குர்‍ஆனின் அத்தியாயங்கள் மொத்தம் எத்தனை? 114 அல்லது 116 ?

குர்‍ஆனின் அத்தியாயங்கள் மொத்தம் எத்தனை? 114 அல்லது 116 ?

சூரா ஹப்த் மற்றும் க்ஹல்

உபை இப்னு கஅப் அவர்களின் மூல குர்ஆன் பிரதியிலிருந்த இரண்டு குர்ஆன் சூராக்கள்

Surata al-Hafd and al-Khal’(from Ubayy ibn Ka`b’s Qur’an codex)

குர்‍ஆனில் எத்தனை அத்தியாயங்கள் உண்டு? மொத்தம் 114 என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். ஆனால், முஹம்மதுவின் தோழரும், முஹம்மதுவின் நெருங்கிய வட்டாரங்களில் ஒருவராக இருந்தவரும், மற்றும் மூல குர்‍ஆனின் கைப்பிரதியை வைத்திருந்தவர்களில் ஒருவருமாகிய “உபை இப்னு கஅப் ” என்பவரிடம் 116 அதிகாரங்கள் (சூராக்கள்) இருந்தன. உஸ்மான் குர்‍ஆனை தொகுப்பதற்கு முன்பு இவரிடம் இரண்டு அதிகாரங்கள் அதிகபடியாக இருந்தன. அவைகளை அஸ்ஸூயுதி என்பவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு சூராக்களும் குர்‍ஆனின் முதல் சூராவாகிய அல் பாத்திஹா போலவே ஒரு வேண்டுதல் வடிவில் உள்ளது.

இவைகள் பற்றி மேலும் அறிய இக்கட்டுரையின் கடைசியில் தரப்பட்டிருக்கும் இரண்டு தொடுப்புக்களை படிக்கவும்.

Surat al-Hafd

You (alone) we worship,
and to You (alone) we pray and lie prostrate,
and to You (alone) we proceed and have descendants.
We fear Your torture and hope for Your mercy.
Truly Your torture will overtake the infidels.
உன்னை (மட்டுமே) நாங்கள் வணங்குகிறோம்
உன்னை (மட்டுமே) நாங்கள் தொழுகிறோம் மற்றும் விழுந்து வணங்குகிறோம்
உன்னிடமிருந்து (மட்டுமே) நாங்கள் வந்தோம்
உன்னுடைய தண்டனைக்கு பயப்படுகிறோம் மற்றும் உன்னுடைய கிருபை மீதே நம்பிக்கைகொண்டுள்ளோம்
உண்மையாகவே உன்னுடைய தண்டனை காபிர்களை பிடிக்கும்

Surat al-Hafd

O Allah, You (alone) we ask for help and forgiveness.
We speak appreciatingly of Your goodness.
Never do we disbelieve You.
We repudiate and disbelieve anyone who follows immorality.
ஓ அல்லாஹ், உன்னிடம் (மட்டுமே) நாங்கள் உதவியையும் மன்னிப்பையும் கேட்கிறோம்
நாங்கள் உன்னுடைய நன்மைகளை புகழ்ந்து பேசுகிறோம்
நாங்கள் உன்னை மறுதலிக்கமாட்டோம்
தீயவர்களை பின்பற்றுபவர்களை நாங்கள் நிராகரிக்கிறோம் அவர்களை நம்பமாட்டோம்.

மூலம்: 1) THE CODICES OF IBN MAS’UD AND UBAYY IBN KA’B 2) Surata al-Hafd and al-Khal’


மூல குர்‍ஆன் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள்:

குர்‍ஆன் எப்படி தொகுக்கப்பட்டது, யார் யாரிடம் எத்தனை அத்தியாயங்கள் இருந்தன, எப்படி உஸ்மான் குர்‍ஆனை தொகுத்தார் மற்றும் அனேக விவரங்களை அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்.

1. Evidence of Change Before ‘Uthman

உஸ்மானின் தொகுப்பிற்கு முன்பு மூல குர்‍ஆனில் இருந்த மாற்றங்களுக்கான ஆதாரங்கள்

ஏன் உஸ்மான் மற்ற குர்‍ஆன் மூல பிரதிகளை அழித்துவிடும் படி விரும்பினார்? இதர குர்‍ஆன்களில் இருக்கும் வேறுபாடுகள் எவ்வளவு பெரியவைகளாக இருந்திருந்தால், உஸ்மான் இதர குர்‍ஆன்களை அழிகக்ச் சொல்லியிருப்பார்? இப்னு மஸூத் தன் கைப்பிரதி மூல குர்‍ஆனை ஏன் அழித்துவிடும் படி கொடுக்கவில்லை? உஸ்மான் தொகுத்த குர்‍ஆன் மற்றவர்களிடம் இருந்த குர்‍ஆனை விட உயர்ந்தது, தரம் வாய்ந்தது என்று நாம் எப்படி நம்புவது?

2. Evidence of Change After ‘Uthman

உஸ்லாமின் தொகுப்பிற்கு பிறகும் குர்‍ஆனில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்பதற்கான ஆதாரங்கள்

3. Hadiths which say the Qur’an is incomplete

குர்‍ஆன் முழுமையற்ற புத்தகம் என்பதை நிருபிக்கும் ஹதீஸ்கள்

குர்‍ஆனின் சில வசனங்கள் தொலைந்துவிட்டன, மறக்கப்பட்டுவிட்டன மற்றும் இரத்து செய்யப்பட்டு விட்டன என்பதை காட்டும் குர்‍ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்கள்.

Some Muslims are of the conviction spurious verses have been added:

4. Hadiths which refer to lost suras

தொலைந்துப்போன குர்‍ஆன் அத்தியாயங்கள்

தற்போதையை குர்‍ஆனில் இல்லாத அத்தியாயங்கள் பற்றி ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. குர்‍ஆன் மாற்றப்பட்டுள்ளது என்பதை இந்த ஹதீஸ்கள் மூலமாக அறியலாம்.

5. Variants which exist in present-day manuscripts

நம்மிடமுள்ள குர்‍ஆன் கைப்பிரதிகளை ஒப்பிடும்போது காணப்படும் வேறுபாடுகள்

குர்‍ஆன் மூல கைப்பிரதிகளை ஒப்பிடும்போது, எல்லா மூல குர்‍ஆன்களும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை நிருபனமாகிறது. ஆக, குர்‍ஆன் சரியாக பாதுகாக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

Source: http://www.answering-islam.org/Quran/Text/index.html

கருத்துத் தெரிவிக்கவும்

இஸ்லாம், குரான், Uncategorized ன் கீழ் சேர்க்கப்பட்டது

ஷு வீச்சு -ராகுல் மீது

டேராடூன்: உத்தரகண்டில், தேர்தல்
பிரசார கூட்டத்தில் பங்கேற்ற
காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் மீது,
நேற்று வாலிபர் ஒருவர் ஷூவை
வீசினார். உடனடியாக அந்த வாலிபரை,
போலீசார் கைது செய்தனர். அன்னா
ஹசாரே அணியைச் சேர்ந்தவர்கள்
மீது, இரண்டு நாட்களுக்கு முன் ஷூ
வீசப்பட்ட நிலையில், தற்போது, ராகுல்
மீதும் ஷூ வீசப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில், வரும் 30ம்
தேதி, ஒரே கட்டமாக சட்டசபை
தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அந்தக் கட்சியின் பொதுச் செயலர் ராகுல், தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே முதல்கட்ட பிரசாரத்தை முடித்த அவர், தற்போது இரண்டாவது கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தூரத்தில் விழுந்த ஷூ : இந்நிலையில், டேராடூனில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் ராகுல் பங்கேற்ற போது, அவரை நோக்கி வாலிபர் ஒருவர், ஷூவை வீசினார். ஆனால் அந்த ஷூ, ராகுல் இருந்த இடத்திலிருந்து, 10 மீட்டர் தூரத்தில் விழுந்தது. உடன், ஷூ வீசிய கிஷன்லால் என்ற வாலிபரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என,

டேராடூன் போலீஸ் அதிகாரி கோஸ்வாமி கூறினார். ஷூ வீசிய வாலிபரை, காங்., தொண்டர்களும், மற்றவர்களும் தாக்க முற்பட்ட போது, "அவரைத் தாக்க வேண்டாம்’ என்றும் ராகுல் கேட்டுக் கொண்டார். பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, இரண்டு நாட்களுக்கு முன், உத்தரகண்ட் மாநிலத்தில், அன்னா ஹசாரே அணியினர் பிரசாரத்தைத் துவக்கிய போது, அங்குள்ள அரங்கம் ஒன்றில் அவர்களின் மீது ஷூ வீசப்பட்டது. அந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் முடிவதற்குள், ராகுல் மீது ஷூ வீசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.,வை விமர்சித்த ராகுல் : முன்னதாக, பல்வேறு தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசிய ராகுல், ஊழல் விவகாரம் தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்தார்

அப்போது அவர் கூறியதாவது: ஊழலை எதிர்த்துப் போராடுவதில், நாங்கள் அக்கறை காட்டவில்லை என, பா.ஜ., கட்சியினர் சொல்கின்றனர். ஆனால், தங்கள் கட்சி ஆளும் கர்நாடகா, சத்திஸ்கர், உத்தரகண்ட் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் நடக்கும் ஊழல்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சியோ, ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் உட்பட பலரை சிறைக்கு அனுப்பியுள்ளது. பலமான லோக்பால் மசோதாவை காங்., தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த மசோதா, பார்லிமென்டில் நிறைவேறவிடாமல், பா.ஜ., தடுத்து விட்டது. இவ்வாறு ராகுல் பேசினார்.

source:dinamalar

கருத்துத் தெரிவிக்கவும்

Uncategorized ன் கீழ் சேர்க்கப்பட்டது

அதிர்ச்சி தினமும் 4 மணி நேரம் தூங்கும் வீர ர்கள்

gallerye_121434862_382137.jpg

புதுடில்லி:எல்லைப் பாதுகாப்பு படையில் பணிபுரியும் பெரும்பாலான வீரர்கள், தினமும் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவதற்கு அனுமதிக்கப்படுவதாகவும், உயர் அதிகாரிகள், அவர்களை கடுமையாக திட்டுவதாகவும், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எல்லையைப் பாதுகாக்கும் பணியில், எல்லைப் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், பல்வேறு பிரச்னைகளால் மன அழுத்தத்துக்கு ஆளாகி, கடும் பாதிப்பிற்கு ஆளாவதாக அடிக்கடி தகவல் வெளியானது. இதையடுத்து, இவர்களின் பிரச்னைக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்த, மத்திய அரசு முடிவு

செய்தது.உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும், மத்திய போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு, இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகள், சமீபத்தில் உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட்டன. உள்துறை செயலர் ஆர்.கே.சிங், இந்த ஆய்வு முடிவை வெளியிட்டார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:எல்லைப் பாதுகாப்பு படையில், கான்ஸ்டபிள் போன்ற கடைமட்டத்தில் பணிபுரியும் வீரர்களில், 70 சதவீதத்தினர், தங்களுக்கு போதிய அளவில் ஓய்வு வழங்கப்படுவது இல்லை என, குறை கூறியுள்ளனர். ஒரு நாளைக்கு, நான்கு மணி நேரம் மட்டுமே

தூங்குவதற்கு, உயரதிகாரிகள் தங்களை அனுமதிப்பதாகவும் கூறுகின்றனர். தூக்கமின்மை காரணமாக, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், சிறிய அளவில் தவறு செய்தால் கூட, உயரதிகாரிகள், தங்களை கடுமையாகவும்,தரக் குறைவான வார்த்தைகளாலும் திட்டுவதாகவும் கூறியுள்ளனர்.
இதுபோன்ற மன அழுத்தத்தால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்ப்பதற்காக, உடனடியாக போதிய அளவில் மனநல ஆலோசகர்களை கொண்ட கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும். மேலும், வீரர்களிடம், உயரதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்வதைத் தவிர்க்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

source:dinamalar

கருத்துத் தெரிவிக்கவும்

Uncategorized ன் கீழ் சேர்க்கப்பட்டது

இஸ்லாமியர்களுடனான கிறிஸ்தவர்களின் மாபெ ரும் விவாதம்

கிறிஸ்துவுக்குள் நம்மால் நேசிக்கப்படுகிற நமது நண்பர்களில் சிலர் எடுத்திருக்கும் புதிய முயற்சி. இஸ்லாமிய சகோதரர்களுடன் நேரடியான விவாத அமர்வு.

இதன் வழியாக கர்த்தருடைய சுத்த சுவிஷேசம் அனைவருக்குள்ளும் அறிவிக்கப்பட வேண்டும். குறிப்பாக இஸ்லாமிய சகோதரருக்குள்ளே ஒரு தாக்கத்தை உண்டு பண்ண வேண்டும். இஸ்லாமிய சகோதரார்கள் இரட்சகருடைய இரட்சிப்பை அடைய வேண்டும்.

ஆத்தும பாரமுள்ள ஒவ்வொருவரும் இந்த அமர்வுக்காக…,
ஊக்கமாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

Isha+Jesu.jpg

நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்?

நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து. கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்.

உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.

கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள். 1பேது 3: 13…16

என்கிறதான வேதவசனத்தின்படி செயல்படுகிற நமது நண்பர்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மீண்டும் கேட்டுக்கொள்ளுகிறேன். ஆத்தும பாரமுள்ள ஒவ்வொருவரும் இந்த அமர்வுக்காக ஊக்கமாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

மேலும் முழுமையான விபரங்களுக்கு: – http://www.iemtindia.com/

source:krmchuch.blogspot

கருத்துத் தெரிவிக்கவும்

Uncategorized ன் கீழ் சேர்க்கப்பட்டது

சிங்களப் பெண் உதவியாளருடன் இலங்கை ஓட்டல ில் கருணா கும்மாளம் ( படங்கள் )

இலங்கையில் தமிழ் மக்களுக்காக போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரன் தலைமையிலான படையில் கிழக்கு மாகாண படையை நிர்வகிக்கும் கர்னல் பொறுப்பில் இருந்தவர் விநாகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா.

ஒரு கட்டத்தில் இவர் செய்த நிதிமுறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து பிரபாகரன் இவரைக் கண்டித்தார்.

உடனே தனது பொறுப்பில் இருந்த வீரர்களுடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய கருணா, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற தனி அமைப்பை தொடங்கினார்.

அத்துடன் விடுதலைப்புலிகள் இயக்க வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்தினார். பின்னர் ராஜபக்சே அரசிடம் விலைபோனார்.

கடந்த 2008ம் ஆண்டு ராஜபக்சே கட்சியில் சேர்ந்த கருணா, தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். பின்னர் 2009ம் ஆண்டு இவருக்கு தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சர் பதவியையும் ராஜபக்சே வழங்கினார்.

சொகுசு வாழ்க்கையை அனுபதிதுக்கொண்டிருக்கும் கருனா, அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் சென்று அங்குள்ள தமிழின ஆதரவாளர்களையும் சந்தித்து அவர்களையும் தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் கருணாவின் துரோகத்தை மறக்க தமிழர்கள் ஒருபோதும் தயாராக இல்லை. அவரை புறக்கணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி இலங்கை ஓட்டல் ஒன்றில் புத்தாண்டை மது விருந்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இவரது அலுவலகத்தில் அந்தரங்க பெண் உதவியாளராக இருப்பவர் சாந்தினி. இவருடன் மிக நெருக்கமாக ஆடிப்பாடி மகிழ்ந்துள்ளார் கருணா.

இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இவையெல்லாம் கருணா மீது ஏற்கவே உலகத்தமிழர்களுக்கு இருக்கும் கோபத்தை பன்மடங்கு அதிகரிக்கச்செய்துள்ளன.

கருணாவின் சுயரூபத்தை பாருங்கள் என்று தமிழர்கள் தங்கள் கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழினத்தை காட்டிக்கொடுத்தற்கு ராஜபக்சே கொடுத்த பரிசுதான் இந்த சிங்களப்பெண் சாந்தினி என்றும் கடுமையாக சாடியுள்ளனர்.

karunaa33.jpg

karunaa22.jpg

karunaa11.jpg

source:nakkheeran

கருத்துத் தெரிவிக்கவும்

Uncategorized ன் கீழ் சேர்க்கப்பட்டது

5 January, 2012 12:30

ghaziabad_hospital.jpg

சென்னை: பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள், ஆனால் இப்போதெல்லாம் நோய் வந்தால் சேர்த்து வைத்த, சொத்து பத்தெல்லாம் பறந்து போய் விடுமோ என அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. அந்தளவிற்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் பகல் கொள்ளையாக உள்ள நிலையில், தமிழகத்திலேயே முதன் முறையாக கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவமனை பொதுமக்களுக்கு பத்து ரூபாயில் நோய்க்கு தீர்வு தருகின்றனர்.
சென்னை தண்டையார்பேட்டை தாண்டவராயன் தெருவில் கடந்த 2010ல் சென்னை வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பியாரிலால் ஜெயினின் உதவியுடன் ஏழைகளுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று எண்ணிய சகுந்தலா என்பவரின் பெயரில் தொடங்கப்பட்டது தான் சகுந்தலா தேவி மகப்பேறு மருத்துவமனை. இம் மருத்துவமனை ரூ. மூன்று கோடி செலவில் பலரின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டது. பெண்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிப்பதில் பகுதி மக்களின் முதல் தேர்வாக இம்மருத்துவமனை உள்ளது.

இங்கு பிள்ளை பேறு பெறும் பெண்களுக்கு அனைத்து வித பரிசோதனைகளுடன், தேவைப்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சை மூலமாகவும் மிக குறைந்த செலவில் மகப்பேறு சிகிச்சை அளிக்கின்றனர்.
இன்று தலைவலி மற்றும் காய்ச்சல் வந்தால் கூட, மருத்துவரை அணுகினால் குறைந்தபட்சம் மருத்துவருக்கு நூறு ரூபாய் அழ வேண்டியிருக்கும். ஆனால் இங்கு மருத்துவ பரிசோதனைக்கு வெறும் பத்து ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், சுகப்பிரசவத்திற்கு ஆயிரம்ரூபாயாகவும், அறுவை சிகிச்சைக்கு ஆறாயிரத்து 500 ரூபாயும் கட்டணமாக பெறுகின்றனர். இந்த கட்டணங்கள் கூட, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினரின் சம்பளத் தேவைக்காக தான் வாங்கப்படுகிறது என மருத்துவமனை செயலரும், கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்க உயர்மட்டக்குழு உறுப்பினருமான மாரிமுத்து கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: மக்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று எண்ணியே இம்மருத்துவமனை

ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து ஓன்றரை ஆண்டாகி விட்டது. இதுவரை 827 பெண்களுக்கு சுகப்பிரசவமாகவும் அறுவைசிகிச்சை மூலமாகவும் மகப்பேறு வைத்தியம் பார்த்திருக்கிறோம்.
தினமும் வருகிற புறநோயாளிகளின் எண்ணிக்கை இதுவரை எண்பதாயிரத்தை தாண்டி விட்டது. இங்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் இ.சி.ஜி., உள்ளிட்ட மகப்பேறுக்கு தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்துள்ளோம். இம்மருத்துவமனைக்கு என்றுஇதுவரை விளம்பரம் கூட செய்தது கிடையாது. எல்லாம் மக்களின் பூரண நிம்மதியே எங்களுக்கு விளம்பரமாக அமைந்து வருகிறது. ஆந்திராவிலிருந்து கூட இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் இயங்கும் இம்மருத்துமனையில் பெறப்படும் குறைந்த கட்டணங்கள் கூட மருத்துவர்களின் சம்பளத் தேவைக்காக மட்டுமே வாங்கப்படுகிறது. சிகிச்சையை பொறுத்தமட்டில் மக்களுக்கு இலவசம் என்றே சொல்லலாம். தமிழகத்திலேயே ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மருத்துவமனை நடத்தப்படுவது இங்கு தான் உள்ளது என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

source:dinamalar

கருத்துத் தெரிவிக்கவும்

Uncategorized ன் கீழ் சேர்க்கப்பட்டது

குரங்கை காப்பாற்ற போராடிய சூளகிரி மக்கள ின் மனிதாபிமானம்

Tamil_News_large_375899.jpg

ஓசூர்: சூளகிரி கோவிலில், குரங்கு ஒன்றின் தொண்டையில் தேங்காய் சிக்கியதால், உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்ற, பக்தர்கள் சிகிச்சைக்கு எடுத்துச் சென்றனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் குரங்கு இறந்ததால், சோகமடைந்த பக்தர்கள், குரங்கின் உடலுக்கு மாலை அணிவித்து அடக்கம் செய்தனர்.

சூளகிரி அருகே, பஜார் தெருவில், செல்லாபிரியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளன. இந்த கோவில் வளாகத்தில், குரங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், பூஜையில் படைத்த, பழங்கள், தேங்காய் மற்றும் உணவு பண்டங்களை குரங்குக்கு வழங்குவர். நேற்று, வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பக்தர்கள், குரங்குக்கு, தேங்காய் வழங்கியுள்ளனர்; அவற்றை, குரங்குகள் எடுத்து சாப்பிட்டன. தேங்காய் சாப்பிட்ட ஒரு குரங்குக்கு, அது, தொண்டையில் சிக்கியதால், கீழே விழுந்து, கோவில் வளாகத்தில், துடிதுடித்து உயிருக்கு போராடியது. இதை பார்த்த மற்ற குரங்குகள், அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டன. இதனால், பக்தர்கள், உயிருக்கு போராடிய குரங்கை மீட்டு, காப்பாற்ற முயன்றனர். வாணியர் தெருவை சேர்ந்த சிவக்குமார் என்பவர், குளிர்பானம் வாங்கி வந்து குரங்கு வாயில் ஊற்றி, தனது மூச்சை அதன் வாயில் செலுத்தி காப்பாற்ற, பல்வேறு வகையில் முயற்சி செய்தார்.

குரங்கு மயக்கமடைந்ததால், கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். டாக்டர் சீனிவாசனும், உயிருக்கு போராடிய குரங்குக்கு ஊசி போட்டு காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல், சிறிது நேரத்தில் குரங்கு இறந்தது. இதனால் சோகமடைந்த பக்தர்கள், இறந்த குரங்கின் உடலுக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன்பின், கோவிலுக்கு அருகே உள்ள நிலத்தில், இறந்த குரங்கின் உடலை அடக்கம் செய்தனர். இச்சம்பவம், சூளகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

source:dinamalar

கருத்துத் தெரிவிக்கவும்

Uncategorized ன் கீழ் சேர்க்கப்பட்டது

பிரான்ஸ் அரசு வெளியிட்ட புலிகள் தலைவர் ப ிரபாகரனின் முத்திரை

புலிகள் தலைவர் பிரபாகரனின் முகத்துடன் முத்திரை வெளியிட்ட பிரான்ஸ் அரசு

பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன

இவற்றுள் தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய மிருகம், தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன.

எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம்.

இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்.

source:nerudal

கருத்துத் தெரிவிக்கவும்

Uncategorized ன் கீழ் சேர்க்கப்பட்டது

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்று வர நிதியு தவி – ஜெயலலிதா அறிவிப்பு

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்று வர அரசின் சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், ஜெயலலிதா உரை நிகழ்த்தினார். அப்போது, அவர் இதைத் தெரிவித்தார். அவர் ஆற்றிய உரை விவரம்:

அன்பின் உருவமாகவும், கருணையின் வடிவமாகவும் விளங்கும் இயேசு பெருமான் அவதரித்த நாள் கிறிஸ்துமஸ் திருநாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.‘பகைவனுக்கும் அருளுங்கள்’; ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு’ போன்ற ஏசுபிரானின் அருள் வசனங்கள் அழியாப் புகழ் பெற்றவை. இயேசு பெருமானின் காந்த விழிகளும், அவரது அன்பு ததும்பும் மொழிகளும் உலகப் பிரசித்தி பெற்றவை. தன்னை சிலுவையில் அறைந்தவர்களைக் கூட மன்னிக்கும்படி பரம பிதாவிடம் மன்றாடியவர் இயேசுபிரான். மன்னிப்பதன் மூலம் மன்னிக்கிறவர் மட்டுமல்லாமல், மன்னிக்கப்படுகிறவரும் உயருகிறார். இதற்கு எடுத்துக்காட்டாக, உங்களுக்கெல்லாம் ஒரு சிறிய சம்பவத்தை கூற விழைகிறேன். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன், மன்னித்து அருளுவது என்ற கொள்கையில் மிக உறுதியாக இருந்தார்.நீதிமன்றங்கள் மரண தண்டனையை விதித்தாலும், அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த தண்டனையை குறைத்து விடுவார். அதற்காக அவரைப் பலர் விமர்சனம் செய்தனர். ஒரு நாள் அவர், போர்க்களத்தை பார்வையிட்ட போது, ஒரு ராணுவ வீரன் தன் கழுத்தில் இருந்த செயின் பேழையை முத்தமிட்டபடி செத்துக் கிடந்ததைப் பார்த்தார்.

அதில் அவனது மனைவி அல்லது காதலி படம் இருக்கலாம் என்று கருதி அதை எடுத்துப் பார்த்தார் ஆபிரகாம் லிங்கன். அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. காரணம், அதில் இருந்தது ஆபிரகாம் லிங்கனின் படம். அந்த ராணுவ வீரன் குறித்து விசாரித்த போது, அவன் மரண தண்டனை பெற்ற குற்றவாளி; ஆபிரகாம் லிங்கனால் மன்னிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்றிருந்தான். போர் வந்ததும் சிறைக் கைதிகளுக்கு ராணுவப் பயிற்சி தரப்பட்டு, போரில் ஈடுபடுத்தப்பட்டனர். போரில் அவன் நாட்டுக்காக தன் உயிரைத் துறந்து தியாகி ஆகிவிட்டான் என்பது தெரிய வந்தது.இதை நான் இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், அனைவரும் பழியுணர்ச்சி இன்றி, பகை இன்றி, சுயநலம் இன்றி, அன்புடனும், அமைதியுடனும், தியாக உணர்வுடனும் வாழ வேண்டும் என்பதற்காகத் தான்.சுயநலத்துடன் வாழும் வாழ்க்கை ஆரம்பத்தில் இனிக்கும்; பின்பு கசக்கும். சுயநலமின்றி பிறருக்காக வாழும் வாழ்க்கை; விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கை; ஆரம்பத்தில் கசப்பாக இருந்தாலும் முடிவில் இனிமையாக இருக்கும். “தியாகம் செய்தவர்கள் தியாகம் செய்து இருக்கிறோம், என்ற எண்ணத்தையும், தியாகம் செய்தால் தான் தியாகம் பூரணம் அடைகிறது”, என்ற தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் அமுத மொழியையும் உங்களுக்கு இந்தத் தருணத்தில் எடுத்துக் கூறி; இயேசு நாதரின் போதனைகளான, தியாகம், மன்னிப்பு, அன்பு, சகோதரத்துவம், சமாதானம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினை தெரிவித்துக் கொண்டு, தமிழ் நாட்டில் அமைதி நிலவவும்; தொழில் மற்றும் விவசாய உற்பத்தியில் புரட்சி ஏற்படுத்தவும்; மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடையவும்; அனைத்துத் துறைகளிலும் தமிழ் நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கவும்; எனது அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவை கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கொண்டாடிய போது ஒரு சில வாக்குறுதிகளை நான் உங்களுக்கு அளித்திருந்தேன். அதன் அடிப்படையில், கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான, ஜெருசலம் சென்று வருவதற்கு, அரசு நிதி உதவி அளிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டம் அனைத்து கிறிஸ்துவப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக அமையும். முதற்கட்டமாக, 500 கிறிஸ்தவர்கள் ஜெருசலம் சென்று வர ஏற்பாடு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்களின் நல்லாதரவுடன், இறைவனின் திருவருளால், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நான், உங்களது இதர கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றுவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்; ஒவ்வொரு மனிதனும் என் சகோதரன் என்ற பாச உணர்வோடு பயணிப்போம்; இறைமகன் இயேசுபிரான் தன் பிறப்பிலும், வாழ்விலும் நமக்குக் கூறும் நற்செய்தியின்படி வாழ்ந்து; உலகை மகிழ்ச்சிப் பூங்காவாக மாற்றுவோம்; யார் எனக்கு எதைச் செய்தாலும், நான் எல்லோருக்கும் நன்மையே செய்வேன்” என்ற அர்ப்பணிப்பு உள்ளத்தோடு வாழ்வோம் என்பது தான் அனைவருக்கும் நான் கூறும் கிறிஸ்துமஸ் செய்தியாகும்.

இன்றைய தினம் இந்த விழாவில் நேரம் போனதே தெரியவில்லை. நீங்கள் அனைவரும் என் மீது பொழிந்த அன்பையும், இங்கே மேடையில் பேசிய பேராயர்களும், பிஷப்புகளும், கிறிஸ்தவ மத பெரியவர்களும் என் மீது பொழிந்த ஆசீர்வாதங்களை கேட்கும் போது, உள்ளபடியே நான் பூரிப்படைகிறேன். அது மட்டுமல்ல, இன்று மிக இனிமையாக பாடல்களை பாடி அசத்திய இளம் தங்கைகளுக்கும், தம்பிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, சர்ச் பார்க் கான்வென்ட்டில் இருந்து வந்திருக்கின்ற மாணவிகள் பாடிய இனிமையான பாடல்களைக் கேட்கும் போது, என்னுடைய பள்ளி நாட்கள் என் நினைவுக்கு வந்தன. எத்தனையோ முறை இந்த தங்கைகளைப் போல் நானும் அங்கே பள்ளிக் கூட மேடையில் நின்று கிறிஸ்துமஸ் பாடல்களை பாடி இருக்கிறேன். அனைவர் வாழ்விலும் அமைதியும், ஆனந்தமும் தவழட்டும்! மகிழ்ச்சி பொங்கட்டும்! செல்வம் செழிக்கட்டும்! அமைதி நிலவட்டும்! என்று வாழ்த்தி; அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்…- இவ்வாறு முதல்வரின் உரை அமைந்திருந்தது.

source:4tamilmedia

கருத்துத் தெரிவிக்கவும்

Uncategorized ன் கீழ் சேர்க்கப்பட்டது

முல்லை பெரியாறு அணை – உண்மை நிலை என்ன

Tamil_News_large_326840.jpg

அடுத்த உலகப்போர், தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்ற அனுமானம் உண்மையாகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது முல்லைப் பெரியாறு அணை விவகாரம். இரு மாநிலங்களுக்கு இடையேயான இந்த பிரச்னையில், கேரள அரசின் செயல்பாடு தேசிய ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக தொடரும் நிலையில், நதி நீர் விவகாரங்களில் தீர்க்கமான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு என அடுத்தடுத்து பிரச்னைகளில், அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சித்து வருகின்றன. இவற்றை தமிழக அரசியல் கட்சிகள், ஆட்சியில் இருப்போர் சில நேரங்களில், "சீரியசாகவும்’ பல நேரங்களில், "சீசன்’ விவகாரமாகவும் கையாண்டு வருகின்றனர்.

இதில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., – தி.மு.க., ஆகிய கட்சிகள் இருவகையான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.தி.மு.க.,வைப் பொறுத்தவரை நதிநீர் பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்வதிலேயே எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறது. எப்போதெல்லாம் பிரச்னை எழுகிறதோ, அப்போதெல்லாம் அமைச்சர்கள் நிலையில், அதிகாரிகள் நிலையில், முதல்வர்கள் நிலையில் என பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தைகள் நிரந்தர தீர்வை பெற்றுத் தராவிட்டாலும், அப்போதைக்கு பிரச்னையை தள்ளிப்போடவே உதவியாய் இருந்து வருகின்றன.ஆனால், அ.தி.மு.க., தரப்போ நீதிமன்றம் மூலம், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதில்தான் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை வைத்துள்ளது. அதற்கேற்பவே, காவிரியில் துவங்கி முல்லைப் பெரியாறு வரை தனது சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த இரு கட்சிகளின் நிலைப்பாட்டினால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்பதே தற்போதைய நிலை. பேச்சுவார்த்தை என்பது காலத்தை தள்ளிப்போடவே உதவியாக இருந்து வந்திருக்கிறது; அது அண்டை மாநிலங்களுக்கு சாதகமாக மாறி விடுகிறது. "திருவள்ளுவருக்கு பதிலாக சர்வக்ஞர்’ என்ற, "பார்முலா’வெல்லாம் அரசியல், "ஸ்டண்ட்’ காட்சிகள் எல்லாம் வரலாற்றுப் பக்கத்தில் நகைப்புக்குள்ளாக்கப்படும் என்பது உறுதி.
மறுபுறம், அ.தி.மு.க.,வின் சட்டரீதியான போராட்டமும் பல உத்தரவுகளை பெற்றுத் தந்துள்ளது. இந்த உத்தரவுகள் எல்லாம் பலனுக்கு வந்ததா என்றால் விடை பூஜ்யம்தான். காவிரி நடுவர் மன்றம், அது பிறப்பித்த உத்தரவு, அதை அரசு இதழில் வெளியிடுவது, நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு என சட்டப் போராட்டம் நீண்ட தொடர் கதையாய் நடந்தது… நடக்கிறது… நடக்கும்… என்பதுதான் உண்மை நிலை.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பிறகும், அதை கேள்விக்குள்ளாக்கும் வகையில், கேரள அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுகிறது. ஆனால், தமிழக சட்டசபையோ அந்த தீர்மானத்தை கண்டிப்பது தவறாகப் போய்விடும் என்பதால், தீர்மானம் குறித்து வருத்தத்தையே பதிவு செய்துள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் இந்த விவகாரங்களை சரியாக கையாளாததன் விளைவாகத்தான், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தோழமைக்கட்சி என்று எந்த கட்சியும் அழைக்காமல் லட்சக்கணக்கில் உணர்வுபூர்வமாக பொதுமக்கள் திரண்டு வரக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளன. இரு மாநில நதிநீர் பிரச்னை எல்லைப் பிரச்னையாக மாறியுள்ளது.

இரு மாநிலங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டால், அதை தீர்க்க வேண்டியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடு அதிர்ச்சியளிப்பதாய் மாறியுள்ளது. இரு மாநிலங்களின் பிரதிநிதிகளையும் பிரதமர் சந்திக்கிறார்; அவர்களது தரப்பு கருத்துக்களை கேட்கிறார்; தன் வருத்தத்தை பதிவு செய்வதோடு மத்திய அரசின் பங்களிப்பு முடிந்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக, நியாயத்தின் பக்கம் நிற்க முடியாத நிலையில் மத்திய அரசு இருக்கிறது.

நதி நீர் பிரச்னைக்கு தீர்வு காண உறுதியான நிலைப்பாடுகளை எடுத்தால் மட்டுமே, பிரச்னைகள் சுமூகமாக தீர்க்கப்படும். நதிகளை இணைப்போம் என்ற கோஷங்கள் உயிர்பெற்றபோது, "இது சாத்தியமில்லாத விஷயம்’ என்ற ஒருவரி, "கமென்ட்’டை காங்கிரசின் இளம்தலைவர் வெளியிட, உயிர்பெற்ற கோஷங்கள் மவுனித்து போய்விட்டது.
நதிநீர் பிரச்னை தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே தோன்றும் இது போன்ற மோதல்கள் தேச ஒற்றுமையை தகர்த்து விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த அச்சத்தை போக்க, அரசியல் வேறுபாடுகளை தவிர்த்து மத்திய அரசு துணிந்து எடுக்கும் நடவடிக்கைகள் தேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும். நதிநீர், அணைகள், நீர்வழிகள் என, அனைத்தையும் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் வகையில் சட்டத்தை திருத்தினால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.

source:dinamalar

1 மறுமொழி

Uncategorized ன் கீழ் சேர்க்கப்பட்டது

ஆப்பிள் ஐபேட்-2 மற்றும் சாம்சங் கேலக்ஸி டே ப்-750 ஒப்பீட்டு பார்வை

Apple ipad2 and Samsung Galaxy Tab750

சர்வதேச சந்தையில் ஆப்பிள் ஐபேடுக்கும், சாம்சங் கேலக்ஸி டேப்லெட்டுகளுக்கும் இடையிலான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு நிறுவனங்களின் டேப்லெட்டுகளுக்கும் வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.

இரண்டும் தரமான தயாரிப்புகள் என்றாலும், அதிலுள்ள சாதக பாதக அம்சங்களை ஆராய்ந்து வாங்குவதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும். இங்கே, சந்தையில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் ஒரே இனத்தை சேர்ந்த ஐபேட்-2 மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப்-750 ஆகிய இரண்டு டேப்லெட்டுகளின் ஒப்பீட்டு அலசலை காணலாம்.

ஆப்பிள் ஐபேட்-2 டேப்லெட் 8.8 மிமீ தடிமனில் ஸ்லிம்மாக ஜொலிக்கிறது. இது 1ஜிகாஹெர்ட்ஸ் ஆப்பிள் ஏ-5 பிராசஸருடன் 9.7 இஞ்ச் தொடுதிரையை கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்க வசதியாக வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் வருகிறது. அதேவேளை, சாம்சங் கேலக்ஸி டேப்-750 டேப்லெட் 10.9 மிமீ தடிமன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐபேட்-2 ஆப்பிள் ஐஓஸ் 4.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதில், 1ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் ஆப்பிள் ஏ-5 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளே எல்இடி பேக்கலைட்டுகளை கொண்டது. மேலும், கீறல்களிலிருந்து பாதுகாக்கும் கவச உறையும் கொண்டுள்ளது. ஹைடெபினிஷன் வீடியோ ரெக்கார்டிங் வழங்கும் பின்புற கேமரா மற்றும் வீடியோ சாட்டிங் செய்ய வசதியாக முகப்பு கேமராவையும் கொண்டுள்ளது.

இதேபோன்று, கேலக்ஸி டேப்-750யிலும் பின்புறம் 8.1 மெகாபிக்செல் கேமராவும், வீடியோ காலிங் வசதிக்கான முகப்பு கேமராவும் உள்ளது. ஆப்பிள் ஐபேட்-2 டேப்லெட்டில் 5 மடங்கு பெரிதாக்கி காட்டும் டிஜிட்டல் சூம் வசதி இருக்கிறது. ஆனால், கேலக்ஸி டேப்-750 டேப்லெட்டில் சூம் வசதி இல்லாதது மிகப்பெரிய குறையாக தோன்றுகிறது.

ஆப்பிள் ஐபேட்-2 டேப்லெட் 16ஜிபி,32ஜிபி மற்றும் 64 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட மூன்று மாடல்களில் கிடைக்கிறது. அதேவேளை, சாம்சங் கேலக்ஸி டேப்-750 டேப்லெட் 16ஜிபி இன்டர்னல் சேமிப்பு கலனை பெற்றுள்ளது. சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ளும் வசதிக்கான மெமரி கார்டு ஸ்லாட் கொடுக்கப்படாததால், சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ள முடியாது.

ஆப்பிள் ஐபேட்-2 நவீன தொடர்பு வசதிகளை அளிக்கிறது. 2.1 வெர்ஷன் ப்ளூடூத், வைஃபை உள்ளிட்ட நவீன தகவல் பரிமாற்ற வசதிகளை கொடுக்கிறது. இதே வசதிகளை சாம்சங் கேலக்ஸி டேப்-750 டேப்லெட்டும் வழங்குகிறது.

விலையை பொறுத்தவரை 16 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட ஆப்பிள் ஐபேட்-2 ரூ.22,500க்கும், 32ஜிபி ஆப்பிள் ஐபேட்-2 ரூ.27,000க்கும், 64 ஜிபி மெமரி கார்டு கொண்ட ஐபேட்-2 ரூ.31,500க்கும் கிடைக்கிறது. அதேவேளை, சாம்சங் கேலக்ஸி டேப்-750 டேப்லெட் ரூ.36,500 விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

source:tamilgizbot

கருத்துத் தெரிவிக்கவும்

Uncategorized ன் கீழ் சேர்க்கப்பட்டது