Monthly Archives: ஏப்ரல் 2011

உலகம் முழுவதும் 200 கோடி பேர் ரசித்த திருமண ம்

large_233396.jpg

லண்டன்: பிரிட்டன் இளவரசர் வில்லியமுக்கும்(28) அவரது நீண்ட நாள் தோழியும், காதலியுமான கதே மிடில்டனுக்கும்(29) நேற்று, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச்சில், கோலாகலமாக திருமணம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், 1,900 வி.ஐ.பி., விருந்தினர்கள் நேரடியாக கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் தொலைக்காட்சிகள் வழியாக, 200 கோடி பேர் பார்த்து மகிழ்ந்தனர்.

வேல்ஸ் இளவரசர் சார்லஸ், மறைந்த இளவரசி டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம், தனது நீண்ட நாள் தோழியும், காதலியுமான கதே மிடில்டனை நேற்று கரம் பிடித்தார். இவர்களின் திருமணத்தைக் கண்டு களிக்கவும், மணமக்களை நேரில் பார்த்து வாழ்த்தவும், நேற்று முன்தினம் முதல், பக்கிங்காம் அரண்மனையில் இருந்து, வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச் வரையிலான வழியில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். நேற்று காலை பக்கிங்காம் அரண்மனையில் இருந்து, ராணி எலிசபெத்துடன் மணமகன் வில்லியமும், தனது தந்தையுடன் மணமகள் மிடில்டனும், வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச்சுக்கு காரில் வந்தனர். அவர்களுக்கு முன்பாக, இளவரசர் பிலிப், இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமீலா, வில்லியமின் சகோதரர் ஹேரி ஆகியோர் வந்து காத்திருந்தனர். மணமக்கள் வந்த பின், பேராயர் ரோவன் வில்லியம்ஸ் இருவருக்கும் மண உறுதிமொழி செய்வித்தார். அந்த உறுதிமொழியில் வரக் கூடிய,"கணவருக்குக் கட்டுப்பட்டு’ என்ற வார்த்தையை கதே மிடில்டன் சொல்லவில்லை. அதற்கு பதிலாக,"கணவரிடம் அன்பு செலுத்துவேன்’ என்று மட்டுமே சொன்னார். தொடர்ந்து, வில்லியம், மிடில்டனின் மோதிர விரலில், தங்க மோதிரத்தை அணிவித்தார். அடுத்து, பைபிளில் இருந்து சில வாசகங்கள் படிக்கப்பட்டன. "பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால், இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்று அறிவிக்கிறேன். ஆமென்’ என்று பேராயர் தெரிவித்தார்.

மணமக்களை வாழ்த்தும் விதத்தில் பல்வேறு பாடல்கள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து, மணமகன் வில்லியம், கேம்பிரிட்ஜ் அரசர் என்றும், மணமகள் கதே மிடில்டன் கேம்பிரிட்ஜ் அரசி என்றும் ராணி எலிசபெத்தால் பட்டம் சூட்டப்பட்டனர். திருமணத் துக்கான ஆவணத்தில், இருவரும் கையெழுத்திட்டனர். பின்னர், மணமக்கள் சர்ச்சில் இருந்து வெளியே வந்து, அரச குடும்பத்துக்குச் சொந்தமான பாரம்பரியமிக்க சாரட் வண்டியில் பக்கிங்காம் அரண்மனைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதே வண்டியில் தான், 1981ல் சார்லஸ் – டயானா தம்பதிகள் ஊர்வலம் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வழியெங்கும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், உற்சாகமாகக் குரல் எழுப்பியும், கையசைத்தும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சில இடங்களில், மணமக்கள் படம் நடுவில் பொறித்திருந்த தேசியக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. நேற்று இரவு பக்கிங்காம் அரண்மனையில், 650 வி.ஐ.பி.,க்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு, ராணி எலிசபெத் சிறப்பு விருந்தளித்தார். திருமண நிகழ்ச்சியை காலையில் இருந்தே, பி.பி.சி., உள்ளிட்ட பல்வேறு சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பின. வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச்சுக்கு வெளியே, நூற்றுக்கணக்கான பத்திரிகைகளின் நிருபர்கள் தங்கள் புகைப்படக் கலைஞர்களுடன் செய்தி சேகரித்தபடி இருந்தனர்.

யார் இந்த கதே மிடில்டன்? வில்லியமின் தாயார் மறைந்த டயானா, பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்தவர். ஆனால், தற்போது பக்கிங்காம் அரண்மனையின் மருமகளாகியுள்ள கதே மிடில்டன், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரிட்டனின் பெர்க்ஷைர் பகுதியைச் சேர்ந்த மிடில்டன், பிரிட்டன் ஏர்வேசில் அதிகாரியாக பணியாற்றியவர். இவர் தான் கதேவின் தந்தை. சில ஆண்டுகளுக்கு முன், மிடில்டன்,"பார்ட்டி பிசெஸ்’ என்ற மெயில் ஆர்டர் நிறுவனத்தை துவக்கினார். இதில் பணம் கொட்டியது. இதனால், மிடில்டன் குடும்பம் கோடீஸ்வர குடும்பம் ஆனது.

தெருக்கள் எங்கும் "பார்ட்டி’கள்

* வில்லியம் – மிடில்டன் திருமணத்தைக் கொண்டாடும் வகையில், லண்டன் நகரில் உள்ள தெருக்கள், வீடுகள், "பப்’புகளில் கோலாகலமாக நேற்று 5,000 "பார்ட்டி’கள் கொண்டாடப்பட்டன.

* நேற்று நடந்த திருமணத்தை நேரடியாக ஒளிபரப்புவதற்காக, 8,500 பத்திரிகையாளர்கள் லண்டனில் குவிந்தனர். 180 நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

* மிடில்டனின் சொந்த கிராமத்தில் நடந்த ஒரு பார்ட்டியில், இரண்டரை அடி உயர கேக், மக்களால் வெட்டப்பட்டு, திருமணம் கொண்டாடப்பட்டது.

* உலகம் முழுவதும் 200 கோடி பேர் நேரடி ஒளிபரப்பை கண்டுகளித்தனர். பல கோடி பேர் "ட்விட்டர்’ "பேஸ்புக்’ மூலம் திருமண நிகழ்ச்சியைப் பற்றி விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர்.

திருமண உடை ரகசியம்

* மணமகள் கதே மிடில்டன்னின் திருமண உடை பற்றிய தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. பாரம்பரியத்தைப் பேணும் வகையில், வெளிர் சந்தன நிறத்தில் அவர் "கவுன்’ எனப்படும் உடை அணிந்திருந்தார். அவரது உடையின் பின்புறம் மிக நீண்ட பட்டாடை பொருத்தப்பட்டிருந்தது. அதை தாங்கிப் பிடிக்க, இளம் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

* நீல வைரம் பொருத்தப்பட்ட கிரீடத்தை மிடில்டன் தன் தலையில் அணிந்திருந்தார். இந்த கிரீடம், 90 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய ராணி மேரியால் அணியப்பட்டது.

* மணமகன் வில்லியம், தனது கவுரவ பதவியான அயர்லாந்து கர்னல் பதவிக்குரிய சிகப்பு உடையை அணிந்திருந்தார்.

* திருமணத்திற்கு அறிகுறியான மோதிரம் மாற்றும் நிகழ்ச்சியில், மிடில்டனில் விரலில் வில்லியம் மோதிரம் அணிவிக்கும் போது, சிறிது தடுமாறினார். பின் சமாளித்தபடி மோதிரம் அணிவித்தார்.

* இந்த மோதிரம் பரம்பரை பரம்பரையாக அரச குடும்பத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இம்மோதிரத்தை, ராணி எலிசபெத் தனது பேரன் வில்லியமிடம் அளித்தார்.

வயதை மறைத்த "கதே’வின் உடை: பிரிட்டன் இளவரசர் வில்லியம்சிற்கும் அவரது நீண்ட நாள் தோழியான கதே மிடில்டனுக்கும் நேற்று பிரமாண்டமாக திருமணம் நடந்தது. அரச குடும்பத்தின் திருமணத்தில் பல சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், மணமகளின் திருமண உடை மீது சற்று கூடுதல் கவனம் இருக்கும். திருமணத்திற்கு முன்பே கதேவின் திருமண உடை குறித்து தகவல்கள் வந்தவாறு இருந்தன.

இது குறித்து சுவாரஸ்யமான தகவல்கள்:

* கதே மிடில்டன் அரச குடும்பத்தின் பாரம்பரியமான வெள்ளை மற்றும் யானை தந்தம் நிறத்தில் கவுன் அணிந்திருந்தார்.

* ஐந்த மாதமாக உடையை தயார் செய்பவர்களுக்கான தேடல் நடந்தது.

* இறுதியாக அலெக்சாண்டர் மெக் குயின் நிறுவனத்தின் "கிரியேட்டிவ் டைரக்டர்’ ஷாரா பட்டன் வடிவமைத்தார்.

* கவுனின் நீளம் 8.8 அடி.

* உடையுடன் இணைந்திருந்த வலை (லேஸ்) ராயல்ஸ் "ஸ்கூல் ஆப் நீடில் வொர்க்’ என்ற இடத்தில் தயார் செய்யப்பட்டது.

* கதே அணிந்திருந்த "ஷூ’ மெக்குயின் நிறுவனத்தின் பிரத்யேக தயாரிப்பு.

* பெற்றோர் பரிசளித்த வைர கம்மலை கதே அணிந்திருந்தார்.

* இந்த உடையில் கதேவை நேரில் பார்த்தாலும் போட்டோக்களில் பார்த்தாலும் வயதை கணக்கிட இயலாது. இதுவே இந்த உடையை அவர் தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம்.

* கதே, கையில் வைத்திருந்த பூங்கொத்தை ஷான் கானோலி என்பவர் வடிவமைத்திருந்தார். லில்லி ஆப் வேலி, ஸ்வீட் வில்லியம் போன்ற நறுமண மலர்களால் இந்த பூங்கொத்து வடிவமைக்கப்பட்டது. லில்லி ஆப் வேலி என்றால் மகிழ்ச்சி பொங்குவது என்று அர்த்தம். அதே போல் ஸ்வீட் வில்லியம் என்றால் பாராட்டுதலுக்குரிய நடத்தை என்று அர்த்தம். இந்த பூங்கொத்தை "மிரில்’ என்று அழைப்பார்கள். இதற்கு திருமணம் மற்றும் காதலின் சின்னம் என்று அர்த்தம்.

* 1945ல் விக்டோரியா மகாராணியால் உருவாக்கப்பட்ட பூந்தோட்டத்திலிருந்து "மிரில்’ பூக்கள் பறிக்கப்பட்டுள்ளது.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ராஜபக்சே போட்ட கள்ள ஓட்டு தில்லுமுல்லு அ ம்பலம்!

கள்ள வாக்கு தில்லுமுல்லு அம்பலம்! – ‘ரைம்ஸ்’

உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் ராஜபக்ஷ. ‘ரைம்ஸ்’ பத்திரிகை வாக்கெடுப்பில் முந்துகிறார்! கடந்த வாரம் இலங்கை ஊடகங்களில் இப்படி ஒரு செய்தியைப் பார்த்தவர்​களுக்குப் பயங்கர அதிர்ச்சி!

அமெரிக்காவின் வார இதழான ‘ரைம்ஸ்’, உலகின் முன்னணிப் பத்திரிகை. இதன் வாசகர்கள், உள்நாட்டில் இரண்டு கோடி பேர். வெளிநாடுகளில் 2.5 கோடி பேர். ஆகையால், ‘ரைம்ஸ்’ பிரசுரிக்கும் விஷயங்கள், சர்வதேச கவனத்தைப் பெறும்.

ஆண்டுதோறும் ‘மேன் ஆஃப் தி இயர்’ (Man of the year) ஆகத் தேர்ந்து எடுக்கப்பட்டு, அந்தப் பத்திரிகையின் அட்டையில் இடம் பெறுபவர்கள், கிட்டத்தட்ட நோபல் பரிசு பெற்றதற்கு இணையான புகழைப் பெறுகிறார்கள்!

இந்த நிலையில், கடந்த 1999-ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் ‘செல்வாக்கு மிக்க 100 பேர்’ பட்டியலையும் அந்தப் பத்திரிகை வெளியிடத் தொடங்​கியது.

பிரபலங்களைத் தேர்ந்தெடுப்பதில், இணைய வாக்கெடுப்பின் மூலம் வாசகர்களும் பங்கேற்கலாம் என்பதால், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தப் பட்டியல் வெளியாகும்.

இந்தப் பட்டியலில், ‘ராஜபக்ஷ இடம் பெற்று இருக்​கிறார்’ என்று வெளியிட்டன இலங்கை ஊடகங்கள்!

ஈழப் பிரச்சினையைப் பொறுத்த அளவில், ‘ரைம்ஸ்’ எப்போதுமே இரு தரப்புத் தவறுகளையும் விமர்சித்து இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இலங்கை அரசின் தவறுகளைத் தொடர்ந்து விமர்சிக்கும் பத்திரிகையாகவே அது இருந்து இருக்கிறது.

இத்தகைய சூழலில், இது எப்படி சாத்தியம்?’ என்று குழம்பினார்கள் வாசகர்கள்.

ஆனால், ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில், ஏப்ரல் 17-ம் தேதி ஒரு செய்தி வெளிவந்தது. அதில், ‘ரைம்ஸ்’ பட்டியலில் ராஜபக்ஷ இடம்பெற்று இருப்பதை உறுதி செய்ததுடன், இரண்டு லட்சத்து 3,117 வாக்குகளுடன் 4-ம் இடத்தில் அவர் இருப்பதாகவும் தெரிவித்தது.

பயங்கரவாதத்துக்கு எதிராக ராஜபக்ஷ எடுத்த நடவடிக்கைகளுக்கும், ஜனநாயகம் செழிக்க எடுத்த நடவடிக்கைகளுக்கும் கிடைத்திருக்கும் சர்வதேச அங்கீகாரம் இது என்று அது குறிப்பிட்டது.

அதோடு, அமெரிக்க அதிபர் ஒபாமா 40-வது இடத்திலும், காங்கிரஸ் தலைவர் சோனியா 100-வது இடத்திலும் பின்தங்கி இருப்பதாகவும் சுட்டிக்காட்டி புளகாங்கிதம் அடைந்து இருந்தது.

ரைம்ஸ் இதழின் இணையத்தளமும் இந்தச் செய்தியை உறுதி செய்தது.

ஆனால், ஏப்ரல் 21-ம் தேதி இந்த வாக்கெடுப்பு முடிந்து, மறுநாள் ‘செல்வாக்கு மிக்க 100 பேர் அறிவிக்கப்பட்ட நிலையில், பட்டியலில் இருந்து அதிரடியாகத் தூக்கப்பட்டது ராஜபக்ஷ பெயர்!

என்ன நடந்தது பின்னணியில்?

பட்டியலில் ராஜபக்ஷ இடம் பெற்று இருக்கும் தகவல் வெளியானதுமே, ‘உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒரு போர்க் குற்றவாளியை முன்னிலைப்படுத்துவதா?’ என்று ‘ரைம்ஸ்’ பத்திரிகைக்குக் கண்டனங்கள் குவிந்தன. தவிர, உலகம் வெறுக்கும் ஒரு நபர் இவ்வளவு வாக்குகளைப் பெற வாய்ப்பு இல்லை என்றும் ஏராளமானோர் சந்தேகம் எழுப்பினார்கள்.

இதே சந்தேகம் ‘ரைம்ஸ்’ ஆசிரியர் குழுவில் உள்ளவர்​களுக்கும் எழ, தன்னுடைய தொழில்நுட்பக் குழுவிடம் ராஜபக்ஷ விவகாரத்தை ஒப்படைத்தது தேர்வுக் குழு. அந்தக் குழு மேற்கொண்ட ஆய்வில்தான், இலங்கை இராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவைக் கையில் வைத்துக்கொண்டு ராஜபக்ஷ செய்த தில்லுமுல்லு அம்பலமாகி இருக்கிறது!

இலங்கை இராணுவம் அரங்கேற்றிய போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. குழு தயாரித்துள்ள அறிக்கை வெளிவரும் போது ரைம்ஸ் தகவல் வந்தால் நல்லது என்று நினைத்திருக்கிறார் ராஜபக்ஷ.

இதைத் தொடர்ந்து, களத்தில் இறங்கிய ராஜபக்ஷவின் கைத்​தடிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவருக்கு ஆதரவாகக் கள்ள வாக்குப் போட்டனர். இலங்​கையில் இராணுவத்தின் தொழில்நுட்பத் துறையும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களும் இந்தப் பின்னணியில் இருந்திருக்கின்றன.

ராஜபக்ஷவுக்கு ஆதரவாக விழுந்த வாக்குகள் அவ்வளவும் கொத்துக் கொத்தாக விழுந்து இருப்பதைக் கண்டுபிடித்த ‘ரைம்ஸ்’ தொழில்நுட்பக் குழு, இது திட்டமிட்ட சதி என்று ஆதாரபூர்வமாக தேர்வுக் குழுவிடம் தெரிவித்தது.

இதன் தொடர்ச்சியாகவே, ராஜபக்ஷேவின் பெயர் நீக்கப்பட்டது.

இந்தப் பின்கதையை எல்லாம் எதிர்பார்க்காமல், பட்டியல் வெளியாவதற்கு முன்னதாகவே ஆர்வக்​கோளாறில் செய்தியை இலங்கை அரசு தரப்பே சொல்லிவிட்டதால், வெளியே தலைகாட்ட முடியாத அவமானத்தில் சிக்கி இருக்கிறார் ராஜபக்ஷ.

போர் வெற்றிக்குப் பின் அவரது அசுர ஆட்டத்தில் ஆட்டம் கண்டு, அடங்கிப்போய் இருந்த எதிர்க்கட்சிகளும், இதையே சாக்காக வைத்து, சர்வதேச அளவில் இலங்கைக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டார் ராஜபக்ஷ என்று பிரசாரத்தில் இறங்கிவிட்டன. இதனால், கையைப் பிசைந்துகொண்டு இருக்கிறார் ராஜபக்ஷ!

source:tamilspy

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

நிர்வாண உடற்பயிற்சிக்கு வாய்ப்பளிக்கும ் ஜிம்

gym-150x150.jpg

உடற்பயிற்சி நிலையமொன்றில் (ஜிம்) நிர்வாணமான நிலையில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

பாஸ்க் பிராந்தியத்திலுள்ள இந்த உடற்பயிற்சி நிலையத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்றது. இதற்குக் நாட்டின் பொருளாதார நிலைமையே காரணமென இதனது உரிமையாளர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில் இந்த உடற்பயிற்சி நிலையத்தில் அங்கத்தவர்களை அதிகரித்துக் கொள்ளும் நோக்குடன் மேற்படி நிர்வாண உடற்பயிற்சித் திட்டத்தை அந்நிலையத்தினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

உடற்பயிற்சி ரீதியான காரணங்கள் அல்லாமல் பொருளாதார காரணங்களே இந்த வில்லங்கமான திட்டத்திற்கு காரணம் என அந்நிலையத்தின் உரிமையாளர் மேர்ச்சே லெசேகா கூறியுள்ளார்.

‘என்னைப் பொறுத்தவரை நிர்வாணமாக தோன்றுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாத போதிலும் அப்படி தோன்றுவதற்கு நான் விரும்பவில்லை. ஆனால் இந்தப் புது முயற்சியானது பணத்தை வசூலிப்பதற்காக மட்டுமே’ என மேர்ச்சே லெசேகா ஒப்புக் கொண்டுள்ளார்.

அப்பிராந்தியத்தில் நீச்சல் தடாகங்களை நடத்தும் இரு நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய மாதம் ஒரு தடவை நிர்வாணக் குளியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பளிக்கும் திட்டம் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றதாம். அதையடுத்து இந்த உடற்பயிற்சி நிலையமும் இத்திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

source:athirchy

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ராஜபக்சேயை குற்றவாளி கூண்டில் ஏற்ற ஐ.நா.ச பையை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும்; ஜெயலலி தா அறிக்கை

ராஜபக்சேயை குற்றவாளி கூண்டில் ஏற்ற ஐ.நா.சபையை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும்; ஜெயலலிதா அறிக்கை
சென்னை, ஏப்.27-

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை அரசின் பொறுப்புடைமை குறித்த ஐக்கிய நாடுகள் சபை வல்லுநர்கள் குழுவின் அறிக்கை இறுதியாக வெளியிடப்பட்டு விட்டது. "அப்பாவி மக்களுக்கு சேதமின்மை" என்ற கொள்கையின் அடிப்படையில் மனிதாபிமான மீட்புப் பணி நடத்தப்பட்டதாக தெரிவிக்கும் இலங்கை அரசின் இனிப்பான வாதத்தினை 214 பக்கங்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தவிடுபொடி ஆக்கியுள்ளது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த மார்சுகி டாருஸ்மேன், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ராட்னர், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூகா ஆகியோர் அடங்கிய மூன்று நபர் குழு 16.9.2010 அன்று தனது பணியை தொடங்கியது. இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போரின் உச்சகட்ட பகுதியான செப்டம்பர் 2008 முதல் மே 2009 வரையிலான காலத்தையும், அப்போது பல்வேறு திசைகளில் இருந்து வந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக் கொண்ட பெரும்பாலான அப்பாவி தமிழர்களின் நிலைமை யையும் இந்தக் குழு தன்னுடைய ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக் கொண்டது.

குண்டு மழை பொழிவிலிருந்து தமிழர்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றின் மீதே இலங்கை அரசின் ராணுவ படைகள் குண்டு மழை பொழிந்ததை நம்பிக்கையூட்டும் ஆதாரங்களுடன் மூன்று நபர் வல்லுநர் குழு கண்டறிந்துள்ளது.

மிகப் பெரிய ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தாலும், அப்பாவி தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் திட்டமிட்டு குண்டு மழை பொழிந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கு காரணமாக இலங்கை ராணுவம் இருந்தது என்று வல்லுநர் குழு முடிவு செய்துள்ளது. மிகப் பெரிய பீரங்கிகளையும், குண்டுகளையும் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடையா வண்ணம் வட இலங்கையில் உள்ள வன்னி பகுதியைச் சுற்றி மிகப் பெரிய தடையை இலங்கை அரசும் அதன் படைகளும் உருவாக்கின.

மயக்க மருந்து அல்லது வலியை இழக்கச் செய்யும் மாத்திரைகள் எதுவும் இல்லாமல், மருத்துவ காரணங்களுக்காக தேக உறுப்புகளை வெட்டி எடுக்கும் மருத்துவ மனைகள் மீதும்; மருத்துவ மனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டதால் மரங்களுக்கு கீழ் அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட பகுதிகளிலும் குறி வைத்து இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்துள்ளது. உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள் மரணமடைந்துள்ளனர்.

உணவுப் பொருட்கள், தண்ணீர் மற்றும் மருந்துப் பொருட்கள் போர்ப் பகுதிக்கு சென்றடையக் கூடாது என்பதற்காகவே, போர்ப் பகுதியில் சிக்கிக் கொண்ட அப்பாவி தமிழ் மக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே இலங்கை அரசு குறைத்து மதிப்பீடு செய்ததாக இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.அப்பாவி தமிழர்களை கேடயமாக பயன்படுத்துதல், குழந்தைகளை கட்டாயப்படுத்தி படையில் சேர்த்தல், தன்னுடைய கட்டுப் பாட்டிலிருந்து தப்ப நினைக்கும் அப்பாவி தமிழர்களை கொல்லுதல் மற்றும் கூலி வேலை செய்யுமாறு கட்டயாயப்படுத்துதல் உட்பட பல மனித உரிமை மீறல்களை விடுதலைப் புலிகள் நிகழ்த்தியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், போர் நடந்த கடைசி மாதங்களில், விடுதலைப் புலிகள் மிகவும் குன்றிய நிலையில் இருந்ததாகவும், எனவே, விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி, தன்னுடைய சொந்தக் குடிமக்களான தமிழ் மக்கள் மீது விபரீத அளவு தாக்குதல் நடத்தியதை இலங்கை அரசு நியாயப்படுத்த முடியாது என்றும், இது இனப் படுகொலைதான் என்றும், நாகரிகம் மற்றும் பண்பாடுள்ள மக்கள் இதை இனப்படுகொலை என்று கருத்தில் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கோடிட்டுக் காட்டப் பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளி வராமல் இருப்பதற்கு தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் இலங்கை அரசு மேற்கொண்டது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளியிடப்பட்டால், இது தற்போது இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமரச முயற்சிகளுக்கு தடையாக அமைந்துவிடும் என்ற வாதத்தை இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்ஷே முன்வைத்தார். ஐ.நா. அறிக்கையை வெளியிடாமல் தடுப்பதற்காக மஹிந்தா ராஜபக்ஷேவின் சகோதரர் கோத்தபைய ராஜபக்ஷே அமெரிக்காவிற்கு பறந்து சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஐ.நா. அறிக்கை வெளியிடப்படாமல் இருக்க தன்னால் இயன்ற உதவியை செய்யுமாறு மஹிந்தா ராஜபக்ஷே பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தொலைபேசி மூலம் பேசியதை இலங்கை அரசு உறுதி செய்ததாக ஊடகங்களிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தனை நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் ஐ.நா. குழுவின் அறிக்கை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையில் இனிமேலும் இந்தியா மவுன பார்வையாளராக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. மொழி, மதம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே தொப்புள் கொடி உறவு உள்ளது. தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, கடலுக்கு அப்பால் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் தங்களது சொந்த நாட்டிலேயே ஆற்றொணா துயரத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பது தாங்க முடியாத வேதனையை அளிக்கிறது.

இந்த நிலைமையை சரி செய்ய, ஏராளமானவற்றை இந்தியாவால் நிச்சயம் செய்ய முடியும். இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்; கண்ணியத்துடன் வாழ அனைவரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் வகையில், சர்வதேச இயக்கம் ஒன்றை தொடங்க இந்தியா முன்னின்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேவைப்படின், எதற்கும் அடிபணியாத இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த வேண்டும்.

இலங்கையில் அடக்குமுறை என்பது யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படுவது, ஒருதலை பட்சமானது என்ற முந்தைய கூற்றினை தகர்த்தெறிந்து, இலங்கையில் மனித உரிமை மீறல்களும், மிருகத்தனமான அடக்குமுறைகளும் நடைபெற்றதை ஐ.நா. குழு உறுதி செய்துள்ளது. எனவே, ஐ.நா. குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலையை நிகழ்த்தியதற்காக மஹிந்தா ராஜபக்ஷே, அவருடைய ராணுவத் தளபதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் இதில் தொடர்புள்ள இதர நபர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

இதைச் செய்யாமல், தற்போது போல் தொடர்ந்து இந்தியா மவுனம் சாதிக்குமேயானால், கண்ணியத்துடன் வாழ்வதற்குரிய உரிமை உட்பட இலங்கை தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளையும் தடுப்பதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் வாழும் தமிழர்களை தன்னுடைய நாட்டிலேயே அகதிகளாக மாற்றும் ராஜபக்ஷேவின் கொள்கைக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது என்று தற்போது கூறப்படும் கூற்றிற்கு வலுசேர்ப்பதாக அமைந்துவிடும். இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

source:maalaimalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

தப்பித்தார் தயாளு! சிக்கினார் கனிமொழி!

large_230772.jpg

புதுடில்லி : "2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்தான வழக்கில், இன்று இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு பெயர் சேர்க்கப்படவில்லை. மகள் கனிமொழி உள்பட 5 பேர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மத்திய அரசுடனான தி.மு.க.,வின் உறவு நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளன. உச்சகட்ட எதிர்ப்பாக தி.மு.க., மத்திய அரசில் இருந்து தன் அமைச்சர்களை வாபஸ் பெறும் நிலையும் ஏற்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

"2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., 17 மாதங்களுக்கு பின், தனது முதல் குற்றப் பத்திரிகையை, கடந்த 2ம் தேதி தாக்கல் செய்தது. மொத்தம் 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அவரின் அப்போதைய தனிச் செயலர் சந்தோலியா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா, சுவான் டெலிகாம் புரமோட்டர் ஷாகித் பல்வா, சுவான் டெலிகாம் இயக்குனர் விவேக் கோயங்கா, யுனிடெக் ஒயர்லெஸ் இயக்குனர் சஞ்சய் சந்திரா, அனில் திருபாய் அம்பானி குரூப் நிறுவனங்களின் அதிகாரிகள் கவுதம் டோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் ஹரி நாயர் ஆகிய ஒன்பது பேர் மீது, சதி செய்தது மற்றும் மோசடிக்கு உதவியாக இருந்தது உட்பட, இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் அரசு அதிகாரிகள், சுவான் புரமோட்டர் பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சேர்ந்த ஐந்து உயர் அதிகாரிகளுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சி.பி.ஐ., இரண்டாவது குற்றப் பத்திரிகையை இன்று தாக்கல் செய்தது.

அரசுக்கு சேர வேண்டிய வருவாயை மறைத்து, தனிப்பட்ட நபர்கள் தங்களின் சுய லாபத்துக்காக கோடிக்கணக்கில் சுரண்டியுள்ளனர். இப்படிப்பட்டவர்கள் எப்படி ஒதுக்கீடு பெற்றனர், எவ்வித மோசடிகளை செய்திருந்தனர் என்ற தகவல்கள் முதல் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்று இருந்தன.இதைத் தொடர்ந்து, ஒதுக்கீடு செய்து கொடுப்பதற்காக யார் யாரெல்லாம் எந்த வகையில் செயல்பட்டனர்; இதில் கிடைத்த கோடிக்கணக்கான பணம் எப்படியெல்லாம் கைமாறியது; அதை எங்கே முதலீடு செய்துள்ளனர் என்ற விவரம் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் இடம் பெற உள்ளது.

ஏனெனில், இப்பணியில் அமலாக்கத்துறை உதவியையும் சி.பி.ஐ., நாடி தகவல் கேட்டது. இதனால், பலரும் கதிகலங்கி உள்ளனர். இந்த வரிசையில், "2ஜி’ ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற சுவான் நிறுவனத்தின் அங்கமான சினியுக் நிறுவனத்திற்கும், கலைஞர் "டிவி’க்கும் இடையே நடந்த 214 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம், குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.

சினியுக் நிறுவனத்திடமிருந்து கடனாக பெறப்பட்ட தொகை திருப்பிச் செலுத்தப்பட்டு விட்டது என்று, கலைஞர் "டிவி’ தரப்பில் இருந்து விசாரணையின் போது தெளிவாக தெரிவிக்கப்பட்டு விட்டது. கடன் கொடுத்தனரா, திருப்பிச் செலுத்திவிட்டனரா என்பது பற்றி பிறகு பார்த்துக் கொள்வோம். ஒதுக்கீட்டில் கிடைத்த முறைகேடான பணம் எப்படி கலைஞர் "டிவி’க்கு போய் சேர்ந்தது என்பதற்கும், கடன் போல ஆவணங்களெல்லாம் எப்படி திரித்துக் காட்டப்பட்டுள்ளது என்பதற்கும் தங்களிடம் ஆதாரம் உள்ளதாக சி.பி.ஐ., கூறுகிறது.

இது தொடர்பாக, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களும், குற்றப் பத்திரிகையில் இடம் பெற உள்ளது என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. கலைஞர் "டிவி’யில் இவர்கள் இருவரும் 80 சதவீத பங்கு வைத்திருக்கின்றனர். சரத்குமாருக்கு 20 சதவீத பங்குள்ளது. இவர்கள் பெயர்கள் இடம் பெற்றதால் அடுத்ததாக கைது படலம் தொடரும் என்பதால், தி.மு.க., தரப்பில் பரபரப்பு நிலவுகிறது. இருப்பினும் ஏற்கனவே முதல் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்ற சிலர் கோர்ட் வரை சென்று, கைதை தவிர்த்துள்ளனர்.முன்னாள் அமைச்சர் ராஜாவின் நெருங்கிய நண்பரான மறைந்த சாதிக் பாட்சாவின் முக்கிய பங்கு குறித்து, இரண்டாவது குற்றப் பத்திரிகையில் இடம் பெறலாம்.

இந்நிலையில், மத்திய அரசுடனான தி.மு.க.,வின் நிலை குறித்து முடிவு செய்யப்படும் சூழ்நிலையை தி.மு.க., சந்திக்க நேரிடும் என தெரிகிறது. அந்த நிலையில், மத்தியில் உள்ள தன் ஆறு அமைச்சர்களை ராஜினாமா செய்யச் சொல்லி தி.மு.க., மேலிடம் முடிவு செய்யலாம். அந்த நிர்பந்தத்தை தரக்கூடிய சூழ்நிலையை இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் ஏற்படுத்தலாம் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ஹிந்து வழக்கப்படி 95 வயது வரை வாழ்வேன்

large_230642.jpg

சாய் வாக்கு சத்ய வாக்கு:" 95 வயது வரை வாழ்வேன்" என்று சத்ய சாய் பாபா ஏற்கனவே கூறியிருந்தார். இதனால்தான் மார்ச் மாதம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, "பாபாவுக்கு ஒன்றும் நேராது; அவர் உடல்நிலை தேறி மீண்டு வருவார்" என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சாய் பாபா தற்போது ஸித்தி அடைந்தது எப்படி என்று சில பக்தர்கள் மனதில் ஐயம் எழலாம்.

இது குறித்து சாய் பாபாவின் தீவிர பக்தர் ஒருவர் விளக்குகையில், "நாம் ஆங்கில முறைப்படி ஆண்டுகளைக் கணக்கிட்டு, சாய் பாபாவுக்கு தற்‌போது வயது 86 என்று கூறுகிறோம். ஆனால் ஹிந்து முறைப்படி சந்திரனை அடிப்படையாக கொண்டே ஆண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது ஆங்கில முறைப்படி ஒரு மாதம் என்பது 30 அல்லது 31 நாட்கள். ஆனால் ஹிந்து முறைப்படி பூமியை சந்திரன் ஒருமுறை சுற்றி வரும் காலம்தான் ஒரு மாதம் என கணக்கிடப்படுகிறது. சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி வர 27.3 நாட்கள்தான் ஆகிறது. அந்த அடிப்படையில் கணக்கிட்டால் சாய் பாபாவுக்கு தற்போது வயது 94 ஆகிறது. மேலும் ஹிந்து வழக்கப்படி அவர் பிறந்த ஆண்டே முதல் வயதாக கருதப்படுவதால் சாய் பாபாவுக்கு 95 ஆகிறது. எனவே சாய் பாபா தமது ஆயுள் குறித்து தெரிவித்த வாக்கு பொய்க்கவில்லை; சாய் வாக்கு சத்ய வாக்காக‌வே இருக்கிறது" என்று தெரிவித்தார்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மொபைல் போன்: சில ஆலோசனைகள்

images?q=tbn:ANd9GcSLPCBNbWvc_uO5waYoUrvknsO4VyYqfq_UzLR6ExL-fta3zQkv
மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே.
இயலுமானால் உங்கள் உடம்பி லிருந்து மொபைல் போனைச் சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர் வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன. போனைத் தள்ளி வைத்து அதனை வயருடன் இணைந்த அல்லது வயர் இல்லாமல் இணைப்பு ஏற்படுத்திப் பேசலாம், அழைக்கலாம்.
மொபைல் போனை அதிகம் மூடி வைக்க வேண்டாம். இதனால் சிக்னல்கள் வந்தடைவது சற்று தடுக்கப்படும். சிக்னல்களை எப்படியும் அடையவேண்டும் என்ற முயற்சியில் போனில் கதிர்வீச்சு அதிகமாகும்.
பேசும்போது கைகளால் போனை அதிகம் மூடுவதும் இதே விளைவினை ஏற்படுத்தும். எனவே போனைக் கீழாக அதனை அதிகம் மூடாமல் பிடித்துப் பேசவும்.
போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும் போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.
உங்களிடம் லேண்ட் லைன் அருகிலேயே உள்ளதா? அனைத்து தொடர்புகளுக்கும் அதனையே பயன்படுத்தவும். கதிர்வீச்சு முற்றிலுமாக இருக்காது. மொபைல் போனில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும்.
கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகையில், ஏன் சைக்கிள் ஓட்டுகையிலும் மொபைல் போனைப் பயன்படுத்தவே, பயன்படுத்தவே கூடாது. நம் கவனம் நிச்சயமாய் திசை திருப்பப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. கட்டாயம் பேச வேண்டும் என்றால் வாகனத்தினை ஓரமாக நிறுத்திப் பேசவும்.
பல இளைஞர்கள் மொபைல் பேசுவதற்கு இடையூறாக இருக்கிறது என்று ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். பாருங்கள், மொபைல் போன் இயங்காமலேயே எவ்வளவு ஆபத்தினைத் தருகிறது.
அதிகமாக எலக்ட்ரிக்கல் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் இடங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்கு சிக்னல் கிடைப்பது சிக்கலாவதுடன் அந்த சாதனங்கள் இயக்கமும் தடைபடலாம். மருத்துவ மனைகளில் இத்தகைய சாதனங்கள் உள்ள இடங்களில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும். அந்த சாதனங்கள் சரியாகச் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். கம்ப்யூட்டர் மானிட்டர் அருகே இருக்கும் மொபைல் போனுக்கு அழைப்பு வருகையில் என்ன மாதிரி அலை வீச்சு உள்ளது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது போல மருத்துவ மனை சாதனங்களில் ஏற்பட்டால் அது சரியான முடிவுகளை மருத்துவருக்குத் தராதே.
விமானத்தின் உள்ளேயும் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வந்தால் மட்டுமே பயன்படுத்தவும். மற்ற நேரங்களில் ஸ்விட்ச் ஆப் செய்து வைப்பது நல்லது.
சிறுவர்கள் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதனை அனுமதிக்காதீர்கள். அவர்களை ஏன் கதிர்வீச்சுக்கு உள்ளாக்குகிறீர்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும் என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. வயிற்றில் வளரும் குழந்தையை கதிர்வீச்சு பாதிக்கும் என்பதாலேயே இந்த ஆலோசனை.
மொபைல் போனில் பேசுகையில் உங்கள் அருகே இருக்கும் நண்பர்கள் குறித்து சிறிது சிந்திக்கவும். அவர்களுக்கு நீங்கள் பேசுவதில் நிச்சயம் அக்கறை இருக்காது. எனவே சற்று தள்ளிச் சென்று அவர்களின் வேலை கெட்டுப் போகாத வகையில் பேசவும்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ஆபாச உடையில் சென்ற இலங்கைப் பெண் துணிகரக ் கொள்ளை !

குவைத் நாட்டில் உள்ள பிரபல வணிகஸ்தலம் ஒன்றில் உள்ள நகைக்கடையில் இலங்கைப் பெண்கள் துணிகரமகாகக் கொள்ளையடித்துள்ளனர். குறிப்பிட்ட பெண்கள் மிகவும் கவச்சியாக உடை அணிந்து நகைக்கடைக்குள் சென்று, நகைகளைப் பார்வையிட்டதோடு, ஆபாசமாகப் பேசி வியாபாரியின் கவனத்தை திசைதிருப்பியும் உள்ளனர். வியாபாரி ஏமாந்து அசடுவழிந்தவேளை, பெறுமதியான நகை ஒன்றை அந்தரங்க இடத்தில்வைத்து, மறைத்து அதனை அப்பெண் எடுத்துச் சென்றுவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அப் பெண்களைப் பார்த்து தனது கவனம் திசைதிரும்பியது என்னவோ உண்மைதான் ஆனால் நகையை மீட்டுத் தருமாறு வியாபாரி பொலிசாரிடம் கூறியுள்ளார்.

வணிகஸ்தலத்துக்கு விரைந்த பொலிசார், அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்ற பெண்ணை சிறிது தூரத்தில் வைத்து கைதுசெய்தனர். அப்பெண்ணை சோதனையிட்டபோது அவரிடம் எதுவும் இருக்கவில்லை. இருப்பினும் நகைக்கடையினுள் இருந்த கமராவில் பதிவான காட்சிகளைப் பார்வையிட்டவேளை, குறித்த பெண் நகையைத் திருடி, தனது சட்டைக்குள் வைப்பது பதிவாகியிருந்தது. இதனை அடுத்து பொலிசார் அப்பெண்னை கைதுசெய்து விசாரித்தவேளை, இதேபோல சுமார் 12 தடவை நகைகளை தாம் வெவ்வேறு இடங்களில் கொள்ளையிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இப்பெண்ணோடு சம்பந்தப்பட்ட மற்றொருவரையும் பொலிசார் வலைவீசித் தேடிவருவதாக குவைத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இப் பெண் சிங்களவராக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

போராளித் தளபதிகள் சித்ரவதை.. அதிரவைக்கும ் புகைப்பட ஆதாரம்!

அதிரவைக்கும் அதிர்வு… புகைப்பட ஆதாரம்!

ழ மண்ணில் இனப்படுகொலை நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும்

அந்த துயரத்தின் வலியும் ரணமும் இன்னும் நீங்கவில்லை!

போரில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தின் தாங்கமுடியாத துன்பம் ஒருபுறம் என்றால்… சிங்களப் படையி​னரால் கைதுசெய்யப்பட்டுக் காணாமல் போனவர்களுடைய குடும்பத்தினரின் மன உளைச்சலோ சொல்லில் அடக்கமுடியாத சோகம்!

இப்படி காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல்களைப் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன. அமெரிக்காவைத் தலைமை​யிடமாகக் கொண்டு இயங்கும் ‘மனித உரிமை கண்காணிப்பகம்’ எனும் அமைப்பு, புதிய ஆதாரங்களுடன் அறிக்கை ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.

ஈழப் போர் முடிந்த காலகட்டமான மே 16 முதல் 18 வரை வட்டுவாகல் எனும் இடத்தில் வைத்துதான், புலிகள் பகுதியில் இருந்து வந்தவர்களை ராணுவம் பிடித்துச் சென்றது. அவர்களின் பெரும்பாலோரின் கதி என்ன என்பதே தெரியவில்லை! காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல்களை அறிய, சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்கள் மூலமாக ‘மனித உரிமை கண்காணிப்பகம்’ ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறது!

அந்த அமைப்பின் ஆசிய பிராந்திய இயக்குநர் பிராட் ஆடம்ஸ் இது பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஃபிரான்சிஸ் ஜோசப் என்ற கத்தோலிக்கப் பாதிரியார் தலைமையில், கணிசமான விடுதலைப் புலிகள், வட்டுவாகல் பாலத்தின் தென்புறத்தில் சிங்களப் படையிடம் சரண் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒரு பேருந்தில் ஏற்றிச்சென்றதை போராளி ஒருவரின் மனைவி பார்த்துள்ளார். அதன் பிறகு அந்தப் பெண்ணின் கணவர் உள்பட அந்தப் பேருந்தில் சென்ற யாரைப் பற்றியும் இதுவரை ஒரு தகவலும் இல்லை.

இது போன்ற பலரின் தேடல் சோகங்களைத் தெரிவித்துள்ள மனித உரிமைக் கண்காணிப்பகம், போராளித் தளபதி கேணல் ரமேஷ் தொடர்பான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தீவிரப் பற்றாளர்கள் அதைப் பார்த்தால், ரொம்பவும் மனம் பதறிப் போவார்கள். பிரபாகரனுடன் முரண்பட்டு கருணா தப்பிச் சென்றபோது கிழக்கு மாகாணத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர், கேணல் ரமேஷ். கருணாவைத் திருத்த முயன்று, முடியாமல் போகவும், பிறகு பாதுகாப்பாக வன்னிக்கு வந்துசேர்ந்தவர். எதிரியையும் துரோகியையும் தொடர்ந்து கவனித்து வந்தவர். அப்படி இருந்தவர், பிரபாகரனின் கட்டளைப்படி காயம்பட்ட மக்களைக் காப்பாற்று​வதற்காக சரண் அடைந்தார்.

‘மக்களோடு மக்களாகச் சென்றவரை, இவர்தான் கேணல் ரமேஷ் என்பதை முன்னாள் போராளிகள் இருவர் மூலமே கண்டுபிடுத்துள்ளனர்’ என்று ஒரு சாட்சி கூறியதாகச் சொல்கிறது, மனித உரிமை கண்​காணிப்பகம்.

ரமேஷையும் மேலும் மூவரையும் தனியாகப் பிரித்த சிங்களப் படையினர், அருகில் இருந்த ஒரு குடிசைக்குத் தனியாக அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு ரமேஷிடம் கடுமையாக விசாரணை நடத்தியுள்ளனர். அந்தக் கண்காணிப்பகத்தின் வீடியோவில் இது தெளிவாக விரிகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கே தளபதியாக இருந்தவரை, ஓலைக் கொட்டகையின் கீழ் உட்காரவைத்து, விசாரணையைத் தொடங்குகிறார்கள். இயற்பெயர் என்ன, சொந்த ஊர் எது, திருமணம் ஆகிவிட்டதா, மனைவி, குழந்தைகள் பெயர் என்ன, புலிகள் இயக்கத்தில் சேர்ந்தது எப்போது, இயக்கப் பெயர் என்ன, இயக்கத்தில் என்ன பொறுப்பு, முதலில் பொறுப்புவகித்த பகுதி எது, கடைசியாகப் பொறுப்பு வகித்த பிரதேசம் எது… இப்படி அடுத்தடுத்து விடாமல் கேட்டுக்கொண்டே போகிறார், எதிர்ப்புறம் உள்ளவர். திடீரென, ‘மட்டக்களப்பு பிரதேசத்தின் சிங்களப் படை அதிகாரிகளின் பெயர் தெரியுமா?’ என கேள்வியாளர் கேட்க, பதில் அளிக்கத் தடுமாறுகிறார், ரமேஷ். அந்தக் காட்சி முடியும் தறுவாய் அது… எதிர்த் தரப்பில் நின்றவர் என்ன செய்தாரோ… பயந்துபோன கோழிக்குஞ்சு போல, ”ஐ அண்டர்ஸ்டுட் சார்… அண்டர்ஸ்டுட் சார்” என கேணல் ரமேஷ் சொல்வதுடன் காட்சி முடிவடைகிறது.

இன்னொரு வீடியோவில், சாதாரண உடையுடன் படுக்கையில் கிடத்தப்பட்டு இருக்கிறார், ரமேஷ். சில விநாடி​களில் காட்சி மாறுகிறது.. சுற்றிலும் சிங்களப் படையினர் உட்கார்ந்து இருக்க, அவர்களுக்கு நடுவில் இருக்கிறார், ரமேஷ். பின்னணியில் ஒரு டிராக்டர் ஓடும் சத்தம் கேட்கிறது. அங்கும் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். ரமேஷிடம் ‘இன்று 22-ம் தேதி’ எனச் சொல்லும் அவர்கள், ‘பிரபாகரனின் மனைவி எங்கே இருக்கிறார்?’ என்றும் கேட்கிறார்கள் (மே 17-ம் தேதி சரண் அடைந்ததாக ரமேஷ் சொல்கிறார். 17-ம் தேதிதான் பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் கொன்றதாக ராணுவம் சொல்கிறது. ஆனால் 22-ம் தேதி பிரபாகரனின் மனைவி எங்கே என்று கேட்கிறார்கள்!). அடுத்து, ரமேஷின் முதுகில் உள்ள குண்டு காயத்தின் வடுவைக் காட்டி, ‘எப்போது, எந்த சண்டையில் இந்தக் காயம் பட்டது?’ எனக் கேட்க, ‘1988-ல் இந்திய ராணுவக் காலத்தில் பட்டது’ என்கிறார், ரமேஷ்.

இப்படி எல்லாம் ரமேஷ் கடுமையாக விசாரிக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், போரில் ரமேஷ் கொல்லப்பட்டார் என்றே சிங்கள ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். முதல் வீடியோ டிசம்பர் மாதமும் அடுத்த வீடியோ கடந்த வாரமும் வெளியே வந்துள்ளன. டிசம்பர் மாதம் வெளியானதை ‘போலி வீடியோ’ என்று சிங்களப் படை சொன்னது. அதே பதிலைதான் இப்போதும் சொல்கிறார்கள்.

இந்த நிலையில்தான், நடேசன், புலித்தேவன் இருவரும் சுட்டுப் பொசுக்கப்பட்டு சடலங்களாகக் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பாவைத் தளமாகக் கொண்ட ‘அதிர்வு’ இணையதளம், இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது. ‘நடேசனுடன் சேர்ந்து சரண் அடைந்த அவரின் மனைவி, முதலில் கொலை செய்யப்பட்டுள்ளார். பிறகு, நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு நடேசனும் புலித்தேவனும் கட்டிவைத்துச் சித்ரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்’ என்றும் சொல்கிறது ‘அதிர்வு’ தகவல். அதற்கு ஆதாரமாக, இருவரின் வயிற்றுப் பகுதியிலும் கை மணிக்கட்டிலும் காயங்கள் இருப்பதைக் காட்டுகின்றனர்.

”நடேசன், புலித்தேவன் ஆகிய இருவரும் சரண் அடைவது குறித்து 18 மணி நேரத்துக்கு முன்பே ஐ.நா-வுக்குத் தெரியும்” என்று ஐ.நா-வில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் சொன்னதாகத் தகவல் இப்போது கசிந்துள்ளது.

”வன்னியில் நடந்த இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசன், புலித்தேவன் உட்பட முக்கியஸ்தர்கள் சரணடைவது குறித்த தகவல்கள் 18 மணி நேரத்துக்கு முன்பாக ஐ.நா-வுக்குத் தெரியும். ஆனால் சரண் அடைந்தவர்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்து உள்ளது. சரணடைபவர்களின் விவரங்களும் ஐ.நா-வுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஐக்கிய நாடுகள் சபை சார்பாக அவர்களை வரவேற்பதற்கு கொழும்பில் பணியாற்றிய ஐ.நா. அதிகாரிகள் வவுனியாவுக்குச் செல்லவும் திட்டமிட்டு இருந்தனர்.

அப்போது (2009-மே) கொழும்புவில் பணியாற்றிய ஐ.நா. அதிகாரிகளில் பலரும் தற்போது பணியில் இருந்து விலகி உள்ளனர். அல்லது இலங்கையை விட்டு வெளியேறி உள்ளனர். சரணடைவது தொடர்பான மாயைகளை உருவாக்கி, விடுதலைப் புலிகளைக் கொலை செய்யவே கொழும்புவும் கொழும்புவுக்கு ஆதர​வான சில அதிகாரிகளும் முயற்சிகள் மேற்கொண்டார்கள்…” என்றும் ஐ.நா. தொடர்பான ஒருவர் கூறியதாக இணை​யங்களில் தகவல் பரவி உள்ளது.

இதுவரை ”நடேசன், புலித்தேவன் சுட்டுக் கொல்லப்பட்டது கட்டுக்கதை” என்று சொன்ன சிங்களத் தரப்பும் அவர்களுக்கு ”ஆமாம் சாமி” போட்ட​வர்களும், இந்தப் புகைப்படங்களைப் பார்த்தபின் என்ன சொல்வார்களோ, தெரியவில்லை.

அடுத்தடுத்து ஆதாரங்கள் வந்து​கொண்டே இருக்கின்றன. ஆனால், குற்றவாளிகள் மீது விசாரணைகூடத் தொடங்கவில்லை, இன்னும்! என்ன உலகமோ?

– இரா.தமிழ்க்கனல்

source:vikatan

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

உறுதி செய்யப்பட்டுவிட்டது:ஈழத்தில் நடந் தது படுகொலை!

humanrights.jpg

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் மூலமாக ஓர் இன அழிப்பு முயற்சியை இலங்கை அரசு திட்டமிட்டு நடத்தியது என்று தமிழ்ச் சமூகம் கூறிவந்தது. உலகில் பலரும் இதை இனப்படுகொலை என்றார்கள். சமூக ஆர்வலர்களும் மனித உரிமை அமைப்புகளும் இதைப் போர்க்குற்றம் என்று வரையறுத்தார்கள். சிலர் மனித உரிமை மீறல்கள் என்றார்கள். இப்படியாக, இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து கொண்டே வந்திருக்கின்றன.

எத்தனையோ புகார்கள், கோரிக்கைகள் வந்த பிறகும் ஐ.நா.வுக்கு மட்டும் தமிழர்கள் மீது கரிசனம் பிறக்கவில்லை என்று குறைகூறப்பட்டது. 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி நந்திக்கடலில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் கொடூரமாக முடிவுக்கு வந்தபிறகு, ஓராண்டு வரை ஐ.நா. எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. முக்கிய அரசியல் தலைவர் படுகொலை செய்யப்பட்டால்கூட அவசர அவசரமாக விசாரணைக் குழு அமைத்துப் புலனாய்வு செய்வதுதான் ஐ.நா.வின் வழக்கம். இங்கே பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் போர் என்ற பெயரில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டபோது, ஐ.நா. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

போர் முடிந்து சுமார் 13 மாதங்களுக்குப் பிறகு இது தொடர்பாக நிபுணர் குழுவை ஐ.நா. அமைத்தது. இந்தோனேஷியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்ஸýகி தாரூஸ்மன் தலைமையிலான இந்தக் குழுவில் தென்னாப்பிரிக்க மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல இது விசாரணைக் குழு அல்ல. இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் என்கிற ரீதியில் விசாரணை நடத்துவது இதன் நோக்கமுமல்ல. இலங்கை அரசை அதன் கடமைக்குப் பொறுப்பாக்குதல் என்கிற அடிப்படையிலேயே இந்த நிபுணர்குழு பணியாற்றியது. அதுவும் ஐ.நா.வின் பொதுச் செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக மட்டுமே. இந்த அளவிலாவது ஒரு குழு அமைக்கப்பட்டதே என்பதில் பலருக்குத் திருப்தி ஏற்பட்டது என்பதையும் மறுக்க முடியாது.

கடந்த மார்ச் 31-ம் தேதியே இந்தக் குழு தனது அறிக்கையைத் தயாரித்து விட்டது. விசாரணைக் குழுக்களைப் போல இந்த நிபுணர் குழு செய்தியாளர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யவில்லை. கடந்த 12-ம் தேதி தனது அறிக்கையை நேரடியாக ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூனிடம் வழங்கியது. அவரும் அதை வெளியிடவில்லை. ஐ.நா.வில் இருக்கும் இலங்கை அரசின் பிரதிநிதிகளுள் ஒருவரான ஷவேந்திர சில்வாவிடம் அறிக்கையின் ஒரு பிரதியை அவர் ஒப்படைத்தார்.

இப்படிப்பட்ட ரகசிய அறிக்கை எப்படியோ அண்மையில் ஊடகங்களில் வெளியானது. இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு ஆதரவானதாகக் கருதப்படும் "தி ஐலேண்ட்’ பத்திரிகை இந்த அறிக்கையை வெளியிட்டது. ஐக்கிய நாடுகள் சபையோ, இலங்கை அரசோ எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதால், இதுவே உண்மையான அறிக்கையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான உச்சகட்ட போரை, "நெருக்கடியில் உள்ள அப்பாவிகளை மீட்கும் நடவடிக்கை’ என்றே இலங்கை அரசும் ராஜபட்சவும் கூறிவந்தனர். பொதுமக்கள் கொல்லப்படக்கூடாது என்கிற கொள்கையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர்கள் கூறினர்.

ஆனால் ஐ.நா.வின் அறிக்கையில் இதற்கு நேர் எதிரான கருத்து கூறப்பட்டுள்ளது. சர்வதேச மனிதநலச் சட்டத்தையும் மனித உரிமைச் சட்டத்தையும் இலங்கை ராணுவமும் விடுதலைப்புலிகளும் மீறியிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருப்பதற்கு முகாந்திரம் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றில் சில போர்க்குற்றங்கள் என்கிற வரையறைக்குள் வரும் அளவுக்கு மிகக் கொடிய குற்றங்கள் எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

2008-ம் ஆண்டு செப்டம்பர் முதல் போர் முடிவுக்கு வரும் வரையில் வன்னிப் பகுதியில் நடந்த சம்பவங்கள் பற்றி இந்த அறிக்கை விளக்கியிருக்கிறது.

வன்னிப் பகுதியில் முன்னேறிச் சென்ற ராணுவம் மிக அதிக அளவில் குண்டுகளை வீசி, பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கொன்றிருக்கிறது. இந்தக் குண்டுவீச்சில் இருந்து தப்பியோடிய சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் பொதுமக்கள் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சிக்கிக் கொண்டனர். இவர்களையே விடுதலைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்தி இலங்கை ராணுவத்தின் தாக்குதலைச் சமாளித்தனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

அப்பாவிகள் கொல்லப்படுவதை எதிர்த்த ஊடகங்களையும் விமர்சித்த சமூக ஆர்வலர்களையும் இலங்கை அரசு பல்வேறு வழிகளில் மிரட்டியும் துன்புறுத்தியும் அடக்கியிருக்கிறது. மர்மான "வெள்ளை வேன்களை’ பயன்படுத்தி அரசுக்கு எதிரானவர்களைக் கடத்திச் செல்லும் நடவடிக்கைகள் நடந்திருக்கின்றன. இப்படிக் கடத்தியவர்கள் காணாமலேயே போயிருக்கிறார்கள்.

ஐ.நா.வின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் மிக முக்கியமான தகவல், 3 பாதுகாப்பு வலயப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலைப் பற்றியது. கடுமையான தாக்குதல் நடக்க இருப்பதால், இந்தப் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் சென்று விடுமாறு ராணுவம் முதலில் பொதுமக்களை அறிவுறுத்தியது. இந்தப் பகுதியில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படாது என்றும் ராணுவம் உறுதியளித்தது. இதனால், பல இடங்களில் சிதறிக்கிடந்த மக்கள் இந்தப் பகுதிகளில் குவிந்தனர்.

இந்தப் பகுதிகளைப் பற்றிய தெளிவான வரைபடமும் உளவுத் தகவல்களும் ராணுவத்திடம் இருந்தன. அப்படியிருந்தும், பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்த ஐ.நா. மையமும் உணவு வழங்கும் பகுதியும் ராணுவத்தால் குண்டுவீசித் தகர்க்கப்பட்டன.

காயமடைந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக வந்த செஞ்சிலுவைச் சங்க கப்பல் நின்று கொண்டிருந்த கடற்கரைப் பகுதியிலும் இலங்கை ராணுவம் சரமாரியாகக் குண்டுகளை வீசியது. இந்தக் கப்பல் வருவது குறித்த தகவல் ஏற்கெனவே இலங்கை அரசுக்கும் ராணுவத்துக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ராணுவத்தின் உளவுப் பிரிவுக்கும் இதுபற்றித் தெரியும். அப்படியிருந்தும் கப்பலையொட்டிய கடற்கரைப் பகுதியில் குண்டுகள் வீசப்பட்டன என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.

வன்னியில் இருந்த எல்லா மருத்துமனைகளும் தாக்குதலுக்கு இலக்காகின. இது தவறுதலாக நடந்ததாகக் கூற முடியாது. மருத்துவமனைகள் எங்கெங்கு இருக்கின்றன என்பது ராணுவத்துக்கு நன்றாகவே தெரிந்திருந்தும், குறிவைத்து இந்த மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதுபோன்ற தாக்குதல்களால் உணவு, மருந்து வினியோகம் ஆகியவை முடங்கின. வன்னிப் பகுதியில் யாருக்கும் அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளும் கருவிகளும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் ராணுவம் மிகவும் கவனமாகவே இருந்தது.

போர் நடந்த பகுதியில் சிக்கியிருந்த மக்களின் எண்ணிக்கை வேண்டுமென்றே குறைத்துக் கூறப்பட்டது. இதன் பிறகு தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது. முடிவில் 2009-ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் மட்டும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும் பகுதியினர் யாரென்றே அடையாளம் காணப்படவில்லை.

போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகும் அரசின் கொடுமைகள் நிற்கவில்லை. போரில் இருந்து தப்பியவர்கள் பிரத்யேக முகாம்களில் அடைக்கப்பட்டனர். அடையாளம் காண்கிறோம் என்கிற பெயரில் அனைவரும் சித்திரவதை செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் என்கிற சந்தேகத்தின் பேரில் முகாம்களில் இருந்து பிடித்துச் செல்லப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டார்கள்.

முகாம்களில் கூட்டநெரிசல் அதிகமாக இருந்ததால் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட சித்திரவதை முகாம்கள் போலவே இவை இருந்தன என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

source:dinamani

http://thamilislam.tk

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized