ஈரானில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மதம் மாற்ற விவகாரம்!


ஈரானில் கிறிஸ்தவ மதகுரு ஒருவர் எதிர்நோக்கியுள்ள மரணதண்டனை தீர்ப்பு பெரும் சர்ச்சையை

ஏற்படுத்தியிருக்கிறது. யூசுஃப் நதர்கனி எனும் கிறிஸ்த்தவ மதகுருவான இவருக்கு, பாலியல் பலாத்காரம் மற்றும் பணம் பறிப்பு குற்றச்சாட்டின் கீழ் மரணதண்டனை விதிக்கப்படவுள்ளது.

எனினும் இவர் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து மதம் மாறியதற்காகவும், மத எதிர்ப்பு பிரச்சாரம் செய்தமைக்காகவுமே மரணதண்டனை வழங்கப்படவிருப்பதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

கிலான் மாகாணத்தின் துணை ஆளுனர், கொலோமாலி ரெஷ்வானி இதனை முற்றாக மறுத்துள்ளதுடன், மேற்குலக ஊடகங்கள் இவ்விவகாரத்தை தமக்கு சார்பாக பயன்படுத்த பார்க்கின்றன. அவர் ஒரு பாலியல் பலாத்கார குற்றவாளி, மற்றவர்களை மதம் மாற்றுகிறார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அல்ல, பணம்பறிப்பு மற்றும் ஏனைய சில குற்றங்களுக்காகவே அவருக்கு தண்டனை வழங்கப்படவிருக்கிறது என்கிறார்.

நதர்கானி தொடர்பான வழக்கு நீதிமன்றில் நடைபெற்ற போது, ‘என்னை மொஹ்மட் என அழைக்க வேண்டாம், நான் இஸ்லாமியன் அல்ல, கிறிஸ்தவன்’ என நதர்கானி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

நதர்கானியின் வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கையில், இவ்வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. நதர்கனிக்கு மரணதண்டனை வழங்கப்படாதிருப்பதற்கு 95% வீதம் வாய்ப்பிருக்கிறது. ஈரான், மத மாற்றத்திற்கு தூக்குதண்டனை வழங்கும் நாடல்ல’ என்றார்.

2010 நொவெம்பரில் கிறிஸ்தவ மதம் மாறிய நதர்கானி, ஈரானின், வீட்டு தேவாலயங்களின் நெட்வேர்க் தலைவராக இருக்கிறார். இதேவேளை நதர்கானிக்கு எதிராக மரணதண்டனை வழங்கப்படும் அபாயம் குறித்து அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் நேற்று வெள்ளிக்கிழமை விடுத்த அறிவிப்பில், ஈரானிய அரசின் போலியான அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிரான அனைத்து ஈரானியர்களுக்கும் அமெரிக்கா ஆதரவு தருகிறது. அவரவர் மத நம்பிக்கை என்பது உலகளாவிய உரிமை, ஈரானிய அரசு, நதர்கானியின் நம்பிக்கையை துறக்குமாறு, கட்டாயப்படுத்தி அறிவிக்க முயல்கிறது. இது மத காலாச்சாரத்தை மீறும் செயல். நாகரீகம் தொடர்பில் ஈரான் தனது சொந்த சர்வதேச கட்டுப்பாட்டு விதிகளின் எல்லையை தாண்டி நடக்க முயற்சிக்கிறது என குற்றம் சுமத்தினார்

source:4tamilmedia

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s