Daily Archives: ஒக்ரோபர் 4, 2011

குட்டைப் பாவாடையுடன் ஆர்ப்பாட்டம்’

குட்டைப் பாவாடையுடன் பெண்கள் போராட்டம்

குட்டைப் பாவாடையுடன் பெண்கள் போராட்டம்

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் குட்டைப் பாவாடைகளை அணிந்த பெண்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

அண்மையில் ஒரு பெண்ணை ஒரு குழு கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதற்கு, அந்தப் பெண் அணிந்திருந்த ஆடைகளே காரணம் என்று நகர ஆளுனர் கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை அந்தப் பெண்கள் செய்திருக்கிறார்கள்.

”குட்டைப்பாவாடை அணிவது எனது உரிமை, நான் எப்படி உடை அணிவது என்பதை எனக்கு நீ சொல்லாதே…., பாலியல் வல்லுறவு செய்பவர்களை நிறுத்தச் சொல்லு…” என்று எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.

”தாம் பாலியல் வல்லுறவு உள்ளாவதைத் தவிர்ப்பதற்கு பெண்கள் பொதுப் பேருந்துகளில் குட்டைப் பாவாடை அணிவதை நிறுத்த வேண்டும்” என்று ஜகார்த்தா நகர ஆளுனர் பௌசி போவா வெள்ளியன்று கூறியிருந்தார்.

அவர் உடனடியாக மன்னிப்புக் கோரிவிட்டார். ஆனால் அவர் கூறிய கருத்து பரவலாக பிரசுரமாகிவிட்டது.

source:bbc.co.uk

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ஈரானில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மதம் மாற்ற விவகாரம்!

ஈரானில் கிறிஸ்தவ மதகுரு ஒருவர் எதிர்நோக்கியுள்ள மரணதண்டனை தீர்ப்பு பெரும் சர்ச்சையை

ஏற்படுத்தியிருக்கிறது. யூசுஃப் நதர்கனி எனும் கிறிஸ்த்தவ மதகுருவான இவருக்கு, பாலியல் பலாத்காரம் மற்றும் பணம் பறிப்பு குற்றச்சாட்டின் கீழ் மரணதண்டனை விதிக்கப்படவுள்ளது.

எனினும் இவர் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து மதம் மாறியதற்காகவும், மத எதிர்ப்பு பிரச்சாரம் செய்தமைக்காகவுமே மரணதண்டனை வழங்கப்படவிருப்பதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

கிலான் மாகாணத்தின் துணை ஆளுனர், கொலோமாலி ரெஷ்வானி இதனை முற்றாக மறுத்துள்ளதுடன், மேற்குலக ஊடகங்கள் இவ்விவகாரத்தை தமக்கு சார்பாக பயன்படுத்த பார்க்கின்றன. அவர் ஒரு பாலியல் பலாத்கார குற்றவாளி, மற்றவர்களை மதம் மாற்றுகிறார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அல்ல, பணம்பறிப்பு மற்றும் ஏனைய சில குற்றங்களுக்காகவே அவருக்கு தண்டனை வழங்கப்படவிருக்கிறது என்கிறார்.

நதர்கானி தொடர்பான வழக்கு நீதிமன்றில் நடைபெற்ற போது, ‘என்னை மொஹ்மட் என அழைக்க வேண்டாம், நான் இஸ்லாமியன் அல்ல, கிறிஸ்தவன்’ என நதர்கானி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

நதர்கானியின் வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கையில், இவ்வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. நதர்கனிக்கு மரணதண்டனை வழங்கப்படாதிருப்பதற்கு 95% வீதம் வாய்ப்பிருக்கிறது. ஈரான், மத மாற்றத்திற்கு தூக்குதண்டனை வழங்கும் நாடல்ல’ என்றார்.

2010 நொவெம்பரில் கிறிஸ்தவ மதம் மாறிய நதர்கானி, ஈரானின், வீட்டு தேவாலயங்களின் நெட்வேர்க் தலைவராக இருக்கிறார். இதேவேளை நதர்கானிக்கு எதிராக மரணதண்டனை வழங்கப்படும் அபாயம் குறித்து அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் நேற்று வெள்ளிக்கிழமை விடுத்த அறிவிப்பில், ஈரானிய அரசின் போலியான அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிரான அனைத்து ஈரானியர்களுக்கும் அமெரிக்கா ஆதரவு தருகிறது. அவரவர் மத நம்பிக்கை என்பது உலகளாவிய உரிமை, ஈரானிய அரசு, நதர்கானியின் நம்பிக்கையை துறக்குமாறு, கட்டாயப்படுத்தி அறிவிக்க முயல்கிறது. இது மத காலாச்சாரத்தை மீறும் செயல். நாகரீகம் தொடர்பில் ஈரான் தனது சொந்த சர்வதேச கட்டுப்பாட்டு விதிகளின் எல்லையை தாண்டி நடக்க முயற்சிக்கிறது என குற்றம் சுமத்தினார்

source:4tamilmedia

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சுவாரஸ்யமான தகவல்கள்

ஒரு மீட்டர் தூரத்தை ஒரு வினாடியில் கடக்கும் ஆறு கால்களை கொண்ட ஒரே விலங்கு கரப்பான் பூச்சி மட்டுமே.

ஒரு வேளை அது மனிதன் அளவுக்கு உருவம் கொண்டிருந்தால் அது ஒரு மணி நேரத்தில் 300 மைல்களை கடக்கும்.

கண்ணாடி உடையும் போது சிதறும் துகள்கள்,எந்த திசையிலிருந்து விசை வந்ததோ அதன் எதிர் திசையிலேயே சிதறும் .

இங்கிலாந்தில் சபா நாயகருக்கு பேச அனுமதி இல்லை.

முதலைகள் கற்களையே விழுங்கும் திறன் பெற்றவை.அது அதனை ஆழத்தில் நீந்த உதவுகின்றன.

எந்த மனிதனாலும் தும்மும் பொழுது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது.

முதலை பிடியில் இருந்து தப்பிக்க, அதன் கண்விழிகலில் உங்கள் கட்டைவிரலை விட்டு நீங்கள் உடனடியாக தப்பிக்கலாம்.

ஒரு பெண் கானாங்கெளுத்தி (மீன்) ஒரே நேரத்தில் 500000 முட்டைகளை இடுகிறது.

கடல் அனைத்தும் தங்கம் கிடைக்கிறது என்றால் பூமியில் உள்ள வொவ்வொரு மனிதனுக்கும் 20 கிலோ தங்கம் கிடைக்கும்.

சூரிய கிரகணத்தின் அதிகபட்ச எண்ணிக்கை (பகுதி,வருடாந்திர அல்லது மொத்த) வருடத்திற்கு 5 உள்ளது.

ஒரு சராசரி மனிதனுக்கு பிறக்கும் போது 300 எலும்புகள் இருக்கும்.வயதாகும் போது அது 206 ஆக குறைந்துவிடும்.

உடலின் அளவை விட விகிதச்சாரத்தில் மூளை அளவு பெரிதகக்கொண்ட உயிரினம் எறும்பு.

இரத்த சிவப்பணுக்கள் உடலை சுற்றிவர 20 வினாடிகள் ஆகும்.

தினமும் 12 குழந்தைகள் தவறான பெற்றோர்களிடம் கொடுக்கப்படுகிறது.

கரப்பான் பூச்சிகள் அதன் தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயர் வாழம் ஆற்றல் பெற்றது.

பூனைகளால் நூற்றுக்கும் மேற்பட்ட குரல் ஒலிகளை உருவாக்க முடியும். ஆனால் நாய்களால் பத்து வித குரல் ஒலிகளை மட்டுமே உருவாக்க முடியும்.

மனித பற்கள் பாறைகள் போல கடினமாக உள்ளன.

பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும், ஆனால் பறக்க முடியாது.

அமெரிக்காவில் சுமார் 52.6 மில்லியனுக்கு மேற்பட்ட நாய்கள் இருக்கின்றன.

உலகில் மனிதர்களை விட அதிக கோழிகள் இருக்கின்றன.

அமெரிக்காவில் ஒவ்வொருவரிடமும் இரண்டு கிரெடிட் கார்ட்கள் உள்ளது.

உங்கள் இதயம் நாள் ஒன்றுக்கு 100,000 முறைகள் துடிக்கிறது.

பாலூட்டிகளில் யானைகளால் மட்டுமே குதிக்க முடியாது.

மின்சார நாற்காலியை ஒரு பல் மருத்துவர் கண்டுபிடித்தார்.

அமெரிக்கர்களில் 55% பேருக்கு மட்டுமே சூரியன் ஒரு நட்சத்திரம் என்று தெரியும்.

உங்கள் உடலில் உள்ள எலும்புகளில், கால் பங்கு உங்கள் பாதத்தில் இருக்கிறது.

நான்கு அமெரிக்கர்களில் ஒருவர் தொலைக்காட்சியில் தோன்றியுள்ளார்.

பூனையின் ஒவ்வொரு காதிலும் 32 தசைகள் உள்ளன.

சாதாரண வேகத்தில் பயணிக்கும் ஒரு முழுமையாக ஏற்ற சூப்பர் டேங்கர் நிறுத்த ஒரு குறைந்தது இருபது நிமிடங்கள் ஆகிறது.

source:a2ztamilnadu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized