Monthly Archives: செப்ரெம்பர் 2011

பூமி மீது மோதவுள்ள செயற்கைக்கோள்

அமெரிக்க விண்வெளி ஆராட்சி நிறுவனம் நாசாவால் தயாரித்த சட்டலைட்(செயற்கைக் கோள்) இன்று பூமி மீது மோதவுள்ளது. பூமியின் சுற்றுப்புறச் சூழலை ஆராய 1991ம் ஆண்டு இது நாசாவால் விண்வெளிக்கு ஏவப்பட்டது. இது தனது வேலையை செவ்வனவே செய்தாலும் பல வருடங்களுக்குப் பின்னர் கட்டுப்பாட்டை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகியும் வந்தது. புவியீர்ப்பு விசை காரணமாக அது தனது சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி தற்போது பூமியை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது. சுமார் 10.6 மீட்டர் நீளம் கொண்டதும் 5,600 KG எடையுள்ளதுமான இந்தச் செயற்கைக்கோள் பூமி மீது இன்று சனிக்கிழமை மாலை 4.45 மணிக்கு மோதும் என நாசா தெரிவித்துள்ளது.

இது பூமிக்குள் நுழையும்போது வளிமண்டலத்துடனான ஊராய்வின் காரணமாக எரிய ஆரம்பிக்கலாம் எனவும் பூமி மீது அதன் பாகங்கள் வந்து விழும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இது கடலில் விழுமா இல்லை தரையில் விழுமா என்று நாசாவால் கூறமுடியவில்லை. சுமார் 2000 பாகங்களைக் கொண்ட இந்த செயற்கைக்கோள் பூமிக்குள் பிரவேசிக்கும் போது அதன் துண்டுகள் பல சிதறி பரவலாக பூமியின் எல்லாப் பகுதியிலும் விழலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

1979ம் ஆண்டு 70 தொன் எடையுள்ள ரஷ்ய செயற்கைக்கோள் பூமியில் வீழ்ந்ததும் ஞாபகம் இருக்கலாம். ஸ்கை லாப் எனப்படும் அந்த செயற்கைக்கோளில் கதிரியக்கப் பொருட்டகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பாகங்கள் பல இந்தியப் பெருங்கடலிலும் சில பாகங்கள் சில நாடுகளிலும் விழுந்தது. தற்போது பூமி மீது விழ இருக்கும் செயற்கைக் கோளால் பேராபத்தோ இல்லை உயிராபத்தோ கிடையாது என நாசா அறிவித்துள்ள போதும், சர்வதேச தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் இச் செய்தி முதலிடம் பிடித்துள்ளது.

பிந்திக் கிடைத்த தகவலில் படி செயற்கைக்கோளின் 26 பாகங்கள் ஆபிரிக்க கண்டத்திலும் மற்றும் கனடாவிலும் விழுந்துள்ளதாக அறியப்படுகிறது.

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சவுதியில் கார் ஓட்டிய பெண்ணுக்கு கசையடி

saudi-women.jpg

துபாய் : சவுதி அரேபியாவில், பெண்களுக்குப் புதிய உரிமைகள் அறிவிக்கப்பட்ட இரு தினங்களில், கார் ஓட்டியதற்காக முதன் முறையாக, ஒரு பெண்ணுக்கு 10 கசையடிகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில், பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மன்னர் அப்துல்லா, 2015 நகராட்சித் தேர்தல்களில், பெண்கள் வாக்களிக்கவும், வேட்பாளராக நிற்கவும் அனுமதியளித்தார்.

எனினும் கார் ஓட்டுவதற்கு, இன்னும் பெண்களுக்கு அந்நாட்டில் அனுமதி வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து, சமீபத்தில் பல பெண்கள் கார் ஓட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில், ஷைமா ஜஸ்தானியா என்ற பெண், ஜெட்டா நகர் வீதிகளில் கார் ஓட்டும் போது கைது செய்யப்பட்டவர். அவருக்கு, ஜெட்டா நகர கோர்ட், 10 கசையடிகள் தண்டனை விதித்து, நேற்று அறிவித்தது. மற்ற இரு பெண்கள், இந்தாண்டின் இறுதியில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்விஷயத்தில் முதன்முறையாக வழங்கப்பட்ட இத்தண்டனை, சவுதியில் கார் ஓட்டும் புரட்சியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக, ஷைமா தெரிவித்துள்ளார்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

”யோகா” பெயரில் செக்ஸ் வேதம்

”யோகா” பெயரில் ஆபாச கூத்தடித்த 6 வெளிநாட்டவர்கள் மாயம்!

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலயத்தில் 6 வெளிநாட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, குடியுரிமை அதிகாரிகளுக்கு அவர்களைப் பற்றிய தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

சில வெளிநாட்டவர்கள் தேனாம்பேட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, யோகா பயிற்சி நிலையம் என்ற பெயரில் ஆபாச செயல்களில் ஈடுபட்டு வருவதாக இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த வீட்டை சோதனையிட்டனர்.அபோது அங்கு ஆபாச புத்தகம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த யோகா பயிற்சி நிலையத்திற்கு யார்யாரெல்லாம் வந்து சென்றார்கள் என்ற விபரத்தினையும் சேகரித்துள்ளனர்.அதில் சில நடிகைகளும் வந்து சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் விசாரணை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

ஆறு வெளிநாட்டவர்களும் தலைமறைவாகிவிட்ட நிலையில் அந்த யோகா பயிற்சி நிலையம் மூடப்பட்டு காவல்துறையினரால் “சீல்” வைக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கு வந்தவர்களையும் அவர்கள் ஆபாச செயல்களில் ஈடுபடுத்தியுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இரு ரோமானியர்கள் உட்பட ஆறு வெளிநாட்டவர்களும் இந்தியாவை விட்டு வெளியேற முயன்றால் அவர்களை தடுத்து நிறுத்தும்படி குடியுரிமை அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீதுள்ள குற்றங்களுக்கு கண்ணால் கண்ட சாட்சியோ, பாதிக்கப்பட்டவர்களோ யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

soruce:inneram

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பீஜே அவர்களுக்கு ஒரு கேள்வி:குர்‍ஆன் இறை வனால் அருளப்பட்டு முழுவதுமாக பாதுகாக்கப்ப ட்டுள்ளது என்று கருதமுடியாது? – ஏன்?

பீஜே அவர்களுக்கு ஒரு கேள்வி:

பீஜே அவர்கள் தங்கள் குர்‍ஆன் தமிழாக்கத்தில் "4. முன்னர் அருளப்பட்டது என்ற தலைப்பின் கீழ்" பக்கம் 1086ல் குர்‍ஆனைப் பற்றி கீழ்கண்ட வரிகளை எழுதியுள்ளார்: "திருக்குர்‍ஆனைத் தவிர, மாறுதலுக்கு உள்ளாகாத எந்த ஒரு வேதமும் உலகில் கிடையாது என்பதையும் நம்பவேண்டும்".

இந்த தற்போதையை எங்கள் கட்டுரை பீஜே அவர்களின் வரிகளை அலசுகிறது அல்லது குர்‍ஆன் முழுமையானது அல்ல என்பதை இஸ்லாமிய ஆதாரங்களைக் கொண்டு வெளிப்படுத்துகிறது. மேற்கண்ட வரிகளை படித்தவர்கள், இந்த கட்டுரையையும் முழுவதுமாக படிக்க வேண்டுகிறோம்.

குர்‍ஆன் இறைவனால் அருளப்பட்டு முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கருதமுடியாது? – ஏன்?

Why the Quran cannot be considered completely preserved and inspired

ஆசிரியர்: கொர்நெலியு

அன்பான இஸ்லாமிய நண்பனுக்கு,

ந‌ம்முடைய‌ ச‌ம‌கால‌ இஸ்லாமிய நூல்கள்/பத்திரிக்கைகள் இரண்டு விவரங்களைக் குறித்து பெருமைப்பட்டுக் கொள்கின்றன‌, அவைகள்:

1. அன்று முஹம்மது ஓதிய அதே குர்‍ஆன் தான் இன்று அவர்‍களிடம் எழுத்துக்கு எழுத்து மாற்றமடையாமல் இருக்கின்றது.

2. குர்‍ஆன் இறைவனால் அருளப்பட்டுள்ளது, தெய்வீகமானது, அது இறைவேதமாகும்.

மேலே கூறிய வாதங்களை நாம் கீழ்கண்ட இஸ்லாமியர்களின் மேற்கோள்கள் மூலமாக அறியலாம்

"பரிசுத்த குர்‍ஆன் என்பது ஒரு வாழும் அற்புதமாகும், இதனை அல்லாஹ் தம்முடைய நபிக்கு கொடுத்தார். பரிசுத்த ஆவியின் (காபிரியேல் தூதன்) மூலமாக இந்த அல்லாஹ்வின் புத்தகம் முஹம்மது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டது. இன்று வரை கணக்கிட்டால் 1400 ஆண்டுகள் கடந்துவிட்டது, இந்த குர்‍ஆனிலிருந்து ஒரு எழுத்தையும் ஒருவராலும் மாற்றமுடியவில்லை அல்லது குர்‍ஆன் கூறுவது போல இதற்கு இணையாக வேறு ஒரு வேதமும் மனிதர்களால் உருவாக்கமுடியவில்லை (ஸூரா ஹிஜ்ர் 15:9) [1]

"இறைவனின் நேரடி வார்த்தைகள் தான் குர்‍ஆன் ஆகும். காபிரியேல் தூதன் மூலமாக அல்லாஹ் முஹம்மது நபிக்கு இந்த குர்‍ஆனை வெளிப்படுத்தினார். முஹம்மது குர்‍ஆனை மனனம் செய்துக்கொண்டு, பிறகு அதனை தன் தோழர்களுக்கு ஒப்புவிப்பார். அதனை அவர்கள் மனனம் செய்து, அதனை எழுதி வைப்பார்கள், பிறகு அதனை முஹம்மதுவிற்கு வாசித்துக்காட்டி தாங்கள் எழுதியதில் ஏதாவது தவறுகள் இருந்தால் அதனை சரிப் படுத்திக்கொள்வார்கள். இது மாத்திரமல்ல, முஹம்மது நபி அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் காபிரியேல் தூதன் மூலமாக குர்‍ஆனை சரிப்பார்த்துக்கொள்வார்கள். தம்முடைய கடைசி ஆண்டில் குர்‍ஆனை இரண்டு முறை காபிரியேல் தூதன் மூலமாக வாசித்து சரி பார்த்துக்கொண்டார்கள். குர்‍ஆன் வெளிப்படுத்தப்பட்ட அந்த நாளிலிருந்து இன்று வரை கணக்கிலடங்கா இஸ்லாமியர்கள் குர்‍ஆனை மனனம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள், எழுத்துக்கு எழுத்து அவர்கள் மனனம் செய்துள்ளார்கள். இஸ்லாமியர்களில் அனேகர் முழு குர்‍ஆனையும் தங்களுடைய 10வது வயதிலேயே மனனம் செய்துள்ளார்கள். நூற்றாண்டுகளாக குர்‍ஆனின் ஒரு எழுத்தும் மாற்றமடையாமல் அப்படியே இருக்கிறது. [2]

இஸ்லாமியர்களின் இந்த வாதங்கள் குர்‍ஆனிலிருந்தே வந்துள்ளது:

1. குர்‍ஆன் பாதுக்காக்கப்பட்டுள்ளது என்ற வாதம் குர்‍ஆன் 15:9ம் வசனத்தில் காணலாம்:

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். (குர்‍ஆன் 15:9 – பீஜே தமிழாக்கம்)

2. குர்‍ஆனில் உள்ள ஒரு அத்தியாயம் போல ஒரு அத்தியாயத்தை ஒருவராலும் உருவாக்க முடியாது என்று பெருமைப்படுகிறார்கள். ஒரு தற்கால இஸ்லாமியரின் கூற்றுப்படி, குர்‍ஆன் தெய்வீகமானது என்ற சான்று குர்‍ஆனே ஆகும்.

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்! (குர்‍ஆன் 2:23 – பீஜே தமிழாக்கம்)

முழு குர்‍ஆனையும் பின்பற்றவேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் முக்கியமான கடமையாகும். எந்த ஒரு முஸ்லிமாவது குர்‍ஆனின் ஒரு "வசனத்தை" அல்லது "ஆயத்"ஐ மறுத்தால்,குர்‍ஆனின் படி அவர் தம்மீது ஒரு பயங்கரமான சாபத்தை வருவித்துக் கொள்வார்.

(முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை அவன் உமக்கு அருளினான். இது தமக்கு முன் சென்றவற்றை உண்மைப்படுத்துகிறது. இதற்கு முன் மனிதர்களுக்கு நேர் வழிக்காட்ட தவ்ராத்தையும், இஞ்சீலையும் அவன் அருளினான். (பொய்யை விட்டு உண்மையப்) பிரித்துக் காட்டும் வழி முறையையும் அவன் அருளினான். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன். (குர்‍ஆன் 3:3,4 – பீஜே தமிழாக்கம்)

மேற்கண்ட வசனங்களில் "வெளிப்படுத்தினான்/அருளினான்" என்பது "பையதி (بِـَٔايَـٰتِ)" என்ற அரபி வார்த்தையின் தமிழாக்கமாகும், இதனை நாம் "அல்லாஹ்வின் வசனங்களில்" என்று புரிந்துக்கொள்ள முடியும்.

குர்‍ஆனின் படி, தற்கால இஸ்லாமியர்களுக்கு தண்டனை காத்திருக்கிறது, இதனை கீழ்கண்ட மேற்கோளில் காணலாம். ஏனென்றால், தற்கால இஸ்லாமியர்கள் குர்‍ஆனின் ஒரு சில வசனங்களை புறக்கணிக்க வில்லை, அவர்கள் இரண்டு முழு குர்‍ஆன் அத்தியாயங்களை (ஸூராக்களை) புறக்கணித்துள்ளார்கள்.

தற்காலத்தில் நம்மிடமுள்ள குர்‍ஆனை விட வித்தியாசமான ஒரு குர்‍ஆனை (தொகுப்பை) உபை இப்னு கஅப் தொகுத்து இருந்தார் என்ற விவரம் எல்லா இஸ்லாமிய அறிஞர்கள் அறிந்த விஷயமாகும். தற்கால குர்‍ஆன் "ஸைத் இப்னு ஸாபித்" என்வரின் தொகுப்பிலிருந்து வந்ததாகும். ஜையத் மற்றும் உபை தொகுத்த குர்‍ஆன்களுக்கு இடையே இருக்கும் அனேக வித்தியாசங்களில் மிகவும் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், உபையின் குர்‍ஆனில் இரண்டு அதிகபடியான அத்தியாயங்கள் (ஸூராக்கள்) இருந்தன என்பதாகும், அவைகள் அல்-ஹ‌ப்த் மற்றும் அல்-கஹ்ல் என்ற அத்தியாயங்களாகும். (இதைப் பற்றி மேலும் அறிய "அஸ் சுயுதி, அல் இத்கான் ஃபீ உலூம் அல்-குர்‍ஆன்" என்ற புத்தகத்தை படிக்கவும் அல்லது கிள்கிறைஸ் அவர்களின் புத்தகத்தை படிக்கவும் "ஜம் அல்-குர்‍ஆன், அத்தியாயம் 3 , பக்கம் 72-78". தற்கால குர்‍ஆனில் விடுபட்ட இரண்டு ஸூராக்களை இந்த கட்டுரையில் படிக்கவும்: ஸூரத் அல்-ஹப்த் மற்றும் அல்-க்ஹல்)

இந்த விவரத்தை உமர் அங்கீகரித்துள்ளார் இதனை ஹதீஸில் நாம் காணலாம். சஹி புகாரி ஹதீஸ் பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5005ல், குர்‍ஆனை நன்கு ஓதத்தெரிந்தவர்களில் உபை சிறந்தவர் என்று முஹம்மதுவினால் புகழப்பட்டுள்ளார். உபையின் குர்‍ஆன் தொகுப்பில் இருந்த இரண்டு முழு அத்தியாயங்கள், ஸைத்வுடைய குர்‍ஆன் தொகுப்பில் இல்லை. இந்த வித்தியாசத்தை உமர் கண்டபிறகு அதனை சரி செய்ய அவர் கீழ்கண்ட விளக்கத்தை கூறியுள்ளார். இதனை கீழ்கண்ட புகாரி ஹதீஸில் நாம் காண்போம்.

பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5005

உமர்(ரலி) கூறினார்

எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார். நாங்கள் உபை(ரலி) அவர்களின் சொற்களில் சிலவற்றைவிட்டுவிடுவோம். ஏனெனில் அவர்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன்’ என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, ‘எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அது போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம்’ என்று கூறியுள்ளான்.

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். Source

உபை இப்னு கஅப் என்பவரின் குர்‍ஆனில் இருந்த இரண்டு அத்தியாயங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு உமர் கூறிய பதில் அல்லது காரணங்கள் ஏற்கத்தக்கது அல்ல. இந்த இரண்டு அத்தியாயங்கள் இரத்து செய்யப்பட்டது என்று உமர் கூறிய காரணம் அனேக பிரச்சனைகளை உருவாக்குகிறது. அவைகளை இப்போது காண்போம்:

1. அந்த இரண்டு அத்தியாயங்கள் இரத்து செய்யப்பட்டுவிட்டது என்று உமர் கூறியதிலிருந்து , அந்த இரண்டு ஸூராக்கள் அதற்கு முன் குர்‍ஆனின் ஒரு பகுதியாக இருந்தது என்று அவர் அங்கீகரிக்கிறார்.

2. இந்த இரண்டு ஸூராக்கள் "தொலைந்துவிட்டன‌" அல்லது "மறக்கப்பட்டுவிட்டன" என்று யாரும் கூறமுடியாது . ஏனென்றால், உபையும், உமரும் மற்றும் இதர நபித்தோழர்களும் அவைகளை அறிந்து இருந்தனர், இவர்கள் மறக்கவில்லை. ஸைத் என்பவரின் குர்‍ஆன் தொகுப்பை அதிகார பூர்வமான ஒரு பிரதியாக உஸ்மான் பிரகடனம் படுத்தியத‌ற்கு முன்பு மற்றும் இதற்கு வித்தியாசமானதாக இருக்கும் இரத குர்‍ஆன்களை எரித்துவிடுங்கள் என்று உஸ்மான் கட்டளை பிறப்பிப்பதற்கு முன்பு வரை, உபை என்பவரின் குர்‍ஆன் சிரியா நாட்டில் அதிகாரபூர்வமாக கற்றுக்கொடுக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. இன்றும் அனேக‌‌ர் உபையின் அந்த‌ இர‌ண்டு குர்‍ஆன் அத்தியாய‌ங்க‌ளை அறிந்துவைத்துள்ள‌ன‌ர். இந்த‌ இர‌ண்டு அத்தியாய‌ங்க‌ள் தொலைந்துப் போக‌வில்லை, அவைக‌ள் இஸ்லாமிய‌ த‌லைவ‌ர்க‌ளால் "ஒதுக்கித் த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ள‌ன‌". குர்‍ஆன் 3:3-4 என்ற‌ வ‌ச‌ன‌ங்க‌ளின் ப‌டி, இந்த‌ இஸ்லாமிய‌ த‌லைவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் மீதும், அவ‌ர்க‌ளின் சொற்க‌ளை கேட்டு ந‌ட‌க்கும் இத‌ர‌ இஸ்லாமிய‌ர்க‌ள் மீதும் மிக‌ப்பெரிய‌ த‌ண்ட‌னையை வ‌ருவித்துக்கொண்டு உள்ளார்க‌ள்.

3. அந்த இரண்டு குர்‍ஆன் அத்தியாயங்கள் அல்லாஹ்வினால் இரத்து செய்யப்படவில்லை , அவைகள் ஸைத் என்பவரால் இரத்து செய்யப்பட்டுள்ளது மற்றும் இவரின் குர்‍ஆன் தொகுப்பை பின்பற்ற விரும்பியவர்களால் (உஸ்மான், உமர் போன்றவர்களால்) இரத்து செய்யப்பட்டுள்ளது.

4.இரத்து செய்யப்படும் அல்லது மறக்கப்படும் குர்‍ஆன் வசனங்களுக்கு இணையாக அல்லது அவைகளை விட சிறப்பான வேறு குர்‍ஆன் வெளிப்பாடுகளை அல்லாஹ் இறக்குவார் என்று குர்‍ஆன் உறுதியளிக்கிறது (குர்‍ஆன் 2:106). முஹம்மதுவிற்கு பிறகு இரத்து எப்படி செய்யமுடியும்? அவைகளுக்கு பதிலாக அல்லாஹ் எப்படி முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு வசனங்களை கொண்டுவரமுடியும்?

5. உபையின் குர்‍ஆனில் காணப்பட்ட அதிகபடியான ஸூராக்கள் அவருடைய தொகுப்பில் மட்டுமே காணப்பட்டு இருந்தாலும் அவைகளை ஸைத் மற்றும் அவருடைய கூட்டணி ஏற்றுக்கொண்டு இருக்கவேண்டும். ஏனென்றால் இதே போன்று "குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ" என்பவரின் பிரதியில் மட்டுமே இருந்த குர்‍ஆன் பகுதியை ஸைத் மற்றும் அவருடைய கூட்டணி ஏற்றுக்கொண்டு இருக்கிறது (Bukhari, Vol. VI, #509, #510). உபையின் சிறப்பு (நம்பகத்தன்மை) இந்த "குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ" என்பவரை விட உயர்ந்ததாகும்.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், ‘யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது போல் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!’ என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி ‘தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்’ என்று தெரிவித்தார்கள்.

எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸ¤பைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, ‘நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று’ என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.

நான் திருக்குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதியெடுத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, ‘அல்அஹ்ஸாப்’ அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்) இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ(ரலி) அவர்களிடம் தான் பெற்றேன். அந்த இறைவசனம் இதுதான்: "அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் மரணமடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்". (திருக்குர்ஆன் 33:23)

எந்த ஒரு இஸ்லாமியராவது, "உபையின் குர்‍ஆனில் காணப்பட்ட இந்த அதிகபடியான அத்தியாயங்கள், குர்‍ஆனுடையது இல்லை" என்று சொல்வாரானால், குர்‍ஆன் இறைவனிடமிருந்து வந்தது என்ற வாதம் பொய்யானதாகிவிடும். ஏனென்றால், குர்‍ஆனில் இருக்கும் அத்தியாயங்களைப் போலவே, இரண்டு குர்‍ஆன் அத்தியாயங்கள் இருக்கின்றன ஆனால் அவைகள் இன்றைய குர்‍ஆனில் காணப்படுவதில்லை என்று ஆகிவிடும்.

குர்‍ஆனை ஓதுபவர்களில் சிறப்பானவரும், அல்லாஹ்வே முஹம்மதுவிடம் குர்‍ஆனை "உபையிடம்" ஓதிக்காட்டு என்றுச் சொல்லும் அளவிற்கு சிறப்பு மிகுந்தவர் "உபை இப்னு கஅப்" என்பவராவார். குர்‍ஆனில் இருக்கும் இதர ஸூராக்களைப் போலவே இந்த இரண்டு ஸூராக்கள் இருப்பதினால், இந்த இரண்டு ஸூராக்கள் "உபை இப்னு கஅப் என்ற சிறப்புமிக்கவரை ஏமாற்றி முட்டாளாக்கியுள்ளது".

சஹீ முஸ்லிம் புத்தகம் 31, எண் 6031 அனஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம், ‘உங்களுக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்’ என்று கூறினார்கள். உபை(ரலி), ‘அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆம்), அல்லாஹ் உங்கள் பெயரைக் குறிப்பிட்டான்’ என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உபை(ரலி), (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள்.

உபை இப்னு கஅப் என்பவரின் குர்‍ஆனில் காணப்பட்ட அந்த இரண்டு ஸூராக்கள் குர்‍ஆனின் இதர ஸூராக்கள் போல் காணப்படவில்லை என்று உபைக்கு சவால் விடும் அளவிற்கு அவரை விட சிறப்பு வாய்ந்த ஒரு இஸ்லாமிய அறிஞரை இஸ்லாமிய சமுதாயம் உருவாக்க முடியுமா?

சஹீ புகாரி தொகுப்பு 6, ஹதீஸ் எண் 527ல் உமர் "குர்‍ஆனை ஓதுபவர்களில் சிறந்தவர்" என்று உபையை குறித்துச் சொல்லும் வரிகளை நாம் ஞாபகப்படுத்திக் கொள்வோம். கில்கிறைஸ்ட் தம்முடைய "ஜம் அல் குர்‍ஆன்" என்ற புத்தகத்தில், 67 லிருந்து 72 வரையிலான பக்கங்களில் இந்த விவரம் குறித்து இன்னும் அதிகபடியான விவரங்களைத் தருகிறார். மேலும் கீழ்கண்ட மேற்கோளை அவர் தருகிறார், இந்த மேற்கோளில் முஹம்மது "உபையை" குர்‍ஆன் ஓதுபவர்களில் சிறந்தவர் என்று கூறுகிறார்.

அஃபன் இப்னு முஸ்லிம் நமக்கு அறிவித்ததாவது, … அனஸ் இப்னு மாலிக் என்பவரின் அதிகார பூர்வமான ஹதீஸ் மற்றும் அவருக்கு இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாவதாக) மூலமாக கிடைத்த விவரமாவது, "இறைத்தூதர் கூறினார்: என் மக்களில் மிகவும் சிறப்பாக குர்‍ஆனை ஓதுபவர் உபை இப்னு கஅப் என்பவராவார்" (இப்னு ஸைத், கிதாப் அல் தபாகத் அல் கபீர், தொகுப்பு 2, பக்கம் 441)

முஹம்மதுவும் உமரும் "குர்‍ஆனை ஓதுபவர்களில் சிறப்பு மிகுந்தவர் என்று புகழாரம் சூட்டிய உபையை விட எங்களுக்கு நன்றாக குர்‍ஆனை ஓதத்தெரியும்" என்று யாராவது வாதம் புரிந்தால், அவர்கள் முஹம்மதுவையும், உமரையும் பொய்யர்கள் என்று கூறுகிறார்கள் என்று பொருள்.

இந்த இரண்டு ஸூராக்கள் குர்‍ஆனின் ஒரு பாகமாக இருந்ததில்லை என்றுச் சொல்வதற்கு உமருக்கும் தைரியமில்லை. அப்படி அவர் கூறுவாரானால் முஹம்மது ஒரு பொய்யர் என்று உமர் கூறுவதாக ஆகிவிடும், மட்டுமல்ல குர்‍ஆனின் தெய்வீகத்தன்மைக்கும் பங்கம் விளைந்துவிடும், கடைசியாக, குர்‍ஆன் 2:23ம் வசனத்தில் கொடுக்கப்பட்ட சவாலும் சந்தித்துவிட்டது போலாகிவிடும். எனவே, உமர் இவைகள் குர்‍ஆனி பாகமில்லை என்று கூறவில்லை.

இப்போது நாம் எடுக்கவேண்டிய முடிவுகள் தெளிவாக இருக்கின்றன.

முதலாவதாக, ஸைத் என்பவரின் குர்‍ஆன் முழுமையற்றது என்று ஒதுக்கிவிட்டு, உபையின் குர்‍ஆனில் காணப்பட்ட அதிகபடியான ஸூராக்களை மறுபடியும் இன்றைய‌ குர்‍ஆனில் சேர்க்கவேண்டும். இப்படி செய்தால், இந்நாள் வரை உபையின் குர்‍ஆனை புறக்கணித்துவிட்டு மரித்த இஸ்லாமியர்கள் அனைவருக்கும் அல்லாஹ்விடமிருந்து வேதனையான தண்டணை காத்திருக்கிறது என்று அங்கீகரித்ததுபோல் ஆகிவிடும். இந்நாள் வரை குர்‍ஆன் முழுமையானது என்றுச் சொல்லி உங்களுக்கு பிரச்சாரம் செய்த இஸ்லாமிய அறிஞர்களுக்கு குர்‍ஆன் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்று அர்த்தமாகிவிடும், அல்லது அவர்கள் உங்களிடம் பொய் கூறியுள்ளார்கள் மற்றும் அவர்கள் உங்களையும் மிகப்பெரிய ஆபத்தில் தள்ளியுள்ளார்கள் என்று அர்த்தமாகிவிடும். இந்த இஸ்லாமிய அறிஞர்கள் அறியாமையில் இப்படி செய்து இருக்கலாம் அல்லது மிகப்பெரிய பொய்யர்களாக இருந்திருக்கலாம். இதனால் அவர்கள் உங்களுக்கு அறிவுரைச் சொல்ல (இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய) தகுதியற்றவர்களாகி விடுவார்கள்.

இரண்டாவதாக, இப்போது செய்துக்கொண்டு இருப்பதுபோலவே, ஸைத்வுடைய குர்‍ஆனை நம்பிக்கொண்டு இருப்பதாகும், ஆனால், இந்த குர்‍ஆனும் இறைவனுடைய வேதமல்ல அதற்கு இறைத்தன்மையல்ல‌ என்று நம்பவேண்டும். ஏனென்றால், உபையுடைய இரண்டு குர்‍ஆன் அத்தியாயங்கள் "குர்‍ஆனைப் போலவே" இருப்பதினால், குர்‍ஆனை ஓதுபவர்களில் சிறந்தவராகிய உபையை முட்டாளாக்க போதுமானதாக அவ்விரு அத்தியாயங்கள் இருந்துள்ளது. குர்‍ஆன் இறைவனிடமிருந்து வரவில்லை என்று அங்கீகரித்தால், இனி உங்கள் வாழ்க்கையை ஆளுவதற்கு குர்‍ஆனுக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் போகிறது.

மூன்றாவதாக, ஸைத் உடைய குர்‍ஆனை நம்பிக்கொண்டு இருக்கவேண்டும், மற்றும் உபை உடைய ஸூராக்கள் குர்ஆனின் ஒரு பாகமாக இருக்கவில்லை என்று நம்பவேண்டும். இப்படி நம்புவதினால், நீங்கள் மற்றும் உங்களைப்போல நம்பும் இன்றைய இஸ்லாமியர்களும் "உபையை விட சிறப்பாக குர்‍ஆனை ஓதுபவர்கள்" என்று சொல்வதாக ஆகிவிடும். இதன் பலனாக, நீங்கள் உங்கள் முஹம்மதுவையும், உமரையும் பொய்யர்கள் என்ற முத்திரையை குத்திவிடுகின்றீர்கள். இப்படி "முஹம்மது பொய்யர்" என்ற முத்திரையை குத்துவதினால், அவர் எல்லா இஸ்லாமியர்களுக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்ற நிலையிலிருந்து அவரை தள்ளிவிடுகின்றீர்கள். ஏனென்றால், ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்ட் அவருடைய வார்த்தைகள் பொய்யானவை என்று அங்கீகரிக்கிறீர்கள் .

குர்‍ஆன் தொகுக்கப்பட்ட விவரங்களை நீங்கள் ஹதீஸ்களிலும், இதர இஸ்லாமிய நூல்களிலும் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். இவைகளை நீங்கள் படிக்கும் போது ஆரம்பத்திலிருந்தே குர்‍ஆன் பாதுகாக்கப்படவில்லை என்பதை அறிந்துக்கொள்வீர்கள். குர்‍ஆனின் சில பகுதிகள் நீக்கப்பட்டும், இன்னும் சில பகுதிகள் தொலைந்தும் போய் இருக்கின்றன என்பதை அறிந்துக்கொள்வீர்கள். சிந்துத்து உணருங்கள், அதாவது முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு தொலைந்துப்போன குர்‍ஆன் பகுதிகளுக்கு பதிலாக வேறு குர்‍ஆன் வசனங்கள் இறக்கப்படவில்லை. இதன் படி பார்த்தால், அல்லாஹ் ஒரு பொய்யர் என்பது விளங்கும் அதாவது, குர்‍ஆன் 2:106ன் படி மறந்துப்போன குர்‍ஆன் வசனங்களுக்கு பதிலாக அவைகளை விட சிறந்ததையோ அல்லது சமமானதையோ கொடுப்போம் என்ற வாக்குறுதியை அல்லாஹ் நிறைவேற்றவில்லை. அல்லாஹ் ஒரு "கைரு அல் ம‌கீரீன்" (வ‌ஞ்சிப்ப‌தில் சிற‌ந்த‌வ‌ர்) என்ப‌தை அறிந்துக்கொள்ளுங்கள் (குர்‍ஆன் 3:54 மற்றும் 8:30). அல்லாஹ்வின் வ‌ஞ்ச‌னையிலிருந்து (மக்ரா) நீங்க‌ள் த‌ப்பிக்க‌வே முடியாது (குர்‍ஆன் 7:99). தோராவின் ம‌ற்றும் ந‌ற்செய்தியின் இறைவ‌னிட‌த்திற்கும், பொய் சொல்லாத‌ இறைவ‌னிட‌த்திற்கும் திரும்புங்க‌ள்.

அன்பான நண்பர்களே, நாம் அனைவரும் தீயவர்கள் தான், நாம் இறைவன் தரும் தண்டனைக்கு தகுதியானவர்கள் தான், ஆனால், இயேசுவின் மூலமாக உங்களுக்கு மன்னிப்பு உண்டு. இன்ஜிலில் இயேசு கூறுகிறார் " வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்" (மத்தேயு 11:28,29). மறுபடியும் அவர் இவ்விதமாக கூறுகிறார் "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை " (யோவான் 6:37) .இந்த மிகப்பெரிய இரட்சிப்பை புறக்கணிக்கவேண்டாம்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மோடிக்கு தொப்பி போடும் முடற்சி தோல்வி:இம ாம்கள் ஏமாற்றம்

மும்பை : குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டில் அமைதி, ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கதிற்காக மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். விழா மேடையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முஸ்லீம்களும் குழுமியிருந்தனர். அவ்விழாவில் ஒரு பள்ளிவாசலின் இமாம் மோடிக்கு தலையில் முஸ்லீம் மதகுருக்கள் அணியும் தொப்பியை அணிவிக்க முயன்ற போது மோடி அதை மறுத்தது சர்ச்சைக்குள்ளானது.

இது குறித்து சிவசேனாவின் பத்திரிகை சாம்னா தன் தலையங்கத்தில் முஸ்லீம்களை திருப்திபடுத்துவதற்காக காங்கிரஸ் தலைவர்கள் தொப்பி அணிவதாகவும் மோடியோ அதை மறுத்ததன் மூலம் தொப்பி கலாச்சாரத்தில் விழவில்லை என்றும் பாராட்டி உள்ளது. மேலும் இப்தார் விருந்துகளில் தொப்பி அணிந்து கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்வதையும் கண்டித்துள்ளது.

அத்தலையங்கத்தில் மேலும் மோடி இதே போக்கை கடைபிடித்தால் டெல்லியை நோக்கி செல்லும் மோடியின் குதிரை விரைவில் இலக்கை அடையும் என்றும் எழுதியுள்ளது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் தான் மதசார்பற்றவராக மோடி நடத்தும் நாடகமே உண்ணாவிரதம் என்றும் இந்துக்களின் வாக்கு வங்கி மூலம் ஆட்சிக்கு வந்த மோடி மதசார்பின்மை விஷத்தை இந்துக்களுக்கு கொடுக்க கூடாது என்றும் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மஹாராஷ்டிராவுக்கு அடுத்து குஜராத் தான் இந்துத்துவாவின் சோதனை சாலை என்றும் கூறப்பட்டுள்ளது.

sourcr:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பீஜே அவர்களுக்கு ஒரு கேள்வி:குர்‍ஆன் இறை வனால் அருளப்பட்டு முழுவதுமாக பாதுகாக்கப்ப ட்டுள்ளது என்று கருதமுடியாது? – ஏன்?

பீஜே அவர்களுக்கு ஒரு கேள்வி:

பீஜே அவர்கள் தங்கள் குர்‍ஆன் தமிழாக்கத்தில் "4. முன்னர் அருளப்பட்டது என்ற தலைப்பின் கீழ்" பக்கம் 1086ல் குர்‍ஆனைப் பற்றி கீழ்கண்ட வரிகளை எழுதியுள்ளார்:"திருக்குர்‍ஆனைத் தவிர, மாறுதலுக்கு உள்ளாகாத எந்த ஒரு வேதமும் உலகில் கிடையாது என்பதையும் நம்பவேண்டும்".

சிறுமி மீது பாலியல் வல்லுறவு:மாட்டினார் பிக்கு !

லண்டனில் உள்ள தேம்ஸ் விகாரையைச் சேர்ந்த பகலாகம சோமரட்ன தேரர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 65 வயதாகும் தேரர் 1977ம் ஆண்டு மற்றும் 1978ம் ஆண்டுகளில் சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தினார் என்று லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளதோடு போதிய ஆதாரங்களை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. லண்டன் மாநகரிலேயே மிகப்பெரிய பெளத்த விகாரையாக திகழும் தேம்ஸ் விகாரை லண்டனில் பல ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இங்கே இருக்கும் பிரதம தேரர் மீதே தற்போது இக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து எந்த ஒரு செய்தியையும் தாம் வெளியிட விரும்பவில்லை என விகாராதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

1977ம் ஆண்டில் சில சிறுமிகளையும் பின்னர் 1978ம் ஆண்டில் மேலும் சில சிறுமிகளிடம் முறைகேடாகவும் இத் தேரர் நடந்தார் எனப் பொலிசார் குற்றங்களைப் பதிவுசெய்துள்ளனர். டுவில்டன் வீதி , குரோய்டன் என்னும் முகவரியில் வசித்துவரும் இத் தேரர் தமது குற்றங்களை ஒப்புக்கொண்டார இல்லையா என்று இதுவரை அறிவிக்கவில்லை. இருப்பினும் பொலிசாரிடம் போதிய ஆவணங்கள் இருப்பதாக தற்போது அறியப்படுகிறது. இச் செய்தி குறித்து சிங்கள ஊடகங்கள் எதுவும் வாய் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் சர்வதேச ஆங்கில ஊடகமான பி.பி.சி இதுகுறித்து செய்திவெளியிட்டுள்ளது.

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ஆபாச திரைப்பட போஸ்டர்கள்

2.jpg

ஆபாச திரைப்பட போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்க வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமை நலச்சங்க தலைவர் பாஸ்கரன் நாகை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நாகை நகரத்தின் முக்கிய வீதிகள், பள்ளி சுவர்களிலும், பள்ளிகள் அருகிலும், கோவில்களின் சுற்றுசுவர்களிலும் ஆபாச திரைப்படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. கோவில் சுவர்களிலும், பள்ளிகளின் எதிரிலும் இவ்வாறு ஆபாச திரைப்படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இளைஞர்களிடம் பாலுணர்வை தூண்டும் வகையில் மிகவும் மோசமான வகையில் உள்ளன. இவ்வாறான போஸ்டர்களை ஒட்ட கோர்ட்டு தடை விதித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் வியாபார நோக்கத்தோடு பள்ளிகளின் எதிரிலும், கோவில்களின் சுற்றுச்சுவர்களிலும் ஆபாச திரைப்பட போஸ்டர்கள் ஒட்டப்படுவது வேதனைக்குரியது.

கண்ட இடங்களிலும் ஆபாச திரைப்படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது சாலையில் செல்வோரின் கவனத்தையும் சிதறடிக்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

இத்தகைய போஸ்டர்களால் சமூகம் சீரழியும் சூழ்நிலை உள்ளது. ஆபாச திரைப்பட போஸ்டர்களால் ஒட்டு மொத்த நகரத்தின் அழகே கெடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுப்புறம், தமிழ் கலாசாரம் சீரடையவும், பண்பாடு காக்கப்படவும் ஆபாச திரைப்பட போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

source:nakkheeran

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சமூக வலைதளங்களால் இளைஞர்களுக்கு ஆபத்து

large_314803.jpg

தொலைத்தொடர்புத் துறையில், இன்று பெரும் பங்கு வகிக்கும், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும், பதிவுகளை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பதிவுகளை வெளியிடுவதில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க நேரும் என்று, வலைதள வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கல்வி, வணிகம், திருமணம், வேலைவாய்ப்பு போன்ற எந்த ஒரு விஷயங்களுக்கும், தேவையான தகவல்களைத் தருவதில், இணையதளங்கள் முன்னணியில் உள்ளன. அதனால், நவீன உலகில் உடனுக்குடன் தகவல்களை பெற, இணையதளத்தை மக்கள் அதிகமாக நாடிச் செல்கின்றனர். தொலை தூரக் கல்வியிலிருந்து மாறி, இணையதளத்தில், "ஆன்-லைன்’ கல்வி கற்கும் நிலையும் வந்துவிட்டது.இத்தகைய நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், தற்போது இளம் தலைமுறையினரை சுண்டியிழுக்க, "சோஷியல் நெட்வொர்க்ஸ்’ என்கிற சமூக வலைதளங்கள் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு வலைதளமும், போட்டி போட்டு தொழில்நுட்ப வசதிகளைத் தருகின்றன.

கடந்த ஐந்தாண்டுகளாக, இணையத்தில் சமூக வலைதளங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. பிரபலமான "பேஸ்புக், ஆர்குட்’ போன்ற நான்காயிரம் சமூக வலைதளங்கள், இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இதில், செக்ஸ் மற்றும் ஆபாச தகவல்களுக்காக மட்டும் 3,000 வலைதளங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் துவங்கி, ஆபாச தகவல்கள் படிப்படியாக, பல்வேறு இணையதளங்களின் வழியே நீண்டுக் கொண்டு செல்கின்றன. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது, ஒரு புறம் நன்மைக்காக பயன்பட்டாலும், இன்றைய தலைமுறையினரை தவறான வழியில் சீரழிப்பதாகவும் மாறியுள்ளது.

இதுகுறித்து, "பேஸ்புக்’ வலைதளத்தின், சென்னை அலுவலக ஒருங்கிணைப்பாளர் வசந்த் கூறியதாவது:"பேஸ்புக்’கில் பல லட்சம் உறுப்பினர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். இது, தற்போது ஒரு குழுமம் அல்லது தனிநபர் பற்றிய தகவல்களின் தொகுப்பு இணையமாக, முதலிடத்தில் உள்ளது. மற்ற, "ஆர்குட், ஹை பைவ், ட்விட்டர்’ போன்ற நெட்வொர்க்குகளும், சமமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. பள்ளி மாணவர்களை சுண்டியிழுக்கும் ஆபாச படங்கள் இணையதளங்களில் அதிகமாக உள்ளன. இவற்றின் மீது, தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபாச தளங்களை பார்க்க, எந்த கட்டுப்பாடும் வரையறுக்கப்படாததால், பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது.இவ்வாறு வசந்த் கூறினார்.

எச்சரிக்கை… : சமூக வலைதள உறுப்பினர்கள் கவனிக்க வேண்டியவை:
* சமூக வலைதளத்தில், உங்களது சுய விவரங்கள் முழுவதையும், அனைவரும் பார்க்கும்படி வெளியிட வேண்டாம். ஏனெனில், "பேஸ் புக்’ வலைதளத்தில், "ஸ்பை’ என்ற பட்டனை "கிளிக்’ செய்தால், உங்களது சுய விவரம் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள முடியும். எனவே, எச்சரிக்கையுடன், உங்கள் பதிவுகளை வெளியிட வேண்டும்.
* தெரியாத நபருடன் வலைதள நண்பராக இணைவதைத் தவிருங்கள்.
* புகைப்படங்கள் மற்றும் காட்சிப் பதிவுகளை, பிறருடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்வதில், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
* கவர்ச்சி படங்கள், காட்சிப் பதிவுகளை உங்களது பதிவிலிருந்து நீக்கினால் நல்லது.
* கவர்ச்சியான மற்றும் தனிப்பட்ட குடும்ப மற்றும் பெண் நண்பர்களின் படங்களை வெளியிடுவதால், அதை சிலர் தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கம்ப்யூட்டர் கேள்வி பதில்

E_1315730539.jpeg

கேள்வி: டி.பி. ஐ.( ஈ.க.ஐ.) என்பதன் முழு விளக்கத்தினையும், அதன் பயன்பாட்டினையும் குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

-கே. தவமணி, கோவை.
பதில்: டிஜிட்டல் படங்கள் புள்ளிகளால் அமைக்கப்படுகின்றன. இதனை அளவு செய்திட DPI (Dots Per Inch) என்பதைப் பயன்படுத்துகிறோம். இதனை ரெசல்யூசன் (Resolution) என்றும் சொல்கிறோம். எந்த அளவிற்கு இந்த புள்ளிகளின் எண்ணிக்கை, அதாவது டி.பி.ஐ. அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு ஒரு படம் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கும். போட்டோ ஒன்றின் தன்மை சிறப்பாக இருக்க குறைந்தது அது 300 DPIல் இருக்க வேண்டும். அதற்கு மேல் செல்லச் செல்ல, அதன் சிறப்புத் தன்மையில் பெரிய வேறுபாடு இருக்காது. இணையத்தில் அல்லது கம்ப்யூட்டர் மானிட்டர் திரையில் சிறப்பாகத் தோற்றமளிக்க, ஒரு படம் 72 டி.பி.ஐ. இருந்தால் போதுமானது.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துகிறேன். இதில் டிபிராக் செய்வது குறித்த கட்டளையை எப்படிக் கொடுப்பது. விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ளது போல் இல்லையே! ஏன்? விளக்கவும்.
-தே. உதயகுமார், கோவை.
பதில்: ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கத் தேவையான டிபிராக் வசதி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் பல உயர்நிலை மாற்றங்களை அடைந்து, கூடுதல் வசதிகளைத் தருகிறது. நீங்கள் இடம் மற்றும் கட்டளை தெரியாமல் தடுமாறுவது போல பல வாசகர்கள் அனுபவித்துள்ளனர். இதன் முழுப் பயனையும் அடைய, கீழே கண்டுள்ளபடி செயல்படவும். ஸ்டார்ட் அழுத்தி, கிடைக்கும் சர்ச்பாக்ஸில், cmd என டைப் செய்திடவும். மேலாகக் கிடைக்கும் பட்டியலில், cmd ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு Run as Administrator என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கட்டளை விண்டொ திறக்கப்படும். இங்கு defrag என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது டிபிராக் கட்டளையுடன் பயன்படுத்தக் கூடிய சில ஸ்விட்ச்களுடன் விண்டோ கிடைக்கும். இங்கு defrag கட்டளையை டைப் செய்து, உடன்/டைப் செய்து பின்னர், எந்த செயல்பாடு வேண்டுமோ, அதற்கான ஸ்விட்சை டைப் செய்திடவும். எடுத்துக்காட்டாக, சி ட்ரைவ் முழுவதும், அனைத்து வால்யூம்களையும் டிபிராக் செய்திட defrag/c என டைப் செய்திட வேண்டும். இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்விட்சுகளையும் பயன்படுத்தலாம். அதற்கேற்ற வகையில் டிபிராக் செயல்பாடு மேற்கொள்ளப்படும்.

கேள்வி: விண்டோஸ் கிராஷ் ஆனால், அப்போது திறக்கப்பட்டு வேலை மேற்கொள்ளப்படும் அனைத்து போல்டர்களூம் கிராஷ் ஆகின்றன. நான் எக்ஸ்பி பயன் படுத்துகிறேன். அப்போது பயன்பாட்டில் உள்ள போல்டர் மட்டும் கிராஷ் ஆகும் வழியும் உள்ளது என்று என் நண்பர் கூறுகிறார். இது உண்மையா?
-ஜி. கண்ணதாசன், புதுச்சேரி.
பதில்: நீங்கள் விரும்புவது போல அந்த போல்டர் மட்டும் பாதிப்புக்குள்ளாகி, மற்ற போல்டர்கள் எந்த வகையிலும் சிக்காத வகையில் செட் அப் செய்திடலாம்.
இதற்கு கண்ட்ரோல் பேனலைத் திறந்து Folder Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் வியூ டேபிற்குச் செல்லவும். அதில் பல ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். அவற்றில் ‘Launch folder windows in a separate process’ என்று ஒன்று இருக்கும். அதன் அருகே டிக் மார்க் அடையாளம் ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன். இதன் டாஸ்க் பாரில், வலது பக்கம் உள்ள நோட்டிபிகேஷன் ஏரியாவில், நிறைய ஐகான்கள் காணப்படுகின்றன. இவற்றை எப்படிக் குறைப்பது? இதனால், இயங்கும் புரோகிராம்கள் நின்று போகாதா?
-எஸ்.கே. வேல்ச்சாமி சாமுவேல், விழுப்புரம்.
பதில்: அதிக எண்ணிக்கையில், உங்கள் கம்ப்யூட்டரில் புரோகிராம்களை இன்ஸ் டால் செய்து இயக்கிவிட்டால், டாஸ்க் பாரின் வலது கோடியில் உள்ள நோட்டி பிகேஷன் ஏரியாவில் நிறைய ஐகான்கள் இடத்தை அடைத்துக் கொள்ளும். இதனைச் சரி செய்திட டாஸ்க் பாரின் காலி இடத்தில் ரைட் கிளிக் செய்து புராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இதில் ‘Hide inactive icons’ என்று உள்ள இடத்தில் எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பொதுவாக இது சரியாகவே தன் வேலையை மேற்கொள்ளும். சில வேளைகளில் நமக்கு வேண்டிய ஐகான்களைக் கூட மறைத்து வைக்கும். அப்போது மீண்டும் இதே போல் சென்று புராபர்ட்டீஸ் மெனுவில் Customize பட்டனில் கிளிக் செய்திடவும். பின் உங்களுக்குத் தேவையான ஐகானைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். பின் ‘Always Show’ என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறினால் அந்த ஐகான் காட்டப்படும்.

கேள்வி: தேடுதல் கட்டங்களில் பயன்படுத்த ஏதேனும் ஷார்ட்கட் கீ உண்டா? பயர்பாக்ஸ் பிரவுசரை நான் பயன்படுத்துகிறேன்.
-தி.நாராயணன், திருப்பூர்.
பதில்: உங்கள் கேள்வி புதிய கோணத்தில் பிரவுசர் பயன்பாட்டினை நோக்க வைக்கின்றது. இந்த நோக்கில் தேடிய போது, ஷார்ட்கட் கீ பயன்பாடு இல்லாமல் வேறு ஒரு தகவல் கிடைத்தது. பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களில் இதனைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, தலைப்பு ஒன்றை கட்டுரை அல்லது டாகுமெண்ட் ஒன்றிலிருந்து காப்பி செய்து தேட விரும்புகிறீர்கள். காப்பி செய்த பின்னர், தேடல் கட்டம் அல்லது குரோம் பிரவுசரில் ஆம்னி பாக்ஸில், ரைட் கிளிக் செய்திடுங்கள். உடன் கிடைக்கும் கீழ் விரி கட்டத்தில் Paste and Search என்று இருப்பதில் கிளிக் செய்திடுங்கள். உடன் நீங்கள் காப்பி செய்த சொற்கள் ஒட்டப்பட்டு தேடல் தொடங்கும். பேஸ்ட் செய்து, பின்னர் என்டர் அழுத்தத் தேவை இல்லை.

கேள்வி: விண்டோஸ் சிஸ்டத்திலேயே பைல்களை ஸிப் செய்திடும் வசதி உள்ளது என்றும், விண்ஸிப், விண் ஆர்.ஏ.ஆர். பயன்படுத்த தேவை இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அவ்வாறு ஸிப் செய்தால், தர்ட் பார்ட்டி புரோகிராம் கொண்டு விரித்து பைல்களைப் பெற முடியுமா?
-டி.பத்மலதா, திண்டுக்கல்.
பதில்:விண்டோஸ் இயக்கத்தில் ஸிப் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. முதலில் ஸிப் செய்திட வேண்டிய பைல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக் கவும். பைல்களைச் சுற்றி ஒரு பாக்ஸ் அமைத்துத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது கண்ட்ரோல் கீ அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுக்கலாம். பின்னர் இதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Send To என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது விரியும் கட்டத்தில், Compressed (Zipped Folder) என்று இருப்பதனைத் தேர்ந்தெடுத்தால், உடன் அனைத்து பைல்களும் ஸிப் செய்யப்பட்டு கிடைக்கும். இந்த ஸிப்டு பைலுக்கு விண்டோஸ் அளிக்கும் பெயர் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், எப்2 அழுத்தி புதிய பெயர் டைப் செய்து கொள்ளலாம். இதனை விண்டோஸ் மூலமும், மற்ற தர்ட் பார்ட்டி புரோகிராம் (Winzip, WinRAR) மூலமும், விரித்து பைல்களைப் பெறலாம்.

கேள்வி: இன்டர்நெட் சேவை தரும் நிறுவனங்கள், இணைப்பு தரும் போது சொல்லும் வேகம் சரியாகக் கிடைக்கிறதா என்று எப்படி அறிவது? குறைவாக இருந்தால் யாரிடம் முறையிடுவது?
-சி. ரங்கநாத், கோவை.
பதில்: இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள், தங்கள் இணைப்பில் கிடைக்கும் வேகத்தினைப் பற்றிக் குறிப்பிடுகையில் அதிக பட்ச வேகம் என்று குறிப்பிடுவார்கள். இன்னும் நுணுக்கமாகக் கேட்டால், அப்லோடிங் ஸ்பீட், டவுண்லோடிங் ஸ்பீட் என்று தனித்தனியே கூறி, இவை எல்லாம் சேர்த்துத்தான் இதன் வேகம் என்று கூறுவார்கள். இருப்பினும் உங்கள் இன்டர்நெட் வேகத்தினை அறிய கீழே தந்துள்ளபடி செயல்படவும்.
உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய, முதலில் இணைப்பை இயக்குங்கள். பின் http://speedtest.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப் பிற்கான ரௌட்டருக்கும் கம்ப்யூட்டருக் குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் வேகத்தினையும் மற்றும் அப்லோடிங் வேகத்தையும் அது அளந்து காட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும். இது ஏறத்தாழ, உங்களுக்கு இணைப்பு தரும் நிறுவனம் உறுதி அளித்த வேகம் எனில் விட்டுவிடலாம். பெருத்த வேறுபாடு இருந்தால், உடனே அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொலைபேசி அல்லது மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு கேட்டு சரி செய்திடச் சொல்லுங்கள்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized