ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும் முன்னுரை: என் பெயர் உமர் (புனைப் பெயர்), நான் ஈஸா குர்ஆன் என்ற பிளாக்கரில் இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகளை மறுப்புக்களை எழுதிக்கொண்டு வருகிறேன். 2008ம் ஆண்டிலிருந்து இதர நண்பர்களின் உதவி கொண்டு ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் ஆங்கில கட்டுரைகளை தமிழாக்கம் செய்து பதித்துக்கொண்டு இருக்கிறேன். தமிழ் கிறிஸ்தவர்கள் என்ற தளத்திலும் கட்டுரைகள் பதிக்கப்படுகின்றன. எழுத்து விவாதத்திற்கு இஸ்லாமியர்கள் விரும்பினால், அதற்கு தயார் என்றுச் சொல்லி, 2007ம் ஆண்டில் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் நடந்த ஒரு உரையாடலில் பதித்தேன் (அவ்வுரையாடலை இங்கு காணலாம்).
கடந்த வாரம் (ஜனவரி 7ம் தேதி) அர்ஷத் ரஹ்மான் என்ற பெயரிலிருந்து ஒரு மெயில் வந்தது, அதாவது பீஜே அவர்களுடன் நேரடி விவாதத்திற்கு தயாரா? என்று கேள்வி கேட்டு வந்தது, மற்றும் ஆன்லைன் பீஜே தளத்திலும் இக்கேள்வியைக் கேட்டு பீஜே அவர்கள் அழைப்பு விடுத்து இருந்தார்கள்.
முதலில் எனக்கு மெயில் அனுப்பிய சகோதரருக்கு பதிலை கொடுத்துவிட்டு, பிறகு பீஜே அவர்கள் எழுதியவைகளுக்கு பதிலை தருகிறேன்.
எனக்கு மெயில் அனுப்பிய அர்ஷத் ரஹ்மான் அவர்களுக்கு பதில்:
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:
\ஈசா குரான் உமர் அவர்களுக்கு! உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!//
உமர் எழுதியது:
அன்பான சகோதரர் அர்ஷத் ரஹ்மான் அவர்களுக்கு, உங்கள் மீதும் இறைவனின் சாந்தி சமாதானம் உண்டாவதாக.
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:
//இஸ்லாத்தை விமர்சனம் செய்யும் நீங்கள் உங்கள் கொள்கையில் உண்மையாளராக இருந்தால் முஸ்லிம்களுடன் நேரடி விவாதத்துக்கு வர வேண்டும்.//
உமர் எழுதியது:
இதைத் தான் நானும் கேட்கிறேன், இஸ்லாம் மீதும் அதன் கொள்கைகள் மீதும் உண்மையிலேயே உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், ஏன் நீங்கள் எழுத்து விவாதத்திற்கு வரக்கூடாது?
நேரடி விவாதம் செய்தால் தான், ஒருவரின் நம்பிக்கை உண்மையானது என்று நிருபிக்கப்படும் என்பது சரியான வாதமல்ல, அதற்கு பதிலாக எழுத்து வடிவத்தில் எடுத்துவைக்கும் விவரங்கள் உண்மையானதாகவும், ஆதாரபூர்வமானதாகவும் இருக்கின்றதா என்பதைத் தான் கவனிக்கவேண்டும், இதனை எல்லாரும் ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:
//அதை விடுத்து எழுத்து விவாதத்துக்கு மட்டும் தான் நான் வருவேன் என்று நீங்கள் கூறுவது கோழைத்தனமானது.//
உமர் எழுதியது:
நேரடி விவாதத்தை மட்டும் தான் நாங்கள் ஒப்புக்கொள்வோம் என்றுச் சொல்வதும் கோழைத்தனம் தானே! உங்கள் மார்க்கம் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மை தானே! வீரர்களுக்கு புல்லும் ஆயுதம் என்ற சொற்றடருக்கு இணங்க, நீங்கள் வீரர்களாக உங்களை கருதிக்கொண்டால், கிறிஸ்தவர்களுடன் எழுத்து விவாதத்தையும் செய்யலாமே!
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:
//மக்கள் மத்தியில் விவாதம் செய்வதுதான் அதிக மக்களுக்கு சத்தியத்தை கொண்டு செல்ல உதவும். எழுத்து வடிவ விவாதத்தின் மூலம் பாமர மக்களை சென்றடைய முடியாது.//
உமர் எழுதியது:
உங்களின் இந்த வாதத்தை முழுவதுமாக நான் அங்கீகரிக்க முடியாது. நேரடி விவாதத்திற்கும் எழுத்து விவாதத்திற்கும் அதற்குரிய நன்மைகள் உண்டு. ஏனென்றால், ஒரு சமயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடத்தப்படும் விவாதத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ளவர்கள் தான் காணமுடியும், மற்றும் மற்றவர்கள் அந்த நிகழ்ச்சியை மறுபடியும் காணவேண்டுமானால், அதன் வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்க்கவேண்டும், இதற்கு அதிகபடியான நேரம் எடுத்துக்கொள்ளும். அல்லது சீடிக்களை வாங்கி பார்க்கவேண்டும் இதே எழுத்து விவாதமென்றால், இணையத்தில் பதித்தால் அதனை ஒரு சில நிமிடங்களில் டவுன்லோட் செய்து படிக்கமுடியும். ஒரு நபர் ஒரு எழுத்துவிவாத கட்டுரையை பிரிண்ட் எடுத்து அனேகருக்கு தரலாம், அதனை படிக்க சாதாரண மக்களுக்கு கணினியோ, வீடியோ பிளேயரோ தேவையில்லை. பேருந்தில் பிரயாணம் செய்யும் போதும், வீட்டில் மின்சாரம் இல்லாத நேரத்திலும் பகலின் வெளிச்சத்திலும் படித்துக்கொள்ளமுடியும். அதாவது, மனது இருந்தால் மார்க்கமுண்டு. இரண்டு வகையான விவாத முறையிலும் அதற்குரிய பயன்பாடுகள் உண்டு. எனவே, ஒருவகை தான் சரியானது என்பது ஏற்க முடியாது.
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:
//கிருஸ்தவ மதமானது அதிக மக்கள் கடைபிடிக்கும் ஓன்று. எனவே எழுத்து விவாதம் என்பது இந்த உலகளாவிய சர்ச்சைக்கு பெரிய தீர்வாக அமையாது.//
உமர் எழுதியது:
தீர்வு உங்கள் கையில், என் கையில் இல்லை. இந்தியாவில் எத்தனை சதவிகித கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்? அவர்கள் எத்தனை சதவிகித மக்களுக்கு தமிழ் தெரியும், இவர்களில் எத்தனை சதவிகித மக்கள் நேரடி விவாதத்தை பார்ப்பார்கள்? இவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்ப்பார்கள்? ஆக, அதிக மக்கள் தொகை இருப்பதால் நேரடி விவாதம் தான் சரியானது என்பதும் ஏற்பதற்கில்லை.
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:
//பீ.ஜைனுலாபிதீன் அவர்கள் உங்களை போன்று ஒளிந்து கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு தன்னுடைய இணையதளத்தில் பகிரங்க விவாத அழைப்பு விடுத்துள்ளார் (www.onlinepj.com).//
உமர் எழுதியது:
ஒளிந்துக்கொள்ளாமல் பகிரங்கமாக பொய்களையும், தங்கள் சொந்த யூகங்களையும் முன்வைத்து ஆதாரமில்லாமல் கட்டுரைகளை புத்தகங்களை எழுதும் எல்லா இஸ்லாமிய அறிஞர்களுக்கும் 2007ம் ஆண்டே, நானும் எழுத்து விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். விரும்புகிறவர்கள் என் கட்டுரைகளுக்கு பதில்களை எழுதலாம், எழுத்து விவாதத்தில் ஈடுபடலாம். பீஜே அவர்களின் விவாத அழைப்பிற்கு இக்கட்டுரையில் பதிலை நான் கீழே கொடுத்துள்ளேன்.
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:
//உங்களுக்கு உண்மையில் உங்கள் கொள்கையில் உறுதி இருந்தால்,கிருஸ்தவத்தின் மீது எள் முனையளவாவது ஈடுபாடு இருந்தால்,சத்தியத்தை நீருபிக்க திராணி இருந்தால் இந்த விவாத அழைப்பை ஏற்று விவாதத்துக்கு வருமாறு உங்களை அழைக்கிறோம்.பிரச்சினை வரும் என்றெல்லாம் போலி சாக்குகளை கூறி நழுவாதீர்கள். காவல்துறையின் பாதுகாப்பை வேண்டுமானாலும் நாடலாம்.\
உமர் எழுதியது:
அப்படியானால், எழுத்து விவாதத்திற்கு வரமாட்டீர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் எழுத்து விவாதத்திற்கு பயப்படுகிறார்கள் என்று மக்கள் கருதலாமா? இஸ்லாமிய அறிஞர்கள் நேரடி விவாதத்திற்கு வீரர்கள், எழுத்து விவாதத்திற்கு கோழைகள் என்று மக்கள் கருதிக்கொள்ளலாமா?
எங்களிடம் உண்மை இருக்கிறது என்பதால் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக, தொடர்ந்து பதில்களை கொடுத்துக்கொண்டு கேள்விகளை தொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.
உங்களுக்கும் இஸ்லாம் மீது அணு அளவாவது நம்பிக்கை இருந்தால், எழுத்து விவாதத்திற்கு வாருங்கள், அப்படி வரவில்லையானாலும் சரி, நான் தொடர்ந்து எழுதுவதை நிறுத்தப் போவதில்லை. காவல் துறைப்பற்றி சொல்லிய விஷயம் பற்றி பீஜே அவர்களின் பதிலில் எழுதுவேன்.
முடிவாக, அர்ஷத் அவர்களே, எழுத்து விவாதம் என்றால் தான் என்னால் வரமுடியும், நேரடி விவாதம் என்றால் முடியாது.
இணையத்தில் எழுதினால் என்ன, ஒளிந்துகொண்டு எழுதினால் என்ன? சொல்லப்படும் செய்தி உண்மையா? ஆதாரமுண்டா? என்று பார்க்கவேண்டுமே தவிர, இவன் (உமர்) நேரடி விவாதத்திற்கு வரமாட்டான் என்பதை தெரிந்துக்கொண்டே "இஸ்லாமிய அறிஞர்கள் விவாதத்திற்கு அழைத்தால், உமர் வரவில்லை" இதனால், இஸ்லாம் தான் உண்மையானது என்ற கிளிப்பிள்ளைப் பேச்சை சொல்வதை நிறுத்திக்கொண்டு, என் கட்டுரைகளுக்கு உங்களால் இயன்ற பதிலை எழுதி, என் கட்டுரையின் தொடுப்பையும் கொடுத்து (உங்களுக்கு பயமில்லையென்றால்) உங்கள் தளத்தில் பதித்தால், படிக்கும் வாசகர்களுக்கு உண்மை புரியும். இது என் தாழ்மையான வேண்டுகோள். இதைச் செய்வீர்களா?