Monthly Archives: திசெம்பர் 2011

குரங்கை காப்பாற்ற போராடிய சூளகிரி மக்கள ின் மனிதாபிமானம்

Tamil_News_large_375899.jpg

ஓசூர்: சூளகிரி கோவிலில், குரங்கு ஒன்றின் தொண்டையில் தேங்காய் சிக்கியதால், உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்ற, பக்தர்கள் சிகிச்சைக்கு எடுத்துச் சென்றனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் குரங்கு இறந்ததால், சோகமடைந்த பக்தர்கள், குரங்கின் உடலுக்கு மாலை அணிவித்து அடக்கம் செய்தனர்.

சூளகிரி அருகே, பஜார் தெருவில், செல்லாபிரியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளன. இந்த கோவில் வளாகத்தில், குரங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், பூஜையில் படைத்த, பழங்கள், தேங்காய் மற்றும் உணவு பண்டங்களை குரங்குக்கு வழங்குவர். நேற்று, வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பக்தர்கள், குரங்குக்கு, தேங்காய் வழங்கியுள்ளனர்; அவற்றை, குரங்குகள் எடுத்து சாப்பிட்டன. தேங்காய் சாப்பிட்ட ஒரு குரங்குக்கு, அது, தொண்டையில் சிக்கியதால், கீழே விழுந்து, கோவில் வளாகத்தில், துடிதுடித்து உயிருக்கு போராடியது. இதை பார்த்த மற்ற குரங்குகள், அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டன. இதனால், பக்தர்கள், உயிருக்கு போராடிய குரங்கை மீட்டு, காப்பாற்ற முயன்றனர். வாணியர் தெருவை சேர்ந்த சிவக்குமார் என்பவர், குளிர்பானம் வாங்கி வந்து குரங்கு வாயில் ஊற்றி, தனது மூச்சை அதன் வாயில் செலுத்தி காப்பாற்ற, பல்வேறு வகையில் முயற்சி செய்தார்.

குரங்கு மயக்கமடைந்ததால், கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். டாக்டர் சீனிவாசனும், உயிருக்கு போராடிய குரங்குக்கு ஊசி போட்டு காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல், சிறிது நேரத்தில் குரங்கு இறந்தது. இதனால் சோகமடைந்த பக்தர்கள், இறந்த குரங்கின் உடலுக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன்பின், கோவிலுக்கு அருகே உள்ள நிலத்தில், இறந்த குரங்கின் உடலை அடக்கம் செய்தனர். இச்சம்பவம், சூளகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பிரான்ஸ் அரசு வெளியிட்ட புலிகள் தலைவர் ப ிரபாகரனின் முத்திரை

புலிகள் தலைவர் பிரபாகரனின் முகத்துடன் முத்திரை வெளியிட்ட பிரான்ஸ் அரசு

பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன

இவற்றுள் தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய மிருகம், தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன.

எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம்.

இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்.

source:nerudal

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்று வர நிதியு தவி – ஜெயலலிதா அறிவிப்பு

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்று வர அரசின் சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், ஜெயலலிதா உரை நிகழ்த்தினார். அப்போது, அவர் இதைத் தெரிவித்தார். அவர் ஆற்றிய உரை விவரம்:

அன்பின் உருவமாகவும், கருணையின் வடிவமாகவும் விளங்கும் இயேசு பெருமான் அவதரித்த நாள் கிறிஸ்துமஸ் திருநாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.‘பகைவனுக்கும் அருளுங்கள்’; ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு’ போன்ற ஏசுபிரானின் அருள் வசனங்கள் அழியாப் புகழ் பெற்றவை. இயேசு பெருமானின் காந்த விழிகளும், அவரது அன்பு ததும்பும் மொழிகளும் உலகப் பிரசித்தி பெற்றவை. தன்னை சிலுவையில் அறைந்தவர்களைக் கூட மன்னிக்கும்படி பரம பிதாவிடம் மன்றாடியவர் இயேசுபிரான். மன்னிப்பதன் மூலம் மன்னிக்கிறவர் மட்டுமல்லாமல், மன்னிக்கப்படுகிறவரும் உயருகிறார். இதற்கு எடுத்துக்காட்டாக, உங்களுக்கெல்லாம் ஒரு சிறிய சம்பவத்தை கூற விழைகிறேன். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன், மன்னித்து அருளுவது என்ற கொள்கையில் மிக உறுதியாக இருந்தார்.நீதிமன்றங்கள் மரண தண்டனையை விதித்தாலும், அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த தண்டனையை குறைத்து விடுவார். அதற்காக அவரைப் பலர் விமர்சனம் செய்தனர். ஒரு நாள் அவர், போர்க்களத்தை பார்வையிட்ட போது, ஒரு ராணுவ வீரன் தன் கழுத்தில் இருந்த செயின் பேழையை முத்தமிட்டபடி செத்துக் கிடந்ததைப் பார்த்தார்.

அதில் அவனது மனைவி அல்லது காதலி படம் இருக்கலாம் என்று கருதி அதை எடுத்துப் பார்த்தார் ஆபிரகாம் லிங்கன். அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. காரணம், அதில் இருந்தது ஆபிரகாம் லிங்கனின் படம். அந்த ராணுவ வீரன் குறித்து விசாரித்த போது, அவன் மரண தண்டனை பெற்ற குற்றவாளி; ஆபிரகாம் லிங்கனால் மன்னிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்றிருந்தான். போர் வந்ததும் சிறைக் கைதிகளுக்கு ராணுவப் பயிற்சி தரப்பட்டு, போரில் ஈடுபடுத்தப்பட்டனர். போரில் அவன் நாட்டுக்காக தன் உயிரைத் துறந்து தியாகி ஆகிவிட்டான் என்பது தெரிய வந்தது.இதை நான் இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், அனைவரும் பழியுணர்ச்சி இன்றி, பகை இன்றி, சுயநலம் இன்றி, அன்புடனும், அமைதியுடனும், தியாக உணர்வுடனும் வாழ வேண்டும் என்பதற்காகத் தான்.சுயநலத்துடன் வாழும் வாழ்க்கை ஆரம்பத்தில் இனிக்கும்; பின்பு கசக்கும். சுயநலமின்றி பிறருக்காக வாழும் வாழ்க்கை; விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கை; ஆரம்பத்தில் கசப்பாக இருந்தாலும் முடிவில் இனிமையாக இருக்கும். “தியாகம் செய்தவர்கள் தியாகம் செய்து இருக்கிறோம், என்ற எண்ணத்தையும், தியாகம் செய்தால் தான் தியாகம் பூரணம் அடைகிறது”, என்ற தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் அமுத மொழியையும் உங்களுக்கு இந்தத் தருணத்தில் எடுத்துக் கூறி; இயேசு நாதரின் போதனைகளான, தியாகம், மன்னிப்பு, அன்பு, சகோதரத்துவம், சமாதானம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினை தெரிவித்துக் கொண்டு, தமிழ் நாட்டில் அமைதி நிலவவும்; தொழில் மற்றும் விவசாய உற்பத்தியில் புரட்சி ஏற்படுத்தவும்; மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடையவும்; அனைத்துத் துறைகளிலும் தமிழ் நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கவும்; எனது அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவை கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கொண்டாடிய போது ஒரு சில வாக்குறுதிகளை நான் உங்களுக்கு அளித்திருந்தேன். அதன் அடிப்படையில், கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான, ஜெருசலம் சென்று வருவதற்கு, அரசு நிதி உதவி அளிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டம் அனைத்து கிறிஸ்துவப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக அமையும். முதற்கட்டமாக, 500 கிறிஸ்தவர்கள் ஜெருசலம் சென்று வர ஏற்பாடு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்களின் நல்லாதரவுடன், இறைவனின் திருவருளால், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நான், உங்களது இதர கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றுவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்; ஒவ்வொரு மனிதனும் என் சகோதரன் என்ற பாச உணர்வோடு பயணிப்போம்; இறைமகன் இயேசுபிரான் தன் பிறப்பிலும், வாழ்விலும் நமக்குக் கூறும் நற்செய்தியின்படி வாழ்ந்து; உலகை மகிழ்ச்சிப் பூங்காவாக மாற்றுவோம்; யார் எனக்கு எதைச் செய்தாலும், நான் எல்லோருக்கும் நன்மையே செய்வேன்” என்ற அர்ப்பணிப்பு உள்ளத்தோடு வாழ்வோம் என்பது தான் அனைவருக்கும் நான் கூறும் கிறிஸ்துமஸ் செய்தியாகும்.

இன்றைய தினம் இந்த விழாவில் நேரம் போனதே தெரியவில்லை. நீங்கள் அனைவரும் என் மீது பொழிந்த அன்பையும், இங்கே மேடையில் பேசிய பேராயர்களும், பிஷப்புகளும், கிறிஸ்தவ மத பெரியவர்களும் என் மீது பொழிந்த ஆசீர்வாதங்களை கேட்கும் போது, உள்ளபடியே நான் பூரிப்படைகிறேன். அது மட்டுமல்ல, இன்று மிக இனிமையாக பாடல்களை பாடி அசத்திய இளம் தங்கைகளுக்கும், தம்பிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, சர்ச் பார்க் கான்வென்ட்டில் இருந்து வந்திருக்கின்ற மாணவிகள் பாடிய இனிமையான பாடல்களைக் கேட்கும் போது, என்னுடைய பள்ளி நாட்கள் என் நினைவுக்கு வந்தன. எத்தனையோ முறை இந்த தங்கைகளைப் போல் நானும் அங்கே பள்ளிக் கூட மேடையில் நின்று கிறிஸ்துமஸ் பாடல்களை பாடி இருக்கிறேன். அனைவர் வாழ்விலும் அமைதியும், ஆனந்தமும் தவழட்டும்! மகிழ்ச்சி பொங்கட்டும்! செல்வம் செழிக்கட்டும்! அமைதி நிலவட்டும்! என்று வாழ்த்தி; அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்…- இவ்வாறு முதல்வரின் உரை அமைந்திருந்தது.

source:4tamilmedia

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

முல்லை பெரியாறு அணை – உண்மை நிலை என்ன

Tamil_News_large_326840.jpg

அடுத்த உலகப்போர், தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்ற அனுமானம் உண்மையாகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது முல்லைப் பெரியாறு அணை விவகாரம். இரு மாநிலங்களுக்கு இடையேயான இந்த பிரச்னையில், கேரள அரசின் செயல்பாடு தேசிய ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக தொடரும் நிலையில், நதி நீர் விவகாரங்களில் தீர்க்கமான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு என அடுத்தடுத்து பிரச்னைகளில், அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சித்து வருகின்றன. இவற்றை தமிழக அரசியல் கட்சிகள், ஆட்சியில் இருப்போர் சில நேரங்களில், "சீரியசாகவும்’ பல நேரங்களில், "சீசன்’ விவகாரமாகவும் கையாண்டு வருகின்றனர்.

இதில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., – தி.மு.க., ஆகிய கட்சிகள் இருவகையான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.தி.மு.க.,வைப் பொறுத்தவரை நதிநீர் பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்வதிலேயே எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறது. எப்போதெல்லாம் பிரச்னை எழுகிறதோ, அப்போதெல்லாம் அமைச்சர்கள் நிலையில், அதிகாரிகள் நிலையில், முதல்வர்கள் நிலையில் என பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தைகள் நிரந்தர தீர்வை பெற்றுத் தராவிட்டாலும், அப்போதைக்கு பிரச்னையை தள்ளிப்போடவே உதவியாய் இருந்து வருகின்றன.ஆனால், அ.தி.மு.க., தரப்போ நீதிமன்றம் மூலம், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதில்தான் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை வைத்துள்ளது. அதற்கேற்பவே, காவிரியில் துவங்கி முல்லைப் பெரியாறு வரை தனது சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த இரு கட்சிகளின் நிலைப்பாட்டினால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்பதே தற்போதைய நிலை. பேச்சுவார்த்தை என்பது காலத்தை தள்ளிப்போடவே உதவியாக இருந்து வந்திருக்கிறது; அது அண்டை மாநிலங்களுக்கு சாதகமாக மாறி விடுகிறது. "திருவள்ளுவருக்கு பதிலாக சர்வக்ஞர்’ என்ற, "பார்முலா’வெல்லாம் அரசியல், "ஸ்டண்ட்’ காட்சிகள் எல்லாம் வரலாற்றுப் பக்கத்தில் நகைப்புக்குள்ளாக்கப்படும் என்பது உறுதி.
மறுபுறம், அ.தி.மு.க.,வின் சட்டரீதியான போராட்டமும் பல உத்தரவுகளை பெற்றுத் தந்துள்ளது. இந்த உத்தரவுகள் எல்லாம் பலனுக்கு வந்ததா என்றால் விடை பூஜ்யம்தான். காவிரி நடுவர் மன்றம், அது பிறப்பித்த உத்தரவு, அதை அரசு இதழில் வெளியிடுவது, நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு என சட்டப் போராட்டம் நீண்ட தொடர் கதையாய் நடந்தது… நடக்கிறது… நடக்கும்… என்பதுதான் உண்மை நிலை.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பிறகும், அதை கேள்விக்குள்ளாக்கும் வகையில், கேரள அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுகிறது. ஆனால், தமிழக சட்டசபையோ அந்த தீர்மானத்தை கண்டிப்பது தவறாகப் போய்விடும் என்பதால், தீர்மானம் குறித்து வருத்தத்தையே பதிவு செய்துள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் இந்த விவகாரங்களை சரியாக கையாளாததன் விளைவாகத்தான், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தோழமைக்கட்சி என்று எந்த கட்சியும் அழைக்காமல் லட்சக்கணக்கில் உணர்வுபூர்வமாக பொதுமக்கள் திரண்டு வரக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளன. இரு மாநில நதிநீர் பிரச்னை எல்லைப் பிரச்னையாக மாறியுள்ளது.

இரு மாநிலங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டால், அதை தீர்க்க வேண்டியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடு அதிர்ச்சியளிப்பதாய் மாறியுள்ளது. இரு மாநிலங்களின் பிரதிநிதிகளையும் பிரதமர் சந்திக்கிறார்; அவர்களது தரப்பு கருத்துக்களை கேட்கிறார்; தன் வருத்தத்தை பதிவு செய்வதோடு மத்திய அரசின் பங்களிப்பு முடிந்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக, நியாயத்தின் பக்கம் நிற்க முடியாத நிலையில் மத்திய அரசு இருக்கிறது.

நதி நீர் பிரச்னைக்கு தீர்வு காண உறுதியான நிலைப்பாடுகளை எடுத்தால் மட்டுமே, பிரச்னைகள் சுமூகமாக தீர்க்கப்படும். நதிகளை இணைப்போம் என்ற கோஷங்கள் உயிர்பெற்றபோது, "இது சாத்தியமில்லாத விஷயம்’ என்ற ஒருவரி, "கமென்ட்’டை காங்கிரசின் இளம்தலைவர் வெளியிட, உயிர்பெற்ற கோஷங்கள் மவுனித்து போய்விட்டது.
நதிநீர் பிரச்னை தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே தோன்றும் இது போன்ற மோதல்கள் தேச ஒற்றுமையை தகர்த்து விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த அச்சத்தை போக்க, அரசியல் வேறுபாடுகளை தவிர்த்து மத்திய அரசு துணிந்து எடுக்கும் நடவடிக்கைகள் தேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும். நதிநீர், அணைகள், நீர்வழிகள் என, அனைத்தையும் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் வகையில் சட்டத்தை திருத்தினால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.

source:dinamalar

1 பின்னூட்டம்

Filed under Uncategorized

ஆப்பிள் ஐபேட்-2 மற்றும் சாம்சங் கேலக்ஸி டே ப்-750 ஒப்பீட்டு பார்வை

Apple ipad2 and Samsung Galaxy Tab750

சர்வதேச சந்தையில் ஆப்பிள் ஐபேடுக்கும், சாம்சங் கேலக்ஸி டேப்லெட்டுகளுக்கும் இடையிலான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு நிறுவனங்களின் டேப்லெட்டுகளுக்கும் வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.

இரண்டும் தரமான தயாரிப்புகள் என்றாலும், அதிலுள்ள சாதக பாதக அம்சங்களை ஆராய்ந்து வாங்குவதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும். இங்கே, சந்தையில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் ஒரே இனத்தை சேர்ந்த ஐபேட்-2 மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப்-750 ஆகிய இரண்டு டேப்லெட்டுகளின் ஒப்பீட்டு அலசலை காணலாம்.

ஆப்பிள் ஐபேட்-2 டேப்லெட் 8.8 மிமீ தடிமனில் ஸ்லிம்மாக ஜொலிக்கிறது. இது 1ஜிகாஹெர்ட்ஸ் ஆப்பிள் ஏ-5 பிராசஸருடன் 9.7 இஞ்ச் தொடுதிரையை கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்க வசதியாக வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் வருகிறது. அதேவேளை, சாம்சங் கேலக்ஸி டேப்-750 டேப்லெட் 10.9 மிமீ தடிமன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐபேட்-2 ஆப்பிள் ஐஓஸ் 4.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதில், 1ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் ஆப்பிள் ஏ-5 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளே எல்இடி பேக்கலைட்டுகளை கொண்டது. மேலும், கீறல்களிலிருந்து பாதுகாக்கும் கவச உறையும் கொண்டுள்ளது. ஹைடெபினிஷன் வீடியோ ரெக்கார்டிங் வழங்கும் பின்புற கேமரா மற்றும் வீடியோ சாட்டிங் செய்ய வசதியாக முகப்பு கேமராவையும் கொண்டுள்ளது.

இதேபோன்று, கேலக்ஸி டேப்-750யிலும் பின்புறம் 8.1 மெகாபிக்செல் கேமராவும், வீடியோ காலிங் வசதிக்கான முகப்பு கேமராவும் உள்ளது. ஆப்பிள் ஐபேட்-2 டேப்லெட்டில் 5 மடங்கு பெரிதாக்கி காட்டும் டிஜிட்டல் சூம் வசதி இருக்கிறது. ஆனால், கேலக்ஸி டேப்-750 டேப்லெட்டில் சூம் வசதி இல்லாதது மிகப்பெரிய குறையாக தோன்றுகிறது.

ஆப்பிள் ஐபேட்-2 டேப்லெட் 16ஜிபி,32ஜிபி மற்றும் 64 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட மூன்று மாடல்களில் கிடைக்கிறது. அதேவேளை, சாம்சங் கேலக்ஸி டேப்-750 டேப்லெட் 16ஜிபி இன்டர்னல் சேமிப்பு கலனை பெற்றுள்ளது. சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ளும் வசதிக்கான மெமரி கார்டு ஸ்லாட் கொடுக்கப்படாததால், சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ள முடியாது.

ஆப்பிள் ஐபேட்-2 நவீன தொடர்பு வசதிகளை அளிக்கிறது. 2.1 வெர்ஷன் ப்ளூடூத், வைஃபை உள்ளிட்ட நவீன தகவல் பரிமாற்ற வசதிகளை கொடுக்கிறது. இதே வசதிகளை சாம்சங் கேலக்ஸி டேப்-750 டேப்லெட்டும் வழங்குகிறது.

விலையை பொறுத்தவரை 16 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட ஆப்பிள் ஐபேட்-2 ரூ.22,500க்கும், 32ஜிபி ஆப்பிள் ஐபேட்-2 ரூ.27,000க்கும், 64 ஜிபி மெமரி கார்டு கொண்ட ஐபேட்-2 ரூ.31,500க்கும் கிடைக்கிறது. அதேவேளை, சாம்சங் கேலக்ஸி டேப்-750 டேப்லெட் ரூ.36,500 விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

source:tamilgizbot

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

செல்போன்… லேப்டாப்… கிளுகிளு படம்!

கடலூரில் ‘ஆபாச’ ஆசிரியர்

பெற்றோர்களும், பொதுமக்களும் கூட்டமாகத் திரண்டுபோய், ஒரு ஆசிரியரை அடித்துத் துவைத்து, பள்ளியை விட்டு விரட்டி அடித் திருக்கிறார்கள்.

என்ன பிரச்னை?

கடலூர் மாவட்டம், சங்கொலிகுப்பத்தில் இருக் கிறது அரசு நடுநிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் ஆசிரி யராகப் பணி புரியும் சுந்தரமூர்த்தி என்பவர்தான், அந்த ஆசிரியர். நடந்ததைச் சொல்கிறார், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பத்மநாபன். ”1982-ல் இந்த பள்ளி துவக்கப் பள்ளி யாக ஆரம்பிக்கப்பட்டு, தற்போது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கே 250-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கிறாங்க. இந்த ஸ்கூல்ல எட்டாவதுக்கு வகுப்புக்கு பாடம் நடத்துறவர்தான் சுந்தரமூர்த்தி வாத்தி யார். அவர் செஞ்ச காரியத்தைச் சொல்லவே கூசுது.

அவரோட செல்போன்ல ஆபாச வீடியோவையும் போட் டோக்களையும் டவுன்லோடு பண்ணிக்கொண்டு வருவாராம். இன்டர்வெல் டைம்ல பொம்பளை புள்ளைங்களை மட்டும் கூப்பிட்டு, அந்த வீடியோவைக் காட்டுவாராம். சின்னப் பிள்ளைங்க என்பதால், விபரம் புரியாமப் பாத்திருக்காங்க. ‘பார்த்ததை யாருகிட்டேயும் சொல்லக்கூடாது’னு மிரட்டியிருக்கார்.

ஆனா ஒரு பிள்ளை விஷயத்தை வீட்ல சொல்லவே, அவங்க அதிர்ச்சி அடைஞ்சிருக்காங்க. உடனே மத்த குழந்தைகளோட பெற்றோர்களிடமும் சொல்லி இருக்கார். அவங்களும் குழந்தைங்ககிட்ட விசாரிச்ச போது, ‘ஆமா… சாரு படம் காட்டுவார். அதுல ஆம்பளையும் பொம்பளையும் கட்டிப் புடிச்சிக்கிட்டு இருப்பாங்க’ன்னு சொல்லி இருக்காங்க.

விஷயம் கேள்விப்பட்டு நாங்க எல்லோருமா ஸ்கூலுக்குப் போனோம். சுந்தரமூர்த்தியோட செல்போனை பிடுங்கிப் பார்த்தோம். செல்போன்ல நிறைய ஆபாசப் படங்களை வெச்சிருந்தார். கேட்டதுக்கு, ‘இது என்னோட செல்போன் இல்லை. என் ஃபிரண்டுகிட்ட இருந்து வாங்கிட்டு வந்தேன்’னு சொன்னார். வந்த கோபத்துல நாங்க எல்லோரும் சேர்ந்து அந்த ஆளை அடிச்சித் துரத்திட்டோம். போலீஸ்ல புகார் கொடுத்தா, புள்ளைங்களுக்கும், பள்ளிக்கூடத்துக்கும் நல்லதில்லைன்னு போகலை. அந்த செல்போன் இப்போ தலைமை ஆசிரியர்கிட்ட இருக்குது” என்று சொன்னார்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர் களிடம் விசாரித்தால் சுந்தரமூர்த்தி பற்றி கதை கதையாகச் சொல் கிறார்கள். ”எப்பவும் பாடம் நடத்தும் போது, இரண்டு பொம்பளைப் புள் ளைங்களை மட்டும் கூப்பிட்டு பக்கத்துல நிக்க வச்சிக்குவார். யாராவது ஒரு பொண்ணு உடம்பு சரியில்லைன்னு ஸ்கூலுக்கு லீவு போட்டா, மறு நாள் வந்ததும் சட்டைக்குள்ள கை விட்டு காய்ச்சல் எப்படி இருக்குன்னு டெஸ்ட் பண்ணுவார். பொண்ணுங்க யாராவது பூ வெச்சிக்கிட்டு வந்தால், ‘என்னடி பூவெல்லாம் வச்சிருக்க.. நீ பூத்துட்டியா’ன்னு கேட்பார். ஒரு சில பொண்ணுங்களை செல்போன்ல படம் எடுப்பார். பொண்ணுங்க யாரா இருந்தாலும் தொட்டுத்தான் பேசுவார்.

எப்பவாச்சும் லேப்டாப் கொண்டு வருவார். எங்களை படிக்கச் சொல்லிட்டு, அதுல அசிங்கமான படம் பார்த்துட்டு இருப்பார். பொண்ணுங்களை மட்டும் பக்கத்தில் கூப்பிட்டு படம் காட்டுவார்” என்கிறார்கள்.

பள்ளியின் தலைமை ஆசிரியை விமலா சகாயமேரியிடம் பேசினோம். ”நான் இந்தப் பள்ளிக்கு வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. பிரச்னைக்கு பிறகு ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் விசாரிச்சபோதுதான், அவரைப்பத்தி சில தப்பான தகவல்களைச் சொல்றாங்க. இதுக்கு மேல இந்த விவகாரம் தொடர்பாக நான் பேசக்கூடாது” என்றார்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சாந்தியின் கவனத் துக்கு இந்த விவகாரம் போகவே, அவர் நேரடியாக பள்ளிக்குப் போய் விசாரணை நடத்தியிருக்கிறார். சாந்தியிடம் பேசினோம். ”சுந்தரமூர்த்தியோட கிளாஸ்ல படிக்கும் ஸ்டூடண்ட்ஸ், அந்தக் கிராமத்து மக்கள்னு எல்லோரிடமும் விசாரணை நடத்தினேன். நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மைதான் என்று தெரிகிறது. அதனால் சுந்தரமூர்த்தியை உடனடியாக சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். தொடர்ந்து துறை ரீதியான மேல் நடவடிக்கைக்கும் உத்தரவு போட்டிருக்கிறோம்” என்றார்.

சுந்தரமூர்த்தியின் விளக்கத்தைக் கேட்க பல வழிகளில் முயற்சி செய்தோம். ”வீட்டுல யாரும் இல்லைங்க. எல்லோரும் வெளியூர் கிளம்பிப் போயிட்டாங்க. யாருடைய செல்போனும் எடுக்கல. எல்லோருடைய செல்லும், ஆஃப் ஆகியிருக்கு…” என்று அக்கம்பக்கத்தினர் சொன்னார்கள். சுந்தரமூர்த்தி அவரது விளக்கத்தைச் சொன்னால், அதைப் பிரசுரிக்கவும் தயாராகவே இருக்கிறோம்.

குழந்தைகள் எதிர்கால வாழ்க்கைக்கு வழி காட்டவேண்டிய ஆசிரியர்களே, எதிர்காலத்தைக் கெடுக்கும் செயலைச் செய்வது வேதனை. இதுபோன்ற குற்றம் நிரூபிக்கப்படால், கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்!

க.பூபாலன், படங்கள்: ஜெ.முருகன்

source:vikatan

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மொபைலில் ஆசிரியையின் குளியல் படம்

பாத்ரூமில் செல்போனை பொருத்தி ஆசிரியை குடும்பத்தினர் குளிப்பதை படம் பிடித்த பாலிடெக்னிக் மாணவர்
Art+Basel+2008+071.jpg

பாத்ரூமில் செல்போனை பொருத்தி ஆசிரியை குடும்பத்தினர் குளிப்பதை படம் பிடித்த பாலிடெக்னிக் மாணவர்

திசையன்விளை, டிச.14-

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த ஆசிரியை ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் உள்ள குளியலறையில் ஆசிரியையின் கணவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வெளிச்சத்துக்காக வைக்கப்பட்டு இருந்த `வெண்டிலேட்டர்` ஜன்னலில் ஒரு கேமரா செல்போன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அந்த செல்போனை எடுத்து `மெமரி கார்டில்` பதிவான காட்சிகளை கம்ப்ïட்டரில் போட்டு பார்த்தார். அப்போது, ஆசிரியை உள்பட அவருடைய குடும்பத்தினர் குளித்த காட்சிகள் பதிவாகி இருந்தன. மேலும் அந்த செல்போன், பக்கத்து வீட்டை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் முத்துவிஜய் (வயது 18) என்பவருடையது என்பது தெரியவந்தது.

இது குறித்து ஆசிரியையின் கணவர் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. வரதராஜுவிடம் புகார் செய்தார்.அதன் பேரில், திசையன்விளை போலீசார் விசாரணை நடத்த போலீஸ் டி.ஐ.ஜி. உத்தரவிட்டார். திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முத்து விஜயும், அவருடைய நண்பர்களான திசையன்விளையை சேர்ந்த சுதாகர் (18), அமுதன் (22) ஆகியோரும் சேர்ந்து, ஆசிரியையின் வீட்டு குளியலறையில், ரகசியமாக கேமரா செல்போனை வைத்து படம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அமுதன் டிப்ளமோ படித்து முடித்துள்ளார்.சுதாகர் தனியார்கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

source:maalaimalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

300 இராமாயணங்கள் 5 உதாரணங்கள்

ramayanam.jpg

இந்துத்வா சக்திகளால் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு இன்னொரு மண்டையிடி வேண்டாமென்று தான் அந்தக் கட்டுரையை டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவிட்டார்கள் என்கிறார்கள் இந்திய வரலாற்று ஆய்வாளர்கள்.

பன்முகத் தன்மை கொண்ட நாடு இந்தியா. இங்கே பண்பாடு, கலாச்சாரம், இறை வழிபாடு போன்றவை இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன. வேற்றுமையிலும் ஒன்றுபட்டு வாழ்வதே நம் தேசத்தின் சிறப்பு. இந்த ஒற்றுமைக்கு ஊறு விளைவிக் கின்ற காரியங்களை அவ்வப்போது சிலர் அடாவடியாகச் செய்வதுண்டு. கடந்த மாதம், டெல்லி பல்கலைக் கழகத்தில் இளங்கலை வரலாறு படிக்கின்ற மாணவர்கள் படித்து வந்த ராமாயணங்கள் குறித்த கட்டுரை ஒன்றை பாடத் திட்டத்திலிருந்து நீக்கியதையும் அப்படி ஒரு நிகழ் வாகத்தான் பார்க்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

என்ன கட்டுரை? யார் எழுதியது? ஏன் நீக்கினார்கள்?

300 ராமாயணங்கள்.. 5 எடுத்துக்காட்டுக் கள்..’ என்னும் தலைப்பில் பண்டிதர் ஏ.கே.ராமா னுஜன் தொகுத்து எழுதிய கட்டுரை அது. அய்யங்கார் பிரிவைச் சார்ந்த இவர் பிறந்தது மைசூரில். வரலாற்று அறிஞரான இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு. 1993-ல் இயற்கை எய்தினார் ராமானுஜன். 2006-ல் இவரது கட்டுரை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது.

இந்துக்கள் கடவுளாக வணங்கும் ராமனையும் சீதையையும் பழிக்கின்ற இந்தக் கட்டுரையை நீக்க வேண்டும் என்று 2008-ல் பாரதிய ஜனதாவின் மாணவரணியான அகில பாரத வித்யார்த்த பரிஷத் திடமிருந்துதான் முதன் முதலில் எதிர்ப்பு கிளம்பியது. சமஸ்கிருதத்தில் வால்மீகி எழுதிய ராமாயணம் மட்டுமே சிறப்புடையது. மற்ற ராமாயணங்கள் ஏற்புடையவை அல்ல என்றனர். டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக் கொன்றும் பதிவானது. உயர்நீதி மன்றமோ, இந்த விவகாரத்தில் குழு ஒன்றை அமைத்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று டெல்லி பல்கலைக் கழகத்துக்கு உத்தர விட்டது. சில நடைமுறைகள் மேற் கொண்ட பிறகு, இப்போது அகடமிக் கவுன்சில் கூடி வாக்கெடுப்பு நடத்தி, பாடத்திட்டத்திலிருந்து இக்கட்டுரையை நீக்கிவிட்டது.

ramayanam1.jpgமதரீதியான தலையீடுகள் பல் கலைக் கழகம் வரை நீண்டு பாடத்திலும் கை வைத்திருப்பதைக் கண்டித்து, பாடத்திட்டத்தில் மீண்டும் கட்டுரையைச் சேர்க்கக் கோரி பேராசிரியர்களும் மாணவர்களும் உடனே போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற் றுத் துறை பேராசிரியர்களில் ஒருவர் உபிந்தர் சிங். டாக்டரேட் பட்டம் பெற்று, பழங்கால இந்தியா பற்றிய பல புத்தகங்களை எழுதிய உபிந்தர்சிங், வேறு யாருமல்ல… பிரதமர் மன்மோகன்சிங்கின் மகள். பாடத் திட்ட கமிட்டியில் இவரும் இடம் பெற்றிருந் தார். யுனிவர்சிட்டி அகடமி கவுன்சிலிலும் இவர் இடம் பெற்றிருந்தார். பிரதமர் மகள் தான் ராமாயண பாடத்தை பாடத்திட்டத்தில் சேர்த்தார் என்று பா.ஜ.க.வும் சங்பரிவாரங்களும் பிரச்சினையை கிளப்புமோ என்ற அச்சத்தினால் தான், அரசியல் நிர்பந்தம் காரணமாக அந்தப் பாகம் நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற சர்சை டெல்லி வட்டாரங்களில் கிளம்பியுள்ளது.

அந்தக் கட்டுரையில் ஏ.கே.ராமானுஜன் சொல்வதென்ன?

ஒன்றா? இரண்டா? முன்னூறு ராமாயணங் கள் இருக்கின்றன.. அதுவும் அன்னமேசி, பாலினேசி, பெங்காலி, கம்போடியன், சைனீஸ், குஜராத்தி, ஜாவனிஸ், கன்னடம், காஷ்மீரி, கோட்டனேசி, மலேசியன், மராத்தி, ஒரியா, பிராகிருதம், சமஸ்கிருதம், சாந்தலி, சிங்களம், தமிழ், தெலுங்கு, தாய், திபேத்தியன் என இத்தனை மொழிகளில்.

முன்னூறு விதமாகப் பேசவும் எழுதவும் பட்டிருக்கிறது என ராமாயணங்களின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டிருக்கிறார் காமில் பல்கே என்ற அறிஞர். முன்னூரா? மூவாயிரமா? இத்தனை ராமாயணங்கள் எப்படி இருக்க முடியும்? என்ற கேள்விக்கு ராமா யாணத்திலிருந்தே ஒரு கதையை பதிலாகத் தருகிறார் கட்டுரையாளர் ஏ.கே.ராமானுஜன்.

சிம்மாசனத்தில் வீற்றிருந்த ராமனின் விரலிலிருந்து நழுவி விழுந்த மோதிரம் அப்படியே பூமிக்குள் புதைந்து விடுகிறது. "மோதிரத்தை எடுத்து வா…’’என்ற ராமனின் கட்டளையை ஏற்று தன் உருவத்தை மிக மிகச் சிறிய தாக்கி, பூமியைத் துளைத்துக் கொண்டு செல்கிறான் அனுமன். பாதாள உலகம் வந்து விடுகிறது. அங்கிருந்த பூதகணங் களின் தலைவனிடம் மாட்டிக் கொண்ட அனுமன் விசாரிக்கப் படுகிறான். "பூமிக்குள் சென்ற ராமனின் மோதிரத்தைத் தேடியே நான் வந்திருக்கிறேன்…’’என்று அனுமன் சொல்ல.. மோதிரங்கள் குவியலாகக் கிடந்த ஒரு பெரிய தட்டினை எடுத்து வருகிறது அந்த பூதம். "இதிலிருந்து ராமனின் மோதிரத்தை நீயே தேடி எடுத்துக்கொள்…’’என்கிறது. எல்லாம் ஒரே மாதிரி இருந்த அந்த மோதிரங்களில் தேடி வந்த ராமனின் மோதிரம் எதுவென்று அனுமனுக்குத் தெரியவில்லை. அப்போது பூதங்களின் தலைவன் சொல்கிறான்… "ராம அவதாரங்கள் பல இருக்கின்றன. ஒவ் வொரு ராம அவதாரமும் முடியும் போது மோதிரம் தானாகவே கழன்று விழும். அப்படி நான் சேகரித்த மோதிரங்கள்தான் இவை. நீ பூமிக்கு திரும்பும் போது அங்கே ராமன் இருக்க மாட்டான். ஏனென்றால், அவன் இப்போது எடுத்த அவதாரம் முடிந்து விட்டது’’என்று விளக்குகிறான்.

முன்னூறு விதமான ராம கதைகள் ஒருபுறம் இருக்கட்டும். வால்மீகியும், கம்பரும் சமஸ்கிருதம், தமிழ் மொழியில் எழுதிய இரண்டு ராமாயணங்களில் கூறப்படும் அகலிகை கதையை முதலில் கவனிப்போம்.

வால்மீகி ராமாயணத்தில் கவுதம மகரிஷியின் பத்தினியான அகலிகை மீது மோகம் கொண்டு கவுதமரின் உருவத்தில் வரும் இந்திரனை முதலிலேயே அடையாளம் கண்டுகொள்கிறாள் அவள். ஆனாலும், உணர்வுகளால் உந்தப்பட்டு விரும்பியே உறவு கொள்கிறாள். தனது குடிலுக்கு திரும்பி வந்த கவுதம மகரிஷி, இவ்விருவரும் தவறிழைத்ததை தனது ஞானத்தால் அறி கிறார். கல்லாகிப் போ…’என்று அகலிகை யை சபிக்கிறார். இந்திரனிடமோ “"இது போன்ற தவறினை இனி எப்போதும் நீ பண்ண முடியாது. உனது விரைக் காய் களை இப்போதே நீ இழப்பாய்…’’என்று சாபமிடுகிறார். அவரது சாபத்தால் இந்திரனின் விரைகள் அந்த இடத்தி லேயே கீழே விழுந்து விடுகின்றன. பிறகு இந்திரன் அக்னி தேவ னிடம் சென்று “"கடவுளர்களுக்காகவே (?) இப்படி ஒரு காரியத் தைச் செய்தேன்…’’என்று முறையிட, ஒரு செம்மறி ஆட்டுக் கிடாவின் விரைகளைப் பிடுங்கி அவனுக்குப் பொருத்தி சரி பண்ணிவிடுகிறார் அக்னி.

ramayanam3.jpg

கம்ப ராமாயணத்திலோ, கவுதமரின் உருவம் தாங்கி வரு வது இந்திரன் என்பதை அறியாதவளாக இருக்கிறாள் அகலிகை. அவன் உறவில் ஈடுபடும் போதுதான் வித்தியாசத்தை உணர் கிறாள். ஆனாலும், இந்திரனின் மாயவலையில் சிக்குண்டு சிற்றின்பம் காண்கிறாள். பெண்ணுறுப்பின் மீது கொண்ட வெறி யினால்தானே இப்படி ஒரு தவறைச் செய்தான் இந்திரன் என்ற கோபத்தில் “"உன் உடல் முழுவதும் ஓராயிரம் யோனிகள் தோன் றட்டும்…’’என்று சாபம் விடுகிறார் கவுதம மகரிஷி. பிறகு தேவர் களின் முயற்சியில், பெண்ணுறுப்புக்கள் அத்தனையும் கண்களாக மாறி, ஆயிரம் கண்கள் உடையவன் ஆகிறான் இந்திரன். நூல் ஒன்றுதான். அதற்காக, ஊடும், பாவும், நெருக்கமும், அழுத்தமும், வண்ணங் களும், டிசைன்களும் வெவ்வேறாக இருக்கின்ற துணிகளை ஒரே துணி என கருத்தில் கொள்ள முடியுமா? ராமாயணக் கதைகளும் அப்படித்தான் இருக்கின்றன.

உறவு முறைகளில் வெவ்வேறாக முரண்படுகின்ற கதைகள் உண்டு. ராமனையும் சீதையையும் அண்ணன் – தங்கையாக சித்தரிக்கிறது பௌத்த ராமாயணம். சமணர்களோ தங்களின் ராமாயணத்தில் ராவணனின் மகள் சீதை என்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர் கள் எனப்படும் தம்பூரி தாஸையாக்கள், கன்னட மொழியில் மேடைகளில் கதா கலாட்சேபங்களாக நடத்துகின்ற ராமா யணங்களிலும் சீதையை ராவணனின் மகள் என்றே பாடுகிறார்கள். அதற்கு கதை ஒன்றும் சொல்கிறார்கள். குழந் தை இல்லாத கவலையில் இருக்கிறார் கள் ராவணன்-மண்டோதரி தம்பதியர். இந்த வேண்டுதலை நிறைவேற்ற மாம்பழம் ஒன்றைத் தரும் சிவனிடம் பழத்தின் சதைப் பகுதியை மண்டோ தரிக்கு கொடுத்து விட்டு, கொட்டை யை நான் சப்பிக் கொள்கிறேன் என்கிறான் ராவணன். ஆனால், சொன்னதற்கு மாறாக சதை யை தான் தின்றுவிட்டு கொட்டையை மண்டோதரிக்கு கொடுக்கிறான். சிவனிடம் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாததற்கு தண்டனையாக ஆணாக இருந்தும் கர்ப்பம் அடைகிறான் ராவணன். சரியான நிறை மாதத்தில் அவன் தும்மும்போது மூக்கு வழியாக பிறந்ததால் சீத்தம்மா என்று பெயர் வைக்கிறான். தம்பூரி தாஸையாக்கள் ராவணனை ரவுலா என்று அழைக்கின்றனர்.

கதாபாத்திரங்களின் குணாதிசயங்களும் மாறுகின்றன. ‘ராமகியென்’ எனப்படும் தாய்லாந்து ராமாயணத்தில் அனுமனை பெண் பித்தனாகக் காட்டுகின்றார்கள். தூங்கிக் கொண்டிருக்கும் அடுத்தவன் மனைவியை கள்ளத்தனமாக ரசிப் பவன், பிற வீடுகளின் படுக்கை அறைகளை எட்டிப் பார்ப்பவன் என அனுமன் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. ராம பக்தன் என்றெல்லாம் அதில் இல்லை. வெறும் தூதுவன் என்றே சொல்லப்பட்டிருக்கின்றான். வனவாசத்துக்குப் பிறகு சந்தேகம் கொண்டு சீதையை விரட்டிய ராமன், காட்டுக்குள் வைத்து அவளைக் கொன்று விடும்படி லட்சுமணனுக்கு உத்தரவு பிறப்பிக்கின்றான். லட்சுமணனோ ஒரு மானைக் கொன்று விட்டு, அதன் இதயத்தை சீதையின் இதயம் என்று ராமனிடம் காண்பிக்கிறான். "ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே.. உங்கள் செவி குளிர பாடிடுவோம் கேளுங்கள் இதையே…’’என மிகச் சிறந்தவனாக தமிழர்களும் போற்றும் ராமனை, சந்தேக புத்தி கொண்ட ஒரு கொலைகாரனாகச் சித்தரிக்கிறது தாய்லாந்து ராமாயணம்.

சம்பவங்களும் வேறுபடுகின்றன. விமலசூரியின் ஜெயின் ராமாயணமோ ராவணனைக் கொல்வது ராமன் அல்ல.. லட்சு மணன் என்கிறது. ராவணனைக் குத்திக் கொல்கிறாள் சீதை எனக் கூறுகிறது சடகந்த ராவணா என்னும் தமிழ்க்கதை. சாந்தலர்களின் ராமாயணத்தில் லட்சுமணன், ராவணன் இருவருமே சீதையை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குறிப்புக்கள் இருக்கிறது.

யாரை மையப்படுத்தி கதை சொல்கிறார்கள் என்பது அந்தந்த இடங்களின் சூழல், சாதி மற்றும் பாலினத்தைச் சார்ந்த விஷயமாக இருக்கிறது. சமணர்களும், தாய்லாந்து நாட்டினரும் ராவணனுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். உயர்ந்த குணா ளனாகச் சொல்கின்றனர். போர்க்களம் மற்றும் யுத்தத்தை முன் னிறுத்தி வீர, தீர, சாகசங்கள் நிறைந்த கதையாகப் படைத்திருக் கின்றனர். சமஸ்கிருதத்திலும், தமிழிலும் ராமனைக் கொண்டாடு கின்றனர். ஆந்திராவில், ரங்கநாயகி அம்மாள் தொகுத்திருக்கும் ராமாயணக் கதைகளை தங்கள் வீட்டுக் கொல்லைகளில் அமர்ந்து கொண்டு பாடுகின்ற பிராமணப் பெண்களுக்கு, சீதையைப் பற் றிய கவலையே மிகுந்து காணப்படுகிறது. ராமனையே விஞ்சு கிறாள் என்று சீதையை உயர்த்திப் பிடிக்கின்றனர். ராமனைப் பழிவாங்குவதில் சூர்ப்பனகை காட்டும் தீவிரத்தையும் சிலாகித் துச் சொல்கின்றனர்.

கதைக் களமும் வெவ்வேறாகச் சொல்லப்பட்டிருக்கிறது. “பௌத்த ஜாதகக் கதைகளின்படி பார்த்தால் தசரதனின் நாடு காசி..’’ என்கிறார், ராமாயணக் கதைகள் பலவற்றை அச்சிட்டிருக்கும் பதிப்பாசிரிய ரான பாலா ரிச்மேன். “கேரளா-வயநாடு பகுதிகளில் இருக்கின்ற மலைவாழ் மக்கள், இங்கே புல்லப் பள்ளியில் வால்மீகிக்கு ஆசிரமம் இருக்கிறது. வால்மீகியின் ஊர் புல்லப்பள்ளிதான். ராமாயண சம்பவங்கள் அத்தனையும் நடந்தது கேரளாவில்தான். இலங்கை என்பது இங்கே உள்ள ஒரு நீர் நிலையினைக் குறிக்கிறது. இதைக் கடந்தே ராவணனிடமிருந்து சீதையை மீட்டான் ராமன். அனுமன் கட்டிய பாலமும் இங்கே இருக்கிறது.’’ என்று நம்பியும் பாடியும் வருவதாகச் சொல்கிறார் கேரளாவில் உலவு கின்ற பல்வேறு கதைகளைத் தொகுத்து வரும் அஜீஸ்.

ramayanam2.jpg

ஆரியர் என்பதால் திராவிடர்களை இழிவு படுத்தி இயற்றியிருக்கிறார் வால்மீகி. சீதையை மீட்க ராமனுக்கு உதவிய தென் னிந்தியர்களை குரங்குகளாகக் காட்டியிருக் கிறார் என்பது போன்ற சர்ச்சைகளுக் கிடையே சில சந்தேகங்களைக் கிளப்புகின்ற னர் ஜைனர்கள். . “வருடத்தில் ஆறு மாதங் கள் இடைவிடாமல் தூங்குவானாம் கும்பகர்ணன். கொதிக்கின்ற எண்ணெய்யை காதில் ஊற்றியும், யானைகளால் மிதிக்க விட்டும்கூட போர் நடந்த போது அவனை எழுப்ப முடியவில்லையாம். உயர்ந்த பண்பு களுடைய வீரனும் சமணத் தலைவர்கள் 63 பேரில் ஒருவனுமான ராவணனைக் கெட்டவனாகச் சித்தரிப்பது நம்பும்படி யாகவா இருக்கிறது?’என்று கேள்வி எழுப்புகின்றனர்.

“ராமாயண கதைக்கு மூலம் எது என்றே சொல்ல முடியாது. வால்மீகி காலத்திலேயே வேறு ராமாயணங்களும் இருந்திருக் கின்றன. எல்லா ராமாயணங் களையும் ஏதோ ஒன்றின் தழு வல் என்றோ, மொழி பெயர்ப்பு என்றோ உறுதியாகச் சொல்லி விட முடியாது. இவை அனைத் திலும் உள்ள ஒரே ஒற்றுமை ராமன் என்ற கதாபாத்திரத்தை உள் ளடக்கிய ராமாயணம் என்பதே..’’ என்கிறார் பிரபல வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாபர்.

"இதிகாசங்களில் பின்னாளில் தெய்வீகத் தன்மையைப் புகுத்தி விட்டார்கள் பிருகு பிராமணர் கள்…’’எனச் சொல்கிறார் வரலாற்று அறிஞர் வி.எஸ்.சுக்தாங்கர்.

“வேறு எந்த மொழியிலும், வேறு யாரும், ராமாயணக் கதை களைச் சொல்வதோ, எழுதுவதோ அவற்றைப் பாடமாகப் படித்து தெரிந்து கொள்வதோ கூடாது என்று.. மனு ஸ்ம்ருதியின்படி பிரம்மனின் முகத்திலிருந்து தோன்றிய உயர் சாதியினர் எனச் சொல்லிக் கொள்பவர்கள்… சட்டத்தின் துணையோடு இப்போதும் ஆதிக்கம் செலுத்துவது கொடுமையிலும் கொடுமை அல்லவா? ராமனும் ராமாயண கதாபாத்திரங்களும் கற் பனை அல்ல.. உண்மையே.. என்று டெக்னாலஜி வெகுவாக முன்னேறிவிட்ட இந்தக் காலத்திலும் அரசியல் பண்ணுகின் றார்களே… பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட ஏ.கே.ராமா னுஜனின் கட்டுரையை ஒரு முறை படித்துப் பார்த்து இவர் கள் தெளிவு பெற வேண்டும் என்று பொதுநல நோக்கில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அங்கப்பன்.

இனி சொல்வதற்கு என்ன இருக்கிறது?

அட, ராமா.. ராமா..!

-சி.என்.இராமகிருஷ்ணன்

source:nakkheeran

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ஆபசத் தகவல்கள் !காங்கிரஸ் இணையத்தில் ஊடு ருவல்:

இந்தியாவின் ளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியின் இணையதளத்துக்குள் ஊருடுவி இணையதளத்தை முடக்கி அக்கட்சி தலைவர் சோனியா காந்தியின் சுயவிவரப் பக்கத்தை நீக்கிவிட்டு அதில் ஆபாசத் தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் சோனியாவின் 65-வது பிறந்தநாளான இன்று நடந்துள்ளது.

வலைதளங்களில் மத சம்மந்தப்பட்ட உணர்வுகளைத் தூண்டும் கருத்துகளை போட வேண்டாம் என்று கூகுள், யாகூ, பேஸ்புக் உள்ளிட்ட இணையதள ஜாம்பவான்களுக்கு மத்திய அமைச்சர் கபில்சிபல் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் இணையதளத்துக்குள்ளேயே சிலர் ஊடுருவி இருக்கிறார்கள்.இதையடுத்து உடனடியாக அந்த இணையதளத்தை காங்கிரஸ் கட்சி மூடிவிட்டது. இந்த ஊடுருவலை நடத்தியவர்கள் ஹேக்கர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

source:athirvu
http://thamilislam.tk

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மொபைல் “மிஸ்டு கால்’ கொள்ளை: ரூபாய் 40 பறிபோ கும்

Tamil_News_large_365926.jpg

வேலூர்: வேலூர் மாவட்டத்தில், மொபைலில், "மிஸ்டு கால்’ கொடுத்து, லட்சக் கணக்கில் பணம் மோசடி செய்வது நடந்து வருகிறது. உலக அளவில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களில், இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. ஆனால், மொபைல்போன் மூலம் நடக்கும் மோசடிகளில், இந்தியாவில் அதிகம் . அது கணிசமாக தமிழகத்தில் அதிகரிக்கிறது.

வேலூர் மாவட்டத்தில், ஒரு மாதமாக மொபைலில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்து வருவது தெரிய வந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, "ப்ளஸ் 960′ என்ற எண்களில் துவங்கும், 10 இலக்கம் கொண்ட நம்பரில் இருந்து மிஸ்டு கால் வருகிறது. வாடிக்கையாளர்கள் அந்த நம்பரை தொடர்பு கொண்டால், எதிர் முனையில் யாரும் பேசுவதில்லை. இணைப்பை துண்டிக்கும் போது, வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து, 40 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. பேலன்ஸை ஒரு சிலர் மட்டும் பார்ப்பதால், இது தெரியவில்லை. இந்த மோசடியை அறியாத வாடிக்கையாளர்கள் பலர், மிஸ்டு கால்களை தொடர்பு கொண்டு, தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். குறிப்பாக, போஸ்ட் பெய்டு கணக்கில் இது போன்று நடப்பதில்லை. பெரும்பாலும், ப்ரீ பெய்டு கணக்கில் மட்டுமே இப்படி நடக்கிறது.

இது குறித்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியது: இதுபோன்ற மோசடிகள் சமீபகாலமாக நடந்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து மெசேஜ் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம்.

இது குறித்து போலீசார் கூறியது: இந்த மோசடி மற்ற நிறுவன மொபைல் வாடிக்கையாகளர்களை விட, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்குதான் அதிக அளவில், "மிஸ்டு கால்கள்’ வருகிறது. சாதாரணமாக, 10 இலக்க எண்ணில் இருந்து பேசினால், உள்ளுர் கட்டணம் தான் வரும். ஆனால், இந்த மிஸ்ட் கால் நம்பரை தொடர்பு கொண்டால், 40 ரூபாய் பிடிக்கப்படுவது எப்படி எனத் தெரியவில்லை. இந்த மோசடி குறித்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும். இது குறித்து மேலும் விசாரித்த போது, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மோசடி கும்பல், தமிழகத்தில் முகாமிட்டு, இந்த மோசடிகள் செய்து வருவதாகவும், தினம் லட்சக்கணக்கான பணம் மோசடி நடந்து வருவதாகவும் தெரிகிறது. ஆனால் அது எப்படி என்று யாரும் விளக்க முன் வரவில்லை. அதே சமயம் 40 ரூபாய் ஏன் பிடிக்கப்படுகிறது என்பது குறித்து மொபைல் போன் கம்பெனிகளும் விளக்கம் தரவில்லை.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized