மதுரை: மறைந்த கவியரசு கண்ணதாசனின் மகளான விசாலி கண்ணதாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார்.
கவியரசு கண்ணதாசனின் மகள் விசாலி. தந்தை வழியில் கவிதை எழுதுபவர், நல்ல பேச்சாளர். திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு டிவியில் நிகழ்ச்சி ஒன்றையும் வழங்கினார்.
இந்த நிலையில் விசாலி திடீரென கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள குட் ஷெப்பர்டு ஆலயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒயின், அப்பம் பெற்று கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளாராம் விசாலி. மேலும், தனது பெயரையும் ஜெனீபர் என மாற்றிக் கொண்டுள்ளார்.
அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதியவர் கண்ணதாசன். இந்த நிலையில் அவரது மகள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
source:http://thatstamil.oneindia.in/news/2010/07/11/poet-kannadasan-conversion-christianity.html