Monthly Archives: ஓகஸ்ட் 2009

தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் மரணம் ஆதாரம் அற்றது- இந்தியா


தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் மரணம் ஆதாரம் அற்றது – இந்திய அதிகாரிகள் விசாரணை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக, இந்திய அதிகாரிகள் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகத் தெரிய வருகிறது. ராஜீவ் காந்தி படுகொலை குறித்து விசாரிக்கும் பல்துறை கண்காணிப்பு முகவர் அமைப்பு அதிகாரிகளே இவ்வாறு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள போதும், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை இந்திய அரசு மேலும் ஒருவருட காலத்திற்கு தடைசெய்துள்ளது. மேற்படி விசாரணைகளை மேற்கொள்ளவிருக்கும், பல்துறை கண்காணிப்பு விசாரணை அமைப்பின் காலம், கடந்த மே மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் மூன்று மாதத்திற்குப் பின்னர் மீண்டும் அதற்கு ஒரு வருட நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையிலேயே பல்துறை கண்காணிப்பு விசாரணை அமைப்பின் அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து ஆராய்வதற்காகவும் மேலதிக தகவல்களை பெறுவதற்காகவும் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதனால், ராஜீவ் காந்தி கொலைவழக்கினை முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய தேவை இந்திய அரசாங்கத்திற்கு இருக்கிறது. ஆயினும் அதற்கு முன் பிரபாகரன் கொல்லப்பட்டது திட்டவட்டமாக உறுதி செய்யப்பட வேண்டும். இலங்கை அரசால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளபோதிலும், இதை அறிவித்த முறைகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களால் , அந்த அறிவிப்பு பலதரப்பிலும் சந்தேகங்களை உருவாக்கியுள்ளன. அதே சமயம், தமிழகத்திலுள்ள , ஈழஆதரவு அரசியல்வாதிகளாலும், ஆதரவாளர்களாலும், பிரபாகரன் உயிரோடிருக்கின்றார் எனும் செய்தி தொடர்ச்சியாகப் பரப்புரை செய்யப்பட்டு வருவதும், இது விடயத்தில் சுலபமான முடிவுக்கு இந்தியா வரமுடியாதுள்ளதெனவும் கூறப்படுகிறது.
source:nerudal

www.thamilislam.co.cc

1 பின்னூட்டம்

Filed under Uncategorized

தலைவரின் முகமா அது?



 

 

மே-17 வரை நந்திக் கடற்கரை யில் நின்ற சிவரூபன் தொடர்கிறேன்…

எங்கும்பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால் கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத் தோடும், மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு குறிப் பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத் தது.

வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத் தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங் கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடை யின்றிக் கிடந்தன. அநேகம்பேர் எம் குலப் பெண்கள். கொடுமை யை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவு கள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும், கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன.

ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும், அடித்தும், வெட்டியும் கொல்லப் பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்க வில்லை. பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். “”புலி தனியா பிரிஞ்சு வாங்கோ… பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ…” என்று கொச் சைத் தமிழில் சிங்களன் அறிவித்துக் கொண்டிருந் தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது. அருகி லிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள். “”இனி அவன் ஆட்சிதானே… இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்… பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌர வமா செத்திருக்கலாம்…” என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவி, பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன்.

இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத் தார்கள். சுற்றிலும் சுடும் நிலையில் ராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவ னிடம் மெல்லச் சென்று கேட்டேன். “என் உறவுகளைக் காணவில்லை, தேடிப் பார்க்கலாமா?’ என்று. “”கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போற வங்களை சுடச் சொல்லி உத்தரவு” என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன், “”இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்… ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத் தோம்” என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன் னேன், “”ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்” என்றேன். “பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?’ என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு ராணு வக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள்.

இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட் டத்தினர் மீது கேவலச் சிரிப் புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள். தமிழரின் இயலா மை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோது, சில வயது போன வர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக் காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும், “பசிக்குது, ஒரு பார்சல் குடுங்கோ’ என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும், தண் ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந் தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள்.

வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக் குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட “புலிகள்’ என்று கை நீட்டிக் காட்ட ராணுவத் தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனை யோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார். ஒன்று, “”நேர்மையான வர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர் களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்” என்பது. இன்னொன்று “”எதிரிகளைவிட துரோகி களே ஆபத்தானவர்கள்” என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார். நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்.

அந்த இடத்தில், அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.

உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரி சோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன். என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால், அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில், வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே-18 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது.

எங்கு கொண்டுபோகிறார் களோ, என்னவெல் லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக் கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத் தினர் சுடும் நிலை யில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (Immigration) மற்றும் சுங்கம் (Customs)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது.

இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம் பித்தது. “”புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்”, “”ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்”, “”எல்லைப்படை பயிற்சி எடுத்தவர் களும் பதியவேண்டும்”, “”எங்களுக்கு எல்லாம் தெரியும், பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்” என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின. 1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து “சதுரங்கம் 1,2,3 (Operation Checkmate) என பெயரிட்டு நின்றபோது மண லாற்றுக் காட்டில் நிலை தடுமாறாது, அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. “உயி ரற்ற என் உடலோ, சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது’ என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன். போர்க்களத்தில் தன்னையே கொடையாக் கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது. முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார்.

(நினைவுகள் சுழலும்)
மூலம்:நக்கீரன்


http://www.thamilislam.co.cc

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

காலத்தை தவறவிட்டால் வரலாறு எம்மை மன்னிக் காது


காலத்தை தவறவிட்டால் வரலாறு எம்மை மன்னிக்காது

தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான இன அழிப்பின் கோரத்தாண்டவம் ஒன்றை பிரித்தானியாவின் சனல் போஃர் தொலைக்காட்சி நிறுவனம் துணிச்சலாக வெளிக்கொண்டு வந்துள்ளது.


சிறீலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பே இந்த காணொளியை வெளியிட்டிருந்தது. அதனை பிரித்தானியா தொலைக்காட்சி துணிச்சலாக உலகின் கண்களின் முன் கொண்டுவந்துள்ளது. இந்த நவீன உலகில் காண்பவர்கள் கண்கலங்கி போகும் அளவிற்கு நிர்வாணமாக இழுத்து வரப்படும் இளைஞர்கள் ரீ-56 ரக துப்பாக்கிகள் மூலம் மிக அருகில் வைத்து தலையில் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் மனித மனங்களை உலுக்கியுள்ளது.


இந்த படுகொலையானது இந்த வருடத்தின் ஜனவரி மாதமளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழப்பகுதிகளில் இருந்து இராணுவத்தினரால் வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள், கைதுசெய்யப்பட்டவர்களே பெருமளவில் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெளிவானது.


தொழில்நுட்ப வசதிகள் குறைந்த முன்னைய காலங்களில் உலகில் நடைபெற்ற படுகொலைகளுக்கான ஆதாரங்களை சேகரிப்பது கடினமானது. ஆனாலும் கூட ஆதாரங்களை தேடி கண்டறிந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டித்த இந்த ஜனநாயக உலகம் மிருகங்களை போல வெட்ட வெளிகளுக்குள் இழுத்து வரப்பட்டு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான பல ஆதராங்கள் கிடைத்துள்ள நிலையில் என்ன நடவடிக்கையை எடுக்கப்போகின்றது?


சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர் குற்றங்கள் பலவற்றிற்கான ஆதாரங்களை மேற்குலக ஊடகங்கள் துணிச்சலாக வெளியிட்டு வரும் நிலையில் ஐ.நாவையும், மனித உரிமைகள் மீது சிறிதளவேனும் நம்பிக்கை கொண்டுள்ளமேற்குலக நாடுகளையும், அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களையும் நோக்கி நாம் மிகப்பெரும் அழுத்தங்களை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.


சிங்கள இனவெறியர்களின் இந்த கோரத்தாண்டவத்தையும், ஆதரவற்ற நிலையில் அனாதரவாக செத்துவிழும் தமிழ் மக்களின் தலைவிதியையும் வெளிக்கொண்டுவந்துள்ள இந்த காணொளி படத்தை உலகில் உள்ள ஒவ்வொரு தமிழ் மகனும் பார்க்க வேண்டும்.


அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இதனை பார்க்கவேண்டும். முடிந்தால் உலகத்தின் அத்தனை மனித குலங்களும் இதனை பார்க்கவேண்டும் அதற்கான வழியை நாம் ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் எத்தனையோ பல ஊடகங்கள் உள்ள நிலையில் அவை தமிழ் இனத்தின் பேரவலம் தொடர்பாக தனித்துவமாக செய்திகளை சேகரித்து போட முடியாத நிலையில் மேற்குலக ஊடகங்கள் தமிழ் மக்களின் பேரவலங்களை துணிச்சலுடன் வெளிக்கொண்டுவருவது மிகவும் போற்றத்தக்கது.


தமிழக தொலைக்காட்சிகள் களிப்பூட்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பில் எம்மை ஒரு மயைக்குள் தள்ளிவருகையில் மேற்குலகம் எமக்காக குரல்கொடுப்பது எமக்குள் ஒரு சிறிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி வருகின்றது.


சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலகில் பரந்து வாழும் அத்தனை தமிழ் மக்களும் ஒன்று திரண்டு போராடுவதற்கு தேவையான ஆதாரங்களை மேற்குலக ஊடகங்கள் மெல்ல மெல்ல வலுப்படுத்தி வருகின்றன. ஆனால் அதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டிய கடமை எம்மிடம் தான் உண்டு.


தமிழ் இன அழிப்பில் ஈடுபட்ட படை அதிகாரிகளை வெளிநாடுகளில் தூதுவர்களாக நியமிப்பதன் மூலமும், அவர்களை ஐ.நா சபைக்கு அழைத்து செல்வதன் மூலமும் அவர்களின் மீதுள்ள குருதிக்கறைகளை சிறீலங்கா அரசு கழுவ முற்படுகின்றது. ஆனால் அதனை தடுத்து நிறுத்தி அனைத்துலக நீதிமன்றத்தில் சிறீலங்கா அரசினை நிறுத்த வேண்டிய கடமையும், அதற்கான பலமும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு உண்டு. அதற்கான காலம் இன்னும் கடந்துவிடவில்லை.


ஆனால் காலத்தை நாம் தவறவிட்டால் வரலாறும் எம்மை ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை.




source:sankathi



www.thamilislam.co.cc

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

தமிழ்ப் புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும ்!

தமிழ்ப் புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும்! – சண் தவராஜா

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தம் என வர்ணிக்கப்பட்ட யுத்தத்தில் மிகப்பெரிய மனித அவலத்தைச் சந்தித்த சுமார் 3 இலட்சம் மக்கள் இன்று வன்னியின் வதைமுகாம்களில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதைக்கு ஒப்பான வகையில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைந்தள்ள வேளையிலும் அவர்களின் மீளக் குடியேற்றம் தொடர்பிலான தீர்க்கமான நடவடிக்கை எதனையும் சிங்கள அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. 180 நாட்களுக்குள் அவர்களை மீளக் குடியமர்த்தப் போவதாக அறிவித்திருந்த அரசு, தற்போது அந்த அறிவிப்பிலிருந்து முற்றிலுமாகப் பின்வாங்கியிருக்கின்றது.

‘உலகில் யுத்தம் நடந்த இடங்களில் பார்த்திராத அவலத்தை சிறி லங்காவில் கண்டேன்” என ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்ததன் மூலம் யுத்தத்தின் சேதாரங்கள் என்னவென்பதை அவர் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார். இது தவிர, பன்னாட்டு சுதந்திர ஊடகங்களும் அவ்வப்போது யுத்த அவலங்களையும், வன்னித் தடுப்பு முகாம்களில் அப்பாவித் தமிழ் மக்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் தொடர்பிலும் தகவல்களை வெளியிட்டு வந்தன. இந்தத் தகவல்கள் முழுமையானவை அல்ல என்பதை, சிறி லங்கா மனித உரிமைகள் சட்டத்தரணியும், இமடார் நிறுவனத் தலைவியுமான கலாநிதி நிமல்கா பெர்ணாண்டோ அண்மையில் தமிழ்நாட்டில் வைத்துத் தெரிவித்த கருத்துக்கள் உறுதிப் படுத்துகின்றன.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் பேசுகிறோம் என இதுநாள்வரை கூறி வந்த பல தமிழர்களே, இன்று வாய்மூடி மௌனிகளாக உள்ள நிலையில் தனது உயிருக்கு நிச்சயம் ஆபத்து உள்ளது என்பதை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டும் கலாநிதி நிமல்கா இவ்வாறு தைரியமாகக் கருத்து வெளியிட்டமைக்காக அவரை நிச்சயமாகப் பாராட்டியே ஆக வேண்டும்.

இலங்கைத் தீவிலே வாழுகின்ற தமிழர்களை சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டுக் கொடுமைப்படுத்தி வருகையில், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகையில், அந்தச் சமூகத்தின் மத்தியிலே இருந்து – எதுவித உள்நோக்கமும் இன்றி – இத்தகைய கருத்துக்கள் வெளிவருவது என்பது ஆறுதலான ஒரு விடயம்.

அதேவேளை, அவர் வெளியிட்ட தகவல்கள் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளன. குறிப்பாக, இளம் தமிழ்ப் பெண்கள் சிங்களப் படையினரின் பாலியல் பசியைத் தீர்க்கப் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தமை கண்ணில் நீரை வரவழைக்கிறது.
யுத்தம் மிகவும் உக்கிரமமாக நடைபெற்ற இவ்வருட ஆரம்பத்தில் ‘தமிழ்ப் பெண்களை உங்களுக்கு இரையாக்கிக் கொள்ளுங்கள். ஆண்களை கடலுக்கு இரையாக்குங்கள்” என சிறிலங்காவின் முன்னை நாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்ததாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

இந்தச் செய்தி உண்மையோ, பொய்யோ நாமறியோம். ஆனால், நடைபெறுகின்ற சம்பவங்களைப் பார்க்கும் போது சரத் பொன்சேகாவின் பாதையையே படையினர் பின்பற்றுவது தெரிகின்றது.

வன்னித் தடுப்பு முகாம்களில் நடைபெற்றுவரும் அவலம், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் அந்த மக்களின் துயரம் ஒட்டு மொத்தமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகள் எந்தவொரு மட்டத்திலும் எடுக்கப் படுவதாகத் தெரியவில்லை. மறுபுறம், ஈழத் தமிழர்கள் மத்தியில் இருந்தும் காத்திரமாக குரல் எழுப்பப்படுவதாகவும் தெரியவில்லை.

தடுப்பு முகாம் மக்களின் துயரம் முடிவடையாத சூழலில் பருவமழை வேறு அந்த மக்களை வெகுவாகச் சோதித்து வருகின்றது. மழை காரணமாக உருவான வெள்ளத்தினால் முகாம்களுக்குள் இருக்க முடியாத நிலையில் கொட்டும் மழையிலும் வெட்டவெளியில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கப் பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை.

இந்த வேளையில் ஈழத் தமிழர் மத்தியில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே இந்த மக்களின் விடுதலைக்காகத் தொடர்ச்சியாகக் குரல் தந்து வருகின்றது. இந்தக் குரலுக்கு ஆதரவாக, பின்பலமாக இருக்க வேண்டிய புலம்பெயர் தமிழர்கள் சீரான தலைமை இல்லாத நிலையில் சிதறுண்டுபோய்க் கிடக்கின்றார்கள். இந்த நிலை வெகுவிரைவில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

‘எங்கள் பகைவர் ஓடி மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே” என்ற வாசகம் இன்று பொய்த்துப் போயுள்ளது. தமிழர்கள் மத்தியலே இன்று முன்னெப்போதையும் விட அதிக அளவிலான பிளவுகளும், பேதங்களும், அவநம்பிக்கையும் நிலவி வருகின்றன.

இதற்கெல்லாம் காரணம் எம் மத்தியிலே சரியான அரசியல் தலைமை இல்லாமையே.
ஆனால், மீகாமன் இல்லாத கப்பல் போன்று தமிழ்ச் சமூகம் தொடர்ந்தும் நீண்ட காலத்துக்குப் பயணிக்க முடியாது. எனவே, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான ஒரு உறுதியான, பலமான, விவேகமான தலைமைத்துவம் அவசரமாகவும், அவசியமாகவும் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதில், தமிழ்ப் புத்திஜீவிகள் குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்கள் அதிக கவனஞ் செலுத்த வேண்டும்

source:nerudal

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

எம் தமிழீழ மக்களுக்காக…..வணங்கா மண்ணிலிருந்து அடங்கா தமிழன்

ஓர் குறுகிய இடைவெளிக்குப் பின்பு உங்களை ஓர் ஒலிப்பேழயின் வழியாக சந்திப்பதையிட்டு எமது தலைவனின் வழியில் உருவான தமிழன் என்ற ரீதியில் சற்று ஆறுதல் அடைகின்றேன்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கதற வைக்கும் காட்சிகள்

அகப்பட்டதுண்டு துணிகளைக் கொண்டு பெற்றுத் தாலாட்டிய பிஞ்சுப் பிள்ளைகளின் சிதறிய உடல்களை இயன்றமட்டும் பொதிந்து, மண் தோண்டி அடக்கம் செய்கிற அவகாசம் இல்லாத காரணத்தால் வீதியில் எரிந்தும் எரியாமலும் நின்ற வாகனங்களுக்குள் சொருகி வைத்துச் சென்ற தாய்மார்களின் சோக வலியை நீங்கள் அறிவீர்களா? முள்ளி வாய்க்கால் – வட்டுவாகல் பிரதான வீதியில் மே-17-ம் தேதி நான் கண்டேன். அழுது புலம்பும் இடைவெளி கூட இல்லாத, கடவுளால் சபிக்கப்பட்ட இனமாய் நாங்கள் ஆனோம்.

கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன்.

அங்குமிங்கும் சிங்களக் காட்டேறிகள் ஏவிக் கொண்டிருந்த எறிகணைகள் கூவிக் கூவிப் பறந்து பாய்ந்து கொண்டிருக்க வீதியோர மரத்தடியொன்றின் கீழ் தாயொருத்தி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவன் சற்று முன்னர்தான் எறிகணை வீச்சில் இறந்திருக்க வேண்டும். இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் கணவனை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த இளம் தாய் பிரசவ வலியில் வீறிட்டுக் கதறிய அவலத்தின் கோலத்தை எப்படி நான் மறப்பேனய்யா?

மல்ட்டிபேரல் (ஙமகபஒ இஆததஊக) எறிகணைகளின் அதிர்வில் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை முல்லைத்தீவு மண்ணில் விழுந்தது. குழந்தையின் காலைப்பிடித்து இழுத்து அந்தத் தாய் தன் மார்போடு போர்த்தினாள். அவ ளுக்கு உதவ உறவுப் பெண்களோ வேறெவருமோ அங்கிருக்கவில்லை. பிறந்த பிள்ளையை அணைப்பதா, அருகில் இறந்து கிடக்கும் கணவனுக்காய் அழுவதா என்று தெரியாமல் இடது கையால் கணவனின் உடலையும் வலது கையால் இப்போது பெற்ற தன் செல்வத்தையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறிய காட்சியை எப்படி நான் பதிவு செய்வேன்?

தன் ஆடைகளை ஒதுக்கி ஒழுங்கு செய்யும் பிரக்ஞை கூட இல்லாதவளாய் அந்தத்தாய் அழுது கொண்டிருந்தாள். உடல் சோர்ந்தவளாய் மண்தரையில் தலை சாய்ந்து படுத்தவரை மட்டும் தூரத்தில் நின்று பார்த்தேன். முதல் தாகம் தீர்க்க தாய்ப் பாலுக்காய் அக்குழந்தை வீறிட்டு அழுததையும் கண்டேன். ராஜபக்சேவும், கோத்தபய்யாவும் ரத்தமும் சதையும் சேரப் பிணம் தின்னும் கொடிய ராட்சதக் கழுகுகளாய் என் கண்முன் நின்றார்கள். நீங்கள் அழிவீர்களடா… சிங்களம் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் தீர வேண்டுமடா… என்றெல்லாம் மனது கொதித்தது.

கையறு நிலையின் கைதியாய் முன் நகர்ந்தேன். அந்தத் தாயும் பிள்ளையும் என்ன ஆனார்களோ என்று எண்ணியே பல இரவுகள் தூக்கமும் நிம்மதியும் இழந்து தவிக்கிறேன். இப்படித்தான் மே முதல் வாரம் முள்ளி வாய்க்கால் தற்காலிக வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். ஓலைக் குடிசைதான் அன்று எங்களின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு. குடிசையின் தாழ்வாரத்தில் குண்டுவீச்சில் தாய், தகப்பன் இருவரையும் இழந்த சுமார் ஒரு வயதுக் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அதே குண்டுவீச்சில் தன் இரு கால்களையும் இந்தக் குழந்தை இழந்திருந்தது. கிட்டப் போய் அக்குழந்தையை கண்களில் நீர் மல்கப் பார்த்தேன். குளு கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் வயரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டே என்னைப் பார்த்து அக்குழந்தை சிரித்தது. நடந்த வற்றின், நடந்து கொண்டிருப்பவற் றின் கொடூரங் களும், விபரீதங் களும் அந்தக் குழந் தைக்குப் புரிந்திருக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ தாதியிடம், “”தாய், தகப்பன்…” என்று ஆரம்பிக்கவே, “”எல்லாம் இப்போது நான்தான்” என்று கூறியபடியே என்னை நிமிர்ந்து நோக்கி குடிசைக்கு சற்று தூரத்தில் குவியலாய் கிடந்த தமிழர் சடலங் களைக் காட்டினார். “”இதுக்குள்ளதான் இந்தக் குழந்தையிண்ட தாயும் தகப்பனும்” என்றார்.

பெற்றோரை இழந்து, இரண்டு கால் களையும் இழந்து என்ன நடந்ததென்றே தெரியாது குளுகோஸ் ஒயரை பிடித்து விளையாடிப் புன்னகைத்த இந்தக் குழந்தையின் முகமும், சற்றுமுன் வீதியோரத்தில் பிறந்து தாயின் முதற் பாலுக்காய் வீறிட்டு அழுத அந்தப் பிஞ்சின் முகமும் என்னை விட்டு அகல மறுக்கின்றன. எனக்கு மரணம் வருகின்றவரை இந்த அவலத்தின் காட்சிகள் என்னை விட்டு நீங்குமென்றும் நான் நினைக்கவில்லை.

மனதில் வெறுப்பும், நெருப்பும் விரக்தியு மாய் -இப்படியா எங்கள் விடுதலைப் பய ணம் முடிவுறவேண்டுமென்ற வேதனையுடன் தொடர்ந்து நடக்க முயன்றேன். அவலத்தின் அடுத்த காட்சி அங்கே அரங்கேறிக்கொண்டி ருந்தது.

வீதியை விட்டு சற்று தொலை. எறிகணை விழுந்து வெடிக்கிறது. பிளிறிச் சிதறிய புழுதி அடங்கியபின் பார்க்கிறேன். மரத்தடியில் இருந்த ஒரு தமிழ்க் குடும்பம் கண்ணெதிரே கணப்பொழுதில் சிதறிக் கிடக்கிறது. எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுகாயமடைந்த தகப்பனின் கால்களும் கைகளும் விட்டுவிட்டுத் துடிப்பது மட்டும் தெரிகிறது. எறிகணை விழுந்தபோது அந்தத் தாய் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையை இறுக அணைத்தபடியே அத்தாய் சிதைந்துபோய் உயிர் பிரிந்து கிடக்கிறார். அவளது இடதுபுற மார்பில் ஷெல் குண்டு பாய்ந்து சிதைத்திருக்கிறது. இப்போதும் கொடூரத்தின் கொலைவெறி புரியாத அப்பிஞ்சுக் குழந்தை தாயின் வலதுபுற மார்பை பாலுக்குத் தேடுகிறது.

பக்கத்தில் ஓர் சிறுமி நான்கு வயது இருக்கலாம், முந்திய பிள்ளையாக இருக்கக் கூடும். அந்தப்பிள்ளை கையில் ஓர் தட்டுடன் “அம்மா பசிக்குது… அம்மா பசிக்குது…’ என்று அழுதுகொண்டிருந்தது. தகப்பனுக்கு அருகில் பையன். சுமார் ஆறு வயது இருக்கலாம். “”அப்பா… எல்லாரும் போகினும் வாங்க, போவோம் ஆமி வறான், எழும்புங்கோ அப்பா… தண்ணீர் விடாக்குது… கெதியா எழும்புங்கோ அப்பா…” என்று குளறிக்கொண்டிருந்தான்.

நின்று நிதானித்து அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்று சிந்திக்கிற நிலையிலோ, ஒருவருக்கொருவர் உதவும் நிலையிலோ ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் நிலையிலோ எவரும் இருக்கவில்லை. எங்கும் மரணம் வெறியாடிக்கொண்டிருந்தது. ஈவிரக்கம் ஏதுமின்றி இன அழித்தலின் இறுதி காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. மரணத்தின் நிலமாய் தமிழ் ஈழம் நின்றது. இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் முகர்ந்து தேடிய அப் பச்சிளங்குழந்தை எமது அவலநாளின் அழியா காட்சியாய் காலம் முழுதும் நிற்கும்.

தொடர்ந்து நகர்ந்தேன். தேசியத் தலைவர் அடிக்கடிச் சொல்வாரே… “”அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு” என்று… அப்படிச் சொன்னதோடு நிறுத்தாமல் சிங்களனுக்கும் நாங்கள் இப்படி ஈவிரக்கமின்றிக் கொடுமை செய்திருந்தால் ராஜபக்சேவும் கோத்தபய்யாவும் இந்த வெறியாட்டம் ஆடியிருக்கமாட்டார்களே… என்றெல்லாம் மனது எண்ணியது. முன்பொருமுறை சட்டக்கல்லூரி உரையொன்றில் தந்தை செல்வநாயகம் சொன்னாரே… “”தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது -கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்…” என்று, ஆம் கடவுளும் எம்மைக் கைவிட்ட நாளில் நா வறண்டு நடந்துகொண்டிருந்தோம். தமிழனாய் பிறந்ததையிட்டு என்னை நானே சபித்துக்கொண்டேன். உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது. மீண்டும் முன்பு நான் குறிப்பிட்ட உணர்வு… : “”ஐயா, ஒபாமாவே… கடைசி நம்பிக்கையாய், நீங்கள் ஏதாவது செய்வீர்களெனக் காத்திருந்தோமே… வானில் வந்த ஒவ்வொரு விமானத்தையும் பார்த்திருந்தோமே… ஏமாற்றி விட்டீர்களே….” என்று மனம் புலம்பியது.

(நினைவுகள் சுழலும்)

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மனித முகத்துடன் கூடிய மீன் -வீடியோ

மனித முகத்துடன் கூடிய மீன் -வீடியோ

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்-video

http://thamilislam.blogspot.com/2009/08/video.html

இன்று பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் உள்ள இராணுவ வதைமுகாமில், உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாத நிலையில் தமிழ் இளைஞர்களை நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சியான இந்த புகைப்படங்களும் காணொளிகளும் எவ்வாறு வெளிவந்தன என்று தொலைக்காட்சி சித்தரித்துள்ளது.

கண்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், பூட்ஸ் காலால் உதைத்து பின்னர் தமிழ் இளைஞரைச் சுடும் காட்ச்சியைப் பார்த்தும் நாம் சும்மா இருந்துவிட முடியுமா ? சாகப் போகிறோம் என்று தெரிந்து ஒன்றும் பேசாமல் நிசப்தமாக நிற்கும் ஒரு நிராயுதபாணியை சிங்கள அரக்கன் கொல்கிறானே. இரண்டாவதாகச் சுடப்படும் தமிழ்ச் சகோதரன் எந்தப்பக்கத்தில் இருந்து வெடிவெடித்து சன்னம் பாயப்போகிறது என்று தெரியாமல் தலையை அங்கும் இங்குமாக அசைக்கிறான் , அவன் நிலையைச் சற்றி நினைத்துப்பாருங்கள் தமிழர்களே ! இனியும் நாம் சும்மா இருக்க முடியுமா ? இதற்கான பதிலடியை நாம் எப்போதுகொடுக்கப்போகிறோம்.

தமிழர்கள் மீது இனப்படுகொலை நடக்கவில்லை என வாய்கிழிய குரல்கொடுத்துவரும், இலங்கை-இந்திய அரசுகள், மற்றும் அதன் நேச நாடுகள் வெட்கி நாணும் வகையில், இலங்கை இராணுவம் அரக்கத்தனமான காரியங்களில் ஈடுபடுகிறது. ஈராக்கில் பக்தாத் சிறையில் அமெரிக்க துருப்புக்கள் இவ்வாறு ஈராக்கியர்களைக் கொன்றுகுவித்தது.

ஆனால் பின்னர் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்கள், இலங்கைத் தீவில் நடப்பதை எந்த வெளிநாடுகளும் பாராமுகமாக இருக்கின்றன. அங்கே எம் தமிழ் உறவுகள் நாளுக்கு நாள் செத்துமடிந்தவண்ணம் உள்ளனர். தமிழ் இளைஞர்கள், மற்றும் யுவதிகளைக் முழு நிர்வாணமாக்கி கண்ணைக் கட்டி துப்பாகியால் ஈவிரக்கமின்றி சுடும் சிங்கள அரக்கர்களுடனா நாம் இனிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போகிறோம்.

எம் இனம் அங்கே சிறுகச் சிறுக வெளியுலகிற்குத் தெரியாமல் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே யதார்த்தம்.

புலம்பெயர் தமிழர்களே சிந்தியுங்கள் ! இனி நாம் என்னசெய்யப்போகிறோம் என்று.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கன்னித்தன்மை பரிசோதனை:14 பெண்கள் கற்பிழந்துள்ளது கண்டுபிடிப்பு?


கன்னித்தன்மை பரிசோதனை: இந்து மதவெறிக் கும்பலின் ஆணாதிக்க வக்கிரப்புத்தி

ஏழ்மையின் காரணமாகத் திருமணமாகாமல் இருக்கும் பெண்களுக்கு இலவசமாகத் திருமணம் செய்து வைக்கிறோம் எனக் கூறி, மணமேடை வரை அழைத்துச் சென்ற பிறகு, மணப்பெண் கன்னித்தன்மையுடன் இருந்தால்தான் திருமணம் என்று சொல்லி, அவர்களை இழிவுபடுத்திய கொடுமை மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசே இதனைச் செய்துள்ளது என்பதுதான் இன்னமும் கொடுமை. ‘முக்கிய மந்திரி கன்யாதான் யோஜனா’ (முதலமைச்சர் திருமண உதவித் திட்டம்) என்ற திட்டத்தின் மூலம் அம்மாநிலத்தில் இலவசத் திருமணங்கள் மாதந்தோறும் நடத்தி வைக்கப்படுகின்றன. இதில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்குச் சீதனமாக, ஒரு பெட்டியில் சமையல் பாத்திரங்களும், ஒரு கைபேசியும், 6500 ருபா ரொக்கமாகப் பணமும் வழங்கப்படும். 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட தொன்னூறாயிரம் தம்பதிகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் மாதம் 30-ஆம்தேதி இத்திட்டத்தின் கீழ் 152 தம்பதிகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைப்பதாக இருந்தது. ஆனால், திடீரென மணப்பெண்களின் கன்னித்தன்மை பரிசோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டால்தான், அவர்களுக்குத் திருமணம் நடத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர். அதன்படி, திருமணத்திற்காக வந்திருந்த மணப்பெண்கள் 152 பேருக்கும் உடனடியாக கன்னித்தன்மைப் பரிசோதனை நடத்தப்பட்டது. முடிவில் 14 பேர் தவிர்த்து மீதமுள்ள 138 பேருக்கு திருமணம் நடத்தப்பட்டது.
தங்களது திருமணத்திற்குக் கூட அரசிடம் கையேந்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டு, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மணமேடைக்கு வந்த பெண்களை இத்தகைய சோதனை மூலம் உளவியல் ரீதியாக வதைத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்களில் இருவர் போலீசில் புகார் செய்ததையடுத்து, இந்த விசயம் வெளிஉலகிற்குத் தெரியவந்து பெரும் அதிர்ச்சியை நாடெங்கும் உருவாக்கியது. காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகள் நாடாளுமன்றத்தில் இதனை விவாதிப்பதாகக் கூறி, அந்த ஏழைப் பெண்களை மீண்டும் அவமானப்படுத்தின.
முதலில் அவ்வாறு பரிசோதனை ஏதும் செய்யப்படவில்லை என்று மறுத்த பா.ஜ.க.வினர், பின்னர் பொதுவான உடல்நலப் பரிசோதனை மட்டும் நடத்தப்பட்டதாகக் கூறினார்கள். இறுதியாகக் குட்டு வெளிப்பட்டவுடன், தங்களது செயலுக்கு நியாயம் கற்பிப்பதற்காக “மணப்பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா எனப் பரிசோதித்தோம்; ஆனால் கன்னித்தன்மைப் பரிசோதனை எதுவும் நடைபெறவில்லை” என்று கூறினார்கள். இதன் மூலம் திருமணம் செய்ய வந்திருந்தவர்கள் அனைவரையும் ஏமாற்றுக்காரர்களாகச் சித்தரித்ததுடன், அரசுக்கு எதிராகப் புகார் கொடுத்த அந்த இரு பெண்களையும் மிரட்டி தங்களது புகாரைத் திரும்பப்பெற வைத்து, ஒரு வழியாகப் பிரச்சனைக்கு முடிவு கட்டியுள்ளனர். கற்பு நெறியைக் காப்பாற்றுவது எனும் பெயரில், பருவமடைந்த பெண்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்பாமல் அடுக்களையில் பூட்டிவைக்கும் சனாதானிகள், பெண்ணின் உடலில் உள்ள கன்னித்திரைதான் அவர்களது கன்னித்தன்மையைப் உறுதி செய்வதாகக் கருதுகிறார்கள். ஆனால், காட்டுமிராண்டித்தனமான இவ்வரையறை பெரும்பாலான உழைக்கும் பெண்களுக்கு அறிவியல்ரீதியாகப் பொருந்தாது. ஆண்களுக்கு நிகராக விவசாய வேலைகள், விறகு வெட்டுதல், தையல்வேலை உள்ளிட்ட கடினமான வேலைகளைச் செய்வதாலும் சைக்கிள் ஓட்டுவதாலும் இயல்பாகவே உழைக்கும் பெண்களில் பெரும்பாலானோர், கன்னிப்பரிசோதனை எனும் இந்த வக்கிரமான சோதனையில் தோல்வியடையவே செய்வர். விளையாட்டு வீராங்கனைகளுக்கும் கூட இது பொருந்தும். ஏழைப் பெண்களை இச்சோதனைக்கு உட்படுத்துவது என்பது ஆணாதிக்க வக்கிரம் மட்டுமல்ல; அடுப்பூதும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது எனும் பார்ப்பனியத் திமிரும் கூட. திருமண உதவித் திட்டத்திற்கு கன்னிப்பரிசோதனையை முன்நிபந்தனையாக்குவதன் மூலம், விதவைப்பெண்களும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் மறுமணம் செய்வதை நேரடியாகத் தடுத்து, பெண்களுக்கெதிராகக் காலந்தோறும் கொடுமை இழைத்துவரும் இந்துப் பார்ப்பனியத்தை பா.ஜ.க. அரசு நிலைநிறுத்த நினைக்கிறது. ஆண்-பெண் சமத்துவத்திற்கு எதிரானதாகக் கருதப்படும் இந்தப் பரிசோதனைக்கு உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் பா.ஜ.க. அரசு சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஏழைகளாக இருப்பதாலேயே அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் ஆளும் வர்க்கத் திமிரில் இது நடந்து கொண்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களில் பா.ஜ.க. வடமாநிலங்களில் மோசமாகத் தோற்றிருப்பினும், அதன் மக்கள் விரோதத் தன்மை கொஞ்சம்கூட மாறிவிடவில்லை. கணவனை இழந்த பெண்களை உடன்கட்டை ஏற்றிக் கொல்லும் சதியைக் கூச்சமின்றிப் போற்றும் அதன் சனாதனப் பாரம்பரியம் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. பா.ஜ.க. கும்பலின் ஆணாதிக்க பார்ப்பனீயக் கொடுமைதான் மத்தியப் பிரதேசத்தில் ‘கன்னிப் பரிசோதனை’ என்ற பெயரில் வக்கிரமாக அரங்கேறியுள்ளது. தன் மனைவியின் கற்பையே சந்தேகித்து அவளைத் தீக்குளிக்க வைத்த ஸ்ரீராமனைத் தேசிய நாயகனாகப் போற்றுபவர்களிடமிருந்து வேறு எதனை எதிர்பார்க்க முடியும்? -புதிய ஜனநாயகம், ஆகஸ்டு -2009

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized