Monthly Archives: ஜூலை 2010

கணிணி கேள்வி – பதில்

E_1280117879.jpeg

கேள்வி : சில கீகளை மட்டும் ஏன் டாகிள் கீ என்று சொல்கிறோம். அதன் தன்மையை வைத்தா? அல்லது வேறு சிறப்பு பணி அந்த கீகளுக்கு உள்ளதா?
–எ.செந்தாமரை, திண்டிவனம்
பதில்:
சில கீகளின் செயல்பாட்டினை வைத்து இந்த பெயர் அவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.
கீ போர்டில் சில தனிப்பட்ட இயக்கங்களுக்கு என்று பல கீகள் தரப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக ஆங்கிலத்தில் கேப்பிடல் எனப்படும் பெரிய எழுத்தில் அடிக்க கேப்ஸ் லாக், டெக்ஸ்ட் செருக இன்ஸெர்ட், ஸ்குரோல் லாக், நம்லாக் (Caps Lock, Insert, Scorll Lock, Num Lock)போன்றவற்றைச் சொல்லலாம். இவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் அந்த பயன் பாட்டை நிறுத்தவும் ஒரே கீ பயன்படுத்தப் படுகிறது. எடுத்துக் காட்டாக பெரிய எழுத்து வேண்டும் என்றால் Caps Lockகீயை அழுத்துகிறோம். பின்னர் வேண்டாம் என்றால் அதனையே மீண்டும் அழுத்துகிறோம். மேலே சொன்ன அனைத்து கீகளையும் இவ்வாறே செயல்படுத்துகிறோம். இந்த செயல்முறையில் பயன்படும் கீகளையே டாகிள் கீ(Toggle Key) என அழைக்கிறோம்.

கேள்வி: விண்டோஸ் 7 தொகுப்பில் உள்ள ஆன் ஸ்கிரீன் கீ போர்டினை எப்படிக் கொண்டுவந்து இயக்குவது? வழக்கமானவற்றில் இருந்து இது மாறுபட்டு இருப்பதாகப் படித்தேன். விளக்கவும்.
– ஆ. தமிழ்ச்செல்வி, மதுரை
பதில்:
ஆம், விண்டோஸ் 7 இயக்கத்தில் இது சற்று மேம்படுத்தப்பட்டுக் கிடைக்கிறது. ஸ்டார்ட் அழுத்திப் பின் சர்ச் பாக்ஸில் ணிண்டு என டைப் செய்து என்டர் அழுத்த ஆன் ஸ்கிரீன் கீ போர்டு கிடைக்கும். இதில் வலது மூலையில் உள்ள பல கீகளில் பிரிண்ட் ஸ்கிரீன் கீயில் ஆப்ஷன்ஸ் என்பதனைக் கிளிக் செய்திடவும். இங்கு நியூமெரிக் கீ போர்டினை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். ஒலியை இயக்கலாம், நிறுத்தலாம். விண்டோஸ் இயக்கம் தொடங்கும் போதே, இந்த கீ போர்டினையும் இயக்கத்திற்குக் கொண்டு வரும் வகையில் செட் செய்திடலாம். இன்னொன்று தெரியுமா! மவுஸ் கர்சரைக் கீகள் மீது கொண்டு சென்று கிளிக் செய்து டெக்ஸ்ட்டை அமைக்கலாம்.

கேள்வி: டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்களைச் சற்றுப் பெரிதாக வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும் என்று திட்டமிடுகிறேன். இதற்கான வழிகளைத் தயவு செய்து கூறவும்.
–ஆ. மா. சிவக்கண்ணு, பொள்ளாச்சி
பதில்
: கீழே தரப்பட்டுள்ள நடைமுறை மூலம், ஐகான்களைச் சிறிதாகவும், பெரிதாகவும் மாற்றலாம். டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில்Appearance என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Advanced என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். Item என்பதன் கீழ் கிடைக்கும் பட்டியலில் Icon என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Size என்ற இடத்தில் கிடைக்கும் அம்புக் குறிகளைப் பயன்படுத்தி, ஐகான்களின் அளவைப் பெரிதாகவோ, சிறியதாகவோ அமைக்கலாம். மாற்றங்களை ஏற்படுத்தியபின், Apply என்பதில் கிளிக் செய்திடவும்.
இதே விண்டோவில் Font மற்றும் Size என்று இருப்பதனப் பார்க்கலாம்.
இன்னொரு மாற்றத்தையும் இதில் ஏற்படுத்தலாம். ஒவ்வொரு ஐகானுக்கிடையில் உள்ள தூரத்தினை மாற்றலாம். ஐகான்கள் திரையில் நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தால், அவற்றை இன்னும் சற்று இடைவெளியில் அமைக்கலாம். Item என்பதன் கீழ் இரண்டு ஆப்ஷன்கள், Icon Spacing (Horizontal) மற்றும் Icon Spacing (Vertical), இருப்பதனைப் பார்க்கலாம். இவற்றைப் பயன்படுத்தி, ஐகான்கள் அமையும் இட வெளியை அமைக்கலாம்.
நீங்கள் விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 வைத்திருந்தால், மேலே சொன்ன வேலை எல்லாம் தேவையில்லை. ஜஸ்ட், டெஸ்க் டாப் சென்று, கண்ட்ரோல் கீயை அழுத்தியவாறே, மவுஸின் ஸ்குரோல் வீலை உருட்டினால், படங்களும் எழுத்து அளவும் சிறிது, பெரிதாவதைக் காணலாம். அல்லது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், வியூ என்பதில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி பயன் படுத்துகையில் கெஸ்ட் அக்கவுண்ட் ஒன்றை ஏற்படுத்தி என் வீட்டிற்கு வரும் நண்பர்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்த அனுமதித்தேன். இப்போது விண்டோஸ் 7 வைத்துள்ளேன். இதில் எப்படி கெஸ்ட் அக்கவுண்ட் உருவாக்குவது?
–கி. சியாமளா கிருஷ்ணன், சென்னை
பதில்:
நல்ல கேள்வி. புது வீட்டில் குடி புகுந்தால் எழும் சந்தேகங்கள் போல இது உள்ளது. விண்டோஸ் 7ல் இந்த வசதி தரப்பட்டுள்ளது. Start அழுத்தி, கிடைக்கும் சர்ச் பாக்ஸில் "Guest Account" என டைப் செய்திடவும். அதன் பின்னர் என்டர் அழுத்தவும். இப்போது Manage Accounts என்ற விண்டோவிற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இதில் கிடைக்கும் Guest user என்ற ஐகானில் கிளிக் செய்திடவும். அடுத்த விண்டோவில் Turn On என்பதில் கிளிக் செய்திடவும். உடனேயே நீங்கள் விரும்பிய வகையில் கெஸ்ட் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு, அதனை நீங்கள், உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் பயன்படுத்த அனுமதிக்கலாம். இந்த அக்கவுண்ட் இருக்க வேண்டாம் எனில், மேலே கூறியதை மாற்றிச் செயல்படவும்.

கேள்வி: ஒருமுறை பயர்பாக்ஸ் தொகுப்பில் உள்ள ஸ்பெல் செக் வசதி குறித்து எழுதி இருந்தீர்கள். என் கம்ப்யூட்டரில் உள்ள பயர்பாக்ஸ் பிரவுசரில் இது செயல்படுகிறது. ஆனால் பல நண்பர்களின் கம்ப்யூட்டரில் இது செயல்படுவதில்லை. இது எதனால்? மாற்று வழி உண்டா?
–பேரா. சி.வேதராஜன், போரூர்
பதில்:
நீங்களும், உங்கள் நண்பர்களும் பயன்படுத்தும் பயர்பாக்ஸ் பதிப்பு குறித்த தகவல்களைத் தரவில்லை. இருப்பினும் அண்மையில் பயர்பாக்ஸ் பிரவுசரில் ஸ்பெல் செக் வசதியினைத் தரும் ஆட் ஆன் தொகுப்பு ஒன்று குறித்து அறிய நேரிட்டது. இதன் பெயர் Spellbound. இந்த ஆட் ஆன் தொகுப்பினை இணைத்துவிட்டால், படிவங்களில் நாம் தகவல்களை நிரப்புகையிலும், டெக்ஸ்ட் அமைக்கும்போதும் என அனைத்து இடங்களிலும் ஸ்பெல்லிங் செக் செய்து திருத்துகிறது. தவற்றினைச் சுட்டிக் காட்டுகையில், வண்ணம் மற்றும் போல்டு வகை மாற்றிக் காட்டும் வகையில் இதனை செட் செய்திடலாம். இதனைப் பெற பயர்பாக்ஸ் பிரவுசரில் Tools>Addons எனச் சென்று Get Addons டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Browse All Addons என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Mozilla Addons தளத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். சர்ச் பாக்ஸில் Spellbound என டைப் செய்து தேடினால் இது இருப்பது தெரியவரும். பின்னர் Add to Firefox என்பதில் கிளிக் செய்து, அது கேட்கும் தகவல்களைத் தந்து முடிக்கவும்.

கேள்வி: என் நிறுவனத்தில் பெரிய அளவில் ஒர்க்ஷீட் தயாரிக்கிறோம். இதில் குறிப்பிட்ட செல்லுக்கு அடிக்கடி சென்று கணக்கிட வேண்டியுள்ளது. திரையில் இது தெரியவில்லை என்பதால், அதற்குச் செல்ல அதிக நேரம் ஆகிறது. ஏதேனும் சுருக்கு வழி உள்ளதா?
–நா. கந்தசாமி, திருப்பூர்
பதில்:
திரையில் காட்சி அளிக்காத ஒரு செல்லுக்குச் செல்ல என்ன செய்யலாம்? – இதுதான் உங்கள் கேள்வி, இல்லையா! இதற்கு Edit மெனு சென்று அதில் Go Toஅழுத்தலாம். அல்லது F5 கீ அழுத்தலாம். இப்போது Go To டயலாக் பாக்ஸ் கிடைக்கும். Reference என்ற சிறிய கட்டத்தில் செல்லின் அடையாள எண்ணை டைப் செய்து ஓகே கிளிக் செய்தால் அந்த செல்லுக்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். நீங்கள் பயன்படுத்தும் செல்களை வரிசையாக Go To டயலாக் பாக்ஸ் நினைவில் வைத்திருக்கும். ஒரே செல்லை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால் Go To பாக்ஸில் அதன் மீது டபுள் கிளிக் செய்தால் போதும். மீண்டும் மீண்டும் அதனை டைப் செய்திட வேண்டியதில்லை.

கேள்வி: மிக எளிதாக ஒரு ட்ரைவிலிருந்து இன்னொரு ட்ரைவிற்கு பைல்களை மாற்ற, விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோ இரண்டு திறந்து பயன்படுத்துகிறேன். ஆனால் ஒன்றுக்குப் பின் ஒன்று அமைந்துவிடுவதனால், ஒவ்வொரு பைலை இழுத்துவிடுகையிலும் சிக்கல் ஏற்படுகிறது. வேறு சுருக்கமான வழிகளில் இதனை மேற்கொள்ள முடியுமா?
–என். ராஜேஷ் குமார், கோவை
பதில்:
மானிட்டர் திரையின் நீள, அகலம் பொறுத்து இந்த பிரச்னை ஏற்படும். இதற்குத் தீர்வாக இணையத்தில் புரோகிராம் ஒன்று உள்ளது. FreeCommander என இதற்குப் பெயர். இதனை www.freecommander. com/fc_downl_en.htm என்ற முகவரியில் உள்ள தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். fc_setup.zip என்ற பைல் கிடைக்கும். இதனை செட் அப் செய்து இந்த புரோகிராமைப் பதிந்து இயக்கலாம். இது விண்டோஸ் எக்ஸ்புளோரரின் இரண்டு விண்டோக்களை அடுத்தடுத்து பக்கமாகத் தருகிறது. இதனால் இரு வேறு டைரக்டரிகளில் உள்ள பைல்களை இழுத்து விடுவது எளிது. இந்த புரோகிராமினை ஒரு பிளாஷ் ட்ரைவில் பதிந்து எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். கம்ப்யூட்டரில் கட்டாயம் இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கூகிள் போலவே தமிழில் தேடுதளம்

.

E_1280057797.jpeg

தமிழில் ஓர் இணைய தேடுதளம்

ஆங்கில இணைய தளங்களுக்கு இணையாக, அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகம், தமிழில் தேடுதளம் ஒன்றினையும், தமிழ் இணைய தகவல் கோட்டையினையும் உருவாக்கித் தந்துள்ளது. இதனை அண்ணா பல்கலைக் கழகத்தில் இயங்கும் இணைய வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கி யுள்ளது. இந்த தளத்தின் பெயர் சர்ச்கோ (Searchko). இதனைwww.searchko.in என்ற முகவரியில் பெறலாம்.
இதுவரை ஆங்கில மொழியில் உள்ள தேடுதல் இணைய தளங்களையே நம்மில் பெரும்பாலோர் பயன்படுத்தி வருகிறோம். கூகுள் தளத்தில் தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் தேடிப் பெறும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இப்போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழில் ஒரு தேடல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி, ஒலியியல் அமைப்பில் கீகளை அழுத்தி, தேடலுக்கான சொற்களை உருவாக்கித் தேடலாம். அல்லது இதில் தரப்பட்டுள்ள விசைப்பலகையை கிளிக் செய்து, அதன் மூலம் சொற்களை டைப் செய்தும் தேடலாம். (கீ போர்டு வழக்கமான கீ போர்டாக இல்லாமல் சற்று மாற்றாக உள்ளது. பழகிவிட்டால் சரியாகிவிடும்)
தேடல், மருத்துவம், இலக்கியம் எனப் பெரிய பிரிவுகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் தேவையானததைத் தேர்ந்தெடுத்து நாம் தேடும் தகவல்களைப் பெறலாம். தினமலர் உள்பட மூன்று தமிழ் தினசரி செய்தித் தாள்களுக்கான டேப்கள் தரப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து செய்திகள் கிடைக்கின்றன.
இந்த தளத் தேடலில், இயற்கை மொழி ஆய்வில் பயன்படுத்தப்படும் பல தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இணைய வெளியில் ஏறத்தாழ ஒரு கோடி தமிழ் ஆவணங்கள் உள்ளன. இவற்றை ஒருமுகப்படுத்தி, தேடலுக்கு உட்படுத்தி, தேடல் தேவைகளை நிறைவேற்றுவதே இந்த தளத்தின் நோக்கம் என இதில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் ÷ஷாபா கூறினார்.
ஆங்கிலம்–தமிழ் மற்றும் தமிழ்–ஆங்கிலம் அகராதிகள் தரப்பட்டுள்ளன. இந்த அகராதிகளில் ஏறத்தாழ 1.5 லட்சம் வேர்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்திச் சொற்களுக்குப் பொருள் தேடிப் பெறலாம்.
இலக்கியப் பிரிவில் தமிழ் இலக்கியங்கள் உள்ள தளங்களின் பட்டியலைப் பெற்று அவற்றைப் பயன்படுத்தலாம். இந்த தேடுதல் தளம் இன்னும் சோதனைப் பதிப்பு நிலையில் தான் உள்ளது. பிழை திருத்தி போன்றவை விரைவில் சரி செய்யப்பட்டு மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
சரி, அது என்ன "சர்ச் கோ’ என்ற ஐயம் உங்களுக்கு வரலாம். இங்கு ""கோ” என்பது தமிழ்ச் சொல். அரசன் என்ற பொருளைத் தரும். தேடல் சாதனங்களில் இது ஒரு அரசனாக இயங்கும் என்று பொருள் தரும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் கொண்டு வந்துள்ள இந்த முயற்சியை வரவேற்போம்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நி றுவனங்கள் மன்னிப்பு கோரின! – 77,500 ஆயிரம் ஸ்ரேல ிங் பவுண்ட் நஷ்ட ஈடு

லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையில் போரை நிறுத்தக் கோரி 2009 ஆம் ஆண்டு லண்டனில் வாழும் இலங்கை தமிழர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தின் முன் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக பரமேஸ்வரன் 23 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

ஆனால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அவர் இரகசியமாக பர்கரை சாப்பிட்டதாக லண்டனில் வெளியாகும் டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதற்கு எதிராக பரமேஸ்வரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று வியாழக்கிழமை லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது சம்மந்தப்பட்ட இரு பத்திரிகைகளின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களும் தாங்கள் வெளியிட்ட செய்திக்கான ஆதாரங்கள் இல்லை என்று ஒப்புக் கொண்டார்கள். இது குறித்த மறுப்பை வெளியிடவும், பரமேஸ்வரனுக்கு 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு தரவும் அந்த இரு பத்திரிகைகளும் ஒப்புக்கொண்டதாக பரமேஸ்வரனின் வழக்கறிஞர் மேக்னஸ் பாயிட் தெரிவித்தார்.

இந்த பத்திரிகைகளின் பொய்ச்செய்தி காரணமாக, கடந்த எட்டு மாதங்களாக தான் மிகுந்த அவமானங்களை சந்தித்ததாகவும், இந்த நிலையில் இன்று வந்துள்ள தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் பரமேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

போராட்டத்தின் போது பல தமிழ் அமைப்புக்கள் பங்கேற்றாலும் தனக்கு தனிப்பட்ட முறையில் அவை உதவ முன்வரவில்லை என்றும், வெற்றிபெற்றால் வக்கீல் சன்மானம் என்ற அடிப்படையிலேயே தான் வழக்கறிஞரை அமர்த்தி இந்த வழக்கை எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக பரமேஸ்வரன் அளித்த பேட்டி:

இலங்கையில் தமிழ் மக்கள் மீதான யுத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக, 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி, இலங்கைத் தமிழ் அகதி பரமேஸ்வரன் சுப்பிரமணியம் அவர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்பாக 23 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

9 அக்ரோபர் 2009 அன்று டெய்லி மெயில் என்ற‌ பத்திரிகை, பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மீது உண்மைக்குப் புறம்பான பாரிய அவதூறு குற்றச்சாட்டு ஒன்றைப் பிரசுரித்திருந்தது. “உண்ணாவிரதியின் 7 மில்லியன் பிக் மக்” என்று தலைப்பிடப்பட்ட அந்தச் செய்தியில், திரு.சுப்பிரமணியம் தனது உண்ணாவிரத காலத்தில் இரகசியமாக பேகர்களைச் சாப்பிட்டதாக பொய்யான குற்றம் சுமத்தப்பட்டிருந்ததுடன், அவரது இந்த‌ ந‌ட‌வ‌டிக்கையால் காவ‌ல்துறையின‌ர் பொதும‌க்க‌ளின் ப‌ண‌த்தினை விர‌ய‌மாக்க‌ நேரிட்ட‌தாக‌வும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சண் பத்திரிகை இணையத்தளத்தில், “உண்ணாவிரதி இதை விரும்பினார்” என்ற செய்தியில் மீண்டும் இதே பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை என்று பரமேஸ்வரனின் வழக்கறிஞர் மக்னஸ் போய்ட் இன்று இலண்டன் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் சண் மற்றும் டெய்லி மெயில் பத்திரிகைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள், குறித்த குற்றச்சாட்டுக்கள் உண்மையில் பொய்யானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், குறித்த தவறான செய்தியைத் திருத்திக் கொள்வதற்கும் விருப்பம் தெரிவித்தார்கள்.

இரு பத்திரிகைகளும் பரமேஸ்வரனிடம் மனப்பூர்வமாகவும், முழுமையாகவும் மன்னிப்புக் கோரி இருப்பதுடன், அவரது சட்டச்செலவுகள் உட்பட கணிசமான இழப்புக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் உடன்பட்டுள்ளனர்.

பரமேஸ்வரன் இன்று கூறியதாவது:

“இந்தப் பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டு விட்டதால் எனது மனச்சுமை குறைக்கப்பட்டுள்ளதுடன், நான் மீண்டும் எனது வாழ்க்கையைக் கட்டியெழுப்ப ஆரம்பிக்க முடியும்.

கடந்த 8 மாத காலமாக எனது வாழ்க்கை தாங்கிக்கொள்ள முடியாத சிரமங்கள் நிறைந்ததாக இருந்ததுடன், அந்தக் காலகட்டங்களில் எனது சொந்தவாழ்வை முடித்துக்கொள்ளும் அளவிற்குக் கூட சிந்தித்து இருக்கிறேன்.

குறித்த பத்திரிகைகள் பிரசுரித்த பொய்யான செய்திகளின் விளைவாக, என்னில் எந்தத் தவறும் இல்லாதபோதும், நான் எனது நண்பர்களை இழந்தேன். எனது குடும்பத்தினரால் கைவிடப்பட்டேன். அத்துடன் தமிழ் சமூகத்தினரால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டேன்.

குறித்த இரு பத்திரிக்கைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அப் பத்திரிகைகள் பிரசுரித்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை எனது உண்ணாவிரத காலத்தில் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும், என்னை மதித்து என்னுடன் உதவியாக நின்றவர்களுக்கும் நிருபிக்க வேண்டியது எனது கடமை என்பதை நான் உணர்ந்தேன்.

தற்பொழுது இரு பத்திரிகைகளும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை என்பதை அறிவித்துள்ளதுடன், மன்னிப்பும் கோரியுள்ளன என்பதால், அந்த மக்கள் பத்திரிகைகளின் மன்னிப்புக்கோரலை ஏற்றுக்கொள்வதுடன் நான் எந்தத்தவறும் செய்யவில்லை என்பதைப் புரிந்துகொள்வார்களென நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

ஈழத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருந்த தமிழ் உறவுகளுக்காக நான் மேற்கொண்ட 23 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் எனது தியாகம் உண்மையானது. இந்தச் சோதனையான தருணத்தில் என்னுடைய நேர்மையை சந்தேகப்படாமல் என்னுடன் துணை நின்ற அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.”

பரமேஸ்வரனின் வழக்கறிஞர் மக்னஸ் போய்ட் இன்று தெரிவித்துள்ளதாவது:

பொய்யான குற்றச்சாட்டுக்கள் பிரசுரிக்கப்பட்டதிலிருந்து இந்த 8 மாதங்களாக அந்தச் செய்திகள் தமிழ் சமுதாயத்திலும் அதனைத் தாண்டியும் ஏற்படுத்திய அவப்பெயர், சந்தேகம், அவநம்பிக்கை என்பவற்றுடனேயே பரமேஸ்வரன் வாழ வேண்டி இருந்தது.

இரு பத்திரிகைகளும் இறுதியில் உண்மையை உணர்ந்து கீழிறங்கி வந்து தாம் பரமேஸ்வரனிற்கு உருவாக்கிய மனவேதனைக்கும், துன்பத்திற்கும் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளதையிட்டு நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.என்றார்.

source:nerudal

1 பின்னூட்டம்

Filed under Uncategorized

பூமியின் மைய பகுதியில் என்ன இருக்கும்?

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

பூமியின் மையபகுதியை நோக்கிச் செல்லும்போது அழுத்தம் அதிகரிக்குமா? குறையுமா? வெப்பமாக இருக்குமா? குளிர்ச்சியாக இருக்குமா? பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் பலர் முழித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதில் இருக்கிறது. பூமியின் மேற்பரப்பில் காற்றின் அழுத்தம் மட்டுமே இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், பூமிக்கு உள்ளே அந்த இடத்தின் மேலுள்ள பாறைகளின் அழுத்தமும், காற் றின் அழுத்தமும் சேர்ந்திருக்கும்தானே! இதனால் தான் சுரங்கத்தின் உள்ளே கூட அழுத்தம் அதிக மாக உள்ளது. பூமியின் மையபகுதியை நோக்கி செல்லச் செல்ல அழுத்தமும் அதிகரிக்கிறது; வெப்பமும் அதிகரிக்கிறது. பூமியின் மையபகுதி வெப்ப குழம்பாக இருப்பது தான் இதுபோன்ற வெப்பத்துக்குக் காரணம்.
பெரும்பாலும் இரும்பு மற்றும் நிக்கலால் ஆனது தான் பூமியின் உட்பரப்பு. அதன் உட்பகுதி திட பொருளாகவும், வெளிபகுதி திரவமாகவும் இருக்கும் என்று கருதபடுகிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் மேல் ஓடு குளிர்ந்து உறைந்து போய் விட்டது. அதுதான் நாம் இப்போது பார்க்கும் பாறைகள், குன்றுகள் மற்றும் மலைகள்.

பூமியின் உள்ளகத்தைச் சுற்றி சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் பருமன் உள்ள `மாடில்’ எனும் அடுக்கு உள்ளது. இந்த அடுக்கின் பலம் குன்றிய சில பகுதிகளில் விரிசல்கள் ஏற்படும். அந்த விரிசல்களில் அவ்வப்போது பீறிட்டு எழும் நெருப்பு பிழம்புகள் தான் `எரிமலைகள்’.

source:dinakaran

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

திருப்பதியில் திகில் சம்பவம்-குழந்தையை க வ்வி ஓடிய சிறுத்தை-பாய்ந்து பிடித்து மீட்ட த ந்தை

Tiger_yawn_teeth_bite.jpg
திருப்பதி: திருப்பதி மலைப் பாதையில், 2 வயதுக் குழ்நதையை சிறுத்தை ஒன்று கவ்விக் கொண்டு ஓட முயன்றபோது, குழந்தையின் தந்தை மிகவும் துணிச்சலுடன் சிறுத்தையிடமிருந்து தனது குழந்தையை மீட்டார்.

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்தவர் சோபன்பாபு (35). இவருக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், கோகிலா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இவர் நேற்று மாலை தன்னுடைய மனைவி, மாமியார் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் காளஹஸ்தியில் இருந்து திருப்பதிக்கு வந்தார்.

அலிபிரியில் இருந்து திருமலைக்கு கால்நடையாக சென்றனர். முதலாவது மலைப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். தனது இரு கைகளிலும் இரு குழந்தைகளைப் பிடித்து நடக்க வைத்தபடி வந்து கொண்டிருந்தார் சோபன்பாபு.

இரவு ஏழரை மணியளவில் அவர்கள் 7வது மைல் அருகே வந்தனர். அப்போது மலைப்பாதை வேலிக்கம்பிக்கு அருகே விற்றுக் கொண்டிருந்த வேர்க்கடலையை மகள் கோகிலா கேட்டதால் வாங்கிக் கொடுத்தார் சோபன்பாபு. பின்னர் பர்ஸிலிருந்து பணத்தை எடுப்பதற்காக கோகிலாவின் கையை விலக்கி பணத்தை எடுத்துக் கொண்டிருந்தார்.

அந்தசமயத்தில் திடீரென வேலிக்கு அப்பாலிருந்து ஒரு சிறுத்தை திடீரென வெளியே பாய்ந்தோடி வந்தது. சிறுமி கோகிலாவை அப்படியே வயிற்றில் கவ்விய சிறுத்தை மீண்டும் வேலியைத் தாண்டி ஓட எத்தனித்தது.

இதைப் பார்த்து பதறிப் போன சோபன் பாபு, மகா துணிச்சலுடன் தனது இன்னொரு மகளின் பிடியை உதறி விட்டு விட்டு கோகிலாவின் கால்களைப் பிடித்து வேகமாக இழுத்தார். அவரது கதறல் குரலைக் கேட்ட அப்பகுதி வியாபாரிகளும், பக்தர்களும் திரண்டு வந்து சத்தமாக குரல் கொடுக்கவே பயந்து போன சிறுத்தை, குழந்தையை கீழே போட்டு விட்டு ஓடி விட்டது.

கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையின் வயிற்றில் சிறுத்தையின் பற்கள் பதிந்திருந்தன. உடனடியாக குழந்தையை திருப்பதி ரூயா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரத்த வாடை பார்த்து விட்டதால் மறுபடியும் சிறுத்தை வரலாம் என்ற அச்சத்தால் மலை மீதிருந்த பக்தர்கள் கீழே இறங்க வேண்டாம் எனவும், கீழிருந்து மலைப் பாதை வழியாக யாரும் வர வேண்டாம் எனவும் கோவில் நிர்வாகம் எச்சரிக்கை தகவல் விடுத்தது.

ஏற்கனவே சிறுத்தை நடமாட்டம் இங்கு இருந்திருக்கிறது. அப்போது புகை போட்டும், நெருப்பை மூட்டியும் சிறுத்தையை விரட்டி வந்துள்ளனர்.

ஆனால் தற்போதுதான் முதல் முறையாக மனிதர்கள் மீது சிறுத்தை தாக்குதல் நடத்தியிருக்கிறது.

கடவுள்தான் தனது குழந்தையை காப்பாற்றியதாக அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில் இருந்த சோபன்பாபு கூறினார்

source:thatstamil.oneindia.in

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாம் : வி ஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
முட்டையில் இருந்து கோழி வந்ததா? அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்ற கேள்விக்கு நீண்ட நாட்களாக பதில் அளிக்க முடியாமல் இருந்த நிலையில், தற்போது கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு, வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி ஆய்வு நடத்தினார்கள். முட்டையின் செல்களை சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்ததில் முட்டையின் செல்கள் வோக்லெடின்-17 என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தது. இந்த வோக்லெடின்-17 செல் கோழியின் உடலில் இருப்பதாகும். அதுதான் முட்டையாக மாறி இருக்கிறது. வோக்லெடின்-17 புரோட்டின், கிறிஸ்டல், நியூகிளீசாக மாறி தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. எனவே கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று அடித்துக்கூறுகின்றனர் அந்த விஞ்ஞானிகள்!

source:dinakaran

1 பின்னூட்டம்

Filed under Uncategorized

மூன்று சிம்காட் போன் அறிமுகம்

3ஜி இணைந்த நெட்புக் கம்ப்யூட்டர் மற்றும் ஆலிவ் பார் எவர் ஆன் என்ற இருவகை சிம்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய மொபைல் போனையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய ஆலிவ் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஆலிவ் விஸ் (Olive Wiz) என்ற சோஷியல் நெட்வொர்க் மொபைல் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மூன்று (2 ஜி.எஸ்.எம். + ஒரு சி.டி.எம்.ஏ) சிம்களை இணைத்துப் பயன்படுத்தலாம்.

இதில் ஆப்பரா மினி பிரவுசர் தரப்பட்டுள்ளது. ஒரு கிளிக் மூலம் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களுகுச் செல்லலாம்; பிரவுசிங் மேற்கொள்ளலாம். குவெர்ட்டி கீ போர்டு உள்ளது. எளிதாக இமெயில்களைக் கையாள இது உதவுகிறது. ஒரு மொபைல் போனில் காணப்படும் அனைத்து அடிப்படை வசதிகளுடன், 2 மெகா பிக்ஸெல் கேமரா, 4 ஜிபி வரை அதிகப்படுத்தக்கூடிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்,2.2 அங்குல வண்ணத் திரை, இமெயில் பிரவுசிங், WAP/MMS/GPRS தொழில் நுட்ப வசதிகள், ஸ்டீரியோ ஹெட்செட், ஸ்பீக்கர் போன்,எப்.எம். ரேடியோ ஆகியவை உள்ளன. இதன் விலை ரூ.6,000க்கும் குறைவாகத்தான் இருக்கும் என இதனைத் தயாரித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

source:athirvu.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

குறைகிறது தூக்கம்… புலம்புகிறார்கள் இந் தியர்கள்!

* நீங்கள் அதிக நேரம் வேலை செய்பவரா?

* அதிகம் உடல் எடை கொண்டவரா?

* எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆகுபவரா?

– அப்படியென்றால், உங்களுக்கு `ஓ.எஸ்.ஏ.’ குறைபாடு இருக்கலாம். `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா’ என்பதன் சுருக்கம்தான் ஓ.எஸ்.ஏ. இதனால், உறக்கத்தின்போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, தூக்கமின்மை உண்டாகும்.

பொதுவாக நகரவாசிகள்தான் மேற்படி கேள்விகளுக்கு `ஆம்’ என்று பதில் சொல்பவர்களாக இருக்கிறார்கள். அதனால், இவர்கள்தான் அதிக அளவில் இந்த இரவுநேர நோய் பாதிப்புக்கு ஆளாகுகிறார்கள். இந்த நோய் பாதிப்பு தொடரும் பட்சத்தில் நிம்மதியை இழந்து பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும் ஆளாகிவிடுகிறார்கள் என்கிறது, சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வு. 35 முதல் 65 வயதுள்ள சுமார் 6 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வில், நகர்ப்புறங்களில் வாழும் 93 சதவீதம் பேர் இரவுநேர தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார்கள். இவர்களில் 28 சதவீதத்தினர் 5 மணிநேரம் மட்டுமே தூங்குகிறார்கள். 71 சதவீதத்தினர் இரவில் மூன்று முறை விழித்து தூக்கம் வராமல் தவிக்கிறார்கள்.

f783f147b.jpg

நிம்மதியான தூக்கம் தொடர்பாக நடத்தப்பட்ட அந்த ஆய்வில் குறட்டை விடுபவர்கள் பற்றிய முக்கிய தகவல்களும் கிடைத்தன.

இந்தியாவைப் பொறுத்தவரை குறட்டை விடுபவர்களில் 38 சதவீதத்தினர் அதிக உடல் பருமன் கொண்டவர்கள். மற்றவர்கள்… அளவுக்கு அதிகமாக புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதயம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் ஆவார்கள்.

ஓ.எஸ்.ஏ. பாதிப்பை உடனடியாக கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், அது உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.

சரி… ஓ.எஸ்.ஏ. என்பது என்ன?

நமது சுவாசப்பாதையில் தடை இல்லாமல் இருந்தால்தான் நுரையீரலுக்கு காற்று எளிதில் செல்லவும், வெளியேறவும் வசதியாக இருக்கும். அதில் தடை ஏற்படும்போது ஓ.எஸ்.ஏ. பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது, சுவாசப் பாதை பாதிக்கப்பட்டு, நுரையீரலுக்கு காற்று செல்வதில் தடை ஏற்படுகிறது.

பொதுவாக நாம் தூங்கும்போது நாக்கு, தடிமனான கழுத்து திசுக்கள், சதைகள் சுவாசப் பாதையை அடைக்கின்றன. அதனால், பல விநாடிகளுக்கு சுவாசம் நின்றுவிடுகிறது. தொடர்ந்து, உடல் காற்று வராமல் தடுமாறுகிறது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. மூச்சு விட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, உறக்க நிலையில் உள்ளவர்கள் எழுந்து விடுகிறார்கள்.

அவர்கள் மீண்டும் மூச்சுவிடும்போது ஆக்சிஜன் அளவு அதிகரித்து, ஆழ்ந்த உறக்கம் கிடைக்கிறது. இரவு முழுவதும் இந்த செயல்பாடு மீண்டும் மீண்டும் நடக்கிறது.

ஆனால், ஓ.எஸ்.ஏ. பாதிப்பு இருக்கும்போது 8 மணி நேர சராசரி தூக்கத்தின் அளவு குறைந்துபோய் விடுகிறது. `இரவில் தூங்கும்போது அடிக்கடி தடை ஏற்படும். நம்மை அறியாமலேயே விழித்துக்கொண்டு தூக்கம் வராமல் தவிப்போம். மனமும் அமைதியாக இல்லாமல் எதையோ தேடி அலை பாய்ந்து கொண்டிருக்கும். மறுநாளும் அதன் தாக்கம் தொடரும். அதாவது, மறுநாள் களைப்பும், தூக்கக் கலக்கமுமாக இருக்கும்…’ என்று விளக்கம் கொடுக்கிறார்கள் மருத்துவர்கள்.

girl-sleeping.jpg

இந்தியாவில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் இரவு தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார்களாம்.

தனது அலுவலகத்தில் 8 மணி நேரத்தையும் தாண்டி 10 முதல் 12 மணி நேரம் வரை வேலை பார்க்கும் அசோக் ஒரு மணி நேரம் ரெயிலில் பயணம் செய்து, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தை நடந்து சென்றால்தான் வீட்டை அடைய முடியும். ரெயிலில் பயணித்தது அவருக்கு நன்றாக நினைவிருக்கும். அதற்கு பிறகு வீட்டுக்கு வந்த நினைவுகள் அவருக்கு குழப்பமாக இருக்கும். சாலையை எந்தெந்த இடங்களில் `கிராஸ்’ செய்து வீட்டிற்கு வந்தோம் என்பதுகூட அவருக்கு நினைவில் இருக்காது. இதுவும் ஓ.எஸ்.ஏ. நோய் பாதிப்புதான்.

இந்த நோய் பாதிப்பு ஒருவரிடம் உள்ளதா என்பதை அவரால் கண்டுபிடித்துவிட முடியாது. அவருக்கு அருகில் தூங்குபவர், அவரது இரவு நேர நடவடிக்கைகள் குறித்து சுட்டிக்காட்டினால் மாத்திரமே அதை உணர்ந்து கொள்ள முடியும். ஒருவேளை, அந்த நோய் பாதிப்பு இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம்.

சிலர் பிறவிக் குறைபாடு, புதிதாக எடுத்துக்கொள்ளும் உணவுகள், புகையிலை பயன்படுத்தும் வழக்கம், உடற்பயிற்சி செய்யாமை… என்று நீளும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினாலும் ஓ.எஸ்.ஏ. பாதிப்பை சந்திக்கலாம். ஆனாலும், உடல் பருமன் அதிகம் இருக்கும்போதுதான் இதன் தீவிரம் இன்னும் அதிகமாகிறது.

ஆண்கள் உடல் பருமன் பாதிப்புக்கு ஆளாகும்போது, அவர்களது வயிற்றுக்கு மேல் பகுதியில் எக்குதப்பாக சதை போடுகிறது. அதனால், அவர்கள் உடல் சதை போடுவதை தவிர்த்துவிட வேண்டும். இதேபோல், கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஓ.எஸ்.ஏ. பாதிப்பு ஏற்படலாம்.

ஒருவருக்கு ஓ.எஸ்.ஏ. பாதிப்பு இருந்து, அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தைக்கூட ஏற்படுத்திவிடும். அத்துடன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, அன்றாட செயல்களில் தடை போன்ற பாதிப்புகளும் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதற்கு முழுமையான தீர்வு 8 மணி நேரம் தூக்கம்தான். நீங்கள் 8 மணி நேரம் தூங்காதவர் என்றால், இன்றே அதற்கான காரணத்தை ஆராயுங்கள். குறைபாடுகள் தெரிந்தால் உடனேயே சிகிச்சையை ஆரம்பித்து விடுங்கள்.

***

சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்

girl%20on%20bed.jpg
* அலுவலக பிரச்சினைகளை அலுவலகத்தோடு விட்டுவிடுங்கள்.

* வீட்டில் ஆரோக்கியமான சிந்தனைகள் மட்டுமே தோன்றட்டும்.

* உறக்கத்திற்கு முன்பாக மனதை அமைதிப்படுத்துங்கள். முடிந்தால் தியானம் செய்யுங்கள்.

* படுக்கையில் அமர்ந்த பிறகு சிக்கலான பிரச்சினைகளில் மனதை செலுத்த வேண்டாம்.

* இயற்கை உபாதை காரணமாக இரவில் விழிப்பு தட்டி எழுந்தால், அந்த காரியத்தை முடித்ததும் படுத்துவிடுங்கள். அப்போது, அடுத்தவருடனான பேச்சு, விவாதம் வேண்டாம்.

* சுத்தமான காற்றோட்டம், தூய்மையான படுக்கை, இட நெருக்கடியற்ற படுக்கையறை, மணம் தரும் வாசனைத் திரவியங்கள், முழுவதுமாக இருட்டாக அல்லாமல் மிக மெல்லிதான வெளிச்சம், இவற்றோடு தெளிந்த மனம் – இவை உங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.

* நீங்கள் படுக்கும் படுக்கை உங்களுக்கு சவுகரியத்தை தருவதாக இருக்க வேண்டும்.

* அணியும் ஆடை பருத்தி ஆடையாக, இறுக்கமாக இல்லாமல் இருத்தல் அவசியம்.

* வசதி உள்ளவர்கள் ஸ்லீம் லேப், ஸ்லீப் மெஷின் போன்றவற்றை பயன்படுத்தலாம். மூக்கின் பக்கவாட்டு பகுதியை தூக்கி மூச்சுவிடுவதை சுலபமாக்கும் மூக்கு பட்டை, தொண்டை சதையை இறுக்கி, மூக்கு துவாரத்தை ஈரமாக வைத்திருக்கும் குறட்டை தெளிப்பான் போன்றவையும் உங்களுக்கு உதவலாம்.

* முடிந்தவரை 8 மணி நேரம் தூங்குங்கள். தூக்கத்தின் அளவு குறைய குறைய ஆபத்துதான்.

***

source:dailythanthi

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

அதிர்ச்சிïட்டும் `ஆசைகள்’

வயது குறைந்தவர்களுடன் தங்கள் பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்பவர்கள் `பெடோபிலியா’ எனப்படுவார்கள். 8 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுமிகள் இந்தத் தொல்லைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

பெண்கள் எல்லாத்துறையிலும் ஆண்களுக்கு நிகராக கால்பதித்து விட்டார்கள். கிராமப்புறங்களில்கூட பெண்கள் வீட்டில் முடங்கிக் கிடப்ப தில்லை. அருகில் உள்ள சிறுநகரங்களுக்கு வேலைக்குச் சென்று குடும்பத் திற்காக வருமானம் ஈட்டுகிறார்கள்.

MDF22738.jpg

இதனால் பணிக்குச் செல்வோர், பள்ளிக்குச் செல்வோர், பயணமாகச் செல்பவர்கள் என எல்லோரும் ஒரே நேரத்தில் பயணிப்பதால் வாகனங்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அந்த வேளையில் நெருக்கடியைப் பயன்படுத்தி ஆண்கள், பெண்களை உரசுகிறார்கள். துணிந்தவர்கள் சில்மிஷம் செய்கிறார்கள். இடையில் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கும் பெண்களின் நிலையை விளக்க வார்த்தைகள் இல்லை. இதற்கு என்ன காரணம்?

ஆணும் பெண்ணும் திருமணவயதில் திருமணம் மூலம் இணைவது இயல்பு. வாய்ப்புகளை உருவாக்கியும், நெருக்கடி போன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தியும் சில்மிஷத்தில் ஈடுபடுவது பாலியல் வக்கிரம்.

பாலியலில் இப்படி வழக்கத்துக்கு மாறான முறையில் ஒரு நபருக்கு தூண்டுதல் ஏற்படுவதை `பாராபிலியா’ என்று கூறுவார்கள்.

உறவின்போது சிலருக்கு கிளர்ச்சிïட்டும் வார்த்தைகள் (கொச்சையாக) பேசப்பிடிக்கும், கேட்கப்பிடிக்கும். சிலருக்கு கடிக்கப்படுவதும், அடிக்கப்படுவதும், கீறப்படுவதும் பிடிக்கும். சிலருக்கு எதிர்பாலினத்தவர் ஆடைகளைக் கழற்றும்போது அருகில் இருந்து பார்க்கப் பிடிக்கும். இதெல்லாம் இயல்பானதாகத் தோன்றினாலும், தகுந்த வாய்ப்புகள் அமையாதபோது அவர்களும் பாராபிலியாக்களாக மாறிவிடுவார்கள். இவர்கள்தான் விதவிதமான காம சேஷ்டைகளில் ஈடுபடுபவர்கள்.

கூட்ட நெரிசலில் சில ஆண்கள் பெண்களிடம் நெருக்கமாக நிற்பார்கள். சூழ்நிலைக்கேற்ப தங்களுடைய உடலை பெண்களின் உடம்பில் தேய்த்து சுகம் பெறுவார்கள். இது `புரோட்டிïரிசம்’ எனப்படுகிறது. இவர்கள் பேருந்துகள், ரெயில், சுரங்கப்பாதை, சந்தை என கூட்டம் அதிகமுள்ள இடங்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

சிலருக்கு உயிரற்ற பொருட்களைப் பார்த்தாலும் உணர்வு தூண்டப்படும். அப்படி உணர்வு தூண்டும் பொருட்களை அவர்கள் சேகரித்து வைத்திருப்பார்கள். இதற்காக பொருட்களை திருடுவதும் உண்டு. இது `பெடிசிசம்’ என்று கூறப்படுகிறது.

இத்தகைய பாதிப்பிற்குரிய சிலர் பெண்களின் உள்ளாடைகள், செருப்புகளை சேகரித்து வைத்திருப்பார்கள். சிலர் யாரிடம் திருடினோம் என்று பெயர் கூட குறித்து வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் உயிரற்ற பொருட்களான ஓவியம், புகைப்படத்தைப் பார்த்தாலும் கிளர்ச்சி அடைவார்கள்.

original_eve.jpg

படம்: மாடலுக்காக மட்டும்

சிலர் ஆணாக இருந்து கொண்டு பெண்போல செயல்படுவதில் இன்பம் காணுவார்கள். இதை `டிரான்ஸ் வெஸ்டிசம்’ என்பார்கள். இவர்கள் பெண்போல உடை அணிந்து கொள்வார்கள், நடைபோடுவார்கள். திருமணமான பிறகுகூட இதை அவர்களால் நிறுத்த முடியாது.

நிர்வாண படங்களைப் பார்த்து ரசிப்பது `வோவேயரிசம்’ என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் படங்களைப் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் வாழ்விலும் மற்றவர்களை ஒளிந்திருந்து ரசிப்பதை விரும்புவார்கள்.

சிலர் தங்கள் உடலை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்று விரும்புவார்கள். இது `எக்ஸ்பிசினிசம்’ என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் ஆண்களிடையே காணப்படும் பழக்கமாகும். இது ஒருவகை மனநோய். மாடலிங்கில் இருக்கும் ஒரு சில பெண்கள் தங்கள் உடலை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்துவதும் இந்த வகை மனநோய் தான்.

தொலைபேசியில் தொந்தரவு செய்வது சிலருக்கு வாடிக்கை. இதில் 3 வகை உள்ளனர். சிலர் தன்னைப் பற்றியும், தான் இன்பம் காண்பதைப் பற்றியும் விவரிப்பார்கள். சிலர் எதிர்முனையில் இருப்பவரை மிரட்டுவார்கள். மூன்றாவது வகையில் பேசுகிறவர், எதிராளியின் அந்தரங்க விஷயங்களை அறிந்து கொள்ளும் முயற்சியில் காய் நகர்த்துவார்கள்.

அடுத்தவருக்கு வலி உண்டாக்கி ரசிக்கும் பழக்கமும் சிலருக்கு இருக்கும். இது `சேடிசம்’ எனப்படுகிறது. இந்த பாதிப்பு உடையவர்களை `சேடிஸ்ட்’ என்று அழைப்பார்கள். சிலர் தனக்குத்தானே துன்புறுத்தி வலியை உருவாக்கிக் கொள்வார்கள். இது `மாசோசிசம்’ என்று கூறப்படுகிறது. இவர்களில் சிலர் தங்களுக்கு இணங்குபவர்களிடம் மட்டும் இப்படி நடந்து கொள்வதோடு நிறுத்திக் கொள்வார்கள். சிலர் கற்பழிப்பு, சித்ரவதை, கொலை என கொடூரமாக நடப்பவர்களாகவும் இருப்பார்கள்.

வயது குறைந்தவர்களுடன் தங்கள் பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்பவர்கள் `பெடோபிலியா’ எனப்படுவார்கள். 8 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுமிகள் இந்தத் தொல்லைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதில் சிறுமிகளுக்கு அறிமுகமில்லாதவர்கள் இனிப்பு வகைகளை வாங்கிக் கொடுத்து துன்புறுத்துவது 10 சதவீதமும், குழந்தையின் உறவுக்காரர் இப்படி சேட்டை செய்வது 15 சதவீதமும் நடப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. ஆனால் புகார்கள் வெளிவராததால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்பது கணிப்பு. இதில் எந்தவகை பாதிப்பு கொண்டவர்களுக்கும் இப்போது சிகிச்சை இருக்கிறது. சிகிச்சை மூலம் அவர்கள் தங்களை சரி செய்து கொள்ள முடியும்.

source:dailythanthi

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

1 1/2 வயது குழந்தையின் தலையை துண்டித்து ரத்த ம் குடித்த மந்திரவாதி மனைவியுடன் கைது

திருடிச் சென்று நரபலி கொடுத்தார்

ராமநாதபுரம், ஜுலை.25-

1 1/2 வயது குழந்தையை கடத்திச் சென்று தலையை துண்டித்து நரபலி கொடுத்து ரத்தம் குடித்த மந்திரவாதி மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.

பூவரசியின் கொலைவெறி போல்…

சென்னையில், காதலன் ஏமாற்றி விட்ட கோபத்தில் அவரது 4 வயது மகனான ஆதித்யா என்ற சிறுவனை கடத்திச் சென்று கொலை செய்து சூட்கேசில் பிணத்தை அனுப்பிய சம்பவத்தில் பூவரசி என்ற பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மதுரையில் ரத்த வெறி பிடித்த மந்திரவாதி ஒருவர், பச்சிளம் குழந்தையை கடத்திச்சென்று கொலை செய்து ரத்தத்தை குடித்த பயங்கரம் சம்பவம் நடந்து உள்ளது.

ரத்தத்தை உறைய வைக்கும் இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

1 1/2 வயது ஆண் குழந்தை

மதுரை அருகே உள்ள எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கவுஸ் பாட்சா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து அவருடைய மனைவி சிரின் பாத்திமா மன நிம்மதிக்காக தன் குழந்தை காதர் ïசுப்புடன் (வயது 11/2) மதுரை கோரிப்பாளையம் தர்காவில் தங்கி இருந்தார்.

அங்கு தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் கபூர் என்ற மந்திரவாதியும் தன் மனைவி ரமலா பீவியுடன் தங்கி இருந்தார். அப்போது குழந்தை காதர் ïசுப்புடன் மந்திரவாதி நெருங்கிப் பழகினார். அந்த குழந்தையை தூக்கி கொஞ்சி விளையாடி மகிழ்ந்தார். குழந்தையின் தாய் சிரின் பாத்திமாவின் நிலையை கண்டு பரிதாப்படுவது போல் நடித்தார்.

கடந்த வாரம் சிரின் பாத்திமா தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு அவரும் தூங்கிக்கொண்டு இருந்தார்.

மந்திரவாதி கைது

அவர் தூங்கி எழுந்தபோது குழந்தை காதர் ïசுப்பை காணவில்லை.

இதுகுறித்து சிரின் பாத்திமாவின் உறவினர்கள், தல்லாகுளம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, மந்திரவாதி அப்துல் கபூரும், அவருடைய மனைவி ரமலாவும் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து காயல்பட்டினத்தில் அப்துல் கபூரையும், ரமலாவையும் போலீசார் தேடி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தையை கடத்திக் கொன்று விட்டதாக, மந்திரவாதி கூறிய தகவலால் போலீசார் அதிர்ச்சி அடைந்தார்கள்.

மந்திரவாதி அப்துல் கபூர் போலீசாரிடம் கூறியதாவது:-

நரபலி

"கோரிப்பாளையம் தர்காவில் நான் தங்கி இருந்தபோது கனவில், தலைப்பிள்ளையாக பிறக்கும் ஆண் குழந்தையை நரபலி கொடுத்து அதன் ரத்தத்தை குடித்தால் மாந்திரீக சக்தி அதிகரிக்கும் என்று அசரீரி கூறியது. இதனால் நானும், என் மனைவியும் குழந்தை காதர் ïசுப்பை கடத்திக்கொண்டு காயல்பட்டினம் அருகே உள்ள ஏரல் கிராமத்திற்கு சென்றோம்.

அங்கு சிறுவனின் உடலை துண்டுதுண்டாக வெட்டி 2 பெரிய தூக்குவாளிகளில் அடைத்தோம். பின்னர் குழந்தையின் உடலில் இருந்து சேகரித்த ரத்தத்தையும், தலைப் பகுதியையும் குலசேகரன்பட்டினம் செல்லும் வழியில் உள்ள கல்லாமொழி கடற்கரைக்கு கொண்டு சென்றோம்.

அங்கு ரத்தத்தை குடித்து பரிகாரம் செய்தபின் குழந்தையின் தலையை அங்கேயே புதைத்துவிட்டு, ஏர்வாடியை அடுத்த காட்டுப்பள்ளி பகுதிக்கு வந்து தங்கி இருந்தோம். அங்கு குழந்தையின் உடல் பாகங்களை புதைத்து விட்டு தப்பிச் சென்றுவிட்டோம்.”

இவ்வாறு அப்துல்கபூர் கூறினார்.

அடையாளம் காட்டினார்

இதைத்தொடர்ந்து தல்லாகுளம் போலீசார் நேற்று காலை மந்திரவாதியுடன், ஏர்வாடியில் குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்திற்கு சென்றனர். அங்கு குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அப்துல் கபூர் அடையாளம் காட்டினார்.

உடனே, கடலாடி தாசில்தார் காளிமுத்து, கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சங்கு மற்றும் ஏர்வாடி போலீசார் முன்னிலையில் இந்த இடத்தை தோண்டிப்பார்த்தனர். அங்கு சிறுவனின் உடல் புதைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்த பின் மூடிவிட்டனர்.

கொலையாளி தெரிவித்த தகவலின்படி சிறுவனின் தலை புதைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் கல்லாமொழி கிராமத்திற்கு போலீசார் விரைந்து உள்ளனர். அங்கு தலையை கைப்பற்றியபின், ஏர்வாடியில் புதைக்கப்பட்ட உடலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

source:dailythanthi

3 பின்னூட்டங்கள்

Filed under Uncategorized