Daily Archives: ஜூலை 6, 2010

புள்ளி ராஜாவிற்கு எய்ட்ஸ் வருமா?

white_spacer.jpg

p106b.jpg

p106a.jpgவியாபாரத்தைப் பெருக்குவதற்கு மட்டும் அல்ல… மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் விளம்பரங்கள் தேவை. சமூகத்துக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்திய சில விளம்பரங்கள் இவை…

1980-களில் ‘Just Say No’ என்கிற வார்த்தை அமெரிக்காவில் பட்டிதொட்டி எல்லாம் ஒட்டப்பட்டது. அப்போது நிறைய இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருந்தார்கள். ‘சக நண்பர்கள் போதைப் பழக்கத்தை அறிமுகப்படுத்தும்போது இந்த மந்திரச் சொல்லை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று விளம்பரப் படுத்தியதில் பலர் பாதை மாறாமல் தப்பித்தார் கள்.

p107a.jpgஎய்ட்ஸ் எமனாகப் பரவிய நேரத்தில் மும்பையில் ‘பல்பீர் பாஷாவுக்கு எய்ட்ஸ் வருமா?’ என்ற விளம் பரம் கலக்கி எடுத்தது. அதுவே, தமிழ்நாட்டில் புள்ளிராஜாவாக அவதாரம் எடுத்தது. அதற்கடுத்துப் பல மாநிலங்களில் பல்பீர் பாஷா பல பெயர் தரித்து விழிப்பு உணர்வு கொடுத்தார்.

இப்போது உலகத்துக்கே ஒட்டுமொத்தமான பிரச்னை… புவி வெப்பமயமாதல். ‘மரங்களை வெட்டாதீர்கள். இயற்கையைப் பாதுகாப்போம்’ என்று பல நாடுகளும் பல வழிகளில் விளம்பரப்படுத்திக் கொண்டு இருக்கின்றன. 2050 என்கிற கேள்வியோடு உலக உருண்டை இல்லாமல் வெறும் அச்சை மட்டும் காட்டி அச்சத்தை விளம்பரப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்!

source:vikatan

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

நபிகள் நாயகம் குறித்து அவதூறு கேள்வித்த ாள்-பேராசிரியர் கை துண்டிப்பு

03082_158287.jpg

கொச்சி: கேரளத்தில் கல்லூரி வினாத் தாளில் முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் கேள்வியை சேர்த்த பேராசிரியரின் வலது கை வெட்டப்பட்டது.

இடுக்கி மாவட்டம் தொடுப்புழாவில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் ஜோசப், கடந்த ஏப்ரலில் அக் கல்லூரியில் நடைபெற்ற பி.காம் 2ம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுக்கு வினாத்தாளை உருவாக்கினார்.

அதில் முகம்மது நபி தொடர்பாக ஒரு கேள்வி இடம் பெற்றது. இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் அமைந்த இந்தக் கேள்வித் தாள் காரணமாக ஜோசப்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.

இதையடுத்து ஜோசப்பின் செயலுக்காக அந்தக் கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கேட்டது. மேலும் ஜோசப்பை கல்லூரியை விட்டும் தாற்காலிகமாக நீக்கியது.

இதற்கிடையே ஜோசப்புக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் [^]அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது [^] செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் ஜோசப், அவரது தாயார், சகோதரி ஆகியோர் நேற்று தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்து காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காரை ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் அவர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடியது.

இதில் ஜோசப்பின் வலது கை துண்டானது. கால்களிலும் வெட்டு விழுந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

source:thatstamil.oneindia.in

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இரண்டு தலைகளுடன் கன்றுக் குட்டி!

http://www.tamilcnn.net/
எகிப்தில் இரண்டு தலைகளுடன் கூடிய கன்றுக்குட்டி ஒன்று கடந்த வாரம் பிறந்துள்ளது. இக்கன்றுக் குட்டிக்கு ஒவ்வொரு தலையிலும் இரண்டு கண்கள், வாய் போன்ற உறுப்புகள் முழுமையாகவே உண்டு. தலைகளின் பாரம் காரணமாக கன்றுக்குட்டி இன்னும் எழுந்து நடமாட முடியவில்லை.

ஆயினும் இது ஆரோக்கியமாகவே உள்ளது. இதற்கு புட்டியில் பால் பருக்கப்படுகின்றது. கன்றுக் குட்டியின் உரிமையாளரான விவசாயி இது ஒரு தெய்வ அதிசயம் என்று வர்ணிக்கின்றார்.

source

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

நக்சல்கள் அழிக்க விமானப்படை தயாராகிறது ; ரகசிய முன்னோட்ட பணிகள் துவங்கியது

large_32941.jpg

ராய்ப்பூர்: நாளுக்கு நாள் பெருகி வரும் நக்சல்கள் தொல்லையை தாங்க முடியாத மத்திய அரசு விமான படையை களம் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னோட்டமாக நக்சல்கள் பாதிப்பு மாநில அரசுகள் நடவடிக்கையை துவங்கியுள்ளது. நக்சல் தாக்குதலில் நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 600 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், ரூ. 700 கோடி வரை நஷ்டத்தை சந்தித்திருப்பதாகவும் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினரை குறி வைத்து நக்சல்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் மத்திய அரசு, ராணுவ நடவடிக்கையை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை குரல் பரவலாக எழுந்துள்ளது. அதே நேரத்தில் நக்சல்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஆதரவு குரலும் இருக்கிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கூட 27 பேரை கொடூரமாக சுட்டு கொன்றனர். மலைகள் மற்றும் மரங்கள் மீது பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து மத்திய அரசு உள்துறை அதிகாரிகள் நக்சல் பாதிப்பு மாநிலங்கள் முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நக்சல்கள் ஒழிக்க முதல்கட்டமாக விமானப்படையை களம் இறக்கலாம் என தெரிகிறது. விமான படையை பயன்படுத்துவது தொடர்பாக முதலில் எங்கு ஹெலிபேட் தளம் அமைக்க முடியும் என ஆராய ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநில அரசு உதவியுடன் இந்த பணிகள் துவங்கியிருக்கிறது. எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நக்சல்கள் இருக்கும் பகுதிகளை வானத்தில் பறந்தபடி நோட்டமிட்டு வருகின்றனர். இதனால் விமானப் படை விரைவில் தனது பணியை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized