Daily Archives: ஜூலை 16, 2010

மொபைல் காட்சி…இச்சையைத் தீர்த்துக்கொண் ட நவீன துச்சாதனர்கள்

மொபைல் காட்சி…

கடன் வாங்கிய பணத்தைத் திருப்பித் தர முடியாதவரின் மனைவியை வட்டிக்கு ஈடாக அழைத்துச் சென்று, இச்சையைத் தீர்த்துக்கொண்ட நவீன துச்சாதனர்களால் நெல்லை மாவட்டமே வெட்கித்துக்கிடக்கிறது!

கடையநல்லூரைச் சேர்ந்தவர் உமர். இவரது மனைவி உஸ்னா. (இருவர் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) இவர்களுக்கு எட்டு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த உமர், வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிவைப்பது, பாஸ்போர்ட், விசா பெற்றுத் தருவது ஆகிய வேலை களைச் செய்பவர். தனது தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக, அட்டக்குளம் தெருவை சேர்ந்த ‘கச்சி’ மைதீன் என்பவரிடம் கடன் வாங்கினார். எதிர்பார்த்த அளவுக்குத் தொழில் விருத்தியாகவில்லை. அதனால், வாங்கிய கடனுக்கான வட்டியைக்கூட கொடுக்க முடியாத நிலை. உமரின் மனைவி உஸ்னா மீது ஏற்கெனவே கண் வைத்திருந்த ‘கச்சி’ மைதீன், அவர்களின் கையறு நிலையையே தன் காமாந்தகத் தேவைக்குப் பயன்படுத்திக்கொண்டான். கடனுக்கு வட்டியாக உஸ்னாவை அழைத்துச் சென்று அசிங்கப்படுத்தி, தனது நண்பர்களுக்கும் அவரை விருந்தாக்கி ரசித்து இருக்கிறான் அந்தக் காமக் கொடூரன்.

p4b.JPG

அதோடு, அரங்கேற்றிய இந்த அசிங்கத்தை தனது செல்போனில் படம் பிடித்து மீண்டும் மீண்டும் மிரட்டியே உஸ்னாவை நினைக்கிறபோதெல்லாம் பயன்படுத்தி இருக்கிறான். சில தினங்களுக்கு முன்பு குடிபோதையில் இருந்த ‘கச்சி’ மைதீன், அவனது செல்லில் இருந்த காட்சிகளை தனது நண்பர்களுக்கு ‘ப்ளூ டூத்’ மூலம் அனுப்பி இருக்கிறான். எதேச்சையாக இந்தப் புகைப்படங்கள் நம் கவனத்துக்கு வர… பின்னணியை விசாரித்து அறிந்த நாம், ‘இப்படி எல்லாம்கூட நடக்குமா?’ என விக்கித்துப்போனோம்.

அடுத்த கணமே கடைய நல்லூ ருக்குக்குச் சென்று உமரின் குடும்ப உறவினர்களிடம் பேசினோம். ”உமருக்கும் கச்சி மைதீனுக்கும் ஆரம்பத்தில் இருந்தே பழக்கம் உண்டு. அவருக்குப் பண உதவி பண்ணிய ‘கச்சி’ மைதீன், அந்த சந்தர்ப்பத்தை வெச்சே அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்திருக்கான். எப்படியாவது உமர் மனைவியை அடையணும்னு முயற்சி செய்திருக்கான். அந்தப் பொண்ணு எதுக்கும் உடன்படலை. ஒருதடவை அங்கே போயிருக்கான் ‘கச்சி’மைதீன். அவன் நண்பர்கள் ஆரிஃப், ‘சீனா’ ஹசன் ஆகியோரும் உமருக்கு முன்கூட்டியே

கொஞ்சம் பண உதவி பண்ணி இருக்காங்க. அதையும் தனக்கு சாதகமாப் பயன்படுத்திக்க நினைச்ச ‘கச்சி’ மைதீன், எல்லாப் பணத்தையும் ஒரே நேரத்தில் திருப்பித் தரச் சொல்லி வற்புறுத்தி இருக்கான். அதுக்கு அப்புறம்தான் மற்ற கொடுமைகளை எல்லாம் அரங்கேற்றி இருக்கான், அந்தப் பாவி. இதை போலீஸ§க்குப் புகாராக் கொடுக்க முடியாத அளவுக்கு ‘கச்சி’ மைதீன் ஏதேதோ சொல்லி மிரட்டிவைத்திருக்கிறான்” என்றார்கள் வேதனையோடு.

மாவட்ட எஸ்.பி-யான ஆஸ்ரா கர்க்கை சந்தித்து இந்தக் கொடூரம் குறித்துச்p4.JPGசொன்னோம். உஸ்னாவை ‘கச்சி’ மைதீன் ஆபாசமாக எடுத்திருந்த படங்களையும் அவரிடம் கொடுத்தோம். பதறிப் போன எஸ்.பி., கடையநல்லூர் இன்ஸ் பெக்டரை அழைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதில் நாம் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்பது தெரிய வந்ததும், அடுத்த கணமே ‘கச்சி’ மைதீனையும், ஆரிஃப், ‘சீனா’ ஹசன் ஆகியோரையும் கைது செய்தது போலீஸ். மகளிர் வன்கொடுமைச் சட்டம், கந்து வட்டிச் சட்டம், கொலை மிரட்டல் விடுதல், பெண்ணை நாணக்கேடாக நடத்துதல், பெண்ணைக் கடத்துதல், அச்சுறுத்தி எழுதி வாங்குதல், சைபர் க்ரைம் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

எஸ்.பி. நம்மிடம், ” ‘கச்சி’ மைதீனின் ஆபாச வற்புறுத் தலுக்கு அந்தப் பெண் தன்னால் முடிந்த மட்டும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராடி இருக்கிறார். அதனால்தான் அந்தப் பெண்ணின் வாயை அடைப்பதற்காக ஆபாசப் படம் எடுத்திருக்கிறான் ‘கச்சி’ மைதீன். கடந்த சில மாதங்களாகவே இந்தக் கொடுமை நடந்திருக்கிறது. ‘வெளியே சொன்னால் அசிங்கம்’ என்று நினைத்தே அந்தப் பெண்ணும் யாரிடமும் சொல்லாமல் அமைதியாக இருந்திருக்கிறார். நல்லவேளை, தக்க நேரத்தில் இந்த சம்பவம் குறித்து என் கவனத்துக்குத் தகவல் சொன்னீர்கள். இல்லையேல், இன்னும் பலருடைய செல்போன்களுக்கு இந்த ஆபாசக் காட்சிகள் பரவி இருக்கும். அந்த விதத்தில் இதில் ஜூ.வி-யின் பங்கு நன்றியோடு பாராட்டத்தக்கது!” என்றார் அக்கறையுடன்.

உள்ளூர்க்காரர்கள் சிலரோ, ”அந்தப் பெண்ணின் ஆபாசப் படங்களை வெளியிட்டால், அவள் கணவர் ‘தலாக்’ செஞ்சிடுவார். அதுக்குப் பிறகு யாருக்கும் பயப்படாமல் நாமளே அந்தப் பெண்ணை நிரந்தரமா வெச்சுக்கலாம்னு அந்தக் கும்பல் திட்டம் போட்டிருக்கு. அதனால்தான் அந்தப் படங்களைத் திட்டமிட்டுப் பரப்பி இருக்காங்க. இந்தப் பகுதியில் வசிப்பவர்களில் நிறைய ஆண்கள் வெளிநாடுகளில் இருப்பதால், பெண்கள் மட்டும் தனியா இருக்காங்க. அப்படிப்பட்ட பெண்களைக் குறிவெச்சு சில நபர்கள் இந்த மாதிரி இயங்குறாங்க… அந்தப் பெண்கள் மானத்துக்காகப் பயந்து யாரிடமும் சொல்லாமல் இருப்பதை, அந்தக் கும்பல் தங்களுக்கு சாதகமாக்கி அத்துமீறல்களில் இறங்கிடுது. இப்போது பிடிபட்டிருக்கும் மூவருக்கும் அதிகபட்சத் தண்டனை கிடைத்தால்தான் மற்றவர்கள் பயப்படுவாங்க…” என்கிறார்கள் ஆதங்கத்தோடு!

– ஜூ.வி. க்ரைம் டீம்
source:vikatan

2 பின்னூட்டங்கள்

Filed under Uncategorized