சிறிலங்கா அரசபடைகளின் பிடியிலுள்ள திரு. செல்வராசா பத்மநாதன் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார். அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி அவர்கள் துணைபோகின்றார், என விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது, 2009 மே மாதம் 18 ஆம் நாளிலிருந்து எமது ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகின்றோம்.எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.
கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின் படைத்தளங்களைத் தகர்த்தும், எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து, ஒரு நாட்டுக்குரிய முழுமையான நிர்வாக மற்றும் படைக்கட்டமைப்புக்களை நிலைநிறுத்தி, தனிச்சுதந்திர தேசத்துக்கான கட்டுமானங்களை உருவாக்கி மக்களின் சுதந்திர வாழ்வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அரசொன்றை நடாத்தி வந்தோம்.
எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததாலும், இராஜதந்திர சூழ்ச்சிகளாலும், பெரும்பலத்தோடு நடத்தப்பட்ட பன்னாட்டுப் போர்நெறிகளை மீறிய கொடூர போரினாலும் நாம் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம். எனினும், எமது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வையும், தமிழீழ விடுதலை மீது கொண்ட அசைக்க முடியாத பற்றுதலையும், எமது மாவீரர்களின் தியாகத்தின் வழிகாட்டுதலையும் துணையாகக் கொண்டு நாம் எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
ஐ.நா நிபுணர்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், வேறுபல நடுநிலையாளர்கள் வெளிப்படுத்திய ஆவணங்களிலும் சிங்கள அரசு தமிழர்மீது மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான உண்மைகள் மெல்லமெல்ல வெளிவந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் மகிந்த அரசு செய்வதறியாது திணறிக்கொண்டிருக்கின்றது.
இதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சிங்கள தேசத்தைக் கிலி கொள்ள வைத்துள்ளது. ஈழத்தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான எதிர்ப்புணர்வும், ஈழத்தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆதரவும் தமிழகத்திற் பெருகிவரும் நிலையில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தனக்குப் பாதகமாவே நோக்குகின்றது சிங்களப் பேரினவாத அரசு.
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையும் தமிழகத் தேர்தல் முடிவும் மகிந்த அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தாகவே முடியுமென்று உணர்ந்துகொண்ட சிங்கள அரசியல் ஆலோசகர்களின் மதிநுட்பமான சதித்திட்டமிடலில் முன்னிறுத்தப்படுவரே கே.பி என்ற திரு செல்வராசா பத்மநாதன். இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கெதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டுவருகிறது சிறிலங்கா அரசு.
சிறிலங்கா அரசபடைகளின் பிடியிலுள்ள எவருமே விடுதலைப் புலிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு நடந்ததில்லை;
இனியும் நடக்கப்போவதுமில்லை. அவ்வகையில் திரு. செல்வராசா பத்மநாதனும் தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அடையாளப்படுத்துவதும், தான்தான் எஞ்சியிருக்கும் மூத்த போராளியென்று சொல்லிக்கொள்வதும், எமது அமைப்பின் சார்பில் பேசுவதும் தவறானது. அவர் எதிரியின் பிடிக்குட் சிக்கிய நாளிலிருந்து அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார். அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி அவர்கள் துணைபோகின்றார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.
திரு. செல்வராசா பத்மநாதன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களைக் கொலைசெய்வதற்கு விடுதலைப்புலிகள் திட்டமிட்டார்கள் என்ற அவதூறை வெளிப்படுத்தியிருக்கிறார். இது அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டு. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சியோடே இச்செவ்வி வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாட்டு உறவுகளும் அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள் என நம்புகின்றோம்.
அன்பான தமிழ்பேசும் உறவுகளே,
சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இராஜதந்திர சதிவலைக்குள் புதைந்துபோகாமலும் கே.பி போன்றோரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணைபோகாமலும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஆ.அன்பரசன்,
ஊடகப்பிரிவு,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
Monthly Archives: மே 2011
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்க ளைக் கொலைசெய்வதற்கு விடுதலைப்புலிகள் திட ்டம்
Filed under Uncategorized
கோப்பை சூப்பர் கிங்ஸ்
சென்னை: ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்று நடந்த பைனலில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முரளி விஜய், அஷ்வினின் அபார ஆட்டம் சென்னை அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல், "டுவென்டி-20′ தொடர் நடந்தது. நேற்று சென்னையில் நடந்த பைனலில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. "டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி சற்றும் தயங்காமல் "பேட்டிங்’ தேர்வு செய்தார்.
"சிக்சர்’ மழை:
சென்னை அணிக்கு முரளி விஜய், மைக்கேல் ஹசி இணைந்து "சூப்பர்’ அடித்தளம் அமைத்தனர். பெங்களூரு பந்துவீச்சை துவம்சம் செய்த விஜய், அரவிந்த் பந்தை சிக்சருக்கு விரட்டி அதிரடியை துவக்கினார். மறுபக்கம் மிகவும் "பிசி’யாக இருந்த ஹசி, முன்னணி வீரரான ஜாகிர், முகமது பந்துகளில் தலா ஒரு சிக்சர் விளாசினார். தொடர்ந்து கெய்ல், வெட்டோரி சுழலில் விஜய் சிக்சர் அடிக்க, சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். பின் மிதுன் ஓவரில் 2 பவுண்டரி அடித்த விஜய் 29 பந்துகளில் அரைசதம் எட்டினார். தனது வாணவேடிக்கையை தொடர்ந்த இவர், அரவிந்த் வீசிய போட்டியின் 12வது ஓவரில் இரண்டு இமாலய சிக்சர்கள் அடித்தார். மறுபக்கம் வெட்டோரி பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஹசி அரைசதம் கடந்தார். முகமது வீசிய போட்டியின் 15வது ஓவரில் ஹசி, விஜய் தலா ஒரு சிக்சர் அடித்தனர். இதே ஓவரில் இன்னொரு சிக்சர் அடிக்க பார்த்த, ஹசி(63) பரிதாபமாக அவுட்டானார்.
நழுவிய சதம்:
அடுத்து வந்த கேப்டன் தோனி ரன்வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். இவர், கெய்ல் ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்தார். அரவிந்த் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை தூக்கி அடித்த விஜய், சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இவர் 52 பந்தில் 95 ரன்கள்(4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். இரண்டாவது பந்தில் தோனி(22) அவுட்டானார். அடுத்த பந்தை ரெய்னா தடுத்து ஆட, அரவிந்தின் "ஹாட்ரிக்’ வாய்ப்பு தகர்ந்தது. நான்காவது பந்தில் ரெய்னா சிக்சர் அடித்து அசத்தினார்.
கெய்ல் வீசிய கடைசி ஓவரில் ஆல்பி மார்கல்(2) முதலில் வெளியேறினார். அடுத்த பந்தில் ரெய்னா(8) போல்டானார். கடைசி பந்தில் பிராவோ சிக்சர் அடித்து, 200 ரன்களை கடக்க உதவினார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. பிராவோ(6) அவுட்டாகாமல் இருந்தார்.
அஷ்வின் ஜாலம்:
கடின இலக்கை விரட்டிய பெங்களூரு அணி, சென்னை கிங்ஸ் விரித்த "சுழல்’ வலையில் அப்படியே சிக்கியது. முதல் ஓவரிலேயே அஷ்வின் பயங்கர "ஷாக்’ கொடுத்தார். இவரது சுழலில் "அதிரடி’ கெய்ல் "டக்’ அவுட்டாக, சென்னை ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். இத்தொடர் முழுவதும் அசத்திய கெய்ல், மிக முக்கியமான பைனலில் கோட்டை விட்டதால், அரங்கில் அமர்ந்திருந்த பெங்களூரு அணியின் உரிமையாளர் மல்லையா அதிர்ச்சியில் உறைந்தார்.
சொதப்பல் ஆட்டம்:
அடுத்து வந்தவர்களும் சொதப்பலாக ஆடினர். தொடர்ந்து அகர்வாலை(10) வெளியேற்றிய அஷ்வின் இன்னொரு "அடி’ கொடுத்தார். ஜகாதி சுழலில் டிவிலியர்ஸ்(18), பாமர்ஸ்பச்(2) சிக்கினர். போராடிய விராத் கோஹ்லி(35), ரெய்னா பந்தில் அவுட்டாக, பெங்களூரு கதை முடிந்தது. மீண்டும் பந்துவீச வந்த அஷ்வின், கேப்டன் வெட்டோரியை(0) வெளியேற்றினார். ஜாகிர் 21 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சவுரப் திவாரி(42*) ஆறுதல் அளித்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
இவ்வெற்றியின் மூலம் ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெல்லும் முதல் அணி என்ற சாதனையை சென்னை கிங்ஸ் அணி படைத்தது.
ஆட்ட நாயகன் விருதை முரளி விஜய் வென்றார்.
"ஆரஞ்ச் கேப்’ கெய்ல்
நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணியின் கெய்ல், 608 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் முதலிடம் பெற்று, இதற்கான "ஆரஞ்ச்’ தொப்பியை தட்டிச் சென்றார். இத்தொடரில் அதிக ரன்கள் எடுத்த "டாப்-10′ வீரர்கள் விவரம்:
பெயர்/அணி போட்டி ரன்கள்
1. கெய்ல்(பெங்களூரு) 12 608
2. கோஹ்லி (பெங்களூரு) 16 557
3. சச்சின் (மும்பை) 16 553
4. மார்ஷ் (பஞ்சாப்) 14 504
5. ஹசி (சென்னை) 14 492
மலிங்கா அபாரம்
பவுலிங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் மும்பையின் மலிங்கா (28) முதலிடத்தை பெற்று, இதற்காக "பர்பிள் கேப்’ பரிசை பெற்றார். இவ்வரிசையில் "டாப்-5′ வீரர்கள் விவரம்:
பெயர்/அணி போட்டி விக்.,
1. மலிங்கா (மும்பை) 16 28
2. முனாப் படேல் (மும்பை) 15 22
3. அரவிந்த் (பெங்களூரு) 13 21
4. அஷ்வின் (சென்னை) 16 20
5. அமித் மிஸ்ரா (டெக்கான்) 14 19
இதுவரை சாம்பியன்கள்
ஆண்டு சாம்பியன் எதிரணி
1. 2008 ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்
2. 2009 டெக்கான் சார்ஜர்ஸ் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
3. 2010 சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ்
4. 2011 சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
சாதனை ஜோடி
ஐ.பி.எல்., வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் (159) சேர்த்த ஜோடி என்ற பெருமையை, சென்னை அணியின் முரளி விஜய், மைக் ஹசி பெற்றது. இதற்கு முன் கில்கிறிஸ்ட்-லட்சுமண் இணைந்து, மும்பை அணிக்கு எதிராக 155 ரன்கள் (2008) எடுத்து இருந்தனர்.
விஜய்க்கு சூப்பர் "விசில்’ அடிங்க…
சென்னை அணியின் சாம்பியன் கனவுக்கு தமிழக வீரர்களான முரளி விஜய், அஷ்வின் கைகொடுத்தனர். பேட்டிங்கில் அசத்திய முரளி விஜய் 95 ரன்கள் விளாசினார். இவர், ஐ.பி.எல்., தொடரின் பைனலில் அதிக சிக்சர் (6) அடித்தவர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக 2008 பைனலில், ராஜஸ்தானின் யூசுப் பதான் (எதிரணி-சென்னை), 4 சிக்சர் அடித்திருந்தார்.
இதே போல சுழலில் அசத்திய அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தி, அணிக்கு விரைவான வெற்றியை தேடி தந்தார். பெங்களூரு அணி, அன்னிய வீரரான கெய்லை நம்பி ஏமாந்தது. ஆனால், சென்னை அணி மண்ணின் மைந்தர்களை நம்பி சந்தித்தது.
தோனியின் சாதனை பயணம்
தோனியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. இவரது தலைமையில், இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற முக்கிய சாம்பியன் பட்டங்கள்…
ஆண்டு/மாதம் வென்ற கோப்பை
1. 2007/ஆகஸ்ட் "டுவென்டி-20′ உலக கோப்பை
2. 2010/ஏப்ரல் ஐ.பி.எல்., "டுவென்டி-20′ கோப்பை
3. 2010/செப்டம்பர் ஐ.பி.எல்., சாம்பியன்ஸ் லீக் கோப்பை
4. 2011/ஏப்ரல் உலக கோப்பை (50 ஓவர்)
5. 2011/மே ஐ.பி.எல்., "டுவென்டி-20′
ஸ்கோர்போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஹசி(கே)மிதுன்(ப)முகமது 63(45)
விஜய்(கே)வெட்டோரி(ப)அரவிந்த் 95(52)
தோனி(கே)கோஹ்லி(ப)அரவிந்த் 22(13)
ரெய்னா(ப)கெய்ல் 8(5)
மார்கல்(கே)கோஹ்லி(ப)கெய்ல் 2(4)
பத்ரிநாத்-அவுட் இல்லை- 0(0)
பிராவோ-அவுட் இல்லை- 6(1)
உதிரிகள் 9
மொத்தம் (20 ஓவரில், 5 விக்.,) 205
விக்கெட் வீழ்ச்சி: 1-159(மைக் ஹசி), 2-188(முரளி விஜய்), 3-188(தோனி), 4-199(மார்கல்), 5-199(ரெய்னா).
பந்து வீச்சு: ஜாகிர் கான் 4-0-30-0, அரவிந்த் 3-0-39-2, கெய்ல் 4-0-34-2, சையது முகமது 3-0-39-1, வெட்டோரி 4-0-34-0, அபிமன்யு மிதுன் 2-0-22-0.
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
அகர்வால்(ப)அஷ்வின் 10(5)
கெய்ல்(கே)தோனி(ப)அஷ்வின் 0(3)
கோஹ்லி-எல்.பி.டபிள்யு(ப)ரெய்னா 35(32)
டிவிலியர்ஸ்-எல்.பி.டபிள்யு(ப)ஜகாதி 18(12)
பாமர்ஸ்பச்(கே)+(ப)ஜகாதி 2(3)
திவாரி-அவுட் இல்லை- 42(34)
வெட்டோரி(கே)+(ப)அஷ்வின் 0(1)
மிதுன்(கே)போலிஞ்சர்(ப)பிராவோ 11(8)
ஜாகிர்(கே)ஹசி(ப)போலிஞ்சர் 21(21)
சையது-அவுட் இல்லை- 2(2)
உதிரிகள் 6
மொத்தம் (20 ஓவரில், 8 விக்.,) 147
விக்கெட் வீழ்ச்சி: 1-1(கிறிஸ் கெய்ல்), 2-16(அகர்வால்), 3-48(டிவிலியர்ஸ்), 4-62(பாமர்ஸ்பச்), 5-69(விராத் கோஹ்லி), 6-70(வெட்டோரி), 7-92(அபிமன்யு மிதுன்), 8-130(ஜாகிர் கான்).
பந்து வீச்சு: அஷ்வின் 4-0-16-3, மார்கல் 3-0-24-0, போலிஞ்சர் 3-0-28-1, ஜகாதி 4-0-21-2, ரெய்னா 4-0-39-1, பிராவோ 2-0-15-1.
source:dinamalar
Filed under Uncategorized
ஒரு நாளில் 5.67 லட்சம்; 30 நாளில் 41.14 லட்சம் ரூப ாய்க்கு போன் பில்: பயங்கரவாதிகள் சதியா?
சிறிய அளவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் சென்னையைச் சேர்ந்தவரின் அலுவலக தொலைபேசிக்கு ஒரு மாதத்தில் 41 லட்சம் ரூபாய் போன் பேசியதாக தனியார் தொலைபேசி நிறுவனம் பில் அனுப்பியதால், அதிர்ச்சியில் உச்சகட்டத்திற்கே சென்ற ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரத்தைச் சேர்ந்தவர் நிசார் அகமது. "பாவா டெவலப்பர்ஸ்’ என்ற பெயரில் அரும்பாக்கத்தில் அலுவலகத்தை வைத்து, ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார். இவர், தனியார் மொபைல் நிறுவனம் ஒன்றில், "ஐவிஆர்’ (இன்டர் ஆக்டிவ் வாய்ஸ் ரெக்கார்டர்) முறைப்படி, அலுவலகத்திற்கு போன் இணைப்பு வாங்கினார். ஒரு மாதம் 7,485 ரூபாய் பேசிக் கொள்ளும் வசதி கொண்டது.இவருக்கு ஏப்., 27ம் தேதியிட்ட டெலிபோன் பில் வந்தது. மார்ச் 17 முதல் ஏப்ரல் 16 வரையிலான இந்த பில் தொகை 5.67 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. மே 16ம் தேதி ஒரே நாளில் 5.67 லட்சம் ரூபாய்க்கு பேசியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் நிசாருக்கு தலையைச் சுற்றியது. ஆப்கானிஸ்தான், தைவான், மியான்மர், தாய்லாந்து நாடுகளுக்கும், சாட்டலைட் போன்களுக்கும் அழைப்புகள் போயிருந்தன.
இதனால் பதறிப்போன நிசார், மே 20ம் தேதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனரைச் சந்தித்து புகார் அளித்தார். "சாட்டலைட் உதவியுடன் மர்ம நபர்கள் போன் செய்துள்ளனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரியிருந்தார். இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், மே 18ம் தேதியிட்டு 106 பக்கங்கள் கொண்ட ஒரு பில் வந்தது. அதில், ஏப்., 17 முதல் மே 18 வரையிலான நாட்களுக்கான பில் தொகை 35.47 லட்சம் எனவும், அதற்கு முந்தைய பில்லுடன் சேர்த்து 41.14 லட்ச ரூபாய் கட்ட வேண்டுமென்று இருந்தது. வழக்கம் போல் அந்த பில்லிலும், அயல் நாடுகளுக்கு சாட்டலைட் உதவியுடன் பேசியிருந்தனர். இதனால், நிசார் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியிலும், பீதியிலும் உறைந்தனர்.
இதுகுறித்து நிசார் கூறியதாவது:நான் சிறிய அளவில் ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறேன். இதுவரை வெளிநாட்டிற்குச் சென்றதும் இல்லை; உறவினர்களும் அங்கு இல்லை. என் அலுவலக போனை திருட்டுத்தனமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கும், சாட்டலைட் போன்களுக்கும் மர்ம நபர்கள் பேசியுள்ளனர். தனியார் தொலைபேசி நிறுவனத்தினர் என் அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். என் நிறுவனத்தின் மொத்த வரவு செலவே மாதத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் தான். இதைச் சொன்னதும், அந்த தொலைபேசி நிறுவன அதிகாரிகள் திரும்பிச் சென்று விட்டனர்.ஆனால், அடுத்த மாதமே 41 லட்சம் ரூபாய்க்கு நான் பேசியதாக பில் வந்துள்ளது. பயங்கரவாதிகள் யாரும் என் போன் எண்ணை பயன்படுத்தினரா என்று தெரியவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முதல் பில் வந்தபோதே, கடந்த மாதம் 20ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். விசாரணை நடந்து வருகிறது. ஆனால், அடுத்த பில் வந்து என்னை மேலும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதுகுறித்து மீண்டும் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ய உள்ளேன்.இவ்வாறு நிசார் கூறினார்.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத சைபர் கிரைம் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ""இந்த புகார் எங்களுக்கு வந்துள்ளது; விசாரணை நடந்து வருகிறது,” என்று மட்டும் தெரிவித்தார்.
source:dinamalar
Filed under Uncategorized
டி சர்ட்டில் இப்படிக்கூட வரைவாங்களா??
20 Wild Animal T-Shirts
This post features some really photos of animals on T-Shirts. 19 more images after the break…
Filed under Uncategorized
முள்ளிவாய்க்கால் நினைவுதினம்: சீமான் சத் தியராஜ் உரை !
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது ஏற்பட்ட துக்கம் போன்ற கவலையை வாழ்நாளில் அனுபவிக்கவில்லை என தமிழின உணர்வாளரும், நடிகருமான சத்தியராஜ் தெரிவித்துள்ளார். அத்துடன் உணர்வாளர் சீமான் அவர்கள் ஆற்றிய உரைத் தொகுப்புகள்.
சத்தியராஜ்
உணர்வாளர் சீமான்
source:athirvu
Filed under Uncategorized
சிவப்புக் கோட்டையை தகர்த்து மம்தா வரலாறு
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், கடந்த 34 ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகள் கட்டிக்காத்து வந்த சிவப்புக் கோட்டையை, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இந்த தேர்தலில் தகர்த்து, வரலாறு படைத்துள்ளார். திரிணமுல் காங்கிரசுக்கு கிடைத்த அமோக வெற்றியின் மூலம், மேற்கு வங்க மாநிலத்தின் அடுத்த முதல்வராக, மம்தா பதவியேற்கவுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், கடந்த 34 ஆண்டுகளாக, இடதுசாரி கட்சிகளின் கோட்டையாக விளங்கி வந்தது. கடந்த 1977ல், காங்கிரசின் சித்தார்த் சங்கர் ராய், முதல்வராக பதவி வகித்தார். அதற்கு பின், தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் தான், ஆட்சியும், முதல்வர் பதவியும் இருந்து வந்தது. கடந்த 1977ல் இருந்து, 2000 வரை, கம்யூனிஸ்ட் கட்சியின் ஜோதிபாசு முதல்வராக பதவி வகித்தார். அவருக்கு பின், கடந்த பத்தாண்டுகளாக, கம்யூனிஸ்ட் கட்சியின் புத்ததேவ் பட்டாச்சார்யா, முதல்வராக இருந்து வருகிறார்.இந்நிலையில், மேற்கு வங்கத்துக்கு சட்டசபை தேர்தல் தேதி, கடந்த மார்ச்சில் அறிவிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை கருதி, ஆறு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில், ஆளும் இடதுசாரி கூட்டணி ஒரு அணியாகவும், மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் – காங்கிரஸ், மற்றொரு கூட்டணியாகவும் போட்டியிட்டன.
திரிணமுல் கட்சி, 227 தொகுதிகளிலும், காங்கிரஸ் 65 தொகுதிகளிலும் போட்டியிட்டன.ஆறு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன. இதில், துவக்கத்தில் இருந்தே, திரிணமுல் – காங்கிரஸ் கூட்டணி, பெரும்பாலான தொகுதிகளில் முன்னணியில் இருந்தது.மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, தனித்து ஆட்சி அமைக்க 148 தொகுதிகள் தேவை. ஆனால், திரிணமுல் காங்கிரஸ் கட்சி, இதைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், திரிணமுல் – காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளிலும், இடதுசாரி கூட்டணி கட்சிகள் 63 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மேற்கு வங்க அரசியலில், இந்த வெற்றி, மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இடதுசாரி கூட்டணியில் அமைச்சர்களாக இருந்த, பெரும்பாலானோர் தோல்வியைத் தழுவினர்.
கொண்டாட்டம் : வெற்றிச் செய்தி கிடைத்ததும், கோல்கட்டாவில் உள்ள மம்தா பானர்ஜியின் வீட்டு முன், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். "தீதி வாழ்க’ என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. அங்கு திரண்டிருந்த தொண்டர்கள், இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும், தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர். முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும், மம்தாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, அவரது இல்லத்துக்கு படையெடுத்து வந்தனர்.
இரண்டாவது சுதந்திரம் தங்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி குறித்து, மம்தா பானர்ஜி கூறுகையில், "இது மக்களுக்கு கிடைத்த வெற்றி. அன்னை, இந்தப் புனித மண், மனிதர்கள் ஆகியோருக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். இந்த நாளை, மேற்கு வங்க மக்களுக்கு இரண்டாவது சுதந்திரம் கிடைத்த நாளாக கருதுகிறேன். வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளுக்காக, மேற்கு வங்க மக்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் காத்திருந்தனர்’ என்றார்.
எதிர்பாராதது : தேர்தல் தோல்வி குறித்து இடதுசாரி கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பிமன் போஸ் கூறுகையில், "இந்த முடிவு எதிர்பாராதது. தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். சட்டசபையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, இடதுசாரி கட்சிகள் செயல்படும். தோல்விக்கான காரணம் குறித்து, கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, விவாதிக்கப்படும்’ என்றார். தகர்ந்தது கோட்டைஇந்த தேர்தல் வெற்றி மூலம், கடந்த 34 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த இடதுசாரி கூட்டணியின் வெற்றிக்கு, முற்றுப்புள்ளி வைத்துள்ளார், மம்தா. இதன்மூலம், இடதுசாரி கட்சிகள் கட்டிக் காத்து வந்த, சிவப்புக் கோட்டையையும் தகர்த்துள்ளார்.
மம்தா, தற்போது ரயில்வே அமைச்சராக இருப்பதால், அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு, முதல்வராக பதவியேற்கவுள் ளார். மேலும், மேற்கு வங்க மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கவுள்ளது. சித்தார்த் சங்கர் ராய்க்கு பின், மேற்கு வங்கத்தின் முதல்வர் நாற்காலியை அலங்கரிக்கப் போகும், கம்யூனிஸ்ட் கட்சியை சாராத முதல்வர் என்ற பெருமையும், மம்தாவுக்கு கிடைக்கவுள்ளது.
முதல்வர் புத்ததேவ் தோல்வி : கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வீசிய, மம்தா ஆதரவு அலையில், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் தோல்வி அடைந்தார். அவரது அமைச்சரவையில் இருந்த 17க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர்.மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், ஜாதவ்பூர் தொகுதியில், இடதுசாரி கூட்டணி சார்பில், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா போட்டியிட்டார். அவரை எதிர்த்து, மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலர் மணிஷ் குப்தா, திரிணமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.
மாநிலம் முழுவதும் வீசிய மம்தா ஆதரவு அலையில், இடதுசாரி கூட்டணிக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தோல்வி அடைந்தனர். முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் தோல்வி அடைந்தார். அவருக்கு, 87 ஆயிரத்து 288 ஓட்டுகள் கிடைத்தன. மணிஷ் குப்தா, ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 72 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில், அவர் தோல்வியை தழுவினார். இதுதவிர, இடதுசாரி கூட்டணி அரசில் அமைச்சர்களாக இருந்த 17க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினர். .
source:dinamalar
Filed under Uncategorized
குறுந்தகவல்(SMS) அனுப்பி சிக்கியுள்ள பாலித கோஹண: திடுக்கிடும் தகவல் !
2009 மே மாதத்தில் முடிவுக்கு வந்த விடுதலைப் புலிகளுடனான போரில், இலங்கை இராணுவம் சரணடைந்த பா.நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட 20 பேரைச் சுட்டுகொண்றுள்ளது. போர் நடைபெற்ற காலகட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் செயலாளராகப் பணியாற்றியவர் பாலித கோஹண ஆவார். இச் சரணடைவு குறித்து அவர் தனது கையடக்கத் தொலைபேசியில் இருந்து, வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்கு குறுந்தகவல் ஒன்றை மே 17 ம் திகதி அனுப்பியுள்ளார். இத் தகவல் தற்போது அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதோடு அது ஒரு ஆதாரமாக மாறும் வாய்ப்பும் அதிகரித்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.
2009 மே மாதம் 17ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) சரியாக காலை 8.46 மணிக்கு அவர் தனது கையடக்கத் தொலைபேசியில் இருந்து குறுந்தகவல் ஒன்றை வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார். அதில் பா.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரை வெள்ளைக்கொடிகளைக் காட்டியவாறு, பசில் ராஜபக்ஷ குறிப்பிட்ட இடம் வழியாக வந்து 58ம் படைப் பிரிவிடம் சரணடையுமாறு பாலித கோஹண எழுதி இருக்கிறார். அவரிடம் இருந்து பெறப்பட்ட குறுந்தகவலை, வெளிநாட்டில் உள்ளவர் புலித்தேவனின் துறையா சட்டலைட் போனுக்கு அனுப்பிவைத்துள்ளார். பசில் ராஜபக்ஷ மற்றும் பாலித கோஹண ஆகியோர் கூறியது போல சுமார் 20 பேர் அடங்கிய குழு முதல் கட்டமாக சரணடையச் சென்றுள்ளது.
அவர்கள் சரணடையச் செல்லும்போது, அதனை நேரில் பார்த்த சாட்சி தற்போது வெளிநாடு ஒன்றில் வசித்துவருகிறார்(பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பெயர் வெளியிடப்படவில்லை). பசில் ராஜபக்ஷ மற்றும் பாலித கோஹண ஆகியோர் கூறியபடி, மறுநாள் காலை தமது குடும்பத்தார் சகிதம் சென்ற புலித்தேவன், மற்றும் பா.நடேசன் ஆகியோரை, 58 வது படைப்பிரிவு ஒரு ரிரக் வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளது. அவர்கள் சென்று சுமார் 30 நிமிடங்களில் பலத்த துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக சம்பவ இடத்தில் நின்றவர் தெரிவிக்கிறார். அதன் பின்னர் உடனடியாகவே இலங்கை அரசு புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர் கொல்லப்பட்டதாக அறிவித்தது யாவரும் அறிந்ததே.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியப் பிரஜாவுரிமை பெற்றுள்ள பாலித கோஹண, தற்போது ஐநாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாகக் கடமையாற்றுகிறார். இவருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, என்பதனை நீதிமன்ற விசாரணைக் குழு ஏற்றுக்கொண்டுள்ளது. புலிகளின் அரசியல் தலைவர்களை வஞ்சகமாக ஏமாற்றி, அவ்விடத்துக்கு வரவழைத்து, அவர்கள் கொலைசெய்யப்பட காரணமாக இருந்தவர்களில் பாலித கோஹண மிக முக்கியமான நபராகக் கருதப்படுகிறார். அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு அவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
.தற்போது இது குறித்து பாலித கோஹண எழுதிய குறுந்தகவல்களும், அவர் கையடக்கத் தொலைபேசியில் இருந்து வந்த குறுந்தகவல்களும் ஆதாரமாக இணைக்கப்படும் சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது. இந் நிலையில் ஹெரல்ட் துப்பறியும் நிறுவனம் இது குறித்து மேலதிகத் தகவல்களை வெளியிட்டுள்ளது. இருப்பினும் தான் சரணடைவதற்காக வழியை அவர்களுக்கு குறுந்தகவல் ஊடாக தான் சொன்னதாகவும், அவர்களின் உயிருக்கு உத்தரவாதத்தை தான் கொடுக்கவில்லை என்று பாலித கோஹண ஆங்கில இணையம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். எது எவ்வாறு இருந்தாலும், பாலித கோஹணவுக்கு எதிராக போடப்பட்டுள்ள வழக்கு மிகவும் காத்திரமான ஆதாரங்களைக் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.
வழக்கு விசாரணைக்கு வரும் பட்சத்தில் அதில் இருந்து தப்பிக்க தனது அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையை அவர் ரத்துச்செய்ய தயங்கமாட்டார் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகிறது.
source:athirvu
Filed under Uncategorized
மானாட மயிலாட! கலைஞர் டிவி அசத்தல்!
!
தேர்தல் முடிவுகளை உற்சாகத்துடன் வெளியிட ஆரம்பித்த கலைஞர் டிவி, அதிமுக அணி தொடர்ந்து முன்னிலையில் இருந்ததால் பாதியிலேயே தேர்தல் முடிவுகள் வெளியிடுவதை நிறுத்தியது. ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்பார்த்திருந்த தேர்தல் முடிவுகளை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழர்களும் குதூகலமாக கண்டுகழிக்கும் வகையில் மானாட மயிலாட நிகழ்ச்சியை ஒளிபரப்பி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அசத்தலான டான்சுடன் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியைத் தொடர்ந்து மற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாயின
source:dinamalar
Filed under Uncategorized
தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமை க்கிறது; தி.மு.க., அமைச்சர்கள் பலர் தோல்வி
தமிழ் நாட்டில் அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கிறது. இதுவரை முன்னணி நிலவரம்தான் வந்து கொண்டிருக்கிறது என்றாலும் அ.தி.முக., 198 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தி.மு.க., 36 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மேலும் தி.மு.க., அமைச்சர்களான பொங்கலூர் பழனிச்சாமி, வீரபாண்டி ஆறுமுகம், தமிழரசி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உட்பட பலர் தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளனர். எனவே தேர்தல் முடிவு அ.தி.முக.,வுக்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்குவங்கத்ததில் திரிணாமுல்காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணியினர் 205 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். இடதுசாரி கட்சியினர் 67 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். புதுச்சேரி யூனியனில் இன்று காலை ஓட்டு எண்ணும் பணி துவங்கியது முதல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி பின்னடைந்துள்ளது. என்.ஆர்., காங்கிரஸ் அ.தி,மு.க., கூட்டணி 7 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
கேரளாவில் .காங்கிரஸ் 73 இடங்களிலும், ஆளும் இடதூரி கூட்டணியினர் 66 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.அசாமில் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களிலும், அசாம் கனபரிஷத் 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பா.ஜ., 8 வது இடங்களிலும், முன்னிலை வகிக்கிறது.
மாலை 5 மணிக்குள் முழு முடிவுகள் நிலவரம் தெரி்ந்து விடும்
source:dinamalar
Filed under Uncategorized