Monthly Archives: செப்ரெம்பர் 2010

அயோத்தி வழக்கு : சர்ச்சைக்குரிய நிலம் மூன ்றாக பிரிக்கப்படுகிறது

அலகாபாத் : அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கும் சொந்தம் என்ற வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரிக்க கோர்ட் உத்தரவிட்டிருப்பதாக வக்கீல் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் தெரிவித்தார்.மூன்றாக பிரிக்கப்படும் நிலத்தில் ஒரு பாகம் வக்ப் வாரியத்துக்கும், ஒன்று நிர்மோஹி அக்ஹாரா அமைப்புக்கும் மற்றொரு பாகம் ராம் லல்லா அமைப்புக்கும் கொடுக்கப்படும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வக்கீல்கள் தெரிவித்தனர்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

அயோத்தி வழக்கு தீர்ப்பை நீதிபதிகள் படிக ்க துவங்கினர்

அலகாபாத் : அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக, கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கின் இறுதித் தீர்ப்பை, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நீதிபதிகள் எஸ்.யு.கான் தலைமையில் நீதிபதிகள் சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் இன்று மாலை 4 மணி அளவில் படிக்க ஆரம்பித்தனர் .

தீவிர பாதுகாப்பு : தீர்ப்பை ஒட்டி அலகாபாத் ஐகோர்ட் வளாகத்தில் உச்சகட்ட உஷார் நிலை அமல் படுத்தப்பட்டிருந்தது. கோர்ட்டுக்குள் வழக்கில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர்களும் ஒரு முறை கோர்ட்டுக்குள் சென்று விட்டால், தீர்ப்பு முழுமையாக வாசிக்கப்பட்ட பிறகு தான் வெளியே வர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்களுக்கு தீர்ப்பின் பிரதிகள் லக்னோ மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடத்தில் வழங்கப்பட்டது.

முன்னதாக நிருபர்களிடம் பேசிய லக்னோ கலெக்டர் சுனில் அகர்வால், 3 நீதிபதிகளும் தனித்தனியாக தீர்ப்பு வழங்கியிருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் பத்திரிகையாளர்கள் தீர்ப்பு குறித்த தகவல்களை வெளியிடும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என லக்னோ கலெக்டர் மற்றும் போலீஸ் டி.ஐ.ஜி., வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அமைச்சரவை கூட்டம் : இதற்கிடையில் டில்லியில் இன்று மாலை 5 மணிக்கு பாதுகாப்பு தெ?டர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. அயோத்தி தீர்பபை அடுத்து ஏற்படக்கூடிய நிலைமையை சமாளிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பொது கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறீர்களா ?

computer_using.jpgகம்ப்யூட்டர் மையங்கள், பொதுவான அலுவலகங்கள், வாடகைக்கு கம்ப்யூட்டரைத் தரும் இடங்கள் ஆகியவற்றில் உங்கள் கம்ப்யூட்டர் பணிகளை மேற் கொள்கிறீர்களா?

அவை எல்லாம் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரைப் போல் பாதுகாப்பானவையாக இருக்காது. எனவே கவனமாகத்தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பான ஐந்து எச்சரிக்கைகளை இங்கு காண்போம்.

1. என்றைக்கும் பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டைக் கையாளும் வேலையை வைத்துக் கொள்ள வேண்டாம். அந்தக் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் அல்லது அட்வேர் என்ற வகையிலான புரோகிராம்கள் இருக்கலாம். இவை திருட்டுத்தனமாக உங்கள் அக்கவுண்ட் அதற்கான பாஸ்வேர்ட்களைப் பதிவு செய்து யாருக்கேனும் அனுப்பலாம். இதனால் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து பணம் பறிபோகும் வாய்ப்புண்டு.

2. உங்கள் நிதி சார்ந்த கணக்கு வழக்குகள் அல்லது வருமான வரி சம்பந்தமான பைல்களை ஹோட்டல் ரிசப்ஷனில் விட்டுவிட்டு வருவீர்களா? வரமாட்டீர்கள் அல்லவா? அதுபோல பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் வருமானம் அல்லது நிதி சார்ந்த பைல்களைத் தயார் செய்தால் உங்களுடைய பிளாப்பி அல்லது சிடியில் காப்பி செய்து பின் கம்ப்யூட்டரில் இருந்து அழித்துவிடவும். ரீசைக்கிள் பின்னில் கூட இருக்கக் கூடாது.

3. பொதுக் கம்ப்யூட்டர்கள் மூலம் எந்தப் பொருளையும் வாங்கக் கூடாது. இதனாலும் உங்கள் பெர்சனல் தகவல்கள் போக வாய்ப்புண்டு.

4. பொதுக் கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் பிரவுசிங் செய்து முடித்தவுடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள டெம்பரரி போல்டரில் உள்ள பைல்களை அழித்துவிடுங்கள். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Options சென்று Delete பட்டனைத் தட்டி அழித்துவிடுங்கள். அல்லது

Delete All பட்டனைத் தட்டுங்கள்.

5. இன்னொரு சின்ன வேலையும் பாதுகாப்பானதே. கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடுங்கள். இது மிச்சம் சொச்சம் மெமரியில் இருக்கும்
பைல்களை அழித்துவிடும்

source:z9tech

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மனித இனத்திற்கு பேருதவிகள் புரியும் பாம ்புகள்

large_94357.jpg

சென்னை மற்றும் புறநகரில் கடந்த சில ஆண்டுகளாக பாம்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால், மக்களுக்கு பாம்புகள் குறித்து பய உணர்ச்சி அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை ஆண்டிற்கு 300 நல்லப் பாம்புகள், 500 சாரைப் பாம்புகள் மற்றும் இதர பாம்புகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை வனத்துறையினரால் பிடித்து அடர்ந்து காப்புக் காடுகளில் விடப்படுகின்றன. இருப்பினும் பாம்புகள் பற்றிய அச்சம் மக்களிடம் குறையவில்லை.

உலகளவில் 2,968 வகையான பாம்புகள் உள்ளன. இதில், இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பாம்பு வகையில் நான்கு மட்டுமே விஷமுள்ளது. மற்றவை விஷமற்றது. அவைகள் நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் மற்றும் சுருட்டை விரியன்.

நல்லபாம்பு: பழுப்பு, மஞ்சள் அல்லது கறுப்பு நிறங்களை கொண்ட நல்ல பாம்பு படம் எடுக்கும் தன்மை கொண்டது. ஒரு மீட்டர் நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 2.2 மீட்டர் நீளம் வரை வளரும். இவைகள் எலி வலை மற்றும் கரையான் புற்றுகளில் வாழும். நல்ல பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தையும், சுவாச மண்டலத்தையும் தாக்கி மரணம் விளைவிக்கக் கூடியது. சென்னை மற்றும் புறநகரில் இவைகள் பரவலாக காணப்படுகின்றன.

கட்டுவிரியன்: இரவு நேரங்களில் மட்டுமே இரை தேடி செல்லும் இந்த வகை பாம்பு மேல்புறம் பளபளக்கும் கறுமை நிறத்துடன் வால் வரை தொடரும் மெல்லிய வெள்ளைக் குறுக்கு கோடுகளும் காணப்படும். பாம்பின் கீழ்புறம் வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் கொண்டதாக காணப்படும். இதன் நாக்கு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது 1.75 மீட்டர் நீளம் வரை வளரும். கரையான் புற்று, எலி வலை, கற்குவியலில் இவைகள் வாழ்ந்தாலும் நிலத்தில் வாழும் பாம்புகளுக்கு மட்டுமே வீரியம் அதிகம். இந்த பாம்பின் விஷம் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. சென்னை மற்றும் புறநகரில் குறைந்த அளவே காணப்படுகிறது.

கண்ணாடி விரியன்: இரவு நேரத்தில் காணப்படக்கூடிய இந்த பாம்பின் தலை முக்கோண வடிவில் இருக்கும். கண்ணின் பாவை நெடு நீள வடிவத்திலிருக்கும். பழுப்பு அல்லது மஞ்சளம் கலந்த பழுப்பு நிறத்தில் உள்ள இந்த பாம்புகளின் மேல்புறம் பழுப்பு அல்லது மஞ்சள் நிற வட்ட வடிவம் காணப்படும். இது 1.80 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. முட்புதர் மற்றும் மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும். மிக நீளமான விஷப் பற்களை கொண்ட இந்த பாம்பிம் விஷம் இதயத் திசுக்களையும், ரத்த ஓட்ட அமைப்பினையும் தாக்கி மரணம் விளைவிக்க கூடியது. இந்த வகை பாம்பும் சென்னை புறநகரில் மிகக்குறைந்த அளவே காணப்படுகின்றன.

சுருட்டை விரியன்: இந்த பாம்பின் கண்கள் மிகப்பெரியதாக காணப்படும். வெளிர் மற்றும் அடர் பழுப்பு செந்நிறம், சாம்பல் அல்லது மணல் நிறத்துடன் உடலின் மேற்புறத்தில் வளைவு வடிவங்களை கொண்டு காணப்படும். இதன் தலையின் மேற்புறம் அம்பு வடிவம் காணப்படும். 50 செ.மீ., நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 80 செ.மீ., நீளம் வரை வளரக் கூடியது. வறண்ட பரந்த நிலப்பரப்புகள் மற்றும் அதிக மழை பெய்யும் மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும். பகல் நேரத்தில் இந்த பாம்புகள் மரப்பட்டைகள், கற்களுக்கு இடையிலும் கற்றாழை போன்ற செடிகள் அடியிலும் காணப்படும். இந்த பாம்பின் விஷம் ரத்த மண்டலத்தை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தென்சென்னை கடற்கரை பகுதிகளில் இந்த வகை பாம்புகள் ஓரளவு காணப்படுகின்றன.

தங்கத்தை விட மதிப்பானது விஷம்: வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாம்புகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தலோ, அடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏனெனில் பாம்புகள் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கது. அவைகள் மனிதர்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகின்றன. பாம்பு விஷம் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு கிராம் நல்லபாம்பு விஷம் 28 ஆயிரம் ரூபாய்; கட்டுவிரியன் விஷம் 30 ஆயிரம் ரூபாய்; கண்ணாடி விரியன் விஷம் 40 ஆயிரம் ரூபாய், சுருட்டை விரியன் 45 ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்படுகின்றன.

விஷமற்ற பாம்புகள்: சென்னை மற்றும் புறநகரில் விஷமற்ற பாம்புகளான சாரைப்பாம்பு, நீர்சாரை அதிகம் காணப்படுகின்றன. இது தவிர வெள்ளிக்கோல் வரையன், பச்சை பாம்பு, கொம்பேறி மூக்கன், மண்ணுளி பாம்பு, பவழப்பாம்பு, அழகு பாம்பு, பிரைடல் பாம்பு, நீர்காத்தான்குட்டி, பசுஞ்சாம்பல் நிற தண்ணீர் பாம்பு, சிறு பாம்பு போன்றவை சென்னை நகரில் சிறிதளவே காணப்படுகின்றன.

பாம்புகள் பற்றிய தகவல்கள்: மனித இனத்திற்கு முன்பே தோன்றியவை பாம்புகள். இவைகள் பெரும்பாலும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். ஆனால், கண்ணாடிவிரியன், பச்சை பாம்பு போன்ற சில வகைகள் குட்டி போடும். நல்ல பாம்பு முட்டையிட்டு குட்டிகள் வெளி வரும் வரை பாதுகாக்கிறது. பாம்புகள் சுற்றுப்புறத்தில் உள்ள வாசனைகளை உணரவே நாக்கை அடிக்கடி வெளியில் நீட்டும். பாம்புகளால் ஒலி அலை உணர இயலாது. அதற்கு வெளிக்காது மற்றும் நடுக்காது அமைப்புகள் இல்லை. அதன் உடல் வளர்ச்சி காரணமாகவே அதன் மேற்தோல்களை உரித்துக் கொள்கின்றன.

பாம்பு கடி முதலுதவி: பாம்புகளில் நச்சு சுரப்பி, உமிழ்நீர் சுரப்பியிலிருந்து தோன்றியதாகும். விஷமுள்ள பாம்புகளின் கடி அனைத்துமே உயிரிழக்க செய்வதில்லை. விஷப் பாம்பு கடியின் பாதிப்பு உடலில் செல்லும் விஷத்தின் அளவைப் பொருத்தே அமையும். பாம்புக் கடியால் ஏற்படும் பல மரணங்கள் விஷத்தினால் ஏற்படுவதில்லை. அதிர்ச்சியினால் ஏற்படுவதாகும். எனவே, பாம்பு கடி பட்டவரை அதிர்ச்சியடையாமல் பார்த்து கொள்ள வேண்டும். கடிபட்ட இடத்திற்கு மேல் ரத்த ஓட்டம் தடைபடாத வகையில் கட்டு போட வேண்டும். பாம்பு கடிபட்டவரை விஷமுறிவு சிகிச்சையளிக்கு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்.

விஷமுள்ள, விஷமற்ற பாம்புகள் கண்டறிவது எப்படி:

* பாம்பின் வால் குறுக்கு வாக்கில் தட்டையாக அமைந்து இறுதியில் அகன்று இருந்தால் அது விஷமுள்ள கடற்பாம்பு வகையாகும்.

* பாம்பின் வால் பகுதி உருளை வடிவில் அமைந்து, வயிற்று புற செதில்கள் விரிந்து காணப்பட்டு, தலையில் சிறு சிறு செதில்கள் இருந்தால் அது விஷமுள்ள விரியன் பாம்பு வகைகள்.

* கண்ணுக்கும், மூக்கு துவாரத்திற்கும் இடையே சிறு குழி காணப்பட்டால் அது விஷமுள்ள குழிவிரியன் வகையாகும்.

* பாம்பின் முதுகின் நடுவில் உள்ள செதில்கள் அறுங்கோண வடிவில் அமைந்து, பிற செதில்களை விட பெரியதாக இருந்து, கீழ் உதட்டு செதில் பெரியதாக இருந்தால் விஷமுள்ள கட்டுவிரியன் வகையை சேர்ந்ததாகும்.

* வயிற்றுபுறம் விரிந்து காணப்படாமல் இருந்தால் அது விஷமற்ற பாம்புகளாகும்.

* தலைப் பகுதியில் பெரிய கவசத்தால் தகடுகள் அமைந்து சாதாரணமாக காணப்பட்டால் அவைகள் விஷமற்றவைகள்.

பாம்புகள் பற்றிய மூட நம்பிக்கை:

* நல்ல பாம்பு மகுடியின் இசைக்கேற்ப படம் எடுத்து ஆடும்.

* நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் ஒரே இனத்தை சேர்ந்த ஆண், பெண் பாம்புகள்.

* நல்ல பாம்பு மிகவும் வயதானவுடன் தன் தலையில் மாணிக்ககல் வைத்திருக்கும்.

* நல்ல பாம்பையோ அல்லது வேறு வகை பாம்பையோ கொன்றுவிட்டால் அதன் ஜோடி கொன்றவரை பழி வாங்கும் என்பது.

* பாம்புகள் வழவழப்பாக இருக்கும்.

* பாம்புகள் பாலை விரும்பி குடிக்கும்.

* மண்ணுளிப் பாம்புகளுக்கு இரண்டு தலைகள் உண்டு. அவைகள் கடித்தால் தொழுநோய் வரும்.

* பச்சைப் பாம்பு கண்களை கொத்தும்.

* கொம்பேறி மூக்கன் மனிதனை கடித்து கொன்று விட்டு, மரத்தில் ஏறி அந்த மனிதன் உடல் எரிப்பதை பார்க்கும். இவ்வாறு கூறப்படும் அனைத்தும் கட்டுக் கதைகள். சிலரால் பரப்பப்பட்ட மூட நம்பிக்கைகள்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இப்பொழுது ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்த து என்ன ..!

happycouple_200_200.jpg
1. பெண்கள் ஆண்களிடம் முதலில் எதிர்பார்பது மரியாதையைத்தான். மனைவி என்றால் தனக்கு அடிமைபோல சேவை செய்ய வந்தவள் என்ற எண்ணம் இன்றும் ஆண்கள் மத்தியில் நிலவுகிறது. பெண்களது கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும். பல ஆண்கள் பெண்களின் உடல் அமைப்பை கிண்டல் செய்வதையும், அவர்களின் மாதவிடாய் பற்றி ஜோக் அடித்து சிரிபதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இவைகளை பெண்கள் அறவே விரும்புவதில்லை.

2. சமயத்திற்கு ஏற்றபடி சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். சரியான வேளையில் சரியான வழிகளைச் சொல்லும் ஆண்களை பெண்கள் நெஞ்சில் சுமப்பார்கள். உதாரணமாக, மனைவி தன் கணவனிடம் கேட்கிறாள், நான் குண்டாக இருக்கிறேனா? என்று! அதற்கு ` என்னைவிட அழகாகவே இருக்கிறாய். இதற்காக வருத்தபட வேண்டிய அவசியம் இல்லை. உன்னை நான் எப்போதும் நேசிக்கிறேன். உனக்கு உடல் பருமனாக இருப்பதாக தெரிந்தால் உடற்பயிற்சி செய் டார்லிங்’ என்று கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

3. பெண்ணுக்கான உரிமையை பெற்றுத் தருபவராக இல்லாவிட்டாலும் பெண்ணை பெண்ணாக நடத்தும் பெருந்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். ஆண்கள் செய்யும் எந்த வேலையையும் செய்யும் அளவுக்கு பெண்களுக்கும் உடல்பலம் – மனோபலம் இருக்கிறது என்பதை புரிந்து நடந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

4. பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதில் ஆண்கள் கவனம் செலுத்து வதில்லை. சிறு பிரச்சினை என்றாலும் கூட, போர்க்களத்தில் நிற்பதுபோல கொந்தளிக்கிறார்கள். நாம் இருவரும் ஒருங்கிணைந்து வாழ்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் இஷ்டம் போல் பேசுகிறார்கள். அவர்கள் பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

5. பெண் மீது நம்பிக்கைத் தன்மை கொண்டவராக ஆண் இருக்க வேண்டும். அவள் தன் விருப்பத்திற்கு இணங்கவே பிறந்தவள் என்பதுபோல் நினைத்துக் கொண்டு, நினைத்த நேரத்தில் `இன்ப உலகம் செல்லலாம் வா’ என்று வற்புறுத்தி அழைக்கக்கூடாது என்றும் விரும்புகிறார்கள்.

6. பெண் என்றால் பொன் முட்டையிடும் வாத்து என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அவர்களின் தேவைக்காக நெருங்கி வருதல், வேண்டிய பணத்தை பெற்றுச் சென்று ஊதாரித்தனமாக செலவு செய்வது, மது அருந்துவது என்று இருக்கும் ஆண்களைக் கண்டு பெண்கள் எரிச்சல் அடைகிறார்கள். அத்துடன் தங்களை கைநீட்டி அடிக்கும் ஆண்களை அறவே வெறுக்கிறார்கள்.

7. காதலிக்கும்போது `உன்னை பிடிக்கிறது, உன் சிரிப்பில் மயங்குகிறேன்’ என்று ஆண்கள் சொல்கிறார்கள். அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க பலவித முயற்சிகளை செய்கிறார்கள். ஆனால் மணவாழ்வுக்குள் நுழைந்துவிட்டால் அந்த நகைச்சுவை உணர்வை மறந்து விடுகிறார்கள். அதன்பிறகு அவள் சிரிப்பது ஆண்களுக்கு எரிச்சலைத் தூண்டுகிறது. வாழ்வில் எல்லாம் முடிந்து போனதாக எண்ணி சிடுசிடுபானவர்களாக மாறிவிடுகிறார்கள். அப்படி இல்லாமல் கலகலப்பாக இருக்கும் ஆண்களையும், பெண்களின் கலகலப்பான, இயல்பான உணர்வை ஏற்றுக்கொள்ளும் ஆண்களையும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

8. புத்திசாலி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும். புத்திசாலித்தனம் என்றால் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் போட்டி போடும் அளவுக்கு சிறந்த அறிவாளியாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. குடும்பம், வாழ்வு பற்றிய தெளிவான எண்ணம் கொண்டவராகவும், குடும்ப முன்னேற்றம் குறித்த உள்ளுணர்வு கொண்டவராகவும், அதற்கான வழிகளை புரிந்து நடந்து கொள்பவராகவும் இருந்தாலே போதும். நீங்கள் அப்படித்தான் என்றால் உலகமே எதிர்த்தாலும் நீங்கள்தான் அவள் மனதை ஆளும் ராஜாவாக இருப்பீர்கள். எல்லையில்லா நேசம் காட்டுவார்கள் உங்கள் மீது

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

அந்தரங்கம் :பெண்கள் உண்மையிலேயே விரும்ப ுவது என்ன?

girls_laughing.jpg“பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்!’ என்கிறார் பிரபல மனோ தத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், “வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார்.

இதோ அந்த விஷயங்கள்:

1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.

2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?

3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.

4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.

5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.

7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது.

9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்

11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்

12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.

13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.

17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.

18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.

19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.

20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.

21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.

22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.

.

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்

source:z9tech

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

காமன்வெல்த்தும் ,இந்திய கம்மனாட்டிகளும ்

சர்வதேசத்தின் முன் அசிங்கப்பட்டு போயிருக்கும் சோனியா காங்கிரஸ்

சென்ற ஆண்டு ஒலிம்பிக் போட்டியை சீனா நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் அதைப் போன்றதொரு போட்டியை நடத்தி, சீனாவுக்கு ஒரு பிலிம் காட்டவும் அத்தோடு நின்றுவிடாது அந்நிய முதலீடுகளை ஈர்க்கப் போவதாகவும் காங்கிரஸ் சொல்லிவந்தது. அதன்படி, 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதிவரை காமன்வெல்த் நாடுகளின் போட்டிகளை டெல்லியில் நடத்த ஏற்பாடாகிவருகிறது. ஆனால் அவுஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள், அதனைத் தொடர்ந்து கனடா, இப்போது ஆபிரிக்கர்கள் என எல்லா விளையாட்டு வீரர்களும் இந்தியா செல்லப் போவது இல்லை என அரிவித்துவருகின்றனர். ஏன் தெரியுமா ? இதற்காக அமைக்கப்பட்டுவரும் விளையாட்டரங்கு, உட்பட தங்கும் விடுதிகள் கூட, ஒரு தரத்தில் இல்லை என்பது மட்டுமல்லாது, சுத்தமாக இல்லை என்றும் குறைகூறப்படுகிறது. இதனை ஏன் இந்திய ஊடகங்கள் மூடி மறைக்கின்றது ?

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வதற்கென அமைப்புக் கமிட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைவராக சுரேஷ் கல்மாடி என்ற முன்னாள் காங்கிரசு அமைச்சர் நியமிக்கப்பட்டார். இந்தப் போட்டிகளுக்காக நவீன விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு வீரர்கள் தங்கும் குடியிருப்புகள் போன்றவற்றைப் புதிதாகக் கட்டுவது, ஏற்கெனவே உள்ள விளையாட்டு அரங்கங்களைச் சர்வதேச தரத்திற்கு நவீனப்படுத்துவது எனப் பல வேலைகள் தொடங்கி நடந்து வருகின்றன. ஆனால் அவை 3ம் திகதிக்கு முன்னர் முடிந்துவிடுமா என்று இதுவரை சரியாகக் கூறமுடியவில்லை. போதாக்குறைக்கும் அங்கு கட்டப்பட்ட பாலம் ஒன்று இன்று உடைந்து விழுந்துள்ளது. அவசர அவசர மாகக் கட்டப்படும் கட்டிடங்களும், தொடர்மாடிகளும் எப்போது இடிந்து விழும் என்ற ஏக்கமே இங்கு உரையோடிப்போய் உள்ளது.

இந்தத் திட்டங்களின் எல்லா இடங்களிலும் வகைதொகையின்றி, அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் உள்நாட்டு – வெளிநாட்டு முதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து ஊழல் செய்துள்ளது அம்பலமாகி வருகிறது. சென்ற மாதத்தில் இவர்களது ஊழல் வெளிப்படாத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு தினந்தோறும் ஏதாவதொரு திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியது. இதனைக் கண்டுகொள்ளாமல் காங்கிரஸார் விட்டதால், பிரச்சனை பூதாகரமாகி பி.பி.சி, சி. என். என் போன்ற சர்வதேச தொலைக்காட்சிகளில் எல்லாம், இந்தியா விளையாட்டு வீரர்களுக்காக அமைத்திருக்கும் தங்கும் அறைகளை போட்டோ எடுத்துக்காட்டி மானத்தை கப்பல் ஏற்றியுள்ளது. இதனைப் பார்வையுற்ற பல விளையாட்டு வீரர்கள் தாம் இந்தியா செல்லப்போவது இல்லை என தற்போது அறிவிக்க, அவ்வப்போது இந்திய வெளியுறவு அமைச்சர் தொலைக்காட்சியில் தோன்றி, அவற்றை நாம் சர்வதேசத்தின் தரத்திற்கு உயர்த்துவோம் என கெஞ்சுவதும் வழமையான விடையமாகிவிட்டது.

தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கோ இதனைப் பற்றி எதுவும் தெரியாத நிலை காணப்படுகிறது. காமன்வெல்த்தின் தலைமைப்பீடமான பிரிட்ஷ் பேரரசியின் முன்னிலையில் நடைபெற்ற ’காமன்வெல்த் சுடர்’ ஊர்வலத்தை அகன்ற திரையில் காட்டவும், அந்த ஊர்வலத்திற்கு கார்களை வாடகைக்கு எடுக்கவும், ஏ.எம்.பிலிம்ஸ், ஏ.எம்.கார்ஸ் ஆகிய பிரிட்டிஷ் நிறுவனங்களுடன் பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டன எனக் கூறப்பட்டன. ஆனால், அது போன்ற நிறுவனங்கள் எதுவும் உண்மையில் இல்லை. இந்தியாவில் இவர்கள் கொடுத்திருந்த முகவரியும் போலியானது. ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம் அனுப்பியது போன்றதொரு போலியான சிபாரிசுக் கடிதத்தை அதிகாரிகளே உருவாக்கி ஏமாற்றியுள்ளனர்.

பிரிட்டிஷ் பேரரசியே தனது அதிருப்தியைத் தெரிவிக்குமளவுக்கு இந்த ஊழல் சில்லறைத்தனமாக நடந்துள்ளது.

நாட்டிலுள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிடம் இவ்விளையாட்டுப் போட்டிக்கு விளம்பரம் திரட்டித் தரவும், விளம்பரக் கட்டணத்தை வசூலிக்கவும் ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் என்ற ஆஸ்திரேலிய நிறுவனம் அமர்த்தப்பட்டது. இந்நிறுவனம் இதுவரை ஒரு விளம்பரதாரரைக் கூடப் பிடித்து தரவில்லையாம் நம்புவீர்களா இதை ? அரசு நிறுவனங்கள் அரசு விழாக்களுக்கு விளம்பரம் தருவதென்பது வழக்கமான செயல்தான். இந்திய அரசுத் துறை நிறுவனங்கள் தாமே முன்வந்து வழங்கிய கோடிக்கணக்கான விளம்பரதாரர் தொகையில் 23 சதவீதத்தை, செய்யாத வேலைக்குக் தரகுப் பணமாக இந்த நிறுவனத்திற்குத் தரவேண்டும்.

நாக்பூரில் புதிதாக ஒரு விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு ஆன செலவு 84 கோடி ரூபாய்தான். ஆனால், டெல்லி நேரு விளையாட்டரங்கை ‘மேம்படுத்த’ மட்டும் 669 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். இவ்வாறு ‘மேம்படுத்தப்பட்ட’ அரங்கத்தின் கூரை, அண்மையில் பெத லேசான மழைக்கே ஒழுக ஆரம்பித்துவிட்டது. இதேபோன்று இன்னும் 17 அரங்கங்களை பல ஆயிரம் கோடிகளில் ‘மேம்படுத்தி’யுள்ளனர். இதுதான் மேம்படுத்தலா. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை காங்கிரஸ் கொள்ளை அடித்துச் செல்கிறதே.

டிரெட் மில்” என்னும் உடற்பயிற்சி சாதனத்தின் அதிகபட்ச விலையே ரூபாய் மூன்று லட்சம்தான். ஆனால், அதனை 9.75 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். 10,000 ரூபாய் மதிப்புள்ள ஏர் கூலரை 40,000 ரூபாய்க்கும், ரூ.25,000 மதிப்புள்ள கணினியை 89,052 ரூபாய்க்கும் வாடகைக்கு எடுத்துள்ளனர். கையை சுத்தம் செய்ய சோப்புக் கலவையை உமிழும் சாதனத்தின் விலையே 450 ரூபாய்தான். இதனை 3,397 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். குடைகளை 6,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்த அநியாயம் குறித்து கேட்ட பொழுது, அக்குடைகளெல்லாம் ‘தனிச் சிறப்பானவை’ என்று கூச்சநாச்சமின்றிப் புளுகுகின்றனர். 50 முதல் 100 ரூபாய் மதிப்புள்ள கழிவறைக் காகிதச் சுருளை, 3,757 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். அவற்றிலும் ‘தனிச் சிறப்பாக’ ஏதேனும் இருக்குமோ என்னவோ?

இதேபோல முக்கிய பிரமுகர்கள் அமரும் சோபாசெட்டுகள், குளிர்சாதன எந்திரங்கள், கார்கள் என பலவற்றை அவற்றின் சந்தை விலையை விட பல மடங்கு கூடுதலான விலைக்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். தொடக்கவிழாவின் போது ஒளிவெள்ளத்தைப் பாச்சும் ஹீலியம் பலூனூக்கு அன்றைய ஒருநாள் வாடகையாக ரூ.50 கோடி வாரியிறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது அரங்கத்தின் பாதியளவுக்குத்தான் ஒளியை உமிழும் என்று தொழில்நுட்பவாதிகளே அம்பலப்படுத்துகின்றனர்.

2003-இல் திட்டமிடப்பட்ட போது, இப்போட்டியை நடத்த மொத்தத்தில் ரூ.1,899 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், எல்லா அதிகாரிகளும் முதலாளிகளும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தைச் சுருட்டியதால் தற்போது செலவு மதிப்பீடு 35,000 கோடிகளில் வந்து நிற்கிறது. வேலைகள் எதுவும் முடிந்த பாடா இல்லை என்ற நிலையில், திட்டமிட்டதை விட 1575% செலவு அதிகரித்துவிட்டது. இதனை ஈடுகட்ட டெல்லி மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட நிதிகள் இதற்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.

ஆதரவற்ற முதியவர்களுக்கான 171 கோடி, தாழ்த்தப்பட்டவர்களுக்கான 744 கோடி நிதி ஒதுக்கீடு ஆகியன காமன்வெல்த் போட்டிகளுக்கு செலவு செய்யப்பட்டன. இதுதவிர, மெட்ரோ ரயில் திட்டத்திற்கென டெல்லி அரசு கொடுக்க வேண்டிய 5,000 கோடி ரூபாய், பல்வேறு கலாச்சார அமைப்புகளுக்கான டெல்லி அரசின் நிதி ஒதுக் கீட்டில் 14 கோடி ரூபாய் – என பிற நலப்பணிக்களுக்கான நிதிகள் காமன்வெல்த்தில் கரைக்கப்பட்டுவிட்டன. இது இவ்வாறிருக்க விளையாட்டுப் போட்டிகளை ஒட்டி கட்டப்படும் வீடுகளை, போட்டிகள் முடிந்த பின்னர் கைப்பற்றிக்கொள்ள இப்போதே போட்டாபோட்டியும் ஊழல்களும் பெருகி, வெளியே கசிந்து முற்சந்திவரை வந்துவிட்டது.

‘தேசியப் பெருமித’ போதையில் இந்த அயோக்கியத்தனத்தை நாம் அங்கீகரிக்கப் போகிறோமா ? கூச்சநாச்சமின்றி சில்லறைத்தனமாக நடந்துள்ள இந்த ஊழல் மோசடிகளையும், குடிசைவாழ் மக்களை கட்டாயமாக வெளியேற்றிவிட்டு ஆக்கிரமிக்கும் அட்டூழியத்தையும், கூலித் தொழிலாளர்களின் உதிரத்தை உறிஞ்சும் கொத்தடிமைத்தனத்தையும் நாம் இன்னமும் சகித்துக் கொண்டிருக்கத்தான் போகிறோமா ? காங்கிரஸ் ஆட்சிக்கு இனியும் முடிவுகட்டவேண்டாமா ?

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கிளி வடிவத்தில் இருக்கும் அதிசய பூ

p2

p1p3

இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயம். அதிசயங்களுக்குப் பஞ்சமே வராது.

அது போன்ற அதிசயங்களில் ஒன்றுதான் பறக்கும் கிளி வடிவத்திலான அதிசயப் பூ.

இந்த பூ. வடிவத்தில் மட்டும் கிளிபோல் அல்லாமல் சிறகு, அலகு, உடல் என ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு வர்ணங்களில் இருப்பது பஞ்சவர்ணக் கிளியை நினைவுபடுத்துகிறது.

தாய்லாந்தில் காணப்படும் `பேரட் பிளவர்’ என்னும் இந்த அதிசயப் பூச்செடி அழியும் நிலையில் பாதுகாக்கப்படும் ஒரு செடியாக இருந்து வருகிறது. சமீபத்தில் இந்தச் செடி பூத்துக் குலுங்கியது.

thanks:tntj

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

உங்களுக்கு பிடித்த படத்தை, இலவசமாக, நல்ல த ரத்துடன் இனி பார்க்கலாம்

3002850.jpg
நியூயார்க் : யூடியூப் இலவசமாக படங்களை பார்க்கும் புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. பிரபல படத்தயாரிப்பு நிறுவனங்கள் லயன்ஸ்கேட், எம்ஜிஎம் அண்ட் சோனி பி்க்சர்ஸ், பிலிங்பாக்ஸ் மற்றும் மேலும் பல நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போட்டு உள்ளது. தன்னுடைய தொகுப்பில் மொத்தம் 400 முழுநீள திரைப்படங்கள் உள்ளது. ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்கள் இந்த இணைப்பில் உள்ளது (டபிள்யூடபிள்யூடபிள்யூ.யூடியூப்.காம்/மூவிஸ்) . சில முழுநீளத்திரைப்படங்கள் முன்னதாகவே யூடியூப்பில் வெளியிடப்பட்டு இருந்தது,ஆனால் அது குறிபிட்ட சில நாடுகளில் மட்டும் பார்க்க முடியும். தற்போது உலகம் முழுவதிலும் அனைவரும் பார்க்கும் வசதியை யூடியூப் கொண்டு வந்து உள்ளது. ஜாக்கி சானின் பிரபல படங்கள்,பாலிவுட்டின் சிறந்த நகைச்சுவை படங்களும் இலவசமாக பார்க்கலாம். இனிவரும் காலங்களில் ‌ஹெச்டி படங்களையும் வெளியிட உள்ளது. உங்களிடம் யூடியூப் இணைக்கப்பட்ட இணைய தள வசதி உடைய தொலைக்காட்சி இருந்தால் போதும், இலவசமாக படத்தை பார்க்கலாம்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

புதிய வைரஸ் எச்சரிக்கை

E_1284978041.jpeg

கூகுள், நாசா,டிஸ்னி, கோகா கோலா போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது. “Here You Have” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ், இந்த சொற்களை சப்ஜெக்ட் பெட்டியில் கொண்டு வரும் இமெயில்கள் மூலம் பரவுகிறது. உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும், மின்னஞ்சல் கடிதமாக இது இன் பாக்ஸை வந்தடைகிறது. அதில் "நீங்கள் கேட்ட பாலியல் பட பைல் இதோ இங்குள்ளது’ என்று ஒரு பிடிஎப் பைலுக்கு லிங்க் தருகிறது. இது பிடிஎப் பைலே அல்ல. .scr. என்ற துணைப்பெயருடன் உள்ள ஒரு கோப்பு. விண்டோஸ் ஸ்கிரிப்ட் அடங்கிய வைரஸ் கோப்பு.

இது CSRSS.EXE என்னும் கோப்பினை உங்கள் விண்டோஸ் டைரக்டரியில் பதிக்கிறது. இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் ஆண்ட்டி வைரஸ் கோப்பின் இயக்கத்தை நிறுத்துகிறது. இது ஒரு பாட்நெட் வகை வைரஸ். ஆனால் பழைய நிம்டா, அன்னா கோர்னிகோவா (2001 ஆம் ஆண்டு) மற்றும் மெலிஸ்ஸா வைரஸ் போல பரவுகிறது. ஆர்வத்தில் அல்லது ஆசையில் இதில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் வந்து இறங்குகிறது. அடுத்து உங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள அனைத்து முகவரிக்கும் இதே போல ஒரு செய்தியை அனுப்புகிறது. இது கடந்த செப்டம்பர் 10 முதல் உலகெங்கும் பரவி வருகிறது. தேடுதல் தளங்களில் தேடப்பட்ட தகவல்களில் இந்த தகவல் தான் இரண்டாம் இடம் கொண்டிருந்தது. SANS Technology Institute என்ற நிறுவனத்தின் இன்டர்நெட் கண்காணிப்பு பிரிவு, இந்த இமெயில் டன் கணக்கில் பரவுவதாக அறிவித்துள்ளது. மெக் அபி நிறுவனம் இந்த வைரஸ் குறித்து முழுமையாக அறிய சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் Comcast என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் தன் இமெயில் சர்வர்களை எல்லாம் மூடிவிட்டது.

இந்த வைரஸை அனுப்பிய சர்வர் மூடப்பட்டுவிட்டது. அதிலிருந்து இந்த வைரஸ் கோப்பு எடுக்கப் பட்டிருக்கலாம். ஆனாலும், ஏற்கனவே பரவிய கம்ப்யூட்டர்களிலிருந்து இந்த வைரஸ் இன்னும் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இதிலிருந்து எப்படி தப்பிப்பது?

நல்ல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை பதிந்து இயக்குங்கள். ஏற்கனவே பதிந்திருந்தால், உடனே அப்டேட் செய்திடவும். இமெயில் இணைப்புகள் எது வந்தாலும் திறப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டாம். அனுப்பியவருக்கு தனி இமெயில் அனுப்பி, அனுப்பியதை உறுதி செய்து கொண்டு பின் திறக்கவும். “Here you Have” அல்லது “Just For You” என்று இருந்தால் எந்த சலனமும் இல்லாமல், முற்றிலுமாக அழித்துவிடவும். இந்த வைரஸ், நார்டன்/சைமாண்டெக் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளால் பாதுகாக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் பரவ முடியவில்லை என்று ஒரு செய்தியும் வந்துள்ளது.

இருப்பினும் இமெயில்களைக் கவனமாகக் கையாளுங்கள்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized