Daily Archives: ஜூலை 26, 2010

1 1/2 வயது குழந்தையின் தலையை துண்டித்து ரத்த ம் குடித்த மந்திரவாதி மனைவியுடன் கைது

திருடிச் சென்று நரபலி கொடுத்தார்

ராமநாதபுரம், ஜுலை.25-

1 1/2 வயது குழந்தையை கடத்திச் சென்று தலையை துண்டித்து நரபலி கொடுத்து ரத்தம் குடித்த மந்திரவாதி மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.

பூவரசியின் கொலைவெறி போல்…

சென்னையில், காதலன் ஏமாற்றி விட்ட கோபத்தில் அவரது 4 வயது மகனான ஆதித்யா என்ற சிறுவனை கடத்திச் சென்று கொலை செய்து சூட்கேசில் பிணத்தை அனுப்பிய சம்பவத்தில் பூவரசி என்ற பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மதுரையில் ரத்த வெறி பிடித்த மந்திரவாதி ஒருவர், பச்சிளம் குழந்தையை கடத்திச்சென்று கொலை செய்து ரத்தத்தை குடித்த பயங்கரம் சம்பவம் நடந்து உள்ளது.

ரத்தத்தை உறைய வைக்கும் இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

1 1/2 வயது ஆண் குழந்தை

மதுரை அருகே உள்ள எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கவுஸ் பாட்சா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து அவருடைய மனைவி சிரின் பாத்திமா மன நிம்மதிக்காக தன் குழந்தை காதர் ïசுப்புடன் (வயது 11/2) மதுரை கோரிப்பாளையம் தர்காவில் தங்கி இருந்தார்.

அங்கு தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் கபூர் என்ற மந்திரவாதியும் தன் மனைவி ரமலா பீவியுடன் தங்கி இருந்தார். அப்போது குழந்தை காதர் ïசுப்புடன் மந்திரவாதி நெருங்கிப் பழகினார். அந்த குழந்தையை தூக்கி கொஞ்சி விளையாடி மகிழ்ந்தார். குழந்தையின் தாய் சிரின் பாத்திமாவின் நிலையை கண்டு பரிதாப்படுவது போல் நடித்தார்.

கடந்த வாரம் சிரின் பாத்திமா தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு அவரும் தூங்கிக்கொண்டு இருந்தார்.

மந்திரவாதி கைது

அவர் தூங்கி எழுந்தபோது குழந்தை காதர் ïசுப்பை காணவில்லை.

இதுகுறித்து சிரின் பாத்திமாவின் உறவினர்கள், தல்லாகுளம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, மந்திரவாதி அப்துல் கபூரும், அவருடைய மனைவி ரமலாவும் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து காயல்பட்டினத்தில் அப்துல் கபூரையும், ரமலாவையும் போலீசார் தேடி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தையை கடத்திக் கொன்று விட்டதாக, மந்திரவாதி கூறிய தகவலால் போலீசார் அதிர்ச்சி அடைந்தார்கள்.

மந்திரவாதி அப்துல் கபூர் போலீசாரிடம் கூறியதாவது:-

நரபலி

"கோரிப்பாளையம் தர்காவில் நான் தங்கி இருந்தபோது கனவில், தலைப்பிள்ளையாக பிறக்கும் ஆண் குழந்தையை நரபலி கொடுத்து அதன் ரத்தத்தை குடித்தால் மாந்திரீக சக்தி அதிகரிக்கும் என்று அசரீரி கூறியது. இதனால் நானும், என் மனைவியும் குழந்தை காதர் ïசுப்பை கடத்திக்கொண்டு காயல்பட்டினம் அருகே உள்ள ஏரல் கிராமத்திற்கு சென்றோம்.

அங்கு சிறுவனின் உடலை துண்டுதுண்டாக வெட்டி 2 பெரிய தூக்குவாளிகளில் அடைத்தோம். பின்னர் குழந்தையின் உடலில் இருந்து சேகரித்த ரத்தத்தையும், தலைப் பகுதியையும் குலசேகரன்பட்டினம் செல்லும் வழியில் உள்ள கல்லாமொழி கடற்கரைக்கு கொண்டு சென்றோம்.

அங்கு ரத்தத்தை குடித்து பரிகாரம் செய்தபின் குழந்தையின் தலையை அங்கேயே புதைத்துவிட்டு, ஏர்வாடியை அடுத்த காட்டுப்பள்ளி பகுதிக்கு வந்து தங்கி இருந்தோம். அங்கு குழந்தையின் உடல் பாகங்களை புதைத்து விட்டு தப்பிச் சென்றுவிட்டோம்.”

இவ்வாறு அப்துல்கபூர் கூறினார்.

அடையாளம் காட்டினார்

இதைத்தொடர்ந்து தல்லாகுளம் போலீசார் நேற்று காலை மந்திரவாதியுடன், ஏர்வாடியில் குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்திற்கு சென்றனர். அங்கு குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அப்துல் கபூர் அடையாளம் காட்டினார்.

உடனே, கடலாடி தாசில்தார் காளிமுத்து, கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சங்கு மற்றும் ஏர்வாடி போலீசார் முன்னிலையில் இந்த இடத்தை தோண்டிப்பார்த்தனர். அங்கு சிறுவனின் உடல் புதைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்த பின் மூடிவிட்டனர்.

கொலையாளி தெரிவித்த தகவலின்படி சிறுவனின் தலை புதைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் கல்லாமொழி கிராமத்திற்கு போலீசார் விரைந்து உள்ளனர். அங்கு தலையை கைப்பற்றியபின், ஏர்வாடியில் புதைக்கப்பட்ட உடலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

source:dailythanthi

3 பின்னூட்டங்கள்

Filed under Uncategorized

இந்த வார டவுண்லோட்

E_1274527524.jpeg

விண்டோஸ் இயக்கத்தில் ஹாட் கீகள்

விண்டோஸ் இயக்கமும் சரி, அதில் இயங்கும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களும் சரி, நமக்கு பல வகையான ஷார்ட் கட் கீகளைத் தருகின்றன. இவை அதிலேயே புரோகிராம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த புரோகிராம்களை இயக்க, நாம் விரும்பும் போல்டர்களைத் திறக்க, பாடல் பைலை இயக்கி ரசிக்க என நம் விருப்பப்படி கம்ப்யூட்டரில் செயல்பட ஹாட் ஷார்ட் கட் கீகள் இருந்தால், எப்படி இருக்கும். நினைக்கவே சுகமாகவும் சுவராஸ்யமாகவும் இருக்கிறதா! அப்படி ஹாட் கீகளை அமைக்கும் வழிகளை ஒரு இலவச புரோகிராம் தருகிறது என்றால் வியப்பின் எல்லைக்கே நீங்கள் சென்று விடுவீர்கள், இல்லையா! அதன் பெயர் Clavier. இதனைhttp://utilfr42.free.fr/util/Clavier.php என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இந்த புரோகிராம் விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் கீ போர்டில் உள்ள எந்த கீயையும், விண்டோஸ் கீ உட்பட, பயன்படுத்தி ஹாட் ஷார்ட் கட் கீகளை உருவாக்க உதவுகிறது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தி, புரோகிராம்களை இயக்கலாம். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் + டபிள்யூ கீயினை அழுத்தினால் வேர்ட் புரோகிராம் இயக்கும்படி அமைக்கலாம். இதே போல எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராமிற்கும் அமைக்கலாம். அல்லது ஏதேனும் டெக்ஸ்ட் ஒன்றை ஒரு ஷார்ட் கட் கீயில் வைத்து, அதனை டெக்ஸ்ட் எடிட்டரில் கொண்டு வரலாம். உங்கள் இமெயில் அட்ரஸ் மிகப் பெரிதா? சிறியதாகவே இருந்தாலும் @ அடையாளம் எல்லாம் போட்டு என்டர் செய்வது சிரமமாக இருக்கிறதா! அப்படியானல் அதனையும் ஒரு ஹாட் ஷார்ட் கட் கீயில் வைத்துவிடலாம். இவ்வாறு அமைக்கும் ஷார்ட் கட் கீகள் அனைத்து புரோகிராம்களிலும், வேர்ட், எக்ஸெல், பிரசன்டேஷன் என அனைத்திலும் இயங்கும்.

போல்டர், இமேஜ், பைல், வீடியோ, ஆடியோ பைல் என எதனை இயக்க வேண்டும் என்றாலும், ஹாட் கீ அமைத்துவிடலாம். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்கி, இசையை ரசிப்பவரா நீங்கள்! விண்டோஸ் கீ + எம் கீ அல்லது வெறும் எம் கீ மட்டும் அழுத்திக் கூட விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்குமாறு அமைக்கலாம்.

உங்களுக்கான ஷார்ட் கட் ஹாட் கீயினை அமைக்க, கிளேவியர் புரோகிராமை இயக்கி, அதில் ஊதா வண்ணத்தில் உள்ள "+" ஐகானைக் கிளிக் செய்திடவும். பின்னர் நீங்கள் தொடர்புபடுத்த விரும்பும் போல்டருக்கான பாத் (டைரக்டரி வழி) ஐ இதனுடன் இணைக்க வேண்டும்.

நீங்கள் ஏதேனும் ஒரு ஸ்பெஷல் கேரக்டரை அடிக்கடி பயன்படுத்துபவரா! அந்த ஸ்பெஷல் கேரக்டரை ஒரு ஹாட் கீயில் கொண்டு வரலாம்.

கிளேவியர் புரோகிராமில் யு.ஆர்.எல். லான்ச்சர் என்ற ஒரு பிரிவு உள்ளது. இதில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் இணைய தள முகவரிகளை, ஹாட் கீயில் அமைத்து வைத்துப் பயன்படுத்தலாம். இணைய தளத்தில் நீங்கள் நிரப்ப வேண்டிய தகவல்களுக்கு ஹாட் கீ அமைத்து வைத்தால், படிவங்களில் விரைவாக தகவல்களை நிரப்பி விடலாம்.

கேப்ஸ் லாக், நம் லாக் மற்றும் ஸ்குரோல் லாக் போன்றவை, விண்டோஸ் இயக்கத்தில் எந்நிலையில் இருக்க வேண்டும் என்பதனயும் கிளேவியர் புரோகிராமில் செட் செய்திடலாம்.

நீங்கள் இவ்வாறு பல ஹாட் கீகளை அமைத்து விட்டால், எந்த கீ தொகுப்பு எதற்கு என்பது மறந்துவிடும் அல்லவா! கிளேவியர் புரோகிராமிலேயே ஒரு பேனல் ஒன்று உருவாக்கி, அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஹாட் கீகளையும் போட்டு வைக்கலாம். நாம் ஒன்றிரண்டு கீகளை மறக்கும் நிலையில் இந்த பேனல்களில் அவற்றைக் காணலாம். அவசியம் அனைவரும் பயன்படுத்த வேண்டிய புரோகிராம் இது.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மதுரை குழந்தையை நரபலி கொடுத்த கொடூரன் : த ூத்துக்குடியில் தலை, ஏர்வாடியில் உடல் புதைப ்பு

large_46480.jpg

கீழக்கரை : மதுரை தர்காவில் மாயமான குழந்தையை கொடூரமான முறையில் நரபலியிட்டு ரத்தம் குடித்த கொடூரன், குழந்தையின் தலையை தூத்துக்குடி அருகேயும், உடலை ராமநாதபுரம் ஏர்வாடியிலும் புதைத்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மதுரை அருகே எஸ்.ஆலங்குலத்தை சேர்ந்தவர் செரின் பாத்திமா. இவரது கணவர், சமீபத்தில் விபத்தில் இறந்துவிட்டார். இவர் தனது 15 மாத குழந்தை காதர்யூசுப் உடன் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தர்காவில், கடந்த 2ம் தேதி இரவு தங்கினார். மறுநாள் காலையில் பார்த்தபோது, குழந் தையைகாணவில்லை. தல்லாகுளம் போலீசில் செரீன் பாத்திமா புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் சிதம்பரம் முருகேசன், கோரிப் பாளையம் பகுதியில் சந்தேகப் படும்படி நடமாடிய திருச்செந்தூர் காயல் பட்டினத்தை சேர்ந்த அப்துல் கபூர் (30) என்பவரை பிடித்து விசாரித்தார்.

அவர் கூறியதாவது: கனவில் வந்த காளிதேவி, தலைப் பிள்ளையை நரபலியிட்டு அதன் ரத்தத்தை குடித்து, உடலையும் தலையையும் தனிதனியாக கடற்கரை பகுதியில் புதைத்தால், யோகம் வரும் என கூறியதால், குழந்தையை கடத்தினேன். தூத்துக்குடி அருகே ஏரலில், கத்தியால் குழந்தை கழுத்தை அறுத்து கொலைசெய்து, வாளியில் ரத்தத்தை பிடித்து குடித்தேன். பின் தலையை, திருச்செந்தூர் அருகே கல்லாமொழி தர்கா அருகே கடற்கரை பகுதியில் புதைத்துவிட்டு, உடம்பை தூக்குச்சட்டியில் வைத்து, ராமநாதபுரம் ஏர்வாடி தர்கா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்து புதைத்ததாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, நேற்று அப்துல்கபூரை மதுரை தல்லாகுளம் போலீசார் ஏர்வாடி அழைத்து வந்தனர்.

கீழக்கரை டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலையில், குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். பின் திருச்செந்தூர் அருகே தலையை புதைத்த இடத்தை அடையாளம் காண்பிக்க போலீசார் அங்கு அழைத்து சென்றனர். "ஏர்வாடி காட்டுப்பள்ளி வாசல் சேர்மன் தெருவில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல், இன்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படும்,’ என, போலீசார் தெரிவித்தனர்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சிட்டுக்குருவி…​ சிட்டுக்குருவி…​ சேதி தெரியுமா?

25konda8.jpg

சிட்டுக் குருவி​ முத்தம் கொடுத்து…​ என முத்தமிடத் துடித்து திரைப்படங்களில் பாடல்கள் எழுதிய காலங்களுடன் சேர்ந்து அந்த சிட்டுக்குருவிகள் நம்மை விட்டு வெகு தூரத்துக்குப் பறந்துவிட்டன.​ தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நம் வாழ்வியல் முறைகளால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருகிறது.​ ​நம் நாட்டில் மொத்தம் 8 வகையான குருவிகள் காணப்படுகின்றன.​ நம் நாட்டைப் பொருத்தவரை குருவிகளை நாம் எல்லா காலகட்டங்களிலும் நேசித்து வந்துள்ளோம்.​ சாப்பாட்டிற்கு வழியில்லாத காலத்தில் கூட மனைவி அடுத்த வீட்டில் இருந்து வாங்கி வந்த அரிசியை குருவிகளுக்குப் போட்டு அதன் அழகில் மயங்கினான் பாரதி.​ இப்படி நம்முடன் பின்னிப் பிணைந்த குருவிகள் நம்மை விட்டு வெகு தூரம் சென்றுவிட்டன.​ நகரப்பகுதிகளில் சிட்டுக் குருவிகளைப் பார்ப்பது அரிதிலும் அரிதாகி விட்டது.சிட்டுக் குருவிகளைப் போன்றே மற்றொரு குருவி வகையான முனியா குருவிகளும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.​ காரணம் இவற்றைப் பிடித்து சாயம் அடித்து விற்பது அதிகரித்து வருகிறது.​ முனியா குருவி தமிழகத்தில் நெல் குருவி,​​ அல்லது தினைக்குருவி என்று அழைக்கப்படுகிறது.​ இதற்கு "சில்லை’ என்ற பெயரும் உள்ளதாக,​​ பறவை ஆர்வலர் சலீம்அலி தனது பறவை உலகம் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.வடஇந்தியர்கள் இந்த வகை பெண் குருவிகளை பிரியமாக முனியா என்றும் புத்ரிகா என்றும் அழைக்கின்றனர்.​ இதற்கு மகளே என்று அர்த்தம்.​ ஆண் குருவிகளை லால் என அழைக்கின்றனர்.​ ​ எம்.ஏ.பாஷா என்ற தமிழ்நாட்டு வன உயரதிகாரி,​​ அவரது பறவைப் பட்டியலில் தோட்டக்காரன்,​​ ராட்டினம்,​​ வயலாட்டா,​​ இப்படியாக பல பெயர்களில் இப்பறவை அழைக்கப்படுவதாக குறிப்பிடுகிறார்.நம் நாட்டில் 8 வகையான முனியாக்கள் உள்ளன.​ அவை ரெட் முனியா,​​ வைட் துரோடட் முனியா,​​ வைட் ரம்ப்டு முனியா,​​ பிளாக் திரோடட் முனியா,​​ பிளாக் ஹெடட் முனியா,​​ ஸ்பாட்டட் முனியா,​​ கிரீன் முனியா,​​ ஜாவன் முனியா.இவற்றில் கிரீன் முனியா இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது.​ ஜாவன் முனியா வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு,​​ காடுகளில் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.​ நாட்டின் பல பகுதிகளுக்குப் பறந்து திரிந்து அதுவே தன் இனத்தைப் பெருக்கியுள்ளது.இருப்பிடம்:​ உயரமான புல்வெளிகள்,​​ தானியம் முற்றிய விளைநிலங்களிலும் கூட்டமாக இவை காணப்படும்.​ சில சமயங்களில் 200-க்கும் மேற்பட்ட பறவைகள் ஒன்றாகக் காணப்படும்.​ அச்சுத்துறுத்தல் ஏற்படும் சூழலில் ஒன்றாக வானில் கூட்டமாகப் பறக்கும்.​ சொல்லிவைத்தாற்போல ஒரு கூட்டத்தில் உள்ள அனைத்துப் பறவைகளும் ஒரே சமயத்தில் மேலே செல்லும்;​ திடீரென கீழ் நோக்கி வரும்;​ பக்கவாட்டில் திரும்பும்.​ ​உணவு:​​ சிறிய தானியங்களைக்கூட பொறுக்கி உண்ண இதன் அலகு ஏதுவாக அமைந்துள்ளது.​ தானியங்களை மட்டுமன்றி,​​ சில சமயம் பூக்களில் உள்ள தேன்,​​ சிறிய ஈசல் போன்ற சிறு பூச்சிகளையும் உண்ணும்.வாழ்விடம்:​ ஆணும் பெண்ணும் சேர்ந்து கூடுகட்டி அடைகாக்கும்.​ நீள்வடிவில் பை போன்ற அமைப்பில் காய்ந்த புல்லை வைத்து வெளிப்புறக் கூட்டை கட்டும்.​ மென்மையான புல்லை வைத்து உள்பகுதியை கட்டுகிறது.​ சில முனியாக்கள் கூட்டை மேலும் மென்மைப்படுத்த,​​ பஞ்சு,​​ மலர்கள் மற்றும் இறகுகளை கூட்டிற்குள் வைத்துக்கொள்ளும்.​ ​பிளாக் திரோடட் முனியா,​​ வேளாண் பூமிக்கு அருகில் உள்ள விவசாயிகளின் வீட்டுச் சுவற்றில் உள்ள சிறு ஓட்டை மற்றும் மரப்பொந்துகளில் முட்டைகளை வைக்கிறது.​ ​வைட் துரோடட் முனியா,​​ தூக்கணாங் குருவிகள் விட்டுச்சென்ற கூடுகளை ​ முட்டையிடப் பயன்படுத்துகின்றன.​ ஸ்பாட்டட் முனியா,​​ முட்புதர் மற்றும் சிறிய மலர்பூக்கும் மரங்களில் கூடுகட்டி முட்டையிடுகின்றன.​ 4 முதல் 8 முட்டைகள் வரை இடும்.​ முனியாவின் வகைகளுக்கேற்ப இவற்றின் எண்ணிக்கை மாறும்.​ ​ஒரு இடத்தில் உள்ள தானிய விதைகள் மற்றும் புல் விதைகள் மற்றொரு இடத்தில் விழுந்து முளைக்கவும்,​​ விதைப்பரவலுக்கு முனியா குருவிகள் உதவுகின்றன.​ மேலும் பூக்களில் தேன் உண்ணும் போது அயல்மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது.​ ​அழிவின் காரணங்கள்:​ நகரமயமாக்கல்,​​ நம் வாழ்வியல் முறை மாற்றம்,​​ விளை நிலங்கள் கட்டடங்களாக மாறுவது.​ மேலும் முனியாக்கள் செல்லப் பறவையாக வளர்க்க பிடிக்கப்படுவது போன்ற காரணங்களால் முனியாக்கள் குறைந்து வருகின்றன.​ இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்படி இந்தப் பறவையை பிடிப்பதோ,​​ வளர்ப்பதோ,​​ கொல்வதோ தண்டனைக்குரிய குற்றம்.​ ​காணப்படும் இடங்கள்:​ ரெட் முனியா,​​ இமயம் முதல் குமரி வரை காணப்படுகிறது.​ கிரீன் முனியா,​​ தமிழ்நாட்டில் காணப்படுவதில்லை.​ வைட் துரோடட் முனியா,​​ இமயமலைச் சாரலிலும்,​​ இலங்கை,​​ பாகிஸ்தானில் வறண்ட பகுதியிலும் காணப்படுகின்றன.வைட் ரம்ப்டு முனியா,​​ இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறன.​ ​பிளாக் துரோடட் முனியா,​​ மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது.​ ஸ்பாட்டட் முனியா,​​ ராஜஸ்தான்,​​ பஞ்சாப்பை தவிர அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகிறது.​ பிளாக் ஹெட்டட் முனியா,​​ இந்தியா முழுவதும் காணப்படுகிறது;​ இலங்கையிலும் உள்ளது.-எம்.ஆனந்த்​

source:dinamani

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized