Monthly Archives: ஜூலை 2008

முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?

முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?

An Answering-Islam.org Article

முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?

How Muhammad’s Contemporaries Really Viewed Him –
An Analysis of the witness of the Quran concerning The opinions of the Disbelievers regarding the prophet of Islam

இஸ்லாமிய நபியாகிய முகமது பற்றி, அவர் காலத்து மக்களின்(முஸ்லீமல்லாதவர்களின்) கருத்து என்ன? என்று குர்‍ஆன் சொல்லும் சாட்சியைப் பற்றிய ஓர் அலசல்.

இக்கட்டுரை “Muhammad as Al-Amin (the Trustworthy) How His Enemies Really Viewed Him” என்ற கட்டுரைக்கு மேலதிக விவரங்களுக்காக இணைக்கப்படுகிறது.

முகமது அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, தன் ஊர் மக்களிடம் ஒரு நேர்மையான மனிதராகவும், குற்றமில்லாத மனிதராகவும் பெயர் பெற்று இருந்தார் என்று இஸ்லாமிய தாவா செய்யும் அறிஞர்கள் கூறுவது வழக்கம். இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், முகமது ஒரு நேர்மையானவர் என்றும், குற்றம் குறை இல்லாதவர் என்றும் தன் சமகாலத்து மக்கள் அறிந்து இருந்தார்கள் என்று கூறுவதை நாம் கண்டுயிருப்போம். இன்னும் சொல்லப்போனால், முகமது காலத்தவர்கள் முகமதுவிற்கு “அல்-அமீன் (Al-Amin)” அல்லது “நேர்மையானவர்-(Trustworthy)” என்றும் பெயர் சூட்டி இருந்தனர் என்றும் கூறுவார்கள், இப்படி பலவிதமாக கூறுவார்கள்.

முஸ்லீம்கள் இப்படியெல்லாம் சொல்வதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவர்களின் இந்த கூற்று, கண்களால் கண்டு சாட்சி சொன்னவர்களின் கூற்றின் மீது ஆதாரப்பட்டு இருக்கவில்லை, அதற்கு மாறாக முகமதுவின் மரணத்திற்கு பின்பு ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டவைகளாகும். இன்னும் சொல்லப்போனால், இவைகள் அனைத்தும் முஸ்லீம்களின் கை மற்றவர்களின் மீது ஓங்கி இருக்கும் போது(இஸ்லாமிய அரசர்கள்/கலிபாக்கள் ஆட்சி செய்தபோது) எழுதப்பட்டவைகளாகும், மற்றும் அவர்கள் சரித்திரத்தை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திரும்ப எழுதினார்கள். அந்த கால்த்தில் முஸ்லீம்கள் தாங்கள் எந்த கண்ணோட்டத்தில் முகமதுவின் வாழ்க்கையை படிக்கவிரும்பினார்களோ அந்த நம்பிக்கையின் படி எழுத ஆரம்பித்தார்கள்(The Muslims were pretty much free to read back into the life of Muhammad their specific theological views and beliefs concerning their prophet.)

முக்கியமாகச் சொல்லவேண்டுமானால், முஸ்லீம்கள் முகமதுவிற்கு கொடுக்கும் இந்த புகழாரங்களுக்கு எதிராக‌ அவர்களின் வேதமே எதிர் சாட்சியாக அமைந்துள்ளது. நாம் குர்‍ஆனை ஆராய்ந்துப் பார்த்தால், முகமது ஒரு உண்மையின் களங்கரை விளக்காகவோ அல்லது ஒரு முழுமையான‌ நேர்மையான மனிதராகவோ இருந்தார் என்று அவரைச் சுற்றியிருந்த மக்கள் கருதவில்லை அல்லது நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை நாம் அறியலாம். அம்மக்களின் சாட்சி முகஸ்துதி செய்வதாக கூட இருக்கவில்லை, குறைந்தபட்சம் சொல்லவேண்டுமானால், முகமதுவிற்கு பிறகு சேகரிக்கப்பட்ட விவரங்களாகிய‌ , முகமதுவை அவரது எதிரிகள் புகழ்வதாக உள்ள விவரங்கள் அனைத்தும் வெறும் கட்டுக்கதைகளாகவும், மாயையாகவும் இருக்கிறது.

முகமதுவின் சமகாலத்து மக்கள் அவருக்கு சூட்டிய பெயர்கள், குர்‍ஆன் ஆதாரங்களின் படி:

1. முகமது ஒரு பொய்யர்(A Liar):

(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லலவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். (குர்‍ஆன் 6:33)

உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக. (குர்‍ஆன் 10:41)

இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் – அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும். (குர்‍ஆன் 35:4)
2. முகமது கதைகளை இட்டுக்கட்டி சொல்பவர்/கட்டுக்கதைகளைச் சொல்பவர்(A Forger/Plagiarizer):

“உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?” என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டால், “முன்னோர்களின் கட்டுக்கதைகள்” என்று அவர்கள் (பதில்) கூறுகிறார்கள். (குர்‍ஆன் 16:24)

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) “நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்” என்று அவர்கள் கூறுகிறார்கள்; எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள். (குர்‍ஆன் 16:101)

அப்படியல்ல! “இவை கலப்படமான கனவுகள்” இல்லை, “அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்” இல்லை, “இவர் ஒரு கவிஞர்தாம்” (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்” என்றும் கூறுகின்றனர். (குர்‍ஆன் 21:5)

“இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார் இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள். (குர்‍ஆன் 25:4)

இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; “இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் – ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன.” (குர்‍ஆன் 25:5)

(நபியே!) “வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்” என்று கூறுவீராக! (குர்‍ஆன் 25:6)
3. முகமது ஒரு சூனியக்காரர் (A Sorcerer/Magician):

மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாகப் பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவதற்காகவும், அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீ அருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா? காஃபிர்களோ, “நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே” என்று கூறுகின்றனர்.(குர்‍ஆன் 10:2)

நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்; “இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்” என்று கூறுகிறார்கள்; இன்னும் அவர்கள் “இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை” என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம்; திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, “இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்.(குர்‍ஆன் 34:43)

அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர் “இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!” என்றும் காஃபிர்கள் கூறினர்.(குர்‍ஆன் 38:4)
4. முகமது ஒரு குறிசொல்பவர்/புலவர்(A Soothsayer and Poet):

“ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?” என்றும் அவர்கள் கூறுகிறார்கள். (குர்‍ஆன் 37:36)

எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர், பைத்தியக்காரருமல்லர்.(குர்‍ஆன் 52:29)

(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.(குர்‍ஆன் 69:42)
5. முகமது ஒரு பைத்தியக்காரர்/”ஜின்”னால் பீடிக்கப்பட்டவர்(A Madman – Majnun – lit., “jinn-possessed”)

(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.(குர்‍ஆன் 15:6)

அல்லது, “அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது” என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள்.(குர்‍ஆன் 23:70)

அவர்கள் அவதை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) “கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்” எனக் கூறினர்.(குர்‍ஆன் 44:14)
முகமதுவின் சம காலத்து மக்கள் அவரை எப்படிப்பட்டவராக கண்டார்கள் என்று குர்‍ஆன் சொல்லும் சாட்சியை சுருக்கமாகச் சொன்னால்:

முகமது ஒரு பொய்யர்( A Liar )

முகமது கதைகளை இட்டுக்கட்டி சொல்பவர்/கட்டுக்கதைகளைச் சொல்பவர்(A forger and plagiarizer)

முகமது ஒரு சூனியக்காரர் (A sorcerer and a magician)

முகமது ஒரு குறிசொல்பவர்/புலவர் (A soothsayer and poet)

முகமது ஒரு பைத்தியக்காரர் / ஜின் என்ற ஆவியினால் பீடிக்கப்பட்டதால், இப்படி பைத்தியமாகி இருக்கலாம், அதாவது பிசாசு பிடித்தவர் (A madman, perhaps as a result of being possessed by jinn, i.e. demon-possessed. )

குர்‍ஆன் என்பது முகமதுவின் வாழ்நாட்களில் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்றும், அதில் சம காலத்து நிகழ்வுகளைப் பற்றிய விவரங்கள் உண்டென்றும் முஸ்லீம்கள் நம்புகின்றனர். மக்காவில் வாழ்ந்த மக்கள் முகமதுவை ஒரு நல்ல நேர்மையான, நம்பத்தகுந்த நபர் என்றுச் சொன்னார்கள் என்று இஸ்லாமிய ஹதீஸ்கள் சொல்லும் விவரங்களுக்கு எதிராக இந்த குர்‍ஆனின் சாட்சி உள்ளது. முஸ்லீம்களின் வேதமாகிய குர்‍ஆன், முஸ்லீம்கள் சொல்வதற்கு எதிராகச் சொல்கிறது, அதாவது முகமதுவின் சமகாலத்து மக்கள் முகமதுவை

ஒரு பொய்யராகக் கண்டனர்,

அவர் ஒரு ஏமாற்றுக்காரராகக் கண்டனர்,

கட்டுக்கதைகளை இட்டுக்கட்டுபவராகக் கண்டனர்.

மற்றும் புராண கட்டுக் கதைகளை இறைவனிடமிருந்து வந்த வெளிப்பாடுகளாக சொல்பவராகக் கண்டனர் என்று குர்‍ஆன் சாட்சி பகருகிறது. இறைவன் என்னோடு பேசினார்(வெளிப்படுத்தினார்) என்று முகமது சொல்லும் போது ஏன் மக்கள் இவரை நம்பவில்லை என்பதற்கான காரணங்கள் இவைகள் ஆகும். முகமது பழைய கற்பனைக் கட்டுக்கதைகளையும், மாயையாக கதைகளையும் சொல்கிறார் என்று அவர்கள் கண்டனர். முகமது தன்னை மக்கள் மிகவும் முக்கியமானவராக கருதவேண்டும் என்றும், தான் சொல்வதை மக்கள் கவனிக்கவேண்டும் என்றும், தன் விருப்பம் நிறைவேறவேண்டும் மற்றும் மக்கள் தன் செய்திக்கு கீழ் படியவேண்டும் என்றும் இவர் எண்ணுகின்றார் என்று அம்மக்கள் கருதினர்.

இதுமட்டுமல்ல, இஸ்லாமிய தாவா ஊழியம் செய்யும் அறிஞர்கள், இந்த இஸ்லாமியரல்லாத மக்களின் குற்றச்சாட்டுகளை புறக்கணிக்கமுடியாது. அதாவது, முகமது மீது மக்கள் வேண்டுமென்றே தவறாக குற்றம் சாட்டினார்கள் என்றுச் சொல்லமுடியாது. காரணம், அப்படி இவர்கள் சொல்வார்களானால், “இஸ்லாமில் நம்பிக்கையற்றவர்கள் முகமதுவை ஒரு நேர்மையானவராகக் கண்டனர்” என்று இவர்கள் முன்வைக்கும் வாதம் பொய் என்று தெளிவாகிவிடும், மற்றும் இவர்களின் வாதங்களில் உள்ள முரண்பாட்டை மக்கள் தெளிவாக கண்டுக்கொள்வார்கள். ஒன்றை மட்டும் எல்லாரும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள், அதாவது “முகமது ஒரு நேர்மையானவர் என்று அவர் எதிரிகள்(இஸ்லாமியரல்லாதவர்கள்) நற்சாட்சி சொன்னார்கள்” என்றுச் சொல்லி, முகமதுவின் நபித்துவததை நிருபிக்க பாடுபடுவது இந்த இஸ்லாமிய அறிஞர்களே என்பதை மறக்கக்கூடாது.

இஸ்லாமிய சகோதரரோ அல்லது சகோதரியோ, நம்பிக்கையில்லாத மக்கள் முகமதுவின் நடத்தைப் பற்றி சொல்லும் குற்றச்சாட்டை தள்ளிவிடமுடியாது அல்லது புறக்கணித்துவிடமுடியாது. குறைந்த‌ப‌ட்ச‌மாக‌, இஸ்லாமிய‌ர‌ல்லாத‌ ம‌க்கா ம‌க்கள்(எதிரிகள்) முக‌ம‌துவின் ந‌ட‌த்தைப் ப‌ற்றிச் சொன்ன ந‌ற்சாட்சியை ந‌ம்ப‌வேண்டும் என்றுச் சொல்லும் இஸ்லாமிய‌ர்க‌ள், அதே எதிரிக‌ள், முக‌ம‌துவின் ந‌ட‌த்தைப் ப‌ற்றிச் சொல்லும் இந்த‌ குற்ற‌ச்சாட்டுக‌ளையும் நாம் நம்பி, முகமது ஒரு நல்ல நடத்தையுள்ளவர் அல்ல என்று நம்பலாம் அல்லவா? இஸ்லாமியர்கள் ஏதாவது ஒன்றைத் தான் தெரிந்தெடுத்துக்கொள்ளமுடியும், கூழும் குடிக்கனும், மீசையிலும் ஒட்டக்கூடாது என்றால் அது நடக்காது.( S/he cannot therefore simply discredit the claims of the unbelievers when they are unflattering to the character of Muhammad. After all, if their testimony is reliable enough to support of Muhammad’s integrity then by the same token the unbelievers’ claims are also good enough to call his character into question. The Muslims cannot have their cake and eat it too.)

மூலம்: http://www.answering-islam.org/Shamoun/mhd_amin2.htm

மேலும் அறிய படிக்கவும்:

http://www.answering-islam.org/Responses/Abualrub/sinful_mo.htm
http://www.answering-islam.org/Shamoun/possessed.htm
http://www.answering-islam.org/Responses/Osama/zawadi_possessed.htm
http://www.answering-islam.org/Responses/Osama/zawadi_possessed.htm

Isa Koran Home Page Back – Sam Shamoun Articles

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/shamoun/mohamin2.html

1 பின்னூட்டம்

Filed under Uncategorized

நக்மா மீது பி.ஜே.பி. பாய்ச்சல்

நக்மா மீது பி.ஜே.பி. பாய்ச்சல்

இந்து மதத்தினரின் மனதை புண்படுத்தியதாகக் கூறி, பா.ஜ.க.பிரமுகர் நடிகை நக்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக செய்திவெளியான பிறகு, மீடியாக்களிடமிருந்து ஒதுங்கியே இருந்தார் நக்மா. சொந்த பாதுகாப்பிற்காக அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாகவும் செய்தி வெளியானது. தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் டெல்லியில் அளித்த விருந்தில் நக்மா கலந்த கொண்டது இந்தச் செய்தியை உறுதி செய்தது.

ஆனால், அரசியலில் இருந்து ஆன்மிகத்துக்கு மாறினார் நக்மா.ஏசு எனக்கு நிம்மதியளித்தார், அவரைப் பற்றி பேசுவதே இனி எனது முழுநேர வேலை என அவர் கூறியபோது அனைவரும் அதிர்ந்து போயினர். பலரும் இதனை நம்பவில்லை. ஆனால், நக்மாவின் ஏசு பிரச்சாரம் தொடர்ந்து கொண்டிருந்தது.

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் நடந்த ஏசு பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் நக்மா. அவரின் பேச்சு பிற மதத்தினரின் குறிப்பாக இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக இருந்தது என்று கூறி, அதற்கு விளக்கம் கேட்டு பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் நக்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விளக்கம் அளிக்காவிடில், அளிக்கிற விளக்கம் திருப்திகரமாக இல்லாவிடில் நக்மா மீது வழக்கு தொடரப்படும் எனவும் மிரட்டியுள்ளார் அந்த பிரமுகர்.

இந்த இக்கட்டிலிருந்து இறைவன்தான் நக்மாவை காப்பாற்ற வேண்டும்!

Nagma என்ன பேசினார்:

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சகோதரி நக்மாவின் வீடியோ சாட்சி

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

நக்மா என்ன சொல்கிறார் என்று நீங்களே கேட்டுப்பாருங்கள்

Famous film actress Miss.Nagma has got saved and testifying Jesus. On28th of June she attended the Thirappin Vasal Jebam conducted by Bro.Mohan C. Lazarus in Nalumavadi, a small village in Tamilnadu.Thousands of people gathered in that meeting to listen to the word of God. She led the people in worship and delivered the word of God with authority sharing her personal experience with God. People were blessed with her ministry there and testified.
 
 

 
 
Nagma

Birth Name : Nandita Morarji

Born : 25 December 1974 Mumbai, India

Other Name : Namratha Sadhana

Father : Sri Arvind Pratapsinh Morarji( the late textile magnate)

Mother : Seema Sadhana

Debut film : Baaghi (1990 )…..co-starring Salman Khan . she was 15 at the time.

 

Nagma Born of a Muslim mother and a Hindu father on Christmas Day.

Nagma Acted in Hindi, Tamil, Telugu, Kannada, Malayalam, Bengali, Bhojpuri, Punjabi, and now Marathi.

Nagma Fluent in Hindi, Marathi, Tamil, Telugu, and English.

According to Nagma’s passport, the name given to her a birth was Nandita, and it is by that name that she was referred to in an obituary printed by the family when her father, Arvind Morarji, died. Nagma thus had a Hindu father and a Muslim mother. After divorcing Morarji “due to some family problems,” Nagma’s mother later married Chander Sadhana, a film producer, with whom she had two other daughters,

Jyothika and Radhika, as well as a son, Suraj. Through her biological father, who later re-married, Nagma has two more half-brothers, Dhanraj and Yuvraj.

 
   
Among the People Bro.Mohan C.Lazarus Introducing
 
   
Time of Worship Singing and Praising  
 
   
Sharing the Joy of Salvation Remembering God’s Goodness
   
Mighty Word of God Sharing the Depth of Spiritual Experience
   
Blessed People Committing for God
   
Tumour Disappears Personal Prayer
   
Love and Compassion Thanksgiving

http://www.zionmedia.in/nagma.html

 

http://unmaiadiyann.blogspot.com/2008/07/blog-post.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

எல்லா அமெரிக்கர்களும் கிறிஸ்தவர்களா? (American=Christian?)

எல்லா அமெரிக்கர்களும் கிறிஸ்தவர்களா? (American=Christian?)

 

http://thamilislam.blogspot.com/2008/07/americanchristian_12.html

 

கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது?

அல்லது

கிறிஸ்தவம் மேற்கு…கிழக்கு…வடக்கு ம‌ற்றும் தெற்கத்திய மார்க்கமாகும்!

Why Christianity is Western
Or
Christianity is Western … And Eastern and Southern, and Northern!

உங்கள் மனதின் சிந்தனையை கிளறி, சிந்திக்க‌த் தூண்டும் சில‌ வரிக‌ளை நான் சொல்ல‌ட்டும்.

எல்லா யூதர்களும் பணக்காரர்கள்

எல்லா கருப்பின மக்களும் நல்ல விளையாட்டு வீரர்கள்

எல்லா பிரன்சுக்காரர்களும் க‌ரடுமுரடானவர்கள்

எல்லா மெக்ஸிக்கோகாரர்களும் சோம்பலானவர்கள்

எல்லா அரபியர்களும் தீவிரவாதிகள்

இப்படிப்பட்ட சுருக்கமான, சுலபமான வார்த்தைகளைத் தான் மக்கள் கலாச்சாரத்தை விவரிக்க பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவைகள் தவறானவைகளாக இருக்கின்றது. எனக்குத் தெரியும், பல பணக்கார யூதர்கள் இருப்பது உண்மை தான், பிரன்சுக்காரர்களில் சிலர் கரடுமுரடானவர்கள் இருப்பதும் உண்மை தான், மற்றும் சோம்பளுள்ள மெக்ஸிக்கோகாரகள் இருப்பதும் உண்மை தான். அதே போல, கருப்பர்களில் மிகவும் திறமையான விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள், மற்றும் சில அரபியர்கள் தீவிரவாதிகளாகவும் இருக்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட ஒரு சிலரை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் நாட்டிற்கும், இனத்திற்கும், கலாச்சாரத்திற்கும் பொதுவான பெயரைத் தருவது சரியானதல்ல. பல‌வித்தியாசமான கலாச்சாரத்தைப் பற்றி தெரியாதவர்களும், தெரியாத விவரங்களைப் பற்றி தெரிந்தவர்கள் போல காட்டிக்கொள்கிறவர்கள் சொல்லும் வார்த்தைக‌ள் தான் இந்த‌ வ‌ரிக‌ளாகும். உண்மையில் அவ‌ர்க‌ள் த‌வறாக‌ புரிந்துக் கொண்டுள்ளார்க‌ள். இன்னொரு முக்கிய‌மான‌ வ‌ரியைச் சொல்கிறேன்.

 

எல்லா அமெரிக்கர்களும் கிறிஸ்தவர்கள்.

நான் ஒரு அமெரிக்க பிரஜையாகவும், அதே நேரத்தில் ஒரு கிறிஸ்தவளாக‌னாகவும் இருப்பதினால், மேலே சொல்லப்பட்ட வரியும் உண்மைக்கு முரணாக உள்ளதென்பதை நான் நிச்சயமாக சொல்லமுடியும். நான் சொல்வதை நம்புவதற்கு கடினமாக இருக்கலாம், ஆனால், “கிறிஸ்தவன்” என்றால் என்ன பொருள் என்று அமெரிக்காவிற்கு தெரியவில்லை என்பது தான் உண்மை.

ஐரோப்பிய நாடுகளில் இருந்த மக்கள் மத கொடுமைகளிலிருந்து தப்பித்து இந்த அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்கள் என்றும் இப்படிப்பட்ட மக்களால் தான் இந்த அமெரிக்க நாடு உருவாக்கப்பட்டது என்றும் நம் எல்லாருக்கும் தெரியும். (இதே “கிறிஸ்தவ” மனப்பான்மை தான் குருசேடர்கள் என்ற பெயரில் முஸ்லீம்களை கொன்றது, ஆனால், தங்களுக்கு இதே பிரச்சனை வரும்போது, அதை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை – the same “Christian” mentality that slaughtered Muslims during the Crusades turned its attention to others of which it didn’t approve!), நம்முடைய சுதந்திரமும் மற்றும் சட்டங்களும் பைபிளில் அவர்கள் கண்ட சத்தியத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. இப்படிப்பட்ட சுதந்திரத்தில் ஒரு சுதந்திரம் தான், நம் சமய கோட்பாடுகளுக்கேற்ப நமக்கு விருப்பமான இறைவனை நாம் வணங்கவும் அல்லது வணங்காமல் இருக்கவும் கொடுக்கபப்டும் சுதந்திரம். இக்காரணங்களை முன்னிட்டு, மக்கள் பாதுகாப்பாகவும் மற்றும் சுயஅதிகாரம் உடையவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக‌, அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசாங்கம் குறைவான அதிகாரங்களை தன்னிடம் கொண்டுள்ளது, அதே சமயத்தில் தேவைப்படும் போது சட்டம் மீறப்படும் சமயங்களில், அதே அரசாங்கம் தன் நீதித்துறையின் அதிகாரத்தின் மூலமாக மக்களை பாதுகாக்கிறது.

இன்னுமுள்ள சுதந்திரங்களில் குறிப்பிடத்தக்கது, அரசாங்கம் மக்களை அநியாயமாக கொடுமைபடுத்தக் கூடாது என்ற சுதந்திரமாகும்.

இந்த சுதந்திரங்கள் மிகவும் முக்கியமான மற்றும் சரித்திர பூர்வமாக உள்ள ஒரு கலவை உருவாக உதவுகின்றன, அது என்னவென்றால், வித்தியாசமான பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒருமித்து வாழ கற்றுக்கொண்டு ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக வாழும் கலவையாகும். ஒருவன் நீங்கள் நம்புவதை நம்பாமல் வேறு ஒன்றை நம்புகின்றார் என்பதற்காக சட்டத்தை பயன்படுத்தி அவனை கொடுமைப்படுத்தக்கூடாது. இந்த சுதந்திரத்தை மக்கள் சரியாக பின்பற்றவில்லையானாலும், இந்த சுதந்திரத்தின் அடித்தளம் நேரடியாக தேவனின் யோசனையிலிருந்து வந்ததாகும், “யூதனென்றும் கிரேக்கன் என்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனன் என்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை” நீங்கள் எல்லாரும் அவருடைய பார்வையில் சமமாயிருக்கிறீர்கள் (கலாத்தியர் 3:28).

எப்ப‌டியாயினும், அமெரிக்க‌ ஐக்கிய‌ நாடுக‌ள் உருவான‌ நாட்க‌ள் முத‌ற் கொண்டு, ப‌ல‌ ஆண்டுக‌ள் க‌ட‌ந்து விட்ட‌ன‌, ம‌ற்றும் ந‌ம் சுத‌ந்திர‌ங்க‌ளின் அடிப்ப‌டை த‌த்துவ‌ங்க‌ள் சிறிது சிறிதாக‌ ம‌ற‌க்க‌ப்ப‌ட்டு விட்ட‌ன‌ ம‌ற்றும் அல‌ட்சிய‌ம் செய்ய‌ப்பட்டுள்ள‌ன‌. ந‌ம்முடைய‌ நாடு கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடுக‌ளின் மீது உருவாக்க‌ப்ப‌ட்ட‌து என்ப‌தை கூட‌ ம‌க்க‌ள் ச‌ரியாக‌ தெரிந்துக் கொள்ளாம‌ல் இருக்கிறார்க‌ள். இது ம‌ட்டுமா, குறைந்த‌ ப‌ட்ச‌மாக‌ “கிறிஸ்த‌வ‌ அடிப்ப‌டை கோட்பாடுக‌ள்” என்றால் என்ன‌ என்ப‌தையும் தெரிந்துக் கொள்ளாம‌ல், “கிறிஸ்த‌வ‌ன்” என்றால் ஒரு கலாச்சார‌ம் ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட்ட‌ வார்த்தையாக‌ க‌ருதிக்கொண்டு இருக்கிறார்க‌ள். ஒருவ‌னின் பெற்றோர்க‌ள் கிறிஸ்த‌வ‌ர்க‌ளாக‌ இருந்தால், அவ‌ன் கூட ஒரு கிறிஸ்த‌வ‌ன், ச‌ரியா? என்று கேட்டால், பதில் தவறு என்பதாகும்.

இந்நாட்டை தோற்றுவித்த நம் முன்னோர்கள், கிறிஸ்தவத்தை நாட்டின் அங்கீகரிக்கபப்ட்ட மதமாக ஆக்கியிருந்தாலும், நாம் குழப்பமடையத் தேவையில்லை. கிறிஸ்தவத்தில் உள்ள ஒரு முக்கியமான அடிப்படை கோட்பாடு என்னவென்றால், இறைவனை நம்பும் படி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதாகும். தேவன் அவருடைய அன்பு மற்றும் இரக்கத்தின் பக்கம் நீங்கள் உங்கள் சுய விருப்பத்தின் படி திரும்ப வேண்டும் அல்லது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். இந்நாட்டை தோற்றுவித்த நம் முன்னோர்கள் அவர்களால் முடிந்த ஒன்றை செய்து விட்டு சென்றுள்ளார்கள், அது என்னவென்றால், இறைவன் மீது வைக்கும் நம்பிக்கை என்றால் என்ன? என்ற கேள்விக்கு எதிர் காலத்தில் வரும் ஒவ்வொரு சந்ததியும் பதில் அளிக்கட்டும் என்று விட்டுவிட்டார்கள் (So our founders did the only thing they could—they left the question of faith to be answered by each succeeding generation).

ஆகையால், நம் நம்பிக்கைகள் மற்றும் செயல்களுக்கு நாமே பொறுப்பு வகிப்பதையே சுதந்திரம் என்கின்றோம். துரதிஷ்டமாக, மக்கள் இயேசுவின் போதனைகளை நம்புவதைக் காட்டிலும், எதையும் நம்பாமல் இருப்பது மிகவும் சுலபம் என்று எண்ணி விடுகின்றனர். இதைவிட மிகவும் கொடூரமானது என்னவென்றால், மக்கள் தங்களுக்கு மிகவும் கவர்ச்சியாக உள்ள போதகத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் ஆனால், தங்கள் மனதிற்கு சஞ்சலத்தை கொடுத்தும் போதகத்தை தள்ளி விடுகின்றனர். இப்படிப்பட்ட மனப்பான்மைத் தான் “கிறிஸ்தவன்” என்ற வார்த்தையின் உண்மை அர்த்தத்தை மறைக்கச் செய்கிறது. “கிறிஸ்தவன்” என்ற வார்த்தைக்கு பொருள் என்னவென்றால், அவன் “கிறிஸ்தவ” பெற்றோருக்கு பிறந்தவனாக இருக்கலாம், அல்லது “சரியான ஒன்றைச் செய்கிறவனாக” இருக்கவேண்டும் . நீங்கள் மற்றவர்களை சரியாக நேர்மையாக நடத்தவிரும்பினால், அவர்களை சபிக்காதீர்கள், அல்லது அவர்களை மது அருந்தச் செய்யாதீர்கள், இப்படி நீங்கள் செய்வீர்களானால், நீங்கள் கிறிஸ்தவராக நடந்துக்கொள்கிறீர்கள் என்று பொருள். இன்று நாம் பொதுவாக‌ “கிறிஸ்தவம்” என்ற வார்த்தைக்கு கொடுக்கும் பொருளில், அன்று இயேசு வாழவில்லை. இன்றுள்ள கிறிஸ்தவம் என்ற வார்த்தையின் பொருளுக்குள் அவரை நாம் அடைக்க முடியாது.

இயேசுவின் வார்த்தைகளை மிகவும் ஆர்வத்துடன் நம்புகின்ற எங்களைப் பற்றி இப்போது நீங்கள் கற்பனை செய்துப் பார்க்க முடியும். நாம் நம் அயலகத்தாருடன் நம் நம்பிக்கைப் பற்றி பேசுவதற்கு முன்பாக சில பழக்கப்பட்ட வார்த்தைகளின் உண்மை பொருள் என்ன என்பதை வகையறுக்க வேண்டும். உண்மையைச் சொல்லப் போனால், “சர்ச் அல்லது கிறிஸ்தவ சபை” என்ற வார்த்தையும் தன் முழு அர்த்தத்தை இழந்து விட்டது எனலாம். இப்போது இவ்வார்த்தைக்கு “இயேசுவின் சரீரம்” என்று பொருள் இல்லை, இதற்கு பதிலாக சர்ச் என்பது ஒரு கட்டிடம், அங்கே மத சம்மந்தப்பட்ட மக்கள் கூடுவார்கள் அல்லது ஆன்மீக உற்சாகம் உள்ளவர்கள் கூடும் ஒரு இடம் என்று பொருளாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட குழப்பம் நம்முடைய எல்லைக்குள் உள்ளவர்களிடையே இருக்கிறது, அப்படியானால், வேறு ஒரு கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் புரிந்துக் கொள்ளவிலலை என்றுச் சொல்வதில் ஆச்சரியமில்லை.

[கீழ் கண்ட பத்தியை படிப்பதற்கு முன்பாக ஒரு சிறு தமிழாக்க‌ குறிப்பு: அமெரிக்காவில் சோப் ஆபுரா என்று ஒரு நாடகத்தை (மெகா சீரியல்) தொலைக் காட்சிகளில், வானொலிகளில் ஒளி(லி)பரப்புகிறார்கள். இந்த நாடகங்கள் பெரும்பான்மையாக உயர்மட்ட பணக்கார பெண்கள் மற்றும் ஆண்களின் வாழ்க்கையைப் பற்றிய கற்பனைக் கதை அல்லது நாவலாக தயாரித்து ஒளி(லி)பரப்புவார்கள். இந்நாடகங்களில் பெரும்பான்மையாக செக்ஸ் அல்லது உடலுறவு, மற்றும் கள்ளத் தொடர்புகளுள்ள உறவுகள்  பற்றிய கதைகள் தான் மேலோங்கி இருக்கும். இந்நாடகங்களைக் காணும் அமெரிக்கர் அல்லாத நாட்டு மக்கள், அமெரிக்காவின் வாழும் மக்களின் உண்மை வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று நம்பிவிடுகின்றனர். மேலும் அறிய இங்கே Soap-Opera  சொடுக்கவும்.]

இப்படி மக்கள் கிறிஸ்தவத்தை தவறாக புரிந்துக் கொள்வதினால், பல திடுக்கிடும் நிகழ்ச்சிகள் நடப்பதற்கு இது காரணமாகிவிடுகிறது. ஒரு முறை நான் துருக்கியில் இருக்கும் போது இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு முறை நானும் என் சிநேகிதியும் துருக்கி நாட்டுக்கு பிரயாணப்பட்டு இருந்தோம், துருக்கியில் சந்திக்கும் நபர்களிடம் நம் குடும்ப நபர்களின் புகைப்படங்களை கொண்டுச்சென்று காட்டும் படி எங்களுக்கு அறிவுரை கூறப்பட்டது. என்னோடு வந்த அந்த சிநேகிதி, தன் வீட்டில் விட்டுவந்த தன் நான்கு பிள்ளைகளின் புகைப் படங்களை தன்னோடு கூட கொண்டு வந்தாள், மற்றும் அவைகளை மற்றவர்களிடம் காட்டும் போது மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டே காட்டினாள். துருக்கியில் எங்களோடு வந்த வழிகாட்டி(மொழி பெயர்ப்பாளர்) எங்களிடம் “துருக்கி மக்களாகிய நாங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு எத்தனை தந்தைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்ள விரும்புகிறோம்” என்றுச் சொன்னபோது, நாங்கள் இருவரும் அதிர்ந்து போனோம்! இவர்கள் இப்படி கேட்பதற்கு, “சோப் ஆபுரா – Soap Opera” என்ற வானோலி மற்றும் தொலைக்காட்சி மெகா சீரியல் தான் காரணம். இந்த Soap Opera என்ற நாடகங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் அமெரிக்காவில் உள்ள வாழ்க்கைப் பற்றி எதிர்மறையாக உலகமனைத்திற்கும் சொல்கின்ற பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். இவர்களின் நாடகங்களை உலக மக்கள் கண்டு, இப்படித் தான் ஒவ்வொரு அமெரிக்கனின் வாழ்க்கையும் கீழ் தரமாக‌ இருக்கும் என்று நம்பிவிடுகின்றனர். என்னுடைய சிநேகிதி, துருக்கியிலுள்ள மற்ற புதிய சிநேகிதிகளுக்கு “என் பிள்ளைகள் அனைவருக்கும் ஒரு தந்தை தான் இருக்கிறார் என்று” எடுத்துக்கூறினாள். ஆனால், எங்கள் உள்ளங்களில்  அந்த உரையாடல் ஒரு பெரிய பாதிப்பை உண்டாக்கி விட்டது. அதாவது, சோப் ஆபுரா = அமெரிக்கர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் = அமெரிக்கர்கள் என்றுச் சொன்னால், சோப் ஆபுராக்கள் = கிறிஸ்தவர்கள் என்று பொருளா! அப்படியானால், இவ்வுலத்திற்கு இயேசு கொண்டு வந்த சுவிசேஷத்தின் நற்செய்தி என்ன ஆவது?

அப்படியானால், இயேசு என்பவர் யார்? அவர் ஒரு வெள்ளைத் தோலோடு, நீல கண்களோடு கூடிய ஒரு மேற்கத்திய நாட்டவரா? ஆனால், என் பைபிள் சொல்கிறது, அவர் ஒரு யூதனாக பிறந்தார், அதனால், வெள்ளைத் தோலையும், நீலகண்களையும் மறந்து விடுங்கள். அவர் ஒரு மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் அவர் அந்த இடங்களில் வாழ்கிற மக்களைப் போலவே இருந்திருப்பார், இதில் எந்த சந்தேகமுமில்லை. அவர் ஒரு யூத குடும்பத்தில் வளர்க்கப்பட்டார் மற்றும் தன் முழு வாழ்க்கையையும்  இஸ்ரவேல் என்ற நாட்டிலேயே கழித்தார். அப்படியானால், மத்திய கிழக்கு யூத நாட்டை மையமாகக் கொண்ட‌ ஒரு மதம், எப்படி ஒரு மேற்கத்திய மார்க்கமாக கருதப்படுகிறது? (How could the religion that is centered on a Middle Eastern Jew came to be regarded as Western?)

இயேசுவின் போதனைகளில் முத்துக்களால் பதிக்கப்படவேண்டிய ஒரு போதனை என்னவென்றால், “இறைவனை நாம் உண்மையோடும், ஆவியோடும் தொழுதுக் கொள்ள வேண்டும்” என்பதாகும். அவருடைய இரட்சிப்பின் செய்தியானது நாடு மற்றும் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டது. உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும், எல்லைகளைத் தாண்டி இறைவனிடம் திரும்பும் வாய்ப்பை பெறவேண்டும் என்ற நோக்கில் இறைவன் தன் இரட்சிப்பு திட்டத்தை உருவாக்கினார். முழு உலகமும் அவரை தொழுதுக் கொள்ள ஏற்ற இடமாகும்(இந்த இடத்தில் தான் தொழுதுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை); எல்லா மொழிகளும் தேவ ஆட்டுக் குட்டியாகிய இயேசுவை புகழ மற்றும் ஆராதிக்க தகுதியுடையது. நாம் வித்தியாசமான நாடுகளில், வித்தியாசமான கலாச்சார மொழிகள் உள்ள சமுதாயங்களில் வாழுகின்றோம் என்று அவருக்குத் தெரியும், மற்றும் அவருடைய கிருபையின் சிங்காசனத்தை நெருங்க நம்மால் முடியும். ஆகையால், தேவன் ஒருவர் மட்டுமே, மனித வர்க்கம் இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பதால் மீட்பு அடைய முடியும் என்ற மிகவும் சுலபமான வழிமுறையை உருவாக்க முடியும்.

தற்போது, உலகத்தின் மற்ற பாகங்களை விட, மேற்கத்திய நாடுகளில் அதிக சதவிகித கிறிஸ்தவர்கள் இருப்பதாக நாம் காண முடியும். ஆனால், எப்போதும் இது போல‌ இருந்த‌தில்லை, எதிர் கால‌த்தில் இப்ப‌டியே இருக்க‌ப் போவ‌துமில்லை என்பது மிகவும் தெளிவாக உள்ளது. நம்மில் ஒவ்வொருவரும் இப்படியே இருக்கப் போவதுமில்லை, மற்றும் சரித்திரமும் இன்று போலவே இருக்கப் போவதுமில்லை. கிறிஸ்தவம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கிற்கு பரவியதும், இறைவனின் திட்டங்களில் ஒன்று தான். இன்று அனேக ஆப்ரிக்க மக்கள் இயேசுவின் பெயரை பறைசாற்றுகிறார்கள். ஆசியாவில் இயேசுவின் சபை செழித் தோங்கிக் கொண்டு இருக்கின்றது (கொரியா தன் மிஷனரிகளை அமெரிக்காவிற்கு அனுப்பி க்கொண்டு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!). இன்னும் சில நூறு ஆண்டுகளுக்கு பிறகு இயேசுவின் உருவம் என்று இதுவரைஅச்சடிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் உருவமானது கருப்பாக மாறும் மற்றும் அவருடைய கண்கள் பாதாம் கொட்டைகள் போல வண்ணத்தில் அச்சடிக்கப்படும். இப்படி இயேசுவின் உருவப் படத்தை மாற்றுவதினால், நற்செய்தியின் சாராம்சம் மாறாது, அது அப்படியே இருக்கும்:

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16

மூலம்:  தமிழ் – அமெரிக்கர்=கிறிஸ்தவர்? | ஆங்கிலம் – American=Christian?

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

எழுத்தாளர் சேவியர் அவர்களின் புதிய புத்தகம்

http://thamilislam.blogspot.com/2008/07/blog-post_01.html

கிறிஸ்தவம் : ஒரு முழுமையான வரலாறு.

வரலாறுகள் சிலிர்ப்பூட்டுபவை மட்டுமல்ல, நிகழ்காலத்தில் நமக்கு முன்னால் அலட்சியமாய் விரிக்கப்பட்டிருக்கும் காலத்தின் அகோரமான சுவடுகளையும், வலிகளையும் நம் முன்னால் விவரிப்பவையும் கூட.

மதமும் அதன் கோட்பாடுகளும் வலுவாக ஊன்றப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் முளைத்தெழும் எந்த ஒரு புதிய மதமும் நெருஞ்சிகளுக்கிடையே நெருக்கப்படும் கீரைச் செடிபோல கிழிபட்டே ஆகவேண்டும். நிராகரிப்புகளும், அவமானங்களும், துரத்தல்களும், நசுக்கல்களும் மட்டுமே பந்தி விரிக்கப்பட்டிருக்கும் ஒரு பாசறை அது.

ஆழமான வேர்களைக் கொண்டிராத கொள்கைகளும் கோட்பாடுகளும் வலுவிழந்து எதிர்ப்புச் சக்கரங்களில் எழமுடியாதபடி நறுக்கப்படுவதன் காரணமும் இது தான். தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு கோட்பாடோ, மதமோ, இயக்கமோ பல நூற்றாண்டுகள் போராட வேண்டியிருக்கும் என்பதன் சாட்சியாய் நிற்கிறது கிறிஸ்தவ வரலாறு.

எல்லா வரலாற்று நிகழ்வுகளுக்கும் உரித்தான பரபரப்பும், வியப்பும், வலியும், பிரமிப்பும் கிறிஸ்தவ வரலாற்றுக்கும் உண்டு. கிறிஸ்தவம் கடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பிப் பார்க்கையில் எழும் உணர்வுகளுக்கு என்ன பெயடுவதென்று தெரியவில்லை.

கிறிஸ்தவம் எல்லா மதங்களுக்கும் உள்ள பலத்தோடும், பலவீனத்தோடும் தான் பரவி வந்திருக்கிறது என்பதை கிறிஸ்தவ வரலாற்றின் குருதிக் கறை படிந்த பக்கங்கள் விளக்குகின்றன. பிறரால் தாக்கப்பட்ட கிறிஸ்தவம் வெளித் தாக்குதல் நின்றபின் உள்ளுக்குள் போர்களைத் தீவிரப்படுத்திய நிகழ்வுகள் ஏராளம்.

யார் பெரியவன், எது சரியானது எனும் போராட்டங்களின் பிள்ளைகளாக இன்று உலகெங்கும் பரவிக் கிடக்கும் கிறிஸ்தவக் குழுக்களில் எது சரியானது ? எல்லாம் சரியானதெனில் ஏன் இத்தனை பிரிவுகள் ? கிறிஸ்தவம் புனிதமா ? அவமானமா ? என வரலாறு சொல்லும் விஷயங்களின் சுவாரஸ்யம் நீள்கிறது.

கிறிஸ்தவ வரலாற்று நூல்களை சிறு வயது முதலே படித்து வந்த அனுபவம் இந்த நூலை சரியான கோணத்தில் எழுத எனக்கு துணை செய்திருக்கிறது. எந்தப் பிரிவு கிறிஸ்தவத்தையும் சாராமல் உண்மை நிலையை அதன் புனிதக் கூறுகளோடும், புழுதிக் கூறுகளோடும் , அமைதி வாசனையோடும், போரின் நெடியோடும் உண்மையை உள்ளபடி சொன்ன திருப்தி இருக்கிறது.

கிறிஸ்தவ வரலாற்றை முழுமையாய் சொல்லவேண்டுமெனில் ஆயிரம் பக்கங்களேனும் எழுதவேண்டும். குறைந்த பட்சம் ஐநூறு பக்கங்களேனும் தேவைப்படும். ஆனால் அந்த வரலாற்றை அதன் முக்கியத்துவம் சிதையாமல், புள்ளி விவரங்களால் போரடிக்காமல், வெறும் 210 பக்கங்களுக்குள் அடக்கி விட முடிந்ததையே முதல் வெற்றி என நினைத்துக் கொள்கிறேன்.

நண்பர்கள் பென் கிருபா, சுதாகர் மற்றும் சில இறையியல் வல்லுனர்களின் உதவி இல்லாவிட்டால் இந்த நூல் முழுமையடைந்திருக்க வாய்ப்பே இல்லை.

இந்த நூலினை வெளியிட்டிருக்கும் கிழக்கு பதிப்பகம் இந்த நூலுக்காக நிறைய உழைத்திருக்கிறது. இதிலுள்ள வரலாற்றுத் தகவல்களை சரிபார்த்ததுடன் இந்த நூலிலுள்ள விவிலியப் பெயர்களை வெகுஜன வாசிப்புக்குத் தக்க வகையில் ஆங்கிலப் படுத்தி பெருமை கிழக்குப் பதிப்பகத்துக்கே சாரும். நூலை வெளியிட்டமைக்காகவும், நூலை சிறப்புற வடிவமைத்தமைக்காகவும் கிழக்குப் பதிப்பகத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ 100


http://sirippu.wordpress.com/2008/06/30/my_10th_book/#comment-2657

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized