இந்த வார டவுண்லோட் – மெமரி சோதனை


ComputerWorkshop.jpg
கம்ப்யூட்டரில் ராம் மெமரி எந்த வகையில் எவ்வளவு பயன்படுகிறது என்று அறிந்து கொள்வது, நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டை நெறிப்படுத்த நமக்கு உதவும். இப்போதெல்லாம், அப்ளிகேஷன் புரோகிராம்கள் இயங்க அதிகமான அளவில் மெமரியை எடுத்துக் கொள்கின்றன. எனவே இயங்கும் புரோகிராம்கள் அதிகமாகும் போது, கம்ப்யூட்டரின் செயல்பாடு சற்று தடுமாறுகிறது. நாமும் தேவையற்ற புரோகிராம்களை, ராம் மெமரியில் ஏற்றி வைத்து, கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை மிகவும் மந்த நிலையில் இயங்க வைப்போம். மெமரி பயன்பாடு நமக்குத் தொடர்ந்து காட்டப்பட்டால், அதற்கேற்ப புரோகிராம்களின் இயக்கத்தினை நிறுத்தித் தேவைப்பட்ட புரோகிராம்களை மட்டும் இயக்கலாம். இதற்கான சில மெமரி கண்காணித்துக் காட்டும் புரோகிராம்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றை இங்கு காணலாம்.
1.Mem Info: மெம் இன்போ எனப்படும் இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. இதனை டவுண்லோட் செய்து இயக்கிவிட்டால், அது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொண்டு, மெமரி மற்றும் சிபியு பயன்பாட்டினைத் தொடர்ந்து கண்காணிக்கிறது. மெமரி பயன்பாட்டினை வண்ணக் குறியீட்டில் காட்டுகிறது. மெமரியைப் பயன்படுத்துவது சற்று அதிகமாகும் போது நம்மை எச்சரிக்கிறது. எந்த அளவில் எச்சரிக்கை செய்திட வேண்டும் என்பதனையும் இதில் செட் செய்துவிடலாம். மெமரியை டிபிராக் செய்திடும் வசதியும் இதில் உண்டு. சிஸ் ட்ரே மீட்டர் போல இது செயல்படுகிறது. அண்மையில் வெளி வந்த இதன் பதிப்பு, வண்ணக் குறியீடுகளுடன் நமக்கு தகவல்களைக் காட்டுகிறது. இதனைப் பெற http://www.carthagosoft.net/meminfo.htm என்ற தளத்திற்குச் செல்லவும்.
2.Performance Monitor: இந்த புரோகிராம், மெமரி பயன்பாட்டினைச் சோதனையிடுவதுடன், டிஸ்க் மற்றும் நெட்வொர்க் பயன்பாட்டினையும் சோதனையிடுகிறது. இதுவும் சிஸ்டம் ட்ரேயில் இருந்து செயல்படுகிறது. ராம் மெமரி, டிஸ்க் பயன்பாடு மற்றும் நெட்வொர்க் செயல்பாட்டினை, திரையின் மேல் புறத்தில் காட்டுகிறது. இந்த புரோகிராமினை www.hexagora.com/en_dw _davperf.asp என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
3.FreeRAM XP Pro: இந்த புரோகிராம் கூடுதல் வசதிகள் பல கொண்டதாக இயங்குகிறது. மெமரியினைக் கண்காணிப்பதுடன், மெமரியின் வேகத்தினை அதிகப்படுத்தவும் செய்கிறது. தானாகவே மெமரியில் உள்ள தேவையற்றவற்றை விலக்குகிறது. எந்த புரோகிராம்கள் மெமரியினைப் பயன்படுத்துகின்றன என்று காட்டுகிறது. என்ன நடக்கிறது என்று தகவல் தருகிறது. மெமரியினைச் சுருக்கிப் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தினையும் பயன்படுத்துகிறது. இதனைப் பெற http://www.yourwaresolutions.com/ software.html#framxpro என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s