Monthly Archives: ஏப்ரல் 2010

அப்துல்லாவின் அதிர்ஷ்டம் முஹம்மதுவின் த ுரதிஷ்டம்: இஸ்லாமிய புனித பூமியில் கொலை

முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும் – பாகம் 1

அப்துல்லாவின் அதிர்ஷ்டம் முஹம்மதுவின் துரதிஷ்டம்

Muhammad And The Ten Meccans

சைலஸ்

கட்டுரைச் சுருக்கம்:

முஹம்மது மெக்காவை ஜெயித்துப் பிடித்த போது மெக்காவைச் சேர்ந்த பத்து பேரை கொன்று விடும்படி கட்டளையிட்டார். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் கொல்லப்பட்டார்கள். சிலர் பல்வேறு காரணங்களுக்காக கொல்லப்படாமல் தப்பினார்கள். இந்த கட்டுரையில் மரண தண்டனை அளிக்கப்பட்டவர்கள் யார் என்பதைப் பற்றியும், ஏன் அவர்கள் கொலை செய்யப்பட கட்டளையிடப்பட்டது என்பதைப் பற்றியும், முஹம்மதுவினால் மரண தண்டனை அளிக்கபப்ட்ட ஒவ்வொருவரின் முடிவு கடைசியில் எப்படி இருந்தது என்பதைப் பற்றியும் இக்கட்டுரையில் ஆராயப்போகிறோம்.

முன்னுரை:

முஹம்மதுவுக்கு பலம் பெருகின போது வன்முறையை பயன்படுத்தி தன்னுடைய விருப்பங்களை அடையத் தொடங்கினார். அநேகர் கொலை செய்யப்பட கட்டளையிட்டார். அவராக சென்று சுயமாக அந்த கொலைகளை செய்யவில்லை, அவருக்காக அந்த கொலைகளை செய்வதற்கு விருப்பமுடையவர்கள் (அடியார்கள்) அனேகர் அவருக்கு இருந்தார்கள்.

மெக்கா அமைதியான முறையில் சரணடைந்த பிறகு, முஹம்மது யார் யாரை கொலை செய்யப்படவேண்டும் என்று கட்டளையிட்டாரோ அவர்களைப் பற்றி நாம் ஆராய்வோம். முஹம்மது தம் வாழ்நாளில் அனேகரை கொன்றார். ஆனால், இந்த கட்டுரையில் அவர் மெக்காவை கைப்பற்றிய நாளில் கொல்ல கட்டளையிடப்பட்ட‌ 10 நபர்களைப் பற்றி காண்போம்.

முஹம்மது ஏறக்குறைய 10,000 போர்வீரர்களுடன் கூடிய படையோடு மெக்காவின் மீது அணிவகுத்துச் சென்றார். இந்த மனிதர்கள் உறுதியுள்ள‌ அர்ப்பணிப்புள்ள முஸ்லீம்களாக இருந்தார்கள். மெக்காவின் தலைவர்கள் முஹம்மதுவின் படைகளைத் தோற்கடிக்க அவர்களால் முடியும் என்று எண்ணவில்லை, இதற்கு பதிலாக அவர்கள் சரணடைந்துவிட்டார்கள். முஹம்மது மெக்காவை முழுவதுமாக அழித்துவிடவில்லை அல்லது அதன் குடிமக்கள் அனைவரையும் படுகொலை செய்யவில்லை மாறாக தன்னுடைய தனிப்பட்ட எதிரிகளை மாத்திரம் ஞாபகத்திற்கு கொண்டு வந்து, கண்டுபிடித்து அவர்களை கொல்லச் சொன்னார். முஹம்மது அந்த மனிதர்களை வெறுத்தார், இதற்கு காரணம் முந்தைய நாட்களில் இவர்கள் எல்லாரும் அவரை அவமானப்படுத்தி (கேலி செய்து) இருந்தார்கள்.

பின்னணி:

இந்த கட்டுரைக்காக நான் பயன்படுத்திய‌ முக்கியமான மூன்று பின்னணி ஆதாரங்களை நான் உங்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்.

1) "ஹதீஸ்கள்" (பாரம்பரியங்கள்) புகாரி, முஸ்லீம் மற்றும் அபு தாவுத்

2) "சீரத் ரஸூலல்லாஹ்" இப்னு இஷாக்கினால் எழுதப்பட்டது பின்னர் இப்னு ஹிஷாமினால் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டது.

3) மற்றும் "கிதாப் அல்-தபாகத் அல்-கபிர்" இப்னு சாத் என்பவரால் எழுதப்பட்டது.

4) "23 வருடங்கள்-முஹம்மதுவின் நபித்துவ வாழ்க்கையைப் பற்றிய ஒரு ஆய்வு" இப்புத்தகம் அலி த‌ஸ்தியினால் எழுதப்பட்டது.

தஸ்தி ஒரு ஷியா முஸ்லீம் அறிஞர் ஆவார். அவர் 85 வயதாக இருக்கும் போது ஈரானை ஆண்ட‌ ஒரு முஸ்லீமால் கொல்லப்பட்டார். த‌ஸ்தி ஒரு சுன்னி (Sunni) பிரிவைச் சேர்ந்தவராக இல்லாவிட்டாலும், நான் இந்தக் கட்டுரையில் அறிமுகப்படுத்துகிற விஷயத்தை வெகு சிறப்பாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவரது பாண்டித்யம் மிகவும் சிறப்பாக இருப்பதை நான் காண்கிறேன்.

நான் பயன்படுத்தவும் அல்லது சரிபார்க்கவும், என்னிடம் இருக்கும் இஸ்லாமிய மூல ஆதாரங்களைக் காட்டிலும் அவரிடம் அதிகமாக ஆதாரங்கள் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் ஒரு ஷியா இஸ்லாமிய அறிஞரின் மேற்கோள்கள் பயன்படுத்துவதை, சில சுன்னி இஸ்லாமியர்கள் எதிர்த்தாலும், மெக்காவில் நடந்த கொலைகளைப் பற்றிய அவருடைய கருத்துக்களை ஹதீஸ்கள், சீரத் மற்றும் தபாகத் போன்ற மூல நூல்களில் இருக்கும் விவரங்களோடு ஒத்திருக்கிறது என்பதை நாம் காணலாம். என்னுடைய குறிப்புகள் எந்த விதத்திலும் தஸ்தியினுடைய செயல்பாட்டின் மீது ஆதாரமில்லாததாக இருந்தாலும், அவருடைய கருத்துக்கள் என்னுடைய ஆராய்ச்சி மற்றும் முடிவுகளை உறுதிப்படுத்துகிறது.

இங்கே உள்ள எல்லா ஆதாரங்களின் எழுத்தாளர்கள் அனைவரும் முஸ்லீம்கள் ஆவார்கள். முதல் மூன்று படைப்புகளும் சுன்னி இஸ்லாமியப் பிரிவால் (Sunni branch of Islam) அங்கீகரிக்கப்படுகிறது. எனினும், இவைகளில் எதுவும் குர்‍ஆனுக்கு இணையாக அங்கீகரிக்கப்படுவது இல்லை. ஆதாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்டும் வரிசை 1) ஹதீஸ்கள் 2) சீரத் 3) தபாகத் என்று நான் கூறுவேன்.

முஹம்மதுவின் சொல் மற்றும் செயல் பற்றிய பாரம்பரிய தொகுப்பை ஹதீஸ்கள் என்கிறோம். சீரத் மற்றும் தபாகத் என்பது முஹம்மதுவின் சரிதைகளாகும் (வாழ்க்கை வரலாறு). இந்த இரு சரிதைகளும் ஹதீஸ்கள் தொகுப்பதற்கு முன்பாக எழுதப்பட்டது. இவ்விரு சரிதைகள், ஹதீஸ்கள் மற்றும் குர்‍ஆன் சொல்லும் பெரும்பான்மையான விவரங்களை உறுதிப்படுத்துகின்றன.

நான் இந்த விவரங்களை மூலத்திலிருந்து மேற்கோள் காட்டும் போது, சம்பவங்கள் உங்களுக்கு தெளிவாக விளங்கச் செய்வதற்காக‌ என்னுடைய அதிகபடியான விளக்கங்களை சிறு குறிப்புகளாக [அடைப்பு குறிக்குள் – Square brackets] கொடுப்பேன்.

இன்னொரு குறிப்பை கவனிக்கவும், மேற்கூறிய ஆதாரங்களின் ஆசிரியர்கள் தங்கள் குறிப்புக்களையும் (அடைப்பு குறிக்குள் – Paranthesis brackets ( ) ) கொடுத்துள்ளார்கள், அவைகளை அப்படியே தருகிறேன்.

சீரத் ரஸூலல்லாஹ்வைப் பற்றிய குறிப்பு (The Sirat Rasulallah):

சீரத் ஆங்கிலத்தில் குல்லேம் (A. Guillaume) என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டது. அவர் ஒரு இஸ்லாமிய அறிஞராக இருந்தார். அவர் இஸ்லாமைப் பற்றி அநேக புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் லண்டன் பல்கலைக் கழகத்தின் (University of London) அரபி பேராசியராகவும், டமாஸ்கஸ் அரபு அகாடமி மற்றும் பாக்தாத் ராயல் அகாடமியின் உறுப்பினராகவும் இருந்தார் (Arab Academy of Damascus, and Royal Academy of Baghdad). அவருடைய சீரத் மொழியாக்கத்தில் பல அரபு அறிஞர்கள் அவரோடு இணைந்து பணியாற்றியுள்ளனர். குல்லேம் முஹம்மதுவை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட முயற்சி எடுக்காமல் அவரை நல்ல வெளிச்சத்திலே காட்டவே முயற்சி செய்துள்ளார். ஒரு சிறப்பான மொழியாக்கத்தை படைக்க வேண்டும் என்பதே அவருடைய பேராவலாக இருந்தது. இன்னும், முஸ்லீம் மார்க்க அறிஞர்கள் (Muslim apologists) எழுதிய ஒரு புத்தகம் என்னிடம் இருக்கிறது, அதில் அவர்கள் அவருடைய இந்த சீரத் மொழியாக்கத்திலிருந்து பல குறிப்புகளை எடுத்தாண்டிருக்கிறார்கள்.

தபாகத் பற்றிய குறிப்பு (Kitab al-Tabaqat al-Kabir)

தபாகத் ஆங்கிலத்தில் மொய்னுள் ஹக் (Moinul Haq) என்ற பாகிஸ்தானியரால் மொழியாக்கம் செய்யப்பட்டது. இவருடைய‌ படைப்புக்கள் பாகிஸ்தானிய வரலாற்றுச் சங்கத்தால் (Pakistan Historical Society) பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவைகள் இரண்டு தொகுப்புக்களாக‌ பிரசுரிக்கப்பட்டது. அதன் தலைப்பு "பெரும் வகுப்புகளின் புத்தகம்" (Book of the Major Classes) இதுவும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் புத்தகமாகும்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized