Sachin Tendulkar Rare Picture Collections
source:thanks to techshankar
Filed under Uncategorized
![]() |
|
Filed under Uncategorized
![]() |
|
Filed under Uncategorized
சென்னையிலிருந்து வாசகர் ஒருவர் தன் கம்ப்யூட்டரை ரிப்பேருக்குக் கொண்டு செல்கையில் அல்லது ரிப்பேர் செய்திடும் டெக்னிஷியன் வீட்டுக்கு வந்து பார்க்கையில் தன்னுடைய பெர்சனல் பைல்களை அவர் படிக்காமல் எப்படி தடுப்பது? என்று கேட்டிருந்தார். இது ஒரு சிக்கலும் சுவாரஸ்யமுமான கேள்வியாக இருந்தது. இன்னொருவர் மேட்டுப் பாளையத்திலிருந்து எழுதுகையில் தன் குழந்தைகள் மட்டும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் வகையில் யூசர் அக்கவுண்ட்களை எப்படி உருவாக்கலாம் என்று கேட்டிருந்தார். இந்த இருவருக்கு ஏற்பட்ட இந்த சந்தேகங்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். அதற்கான தீர்வுகளை இங்கு பார்க்கலாம்.
கம்ப்யூட்டரை ரிப்பேர் செய்திட எடுத்துச் செல்லும்போதும் அல்லது வீட்டில் வந்து ஒருவர் ரிப்பேர் செய்திடும் போதும் அவர் நம்முடைய பெர்சனல் பைல்களைப் பார்ப்பது நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். வீட்டிலாவது நாம் அருகில் இருந்து ரிப்பேர் செய்பவர் என்ன என்ன பைல்களைப் பார்க்கிறார் என்று காணலாம்; ஆனால் கடையில் கொடுக்கும்போது என்ன செய்வது? அதேபோல்தான் குழந்தைகளுக்கும். அவர்கள் தேவையில்லாமல் மற்றவர்களின் டாகுமெண்ட்களைக் கையாள வேண் டாமே? இவர்களுக்குத் தனித்தனியே யூசர் அக்கவுண்ட்களை உருவாக்கி அவற்றைப் பயன்படுத்தச் சொல்வதே நல்லது. எப்படி தனித்தனியே யூசர் அக்கவுண்ட்களை உருவாக்கலாம் என்று பார்ப்போம்.
முதன் முதலில் நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பியைப் பயன்படுத்தத் தொடங்கிய போது ஒரு அக்கவுண்ட்டில் தொடங்கி இருப்பீர்கள். அந்த அக்கவுண்ட்டிற்கு அட்மினிஸ்ட்ரேட்டர் சலுகைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் யார் யார் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம் என்பதனை நீங்கள் கட்டுப்படுத்தலாம்; புதியவர்களுக்கு அனுமதி தரலாம்; உங்கள் பைல்களை எடிட் செய்திடலாம்; மற்ற யூசர்களின் பைல்களையும் எடிட் செய்திடலாம். இந்த பயன்கள் இல்லாமல் ஒரு யூசர் அக்கவுண்ட்டை உருவாக்கி கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுத்துவிடலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம்.
முதலில் Start கிளிக் செய்து பின் Control Panel தேர்ந்தெடுக்கவும். இப்போது கண்ட்ரோல் பேனல் விண்டோ கிடைக்கும். இதில் User Accounts என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் யூசர் அக்கவுண்ட்ஸ் விண்டோவில் Create a New Account என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். இப்போது New Account விஸார்ட் கிடைக்கும். இதில் விஸார்ட் உங்களை புது அக்கவுண்ட்டுக்கான பெயரைக் கேட்கும். குழந்தைகளுக்கு எனில் அதனை அடையாளம் கொள்ளும் வகையில் Children எனக் கொடுக்கவும். அதன் பின் இந்த அக்கவுண்ட் எந்தவித டைப்பாக இருக்க வேண்டும் என கேட்கப்படும். குறைந்த அளவே சுதந்திரம் கொடுப்பது உங்கள் குறிக்கோள் என்பதால்Limited User என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் Create Account என்பதில் கிளிக் செய்தால் அக்கவுண்ட் உருவாக்கப்படும். இப்போது நீங்கள் விரும்பியபடி அக்கவுண்ட் உருவாக்கப்பட்டுவிட்டது. இதிலிருந்து அந்த யூசர் கம்ப்யூட்டருக்குள் நுழையலாம். அவருடைய பாஸ்வேர்ட் அல்லது அவர் உருவாக்கும் பைல்களை மாற்றலாம். இவ்வாறே கம்ப்யூட்டரை ரிப்பேர் கடைக்கு எடுத்துச் செல்கையில் இதே போன்று ஒரு அக்கவுண்ட்டை உருவாக்கி எடுத்துச் சென்று அவர்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து பார்க்க அந்த அக்கவுண்ட்டைப் பயன்படுத்தச் சொல்லலாம்.
source:dinamalar
Filed under Uncategorized
KIDS Zone tamil songs videos::குழந்தைகள் பாட்டு வீடியோ
எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method
Filed under Uncategorized
KIDS Zone tamil songs videos::குழந்தைகள் பாட்டு வீடியோ
எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method
Filed under Uncategorized
பலவகையான யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ்களை வடிவமைத்து பன்னாட்டளவில் விற்பனை செய்திடும் கிங்ஸ்டன் நிறுவனம், அண்மையில் லாக்கருடன் கூடிய யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ரகசியமாகச் சுருக்கப்படும் வகையில் என்கிரிப்ஷன் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். மற்றும் அதிகக் கொள்ளளவில் டேட்டாவினை சேமித்து வைக்கலாம். நம் அனுமதியின்றி இந்த பிளாஷ் டிரைவினை மற்றவர்கள் பயன்படுத்துவதனைத் தடுப்பதுடன், பட்ஜெட்டில் இது போன்ற சாதனங்களை வாங்கிப் பயன்படுத்து வோருக்கான விலையில் இது கிடைக்கிறது என கிங்ஸ்டன் நிறுவனம் அறிவித்துள்ளது. விண்டோஸ் 7 முதல் விண்டோஸ் 2000 வரையிலான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இதனை இயக்க முடியும். மேக் கம்ப்யூட்டருடனும் இது இயங்கும். 256 பிட் அளவில் ஹார்ட்வேர் அடிப்படையில், பதியப்பட்ட தகவல்களை இதன் மூலம் சுருக்க முடியும். இந்த டிரைவினை, உரிமையாளர் அனுமதியின்றி எவரேனும் பயன்படுத்தி டேட்டாவினைப் படிக்க முயன்றால், பத்தாவது முயற்சியில், இதனுள்ளாக அமைந்த பாதுகாப்பு வழி டிரைவை லாக் செய்துவிடும்.
கூடுதலாக மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளும் வகையில் இடம் ஒதுக்கியும் இந்த டிரைவை இயக்கலாம்.
டேட்டா இழப்பு, திருட்டு ஆகியவற்றினால் ஏற்படும் சேதம் மதிப்பிட முடியாதது. எனவே தான் அந்த தொல்லையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் வழியாக, கிங்ஸ்டன் நிறுவனம் இந்த வகை டிரைவினை வடிவமைத்து வழங்கியுள்ளது. இதனால் நம் மதிப்பு மிக்க டேட்டாவினைப் பாதுகாப்பாக வைத்துள்ளோம் என்ற நிம்மதியுடன் நாம் இருக்க முடியும்.
"2.58 x 0.71 x 0.4" என்ற அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிரைவ் யு.எஸ்.பி. 2.0 வரைமுறைகளுக்கான வழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இவை தண்ணீரினால் சேதமடையாத வகையில் வாட்டர் புரூப் தன்மை கொண்டது. இவை 4,8, 16 மற்றும் 32 ஜிபி அளவுகளில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.1,250, ரூ.1,850, ரூ.4,850 மற்றும் ரூ.8,350 ஆகும்
source:dinamalar
Filed under Uncategorized
Chema Madoz book. Enjoy also these creative artworks.
Filed under Uncategorized
உமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு !?! முன்னுரை: 2007ம் ஆண்டின் கடைசியில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு எழுத்து விவாதம் புரிய ஒரு அழைப்பு விடுத்து இருந்தேன். அதற்கு இவ்வாண்டு (2010) பீஜே அவர்கள் "எழுத்துவிவாதம் முடியாது, நேரடி விவாதம் புரிய தயாரா?" என்று கேட்டு இருந்தார், அதற்கு நான் முடியாது, எழுத்துவிவாதம் என்றால் ஒப்புக்கொள்கிறேன் என்று பதில் அளித்தேன், அதனை இங்கு படிக்கவும்: ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும் (http://isakoran.blogspot.com/2010/01/1.html).
இதற்கு பீஜே அவர்கள், "எழுத்து விவாதத்தை நான் ஏற்கமாட்டேன், அப்படி ஏற்கவேண்டுமென்றாலும், விவாதம் புரிபவர் நேரடியாக வரவேண்டும், விலாசம் தரவேண்டும், தந்தையின் பெயரை தரவேண்டும், அதன் பிறகு தான் ‘விவாதம் எழுத்தா… நேரடியா’ என்று தீர்மானம் எடுக்கப்படும் என்று கூறிவிட்டார்". மட்டுமல்ல, இஸ்லாமிய அறிஞர்களுக்கு அருமையான ஒரு ஆலோசனையையும் பீஜே அவர்கள் கொடுத்துள்ளார்.
ஒரு மூத்த இஸ்லாமிய ஊழியர் எப்படியெல்லாம் வார்த்தைகளை உபயோகப்படுத்தியுள்ளார் என்பதை இப்போது காணலாம்.
Source: http://www.onlinepj.com/vimarsanangal/kalla_kiruthavar_1
பீஜே அவர்கள் எழுதியது
இதற்கு நமது பதில்
கடிதம் மூலம் விவாதம் என்றாலும் நேரடி விவாதம் என்றாலும் விவாதிப்பவர் யார் என்பது தெரிய வேண்டும். ஏதோ ஒரு பெயரில் ஒளிந்து கொண்டு எதையாவது எழுதுபவனுடன் விவாதிப்பது நிழலுடன் விவாதிப்பதாகும்.
ஈஸா குர்ஆன்
பீஜே அவர்களே நான் "எதையாவது" எழுதுபவன் அல்ல, உண்மை இஸ்லாமை தமிழ் முஸ்லீம்களுக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இஸ்லாம் குறித்து நீங்கள் உங்கள் சொற்பொழிவுகளில் சொல்லாத, சொல்லமுடியாத விஷயங்களை நான் உங்கள் ஆதார நூல்களிலிருந்து எடுத்துச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் (இஸ்லாமியர்கள்) எப்படி விமர்சித்தாலும் மற்றவர்கள் நல்லவர்களாக நடந்துக்கொள்வதால் தைரியமாக நீங்கள் மேடையில் பேசுவீர்கள். ஆனால், எங்கள் நிலை இப்படி இல்லையே.
"எங்கள் உயிரினும் மேலான எங்கள் நபிப் பற்றி அவதூறாக பேசிவிட்டார் என்றுச் சொல்லி, வன்முறையில் ஈடுபட காத்திருக்கும் அமைதி மன்னர்கள் சிலர் இஸ்லாமில் இருப்பதால் தான், முகத்தை மறைத்து எழுதவேண்டியுள்ளது".
இஸ்லாமியர்களின் வெறி எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணத்தை பாருங்கள்.
பாங்களாதேஷ் நாட்டில் ஒரு இஸ்லாமியர் ஒரு நகைச்சுவை கார்ட்டூனை வரைந்தார், தான் வேலை செய்யும் பத்திரிக்கையில் பிரசுரித்தார். அதாவது ஒரு சிறுவன் கையில் பூனையை வைத்திருப்பான், அப்போது ஒரு இஸ்லாமியர் அவரிடம் இந்த பூனையின் பெயர் என்ன என்று கேட்டபோது, அந்த சிறுவன் இதன் பெயர் "முஹம்மது பூனை" என்று சொன்னானாம். அதாவது, இஸ்லாமியர்களில் அனேகர் தங்கள் பெயர்களில் "முஹம்மது" என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்வது வழக்கமாக இருப்பதால், அந்த சிறுவன் அப்படிச்சொன்னான்.
நடந்தது என்ன? வன்முறை வெடித்தது. கார்ட்டூன் வரைந்த அந்த வாலிபன் மன்னிப்பு கோரினான், நான் வேண்டுமென்று இப்படிச் செய்யவில்லை, தெரியாமல் நடந்துவிட்டது என்று கூறினான், அந்த செய்தித்தாளும் மன்னிப்பு கோரியது. வன்முறை குறையவில்லை, அதனால் அந்த வாலிபனை காவலர்கள் கைது செய்து பாதுகாப்பு வேண்டி சிறையில் அடைத்தாரகள்.
இந்த கார்ட்டூனை நைஜீரியாவில் சில அமைதி மன்னர்கள் இணையத்தில் கண்டு, நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வேறு கண்டத்தில் வாழும் நைஜீரிய கிறிஸ்தவர்களை தாக்கி கொன்றார்கள்.
புத்தி என்று ஒன்று இருந்தால், ஒரு இஸ்லாமியரால் பாங்களாதேஷ் நாட்டில் தவறுதலாக வரைந்த ஒரு கார்டூனுக்காக நைஜீரியாவில் கொலை செய்வார்களா? வன்முறையில் ஈடுபடுவார்களா?
Image: http://www.islam-watch.org/Assets/Aalpin_Muhammad_Cartoon.jpg
இந்த ஒரு உதாரணமே போதும் என்று நினைக்கிறேன்.
பீஜே அவர்கள் எழுதியது
விவாதத்தில் ஒழுங்காக வாதங்களை எடுத்து வைக்கா விட்டால் அத்னால்கேவலம் வரும் என்ற் அச்ச்ம் தான் ஒருவனை சரியாக விவாதிக்க வைக்கும். உண்மையின் அடிப்படையில் விவாதிக்க வைக்கும். முகமூடி போட்டுக் கொண்டவனுக்கு இந்த நிலை இல்லை.
ஈஸா குர்ஆன்
பீஜே அவர்களே! ஒருவன் நேர்மையானவனாக இருந்தால், உண்மையுள்ளவனாக இருந்தால், எழுத்து மூலமாக பொய்களை வீசவேண்டிய அவசியமென்ன? ஆனால், நேர்மையில்லாதவன் தன் பிழைப்பிற்காக பொய்களையும், நீதியை அநீதி என்றும் அநீதியை நீதி என்றும் மேடையிலும் பேசுவான். ஈஸா குர்ஆன் தளம் மூன்று ஆண்டுகளாக செயல்படுகிறது. அனேக கட்டுரைகள் உள்ளன. இதே போல, ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளமும் உள்ளது, இன்றுவரை கிட்டத்தட்ட 100 கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு நான் சவால் விடுகிறேன், உங்களால் முடிந்தால் எங்கள் கட்டுரைகளை பதித்து, அதற்கு பதில் தாருங்கள். அப்போது எனக்கு அவமானம், கேவலம் தானாக வரும். பதில் கொடுக்க தயாரா? எங்கள் தளங்களின் தொடுப்புக்களை கொடுக்க தயாரா?
நான் பதிக்கும் கட்டுரைகளில் சொல்லப்படும் செய்திகள் உண்மையா இல்லையா என்பதை அவைகளை படிப்பவர்களுக்கு புரியும். மற்றும் எங்கள் கட்டுரைகளில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பதை உங்களைப் போன்றவர்கள் தங்கள் தளங்களில் எங்கள் கட்டுரைகளின் தொடுப்புக்களை கொடுக்காமலேயே பதில் எழுதும் நிலையை கவனித்தாலும் தெரிந்துவிடும்.
பீஜே அவர்கள் எழுதியது
எனவே ஈஸா நபிக்குத் தான் தந்தை இல்லை என்பதை நம்ப முடியும். அதற்காக இவர்களுக்கும் தந்தை இல்லையா? முகவ்ரி இல்லையா? எழுத்து மூலம் விவாதிப்பது என்றாலும் அதற்காக ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
ஈஸா குர்ஆன்
ஒருவரின் முகவரி தெரிந்தால் தான் நீங்கள் நம்புவீர்களோ…
ஒருவரின் முகத்தை பார்த்தால் தான் அவர் பேசுவதில் உண்மை இருக்கும் என்பதை நம்புவீரகளோ?
ஒப்பந்தம் என்றால் கட்டுரைகளிலும், மெயில்களிலும் எழுதி அனுப்பிகொண்டு, அவைகளை தங்கள் தளங்களில் பதித்து அதன் படி நடந்துக்கொண்டால் அது ஒப்பந்தமாகாதோ?
ஒரு மனிதனுக்கு அவன் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகளே போதும், உண்மையுள்ளவனாக நடந்துக்கொள்வதற்கு. நேர்மை மேடையில் மட்டுமல்ல, எழுத்துக்களிலும் இருக்கவேண்டும்.
நீங்கள் எத்தனை மேடையில் பேசியிருக்கிறீர்கள், எவ்வளவு பொய்யையும் புரட்டையும் பேசியுள்ளீர்கள், நீங்கள் உண்மைக்கும் சத்தியத்திற்கும் பயந்து நெர்மையானவராகவா நடந்துக்கொண்டீர்கள்? வாய்க்கு வந்தபடி பைபிள் வசனங்களுக்கு பொருள் கூறியுள்ளீர்கள். சரியாக ஆராயாமல் உங்கள் உள்ளத்தில் பட்டதெல்லாம் சொல்லியுள்ளீர்கள், கேட்க ஆள் இல்லை என்ற நினைப்பை விட்டுவிடுங்கள். கர்த்தருக்கு சித்தமானால், இனி உங்களின் நேர்மையை சோதிக்கும் பதில்கள் உங்கள் வரிகளிலிருந்தே வெளிக்காட்டுவோம். கிறிஸ்தவம் பற்றியும், இயேசு பற்றியும் நீங்கள் கூறியுள்ள, எழுதியுள்ள அனைத்து விமர்சனங்களுக்கும், பொய்களுக்கும் பதில்கள் சொல்லப்போகிறோம், அப்போது தெரியும், யார் உண்மை பேசுகிறார்கள் யார் பொய்யை பேசுகிறார்கள் என்று.
முஸ்லீம்கள் நேர்மையானவர்களாக இருந்தால், வன்முறையில் ஈடுபடாதவர்களாக இருந்தால் எங்களைப் போன்றவர்கள் ஏன் மறைந்து இருந்து எழுதவேண்டும்?
பீஜே அவர்கள் எழுதியது
தன்னை அடையாளம் காட்டி விட்டு விவாதம் பற்றி பேசட்டும். அதன் பின் எழுத்து விவாதமா நேரடி விவாதமா என்பது பற்றி முடிவு செய்யலாம் என்று பதில் கொடுங்கள்.
ஈஸா குர்ஆன்
உங்களின் இந்த வரிகள் மூலமாகவே தெரிந்துவிடுகிறது நீங்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள் என்று, விவாதம் புரிய அல்ல, விவகாரம் செய்ய.
பீஜே அவர்கள் எழுதியது
இந்த இடத்தில் முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு முக்கிய ஆலோசனை ஒன்றை நாம் சொல்ல வேண்டியுள்ளது.
முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாம் குறித்து விமர்சனம் செய்தால் அவர்களை இரண்டு வகையாக பிரித்து பார்க்க வேண்டும். முகவரியோடு விமர்சித்தால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். நாமும் சில கேள்விகள் கேட்க வேண்டும். முகவரி இல்லாமல் நீங்கள் குறிப்பிடுவது போல் பெட்டையைப் போல் ஒளிந்து கொண்டு எதையாவ்து எழுதினால்எழுத்துவதற்கு பதில் கொடுக்காமல் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.
ஈஸா குர்ஆன்
நல்ல ஆலோசனை.
ஆனால், நாங்கள் அப்படி இல்லை, ஒருவர் விமர்சித்தால் அவர் பெயரைச் சொன்னாலும் பதில் தருவோம், பெயர் குறிப்பிடாமல் இருந்தாலும் பதிலைத் தருவோம், அவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மரித்து மண்ணோடு மண்ணாக மாறி அழிந்துவிட்டவராக இருந்தாலும் பதிலைத் தருவோம்.
ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை என்றுச் சொன்னாளாம். அது போல தான் உங்கள் வாதம் உள்ளது. தவறாக யாராவது விமர்சித்தால் உடனே அதற்கு பதில் கொடுத்து சத்தியத்தை நிலை நாட்டுவதை விட்டுவிட்டு, பெயர் தெரிந்தால் தான் முகம் காட்டினால் தான் நான் பதில் கொடுப்பேன் என்பதிலிருந்து தெரிந்துவிடுகிறது…. இஸ்லாமை எழுத்துக்கள் மூலமாக காப்பாற்ற முயற்சிப்பது மிக மிக கடினம் என்று.
பீஜே அவர்கள் எழுதியது
பைபிளீல் உள்ள செக்ஸ் கதைகள், ஒருத்தன் பொண்டாட்டியை ஒருத்தன் எடுத்துக் கொள்வது, இன்னும் சொல்லி முடியாத அசிங்கங்களைக் கேட்டுஇதர்கு பதில் சொல் என்று கேடக் வேண்டும். பாதிரியார் லீலைகைள்க்ன்னிகாஸ்திரி லீலைகள் குறித்து ஆதாரப்பூர்வமான் செய்திகளை எழுதிகடுமையாக் விமர்சிக்க வேண்டும்.
ஈஸா குர்ஆன்
பீஜே அவர்களே… அவ்வளவு என்ன அவசரம் சொல்லுங்கள். எழுதிய நான்கு வரிகளில் ஐந்து எழுத்துபிழைகளா?
நிதானமாக எழுதி, மறுபடியும் ஒரு முறை படித்துப்பார்த்து பதியுங்கள். எழுத்துப் பிழை வருவது சகஜம் தான் ஆனால், குர்ஆனை மொழியாக்கம் செய்த, அனேக புத்தகங்களை எழுதிய, அனேக மேடைகளைக் கண்ட உங்கள் வரிகளிலுமா இவ்வளவு பிழைகள்?
நேற்று முளைத்த காளானைப்போல உள்ள என்னைப் போன்றவன் எழுதுவதில் எழுத்து பிழை இருந்தால், சகித்துக்கொள்ளலாம். உங்கள் வரிகளிலுமா? ஒரு மூத்த இஸ்லாமிய அறிஞரா இப்படி எழுதுகிறார்… ஆச்சரியமாக உள்ளது.
அடுத்ததாக, செக்ஸ் பற்றி, லீலைகள் பற்றி சொல்லியுள்ளீர்கள். முதலில் உங்கள் முஹம்மது பற்றி எல்லாவற்றையும் அறிந்துக்கொண்டு எழுதுங்கள், குர்ஆன் பற்றி தெரிந்துக்கொண்டு எழுதுங்கள். இப்போதைக்கு இதைத்தான் நான் சொல்வேன், ஏனென்றால் குர்ஆனை மொழியாக்கம் செய்த ஒரு பெரிய ஊழியரிடம் நான் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்ற உணர்வு இருப்பதால் நேரம் வரும் போது, தகுந்த இடத்தில் பதிலைத் தருவேன்.
(வாசகர் கவனத்திற்கு: குர்ஆனை மொழியாக்கம் செய்து விளக்கவுரை கொடுத்தவரிடம்… குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்பது அதிகப்பிரசங்கித் தனம் என்று எண்ணாதீர்கள், காரணம் அவரது குர்ஆன் விளக்கவுரையில் அவர் கூறிய விவரங்களுக்கு நான் விளக்கமளித்த பிறகு வாசகர்கள் புரிந்துக்கொள்வீர்கள்).
பிறகு பாதிரிகளைப் பற்றி எழுதியுள்ளீர்கள்… என்ன செய்வது பீஜே அவர்களே, கிறிஸ்தவ பாதிரிகளிலும், கன்னியாஸ்திரிகளிலும் முஹம்மதுவை பின்பற்றி நடப்பவர்கள் சிலர் இருந்துவிடுவதுண்டு… என்ன செய்வது!
அப்படிப்பட்டவர்களைக் கொண்டு கிறிஸ்தவத்தை எடைபோடுவது சரியா…? ஆனால், உங்கள் முஹம்மதுவைக் கொண்டு இஸ்லாமை எல்லாரும் நன்றாக எடைப்போடலாம்…
பீஜே அவர்கள், இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்தவத்தை கடுமையாக விமர்சியுங்கள் என்று உரிமையை கொடுத்துள்ளார். எனவே, இதே உரிமையை கிறிஸ்தவர்களும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, ஆதார பூர்வமான விவரங்களுடன், குர்ஆன் ஹதீஸ்களின் துணையுடன் "இஸ்லாமை கடுமையாக விமர்சிக்கலாம்". ஏனென்றால், இஸ்லாம் உரிமைகளை சமமாக எல்லாருக்கும் தரும் மார்க்கம் தானே!?! எங்களுக்கு உரிமையை கொடுத்தமைக்காக பீஜே அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பீஜே அவர்கள் எழுதியது
எங்கே அடித்தால் வலிக்குமோ அங்கே அடிக்க வேண்டும்.தூண்டி விடும் பாதிரிகள் கூட்டத்துக்கு இவர்கள் யார் என்பது தெரியும். தம்து மத நம்பிக்கையே ஆட்டம் காணும் போது அடங்குவார்கள். விரைவில் இந்தப்பணீயையும் நாம் செய்ய விருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.
ஈஸா குர்ஆன்
இப்போது தான் எனக்கு புரிந்துள்ளது, நாங்கள் அடித்துக்கொண்டு இருக்கின்ற இடம் சரியான இடம் தான் என்று.
எங்கள் கட்டுரைகளுக்கு பதிலைத் தராதீர்கள் என்று மற்ற இஸ்லாமியர்களுக்கு எந்த ஆலோசனை கொடுத்தீர்களோ.. அந்த ஆலோசனையை நீங்களே முறித்துவிட்டு, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களின் இதே தளத்தில் பதிலைத் தரும் காலம் மிக சமீபமாக உள்ளது.
உங்களின் ஆலோசனையை மற்றவர்கள் பின்பற்றக்கூடும், ஆனால், நீங்கள் அதனை முறித்துவிடும் காலம் வருகிறது….
கேளுங்கள் பீஜே அவர்களே…
கேள்விகளை கேளுங்கள்…
எதை வேண்டுமானாலும் கேளுங்கள்…
ஆனால், ஜாக்கிரதை…….
நீங்கள் பின்பற்றுவது குர்ஆனை… முஹம்மதுவை… அவர் நடந்துக்கொண்ட விதத்தை…
என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
முடிவுரை:
ஆக, பீஜே அவர்கள் எழுத்து விவாதத்திற்கு வரமாட்டார்கள். எங்கள் இஸ்லாமிய கட்டுரைகளுக்கு பதில்களைத் தராதீரகள் என்று அறிவுரை கூறியுள்ளார்கள். இந்த அறிவுரையை இவர் பின்பற்ற முடியுமா… காலம் தான் பதில் சொல்லும்… இப்போது தான் 2010 ஆண்டு ஆரம்பித்துள்ளது… இன்னும் அனேக நாட்கள் உள்ளது இவ்வாண்டு முடிவதற்குள்…
நான் அடிக்கடி எழுதுவதுண்டு "இஸ்லாமியர்களை பேசவிடுங்கள்… இஸ்லாமை விளக்க விடுங்கள்… அவர்கள் அதிகமாக பேச வேண்டும் எழுதவேண்டும், அப்போது தான் நமக்கு எழுத வாய்ப்பு கிடைக்கும்".
எனவே, பீஜே அவர்கள் செய்வேன் என்றுச் சொன்ன "அந்த பணியை" அவர் செய்ய வேண்டும்…அப்போது தான் எங்கள் பணியை நாங்கள் செய்யமுடியும். உங்கள் கேள்விகளை எதிர் நோக்கியிருக்கும்…. உங்கள் வாசகன் ஈஸா குர்ஆன் உமர்.
—
1/23/2010 12:17:00 AM அன்று ஈஸா குர்-ஆன் – Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது
Posted by உண்மை அடியான் at 8:06 PM 3 comments Links to this post
ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும் முன்னுரை: என் பெயர் உமர் (புனைப் பெயர்), நான் ஈஸா குர்ஆன் என்ற பிளாக்கரில் இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகளை மறுப்புக்களை எழுதிக்கொண்டு வருகிறேன். 2008ம் ஆண்டிலிருந்து இதர நண்பர்களின் உதவி கொண்டு ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் ஆங்கில கட்டுரைகளை தமிழாக்கம் செய்து பதித்துக்கொண்டு இருக்கிறேன். தமிழ் கிறிஸ்தவர்கள்என்ற தளத்திலும் கட்டுரைகள் பதிக்கப்படுகின்றன. எழுத்து விவாதத்திற்கு இஸ்லாமியர்கள் விரும்பினால், அதற்கு தயார் என்றுச் சொல்லி, 2007ம் ஆண்டில் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் நடந்த ஒரு உரையாடலில் பதித்தேன் (அவ்வுரையாடலை இங்கு காணலாம்).
கடந்த வாரம் (ஜனவரி 7ம் தேதி) அர்ஷத் ரஹ்மான் என்ற பெயரிலிருந்து ஒரு மெயில் வந்தது, அதாவது பீஜே அவர்களுடன் நேரடி விவாதத்திற்கு தயாரா? என்று கேள்வி கேட்டு வந்தது, மற்றும் ஆன்லைன் பீஜே தளத்திலும் இக்கேள்வியைக் கேட்டு பீஜே அவர்கள் அழைப்பு விடுத்து இருந்தார்கள்.
முதலில் எனக்கு மெயில் அனுப்பிய சகோதரருக்கு பதிலை கொடுத்துவிட்டு, பிறகு பீஜே அவர்கள் எழுதியவைகளுக்கு பதிலை தருகிறேன்.
எனக்கு மெயில் அனுப்பிய அர்ஷத் ரஹ்மான் அவர்களுக்கு பதில்:
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:
\\ஈசா குரான் உமர் அவர்களுக்கு! உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!//
உமர் எழுதியது:
அன்பான சகோதரர் அர்ஷத் ரஹ்மான் அவர்களுக்கு, உங்கள் மீதும் இறைவனின் சாந்தி சமாதானம் உண்டாவதாக.
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:
//இஸ்லாத்தை விமர்சனம் செய்யும் நீங்கள் உங்கள் கொள்கையில் உண்மையாளராக இருந்தால் முஸ்லிம்களுடன் நேரடி விவாதத்துக்கு வர வேண்டும்.//
உமர் எழுதியது:
இதைத் தான் நானும் கேட்கிறேன், இஸ்லாம் மீதும் அதன் கொள்கைகள் மீதும் உண்மையிலேயே உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், ஏன் நீங்கள் எழுத்து விவாதத்திற்கு வரக்கூடாது?
நேரடி விவாதம் செய்தால் தான், ஒருவரின் நம்பிக்கை உண்மையானது என்று நிருபிக்கப்படும் என்பது சரியான வாதமல்ல, அதற்கு பதிலாக எழுத்து வடிவத்தில் எடுத்துவைக்கும் விவரங்கள் உண்மையானதாகவும், ஆதாரபூர்வமானதாகவும் இருக்கின்றதா என்பதைத் தான் கவனிக்கவேண்டும், இதனை எல்லாரும் ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:
//அதை விடுத்து எழுத்து விவாதத்துக்கு மட்டும் தான் நான் வருவேன் என்று நீங்கள் கூறுவது கோழைத்தனமானது.//
உமர் எழுதியது:
நேரடி விவாதத்தை மட்டும் தான் நாங்கள் ஒப்புக்கொள்வோம் என்றுச் சொல்வதும் கோழைத்தனம் தானே! உங்கள் மார்க்கம் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மை தானே! வீரர்களுக்கு புல்லும் ஆயுதம் என்ற சொற்றடருக்கு இணங்க, நீங்கள் வீரர்களாக உங்களை கருதிக்கொண்டால், கிறிஸ்தவர்களுடன் எழுத்து விவாதத்தையும் செய்யலாமே!
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:
//மக்கள் மத்தியில் விவாதம் செய்வதுதான் அதிக மக்களுக்கு சத்தியத்தை கொண்டு செல்ல உதவும். எழுத்து வடிவ விவாதத்தின் மூலம் பாமர மக்களை சென்றடைய முடியாது.//
உமர் எழுதியது:
உங்களின் இந்த வாதத்தை முழுவதுமாக நான் அங்கீகரிக்க முடியாது. நேரடி விவாதத்திற்கும் எழுத்து விவாதத்திற்கும் அதற்குரிய நன்மைகள் உண்டு. ஏனென்றால், ஒரு சமயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடத்தப்படும் விவாதத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ளவர்கள் தான் காணமுடியும், மற்றும் மற்றவர்கள் அந்த நிகழ்ச்சியை மறுபடியும் காணவேண்டுமானால், அதன் வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்க்கவேண்டும், இதற்கு அதிகபடியான நேரம் எடுத்துக்கொள்ளும். அல்லது சீடிக்களை வாங்கி பார்க்கவேண்டும் இதே எழுத்து விவாதமென்றால், இணையத்தில் பதித்தால் அதனை ஒரு சில நிமிடங்களில் டவுன்லோட் செய்து படிக்கமுடியும். ஒரு நபர் ஒரு எழுத்துவிவாத கட்டுரையை பிரிண்ட் எடுத்து அனேகருக்கு தரலாம், அதனை படிக்க சாதாரண மக்களுக்கு கணினியோ, வீடியோ பிளேயரோ தேவையில்லை. பேருந்தில் பிரயாணம் செய்யும் போதும், வீட்டில் மின்சாரம் இல்லாத நேரத்திலும் பகலின் வெளிச்சத்திலும் படித்துக்கொள்ளமுடியும். அதாவது, மனது இருந்தால் மார்க்கமுண்டு. இரண்டு வகையான விவாத முறையிலும் அதற்குரிய பயன்பாடுகள் உண்டு. எனவே, ஒருவகை தான் சரியானது என்பது ஏற்க முடியாது.
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:
//கிருஸ்தவ மதமானது அதிக மக்கள் கடைபிடிக்கும் ஓன்று. எனவே எழுத்து விவாதம் என்பது இந்த உலகளாவிய சர்ச்சைக்கு பெரிய தீர்வாக அமையாது.//
உமர் எழுதியது:
தீர்வு உங்கள் கையில், என் கையில் இல்லை. இந்தியாவில் எத்தனை சதவிகித கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்? அவர்கள் எத்தனை சதவிகித மக்களுக்கு தமிழ் தெரியும், இவர்களில் எத்தனை சதவிகித மக்கள் நேரடி விவாதத்தை பார்ப்பார்கள்? இவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்ப்பார்கள்? ஆக, அதிக மக்கள் தொகை இருப்பதால் நேரடி விவாதம் தான் சரியானது என்பதும் ஏற்பதற்கில்லை.
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:
//பீ.ஜைனுலாபிதீன் அவர்கள் உங்களை போன்று ஒளிந்து கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு தன்னுடைய இணையதளத்தில் பகிரங்க விவாத அழைப்பு விடுத்துள்ளார் (www.onlinepj.com).//
உமர் எழுதியது:
ஒளிந்துக்கொள்ளாமல் பகிரங்கமாக பொய்களையும், தங்கள் சொந்த யூகங்களையும் முன்வைத்து ஆதாரமில்லாமல் கட்டுரைகளை புத்தகங்களை எழுதும் எல்லா இஸ்லாமிய அறிஞர்களுக்கும் 2007ம் ஆண்டே, நானும் எழுத்து விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். விரும்புகிறவர்கள் என் கட்டுரைகளுக்கு பதில்களை எழுதலாம், எழுத்து விவாதத்தில் ஈடுபடலாம். பீஜே அவர்களின் விவாத அழைப்பிற்கு இக்கட்டுரையில் பதிலை நான் கீழே கொடுத்துள்ளேன்.
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:
//உங்களுக்கு உண்மையில் உங்கள் கொள்கையில் உறுதி இருந்தால்,கிருஸ்தவத்தின் மீது எள் முனையளவாவது ஈடுபாடு இருந்தால்,சத்தியத்தை நீருபிக்க திராணி இருந்தால் இந்த விவாத அழைப்பை ஏற்று விவாதத்துக்கு வருமாறு உங்களை அழைக்கிறோம்.பிரச்சினை வரும் என்றெல்லாம் போலி சாக்குகளை கூறி நழுவாதீர்கள். காவல்துறையின் பாதுகாப்பை வேண்டுமானாலும் நாடலாம்.\\
உமர் எழுதியது:
அப்படியானால், எழுத்து விவாதத்திற்கு வரமாட்டீர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் எழுத்து விவாதத்திற்கு பயப்படுகிறார்கள் என்று மக்கள் கருதலாமா? இஸ்லாமிய அறிஞர்கள் நேரடி விவாதத்திற்கு வீரர்கள், எழுத்து விவாதத்திற்கு கோழைகள் என்று மக்கள் கருதிக்கொள்ளலாமா?
எங்களிடம் உண்மை இருக்கிறது என்பதால் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக, தொடர்ந்து பதில்களை கொடுத்துக்கொண்டு கேள்விகளை தொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.
உங்களுக்கும் இஸ்லாம் மீது அணு அளவாவது நம்பிக்கை இருந்தால், எழுத்து விவாதத்திற்கு வாருங்கள், அப்படி வரவில்லையானாலும் சரி, நான் தொடர்ந்து எழுதுவதை நிறுத்தப் போவதில்லை. காவல் துறைப்பற்றி சொல்லிய விஷயம் பற்றி பீஜே அவர்களின் பதிலில் எழுதுவேன்.
முடிவாக, அர்ஷத் அவர்களே, எழுத்து விவாதம் என்றால் தான் என்னால் வரமுடியும், நேரடி விவாதம் என்றால் முடியாது.
இணையத்தில் எழுதினால் என்ன, ஒளிந்துகொண்டு எழுதினால் என்ன? சொல்லப்படும் செய்தி உண்மையா? ஆதாரமுண்டா? என்று பார்க்கவேண்டுமே தவிர, இவன் (உமர்) நேரடி விவாதத்திற்கு வரமாட்டான் என்பதை தெரிந்துக்கொண்டே "இஸ்லாமிய அறிஞர்கள் விவாதத்திற்கு அழைத்தால், உமர் வரவில்லை" இதனால், இஸ்லாம் தான் உண்மையானது என்ற கிளிப்பிள்ளைப் பேச்சை சொல்வதை நிறுத்திக்கொண்டு, என் கட்டுரைகளுக்கு உங்களால் இயன்ற பதிலை எழுதி, என் கட்டுரையின் தொடுப்பையும் கொடுத்து (உங்களுக்கு பயமில்லையென்றால்) உங்கள் தளத்தில் பதித்தால், படிக்கும் வாசகர்களுக்கு உண்மை புரியும். இது என் தாழ்மையான வேண்டுகோள். இதைச் செய்வீர்களா?
Filed under Uncategorized