Monthly Archives: மே 2010

வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் துப்பாக்க ிச் சூட்டிலிருந்து உயிர் தப்பினார்

large_10015.jpg

பெங்களூரு: வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பினார். கொலை செய்ய வந்தவன் யார், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. "இச்சம்பவத்தில் தீய சக்திகளுக்கு தொடர்புள்ளது’ என்று ரவிசங்கர் தெரிவித்தார்.பெங்களூரு கனகபுரா ரோட்டில், வாழும் கலையின் ஆசிரமம் உள்ளது. இங்கு ஒன்பது நாட்களாக ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் : இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒன்பதாவது நாளான நேற்று நிகழ்ச்சி முடிந்த பின், ரவிசங்கர் காரில் ஏறுவதற்காக வெளியில் வந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரவிசங்கரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இச்சம்பவத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. தொடர்ந்து வந்த வினய் என்ற பக்தரின் கையில் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டது.இதனால், ஆசிரமத்தில் பெரும் பரபரப்பும், பதட்டமும் காணப்பட்டது. பக்தர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டிலிருந்து ரவிசங்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

உடனடியாக, அவர் பாதுகாப்பாக காரில் அழைத்துச் செல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பக்தர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.ரவிசங்கர் மிக அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, பக்தர்களை பாதித்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கி குண்டை சுற்றியிருந்த கவர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, ஆசிரமத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

"நான் நன்றாக உள்ளேன்; பக்தர்கள் கவலைப்பட வேண்டாம் : கர்நாடகா உள்துறை அமைச்சர் ஆச்சார்யா கூறுகையில், ""ரவிசங்கர் பத்திரமாக உள்ளார். ஆசிரமத்திற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. கர்நாடகா டி.ஜி.பி., அஜய்குமார் சிங் விரைந்துள்ளார்,” என்றார்.இச்சம்பவத்திற்கு பின்னர் ரவிசங்கர் கூறுகையில், ""நான் நன்றாக உள்ளேன்; பக்தர்கள் கவலைப்பட வேண்டாம். ஆசிரமத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தீய சக்திகளுக்கு தொடர்புள்ளது. மீடியாவையும், பத்திரிகையாளர்களையும் இன்று சந்தித்து விளக்கமாகக் கூறுகிறேன்,” என்றார்.

இது குறித்து ரவிசங்கரின் தனிச் செயலர் கிரிகோவிந்த் கூறுகையில், ""ரவிசங்கர் பத்திரமாக உள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், பக்தர்கள் அதிர்ச்சியடைய வேண்டாம். இந்த சம்பவத்தில் மர்ம நபர், 0.22 ரைபிளை பயன்படுத்தியுள்ளார்,” என்றார்.

ஏற்கனவே பாதுகாப்பில் உள்ளார் : சம்பவம் குறித்து ராமநகரம் டி.எஸ்.பி., தேவராஜ் கூறுகையில் ; இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம் முதலில் எதுவும் கூற முடியாது . சம்பவ இடத்தில் போலீஸ் மோப்ப நாயுடன் , தடயவியல் நிபுணர்கள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரமத்திற்குள் அனுமதி இல்லாமல் யாரும் நுழைய முடியாது. சுவாமிக்கு எவ்வதி அச்சுறுத்தலும் இல்லை அதே நேரத்தில் ஏற்கனவே பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யார் வந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

துப்பாக்கியால் சுட்டவன் யார் ? : ஆசிரமத்தில் நடந்து கொண்டிருந்த சஸ்தாங் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பர். இந்த வளாகம் காம்பவுண்ட் சுவர் இல்லாதது. நிகழ்ச்சி முடிந்து வந்ததும் மர்ம மனிதன் சுட்டுள்ளான். துப்பாக்கியால் சுட்டவனை ஆசிரம பாதுகாவலர் மற்றும் பக்தர்கள் சேர்ந்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்தாகவும் ஆசிரம வட்டாரம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த மர்ம மனிதன் குறித்து எவ்வித தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.

அமைதியை பரப்புவதே என் லட்சியம் : தாக்குதலை கண்டு பயப்பட மாட்டேன் ; ரவிசங்கர் சிறப்பு பேட்டி : துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் ரவிசங்கர் நிருபர்களிடம் பேசினார். அவர் இன்று ( திங்கட்கிழமை ) பேட்டியின் போது கூறியதாவது ; நான் அமைதியையும், ஆன்மிகத்தையும் பரப்பி வருகிறேன் . இது தான் எனது இலட்சியம். எனக்கென எதிரிகள் யாரும் இல்லை. எனது ஆசிரமத்தில் நடந்த சஸ்தாங் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தான் என் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என நினைக்கிறேன். இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. மற்ற மத ரீதியிலான அமைப்பினர் யாரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கவில்லை .

நான் என் மீது தாக்குதல் நடத்த வந்தவனை ஏற்கனவே மன்னித்து விட்டேன். தாக்குதல் நடத்த வந்தவனை என் ஆசிரமத்தில் சேர அழைக்கின்றேன். அஹிம்சையே எப்போதும் வெற்றி பெறும். இந்த நேரத்தில் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும். சில மக்கள் என் மீது தாக்குதல் நடத்த நினைக்கின்றனர். பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். மிரட்டல் மூலம் எனது ஆன்மிக பணியை நிறுத்தி விட முடியாது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பஜனை பாடல் பாடப்பட்டது. பின்னர் கையை அசைத்தபடி ஆசிரமத்திற்குள் புறப்பட்டு சென்றார்.

source:dinamaalr

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கிறிஸ்தவ மதத்தை பரப்பும் தினமலர்!!!???

தினமலர் இணையதளத்தை பார்வையிட்ட போது இது போன்ற ஒரு சர்சுடைய படத்தை வெளியிட்டு இருந்தது.

அதில் இருக்கும் பைபிள் வாசகம்

”நீ தேடும் நிம்மதி இயேசுவிடம் உண்டு”

”இயேசுவே வழியும்,ஜீவனும்,சத்தியமுமாய் இருக்கிறார்”

”இயேசுவாலேயன்றி வேறு ஒருவராலும் இரட்சிப்பு இல்லை”

“உங்கள் துக்கம் சந்தோசமாக மாறும்”

ஆகிய வாசகங்கள் எழுதப்பட்டிருக்கிறது.இலவசமாக விளம்பரம் செய்துள்ள தினமலருக்கு நன்றி.

இது போல தமிழகமெங்கும் இருக்கும் கோயில்களை(பொது இட ஆக்கிரமிப்பு)படம் பிடித்துப்போடுமா இந்த தினமலர்???

003715194.jpg

தனுஷ்கோடியில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள பிரார்த்தனை மண்டபம்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

உலகின் முதல் எஸ்.எம்.எஸ்?!

white_spacer.jpg
.

sup108a.JPGங்கும், எதிலும், எப்போதும் தாங்கள்தான் முந்தி இருக்க வேண்டும் என்று நினைக்கும் அமெரிக்கர்கள், செல்போன்களை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? உலக அளவில் செல்போன்களைப் பயன்படுத்துவதிலும் அமெரிக்கர்கள்தான் நம்பர் ஒன்! சராசரியாக, ஒரு அமெரிக்கர் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட செல்போன்களைப் பயன்படுத்துகிறாராம். பரம ஏழையாக இருந்தாலும் அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஒரு செல்போனை உபயோகிப்பது இல்லையாம் அமெரிக்கர்கள். 2.3% பேர் மட்டுமே தங்களுடைய பழைய செல்போனை மறுசுழற்சி செய்ய உபயோகப்படுத்துவதாகவும் மீதி 7% பேர் அதைக் குப்பையில் வீசுவதாகவும் சமீபத்திய சர்வே சொல்கிறது. நீண்ட நாட்கள் பயன்பாட்டில் இருக்கும் செல்போனில் உள்ள கேட்மியம், லெட், பெரிலியம் போன்ற தனிமங்களால் நோய் எதிர்ப்புச் சக்தி, நரம்பு மண்டலம், மூளை, ஈரல், நுரையீரல் போன்றவை எளிதாகப் sup108c.jpgபாதிக்கப்படும். இதனால், அடிக்கடி செல்போன்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் அமெரிக்காவில். நடப்பு நிலவரப்படி சுமார் 250 ஆயிரம் டன் எடை மதிக்கத்தக்க 500 மில்லியன் செல்போன்கள் குப்பைத் தொட்டிகளுக்குக் காத்திருக்கின்றன. இந்த வருடம் மட்டும், புதிதாக ஐந்து மில்லியன் செல்போன்கள் அங்கு பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. இவை கிட்டத்தட்ட 75 சதவிகித உலக மக்கள் தொகைக்குச் சமம் என்று International Telecommunication Union சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

sup108.jpg

நிற்க… 1973-ல் செல்போனை முதன்முதலில் உபயோகப்படுத்தியவர் டாக்டர் மார்ட்டின் கூப்பர். ‘மேரி கிறிஸ்துமஸ்’ என்பதுதான் உலகின் முதல் குறுஞ்செய்தி. அனுப்பியவர் நீல்டேப்வொர்த் (டிசம்பர் 1992). இன்று அமெரிக்காவில் மட்டுமே நாளன்றுக்கு 4.1 மில்லியன் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள். யு.எஸ் முழுக்க எஸ்.எம்.எஸ்தான்போல!–

source:vikatan

http://thamilislam.tk

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

அலிபாபா கதையில் ‘ஆபாசம்

ஆயிரத்தோர் அரேபிய இரவுக் கதைகள் புத்தகம்
பழங்காலத்து கதைகளில் ஆபாசம் இருப்பதாக புதிய சர்ச்சை

ஆயிரத்து ஓர் இரவுகள் என்ற பழங்காலத்து அரபுக் கதைகளின் சில பகுதிகள் ஆபாசமாக இருப்பதாகக் கூறி அக்கதைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என எகிப்தின் வழக்குரைஞர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னித் தீவு சிந்துபாத், அலாவுதீனும் அற்புத விளக்கும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் போன்ற சாகசக் கதைகள் உலகெங்கும் பிரசித்தி பெற்றவை.

இந்தக் கதைகள் மத்திய கிழக்குப் பகுதியையும் தெற்காசியாவையும் கதைக்களங்களாக கொண்டுள்ளன. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை இவை.

ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிறைந்த ஓர் உலகத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி இன்றளவும் இக்கதைகள் ரசிகர்களை ஈர்த்துவருகின்றன.

புத்தகமாக மட்டுமல்லாது திரைப்படங்களாகவும் கார்டூன் படங்களாகவும் வெளிவந்து எல்லா வயதினரையும் இக்கதைகள் வசீகரித்துள்ளன.

எகிப்தில் அண்மையில் வெளியான இக்கதைகளின் புதிய பதிப்பு கூட வெளிவந்தவுடன் விற்றுத் தீர்ந்துவிட்டுள்ளன.

ஆனாலும் தற்போது அங்கு இக்கதைகள் தொடர்பில் ஒரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

அந்தக் கதைகளில் சில இடங்களில் பாலியல் உணர்வையும் காம உணர்வையும் வெளிப்படுத்தும் பத்திகள் இருக்கின்றன. உடலின் அங்கங்களை வருணிக்கும் வாசகங்கள் இருக்கின்றன.

அந்தக் கதைகளில் வரும் கவர்ச்சியான வர்ணனைகள் ஆபாசமாக உள்ளதாக இஸ்லாமிய சட்டத்தரணிகள் சிலர் கூறுகின்றனர். ஆதலால் இந்தப் புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

‘கைவிலங்குகள் அற்ற வழக்குரைஞர்கள்’ என்ற பெயர் கொண்ட அமைப்பைச் சார்ந்த அவர்கள் ஆயிரத்தோரு இரவுகள் கதைகளில் வரும் இப்படியான வர்ணனைகள் மனிதன் தவறான பாதையில் செல்லத் தூண்டுவதாகக் வாதிடுகின்றனர்.

"ஆனால் இஸ்லாத்தை கட்டுப்பட்டித்தனமாக அர்த்தப்படுத்துகின்ற ஒரு போக்கிற்குள் இவர்கள் ஆட்பட்டிருக்கிறார்கள். ஆனால் எகிப்து காலாகாலமாக மதத்தைப் புரிந்துகொண்ட விதத்திலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது." என்கிறார் எகிப்திய எழுத்தாளர் அல்லா அல் அஸ்வனி.

இந்த சட்டத்தரணிகள் ‘ தாலிபான்கள் போல’ நடந்துகொள்கிறார்கள் என எகிப்திய எழுத்தாளர்கள் ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.

பழமையும் செழுமையும் நிறைந்த இலக்கியப் பாரம்பரியம் கொண்ட எகிப்தில் கடும்போக்கு இஸ்லாத்துக்கும் சகிப்புத்தன்மை கொண்ட இஸ்லாத்துக்கும் இடையில் அவ்வப்போது உரசல்கள் வந்துகொண்டுதான் இருக்கும் என்பதற்கு இச்சம்பவம் மேலும் ஒரு எடுத்துக்காட்டு என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

source:BBC

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

முஸ்லீம்களின் பள்ளிவாசலில் துப்பாக்கி ச ுடு நடத்தும் முஸ்லீம்கள்

முஸ்லீம்களில் ஒரு பிரிவினரான அஹமதியாக்களின் மசூதியில் தொழுகை நேரத்தில் உள்ளே புகுந்த சன்னி முஸ்லீம் தீவிரவாதிகள் செய்த அட்டூழியங்கள்

pak.jpg
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்
2 மசூதிகளில் புகுந்து சுட்டனர்: 80 பேர் குண்டு பாய்ந்து பலி

லாகூர், மே.29-

பாகிஸ்தானில் லாகூர் நகரில் உள்ள 2 மசூதிகளில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 80 பேர் பலி ஆனார்கள். மேலும் 100 பேர் காயம் அடைந்தனர்.

மசூதிகளில் நுழைந்தனர்

பாகிஸ்தானில் அவ்வப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். நேற்று லாகூர் நகரில் 2 மசூதிகளுக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 80 பேர் பலி ஆனார்கள்.

லாகூரில் மாடல் டவுண், கர்கி சாகு ஆகிய இடங்களில் உள்ள சிறுபான்மை அகமதி பிரிவினரின் மசூதிகளில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 1.45 மணி அளவில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டு இருந்தது. அப்போது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் திடீரென்று தீவிரவாதிகள் அந்த மசூதிகளுக்குள் புகுந்தனர். அவர்களில் சிலர் உடலில் வெடிகுண்டு ஜாக்கெட்டுகளையும் அணிந்து இருந்தனர்.

pak2.jpg
தாக்குதல்

உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் தொழுகை நடத்திக்கொண்டிருந்தவர்களை நோக்கி வெடிகுண்டுகளை வீசியபடி, துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இதனால் தொழுகையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து எழுந்து பாதுகாப்பு தேடி அங்கும், இங்குமாக ஓடினார்கள். சிலர் அங்குள்ள அறைகளுக்குள் சென்று பதுங்கினார்கள்.

இந்த தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசாரும், துணை ராணுவப்படையினரும் 2 மசூதிகளுக்கும் சென்று சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகளின் பிடியில் பணயகைதிகளாக இருந்தவர்களை மீட்க பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

80 பேர் பலி

தீவிரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 80 பேர் பலி ஆனார்கள். மேலும் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாடல் டவுண் மசூதி தாக்குதலில் உயிர் இழந்தவர்களில் பாகிஸ்தான் ராணுவ முன்னாள் லெப்டினன்ட் ஜெனரலும் ஒருவர் ஆவார்.

கர்கி சாகு மசூதியில் நடந்த தாக்குதல் பற்றி செய்தி சேகரிப்பதற்காக சென்ற டி.வி. நிருபர் ஒருவர் குண்டு காயம் அடைந்து, பின்னர் சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் உயிர் இழந்தார். இதில் சில போலீசாரும் அடங்குவார்கள்.

தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சிலர் போலீசாரும் உயிர் இழந்தனர். மேலும் ஒரு போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 போலீசார் காயம் அடைந்தனர்.

தீவிரவாதிகளின் தலைகள்

மாடல் டவுண் மசூதியில் தாக்குதல் நடத்திய 7 தீவிரவாதிகளில் 5 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதாகவும், 2 பேர் காயத்துடன் பிடிபட்டதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கர்கி சாகு பகுதியில் உள்ள மசூதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி துப்பாக்கியால் சுட்டதோடு, தங்கள் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதனால் அவர்கள் பலியானதாகவும், துண்டாகி கிடந்த அவர்களுடைய தலைகள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாக தலைவர் சஜ்ஜத் புட்டா தெரிவித்தார்.

கர்கி சாகு மசூதியில் நடந்த தாக்குதலில் மட்டும் 40-க்கும் அதிகமான பேர் உயிர் இழந்ததாக மீட்புக்குழுவின் செய்தித்தொடர்பாளர் பாகிம் ஜகன்ஜெப் கூறினார்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தெரிக்-இ-தலீபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது.

source:dailythanthi

1 பின்னூட்டம்

Filed under Uncategorized

இதெல்லாம் கொஞ்சம் “ஓவர்!’

large_6789.jpg

பெங்களூரு : எட்டு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மழலையர் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இங்கல்ல, பெங்களூரில்! கொஞ்சம், "ஓவரா’ தெரியுதுல்லே?

பெங்களூரிலுள்ள, "போடர் ஜம்போ கிட்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மழலையர் பள்ளிக்கூடத்தில், தற்போது குழந்தைகள் சேர்க்கை தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியில், எட்டு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கென்றே பிரத்யேக பாடத்திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில், குழந்தைகளின் மனவளர்ச்சி, பேச்சுத்திறன், உடல் தகுதி போன்றவற்றை மேம்படுத்தும் விதத்தில் தினசரி பாடங்களும், பயிற்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பாடத்திட்டத்திற்கு, "மனவள மேம்பாடு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் விரும்பும் வண்ணங்களை கொண்டு, எளிமையான படங்களும், எழுத்துக்களும் உருவாக்கப்பட்டிருப்பது இந்த பாடத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். ஒரு வயதுக்குபட்ட இந்த குழந்தைகளுடன், அவர்களின் அம்மாக்களும் பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும். வகுப்புகள் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை, வாரத்திற்கு மூன்று நாட்கள் நடைபெறும். பெற்றோர்களிடம் இந்த மழலையர் பள்ளிக்கூடங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், பல்வேறு இடங்களில் இந்த பள்ளிகளை திறக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தாயின் அரவணைப்பில் வளரும் சூழ்நிலை மாறி போய், பள்ளிகளின் அரவணைப்பில் குழந்தைகள் வளரும் காலம் வந்து விட்டது.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ரயில்வே துறைக்கு எதிராக 65 தாக்குதல்; இன்ற ு பலி 65 ;காயம்; 200 ; ரூ. 500 கோடி இழப்பு

large_8188.jpg

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 70 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 100 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். மாவோ., நக்சல்கள் நடத்தி வரும் வெறி தாக்குதல் தொடர்ந்த வண்ணமே உள்ளதே தவிர மத்திய அரசு இன்னும் ஓடுக்கும் விஷயத்தில் தெளிவான முடிவை அறிவிக்கவில்லை.

தொடர்ந்து வரும் தாக்குதல்கள் : இந்தியாவில் மவோயிஸ்ட் நக்சல்கள் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு தாக்குதலை நடத்தியுள்ளனர். பெரும் உயிரிழப்பு மற்றும் பொதுச்சொத்து தேசம் என மத்திய அரசுக்கு விடாத தலைவலியாகவே இருந்து வருகின்றனர். மலைப்பகுதியில் பதுங்கி இருக்கும் இந்த நக்சல்கள் தாக்குதலின் உச்சக்கட்டமாக கடந்த மாதம் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 76 பேரை கண்ணி வெடி வைத்தும் துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநேரத்தில் நக்சல்கள் ஒடுக்கும் விஷயத்தில் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மட்டுமே நடத்தப்பட்டது. உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை. 76 வீரர்களை கொன்றதாக 6 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். மே மாதம் 17 ம் தேதியன்று சட்டீஸ்கரில் பயணிகள் பஸ் ஒன்று கண்ணி வெடி வைத்து தகர்க்கப்பட்டதில் 36 பேர் கொல்லப்ட்டனர். இதில் 12 பேர் சிறப்பு படை போலீசார். தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் முகாம் மீதும் தாக்குதல் நடத்தினர், இதிலும் சில வீரர்கள் கொல்லப்பட்டனர். இன்னும் இவர்கள் தாக்குதல் வெறி அடங்காமல் அவ்வப்போது அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த 14 ம் தேதி டீசல் ஏற்றிவந்த டாங்கர் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டது.

வெடிக்கும் சப்தம் கேட்டது: இன்று ( வெள்ளிக்கி‌ழமை ) அதிகாலை 1. 30 மணி அளவில் மேற்குவங்கத்தில் இருந்து மும்பை நோக்கி ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. மேற்கு மிட்னாபூரில் தண்டவாளத்தில் பெரும் வெடிக்கும் சப்தம் கேட்டது. இதனையடுத்து ரயில் கவிழ்ந்தது. இதில் 13 ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி சரிந்து விழுந்தன. பயணிகள் அலறல் சப்தம் மட்டுமே அதிகம் ஒலித்ததாக அருகில் இருந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதில் 65 பேர் வரை உயிரிழந்து விட்டனர். 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர். இதில் பலர் ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கியபடி இருக்கின்றனர். கோல்கட்டாவில் இருந்து 135 கி.மீட்டர் தொலைவில் கேமாசோலி, சார்தியா ரயில்வே ஸ்டேஷன் இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கவிழ்ந்த ரயில் மீது மோதியது சரக்கு ரயில் : கவிழ்ந்து கிடந்த ரயில்மீது இந்த வழியாக வந்த சரக்கு ரயிலும் மோதியது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது. பயணிகளை மீட்கும் பணிக்காக தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அவசரகால படை வீரர்கள் மற்றும் விமான படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிக்கிய பயணிகளை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளத்தில் குண்டு வெடித்தது உண்மை தான் என ரயில்வே துறை அமைச்சர் மம்தா ஒப்புதல் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சகம் இது குறித்து இன்னும் எவ்வித செய்தியும் வெளியிடவில்லை. மத்திய அமைச்சர் பிரணாப்முகர்ஜி, ரயில்வே துறை அ‌மைச்சர் மம்தாவை அழைத்து விசாரித்தார், இந்த நிலைமை குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. சம்பவத்தை அடுத்து இப்பகுதியில் ஹவுரா வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 150 பேர் வரை காயமுற்றிருப்பதாகவும், உயிர்ப்பலி அதிகம் இருக்கும் என அஞ்சப்படுவதாகவும், உள்துறை செயலர் ஜி.கே., பிள்ளை கூறினார். இந்த சம்பவத்தின் பின்னணியில் மாவோ., நக்சல்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக ரயில்வே போர்டு போக்குவரத்து துறை உறுப்பினர் விவேக் ஷகாய் கூறினார்.

வெல்டிங் மூலம் உடைத்து மீட்பு : ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்றாக மோதி கிடப்பதால் பயணிகள் பலர் பெட்டிகளின் உடைந்த இரும்பு தளவாடங்கள் இடையே சி்க்கியிருக்கின்றனர். இவர்கள் மீட்கும் பணியில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்க வெல்டிங் மூலம் தளவாடங்கள் உடைக்கப்பட்டு மீட்கப்பட்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தில் மம்தா: சம்பவம் நடந்துள்ள பகுதிக்கு ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி விரைந்தார். தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து நேரிடையாக கேட்டறிந்தார். மேலும் அங்கு நடக்கும் மீட்பு பணிகளை பார்வையிட்டு அங்கிருந்தபடியே உத்தரவு பிறப்பித்த வண்ணமாக இருந்தார். இதில் பலியானவர்களுக்கு நிவாரணமாக ரூ. 5 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்‌ளார்.

தாமதமாக வந்த மீட்பு படையினர்: அதிகாலை பொழுதில் நடந்த இந்த விபரீதத்தில் சிக்கிய பயணிகள் மீட்பு படையினரின் தாமத வருகைக்காக காத்திருந்தனர். 1. 30 மணி அளவில் சம்பவம் நடந்து உதவி கேட்டு கதறிக்கொண்டிருந்தோம், ஆனால் மீட்பு படையினர் 5 மணி அளவில் தான் வந்து சேர்ந்தனர். என்றனர் விபத்தில் சிக்கிய பயணிகள் வே‌தனையோடு.

நாங்கள் பொறுப்பல்ல மம்தா பேட்டி : சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே துறை அமைச்சர் மம்தா கூறுகையில்: இது நக்சல்கள் நடத்திய சதி திட்டம். இந்த சம்பவத்திற்கு ரயில்வே துறை பொறுப்பேற்க முடியாது. பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு மாநில மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஐ.முற்போக்கு கூட்ணியில் அங்கம் வகிப்பதால் உள்துறை குறித்து வெளிப்படையாக விமர்சிக்க முடியவில்லை என்பதே பேட்டியின் உள் குறிப்பு.

இது சதிச்செயலாக இருக்கும் என்கிறார் ப. சி., : இந்த தாக்குதல் சம்பவம் நக்சல்களின் சதிச்செயலாக இருக்கும் என கூறியுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துகொள்கிறேன். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. வெடிகுண்டுகள் வெடித்தனவா என்பகு குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

மம்தா பேச்சுக்கு எதிர்ப்பு : மம்தாவின் மாநில அரசின் மீது குறை கூறுவது பொறுப்பற்ற செயல் என்று பா.ஜ., மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனரர். தனது பொறுப்பை தட்டிக்கழிக்கும் விதமாக நடந்து கொள்கிறார். இவரது பேச்சு தவறானது என்றும் ரயில்‌ பாதுகாப்பில் ரயில்வே துறைக்கும் பொறுப்பு உண்டு என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறைக்கு ரூ 500 கோடி நஷ்டம்: ரயில்வே துறைகை குறி வைத்து நக்சல்களின் கடந்த ஆண்டு தாக்குதல் மொத்தம் 65 . இதில் மே மாதம் மட்டும் 4 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ரயில்வே சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல், தண்டவாளம் தகர்ப்பு , ரயில்வே அலுவலகம் சூறை , குண்டு வைத்தல் முக்கிய வேலையாக ‌நக்சல்கள் செய்து வருகின்றனர். இதுவரை ரூ. 500 கோடி ரயில்வே துறைக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கூர்கா லீக் தலைவர் கொலை காட்சிகள் யூடியூ பில் வெளியானதால் பரபரப்பு

Madan Tamang, President All India Gorkha League

டார்ஜிலிங் : கூர்கா லீக் தலைவர் மதன் தமாங் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ( 21.05.10) அன்று மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அவரது ஓட்டல் அறையில் இருந்து இந்த வீடிஙயோவை எடுத்துள்ளார். வீடியோவில் மஞ்சள் நிற சட்டை அணிந்த ஒருவன் குர்கி எனப்படும் ஆயுதத்தால் தமாங்கை தாக்கி விட்டு ஓடுவதும், பின்னர் மீண்டும் திரும்பி வந்து தமாங் இறந்து விட்டாரா என்பதை உறுதி செய்து விட்டு ஓடும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் யூடியூபில் வெளியாகியுள்ளன. இது வீடியோ பரவலாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இடிந்து விழுந்தது காளஹஸ்தி கோவில் கோபுர ம்: பக்தர்கள் அதிர்ச்சி

large_7043.jpg

சென்னை: பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் நேற்று மாலை இடிந்து விழுந்தது. பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. காளஹஸ்தி கோவிலின் ராஜகோபுரம் 140 அடி உயரம் கொண்டது. இதன் இடப்புறத்தில் முதல் நிலையிலிருந்து ஆறாம் நிலை வரை, திடீரென பெரிய விரிசல் ஏற்பட்டது., கோபுரம் பிளவுபட்டது போல் காணப்பட்டது. மின்னல் வெட்டியது போல காணப்படும் இந்த பகுதியிலிருந்து சுண்ணாம்பு துகள்கள் விழுந்தன.

சென்னையைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு, இக்கோபுரத்தை நேற்று முன்தினம் ஆய்வு செய்தது. கோவில் ராஜகோபுரத்திலிருந்து 200 அடி வரை யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும், கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை உடனே காலி செய்யும்படியும் இக்குழு ஆலோசனை வழங்கியது. இந்நிகழ்வு, பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று மாலை ஏழு மணி அளவில் இந்த கோபுரம் இடிந்து விழுந்தது. கோபுரத்தின் அருகில் யாரும் செல்ல முடியாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. பயங்கர சப்தத்துடன் கோபுரம் இடிந்து விழுந்தது. காளஹஸ்தி முழுவதும் அந்த சப்தம் எதிரொலித்தது. கோயிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காளஹஸ்தியை சேர்ந்த பொதுமக்கள் உடனே கூட்டம், கூட்டமாக அங்கு விரைந்தனர்.

தமிழக தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி கூறியதாவது: காளஹஸ்தி ராஜகோபுரத்தை கி.பி.1510ம் ஆண்டு, கிருஷ்ண தேவராயர் கட்டினார். கோபுரத்தின் மூலப்பொருளான சுண்ணாம்பில் ஏற்படும் ஒட்டும் தன்மை குறைவு, இடி தாக்குதல், கோபுரத்தின் அடித்தளத்தில் நிகழும் மண் அரிப்பு போன்ற காரணங்களால் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறு நாகசாமி கூறினார்.

ரோசய்யா அவசர ஆலோசனை: காளஹஸ்தி கோவிலின் தெற்கு ராஜகோபுரம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் ரோசய்யா, அறநிலையத் துறை அமைச்சர் வெங்கடரெட்டி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் நேற்று இரவு ஐதராபாத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். "ராஜகோபுரம் இடிந்து விழுந்ததில், அறநிலையத் துறை அதிகாரிகளின் அலட்சியம் ஏதும் இல்லை’ என, அமைச்சர் வெங்கட ரெட்டி நிருபர்களிடம் தெரிவித்தார். காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்த தகவல் கிடைத்தவுடன் சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத்ரி, அங்கு சென்று இடிபாடுகளை அகற்றும் பணியை மேற்பார்வையிட்டார். போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு மீட்பு நடவடிக்கை மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கோபுரத்தின் இடிபாடுகளில் எவரும் சிக்கிக் கொண்டதாக இதுவரை தெரியவில்லை என, கலெக்டர் தெரிவித்தார். காளஹஸ்தி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இடிந்து விழுந்த ராஜகோபுரத்தை பார்த்துச் சென்ற வண்ணம் உள்ளனர்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

எவரெஸ்ட் சிகரம் ஏறி தமிழக இளைஞர் சாதனை

large_6401.jpg

சென்னை : எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழக இளைஞர் என்ற பெருமையை சந்தோஷ் குமார் பெற்றுள்ளார். சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(26); இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், சிங்கப்பூரில் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். சிறுவயதில் இருந்தே மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட இவர், கடந்த இரு ஆண்டுகளில், மேற்கு ஐரோப்பாவில் உள்ள சோ ஓயோ(8,201 மீ), ஆப்ரிக்காவின் கிளிமன்ஜரோ (5,895 மீ) உள்ளிட்ட பல சிகரங்களில் ஏறியுள்ளார். இந்தியாவில் 53 சதவீதம் குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். நாட்டின் முக்கிய பிரச்னையான இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சந்தோஷ்குமார் தமது ஐவர் குழுவுடன், நேற்று முன்தினம் காலை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்த பயணத்தை அவர், கடந்த மார்ச் 29ம் தேதி சென்னையிலிருந்து துவக்கினார். தமிழகத்திலிருந்து எவரெஸ்ட் சிகரம் ஏறிய, சென்னையைச் சேர்ந்த முதல் இளைஞர் என்ற பெருமையை சந்தோஷ் குமார் பெற்றுள்ளார். எவரெஸ்ட் சிகரம் ஏறியவுடன் அங்கு, "தமிழ் வாழ்க’ என்று எழுதப்பட்ட பதாகையை வைத்தார். தமது சாதனைப் பயணத்திற்கு நிதியுதவி அளித்த, "கார்ப்பரேட்’ நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளையும் எவரெஸ்ட் சிகரத்தின் பல இடங்களில் வைத்தார். சந்தோஷ் குமாரின் எவரெஸ்ட் சிகர பயண அனுபவங்கள் மற்றும் புகைப்படங்களை blog.climbeverestwithme.com என்ற வலைதளத்தில் பார்க்கலாம்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized