்தால்… ஆரோக்கியமான சாலட் தயார். அப்படியே சாப்பிடலாம்.

– ஜி.பத்மாவதி, திருப்பூர்

கமென்ட்: துருவிய முள்ளங்கி, பொடியாக நறுக்கிய குடமிளகாய் சேர்த்தால் இன்னும் டேஸ்ட்டாக இருக்கும்.

வல்லாரைக் கீரை சாலட்

100 கிராம் வல்லாரைக் கீரை, 50 கிராம் சின்ன வெங்காயம், ஒரு பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி, கலந்து கொள்ளவும். இதனுடன், ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், சிறிது எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துப் பிசிறி வைக்கவும். பத்து நிமிடம் கழித்து சாப்பிடவும். அருமையாக இருக்கும். மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

– மாலதி, மதுரை-10

கமென்ட்: கீரையை அப்படியே சாப்பிடும்போது கசப்பாக இருக்கும். துருவிய கேரட், வெள்ளரி போன்ற காய்கறிகளைச் சேர்த்து செய்யலாம். கசப்புத் தன்மை குறைவதோடு, கூடுதல் சத்துக்களும் கிடைக்கும்!

நீங்களும் டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடியா..? இரண்டே நிமிடத்தில் செய்யக்கூடிய அறுசுவை தரும் அருமையான ரெசிபியை, உங்கள் குரலில் இங்கே பதிவு செய்யுங்கள் இரண்டே நிமிடத்தில்! பிரசுரமாகும் சிறந்த ரெசிபிகளுக்கு வழக்கம் போலவே சிறப்பான பரிசு உண்டு! பரிசுக்குரிய ரெசிபிகளோடு மற்ற ரெசிபிகளும் விகடன் டாட் காம் (www.Vikatan.com) மூலம் உலகம் முழுக்க உங்கள் குரலிலேயே வலம் வரும்!

உடனே உங்கள் செல்போனிலிருந்து 04442890002 என்ற எண்ணை அழுத்துங்கள். இணைப்பு கிடைத்தவுடன், கணினி குரல் ஒலிக்கும். பீப் ஒலிக்குப் பிறகு, உங்களுடைய ரெசிபியைச் சொல்லுங்கள். நினைவிருக்கட்டும்… இரண்டே நிமிடங்களுக்குள் சொல்ல வேண்டும்.

வழக்கமான செல்போன் கட்டணங்களுக்கு உட்பட்டது.

source:vikatan

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

எக்ஸெல்

E_1300074411.jpeg
பார்முலா பிரிண்டிங் /எடிட்டிங்
வழக்கமாக கம்ப்யூட்டரில் எந்த ஆவணங்களைத் தயாரித்தாலும் அதனை இறுதியாக்கும் முன் அதன் அச்சுப் பிரதி ஒன்றை எடுத்துக் கொண்டு பிழை திருத்துவது நல்லது. ஏனென்றால் மானிட்டர் ஸ்கிரீனில் கண்ணுக்குச் சரியாகப் புலப்படாத சில விஷயங்கள் பிரிண்ட் பிரதியில் தெரியும். அப்படியானால் எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் அதன் பார்முலாக்கள் சரியாக இருக்கின்றனவா என்று எப்படி பார்ப்பது? எனென்றால் பார்முலாக்கள் நாம் எடுக்கும் பிரிண்ட் பதிப்பில் கிடைக்காதே என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதற்குப் பதில் நீங்கள் உங்கள் எக்ஸெல் தொகுப்பில் அமைக்கும் ஆப்ஷன்களைப் பொறுத்தே உள்ளது. பார்முலாக்களை பிரிண்ட் எடுக்க என்ன ஆப்ஷன்களை ஏற்படுத்துவது எனப் பார்க்கலாம். முதலில் மெனு செல்லவும். பின் விரியும் மெனு பாரில் Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கிடைக்கும் விண்டோவில் உள்ள டேப்களில் View என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கீழாக உள்ள Windows என்ற பிரிவில் Formulas என்ற சொல் உள்ள இடத்தைக் கண்டறிந்து அதன் எதிரே உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் அனைத்திற்கும் ஓகே கிளிக் செய்து விண்டோக்களை மூடவும். உடனே நீங்கள் உங்களின் ஒர்க் ஷீட்டிற்குச் செல்வீர்கள். அங்கு பார்முலாக்கள் காட்சி அளிக்கும். அவற்றின் விளைவாகக் கிடைக்கும் வேல்யூக்கள் இருக்காது. இந்த மெனு, விண்டோக்களை அணுகாமல் பார்முலாக்களாக உங்களுக்குக் கிடைக்க வேண்டு மென்றால் Ctrl + ~ கீகளைப் பயன்படுத்தவும். (இதில் இரண்டாவது கீயான ~ பெற தேட வேண்டாம். இது டேப் கீக்கு மேலாக கீ போர்டில் இருக்கிறது. ஷிப்ட் அழுத்திப் பெறலாம். )
பார்முலா உள்ள இடத்தில் பார்முலாவும் எண்கள் உள்ள இடத்தில் அவற்றில் எந்த மாறுதலும் இல்லாத எண்களும் கிடைக்கும். இனி நீங்கள் பார்முலாவோடு பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். அப்படியானால் மீண்டும் பார்முலாக்கள் இயங்க வேண்டுமானால் என்ன செய்வது என்று கேட்கலாம். மீண்டும் Ctrl + ~ கீகளை அழுத்துங்கள். இவ்வாறு பார்முலாக்களிலும் பிழைகளைத் திருத்தி ஒர்க்ஷீட்டை எடிட் செய்திடலாம்.

செல்லுக்குள் சுருங்கும் எண்கள்
தொகுப்பில் செல் ஒன்றில் எண்களை அமைக்கிறீர்கள். அப்போது இடம் இல்லை என்றால் செல் தானாக விரிந்து கொள்கிறது. அல்லது நமக்குப் பிடிக்காத ##### என்ற அடையாளம் கிடைக்கிறது. காரணம் என்னவென்றால் நீங்கள் தரும் எண் அந்த செல்லில் அடங்கவில்லை என்று பொருள். இது போல செல் விரிவடைவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு இன்னொரு வழி உள்ளது. எண்களை சிறியதாக்கிவிட்டால் செல்லுக்குள் அடங்கிவிடும் அல்லவா? இந்த வேலை யை யார் பார்ப்பார்கள்? எண்களை அடித்துப் பின் செலக்ட் செய்து பின் அதன் அளவைச் சுருக்கும் வேலை நேரம் எடுக்கும் செயல் அல்லவா? தேவையே இல்லை. கம்ப்யூட்டரே அதனைப் பார்த்துக் கொள்ளும். செல்லின் அகல அளவைக் கூட்டாமல் செல்லுக்குள் எண்களின் அளவைச் சுருக்கி அமைத்துக் கொள்ளும். எப்படி எழுத்துக்களின் அளவைச் சுருக்கலாம் என்று யோசிக்க வேண்டாம். அதற்கான “shrink to fit” என்ற கட்டளைக் கட்டத்தினைக் கிளிக் செய்திட்டால் போதும். இதற்கு முதலில் எந்த செல்களில் மற்றும் படுக்க வரிசைகளில் இந்த செயல்பாடு தேவையோ அவற்றை முதலில் செலக்ட் செய்திடவும். அதன்பின் பார்மட் செல்ஸ் (Format Cells) விண்டோவினைத் திறக்க வேண்டும். இதற்கு செல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Format Cells என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது கண்ட்ரோல் + 1 அழுத்தவும். இதில் கிடைக்கும் டேப்களில் Alignment டேபினைக் கிளிக் செய்து அதற்கான விண்டோவினைப் பெறவும். Text Control section என்ற பிரிவில் Shrink to fit என்பதைக் கிளிக் செய்திடவும். பின் ஓகே கொடுத்து வெளியேறவும். இனி தேர்ந்தெடுத்த செல்களில் எண்களை அமைக்கும் போது அவை செல்லுக்குள் அடங்காதவனவாக இருந்தால் தானாக தன் அளவைச் சுருக்கிக் கொள்ளும்.

செல் பார்மட்டிங் ஷார்ட் கட்
எக்ஸெல் தொகுப்பில் செல் பார்மட் செயல்பாட்டினை அடிக்கடி மேற்கொள்பவரா நீங்கள்? இதற்காக பார்மட் மெனு சென்று அதனைத் திறந்து அதில் செல் பார்மட், டெக்ஸ்ட் டைரக்ஷன், பார்டர்ஸ், கலர் போன்ற செயல்களை மேற்கொள் கிறீர்களா? நீங்கள் பார்மட் மெனு சென்று கிளிக் செய்யாமலேயே இதனை மேற்கொள்ளலாம். இதற்கு முதலில் மாற்றம் மேற்கொள்ளும் செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் மெனுவெல்லாம் செல்லாமல் கண்ட்ரோல் ப்ளஸ் 1 (Ctrl + 1) கீகளை அழுத்துங்கள். உடனே நீங்கள் இந்த மாற்றங்களை மேற்கொள்ள வழி வகுக்கும் விண்டோவிற்கு கூட்டிச் செல்லப்படுவீர்கள். எவ்வளவு எளிதான வழி பார்த்தீர்களா!

ஒர்க்ஷீட் ஒரே பக்கத்தில் பிரிண்ட் செய்திட
இங்க் கேட்ரிட்ஜ் விற்கும் விலையைப் பார்த்த பின், சிக்கனமாக பிரிண்ட் செய்திடத்தான் அனைவரும் முயற்சி செய்திடுவோம். எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சில வேளைகளில் அச்சிட வேண்டிய சில தகவல்கள் மட்டும் அடுத்த பக்கத்திற்கு செல்லும். அதனையும் சேர்த்து முந்தைய பக்கத்திலேயே அச்சிட எக்ஸெல் தொகுப்பு ஒரு வசதியைத் தருகிறது. இதற்கு “File” கிளிக் செய்து “Page Setup” செல்லவும். இப்போது கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் “Page” என்னும் டேப்பினைக் கிளிக் செய்திடவும். இதில் கீழாக உள்ள “Scaling” என்னும் பகுதியில் “Adjust to” என்னும் ரேடியோ பட்டனை செலக்ட் செய்தவாறு அமைக்கவும். இதில் ஏற்கனவே “100%” என கொடுக்கப் பட்டிருக்கும். இதனை அதிகப்படுத்து வதன் மூலம் நீங்கள் டெக்ஸ்ட் சைஸை அதிகப்படுத்தலாம். குறைப்பதன் மூலம் டெக்ஸ்ட் சிறியதாக உங்களுக்கு அச்சாகும். ஆனால் பக்கத்தில் அதிக தகவல்கள் அச்சாகும். இதனைக் குறைத்து பின் பிரிண்ட் வியூ பார்த்து ஒரே பக்கத்தில் படிக்கக் கூடிய வகையில் அதிக தகவல்களை அச்சிடுங்கள். இதன் பின் ஓகே கொடுத்து வெளியேறவும். படம் உள்ளது

எக்ஸெல் பார்மட்டிங்: சில வழிகள்
செல்களை செலக்ட் செய்து பின் Ctrl + Shift + ~ அழுத்தினால் அந்த செல்களில் எண்கள் பொதுவான பார்மட்டில் அமையும்.
Ctrl + Shift + $ என்ற கீகள் அந்த செல்களில் கரன்சி பார்மட்டை ஏற்படுத்தும். இரண்டு டெசிமல்களுக்கு இது காட்டப்படும். மைனஸ் ஆக இருந்தால் அடைப்புக் குறிகளுக்குள் இருக்கும்.
Ctrl + Shift + % கீகள் தேர்ந்தெடுக்கப் பட்ட செல்களில் உள்ள எண்களை பெர்சன்டேஜ் பார்மட்டில் டெசிமல் எண்கள் இல்லாமல் காட்டும். செல்லில் உள்ள எண்ணை எக்ஸ்போனென்ஷியல் வடிவில் இரண்டு டெசிமல் வடிவில் பெற Ctrl + Shift + ^ என்ற கீகளை அழுத்தவும்.
Ctrl + Shift + ! என்ற கீகள் இரண்டு டெசிமல்களில் எண்களைக் காட்டும். எண்களுக்கு இந்திய முறைப்படி கமாக்களை (1,000) அமைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களில் அவுட்லைன் பார்டர்களை அமைக்கும். அமைந்த பார்டர்களை நீக்குவதற்கு Ctrl + Shift + _ என்ற கீகளை அழுத்தவும். தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களில் உள்ள எண் மற்றும் எழுத்துக்களை அழுத்த மாகக் காட்ட Ctrl + B கீகளை அழுத்தவும். அவற்றை சாய்வாக அமைக்க Ctrl + I கீகளை அழுத்தவும். Ctrl + U என்ற கீகள் செல்களில் உள்ள தகவல்களுக்கு அடிக்கோடு இடவும் நீக்கவும் செய்திடும். அதே போல தகவல்களின் மீது குறுக்குக் கோடு இடவும் நீக்கவும் Ctrl + 5 என்ற கீகளை அழுத்தவும்.

செவ்வக வடிவில் செல்களைத் தேர்ந்தெடுக்க
எக்ஸெல் தொகுப்பில் Ctrl +Home கீகளைக் கிளிக் செய்தால் உடனே கர்சர் இடது மேல் மூலையில் இருக்கும் முதல் செல்லான A1 செல்லுக்குச் செல்லும் என்பது உங்களுக்குத் தெரியும். கர்சர் இருக்கும் செல்லில் இருந்து A1 செல் வரை அனைத்து செல்களும் ஒரு செவ்வகம் போலத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டு மானால் இன்னொரு கீயை இவற்றுடன் சேர்த்தால் போதும். Ctrl +Shift+ Home என்றவாறு கீகளை அழுத்தினால் அனைத்து செல்களும் தேர்ந் தெடுக்கப்படும்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

வவுனியா எங்கே இருக்கிறது என்று தெரியாத த மிழர்கள் !

வவுனியா எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்களே புலம்பெயர் தமிழர்கள் !

தமிழைப் பேசவே தெரியாத சிலர், இலங்கையில் வவுனியா எங்கே இருக்கிறது என்று கேட்டால் அது கூடத் தெரியாத தமிழர்கள் சிலரும் தம்மை புலம்பெயர் தமிழர்கள் என்று கூறி புலிகளின் ஆதரவாளர்கள் தாம் என்றும் அவர்கள் ஒரு கற்பனை உலகில் வாழ்ந்துவருவதாகவும் மகிந்தர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மக்களைச் சந்திக்கும் ஜனாதிபதி என்னும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மிகவும் காட்டமாக புலம்பெயர் தமிழர்களைச் சாடியுள்ள மகிந்தர், தாய் நாட்டவர் என்ற சொற்பதத்தை மாற்றி அவர்கள் புலம்பெயர் தமிழர்கள் என்று தமக்கு தாமே பேர் சூட்டியுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தீவைப்பற்றி அறியாது வெளிநாட்டில் பிறந்தவர்கள் கூட தமிழ் தேசியம் பேசுவதாக அவர் சாடியுள்ளார். புலம் பெயர் தமிழர் என்ற ஒரு முத்திரையின் கீழ் உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் வேலைசெய்வதாகவும், அது இலங்கை நற்பெயரை வெகுவாகப் பாதிப்படையச் செய்வதாகவும், அவர் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளமை தொலைக்காட்சி நேயர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழர்கள் தவிர வேறு சக்திகளும் தமது நாட்டிற்கு எதிராகவேலைசெய்வதாக அவர் தெரிவித்துள்ளார். அது சரத்பொன்சேகாவின் ஆதரவாளர்களை அவர் மறைமுகமாகச் சாடியுள்ளார் என்பதனை காட்டுகிறது.

சரத்பொன்சேகாவின் ஆதரவாளர்களும் சில தமிழ் அமைப்புகளும் ஒன்றாகச் சேர்ந்து இயங்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதாவது மகிந்தரின் உரையில் அவர் தமிழ் இளையோர்களையே மறைமுகமாகச் சாடியுள்ளார் என்பது வெட்டவெளிச்சமாகிறது. சில காலமாக புலம்பெயர் இளையோர் அமைப்புகள் புதுவேகத்தோடு இயங்க ஆரம்பித்துள்ளதும், அதனால் ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் கருத்தில் கொண்டே மகிந்தர் தன் ஆதங்கத்தை இவ்வுரைமூலம் வெளிப்படுத்தியுள்ளார் என அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இருக்கும் இடத்தில் இருந்து எட்டு அடி நகர ்ந்த ஜப்பான்

கடந்த வெள்ளிக்கிழமை ஜப்பானில் நடைபெற்ற பாரிய நில நடுக்கத்தை அடுத்து அந் நாடு சுமார் 8 அடி நகர்ந்துள்ளதாக அறியப்படுகிறது. அதாவது பூகோளத்தில் யப்பான் நாடு இவ்வளவு காலம் எங்கே இருந்ததோ, அவ்விடத்தில் இருந்து சுமார் 8 அடி(2.4) மீட்டர் நகர்த்தப்பட்டுள்ளது என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது (அதாவது முழு நாடும்). அமெரிக்க செயற்கைக்கோள்கள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களைப் பார்த்த ஆராட்சியாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அதில் ஜப்பான் நாடு 8 அடி விலகிப் போய் உள்ளது தெளிவாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆசியக் கண்டத்தின் அடிப்பகுதியும், பசுபிக் கண்டத்தின் அடிப்பகுதியும் கடலுக்கு அடியில் முட்டி மோதியதால் இந்த நில நடுக்கம் தோன்றியதாக அறியப்படுகிறது.

சுமார் 4 நிமிடம் இந்த நிலநடுக்கம் நீடித்துள்ளது. இதன் காரணமாக கடலுக்கு அடியில் உள்ள நீர் கொந்தளித்து, அது கடலுக்கு அடியில் அலையாகச் சென்றுள்ளது. அவை பல மைல்கள் செல்லக்கூடியவையாக உள்ளதோடு, அந்த கடலுக்கு அடியில் செல்லும் அலை, கரையை அடையும் போது அதன் வேகம் அப்படியே கல் பாறைகள் மற்றும் கடல் கரைகளில் மோதி பேரலையாக உருவெடுப்பதையே சுணமி என்கிறோம். கடந்த வெள்ளி ஏற்பட்ட நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுணாமியும், ஜப்பானுக்குள் சுமார் 10 கி.மீட்டார் தூரம்வரை சென்று தாக்கியுள்ளது. ஆனால் ஆபத்தை முன்கூட்டியே அறிந்த ஜப்பானியர்கள் தமது உயிரைப் பாதுகாத்துக்கொண்டதால், பெரும் உயிர்ச்சேதம் தகவிர்க்கப்பட்டது.

நடந்த பூகம்பத்தால், பூகோளரீதியாக ஜப்பான் நாடு நகர்ந்துள்ளதும், அதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்ற விபரங்களையும் ஆராட்சியாளர்கள் திரட்டி வருகின்றனர்.

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட அமெரிக்க ச ாமியார் திடீர் மாயம்

large_201949.jpg

வாஷிங்டன்:அமெரிக்காவில், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாருக்கு, பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் திடீரென மாயமானார்.அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் 200 ஏக்கர் பரப்பளவில் "பர்சனா தாம்’ என்ற ஆசிரமம் உள்ளது. 90ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த ஆசிரமத்தில், ஏராளமான இந்தியர்கள் தங்கியுள்ளனர். இந்த ஆசிரமத்தின் நிறுவனர் பிரகாஷானந்த் சரஸ்வதி. தற்போது 80 வயதாகும் பிரகாஷானந்த் மீது ஆசிரமத்தில் தங்கியிருந்த ஷியாமா ரோஸ்(30) உள்ளிட்ட இரண்டு பெண்கள் கற்பழிப்பு புகார் செய்தனர். தங்களை 12 வயது முதல் பாலியல் ரீதியாக இந்த சாமியார் கொடுமைப்படுத்தியதாக, இந்த பெண்கள் 2008ம் ஆண்டு புகார் செய்தனர். 45 கோடி ரூபாய் ஜாமீன் பத்திரத்தின்படி, இவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், 31 வயதான கேத்தி டோனிசென் என்ற பெண், தன்னிடம் சாமியார் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் கூறினார். இதையடுத்து, பிரகாஷானந்த் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, நேற்று முன்தினம் பிரகாஷானந்த் ஆஜராகவில்லை. எனவே, அவருக்கு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. மீண்டும் 45 கோடி ரூபாய் ஜாமீன் பத்திரத்தை தாக்கல் செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சாமியார் பிரகாஷானந்த் உடல் நலம் குன்றி இருந்ததாகவும், அவர் தற்போது, எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்றும், அவர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். பிரகாஷானந்தின் பாஸ்போர்ட் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், அவர் வெளிநாடு தப்பித்து செல்வதற்கு வழியில்லை என்று தெளிவாக்கினர்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

தி.மு.க.,வை காங்., காலில் விழவைத்த ஜெயலலிதா ., !

large_202693.jpg

தி.மு.க.,வை காங்., காலில் விழவைத்த ஜெ., ராஜதந்திரம்!

அ.தி.மு.க., தலைமையிலான அணியில், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மனிதநேய மக்கள், நாடாளும் மக்கள் கட்சி என, ஒரு பெரும் பட்டியல், ஆரம்ப நிலையிலேயே இடம் பெற்றது. இது வரை தனியாவர்த்தனம் செய்து வந்த தே.மு.தி.க.,வையும் தன் வலையில் வீழ்த்தியது அ.தி.மு.க., ஒருபுறம் தனது அணியை பலமாக்கிவிட்டு, எதிர்ப்பக்கம், தி.மு.க., அணியில் குழப்பத்தை ஏற்படுத்தி, அதில் மீன் பிடிக்க ஆரம்பித்தது அ.தி.மு.க., குழப்பத்தில் இருந்த பா.ம.க.,வை, தங்கள் பக்கம் இழுக்க அ.தி.மு.க., முயற்சிக்கிறது என்ற தகவலை பரப்பியது. பயந்துபோன தி.மு.க., தடாலடியாக, பா.ம.க.,வுக்கு, 31 தொகுதிகளைக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது; அது இப்போது 30 ஆகிவிட்டது. அடுத்ததாய், கொங்கு மண்டலத்தில் கொ.மு.க.,விடம், பேச்சை தொடர்ந்தபடியே அ.தி.மு.க., இழுக்க, அவர்களுக்கும் ஏழு தொகுதிகளை காவு கொடுத்தது தி.மு.க.,

தி.மு.க., – காங்கிரஸ் இடையே 10 நாட்களுக்கும் மேலாக, எண் விளையாட்டு நடந்து வந்த நிலையில், இதை தனக்கு சாதகமாக அ.தி.மு.க., பயன்படுத்தியது. தங்களது கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற வாய்ப்புள்ளது என்ற தோற்றத்தை உருவாக்கி வைத்தது. இதற்காக, தனது பழைய கூட்டாளிகளான, ம.தி.மு.க, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை முடிக்காமல் காலம் தாழ்த்தியது. "அப்படியும் நடந்து விடுமோ’ என்ற பயம் ஆளுங்கட்சியில் பரவியது. சாதாரண நாளிலேயே, "தி.மு.க.,வை அழிப்பதே லட்சியம்’ என கங்கணம் கட்டி செயல்படும் ஜெயலலிதாவோடு, காங்கிரஸ் கூட்டணி சேருமானால், தங்களின் நிலை என்ன என்ற அச்சம் அக்கட்சியை ஆட்டிவைத்தது. நிபந்தனை மேல் நிபந்தனை விதித்து காங்கிரஸ் கடுப்பேற்றிய நிலையில், தி.மு.க., தனது இயல்பைவிட்டு இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக தீர்மானம் போட்டுவிட்டு, நள்ளிரவில் சந்தித்து பேசி காங்கிரசுடன் சமாதான உடன்படிக்கை செய்யும் நிலை தற்போது தி.மு.க.,விற்கு ஏற்பட அ.தி.மு.க.,வின் ராஜதந்திரமே காரணமாக அமைந்தது என்கின்றனர் கூட்டணிக் கட்சி தோழர்கள்.

இது தொடர்பாக, கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அ.தி.மு.க., அணியில் காங்கிரஸ் இடம் பெற்றுவிடுமோ என்ற அச்சம் எங்களுக்கும் கூட ஆரம்பத்தில் ஏற்பட்டது. தி.மு.க., அணியை குழப்ப நடத்தும் நாடகம் என்பதை, சரியான நேரத்தில் எங்களுக்கு தெரியப்படுத்திவிட்டனர். அதனால் தான், டில்லியில் பிரகாஷ் காரத் பேசும் போது, "அ.தி.மு.க., கூட்டணியில் தொடர்வதில் மாற்றமிருக்காது’ என, வெளிப்படையாக தெரிவித்தார். இதே போல, ம.தி.மு.க.,வுக்கும் தகவல் போனதால், அவர்களும் பொறுமை காத்தனர். இப்போது, தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி நாடகம் முடிந்துவிட்டது. எங்களது அணி உறுதிப்பட்டுவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மொத்தத்தில், தேர்தல் கூட்டணி விஷயத்தில் தனது, "ராஜதந்திர’ நடவடிக்கையால், "பொருந்தாக் கூட்டணி’ என்ற பெயரோடு, தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணியை ஜெயலலிதா உருவாக்கி, முதல் வெற்றியை பெற்றுள்ளார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized