Category Archives: Uncategorized

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நிகழ்வுகள்! ந பிவழியில் செல்லும் உலகம்!

நம்ம தவ்ஹீத் அண்ணன் பிஜே அவர்களது இணையப்பக்கத்தில் அடிக்கடி நபிவழியில் செல்லும் உலகம். இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நிகழ்வுகள் என்று தலைப்பில், நம்ம மதுரை ஆதீனம் சொன்னதிலிருந்து, வாடிகன் போப்பாண்டவர் சொல்வதிலிருந்தும் எடுத்து போட்டு நம்மை புல்லரிக்க விடுவார்.

அதேபோல இன்னும் நிறைய நிகழ்வுகளை நம்ம தவ்ஹீத் அண்ணன் கண்டுகொள்ளவில்லை என்பதால், அந்த நிகழ்வுகளையும் போட்டு, எவ்வாறு நம்ம காககககே வழியில் உலகம் செல்லுகிறது என்பதை அறிந்து நாமும் புல்லரிப்போம்.

முதலாவது ரொம்ப ரொம்ப பழைய பதிவு என்றாலும் நம்ம ஈமாந்தாரிகளுக்கு நெஞ்சத்துக்கு நெருங்கிய ஹதீஸாகவும் நபிவழியாகவும் இருப்பதால், அதனை பார்ப்போம்

பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்

இந்த பதிவில் எப்படி போர் காலத்திலும் மற்ற காலத்திலும் பெண்களை கற்பழிப்பது என்று நமது காககககே நெஞ்சம் *ஞ்சம் நெகிழும் வண்ணம் எடுத்துரைத்திருக்கிறார்கள் என்று படித்து இறும்பூது எய்துகிறோம்.

நமது ஈமாந்தாரிகள் போர் புரியும் சிரியா நாட்டில் (போற்றுதலுக்குறிய ஷாம் நாடு என்று நமது ஹதீஸ்களில் அடிக்கடி வரும்)

Refugees Are Fleeing Mass Rapes In Syria என்ற செய்தியில் நமது ஈமாந்தாரிகள் (இது ஷியா வகையறா) எப்படி சுன்னி பெண்களை (கன்பூஸ் ஆகாண்டாம். சுன்னி என்பது இஸ்லாத்தில் ஒரு வகை) நபி வழியில் உட்டு ஆட்டுகிறார்கள் என்று அறிந்து புல்லரிக்கலாம்.

http://www.latimes.com/news/world/worldnow/la-fg-wn-syria-refugees-rape-20130114,0,7106644.story
http://www.npr.org/blogs/thetwo-way/2013/01/14/169353702/report-rape-in-syria-is-driving-women-to-leave
http://www.newser.com/story/160924/rape-a-weapon-of-war-in-syria.html
http://www.onislam.net/english/news/middle-east/460889-syrians-flee-rape-sell-bodies-for-food.html

இவ்வாறு போர்க்காலத்தில் சுன்னி பொண்ணுங்களை ஷியாக்கள் கற்பழிப்பது நபி வழி இன்னும் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கிறது என்பதற்கான நிகழ்கால நிரூபணமாக இருக்கிறது அல்லவா?

இவ்வாறு நபி வழியில் சுன்னி பெண்களை உட்டு ஆட்டும் ஈமாந்தாரிகளுக்கு பயந்து அங்கிருந்து சுன்னி பெண்கள் சிரியாவை விட்டு ஓடுகிறார்களாம். இப்படி ஓடும் பெண்கள் முஸ்லிமாக்களா இல்லை காபிர்களா என்று எனக்கே அவமானமாக போய்விட்டது.

ஒரு சில காபிர்களும், ஒரு சில ஈமாந்தாரிகளும் கூட சேர்ந்துகொண்டு இந்த கற்பழிப்புகளை தவறு என்று கூறுகிறார்கள். மீண்டும் நாம் நபி வழி சிந்தனையை நினைவு படுத்துகொள்வோம். சீ.. அழகிய போட உட்டுடிச்சி.. மீண்டும் நாம் அழகிய நபிவழி நெஞ்சம் நெகிழும் சிந்தனையை நினைவு படுத்திக்கொள்வோம்.

”நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!” என்று கூறினார்கள்.[புகாரி]

”அடே பதர்களே.. இன்றுதான் கணவனை இழந்திருக்கிறார்கள். பெற்ற பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள். இன்றுதான் பெற்ற தந்தையை இழந்திருக்கிறார்கள். அவர்களை போய் கற்பழித்து அடிமையாக விற்கிறேன் என்று சொல்கிறாயே உனக்கு மனிதாபிமானம் இருக்கிறதா?” என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

”இந்த பெண்களை கற்பழிக்கிறேன். உள்ளே விடலாமா? வெளியே விடலாமா? என்று கேட்கிறாயே? நீ ஒரு மனுஷனா? இதற்காகவா நீ மனிதனாக பிறந்தாய்? உன் மனைவியிடம் போய் உடலுறவு கொள். போரில் தோல்வியடைந்தால் என்ன? அவர்கள் மனிதர்கள் இல்லையா?” என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

உட்டு ஆட்டு கண்ணா ஆட்டு என்றுதானே ஈமாந்தாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்?

ஆகவே அந்த நபி வழியில் நாம் இந்த கற்பழிப்புகளை எப்படி நியாயப்படுத்தவேண்டும் என்று பார்க்கவேண்டுமே தவிர, நமது ஈமாந்தாரிகளின் நபிவழிச் செயல்களை அவமரியாதை செய்வது கூடாது.

ரிஸானாவை கழுத்து வெட்டும் போது நமது ஈமாந்தாரிகள் எப்படி அதனை போற்றி பாடினார்கள் என்று சிந்திக்க வேண்டும்.
//நீங்கள் ஷரீஆ சட்டப் படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம் பொறுமையை கடைப் பிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகிவிட்டீர்கள்.. //
//முழு உலகமும் அவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்ட போதிலும். அவரின் உயிர் இங்கேயே பிரிந்திட வேண்டும் என இறைவன் நாடியுள்ளான். //
//நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். 2:216//

இதே வழியில்,

இந்த சிரிய சுன்னி பெண்களுக்கு நபிவழியில் நடந்திருக்கும் கற்பழிப்புகளை ஏற்றுகொண்டிருக்கிறார்கள் என்பதை கேட்டு நாம் சந்தோஷம் அடைய வேண்டும். இதன் மூலம் பொறுமையை கடைபிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகியிருக்கிறார்கள்.

காபிர்கள் உலகம் முழுவதும் இந்த பெண்களை கற்பழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அந்த பெண்கள் அங்கேயே கற்பழிக்கப்பட வேண்டும் என்றே இறைவன் நாடியுள்ளான்.
நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். 2:216
ஆகவே இந்த கற்பழிப்புகள், கொலைகள் எல்லாம் நன்மைக்கு என்றுதான் ஈமாந்தாரிகள் ஏற்றுகொள்ள வேண்டும்.

இதே போல இந்தியாவின் காபிர்களும், ஓடும் பஸ்ஸிலெல்லாம் கற்பழிப்புகள் செய்து வருவது, நபி வழி எவ்வாறு காபிர்களுக்கும் பிடித்திருக்கிறது என்பதற்கு உதாரணமாக இருக்கிறதல்லவா?

(இந்த மாதிரி நியாயப்படுத்துவதெல்லாம் பெண்களை கழுத்தை அறுப்பதையோ, காபிர்கள் கழுத்தை அறுப்பதையோ முஸ்லீமாக்களை மற்ற ஈமாந்தாரி ஆண்கள் கற்பழிப்பதையோ நியாயப்படுத்தத்தான் உபயோகிக்க வேண்டும் என்பதையும் மறக்கக்கூடாது. நமது முஸ்லீம் ஆண்களை யாராவது அடித்தாலோ, காபிர்களை குண்டு வைத்து தாக்கியதற்காக நமது ஈமாந்தாரி ஆண் முஸ்லீம்களை காபிர்கள் கைது செய்தாலோ, நாம் நியாயப்படுத்த மாட்டோம். அல்லாஹ்மீது பழி போட்டுவிட்டு, இறைவனே அறிவான். இறைவனே தண்டனை தருவான், இறைவனே இவ்வாறு முஸ்லீம் ஆண்கள் செத்துப்போக காரணம் என்றா சொல்லிகொண்டிருப்போம்? இப்போதும் கூட, ஈராக்கிலும், சோமாலியாவிலும், மாலியிலும், ஆப்கானிஸ்தானிலும் கிறுத்துவ நஸரியாக்கள் ஈமாந்தாரி முஸ்லீம்களை கொன்று தள்ளிகொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் ‘இந்த ஈமாந்தாரிகளின் உயிர் இவ்வாறு பிரிந்திட வேண்டும் என இறைவன் நாடியுள்ளான்” என்றா லுலுலாயி பாடிக்கொண்டிருக்கிறோம்? குய்யோ முய்யோன்னு நாம கத்தலை? இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன!!! )

இப்படி நபி வழி இருக்கும்போது, தினந்தோறும் குரானையும் ஹதீஸையும் பாடம் படித்து பாடம் நடத்தும் இமாம்கள் மௌலானாக்கள் இந்த அழகிய நபிவழிகளை பின்பற்றுகிறார்களா என்றும் நாம் சிந்திக்க வேண்டும்.

அப்படி நமது தூய இஸ்லாத்து இமாம்களும் மௌலானாக்களும் இந்த நபி வழியை பின்பற்றுகிறார்களா என்று தேடியபோது காபிர் தஸ்லிமா நஸ்ரின் இணையப்பக்கம் கண்ணில் பட்டது.
http://freethoughtblogs.com/taslima/2013/01/06/muslim-priests-rape-children/

இந்த காபிர் பங்களாதேஷிலிருந்து வந்திருப்பதால், பங்காளி பத்திரிக்கைகளிலிருந்து நிறைய செய்திகளை போட்டிருக்கிறார்.
An Imam and his friends gang raped a girl in Narshingdi, Bangladesh

Sharia brutality on a raped girl in Bangladesh

Imam rapes ten-year-old girl

Bangladesh, a minor pregnant after rape: beaten and forced to marry her torturer

(ஒரு மைனர் பெண்ணை கற்பழித்து குழந்தை வேறு உண்டாகிவிட்டது. இதிலிருந்து ஆயீஷாவை ஒன்பது வயதில் நமது காககககே செய்தது அறிவியற்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றும் புல்லரிக்கலாம்)

நைஜீரியாவிலும் நமது இமாம்கள் நபிவழியை பின்பற்றுகிறார்களாம்
http://dailytimes.com.ng/article/imam-rapes-his-student

ஆப்கானிஸ்தானிலும் இது நடக்கிறது
http://www.rawa.org/temp/runews/2010/01/30/a-mullah-imam-arrested-for-raping-two-women.html

ஆனால், என்ன பிரச்னை என்றால், எல்லா இடங்களிலும் நமது நபிவழியை பின்பற்றும் இமாம்களையும் மௌலானாக்களையும் கைது செய்துவிடுகிறார்கள். இது நாம் இஸ்லாமை பின்பற்றுவதற்கு காபிர்கள் ஏற்படுத்தும் தடை என்பது உடனே உங்களுக்கு விளங்கியிருக்கும்.

நைஜீரியாவில் ஆட்சி செய்வது ஒரு கிறுத்துவம் பிடிச்ச காபிர்.
அதே போல ஆப்கனிஸ்தானிலும் அம்ரீக்காக்காரன் ஒரு பெயர்தாங்கி முஸ்லீமை வச்சிக்கிட்டு ஆட்சி செய்றான். அங்கே நமது தூய இஸ்லாத்து சகோதரர்களான தலிபான்கள் ஆட்சி செய்யவிடாமல் தடுக்கீறான்.
பங்களாதேஷ்ல ஆட்சி செய்றது ஒரு காபிர் இந்தியாவுக்கு சினேகிதமான ஒரு பொம்பளை.
ஆகவே இந்த நபி வழியை விட்டு விலகிய நாடுகள் தீய இஸ்லாத்து வழியில் .. சிச்சீ.. தூய இஸ்லாத்து வழியில் (எழவு இந்த கீபோர்டுல iயும் uஉவ்ம் பக்கத்துல இருந்து தொலைக்கீது) நபி வழி கற்பழிப்புகளை செய்யமுடியாமல் தடுக்கின்றன. இப்படிப்பட்ட எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல், சவுதி அரேபியா போன்ற தூய இஸ்லாத்து நாடுகளில் நம்ம இமாம்களை கற்பழிப்புக்காக கைது செய்வதில்லை.

இன்னும், நம்ம சவூதி எட்ஸட்ரா தூய இஸ்லாத்து இமாம்களும் மௌலானாக்களும் கற்பழிப்பின் சிறப்பை எடுத்தோம்பி எவ்வாறு யாரை கற்பழிக்கலாம் என்று பயான்களும் நடத்துகிறார்கள்.

சொல்லப்போனால் அதற்கு தேவையே இல்லை. காககககேவின் அருளாலும் பெட்ரோலியத்தின் அருளாலும், அம்ரீக்காவின் அருளாலும் பணம் கொழுத்துப்போன அரபு ஷேக்குகள் அஞ்சு லட்சத்துக்கு அஞ்சு அஞ்சு வயசு பொண்ணுங்களை அதிகாரப்பூர்வமாக மெஹர் விலை கொடுத்து மனைவி என்ற அடிமையாக வாங்க வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். அப்பப்போ 90 வயசு கிழங்களிடமிருந்து 15 வயசு பொண்ணுங்கள் தப்பிப்பதை நாம் பார்க்கிறோம். இவ்வாறு ஈமான் இல்லாத 15 வயசு பொண்னுங்கள் ஈமானை பெற்றுகொண்டு, மீண்டும் 90 வயசுகிழங்களுக்கு சேவகம் செய்யவும் அவர்களது பாலுறவு தேவைகளை பூர்த்தி செய்யவும் துவா செய்குவோம். இந்த 90 வயசு கிழங்கள் அந்த 15 வயசு பொண்னுங்களை பாலுறவுக்கு கூப்பிடும்போது வராவிட்டால், மலக்குகள் அந்த வீட்டுக்கு 5000 ஒளிவருட தொலைவிலிருந்து வந்து அந்த அரபு ஷேக்கின் படுக்கறையில் உட்கார்ந்துகொண்டு, அந்த 15 வயசு பொண்ணுங்களை சபிப்பார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

இவ்வாறு பெண்களை பாலுறவு பலாத்காரம் செய்வதும், சின்ன பொண்ணுங்களை 90 வயசு கிழங்கள் நிக்காஹ் செய்வதும், மெஹர் குடுத்து அமுக்குவதும் நபிவழியில் இன்னும் தொடர்கின்றன என்பது நபி வழி செய்திகளை உண்மைப்படுத்தும் நிகழ்கால நாட்டு நடப்புகளாக இருக்கின்றன என்பதை அறிந்து பரவும் நபி வழி சிந்தனையை போற்றி பரப்புவோம்.
ஆ அல்லாஹ் ஊ அல்லாஹ்

source:http://pagaduu.wordpress.com

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

2012 in review

The WordPress.com stats helper monkeys prepared a 2012 annual report for this blog.

Here’s an excerpt:

4,329 films were submitted to the 2012 Cannes Film Festival. This blog had 51,000 views in 2012. If each view were a film, this blog would power 12 Film Festivals

Click here to see the complete report.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இஸ்லாத்தை உண்மை படுத்தும் நாட்டு நடப்பு கள்:அரபு ஷேக்குகளின் “ஷோக்’கிற்கு பலியாகும் இந்திய பெண்கள்

இஸ்லாமை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள் எவ்வளவு உண்மை
மும்பை:அரபு நாடுகளில் இருந்து இந்தியா வரும் ஷேக்குகளில் சிலர், தங்கள் உடல் வெறியை தணித்து கொள்ள, இந்திய பெண்களை, திருமணம் செய்து கொள்வதும், நாடு திரும்பும் முன், அந்த பெண்களை விவாகரத்து செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. பணத்திற்கு ஆசைப்பட்டு, ஏராளமான பெண்கள், மாயவலையில் வீழ்கின்றனர்.


வெறிபிடித்த கும்பலுக்கு, இந்தியாவில் உள்ள சில, மத தலைவர்களும், குருமார்களும் உதவி செய்வது தான் வேதனையானது.மும்பை, புனே, டில்லி நகரங்களில், "மிட் – டே’ என்ற ஆங்கில மாலை நாளிதழ் வெளிவருகிறது. அந்த நாளிதழின் பெண் நிருபர், கிராந்தி விபுதேயும், ஆண் நிருபர், பூபன் படேலும், ஒரு மாதத்திற்கும் மேலாக, ரகசிய நடவடிக்கை மேற்கொண்டு, அரபு ஷேக்குகளின் காம லீலைகளை அம்பலப்படுத்தியுள்ளனர்.


அந்த பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி விவரம்:இந்தியாவிற்கு சுற்றுலா, "விசா’வில் வரும் அரபு நாட்டு ஆண்கள் சிலர், மும்பை அல்லது வட மாநில நகரங்களில் தரையிறங்கியதும், பெண் தேடும் படலத்தை துவக்கி விடுகின்றனர். அதற்காகவே உள்ள ஏஜண்டுகள், அரபு ஷேக்குகள் தங்கியிருக்கும் இடங்களுக்கு, பெண்களை கூட்டி செல்கின்றனர். பிடித்தமான பெண்களை, ஷேக்குகள் தேர்ந்தெடுக்கின்றனர்.


"எல்லாம் மத முறைப்படியே செய்ய வேண்டும்’ என, விரும்பும் ஷேக், அந்த பெண்ணுடன், திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்தை, முஸ்லிம் மதகுரு நடத்தி வைக்கிறார். அதற்கு முன், 15 ஆயிரம், முதல் ஒரு லட்ச ரூபாய் வரை, பணம் பேசப் பட்டு, பெண்ணுக்கு கைமாறி விடுகிறது.


மேலும், எத்தனை நாட்களுக்கு, ஷேக்கிற்கு மனைவியாக இருக்க வேண்டும் என்பதும் முடிவு செய்யப்பட்ட பிறகு, ஷேக்கின் மனைவியாக, இந்திய பெண் மாறுகிறாள்.
அந்த அப்பாவி பெண்ணுடன், இந்தியாவில் உள்ள மத வழிபாட்டு தலங்கள், முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்லும் ஷேக், அந்த பெண்ணை, தன் காம இச்சைக்கு, விருப்பம் போல பயன்படுத்துகிறார்.


சடீவிசா காலம், ஒரு வாரத்திலோ அல்லது 10 நாட்களிலோ முடியும் போது, திருமணம் செய்து வைத்த மதகுருவிடம் வந்து, விவாகரத்தும் செய்து விடுகிறார். விவாகரத்தும், சில வினாடிகளில் முடிந்து விடுகிறது. குறிப்பிட்ட காலம் மட்டும், அரபு ஷேக்கின் மனைவியாக வாழ்ந்த அந்த பெண், கசக்கி வீசப்படுகிறாள்.இதில் கொடுமை என்னவென்றால், அரபு ஷேக்கிடம் சிக்கும் பெண்ணுக்கு, அவள் பெறும் பணத்தில், கொஞ்சமே கிடைக்கிறது.

50 சதவீத பணத்தை, திருமணம் மற்றும் விவாகரத்தை செய்து வைக்கும் மதகுரு எடுத்து கொள்கிறார். மீதம் உள்ளதை, பெண்ணும் அவளை, ஏற்பாடு செய்யும் ஏஜண்டுகளும் பகிர்ந்து கொள்கின்றனர்.இந்த கொடுமை, மும்பை, ஐதராபாத் நகரங்களில் வெகுசாதாரணமாக நடக்கிறது. இதை கண்டுகொள்வார் யாருமில்லை.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

டிசம்பர் 25-ல் இயேசு கிறிஸ்து பிறந்தார் என ்பது தவறு : போப் ஆண்டவர் வாக்குமூலம்! – இஸ்லா மிய அறிஞர்கள்அதிர்ச்சி!!

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு என்ன ஒரு புது தலைப்பாக இருக்கிறது என்று நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்.தலைப்பில் உண்மை இல்லாமல் இல்லை.இத்தனை நாட்களாக கிறிஸ்தவ மக்களிடையே கிறிஸ்மஸ் தினத்தை குறித்து ஏதாவதும் சொல்லி ஏமாற்ற இருந்த ஒரு வாய்ப்பையும் இழ்ந்துவிட்டோமே என்ற அதிர்ச்சியில் இருக்கிறார்கள் இஸ்லாமிய அறிஞர்கள்.

பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் அறிந்த ஒரு விடயம் தான் டிசம்பர் 25 என்பது இயேசு கிறிஸ்து பிறந்த தினம் அல்ல என்பது.ஆனால் இதை அறியாத இஸ்லாமிய அறிஞர்கள் கிறிஸ்தவர்களுக்கு ஏதோ இரகசியத்தை சொல்லிக்கொடுப்பதுபோல் அதை தங்கள் இணையதளங்களிலும்,பிரசுரங்களிலும் போட்டு தங்களுக்கு தாங்களே கைதட்டி மகிழ்ந்துகொள்ளுவது வழக்கம்.

பெரும்பான்மை கிறிஸ்தவர்களை பொருத்தவரை டிசம்பர் 25ல் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை கொண்டாடுவதின் நோக்கம் இயேசு கிறிஸ்து அந்த நாளில் பிறந்தார் என்பதற்காக இல்லை.இந்த சாதாரண அறிவு கூட இல்லாத இஸ்லாமிய அறிஞர்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.

சமீபத்தில் ஆன்லைபிஜே இணையதளத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை குறித்து கத்தோலிக்கர்களின் தலைவர் போப் அவர்கள் வெளியிட்ட ஒரு புத்தகத்தை ஆதாரமாக போட்டு கிறிஸ்துமஸ் தினத்தை விமர்சித்து உள்ளனர்.அதன் தொடுப்பை இங்கு கொடுக்கிறோம்.இதில் அந்த கட்டுரையை முழுமையாக வாசிக்கலாம்:

http://www.onlinepj.com/katturaikal/dec25-il-easu-printhar-enpathu-thavaru/

அந்த கட்டுரையின் உண்மை நிலையை ஆராய்வதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும் .கீழே அவர்களின் வாதம் பச்சை கலரில் உள்ளது.அதன் பிறகு நமது பதில் நீல கலரிலும் உள்ளது.

// கிறித்தவ சகோதரர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம்தான் ஏசு பிறந்தார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு அந்த நாளை திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கிறித்தவ சகோதரர்கள் ஏசு பிறந்த நாளாகக் கருதி கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழா என்பது டிசம்பர் 25என்பது தவறு என்று கிறித்தவ மதத்ததலைவரான போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.  

 போப் ஆண்டவர் அறிவித்துள்ள இந்தச் செய்தி இத்தனை ஆண்டுகள் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்த கிறித்தவர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமா? ஏசு பிறந்த ஆண்டு எது என்பதும் தவறாகவே மக்களுக்கு சொல்லப்பட்டுள்ளது என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார் போப் ஆண்டவர்./////

16வது “பென்னடிக்ட்” போப் ஆண்டவர் அவர்களால் எழுதப்பட்டுள்ள ஜீஸஸ் ஆஃப் நஸ்ரேத் : தி இன்பேன்சி நர்ரேடிவ்ஸ் (‘Jesus of Nazareth: The Infancy Narratives’) என்ற புத்தகம் நவம்பர் மாதத்தில் வெளியாகியுள்ளது.அதில் போப் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை குறித்த விடயங்களை பற்றி எழுதியுள்ள விடயங்கள் புதியவை அல்ல.பல கோடி கிறிஸ்தவர்கள் பல ஆண்டுகளாக பிரசங்கித்து வரும் விசயமே.இது ஏதோ புது விசயம் மாதிரியும்,கிறிஸ்தவர்களுக்கு இது தெரியாத மாதிரியும் இஸ்லாமிய அறிஞர்கள் விளக்குவது நமக்கு விசித்திரமாக உள்ளது.இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டை குறித்தும் ,அவர் பிறந்த தேதி குறித்தும் பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் நன்கு அறிந்தவர்களாகவே உள்ளனர்.குறிப்பிட்ட இந்த விசயங்களை பொருத்த வரை நடைமுறையில் உள்ள விசயங்களோடு ஒத்துப் போவதால் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாதபடியால் கிறிஸ்தவ மக்கள் அவற்றை அப்படியே பின்பற்றுகிறார்கள்.

மேலும் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்தார் என்பது வரலாற்று உண்மை.இதை உலகில் அனைவருக்கு அறிவிக்க ஒரு நாள் அது டிசம்பர் 25 ஆக இருந்துவிட்டு போகிறது.கிறிஸ்தவத்துக்கு முன்பு அந்த நாள் வேறு எதற்கோ பயன்பட்டு இருந்தாலும் அதைபற்றிய கவலை நமக்கு இல்லை.இன்றைக்கு அந்த நாளை விசேஷிக்க என்ன காரணம் என்றே நாம் பார்க்க வேண்டும்.எங்களுடைய நோக்கம் இயேசு கிறிஸ்துவை மேன்மைப்படுத்துவதாக மட்டும் இருக்கவேண்டும் என்பதே முக்கியமாக உள்ளது.பிதாவாகிய தேவன் தன் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மூலம் இந்த மனுகுலத்துக்கு கொடுத்த மிகப்பெரிய நற்செய்திதான் கிறிஸ்துமஸ் .அதைதான் டிசம்பர் 25 ல் நினைவு கூறப்படுகிறது.

///
 இதற்கு முன்பும் இயேசுவின் வரலாற்றில் தவறுகள் உள்ளன, என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும், கத்தோலிக்க நிறுவனரான “போப்” ஒருவரே இப்படி பகிரங்கமாக அறிவித்திருப்பது, இதுவே முதல் முறையாகும்.
////

டிசம்பர் 25,மற்றும் இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு வரலாற்றை விமர்சித்த ”பலராலும்” என்ற உங்கள் எழுத்தில் பெரும்பான்மை கிறிஸ்தவர்களே அடங்கியுள்ளனர்.ஆனால் அதை அழகாக மறைத்து எதோ கிறிஸ்தவர்கள் இதை புதிதாக கேட்டு அதிர்ச்சி அடைந்த மாதிரி மக்களை நம்பவைக்க பார்க்கிறீர்கள்.

//// இதில் பெரும்பாலான கிறித்தவர்கள் இயேசு கி.மு6 தொடக்கம் முதல் கி.மு4 இடையிலான காலப் பகுதியில் பிறந்திருக்கலாம் என நம்புகின்றனர். அதில் வேடிக்கை என்னவென்றால் கி.பி மற்றும் கி.மு என்று பிரிப்பதே இவரது பிறந்த நாளை வைத்துத்தான் எனும்போது அவர் எந்த ஆண்டு பிறந்தார் என்பதிலேயே கருத்து வேறுபாடு வருவது ஏசுவின் வரலாறு எந்த அளவிற்கு பலவீனமான வரலாறாக அமைந்துள்ளது என்பதை படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது./////

இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை பற்றி அதுவும் பலவீனமான வரலாறு என்று விமர்சிக்கும் தகுதி எந்த இஸ்லாமிய அறிஞர்களுக்கும் இருப்பதாக தெரிவதில்லை.காரணம் இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக நேசிக்கிறோம் என்று சொல்லும் ஹஜரத் முஹம்மது அவர்களின் ஆதாரபூர்வமான முழுமையாக ஏற்றுக்கொள்ள கூடிய வரலாறுகள் அவர் மரணமடைந்து சில நூற்றாண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட புத்தகங்களையே அடிப்படையாக கொண்டதாகும்.ஹஜரத் முஹம்மது அவர்கள் மரணமடைந்து 125 ஆண்டுகளில் எழுதப்பட்ட வரலாற்றை கூட இந்த தவ்ஹீத் ஜமாத்தினரால் பலவீனம் என்று நிராகரிக்கப்படுகிறவைகளாக உள்ளது.இந்த லட்சணத்தில் இவர்கள் அதற்கும் பல நூறு ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றில் குறை கண்டுபிடிக்க முயல்வது இவர்களில் இயலாமையை காட்டுகிறது.இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை பொருத்தவரை குறிப்பிட்ட நாள் எதுவும் வேதாகமம் சொல்லவில்லை.காலங்களை கணக்கிட கூடிய வடிவில் தான் சொல்லியுள்ளது.அதில் சில துல்லியமாக கணக்கிடுவதில் மாற்றம் வரவாய்ப்புகள் உள்ளது.இதனால் இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கை வரலாற்றில் எந்த பலவீனமும் இல்லை,இஸ்லாமிய வரலாறுகளே பல முரண்பாடுகள் நிறைந்த பலவீனங்களாக உள்ளது என்பதை உலகறியும்.

 ////உலகில் வாழும் சுமார் ஒரு பில்லியன் கத்தோலிக்கர்களின் மதத் தலைவரான 85 வயதுடைய 16ஆம் பெனடிக்ட் போப்பாண்டவர் அவர்கள் இப்புத்தகத்தில் தெரிவித்துள்ள மற்றுமொரு கருத்து அனைத்து கிறித்தவ சகோதரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்தகவல் என்ன தெரியுமா? கிறித்தவ மதத்தில் கழுதைகள் உட்பட ஏனைய விலங்குகள் இயேசுவின் பாரம்பரிய பிறப்பு வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவ்விலங்குகளுக்கும் கிறித்தவ மதத்துக்கும் துளிகூட சம்பந்தம் இல்லையென்றும் கூறியிருப்பதுதான்.////

வாழ்த்து அட்டைகளில் உள்ள படங்களை பார்த்து விமர்சனம் எழுதுகிறது போல் உள்ளது உங்கள் எழுத்துக்கள்.எங்கள் வேதாகமத்தில் இயேசு பிறந்த நேரத்தில் கழுதைகள் இருந்ததாகவோ,மற்ற விலங்குகள் சுற்றி நின்றதாகவோ சொல்லவில்லை.இதை சூழல் வைத்து கற்பனையாக வடிவமைக்கப்பட்டவை.வாழ்த்து அட்டைகளில் உள்ளது எல்லாம் உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது.மேலும் கத்தோலிக்கர்களின் தலைவர் தான் போப் அவர்கள்.அவர் உலகில் வாழும் முழு கிறிஸ்தவர்களுக்கும் தலைவர் அல்ல.மேலும் அவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே தலை ஆட்டி கேட்க நாங்கள் உங்களை போன்றவர்கள் அல்ல.தாய் மொழியல்லாத வேற்றுமொழியில் தங்கள் வேதத்தை மந்திரம் போல் வாசிப்பவர்கள் அல்ல கிறிஸ்தவர்கள்.ஒவ்வொரு கிறிஸ்தவனும் அவனுடைய சொந்த மொழியில் பைபிளை படித்து புரிந்துகொள்ள கூடியவனாகவே இருக்கிறார்கள்.அப்படி இருக்கும் பொழுது எங்கள் வேதப்புத்தகத்துக்கு எதிராக யார் கருத்தை சொன்னாலும் அதை பற்றி கிறிஸ்தவர்கள் கவலைப்படபோவது இல்லை. அதை பரிசுத்த வேதாகமத்தில் இருந்து சரிபார்த்துக்கொள்ளுவார்கள்.

//கிறித்தவர்கள் தங்களது மத ஆதாரமாக பைபிளைத்தான் வைத்துள்ளனர். உண்மையைச் சொல்வதாக இருந்தால் இயேசுவின் பிறப்பிடத்தைப் பற்றியோ, பிறந்த தினத்தைப் பற்றியோ, பிறந்த ஆண்டைப் பற்றியோ பைபிளில் தெளிவான ஆதாரங்கள் இல்லை. இவற்றைப் பற்றிய ஒருமித்த கருத்து என்றைக்கும் ஏற்பட்டதில்லை. பல குழப்பங்களும், முரண்பாடுகளும் இருக்கின்றன./////

அப்படியே போகிற போக்கில் உங்கள் நச்சுக்கருத்தை அப்படியே அள்ளித்தெளித்து செல்லுகிறீர்கள்.எங்கள் வேதாகமத்தில் இயேசு கிறிஸ்து எங்கு பிறந்தார் என்று தெளிவாக உள்ளது.இயேசு பிறந்த ஆண்டு பைபிளில் இல்லை என்பதினால் ஒரு பிரச்சனையும் ஏற்பட போவதில்லை.அதை முன்பே கூறியபடி வேதாகம அடிப்படையில் கணக்கிட்டுக்கொள்ளக் கூடிய நிலையிலேயே உள்ளது.அதில் சில வித்தியாசங்கள் வந்தாலும் எங்களுக்கு அதில் ஒரு பிரச்சனையும் இல்லை.அதினால் எங்கள் அடிப்படை கொள்கைக்கு எந்த பங்கமும் ஏற்படாது.ஆனால் உங்கள் பிரச்சனை அதுவல்ல உங்கள் குரான் வசனங்கள் எந்த வசனம் எந்த இடத்தில் அருளப்பட்டது .எந்த வசனத்துக்கு எப்படி ஹஜரத் முஹம்மது அவர்கள் விளக்கம் கொடுத்தார்கள்,எதற்காக இந்த வசனம் கொடுத்தார்கள் என்று கூட இன்னும் சரியாக தெரியாமல் உங்களுக்குள் நீங்கள் முரண்பட்டு நீங்கள் போடும் குஸ்தியோ குஸ்தியை விடவா இதில் குழப்பம்.சொல்லுங்களேன்.

///இயேசுவின் பிறந்த நாள் டிசம்பர் இருபத்தைந்தாம் தேதி என்று நிரூபிக்க முடியாது. பல காலங்களில் இயேசுவின் பிறந்த நாள் என்று பல நாட்கள் கிறிஸ்தவர்களால் கருதப்பட்டு, கொண்டாடப்பட்டு வந்துள்ளன. சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவை இயேசுவின் பிறந்த நாளைப் பற்றிய தகவலைப் புறக்கணித்தன.////

நாங்கள் யாரும் அதை சாதிக்கவில்லையே .பிறகு எதற்கு நிரூபிக்கவேண்டும்.இயேசு கிறிஸ்து மனிதனாக இந்த உலகில் அவதரித்தார்.அந்த நாளை டிசம்பர் 25 ல் நினைவு கூர்ந்து இறைமகனின் பிறப்பின் நற்செய்தியை இந்த பூவுலக மக்களுக்கு அறிவிக்கிறோம்.இந்த குறிக்கோள் மட்டுமே எங்களுக்கு.ஆனால் ஆட்சி அதிகாரத்தை நிறுவி தன் சொந்த பந்தங்களான சஹாபிகளை ஏறக்குறைய 100 வருடங்களுக்குமேல் ஆட்சிபீடத்தில் அமர்த்தி சென்ற ஹஜரத் முஹம்மது அவர்களை பற்றிய செய்திகளை இன்றைக்கு பலவற்றை நீங்கள் பெலவீனம் என்று தள்ளி குப்பையில் போடுகிறதைவிடவா வேறு புறக்கணிப்பு இருக்க முடியும்.

/////
 இயேசுவின் நெருங்கிய தோழர்களால், இயேசுவின் தாயாரும் சகோதரரும் உயிரோடிருக்கும்போது எழுதப்பட்டதாகக் கருதப்படும் சுவிசேஷங்கள் இயேசுவின் பிறந்த தினத்தைப் பற்றி தெரிவிக்காதது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.//////

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை தெரிவிக்காதது கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்குமானால் அதைவிட ஹஜரத் முஹம்மது அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஹிஜ்ரி முதல் நூற்றாண்டு ஆதாரமான புத்தகத்தை உங்களால் காட்ட முடியுமா?உங்களால் காட்ட முடியாது என்பது அதைவிட மக்களால் கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.

///இவ்வளவு முக்கியமான நிகழ்வை பரிசுத்த ஆவி ஏன் சொல்லாமல் விட்டது என்று நமக்கு பெரும் சந்தேகம் ஏற்படுகின்றது…….. ஒவ்வொரு சுவிசேஷக்காரரும் அவருக்குத் தோன்றியதையும் கேள்விப்பட்டதையெல்லாம் எழுதியிருக்கிறார்களேயல்லாமல் கர்த்தரின் தூண்டுதலால் எழுதவில்லை என்பதற்கு இது போதுமான சான்று அல்லாவா? இனியும் இதை இறைவேதம் என்று சொல்ல முடியுமா?…..////

எங்கள் வேதாகமத்தில் நான்கு சுவிஷேசங்களும் ஒரே மாதிரி எழுதப்பட ஏவப்பட்டது அல்ல.எங்கள் பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவின் நான்குவிதமான ஊழிய படித்தரங்களை மக்களுக்கு விளக்க சுவிஷேச ஆக்கியோன்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் ஏவுதல் என்ன இருந்ததோ அப்படியே அவற்றை எழுதியுள்ளார்கள்.எல்லோரும் ஒரே மாதிரி எழுத வேண்டுமானால் நான்கு சுவிஷேசங்கள் தேவையில்லை.ஒன்றே போதுமானது ஆகும். நான்கு சுவிஷேசம் இருப்பதில் இருந்து உணரலாம் அதன் அவசியம் எப்படிப்பட்டது என்பதை.அதனால் மத்தேயு எழுதிய சிலதை மாற்குவும்,லூக்காவும் எழுத ஏவப்பட்டு இருப்பார்கள்.மாற்கு எழுதியதை லூக்காவும் மத்தேயுவும் எழுதாமல் மற்ற விசயங்களை எழுத பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டுள்ளனர்.இதில் ஒரு முரண்பாடும் இல்லை.ஆனால் குரானில் அல்லாஹ்வின் ரூஹுல் குத்தூஸ் சொல்லாமல் விட்டது சாதாரண விசயங்கள் அல்ல.முஸ்லீகள் அடிப்படையாக கடைப்பிடிக்கவேண்டிய எதையும் அல்லாஹ் குரானில் விளக்கவே இல்லை.பெரும்பான்மை இடங்களில் சொர்க கன்னிகைகளையும்,கட்டில்களையும் விளக்குவதிலேயே பெரும் பான்மையான பக்கங்கள் செலவழிந்து உள்ளது.மேலும் நூற்றுக்கு மேற்பட்ட சத்தியமாக என்று சொல்லியும் பக்கங்கள் தீர்ந்துள்ளது.ஆனால் ஒரு முஸ்லீம் எப்படி தொழுகை செய்ய வேண்டும் என்றோ அல்லது மற்ற அடிப்படை கடமைகளான ஹஜ்,ரமலான்,ஜக்காத்,சுன்னத் போன்றவைகள் பற்றியோ ஒரு விளக்கத்தையும் கொடுக்காமல் தன்னைதானே தெளிவான வேதம் என்று சொல்லுவதிலும் வசனங்களின் எண்ணிக்கை கூடியுள்ளதே தவிர வேறு ஒன்றும் இல்லை.இதை அல்லாஹ்வின் ரூஹுல் குத்தூஸ் ஏன் இப்படி சொல்லாமல் விட்டார் என்பது இன்றைக்கு வரை கேள்விக்குறியாகவே உள்ளது.

////ஏரோது உண்மையில் இயேசுவை கொலை செய்ய விரும்பியிருந்தால் அந்த சந்தர்ப்பத்தை உபயோகித்திருக்கலாம். எகிப்துக்கு ஓடிப் போனதாக மத்தேயு சொன்னதும், ஆலயத்திற்குக் கொண்டு வந்ததாக லூக்கா சொன்னதும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன……. ஏரோது அரசன் இயேசுவைக் கொலை செய்யத் தேடியதையும் அவர்கள் எகிப்துக்கு ஓடிப் போனதையும் அதன் பின் ஏரோதுவின் மகன் ஆட்சிக்கு வந்ததையும் எருசலேமுக்குப் போகாமல் அவர்கள் மறைந்து வாழ்ந்ததையும் லூக்கா கூறவில்லை. மாறாக அந்தச் சமயத்தில் சர்வ சாதாரணமான நிலைமை நிலவியதாகவும் ஆண்டு தோறும் எருசலேமுக்கு அவர்கள் வந்து போய்க் கொண்டிருந்ததாகவும் சர்வ சாதாரணமாக அவர்கள் அந்த நாட்டில் நடமாடியதாகவும் கூறுகிறார்…………………….
//////

மத்தேயு ,லூக்கா சுவிஷேசங்களில் இயேசு கிறிஸ்துவின் குழந்தை பருவத்தில் நடந்த சம்பவங்களை விவரிக்கும் பொழுது உள்ள கால இடைவெளியை கணக்கிடாமல் இப்படி உளரிக்கொட்டுகிறார்கள்.யோசேப்பும்,மரியாளும் குழந்தை இயேசுவுக்கு விருத்த சேதனம் செய்ய போனது எட்டாம் நாளில்.ஆனால் சாஸ்திரிகள் ஏரோதுவிடம் சென்று சொன்ன பிறகே ஏரோது குழந்தையை கொல்ல தேடினான் என்று வேதாகமம் தெளிவாக சொல்லுகிறது.சாஸ்திரிகள் இயேசு பிறந்த மறுநாளேவோ அல்லது ஓரிரு நாளிலேயோ ஏரோதிடம் வந்ததாக வேதம் சொல்லவில்லை.

மத்தேயு 2 :1. ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,

2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.

இயேசு கிறிஸ்து பிறந்த பொழுது கிழக்கிலே ஒரு நட்சத்திரத்தை கண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.அவர்கள் ஏரோது அரசனிடம் வருவதற்கு எத்தனை நாட்கள் ஆனது என்றோ ,மாதங்கள் ஆனது என்றோ குறிப்பு இல்லை.ஆனால் இதை கேட்ட ஏரோது அரசன் ஏழாம் வசனத்தில் இப்படி சொல்லுகிறான்.

மத் 2:7. அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை ரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக் குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து:

இதன் பின்பு ஏரோது அரசன் சாஸ்திரிகளால் ஏமாற்றப்பட்டதை அறிந்து ஒரு ஆணை பிறப்பிக்கிறான் .அதில் நமக்கு சிறிய குறிப்பு அடங்கியுள்ளது.மேலும் இயேசு கிறிஸ்து பிறந்த பொழுது சத்திரத்தில் இடமில்லாத படியால் முண்ணனையில் கிடத்தியதாக வேதாகமத்தில் தெளிவாக உள்ளது.

லூக்கா 2: 7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.

ஆனால் சாஸ்திரிகள் வந்த பொழுது யோசேப்பு மரியாள் வீட்டில் குடியிருக்கிறார்கள் என்று வேதாகமம் தெளிவாக சொல்லுகிறது.

மத் 2:11. அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.

இந்த வசனம் மூலம் யோசேப்பும் மரியாளும் ஒரு வீட்டில் குடியேறிய பிறகே சாஸ்திரிகள் இயேசுகிறிஸ்துவை காண வந்தார்கள் என்பதை தெளிவாக அறியலாம்.

மத் 2: 16. அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.

இதன்படி அவர்கள் நட்சத்திரம் காணப்பட்ட காலத்தை விசாரித்து தோராயமாக கணக்கிட்டு இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளை கொல்ல சொன்னதில் இருந்து மத்தேயு சொல்லும் சம்பவம் குறைந்த பட்சம் ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.இப்பொழுது லூக்கா சுவிஷேசம் எட்டாம் நாளில் இயேசு கிறிஸ்துவின் விருத்த சேதனத்தை சொன்ன பொழுது ஏரோது அரசனின் அந்த கட்டளை பற்றி எழுதாததில் எந்த முரண்பாடும் இல்லை.அதற்கு பின் பல மாதங்களுக்கு பிறகு நடக்க போகிற விசயத்தை எதற்காக எட்டாம் நாளில் விருத்த சேதனம் செய்யப்பட்ட போது சொல்லவேண்டும்.அல்லது அப்படி சொல்லபட வேண்டும் என்பது அறிவீனம் இல்லையா? எங்கள் வேதாகமம் தெளிவாகவே உள்ளது.அதை படிக்கின்ற நீங்களே குறைகண்டு பிடிக்கவே படிப்பதினால் அதின் உண்மைகள் உங்கள் கண்களை மறைத்துவிடுகிறது.

//இது குறித்த செய்தியை சகோதரர் பீஜே அவர்கள் தனது “இதுதான் பைபிள்” என்ற நூலில் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார்.///

இந்த புத்தகத்தில் மவ்லவி பிஜே அவர்கள் செய்துள்ள தவறுகளை விவாதத்தில் அவருக்கு முன்பாக எடுத்து வைத்த போதும் அவர் வாய்திறக்காமல் தனியாக விவாதிப்போம் என்று நைசாக நழுவினார் என்பதை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.கர்த்தருக்கு சித்தமானால் அவர் அந்த புத்தகத்தில் செய்துள்ள தவறுகள் ஒவ்வொன்றுக்கு நிச்சயம் நாங்கள் கூடிய விரைவில் பதில் அளிப்போம்.

///// போப் ஆண்டவர் தனது நூலில் மத்தேயு மற்றும் லூக்கா ஆகியோர் ஏசுவின் பிறப்பு விஷயத்தில் முரண்பட்ட செய்திகளை சொல்கின்றனர் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அவ்வாறு ஒப்புக்கொண்டுவிட்டு அதை சரிக்கட்டுவதற்கு அவர் ஒரு காரணத்தை சொல்லியுள்ளார். மத்தேயு மற்றும் லூக்கா ஆகியோரின் நோக்கம் வரலாற்றை மிகச் சரியாக எடுத்துரைக்க வேண்டும் என்பது அல்ல; மாறாக நம்பிக்கையின் ஒளியை உலகிற்கு பரப்புவதுதான் என்று கூறியுள்ளார்.////

முதலில் போப் அவர்கள் என்ன எழுதியுள்ளார்கள் என்பதை ஆங்கிலத்தில் முதலில் அப்படியே பதிந்து விளக்க வேண்டும்.அதை விடுத்து சொந்த கருத்தை திணிக்க கூடாது.சரி போப் அவர்கள் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுடன் இருந்த அப்போஸ்தலரோ?அல்லது அதன் பின் வந்த சபைபிதாவோ இல்லை.அவர் பல கோடி மக்களால் மதிக்கப்படகூடிய ஒரு தலைவர் அவ்வளவே.அதற்காக அவர் சொன்னவுடனே எங்கள் வேதாகமாம் முரண்பட்டது என்று அர்த்தம் ஆகிவிடாது.இது நடைமுறையும் இல்லை.இன்றைக்கு இருக்கும் ஒரு பெரிய மதத்தலைவர் உதாரணத்துக்கு அயோத்துல்லாஅலிகோமேனி எடுத்துக்கொள்ளுவோம்.அவர் ஷியா பிரிவின் தலைமைதுவத்தில் இருக்கும் ஒரு இஸ்லாமிய மதகுரு ஆவார்.அவர் நீங்கள் மதிக்க கூடிய உங்கள் கலிபாக்களை குறித்து என்ன நினைக்கிறார் என்று சொல்லுவதினால் அது உண்மை என்றாகிவிடுமா?சொல்லுங்கள்.ஆனால் அதை விட மிக சிந்திக்கவைக்க கூடிய விடயம் ஒன்று உண்டு.அது என்ன தெரியுமா?உங்கள் ஹஜரத் முஹம்மது அவர்களின் மனைவி ஆயிஷா அவர்களும்,சஹாபியும்,அவருடைய மாமனாரும்,இரண்டாவது கலிபாவுமாகிய உமர் அவர்களும் குரானை பற்றி என்ன சொல்லியுள்ளார்கள் தெரியுமா?கீழே வாசியுங்கள்.

முஸ்லீம் ஹதீஸ்

2876. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்” என்ற வசனம் (முதலில்) குர் ஆனில் அருளப்பட்டிருந்தது.

பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பி;;ட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

புகாரி 7323……………………………………இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறே நாங்கள் மதீனா சென்றடைந்தோம். ‘நிச்சயமாக அல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும்இ அவர்களுக்கு (குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தில் கல்லெறி தண்டனை (ரஜ்கி) சம்பந்தமான வசனம் இருந்தது’ என உமர்(ரலி) அவர்கள் பேசத் தொடங்கினார்கள்.

மேலே ஆயிஷா அவர்களும் உமர் அவர்களும் சொல்லும் இரண்டு வசனங்கள் இன்றைய குரானிலும் இல்லை.அப்படியானால் ஹஜரத் முஹம்மது அவர்கள் காலத்துக்கு பிறகு குரான் எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது என்பது திண்ணமாக உறுதி செய்யப்படுக்கிறது.மேலும் ஹஜரத் முஹம்மது அவர்களால் மிகநல்ல சமுதாயங்கள் என்று குறிக்கப்பட்டுள்ள சலஃபுகளும் ,இன்னும் இஸ்லாமிய பேரறிஞர்கள் பலர் குரானின் குழறுபடிகள் குறித்து புத்தகம் எழுதியுள்ளார்கள்.அவைகளை வருகின்ற நாட்களில் விரிவாக பார்கலாம்.

/// கிறித்தவ சகோதரர்கள் மிகவும் விமர்சையாகக் கொண்டாடக்கூடிய இரண்டு பெரும் பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ்; மற்றொன்று ஈஸ்டர் சண்டே.

 கிறிஸ்துமஸ் என்பது ஏசுவின் பிறந்த தினம் என்றும், ஈஸ்டர் என்பது ஏசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு உயிர்த்தெழுந்த தினம் என்றும் கிறித்தவ சகோதரர்கள் நம்புகின்றனர்.

 இதில் கிறிஸ்துமஸ் டிசம்பர் 25ஆம் தேதி என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை என்பதை போப் ஆண்டவர் அவர்களின் ஒப்புதல் வாக்குமுலத்தின் மூலம் அறிந்து கொண்டோம். சரி! ஈஸ்டர் சண்டே என்பதற்காவது ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று பைபிளின் அடிப்படையில் ஆய்வு செய்தால் அந்த ஆய்வு முடிவுகளும் கிறித்தவ சகோதரர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாகத்தான் உள்ளது. அது குறித்த அதிர்ச்சித்தகவல்களை ஈஸ்டர் சண்டேவா? ஈஸ்டர் மண்டேவா? என்ற தனிக்கட்டுரையில் காண்க!

////

இயேசு கிறிஸ்து பிறாந்த தினமாக நினைவு கூறப்படுவது டிசம்பர் 25 ஆகும்.இதில் கிறிஸ்தவ மக்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.அப்படி ஒரு நாளை நியமிக்க எங்கள் வேதாகமத்தில் எங்களுக்கு அனுமதி உண்டு.அதன் நோக்கம் கடவுளை மைய்யப்படுத்தியதாக இருக்கவேண்டும் என்பதே கட்டளையாகும்.கீழே உள்ள வேதாகம வசனங்களை வாசித்தால் உங்களுக்கு தெளிவாக புரியும்.

ரோமர் 14:5 அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.

ரோமர் 14:6 நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும்கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான்.

கொலோசியர் 16. ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.

17. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.

எனவே முடிவாக இயேசு கிறிஸ்து மனித அவதாரம் எடுத்து இந்த பூமிக்கு வந்த நாளையே நாங்கள் நினைவு கூறுகிறோம்.அடுத்து ஈஸ்டர் பண்டிகை.அதுவும் எங்கள் நினைவு கொண்டாட்டமே.அதை உங்களின் அடுத்த கட்டுரை விமர்சனம் மூலம் தெளிவாக விளக்க முடியும் என்றும் நம்புகிறேன்

பொதுவாக எல்லா இஸ்லாமியர்களாலும் ஏற்றுகொள்ளப்பட்டு கொண்டாடும் இரண்டு பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான்,இன்னொன்று பக்ரித் .ஒன்று தியாக திருநாள்,இன்னொன்று ஈகை திருநாள்..இந்த இரண்டு பண்டிகைகளின் உண்மையான அர்த்தம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் ,மரணமுமே என்பதை விளக்ககூடிய சிறிய வீடியோக்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

source:iemtindia.com


http://thamilislam.blogspot.in

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பத்ரு –அல்லாஹ்வின் இயலாமை?

300px-Badr_Council.jpg
நான், சிறுவனாக இருந்த காலங்களில், ஏதாவது எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்படும் பொழுது எங்கள் வீட்டுப் பெரியவர்கள் “அல்லாஹ்-பத்ரீன்களே காப்பாற்று” என்று அழைத்து பாதுகாவல் தேடுவதைப் பார்த்திருக்கிறேன். அல்லாஹ்-புரியும்! யார் இந்த பத்ரீன்கள்? ஏதாவது அவுலியாவா? என்று வினவும் பொழுது, பத்ரீன்கள் என்பவர்கள் 313 பேர்கள், அல்லாஹ்விற்காக போரிட்ட அடியார்கள், அவர்கள் இல்லையென்றால் முஸ்லீம்களாகிய நாம் இல்லை என்று கூறுவர்.
பத்ரு, முஹம்மதிற்குப் புதிய உற்சாகத்தை கொடுத்த இடம்; முஸ்லீம்கள் என்றும் பெருமை பாராட்டுமிடம்.நான் இஸ்லாமிய (மூட)நம்பிகைகளில் மூழ்கித் திளைத்த காலங்களில் பத்ரு களத்தை நினைத்து பெருமை கொண்டதுண்டு. எங்கள் பகுதி பள்ளிவாசலில், ரமளான் நோன்பு 17-ம் நாள் பத்ரு ஸஹாபாக்களின் நினைவு தினம் என்று கூறி முந்தின இரவில் மவ்லீது, சிறப்பு பயான் என்றெல்லாம் அமர்க்களப்படுத்தி விடுவார்கள். 1973-ல் எகிப்து மேற்கொண்ட ஒரு தாக்குதலுக்கும், 1999-ல் கார்கிலில் பாகிஸ்தான் மேற்கொண்ட திட்டத்திற்கு “OPERATION BADR“ என்று பெயர் சூடப்பட்டதை அறிவீர்கள். அந்த அளவிற்கு பத்ரு முஸ்லீம்களுக்கு முதன்மையானது.
எனது அறியாமைக் காலங்களில், அல்லாஹ்வைப்பற்றி எடுத்துரைக்கச் சென்றதைத் தவிர, ஒரு பாவமும் அறியாத அப்பாவி மனிதர்களை அழித்தொழிக்கவே பத்ரு சம்பவம் நிகழ்ந்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். குறிப்பிட்ட அந்த பயான்களில் கூறப்படும் எந்த ஒரு செய்திகளையும் அல்லது எனக்கு கற்பிக்கப்பட்டவைகளையும் நடுநிலையாகவோ, பகுத்தறிவைக் கொண்டோ ஆராய்ந்ததில்லை.ஆராயவேண்டுமென்ற சிந்தனைகூட இருந்ததில்லை. நான் தஜ்ஜாலாக உருமாறிக் கொண்டிருந்த காலகட்டத்தில்; எனது நண்பர் ஒருவர், முஹம்மது கடவுளின் தூதர்தான் என்பதற்கு சாட்சியாக பத்ரு வெற்றியை ஒரு அற்புத நிகழ்வாக முன்வைத்து விளக்கமளித்தார். காரணம் முஸ்லீம்களின் மனதில் பத்ரு வெற்றிக்கு உயர்ந்த இடமுண்டு; இதை அல்லாஹ் நிகழ்த்திக் காண்பித்த அற்புதமாகவே அவர்கள் கருதுகிறார்கள்.
மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து யஸ்ரிப் என்ற மதீனாவிற்கு வந்து தனது வழக்கமான பல்லவியை மீண்டும் வாசிக்கிறார். சில மாதங்கள் கடக்கிறது வருமானத்திற்கு வழியில்லை. இதுவரை, பெரும் சீமாட்டியான கதீஜாவின் சொத்துக்களை ஒன்றுமில்லாமல் செய்ததைத்தவிர முஹம்மது உருப்படியாக எந்த வேலையும் செய்ததில்லை. அல்லாஹ்விடமிருந்து வரும் வஹீயைக் கொண்டு வயிற்றை நிறைக்க முடியாது என்பதை முஹம்மதுவும் அவரது சீடர்களும் நன்றாகவே அறிந்திருந்தனர். வருமானத்திற்கு என்ன செய்வது? முஹம்மது தனக்குத் தெரிந்ததாகக் காண்பித்துக்கொண்ட ஆடுமேய்த்தல் தொழிலையோ,வியாபாரத்தையே தனது சீடர்களுக்கு கற்பிக்க முயலவில்லை, முஹம்மதிற்கு தன்னை அல்லாஹ்வின் தூதரென்று போற்றிப் புகழவேண்டும், கைத்தடிகளுக்கு வியர்வைவழிய நேர்மையாக உழைத்து உண்பதில் விருப்பமில்லை. தீர்வு? இருக்கவே இருக்கிறது அல்லாஹ்வின் வஹீ!
"போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்” என்ற காரணத்தால் அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன்.
(குர்ஆன் 22:39)
முதல்கட்டமாக கொள்ளையடித்தலையும், சூறையாடலையும் அல்லாஹ்வின் பெயரல் சட்டபூர்வமாக அங்கீகரித்தார். இதை முஸ்லீம்களின் பாணியில் சொல்வதென்றால், வேறுவழியின்றி ஆயுதமேந்தித் தாக்குதல் செய்தது அல்லது மக்காவிலிருந்து ஷாம் செல்லும் வழியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முஹம்மது விரும்பினார்.
கிபி 624 மார்ச்-ல் (ஹிஜ்ரி 2 ரமலான் 17) நிகழ்ந்த பத்ரு தாக்குதலுக்கு முன்பாக, குறைஷியர்களின் மீது நடைபெற்ற வழிப்பறி முயற்சிகள் அல்லது திடீர்த் தாக்குதல்கள்,
1. ஸய்ஃபுல் பஹ்ர் – கிபி 623 மார்ச்
2. ராபிக் – கிபி 623 ஏப்ரல்
3. கர்ரார் – கிபி 623 மே
4. அப்வா/வத்தான் – கிபி 623 ஆகஸ்ட்
5. பூவாத் – கிபி 623 அக்டோபர்
6. ஸஃப்வான் – கிபி 623 செப்டம்பர்
7. துல் உஷைரா – கிபி 623 நவம்பர்
8. பத்ரு-1 – கிபி 623 டிசம்பர்
9. நக்லா – கிபி 624 ஜனவரி
இதில் நக்லாவில் மட்டுமே முஹம்மதுவின் கூட்டத்தினருக்கு வெற்றி கிடைத்தது. பத்ருவிற்கு முன்பாகவே கொள்ளையடித்தல் எனும் புனிதமிக்க தொழிலைத் துவக்கியிருந்தனர். குறைஷியர்களை வழிப்பறி செய்ய வேண்டுமென்று திட்டமிட்டது அல்லாஹ்வோ அல்லது முஹம்மதோ அல்ல.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறியதாவது:
…, சஅத்(ரலி) அவர்கள் வலம் வந்து கொண்டிருந்த போது அபூஜஹ்ல் வந்து, கஅபாவை வலம் வருவது யார்? என்று கேட்டான். சஅத் (ரலி) அவர்கள், நான் தான் சஅத் என்று கூறினார்கள். அதற்கு அபூஜஹ்ல், (மதீனாவாசிகளான) நீங்கள் முஹம்மதுக்கும் அவருடைய தோழர்களுக்கும் (மதீனாவில்), புகலிடம் கொடுத்திருக்க, இங்கே கஅபாவை நீ அச்சமின்றி வலம் வந்து கொண்டிருக்கிறாயா? என்று கேட்டான். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், ஆம் (அதற்கென்ன?) என்று கேட்டார்கள். அவ்விருவருக்குமிடையே (அதையொட்டி) சச்சரவும் வாக்குவாதமும் ஏற்பட்டது. உடனே உமய்யா, சஅத் (ரலி) அவர்களிடம், அபுல் ஹகமைவிட குரலை உயர்த்தாதீர். ஏனெனில்,அவர் இந்த (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவர் என்று சொன்னான். பிறகு சஅத் (ரலி) அவர்கள்,அல்லாஹ்வின் மீதாணையாக! இறையில்லத்தை வலம்வர விடாமல் என்னை நீ தடுத்தால் நீ ஷாம் நாட்டிற்குச் செல்லும் வாணிபப் பாதையை நான் துண்டித்து விடுவேன் என்று சொன்னார்கள்…
(புகாரி 3632)
குறைஷிகளின் வாணிபப் பாதையையை வழிமறித்து கொள்ளையடிக்க வேண்டுமென்பதும் ’சஅத்’ என்பவர் எடுத்த முடிவுதான்.
பத்ரு தாக்குதலை சுருக்கமாக கூறிவிடுகிறேன். மக்காவிலிருந்து ஷாம் (ஈராக்) நாடடிற்கு கொண்டுசெல்லப்படும், குறைஷிகளின் வியாபாரப் பொருட்களை கொள்ளையடிக்க முஹம்மது தனது படையைதுல்உஷைரா என்ற இடத்தை நோக்கி ஏவிவிடுகிறார். இவர்கள் துல்உஷைராவை அடைவதற்கு பலநாட்களுக்கு முன்பாகவே வியாபாரக்குழு அவ்விடத்தைக் கடந்துவிடுகிறது. ஏமாற்றத்திற்குள்ளானகொள்ளைக்கும்பல், குறைஷிகளின் வியாபாரக்குழு ஷாம் நாட்டிலிருந்து திரும்பிவரும்பொழுதுவழிமறிக்க முடிவெடுக்கிறது.
அதுவரை காத்திருக்க பொறுமையில்லாமல் நக்லா என்ற இடத்தில் அப்துல்லாஹ் இப்ன் முகீரா,நவ்ஃபல் இப்ன் அப்துல்லாஹ், அம்ர் இப்ன் ஹழ்ரமி மற்றும் சில அடிமைகளுடன் வந்து கொண்டிருந்தவியாபாரக்குழுவை தாக்கி வழிப்பறி செய்து, கொலையையும், கொள்ளையையும் நிகழ்த்தினர். அரபிகள்,யாருடனும் எதற்காகவும், எவ்விதமான போர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் புனிதமாக போற்றிப்புகழும் துல்கஃதா, துல்ஹஜ், முஹ்ரம், ரஜப் ஆகிய மாதங்களில், ரஜப் மாதத்தின் இறுதியில்தான்மேற்கண்ட கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த்து.
…அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்!…
(குர்ஆன் 9:36)

இது முஹம்மதை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளியது. நிலைமை சமாளிக்க வேறுவழிதெரியாததால் வஹீயைத் துணைக்கிழுக்க வேண்டியதாயிற்று.
புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். "அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும்(மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு)உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ் விடம் இதை விடப் பெரியது.கொலையை விட கலகம் மிகப் பெரியது” எனக் கூறுவீராக! …
(குர்ஆன் 2:217)

…போர்க் களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றும் பொருட்களில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும், (அவரது) உறவினருக்கும், அனாதைகளுக்கும்,ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்!…
(குர்ஆன் 8:41)

இல்லையெனில் 20% பங்கை எப்படிப் பெறமுடியும்?
தான் முன்பு தவறவிட்ட குறைஷிகளின் வியாபாரக்குழு, அபூஸுஃப்யான் தலைமையில் மிகப்பெரியஅளவிலான பொருட்கள் மற்றும் செல்வங்களுடன் சுமார் 1000 ஒட்டகங்களில், மிக பலவீனமானபாதுகாப்புடன் ஷாமிலிருந்து திரும்பிவருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்ட, முஹம்மது பத்ரு கொள்ளைக்குத் தயாரானார்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிரியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற) அபூ சுஃப்யானின் வணிகக் குழு என்ன ஆயிற்று எனக் கண்டறிய புசைசா பின் அம்ர் அல்அன்சாரீ (ரலி) அவர்களை உளவாளியாக அனுப்பிவைத்தார்கள். அவர் சென்றுவிட்டு (திரும்பி) வந்தபோது,என்னையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் தவிர வேறெவரும் வீட்டில் இருக்கவில்லை. ("அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலரையும் தவிர’என்று கூறினார்களா என எனக்குத் தெரியவில்லை என்று ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் உள்ளது.) அவர் வந்து (அபூசுஃப்யானின் வணிகக் குழு மக்காவை நோக்கிப் புறப்பட்டுவிட்டது’ என்ற) தகவலைச் சொன்னார்…
(முஸ்லீம்)

”இதோ… குறைஷிகளின் வியாபாரக்கூட்டம் அவர்களது பொருட்களுடன் வருகிறது.அக்கூட்டத்தை நோக்கி நீங்கள் புறப்படுங்கள், அல்லாஹ், அவைகளைக் கொள்ளைப் பொருட்களாக உங்களுக்கு அளிக்கக் கூடும்”
(Page 289, Life of Muhammad a Translation of Ibn Ishaq’s Sirat Rasul Allah by A.Guillaume)
என்று உற்சாகப்படுத்தியவராக தனது அடியாட்களுடன் வியாபாரக் கூட்டத்தை நோக்கி பெரும் ஆவலுடன்பயணமானார்.
முஹம்மதின் குற்றநடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையடைந்த அபூசுஃப்யான் வியாபாரப்பொருட்களுக்கு நேரவிருக்கும் அபாயத்தைக் குறித்த செய்தியை குறைஷிகளுக்கு அறிவிக்க ஒருவரைமக்கவிற்கு அனுப்பியதுடன், வியாபரக்குழு செல்லும் பாதையை மாற்றியமைத்து, முஹம்மதுவிடம்சிக்காமல், தங்களது பொருட்களை பாதுகாப்பாக கொண்டு சென்றுவிடுகிறார். வியாபாரப் பொருட்களைப்பாதுகாக்க மக்கவிலிருந்து 1300 பேர்களுடன் வரும் குறைஷியப் படை, வணிகப்பொருட்களுக்குஆபத்தில்லை என்பதை அறிந்து படையிலிருந்த 300 பேர், அக்னஸ் இப்ன் ஷரீக் தலைமையில் திரும்பிவிடுகின்றனர்.

go-makkah-hajj-oumra-ar8vxg-battle-of-badrjpg.jpg
அபூஜஹ்லுடன் எஞ்சியிருந்த 1000 பேரும், முஹம்மதுவுடனிருந்த 313 நபர்களும் (310-லிருந்து 320வரை எண்ணிக்கை மாறுபடுகிறது. 313 பேர் என்பதை பொதுவாக அங்கீகரிக்கின்றனர்) மோதுகின்றனர்;முஹம்மது வெற்றியடைகிறார். போதிய ஆயுத பலமில்லாத 313 பேர் 1000 பேரை வெற்றி கொண்டதை, முஸ்லீம்கள் இன்றும் பிரதாபிக்கினறனர். இந்த மோதலைப்பற்றி இஸ்லாம் கூறுவதைப் பார்ப்போம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் பத்ருப் போரை எதிர்பார்த்துப் புறப்படவில்லை. மாறாக தமது நாட்டு எல்லையில் புகுந்து மக்காவின் வணிகக் கூட்டம் பயணிக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு அவர்களை வழிமறிக்கவே புறப்பட்டார்கள்…
196. திட்டமிடாமல் நடந்த பத்ருப் போர்-onlinepj.com
சத்தமில்லாமல் யஸ்ரிப்(மதீனா) இப்பொழுது முஹம்மதின் உடைமையாகியுள்ளதை கவனியுங்கள். ஹிஜ்ரத் என்ற பெயரில், பிழைப்பிற்கு வழியில்லாமல் மெக்காவிலிருந்து ஓடிவந்த ஒரு ஓடுகாலி இரண்டு ஆண்டுகள் ஆவதற்குள், மதீனாவின் மன்னராகி விட்டாராம், நாட்டின் எல்லைகளை நிர்ணயம் செய்வாராம்.வேடிக்கையாக இருக்கிறது. இஸ்லாமியர்கள் இவ்வாறு முஹம்மதின் கதையை கட்டமைக்கவில்லையெனில், அவர் ஒரு வழிப்பறி கொள்ளைக்காரர் என்பதை குழந்தைகூட கூறிவிடும்.அதனால்தான் இந்த Built-up-கள், சமாளிப்புகள்.
முஹம்மது மட்டுமல்ல அவரது கைத்தடிகளும், பத்ரு தாக்குதலை எதிர்பார்க்கவே இல்லை.அபூஸுஃப்யானின் வணிக்குழுவை கொள்ளையடிப்பதைப் பற்றி மட்டுமே ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துவரப்பட்ட கூட்டம், வணிகக்குழு தப்பிவிட்டதையும், அபூஜஹ்லுடன் போர் புரியவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதையும் அறிந்தபொழுது அவர்களுக்குள் சர்ச்சை உருவானது. அவர்களில் கணிசமான ஆட்கள்,வணிக்குழுவைத் தாக்குவதை மட்டுமே விரும்பியதால், அபூஜஹ்லுடன் போர்புரிவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த இடத்தில் இஸ்லாமியர்கள் கூறும் ஒரு விளக்கத்தையும் கவனிக்க வேண்டும். முஹம்மது வியாரக்குழுவைத் தாக்கிக் கொள்ளையடிக்கவே சென்றார் என்பதை அவர்களும் அறிவார்கள். அதை வெளிப்படையாக எப்படி கூறமுடியும்? அதனால் வேறொரு தந்திரத்தை கையாளுகின்றனர். குறைஷிகள்,மக்காவிலிருந்து முஹம்மதின் சீடர்களை அடித்துத், துன்புறுத்தி விரட்டியதாகவும், இனி அவர்கள் அங்கு வாழவே முடியாது என்ற சூழல் ஏற்பட்டதாகவும், அவ்வாறு வெளியேறியவர்களின் செல்வங்கள், இதர உடைமைகளையும் குறைஷிகள் அபகரித்துக் கொண்டனர். எனவே அவர்களைத் தாக்கி, அவர்களது உடைமைகளை சூறையாடுவது சரியானதே என்கின்றனர்.
இன்னும் சில இஸ்லாமிய அறிஞர்கள், அபூஸுஃப்யான் வியாபாரப் பொருட்களாக ஷாம் நாட்டிற்கு கொண்டுசென்றது முஸ்லீம்களது உடைமைகளைத்தான் எனவே அதைத் திரும்பப் பெறும் நோக்கிலேயே பத்ரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாவும் எனவே அதில் தவறில்லை என்றும் கூறுக் கொள்கின்றனர்.முஹம்மதின் சிடர்களுக்கு மக்கா நகரமே உடைமையாய் இருந்ததை போல முழம் போடுகின்றனர். இவர்களது இந்த கதைகளுக்கான பதிலை நாம் “ஹிஜ்ரத்” என்ற பதிவில் பார்த்தோம். அதிலிருந்து சில வரிகள்
“முஹம்மதின் சீடர்களில் பெரும்பாலும், அடிமைகளும், போக்கிரித்தனமாக ஊரைச்சுற்றிக் கொண்டிருந்த சில இளைஞர்களுமே! அரேபியர்கள், அடிமைகளைத் தங்களது உடமைகளாகவே கருதிவந்தனர். உதாரணத்திற்கு, உங்களுக்குச் சொந்தமான கால்நடைகளை பகிரங்கமாக கவர்ந்து செல்லப்படுவதை நீங்கள் அனுமதிப்பீர்களா? நிச்சயமாக இல்லை! குறைஷிகள் அதையே செய்தனர்”
அபூஜஹ்லா? பெரும் செல்வத்துடனுள்ள வியாபாரக் குழுவா? சர்ச்சை தொடர்கிறது…
”கொள்ளைப் பொருட்களை அல்லாஹ் வாரி வழங்கக் கூடும்” என்று முஹம்மது ஒரு ஆருடம் கூறி அழைத்து வந்தார், ஆனால் அலாஹ் வேறுவிதமாக அதை மாற்றுகிறான்.
"எதிரிகளின் இரண்டு கூட்டத்தினரில் ஒன்று உங்களுக்கு (சாதகமாக இருக்கும்)” என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள்! ஆயுதம் தரிக்காத (வியாபாரக்) கூட்டம் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலை நாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான்.
(குர்ஆன் 8:07)

அல்லாஹ்வின் விருப்பமோ அபூஜஹ்லைத் தாக்குவதுதான். ஆனால் அதை துணிந்து வெளிப்படையாகக் கூறாமல், இரண்டில் ஒன்று கிடைக்கும் என்று ஆரூடம் கூறுவது போல பூசி மழுப்புகிறான்; கோழையைப் போல முனகுகிறான். அல்லாஹ், தான் உண்மையை நிலை நாட்டவும் மறுப்போரை வேரறுக்கவும்விரும்புகிறேன், ”போய் அபூஜஹ்லைத் தாக்குங்கள்..!” என்று துணிந்து உத்தரவிடலாமே? அதைக்கூறுவதிலிருந்து அவனைத் தடுத்தது எது? முஹம்மதின் அடியாட்களிடம் கூறவேண்டாம்,முஹம்மதிடமாவது கூறியிருக்கலாம்; பாவம் அவரும்கூட ஏமாற்றத்தில் துவண்டுவிட்டார்.
அல்லாஹ்வின் இந்தச் செயலைத், தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ள முஹம்மதையும், அவரதுஅடியாட்களையும் நயவஞ்சகமாக அழைத்து வந்திருக்கிறான் என்றே கூறமுடியும்! அதனால்தான்வெளிப்படையாகக் கூறாமல் தடுமாறுகிறான். அவனது இந்த செயலை சூழ்ச்சி என்று கூறுவதேசரியானது! ஆனால் இஸ்லாமியர்கள் இதை அல்லாஹ்வின் திட்டம் அல்லது விதி என்று மழுப்புகின்றனர்.
ஏன் இவ்வாறு எது நிகழ்ந்தாலும் அல்லாஹ்வின் திட்டம் (சூழ்ச்சி) என்று கூறுகின்றனர்?
முஹம்மது, மலம் கழிக்கச் செல்வதற்குக்கூட தனது கடவுளின் வஹீயை துணைக்கிழுப்பவர். புனிதமிகுகொள்ளைத் தொழிக்குச் செல்லும் போது அல்லாஹ்வை கைவிடுவாரா? நிச்சயமாக அவ்வாறிருக்கஇருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த பத்ருகொள்ளை முயற்சி இரண்டாம் முறையாகவும்தோல்வியையைத் தழுவிவிட்டது. கொள்ளையடிக்க அடியாட்களைத் திரட்டிக்கொண்டு சென்றதுபயனளிக்கவில்லை, எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. எதை சொல்லி சமாளிப்பது ?
மிக எளிதான வழிருக்கிறது! வியாரக்குழு தப்பியதும் அல்லாஹ்வின் திட்டமே என்றொரு வஹீவெளியிட்டால் போதும் தனது மானத்தையும், கடவுளையும் தோல்வியிலிருந்து காப்பாற்றிவிடலாம்என்பதை முஹம்மது அறிந்திருந்தார்.
தோல்வி அல்லது வேதனையான நேரங்களில் “விதி” என்று கருதிக் கொள்வதால் மனரீதியாக ஆறுதல்அளிக்கிறது என்று விதிக் கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் சப்பைக்கட்டு கட்டுவார்கள், உண்மை அதுவல்ல!
கடவுளர்களின் மானத்தைப் பாதுகாக்கவே விதி என்ற கருத்தை மதக்கோட்பாடுகளில் உருவாக்கிவைத்திருக்க வேண்டும்!
அல்லாஹ்வின்(?) ஏடாகூடமான திட்டத்தினால் முஹம்மதிற்கு, வேறுவழியில்லாமல் குறைஷிகளைபத்ருகளத்தில் சந்திக்க வேண்டியதாயிற்று. போதிய ஆயுதபலம்கூட இல்லாத 300 பேர் கொண்டகொள்ளைக்கும்பல், 1000 பேர்களை வெற்றிகொண்டது எப்படி? அல்லாஹ் வழங்கிய உதவியின்காரணமாகவே இது சாத்தியமாயிற்று. முஹம்மது அல்லாஹ்வின் தூதரென்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்என்கின்றனர் இஸ்லாமியர்கள்.
அல்லாஹ் ஏன் உதவினான்?
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
…. "இறைவா! எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. இறைவா! எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக. இறைவா! இஸ்லாமியரில் இக்குழுவினரை நீ அழித்துவிட்டால், இந்தப் பூமியில் உன்னை வழிபட (இனி) யாரும் இருக்கமாட்டார்கள்” என்று தம் கரங்களை நீட்டி, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்துக்கொண்டேயிருந்தார்கள்….
(முஸ்லீம்)

தன்னை வழிபட ஒருவருமில்லாது போய்விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் மேலிட்டதால்தான்அல்லாஹ், உதவினானோ? முஹம்மதின் பிரார்த்தனையைக் கேட்டதுமே அல்லாஹ்வின் உதவிகள்விதவிதமாக பத்ருகளத்தில் இறங்கியதாம். பத்ருவில் முஹம்மதிற்குக் கிடைத்தவெற்றி மனிதர்களால்ஏற்பட்டதல்ல மாறாக அல்லாஹ் வெளிப்படுத்திய அற்புதங்களால்தான் நிகழ்ந்ததென்பதேஇஸ்லாமியர்களின் உறுதியான நிலைப்பாடு.
…அற்புதங்களால்தான் வெற்றி பெற முடிந்ததே தவிர போரில் பங்கெடுத்தவர்களின் ஆற்றலினால் அல்ல என்பதை உணர்த்தவே இவ்வாறு சுட்டிகாட்டுகிறான்..
193. அத்வைதத்தின் அறியாமை –onlinepj.com
இன்றைய திரைப்படங்களில், கணிணிவரைகலை தொழில்நுட்பத்தின் உதவியால் பலவிதமான தந்திரக் காட்சிகளை உருவாக்குகின்றனர். அவற்றில் எதுவும் உண்மையில்லை நாம் அறிவோம். இதுபோன்ற தந்திரக் காட்சிகளுக்கு முன்னோடி இந்த பத்ருகளம் தான் என்று நினைக்கிறேன் (இஸ்லாமிய அறிவியல் பதிவர்கள் கவனிக்க வேண்டும்) தந்திரவித்தையை, முதலில் சோதனை முயற்சியாக முஹம்மதின் கனவில் காண்பித்தபிறகு,
(முஹம்மதே!) உமது கனவில் அவர்களை அல்லாஹ் குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டியதை எண்ணிப் பாரும்!. அவர்களை அதிக எண்ணிக்கையினராக அல்லாஹ் உமக்குக் காட்டியிருந்தால் தைரியம் இழந்திருப்பீர்கள்…
(குர்ஆன் 8:43)

154944_full_1024x641.jpg
பிறகு களத்திலும் செயல்படுத்தினான். இது அல்லாஹ்வின் கிராஃபிக்ஸ் காட்சிபற்றிய அறிவிப்பு!
நீங்கள் (களத்தில்) சந்தித்துக் கொண்ட போது உங்கள் கண்களுக்கு அவர்களைக் குறைந்த எண்ணிக்கையினராகவும், அவர்களின் கண்களுக்கு உங்களைக் குறைந்த எண்ணிக்கையினராகவும் காட்டியதை எண்ணிப் பாருங்கள்! செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் செய்வதற்காக (இவ்வாறு காட்டினான்). காரியங்கள் அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும்.
(குர் ஆன் 8:44)

முதலில் வியாபரக்குழுவைக் கொள்ளையடிக்க ஆசைகாண்பித்து ஏமாற்றினான். இப்பொழுது ஆட்களின் எண்ணிக்கை குறைவாக மாற்றிக் காண்பித்து இருவரையும் ஏமாற்றி மோதவிடுகிறான். ஏனெனில், இந்த இரண்டு குழுக்களில் எவரை அதிகமாகக் காண்பித்தாலும் அச்சமடைந்து மற்றவர் பின்வாங்க வாய்ப்புள்ளது. இரு குழுவினரும் மோதியே தீரவேண்டுமென்ற அல்லாஹ்வின் தேவை நிறைவேறுவதற்காக அனைத்து விதமான தில்லுமுல்லு வேலைகளிலும் இறங்கிவிட்டான். அபூஜஹ்லை கொல்வதற்கு இன்னும் எத்தனை பொய்களை சொல்ல வேண்டியுள்ளதோ? சூழ்ச்சியில் மகாபாரதக் கதைகளில் வரும் சகுனியை மிஞ்சிவிட்டான்!
இதை நாம் சூழ்ச்சி என்றுதான் கூறமுடியும். அல்லாஹ் சூழ்ச்சி செய்வதாகவும், சூழ்ச்சி செய்வதில் சிறந்தவனென்றும் குர்ஆனின் பல இடங்களில் அறிவித்துக்கொள்கிறான். உண்மையைப் பொய்யாகவும்,பொய்யை உண்மையாகவும் காண்பித்து ஏமாற்றுவதே சூழ்ச்சி. இன்றும்கூட இராணுவத் தாக்குதல்கள் நிகழும் பொழுது, பொம்மை பீரங்கிகளையும், ஏவுகணைகளையும் கொண்டு இராணுவ முகாம்களை அமைத்து எதிரிகளை ஏமாற்றுவதுண்டு. இந்த யுக்தி ஈராக்-அமெரிக்கா போரிலும் கையாளப்பட்டதை அறிவீர்கள். பொதுவாகவே யுத்த காலங்களில் உண்மையான செய்திகளை அறிந்துகொள்வது சற்று சிரமம்தான். மனிதர்கள் தங்களது இயலாமையால் இத்தகைய செயல்களை மேற்கொள்கின்றனர். இந்த இயலாமையை ராஜதந்திரம் என்று தங்களைத் தாங்களே சொறிந்தும் கொள்வார்கள்.
இந்த அடிப்படையில் அல்லாஹ்வின் இந்த செயல் பகிரங்கமானதொரு சூழ்ச்சி எனலாம். ஆனால்,மனிதர்களை போலவே இயலாமையால் அல்லாஹ்வும் பொய்சொல்லி ஏமாற்றினான் என்பதை இஸ்லமியர்களால் எப்படி ஏற்க முடியும்?
… "அவர்கள் கேலி செய்தால் அல்லாஹ்வும் கேலி செய்வான்” என்பது "கேலி செய்ததற்கான தண்டனையை வழங்குவான்” என்ற கருத்திலும், "அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்” என்பது "சூழ்ச்சியைத் தோல்வியுறச் செய்வான்” என்ற கருத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது…
6. அல்லாஹ் இயலாதவனா? –onlinepj.com
அல்லாஹ் சூழ்ச்சி செய்தான் என்பதை நவீன நபி பீஜே-வால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எப்படியாவது இதை மழுப்பி மறைத்துவிட வேண்டுமென்று கடுமையாக முயற்சித்துள்ளார். என்ன செய்வது…! மறைந்து தொலைய மாட்டேன் என்கிறது. அல்லாஹ்வின் வார்த்தையை மாற்றமுடியுமா என்ன?! உண்மை என்னவெனில், பீஜேவின் விளக்கம், குர்ஆன் 8:44, 8:07-ம் வசனங்களில் எடுபடவில்லை! தான் எவ்வாறெல்லாம் சூழ்ச்சி என்ற பெயரில் பித்தலாட்டம் செய்து ஏமாற்றியுள்ளதை விளக்கமாகக் கூற அல்லாஹ்வே வெட்கப்படவில்லை இவர் ஏன் அலட்டிக்கொள்கிறார் என்று தெரியவில்லை.
அடுத்த அற்புதம் மந்திர மண் தாக்குதல்! இன்றைய கண்ணீர்ப் புகை குண்டுகளுக்கு முன்னோடி!?
தான் நிகழ்த்திய எந்த ஒரு தாக்குதலிலும் முஹம்மது தனது எதிரியுடன் நேருக்கு நேராக போர் புரிந்ததில்லை. அம்பு எறிதல், வாள் வீச்சு என்று எதுவும் தெரியாதவர். தனது எதிரியுடன் நேருக்குநேர் நின்று சண்டையிட்டதாக அவரது வரலாற்றிலிருந்து ஒரு செய்தியைக்கூட காணமுடியாது. தனது தொழிலுக்குத் தேவையான திறமைகளைத் தனது கடவுளிடம் கேட்டுப் பெறாமல், அந்தப்புரத்திற்காக, “அந்த” வாள்வீச்சிற்கான ஆற்றலை அல்லாஹ்விடம் கோரிப் பெற்றுக் கொண்டார் (இதைவிட வேறென்ன வேண்டுமென்கிறீர்களா? அதுவும் சரிதான்!) தாக்குதல்களில், மண்ணையும், கல்லையும் வீசியெறிந்து சாபமிட்டு ஒப்பாரி வைப்பது என்ற வீரமிக்க பணியைச் செய்வதுமட்டுமே அவரது வேலை. இங்கு அதற்கும் அல்லாஹ் வேட்டு வைத்துவிட்டான்.
அல்லாஹ்(?), மண்ணை எறிந்து உதவுதல்
அவர்களை நீங்கள் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ்வே அவர்களைக் கொன்றான்.(முஹம்மதே!) நீர் எறிந்த போது (உண்மையில்) நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்வே எறிந்தான். நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய முறையில் பரிசளிப்பதற்காக இவ்வாறு செய்தான். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
(குர் ஆன் 8:17)

இங்கு அல்லாஹ்வே அவர்களை கொலை செய்ததாகவும், மண்ணை எறிந்ததாகவும் சூழ்ச்சி செய்ததாகவும்,மார்த்தட்டிக் கூறுவதை நமது நவீன நபி பீஜே விரும்பவில்லை. சர்வவல்லமையுடையதாக கூறப்படும் அல்லாஹ், படையின் இறுதியில் பாதுகாப்பாக ஒளிந்து நின்றுகொண்டு, ஒரு கோழையைப்போல சாபமிட்டு மண்ணை எறிந்தான் என்பதை எப்படி ஜீரணிக்க முடியும்? எனக்கே மிகவும் கூச்சமாக இருக்கிறது, தூதர் பீஜேவால் எப்படி இதை ஏற்க முடியும்? எனவே தனது குர்ஆன் விரிவுரையில்(193) சுற்றிவளைத்து அல்லாஹ்வின் மூக்கையே தொட்டுவிட்டார்!
..நான் கல்லை வீசினால் போதும், எதிரிகள் ஓட்டமெடுப்பார்கள் என்று முஹம்மதே நீர் நினைத்து விடக்கூடாது, மாறாக குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியில் நீர் கல்லை வீசிய போது எனது வல்லமையால் அதை பரவச் செய்தேன்” என்பதுதான் இவ்வசனஹ்ட்தில் கருத்தாகும்…
193. அத்வைதத்தின் அறியாமை –onlinepj.com
என்று அல்லாஹ்வின் உளறல்களை சரிகாண்கிறார். அல்லாஹ் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன போலும். அல்லாஹ், தனது அந்தரங்க காரியதரியாக பீஜேவை நியமித்திருந்தால்,குர்ஆனின் உளறல்களை முன்பே களைந்திருக்க முடியும்! காலம் கடந்த யோசனை(!)
பத்ரு தக்குதல் திட்டமிடாமல் நிகழ்ந்ததென்பதால் முஸ்லீம்களிடம் போதிய ஆயுதங்கள்கூட இல்லாமல் இருந்ததென்று உண்மை புரியாமல் கதையளப்பார்கள்.
முஹம்மதுவின் உடனடி ஆயுதப் பட்டறை(?!) மரக்கிளையை பளபளக்கும் வாளாக மற்றிக் கொடுதத்தைப் பற்றி இப்ன் இஸ்ஹாக் கூறுவதைப் பாருங்கள்.
Ukkasha b. Mihsam b. Hurthan ak-Asadi, ally of B. ‘Abdu Shams, fought at Badr until his sward broken in his hand. He came to the apostle who gave him a wooden cudgel telling him to fight with that. When he took it he brandished it and it became in his hand a long, strong, gleaming sword, and he fought with it until god gave victory to the Muslims. The sward was called al-‘Aun …
(Page 305, Life of Muhammad a Translation of Ibn Ishaq’s Sirat Rasul Allah By A.Guillaume)
இதைத் தனது ”அர்ரஹீக்குல் மக்தூம்” என்ற நூலில் இஸ்லாமியப் பேரரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மானும் உறுதி செய்கிறார்.
ஜிப்ரீல் உள்ளிட்ட வானவர்படையை இறக்கி உதவுதல்

நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது "உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன்” என்று உங்களுக்குப் பதிலளித்தான்.
(குர்ஆன் 8:09)

முதலில் ஆயிரம் வானவர்களை இறக்குவதாகத்தான் திட்டம் இருந்திருக்கிறது. குறைஷிகளை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து வானவர்களின் எண்ணிக்கை மூவாயிரமாக அதிகரிக்கப்பட்டிருக்கலாம்!(?)
"(விண்ணிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவியது உங்களுக்குப் போதாதா?” என்று நம்பிக்கை கொண்டோருக்கு நீர் கூறியதை நினைவூட்டுவீராக!
அது மட்டுமல்ல! நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சும் போது திடீரென்றுஅவர்கள் உங்களிடம் (போரிட) வந்தால் போர்க்கலை அறிந்த ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.
(குர் ஆன் 3:124, 125)

அல்லாஹ், போர்க்கலை அறிந்த 5000 வானவர்கள் வரை அனுப்பலாம் என்ற திட்டத்தில்இருந்திருக்கிறன். முஹம்மதுவும் அவரது படையினரும் சரியாக அஞ்சவில்லை போலும் அதனால் 3000வானவர்களை ’ஆணி பிடுங்க’ அனுப்பிவிட்டு, 2000 வானவர்களை காத்திருப்போர் பட்டியலில்வைத்துவிட்டான்.
எனவே இஸ்லாமிய ஆதாரங்களின் படி, முஹம்மதின் படையினர் எண்ணிக்கை 313 அல்ல! 313+3000 = 3313 பேர் (எண்ணிக்கையில்) அடுத்தது எழும் மிக சாதாரணமான கேள்வி, ஒரு வானவர் எத்தனைமனிதர்களுக்கு சமம்? வானவர்களின் உதவி எத்தகையதாயிருந்தது? இதற்கு விடையாக சிலஹதீஸ்களை காண்போம்
இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார்
பத்ரு போரின்போது நபி(ஸல்) அவர்கள், ‘இதோ ஜிப்ரீல்! போர்த் தளவாடங்களுடன் தம்குதிரையின் தலையை பிடித்துக்கொண்டிருக்கிறார்’ என்று அரிவித்தார்.
(புகாரி 3995)
ஜிப்ரீல், மாற்றுமுள்ள வானவர்களுக்கு போர்க்களத்திற்கு வரும் பொழுதுமட்டும் குதிரைதேவைப்படுகிறது. மற்ற நேரங்களில் அப்படியே பறந்து வருவாராம். குதிரை, கழுதை, ஒட்டகம் தவிரஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு காட்டரபியின் அறிவிற்கு வேறென்ன தோன்றும்? அவரதுஉளறல்களை நம்பி மற்றவர்களின் உயிரை எடுப்பதற்கு இன்றும் ஒரு பெரும் கூட்டம்!
இந்தத் தாக்குதலில் ஜிப்ரீல் மட்டுமல்ல, அல்லாஹ்வின் முக்கிய மலக்குகள் அனைவருமே களத்தில்இறக்கப்பட்டனர். மரணத்தின் மலக்கு இஸ்ராயீல், இடியின் மலக்கு மீக்காயீல், இறுதிநாளில் சூர் என்றகொம்பை ஊதக்கூடிய இஸ்ராஃபீல் போன்றவர்களும் களத்தில் இறங்கி வாட்களைச் சுழற்றினர்.ஜிப்ரீலின் உருவ அமைப்பை அறிவீர்கள் இருப்பினும் அந்த ஹதீஸையும் காண்போம்
மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
…அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக்கொண்டிருந்தது” என்று கூறினார்கள்…
(முஸ்லீம்)
அல்லாஹ், இத்தகைய பிரம்மாண்ட தோற்றம் கொண்ட வானவர்கள்(!) 3000 பேர்களை, சாதாரணமனிதர்களின் கண்களுக்குத் தென்படாத (மாயஉருவில்?) முறையில் குறைஷிகளை எதிர்த்துகளமிறக்கினான். இத்தகைய பிரம்மாண்ட உருவங்களில் ஒன்று நிற்பதற்குக்கூட பத்ருகளம் போதாது,இதில் 3000 உருவங்கள் எப்படி செயலாற்றினவோ? அவர்கள் அமர்ந்து பயணம் செய்த, போர்செய்தகுதிரைகளின் உருவம் எத்தகையதாயிருந்ததோ? (எல்லாம் அல்லாஹ்வே அறிவான்(!) அவர்களின்செயல்திறனை பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.
…இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்றைய தினத்தில் முஸ்லிம்களில் ஒருவர் தமக்கு முன் சென்றுகொண்டிருந்த இணைவைப்பாளர்களில் ஒருவரை விரட்டிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது தமக்கு மேலே சாட்டையைச் சுழற்றி அடிக்கும் சப்தத்தையும், ஒரு குதிரை வீரர் "ஹைஸூம்! முன்னேறிச் செல்” என்று கூறியதையும் செவியுற்றார். உடனே தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த இணைவைப்பாளர் மல்லாந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்டார். அந்த இணைவைப்பாளரின் (அருகில் சென்று) அவர் பார்த்த போது, அவனது மூக்கில் காயமேற்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிபட்டது போல் அவனது முகம் கிழிந்து முகமெல்லாம் பச்சையாகக் கன்றிப் போயிருப்பதையும் கண்டார்…
(முஸ்லீம்)
கண்களுக்குத் தெரியாத எதிரியுடன் போர்புரிவது எளிதான காரியமா? இவைகள் போதாதென்று அல்லாஹ்வும், குறைஷிகளை பயமுறுத்தி உற்சாகமூட்டி உதவினான்.
"நான் உங்களுடன் இருக்கிறேன். நம்பிக்கை கொண்டோரைப் பலப்படுத்துங்கள்! (என்னை) மறுப்போரின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துவேன். எனவே கழுத்துகளுக்கு மேலே வெட்டுங்கள்! அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்!” என்று (முஹம்மதே!) உமது இறைவன் வானவர்களுக்கு அறிவித்ததை நினைவூட்டுவீராக!
(குர் ஆன் 8:12)

முஹம்மதின் சார்பாக 3000 வானவர்கள், அத்துடன் மாயஜாலவித்தைகள் களமிறங்கியும் குறைஷிகள் தரப்பில் 70 பேர் மட்டுமே கொல்லப்பட்டனர். தாக்குதலின் முடிவில் 70 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர் மீதமுள்ள சுமார் 860-க்கும் மேற்பட்டவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர் என்பது வேடிக்கையானது. அத்துடன்”அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்” என்று அல்லாஹ் கூப்பாடு போட்டுக் கொண்யிருந்ததை ஒருவரும் இங்கு பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை! இது அல்லாஹ்வின் இயலாமை என்று கூறுவதைத் தவிர வேறுவழியில்லை. ஆனால் ஆலீம்களோ மாபெரும் அற்புதமென்று கூறி தங்களையும், அப்பாவி முஸ்லீம்களையும் புல்லரித்து கொண்டிருக்கின்றனர்.
முஹம்மதின் பத்ரு வெற்றிக்கு, ஹதீஸ்களின் மற்றொரு பகுதி வேறு காரணங்களைக் கூறுகிறது.
…வெற்றியின் நற்செய்தியை அறிந்தவுடன் முஸ்லீம்களும் அவர்களது தலைவர்களும் நபி(ஸல்) அவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டனர். இவர்களின் சந்திப்பு ‘ரவ்ஹா’ என்ற இட்த்தில் நபி (ஸல்) அவர்களுடன் நிகழ்ந்தது. அப்பொழுது அவர்களிடம் மதீனாவைச் சேர்ந்த ஸலமா இப்னு ஸலமா (ரழி) “நீங்கள் எங்களுக்கு எதற்காக வாழ்த்து சொல்கிறீர்கள்? கட்டப்பட்ட ஒட்டகத்தைப் போன்றிருந்த சொட்டைத் தலை கிழவர்களைத்தான் நாங்கள் போரில் எதிர்கொண்டோம். எனவே அவர்களது கழுத்துகளை அறுத்தோம்” என்று கூறினார். நபி (ஸல்) புன்முறுவல் பூத்து “எனது சகோதரன் மகனே! நீ யாரை அப்படி கூறுகிறாயோ அவர்கள்தான் (குறைஷிகளின்) தலைவர்கள்” என்றார்.
(அர்ரஹீக்குல் மக்தூம்)

…Then he marched until he reached Rauha’ when the muslims met him. Salama B. Salama-So ‘Asim b. ‘Umar b. Qatada and Yazid b. Ruman told me – said, ‘What are you congratulating us about? By God, we only met some bald old women like sacrificial camels who are hobbled, and we slaughtered them!’ The apostle smiled and said, ‘But nephew, those were the chifs…
(Page 308, Life of Muhammad a Translation of Ibn Ishaq’s Sirat Rasul Allah By A.Guillaume)

இந்த சொட்டைத்தலை கிழவர்களைக் கொன்றதைத்தான் மாபெரும் அற்புதம், உலகம் காணத அதிசயம் என்று பீற்றிக் கொள்கிறார்கள். போரில் பங்கெடுத்தவரே வாழ்த்து கூறுவதற்குக்கூட தகுதிபெறாத வெற்றி என்கிறார். உடனிருந்த முஹம்மதுவும்கூட அதை மறுக்கவில்லை என்பது நாம் கவனிக்கத் தக்கது.
வயதான கிழவர்களைக் கொல்ல தந்திரவித்தைகளையும், வானிலிருந்து படைகளையும் இறக்கியதாக பீற்றிக்கொள்ளும் அல்லாஹ்வை நினைத்தால் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.
போர்முடிந்தவுடன் கைபற்றிய பொருட்களைப் பங்கிடும் விவகாரம் துவங்கியது. முதல் குற்றச்சாட்டு முஹம்மதின் மீதே விழுந்தது. முஹம்மதைப்பற்றி கூறும்பொழுது அவர், ’அல் அமீன் – நம்பிக்கைகுரியவர் என்று குறைஷிகள் கூட அழைத்தனர் என்று இஸ்லாமியர்கள் ’பீலா’ விடுவதை மறுத்து கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அவருக்கு குறைஷிகள் மத்தியில் மட்டுமல்ல தனது சீடர்களிடம் கூட அப்படியொரு நற்பெயர் இருந்ததில்லை என்கிறது பின்வரும் ஹதீஸ்.
Narrated Abdullah ibn Abbas:

The verse "And no Prophet could (ever) be false to his trust" was revealed about a red velvet. When it was found missing on the day of Badr, some people said; Perhaps the Apostle of Allah (peace_be_upon_him) has taken it. So Allah, the Exalted, sent down "And no prophet could (ever) be false to his trust" to the end of the verse.
(அபு தவூத் 3960)
மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது…
(குர் ஆன் 3:161)

சிவப்பு நிற சால்வை காணவில்லை என்றவுடன், சீடர்கள் சிறிதும் தயக்கமின்றி முஹம்மது எடுத்திருப்பார் என்கின்றனர். அல்லாஹ் உடனே வஹீயை விட வேண்டியதாயிற்று. இதுதான் ’அல் அமீன்’ என்பதன் பொருளோ?.
இந்த பத்ரு தாக்குதலிலுள்ள தர்க்க முறையிலான முரண்பாடுகளைப் பார்த்தோம். இனி இஸ்லாமின் அடிப்படைக் கொள்கையில் எழும் முரண்பாடுகளையும் காண்போம். பொதுவாக இத் தாக்குதலை கூறும் பொழுது முடிவு செய்யப்பட்ட வெற்றி என்கிறார்கள் “The battle has been passed down in Islamic history as a decisive victory..” என்கிறது விக்கிபீடியா. அதென்ன முடிவு செய்யப்பட்ட, தீர்மானிக்கப்பட்ட வெற்றி?
இரண்டிலொன்று கிடைக்கும் என்று வாக்களிக்கப்பட்டதே அதுவா?
அது வெறும் அறிவிப்புதான், தீர்மானமும், திட்டமும் தீட்டப்பட்டது எப்பொழுதென்று யாருக்கும் தெரியாது.அல்லாஹ்விடம் லவ்ஹுல்மஹ்ஃபூல் என்றொரு மூலப்பதிவேடு இருப்பதாகவும், அதில் பிரபஞ்சத்தின் அனைத்து செயல்களும், அதாவது நிகழ்ந்தவைகள், நிகழ்ந்துகொண்டிருப்பவைகள், இனி நிகழ இருப்பவைகள் என அனைத்துமே துள்ளியமாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இஸ்லாம் கூறுகிறது.அதை தீர்மானித்து செயல்படுத்துவது அல்லாஹ் மட்டுமே. அவனை மீறி ஒரு அணுகூட அசையமுடியாது;அசையக் கூடாது இதுதான் இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கை.
அவர்கள் செய்த ஒவ்வொரு காரியமும் ஏடுகளில் உள்ளது.
ஒவ்வொரு சிறியதும், பெரியதும் பதிவு செய்யப்பட்டுள்ளது
(குர் ஆன் 54:52, 53)

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
(குர் ஆன் 57:22)

அதை அப்படியே பத்ரு தாக்குதலுக்கும் பொருந்தும். அபூஸுஃப்யான் தப்பித்ததும், அபூஜஹ்ல் கொல்லப்பட்டதும், முஹம்மதின் படை வெற்றிகண்டதும் முன்பே இறுதி செய்யப்பட்டு லவ்ஹுல் மக்ஃபூல் ஏட்டில் பதியப்பட்ட அல்லாஹ்வின் திட்டமே! அபூஜஹ்லின் தாடியைப் பிடித்து, எப்படி, யாரால் தலைதுண்டித்து கொல்லப்பட வேண்டுமென்பது கூட முன்முடிவு செய்யப்பட்டதுதான். இந்த நம்பிக்கையில்லையெனில் ஒருவர் முஸ்லீமாகவே இருக்க முடியாது.
இது எப்படி இருக்கிறது எனில், எதிராளி என்று எவருமில்லாமல், சதுரங்க விளையாட்டில் இருமுனைகளிலும் ஒருவரே காய்களை நகர்த்தி இறுதியில், வெற்றி பெற்றுவிட்டதாகவும்; தன்னை இணையற்ற மாபெரும் வீரன், சிறந்த அறிவாளி, என்றெல்லாம் சதுரங்கக் காய்களிடம் பெருமை பாராட்டிக்கொண்டால் என்ன கூறத் தோன்றும்? இதை இயலாமை என்பதா? மனநோய் என்பதா?
பத்ரு தாக்குதைப் பற்றி தாக்குதலுக்குப் பின் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கூற நிறைய இருக்கிறது பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
தஜ்ஜால்

source:http://iraiyillaislam.blogspot.in

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

முகம்மதுவும் மற்ற நபிமார்களும்

அலி சினாவின் கவனத்திற்கு,

உங்களுடைய இணைய தளத்திலுள்ள உங்களுடைய கருத்துக்களை சும்மா படித்தேன். கீழ்க்கண்ட கேள்விகளை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் அவற்றை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்.

1. முஹம்மதுவுடைய பணியில் நீங்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால் பிறகு மோசஸ், ஆப்ரஹாம் தாவீத், இயேசு &முகம்மதுவுக்கு பிறகு வந்தவர்களான, கடவுள் ஒருவரே என்று முஹம்மது கூறியதையே கூறியவர்கள் யார், அவர்கள் அனைவரும் அல்லாஹ்விடம் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
மோசஸ், ஆப்ரஹாம், இயேசு போன்றவர்களை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பது முஹம்மது ஒரு கபட வேடதாரி என்ற உண்மைக்கு சம்பந்தமில்லாதது.
முகம்மதுவுக்கு பிறகு வந்தவர்களை பற்றி கேட்கிறீர்கள். எந்த மற்றவர்கள்? ஒன்று முஹம்மது பொய்யராக இருந்தார் அல்லது இந்த மற்றவர்கள்தான். தனக்கு பிறகு எந்த நபியும்(தீர்க்கதரிசி) வரமாட்டார் என்று முஹம்மது உரிமை கோரினார். முஹம்மதுக்கு வக்காலாத்து வாங்கி வாதம் புரிவதன்மூலம் அவருக்கு பின்பு வந்த அனைவரையும் நீங்கள் தானாகவே புறந்தள்ளி விட்டீர்கள்.

படத்திலிருந்து(Picture) முகம்மதை வெளியே எடுத்து விடுங்கள். நீங்கள் இப்பொழுதும் மற்ற எல்லா மதங்களிலும் நம்பிக்கை கொள்ள முடியும். படத்தில் அவர் இருந்தால், அவருக்கு பின்பு வந்த எல்லோருடைய உண்மையையும் நீங்கள் மறுக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், எவர்களை தான் பின்பற்றுவதாக அவர் உரிமை பாராட்டினாரோ அவர்களிடமிருந்து முஹம்மதின் போதனைகளும் செயல்களும் மிகவும் வேறுபட்டு இருந்ததால், அவருக்கு முன்பு வந்தவர்களின் ஏற்புத்தன்மையையும் நீங்கள் கேள்வி கேட்க வேண்டியிருக்கும்.

moon+god-1.jpg

அல்லாஹ் என்பது உண்மையான பெயர் இல்லை. அது "அரசர்" அல்லது "அதிபர்" என்பதை போன்ற ஒரு பட்டம் தான். அது உறுதிப்படுத்தும் வார்த்தையான அல்(Al / The / அந்த) மற்றும் இலாஹ்(Ilah) என்பவற்றை கொண்டது.அதற்கு கடவுள் என்று அர்த்தம். கஅபா வில் இருந்த ஹபல் (ஹுபல்) என்ற சந்திரக் கடவுளையே அது குறித்தது.

எலிசபெத் II ஐ "ராணி" என்ற அவருடைய பட்டப்பெயரால் பிரிட்டிஷ் மக்கள் அழைப்பதை போலவே, அரபியர்களும் ஹபலை அதனுடைய பட்டப்பெயரால் அழைத்தனர். ஆனாலும், ஹபலும் (Habal) யாவேஹ்வும்(Yaweh) ஒன்றல்ல.அது ஹ(Ha) மற்றும் பால் (Baal) ஆகியவற்றை கொண்டு அமைகிறது. எபிரேயுவில் ஹ(Ha) என்பது உறுதிபடுத்தும் சொல். பால் (Baal) என்பது பொய்யான கடவுள் என்று பைபிளில் நிராகரிக்கப்படுகிறது. ஹபால் பைபிளில் கண்டனம் செய்யப்படும் மோவாபியர்களின்(Moabites) கடவுள்.

சந்திரக் கடவுள் ஹபால் தான் அரபியர்களின் அல்லாஹ் என்ற உண்மையானது பிறை (Crescent) இஸ்லாமின் அடையாளக்குறி என்பதில் ஆதாரமாக விளங்குகிறது.

moon+god-2.jpg

அரபி பேசும் கிறிஸ்தவர்களும் யூதர்களும் கூட கடவுளை அல்லாஹ் என்றே அழைத்தனர். ஆனால் அரபியர்களின் அதே கடவுளை அவர்கள் அர்த்தம் பண்ணிகொள்ளவில்லை. யாவேஹ் என்ற இஸ்ரவேலின் கடவுளையே அவர்கள் அர்த்தம் கொண்டனர். பல்வேறு ராஜ்யங்களில் உள்ள மக்கள் தங்கள் முடிவேந்தர்களை "அரசர்" என்று அழைக்கின்றனர். ஆனால் ஒரே முடிவேந்தர்களை அவர்கள் எண்ணிக் கொள்வதில்லை. அதேமாதிரிதான்,இஸ்ரவேலின் அல்லாஹ்வும் அரபியர்களின் அல்லாஹ்வும் இரு வேறு தெய்வங்கள்.
வஞ்சகத்தின் அடுக்குகளில் உங்களுடைய கேள்வி ரகசியமாக ஒளிந்திருக்கிறது என்பதை நீங்கள் காண்கிறீர்களா?இஸ்லாத்தை ஆராய்வது என்பது வெங்காயத்தை உரிப்பதுபோல் ஆகும். ஒரு அடுக்கை நீங்கள் நீக்கும் பொது இன்னொன்றை நீங்கள் காண்கிறீர்கள். அடக்கத்திலோ ஒன்றுமே இல்லை.

எந்த வகையிலும், கடவுள் ஒரு நபர்(Person) என்று நான் கருதவில்லை. அது நம்முடைய விஷயங்களில் தலையிடுகிறது, நம்முடைய பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறது அல்லது தூதர்களையோ அல்லது ரட்சகர்களையோ அனுப்புகிறது என்று நான் கருதவில்லை. கடவுள் ஒரு நபராக இருந்தால், இயற்கை பேரழிவுகளிலிருந்தும் சீற்றங்களிலிருந்தும் அவர் நம்மை காப்பாற்றியிருக்க முடியும் அல்லது வேண்டும்.
2. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் — நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், உங்களை பொறுத்தவரை உங்களுடைய கடவுள் யார்(கடவுளின் இருப்பில் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால்).

பல பில்லியன் வருடங்கள் பரிணாமத்தின் உற்பத்தி பொருட்கள் நாம்.
3. உங்களை பொறுத்தவரை, எல்லா ஜீவராசிகளையும் யார் படைத்து இருக்கிறார், இயற்கையாக நிகழ முடியாத இந்த சிக்கலான ஒன்றை.

எல்லா சிக்கலான விஷயங்களும் இயற்கையாக நிகழக்கூடியவைகள் தான். நோவாவின் (நூஹ்) பேழை என்ற கதையை நம்பும் படைப்புவாதிகளோடு நான் விவாதித்திருக்கிறேன். நோவா தன்னுடைய பேழையில் எப்படி அத்தனை உயிரினங்களை அடைக்க முடிந்தது என்ற கேள்வியை எதிர்நோக்கியபோது, நோவாவின் வெள்ளத்திற்கு பிறகு சிறிய அளவிலான பரிணாமங்களும் பன்மைப்படுத்தல்களும் நிகழ்ந்தன என்று அவர்கள் கூறுகின்றனர்.உதாரணத்திற்கு, புலிகளும் சிங்கங்களும் அப்பொழுது ஒரே உயிரினமாக இருந்தன என்பது. இது கேலிக்குரியது.நோவாவின் வெள்ளம் 5000 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. பூமியின் வாழ்நாளில் இது ஒரு கண் சிமிட்டல்தான். இந்த குறுகிய காலத்தில் இந்த அளவு வேறுபாடு அடைதல் சாத்தியமில்லாதது. இந்த சாத்தியமற்றதை அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் பாக்டீரியாவிலிருந்து நானூறு கோடி வருடங்களில் மனிதர்கள் பரிணமித்தார்கள் என்று நாம் கூறும்போது அவர்கள் காலை பின்வாங்குகிறார்கள். சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள்,சிறுத்தை புலிகள் மற்றும் மற்ற பூனை போன்ற விலங்குகள் பந்தேரா(Panthera) என்ற ஒரே இனத்தின் உறுப்பினர்களே. அவைகளுடைய பொதுவான மூதாதை முன்பு ஐம்பது லட்சம் வருடங்களுக்கு குறைவான காலத்திற்குள் வாழவில்லை. அவைகளுக்கு இடையேயான மாற்றங்கள் குறைந்தது ஐம்பது லட்சம் வருடங்களில் நிகழ்ந்தன, ஐந்தாயிரம் வருடங்களில் அல்ல.
4. மனிதர்களால் உருவாக்கப்பட்ட மற்ற எந்த மதத்தை காட்டிலும் இஸ்லாத்தின் வரலாறு தெளிவாக உள்ளது.

அது மிக தெளிவாக உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். முஹம்மது மேல் ஏற்றிக் கூறப்பட்ட பல பொய்யான ஹதீத்கள் உள்ளன. ஆனால் உண்மையான ஒன்றிலிருந்து அவைகளை பிரித்தெடுப்பது மிக சுலபமானதே.முஹம்மதின் உண்மையான வரலாற்றை நான் கட்டமைத்துள்ளேன். அவருடைய வன்முறை மனநோய்த்தனமான மனதை(Psychopathic mind) கூர்ந்து பார்த்துள்ளேன். அவருடைய வாழ்க்கை வரலாற்றின் தெளிவான தன்மைக்கு நன்றிகள் உரித்தாகுக.
5. கடைசியாக, நீங்கள் மரணிக்கும்போது உங்களுடைய ஆத்துமா எங்கே செல்லும் என்பதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

நன்கொடைகளை திரட்டும் உங்களுடைய இடைவிடாத அட்டவணையிலிருந்து சிறிது நேரத்தை எடுத்துக்கொண்டு நான் மேலே வைத்துள்ள விஷயங்களை பற்றி சிந்திக்க முயற்சி செய்யுங்கள்.

தங்களுக்கு நன்றி,
எஸ்.வாட்சன்
லண்டன்

உங்களுடைய மூன்றாவது கேள்வியை போன்றே, இது கேள்வியையே மன்றாடி வேண்டி கேட்டுக்கொள்வது என்று தர்க்க சாஸ்திரத்தில்(Logic) அறியப்படுகின்ற தவறான வாதம்(Fallacy) ஆகும். அதில் வாத அடிப்படைகள்(Premises) முடிவு செய்யப்பட்டதே (Conclusion) உண்மை என்ற உரிமை கோருதலை கொண்டவை.

மூன்றாவது கேள்வியில், "… இந்த சிக்கலான விஷயங்கள் இயற்கையாக நிகழ முடியாது" என்று நீங்கள் உறுதிபடுத்தினீர்கள். அந்த வாதத்தின் அடிப்படையே(Premise) தவறானது. சிக்கலான விஷயங்கள் இயற்கையாக நிகழ்கின்றன. அது காலத்தை பற்றிய கேள்விதான். பல நூறு கோடி வருடங்கள்(Billions of years) என்பது நீண்ட காலம். சின்னஞ்சிறு மாற்றங்கள் கூடுகின்றன. பல பத்து லட்ச(Millions of tiny changes) சின்னஞ்சிறு மாற்றங்கள் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்குகின்றன.

ஐந்தாவது கேள்வியில், ஆத்துமா இருக்கிறது, தொடர்ந்து ஜீவிக்கிறது என்று நீங்கள் அனுமானித்து அது எங்கே செல்கிறது என்று என்னை கேட்கிறீர்கள். நாம் ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்து, இந்த ஆத்துமா என்பது உள்ளதா என்றும் அது தொடர்ந்து ஜீவிக்குமா என்றும் கேட்போம். அந்த கேள்விகள் பதிலளிக்கப்பட்டவுடன், அது எங்கே செல்கிறது என்ற கேள்வியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோம்.

உடலை சாராமல் ஆத்துமா இருக்கிறதா? எனக்கு தெரியாது! அது இருக்க முடியும் என்பதை நான் மறுக்கவில்லை.ஆனால் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. அது ஒரு நம்பிக்கை (Belief) சார்ந்த விஷயம். நான் நம்பிக்கை சார்ந்த மனிதன் இல்லை. ஆத்துமாக்கள் தொடர்ந்து ஜீவிக்க கூடும் என்று நீங்கள் நம்பக்கூடும். அதனோடு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் உங்களோடு ஒத்துபோகவோ அல்லது மாறுபடவோ முடியாது. நான் சந்தேகவாதியாகவே (Skeptic) இருக்கிறேன்.

இப்பொழுது, ஆத்துமா தொடர்ந்து ஜீவிக்கும் என்று அனுமானித்துக் கொள்வோம். சுவர்க்கம் மற்றும் நரகம் பற்றிய முஹம்மதின் சித்தரிப்பு உண்மையானதாக இருக்க முடியாது என்பது நிச்சயமானது. பெரும்பாலான மக்கள் அதை புரிந்து கொள்வதை போன்று ஆவி உலகத்தை பற்றிய புரிதல் முகம்மதுவுக்கு இருந்ததில்லை. மரணத்திற்கு பிறகான வாழ்க்கை குறித்த அவருடைய கருத்துரு(Concept) ஸ்தூலமான(Physical), இந்த உலகத்துக்குரியதாகவே இருந்தது.அவருடைய சுவர்க்கம் என்பது வேசிகளும், பானங்களும், உணவுகளும், எல்லா வகையான விபச்சாரத்தனங்களும் சிற்றின்ப சந்தோஷங்களும் நிறைந்தது. அவருடைய நரகமும் கூட சித்திரவதையும் கொடூர வேதனையும் கொண்ட ஸ்தூலமான இடமே(Physical place).
நான் ஒரு முஸ்லிம் என்றும் என்னுடைய அன்புக்குரியவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்றும் வைத்துக்கொள்வோம்.காபிர்களாக (உண்மையை மறைப்பவர்கள் என்பது நேரடி பொருள்) இறந்துபோன என்னுடைய அன்புக்குரியவர்கள் நரகத்தில் எரிந்துகொண்டிருக்கும்போது சுவர்கத்தில் உடலுறவு கொள்வதை, அருந்துவதை, உண்பதை என்னால் ஆனந்தமாக அனுபவிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது! எனக்கு அதுவே நரகம். மாறாக, நான் அவர்களுடன் இருந்து அவர்களுடைய வலியையும் துன்பத்தையும் பகிர்ந்து கொள்வேன்.

ஆனால் முகம்மதுவால் அவ்வளவு தூரம் பார்க்க முடியவில்லை. இதை அவரால் காணமுடியாததற்கு காரணம் என்னவெனில், அவர் தன்னை மட்டுமே உயர்வாக நினைக்கும் மனநோயாளியாக (Narcissist) வும் மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் தன்மையை (Empathy) இழந்தவராகவும் இருந்தார். மற்றவர்களின் வலிகளை அவர் உணராததால் மற்றவர்களும் அவைகளை உணர்ந்து கொள்வதில்லை என்று அவர் அனுமானித்துக் கொண்டார்.வருத்தமான விஷயம், அவருடைய நீர்க்குமிழி பிரபஞ்சத்தில் மாட்டிக்கொண்டவர்களும் கூட தன்னை மட்டுமே உயர்வாக நினைக்கும் மனநோயாளிகளாக(Narcissists) வும் மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் தன்மை இல்லாதவர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட சுனாமி அல்லது நியூ ஆர்லியன்ஸில் ஏற்பட்ட சூறாவளி காற்று மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களில் மக்கள் இறக்கும்போது,முஸ்லிம்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியடைந்து அல்லாஹ்வை புகழ்கின்றனர்.அவர்களுடைய அவநம்பிக்கைக்காக அல்லாஹ் அவர்களை தண்டித்திருக்கிறார் என்று அவர்கள் நினைக்கின்றனர். எந்த மாதிரியான மனிதர்கள் இப்படி மனிதத்தன்மை அறவே இல்லாதவர்களாக இருக்க முடியும்?முஹம்மதுடைய பெருங்குடலின் பகுதிகளாக முஸ்லிம்கள் ஆகிவிட்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் நரகம் மற்றும் சுவர்க்கம் பற்றிய அவருடைய காட்சியில் எந்த தவறையும் காண்பதில்லை. தன்னை நம்பாததற்காக அவ்வளவு துன்புறுத்தி இன்பம் காணும் வகையில் மனிதர்களை என்றென்றைக்குமாக எரிக்கின்ற ஒரு தெய்வத்தை வணங்குவதற்கு ஒருவர் உண்மையாகவே முட்டாள்தனமாகவோ அல்லது இதயத்தில் தீமை கொண்டவராகவோ தான் இருக்க முடியும். மூளையை பயன்படுத்தாமல் தங்களுக்கு இட்ட கட்டளைப்படி மட்டுமே செயல்படுபவர்களாக(Zombies) முஸ்லிமாக சுருக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுடைய மனசாட்சியை இழந்துவிட்டிருக்கிறார்கள்.

எந்த வகையிலும், ஒவ்வொரு ஆன்மீக குருவும் அவருடைய/அவளுடைய சொந்த நற்குணத்தை கொண்டே ஆராயப்படவேண்டும். புத்தர், இயேசு, முஹம்மது மற்றும் டேவிட் கோரேஷ் ஆகியவர்களை ஒன்றாக சேர்த்து கட்டி அவர்கள் அனைவர் மேலும் ஒரே தீர்ப்பை நாம் வழங்க முடியாது. டேவிட் கோரேஷும் முகம்மதுவும் மிகத் தீமையான சீக்கு பிடித்த தனி மனிதர்கள்.

மூல ஆசிரியர் : அலி சினா
மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்

source:http://iraiyillaislam.blogspot.in

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ஹிஜ்ரத்

hijrah-622-ce.png கிபி 622 –ல் முஹ்ம்மது மக்காவிலிருந்து யஸ்ரிப் என்ற மதீனாவிற்கு புலம்பெயர்ந்தார். இதை ஹிஜ்ரத் என்றும், அன்றிலிருந்து புதிய சகாப்தத்துடன், இஸ்லாமியக் காலக்கணக்கு துவங்குவதாக கூறுவதையும் நாம் அறிவோம். புதிய சகாப்த்தம் என்று அவர்கள் கூறுவதில் உண்மை இருக்கிறது. ஆம், முஹம்மதின் வாழ்கை, ஹிஜ்ரத்திற்குமுன் ஹிஜ்ரத்திற்குப்பின் என்று முரண்பட்ட இரண்டு பகுதிகளாக காணப்படுகிறது. ஹிஜ்ரத்திற்குமுன் அவரது செயல்களில் கற்பனையாக உளறிக் கொண்டிருந்தது மற்றும் குழந்தை ஆயிஷாவுடன் திருமணம் என்பதைத் தவிர குறைகாண வேறொன்றுமில்லை. அல்லாஹ்வின் அனுமதி என்ற பெயரில் அவர், வன்முறையாளராக பெரும் அளவிலான குற்றச்செயல்களை நிகழ்த்தியது ஹிஜ்ரத்திற்குப் பின்னர்தான். மக்கா நகரத்து குரைஷியர்களால் முஹம்மது மற்றும் அவரது அடியார்களின் உயிருக்கு மிகப்பெரும் அச்சுருத்தல் ஏற்பட்டதாலேயே ஹிஜ்ரத் நிகழ்ததென்றும், அவர்களுக்கு பதிலடிகொடுக்கவே வேறுவழியின்றி தாக்குதல்களும், சூறையாடல்களும் மேற்கொள்ளப்பட்டதாக கூறும் அதேவேளையில், அல்லாஹ்வின் அறிவுறுத்தல் அல்லது ஆணை காரணமாகவே முஹம்மதுவும், அவரது சீடர் குலாமும், தங்களது தாயகமான மக்கா நகரை பிரிந்து செல்ல நேர்ந்தது என்று முரண்பாடகவும் கூறுவார்கள்.
இஸ்லாமியர்களின் கூற்றுப்படி, முஹம்மதிற்கு ஆதரவாக இருந்த அபூதாலிப், சீமாட்டி கதீஜா ஆகியோரின் மரணத்திற்குப்பிறகு அவரது வாழ்க்கையும், பொருளாதார நிலைமையும் கேள்விகுறியாகிறது. இன்றைய ரூபாய் மதிப்பில் சுமார் 264 ஆயிரம் கோடி மதிப்புடைய சீமாட்டி கதீஜாவின் செல்வம் முழுவதையும் இஸ்லாமின் வளர்ச்சிக்காக செலவு செய்து ஓட்டாண்டியாகிவிடுகிறார் என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
முஹம்மதுவைப்பற்றி வர்ணனை செய்யும் பொழுது அவர் குறைஷிகளின் கூட்டத்திலேயே மிகச்சிறந்த பண்பாளர், நம்பிக்கையாளர் ”அல்அமீன்” என்றெல்லாம் கதையளப்பார்கள். ஆனால் குர்ஆனோ முஹம்மதிற்கு, குறைஷிகளிடையே அப்படியொன்றும் மகத்தான மரியாதை இருந்ததில்லை என்கிறது.
"இவ்விரு ஊர்களில் உள்ள மகத்தான மனிதருக்கு இந்தக் குர்ஆன் அருளப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுகின்றனர்.
(குர் ஆன் 43:31)
தங்களது கடவுளர்களை தரக்குறைவாக ஏசுகிறார் என்ற முறையில் முஹம்மதின் மீது மக்கத்து குறைஷிகளுக்கு கோபமிருந்திருக்கிறது அதை அபூதலிப்பிடம் தெரிவித்திருந்தனர். அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு மக்காவில், முஹம்மதின் உயிருக்கு அச்சுருத்தல் இருந்ததா? முஹம்மது தரப்பில் முன்வைக்கப்படும் ஹதீஸ்களில் இரண்டைப் பார்ப்போம்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபா அருகில் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது (அபூஜஹ்ல், உக்பா பின் அபீமுஐத் உள்ளிட்ட) குறைஷிக் குழாம் ஒன்று தங்கள் அவையில் கூடியிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவன், (பொது இடத்தில் தொழும்) இந்த பகட்டுக்காரரை நீங்கள் பார்க்கவில்லையா? என்று கூறிவிட்டு, இறைச்சிக்காக அறுக்கப்பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகத்தை நோக்கிச் சென்று அதன் சாணத்தையும், அதன் இரத்தத்தையும் அதன் கருவைச் சுற்றியுள்ள சவ்வையும் கொண்டுவந்து, முஹம்மத் சிரவணக்கம் செய்யும் நேரம் பார்த்து அவரது முதுகின் மீது அதை வைத்து விட வேண்டும். (யார் இதற்குத் தயார்?) என்று கேட்டான். அங்கிருந்தவர்களிலேயே படுபாதகனாயிருந்த ஒருவன் (அதற்கு) முன்வந்தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கம் செய்த போது அவர்களுடைய முதுகின்மீது அ(ந்த அசுத்தத்)தைப் போட்டனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியே சிர வணக்கம் செய்தவாறே இருந்தார்கள்.
(இதைப் பார்த்துக் கொண்டிருந்த குறைஷியர்) ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். உடனே ஒருவர் (நபி (ஸல்) அவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கிச் சென்றார். -அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் சிறுமியாக இருந்தார்கள். (செய்தியறிந்த) ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஓடோடி வந்தார்கள்.
அவர்கள் வந்து அசுத்தங்களை அவர்களை விட்டும் எடுத்தெறியும்வரை நபியவர்கள் அப்படியே சிரவணக்கம் செய்தபடியே இருந்தார்கள். அ(வ்வாறு செய்த)வர்களைப் பார்த்து ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஏசினார்கள்…
(புகாரி 520)
ஃபாத்திமா மட்டும் அங்கு வரவில்லையென்றால் மூச்சுதிணறி முஹம்மது இறந்திருப்பார் என்று கண்ணீர்மல்க மதப்பரப்புரை செய்வதை நீங்கள் அறிவீர்கள். மற்றொரு ஹதீஸையும் பார்ப்போம்.
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்பவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது? என்று நான் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், (ஒரு முறை மக்காவில்) உக்பா பின் அபீ முஐத் என்பவன், நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் வந்து தன் போர்வையை அவர்களுடைய கழுத்தில் போட்டு அதை (அவர்களின் மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்ததை நான் பார்த்தேன்…
(புகாரி 3678)
அபூதாலிப், மற்றும் சீமாட்டி கதீஜாவின் மரணத்திற்குப் பிறகு, மக்கத்து குரைஷிகளால் முஹம்மதின் உயிருக்கு பாதுகாப்பில்லாமல் இருந்ததெனக் கூறிக்கொள்வது அல்லாஹ்விற்கும், குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் எதிரானது. ஏனெனில் முஹம்மது, அல்லாஹ்வின் உயர்மட்ட பாதுகாப்பிலிருப்பவர். முஹம்மதிற்கு எதிராக சூழ்ச்சி செய்வதைக்கூட அனுமதிக்க முடியாதென்கிறது குர்ஆன்.
… எனவே, நிச்சயமாக அவன், அவருக்கு முன்னாலும், அவருக்குப் பின்னாலும் பாதுகாவலரை நடத்துகிறான்
(குர் ஆன் 72:27)
தீய காரியங்களுக்காக சூழ்ச்சி செய்தோரை பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்து விடுவான்; அல்லது அவர்கள் அறியாத விதத்தில் வேதனை அவர்களுக்கு வந்து விடும்; அல்லது தமது காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே அவர்களை அவன் பிடிப்பான்..
(குர்ஆன் 16:45)
அபூதாலிப் அல்லது கதீஜா இருந்தாலும் இல்லையென்றாலும் அல்லாஹ்விவின் பாதுகாப்பில் எந்த மாற்றமும் இருக்க முடியாதல்லவா? ஆனால் இவர்களோ முஹம்மதிற்கு எதிராக, குறைஷிகள் கடுமையான தொல்லைகள் விளைவித்ததாகவும், கொலைசெய்ய முயன்றதாகவும், கூறுவதன் மூலம் அல்லாஹ்வை கையாலாகாத கடவுளாக மாற்றிவிட்டனர். மக்காவில் முஹம்மதிற்கு, அல்லாஹ் பாதுகாப்பு ஏற்பாடுகளைப்பற்றி ஹதீஸ் கூறுவதைப் பாருங்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்காவில் ஒரு முறை) அபூஜஹ்ல், "உங்களிடையே முஹம்மத் (இறைவனை வணங்குவதற்காக) மண்ணில் தமது முகத்தை வைக்கிறாரா?” என்று கேட்டான். அப்போது "ஆம்’ என்று சொல்லப்பட்டது. அவன், "லாத் மற்றும் உஸ்ஸாவின் மீதாணையாக! அவ்வாறு அவர் செய்துகொண்டிருப்பதை நான் கண்டால், அவரது பிடரியின் மீது நிச்சயமாக நான் மிதிப்பேன்; அல்லது அவரது முகத்தை மண்ணுக்குள் புதைப்பேன்” என்று சொன்னான்.
அவ்வாறே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது, அவர்களது பிடரியின் மீது மிதிப்பதற்காக அவர்களை நோக்கி வந்தான். அப்போது அவன் தன் கைகளால் எதிலிருந்தோ தப்பிவருவதைப் போன்று சைகை செய்தவாறு வந்தவழியே பின்வாங்கி ஓடினான். இதைக் கண்ட மக்கள் திடுக்குற்றனர். அவனிடம், "உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவன், "எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழ் ஒன்றையும் பீதியையும் இறக்கைக(ள் கொண்ட வானவர்)களையும் கண்டேன்” என்று சொன்னான்.
(இதைப் பற்றிக் கூறுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் மட்டும் என்னை நெருங்கியிருந்தால் அவனுடைய உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்கள்” என்று சொன்னார்கள்.
(முஸ்லீம்)
இங்கு, முஹம்மதைத் தாக்கும் நோக்கில், அபூஜஹ்லால், நெருங்கக்கூட முடியவில்லை, மீறி நெருங்கியிருந்தால் அவனது உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்களாம். இதே அபூஜஹ்லும் அவரது நண்பர்களும் ஒட்டகத்தின் கருப்பை சவ்வுகளை முஹம்மதின் தோள்மீது இட்டபொழுதும், உக்பா பின் அபீமுஐத் போர்வையால் மூச்சு திணறுமளவிற்கு முஹம்மதின் கழுத்தை நெரித்த பொழுதும் எதுவும் நிகழவில்லை. பாதுகாப்பிற்காக அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட மலக்கு எங்கே போனது? அவர்களது உடல் உறுப்புகள் பிய்த்தெடுக்கப்படவில்லையே ஏன்? இதற்கான பதிலை இஸ்லாமியர்கள்தான் கூறவேண்டும். (அல்லாஹ்வின் நாட்டம் அல்லது திட்டப்படியே முஹம்மது யஸ்ரிப்(மதீனா) சென்றார் என்பதுதான் அவர்களது பதில்!)
சரி..! இப்படியொரு படுபயங்கரமான(!?) வானவர்களின் பாதுகாப்பு இருக்கையில், மக்காவை விட்டு எதற்காக ஓடவேண்டும்? மதீனாவாசிகளிடன் ஏன் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டும்? அல்லது இதே வானவர்கள் மதீனாவிற்கு வந்து பாதுகாக்கமாட்டாரா? ஹிஜ்ரத்தின் அவசியம்தான் என்ன? தனது ஏற்பாடுகளின் மீது அல்லாஹ்விற்கே நம்பிக்கையில்லையா?, அல்லது மலக்குகள் மனிதர்களைவிட மிகபலவீனமானவர்களா?.
ஹிஜ்ரத்திற்கு காரணம் என்னவென்று இப்படி மண்டை பிய்த்துக் கொள்ளவேண்டியதில்லை. மதீனாவில் தனக்கு ஆதரவு பெருகியிருப்பதாக முஹம்மது கருதினார் அதனால் மதீனா சென்றுவிட்டார் அவ்வளவுதான்.
முஹம்மது தன்னை அல்லாஹ்வின் தூரென்று அறிவித்துக் கொண்ட பத்தாம் ஆண்டில் தனது கொள்கைகளை மக்கா நகருக்கு வெளியிலிருப்பவர்களுக்கும் கூறத்துவங்குகிறார். ஹஜ்ஜின் காலம் துவங்கியவுடன் கஅபாவை வணங்க வந்த யஸ்ரிப்வாசிகளிடமும் தனது மதவியாபாரத்தை செய்கிறார். அது அவருக்கு நல்ல பலனைக் கொடுத்தது. அதன் பயனாக தனது விற்பனைப் பிரதிநிதிகளை யஸ்ரிப் என்ற மதீனாவில் நியமித்து வியாபாரத்தை வளர்த்தெடுக்கிறார். இந்நிலையில் கல்வியறிவு இல்லாத யஸ்ரிப்(மதீனா)வாசிகளுடன் அகபாவில் ரகசியமாக சந்தித்து இரண்டுமுறை ஒப்பந்தங்களையும் செய்துகொள்கிறார்.
முதல் ஒப்பந்தத்தில், தன்னைப் பற்றிய செய்தியை யஸ்ரிப்பில் பரப்ப ஏற்பாடு செய்கிறார். இதன் பயனாக முஹம்மதை ஏற்றுக் கொண்டவர்களுடன் இரண்டாம் ஒப்பந்தமும் ஏற்படுகிறது. இப்னு அப்பாஸ் அப்துல் முத்தலிப், முஹம்மதின் சார்பாக பேசுகிறார்.
“கஸ்ரஜ் கூட்டத்தினரே! முஹம்மது எங்கள் மக்களிடம் பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும் இருக்கிறார். எனினும் அவர் உங்களுடன் இணைந்துவும், உங்களுடன் ஒன்றிவிடவும் விரும்புகிறார். அவரது பாதுகாப்பை கவனத்தில் கொள்ளவதாக இருந்தால் நீங்கள் அழைத்துச் செல்லலாம்” என்றார். கஅப் என்பவர் மதீனாவாசிகளின் சார்பாக உறுதிமொழி அளிக்கிறார்.
(இப்ன் ஹிஷாம்)
“O people of al-khazraj (the Arabs used the term to cover both Khazraj and Aus). You know what position Muhammad hold among us. We have protected him from our own people who think as we do about him. He lives in honour and safety among his people, but he will turn to you and join you. If you think that you can be faithful to what you have promised him and protect him from his opponents, then assume the burden you have undertaken. But if you think that you will betray and abandon him after he has gone out with you, then leave him now. For he is safe where he is.” …
(Page 203, Life of Muhammad a Translation of Ibn Ishaq’s Sirat Rasul Allah By A.Guillaume)
மக்காவில் முஹம்மது, தக்க பாதுகாப்புடன்தான் இருந்திருக்கிறார், அவராது தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாகவே மதீனா செல்கிறார் என்பதை கவனிக்கவேண்டும். ஆனால், முஹம்மது ஹிஜ்ரத் செய்ததற்கு, அல்லாஹ் கூறும் காரணங்களை கவனித்துப் பாருங்கள்,
தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?
(குர்ஆன் 9:13)
மக்கள் உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சி, குறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களுக்குப் புகலிடம் அளித்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான்.
(குர் ஆன் 8:26)
முஹம்மதை குறைஷிகள் என்ன செய்தனர் என்பதில் அல்லாஹ்வினால் ஒரு தெளிவான முடிவிற்கு வரமுடியவில்லை போலும்!. மேலும் ஹிஜ்ரத்தின் பொழுது மக்காவில் 70-80 பேர்களே முஹம்மதை ஏற்றிருந்தனர்.
உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.
(குர்ஆன் 8:30)
1. மக்காவாசிகள் முஹம்மதை பிடித்து வைத்துக்கொள்ள சூழ்ச்சி செய்தனர்,
2. மக்காவாசிகள் முஹம்மதை கொலை செய்ய சூழ்ச்சி செய்தனர்,
3. மக்காவாசிகள் முஹம்மதை மக்காவிலிருந்து வெளியேற்ற சூழ்ச்சி செய்தனர்.
அல்லாஹ் கூறும் இந்த மூன்று காரணங்களும் ஒன்றுக்கொன்று முரணானவைகள்.
1. முஹம்மதை, மக்காவிலிருந்து வெளியேற்ற விரும்புபவர்கள், அவரை எதற்காக பிடித்து வைக்க வேண்டும்?
2. முஹம்மது தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக பிடித்துவைக்க சூழ்ச்சி செய்பவர்கள், எதற்காக அவரைக் கொல்வதற்காக சூழ்ச்சி செய்ய வேண்டும்?
3. முஹம்மதை கொல்ல சூழ்ச்சி செய்பவர்கள், ஊரைவிட்டு எதற்காக வெளியேற்ற சூழ்ச்சி செய்ய வேண்டும்?
இதற்கெல்லாம் மேலாக அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறானாம்! சர்வவல்லமையுடையதாக கூறிக்கொள்ளும் அல்லாஹ்விற்கு, மக்காவில் புகலிடம் அளிக்கவோ, பலப்படுத்தவோ முடியவில்லை. இதை அல்லாஹ்வின் இயலாமை என்று கூறுவதே சரியானது. இதனால்தான் அல்லாஹின் திட்டப்படியே முஹம்மது மதீனா சென்றார் என்றொரு சமாளிப்பை கூறுகின்றனர். அல்லாஹ் அளித்ததாக கூறிக்கொள்ளும் தூய்மையானவைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியும், இருப்பினும் அடுத்துவரும் பதிவுகளில் அதைப்பற்றி பார்க்கலாம். உண்மையில், முஹம்மதின் ஆதரவாளர்கள் அனைவருமே ஹிஜ்ரத் செய்வதை விரும்பினர் என்று கூறுவதற்கில்லை, அவர்களில் சிலருக்கேனும் விருப்பமில்லாமல் இருந்திருக்க வேண்டும், ஹிஜ்ரத் செய்வதற்காக எப்படியெல்லாம், கெஞ்சுகிறான், மிரட்டுகிறான் என்பதைப் பாருங்கள்.
நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவிகள் செய்தோரும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்யாதோர், ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களிடம் உங்களுக்கு எந்த விதமான நட்பும் இல்லை. மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுதல் உங்களுக்குக் கடமை. நீங்கள் உடன்படிக்கை செய்த சமுதாயத்திற்கு எதிராக தவிர. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
(குர் ஆன் 8:72)
அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்பவர் பூமியில் அதிகமான புகலிடங்களையும், வசதிகளையும் பெற்றுக் கொள்வார். அல்லாஹ்வை நோக்கியும், அவனது தூதரை நோக்கியும் ஹிஜ்ரத் செய்து தன் வீட்டை விட்டு புறப்பட்டுச் செல்பவருக்கு மரணம் ஏற்பட்டால் அவருக்குரிய கூலி அல்லாஹ்விடம் கிடைத்து விடும்.
(குர் ஆன் 4:100)
.. உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நீங்கள் நம்பியதற்காக இத்தூதரையும், உங்களையும் (ஊரை விட்டு) அவர்கள் வெளியேற்றினார்கள். அவர்களிடம் இரகசியமாக அன்பைச் செலுத்துகிறீர்கள். நீங்கள் பகிரங்கப்படுத்தியதையும், மறைத்ததையும் நான் நன்கு அறிபவன். உங்களில் இதைச் செய்பவர் நேர்வழி தவறி விட்டார்.
(குர் ஆன் 60:1)
மக்காவாசிகளின் நோக்கம் என்னவாக இருந்தது என்பதைக்கூட எல்லாம் வல்ல அல்லாஹ்வால் தெளிபடக் கூறமுடியவில்லை. முன்னுக்குபின் முரணாக ஏதேதோ உளறுகிறான். தங்களை அடித்து விரட்டியவர்களிடம் எவனாவது இரகசியமாக அன்பைச் செலுத்துவானா? இருக்க முடியாது! அப்படியெனில் விரட்டப்பட்டதாகக் கூறுவது பொய்! குறைஷிகள் மக்காவைவிட்டு வெளியேறுபவர்களைத் தடுக்க முயன்றனர் என்பதே மெய்! ஹுதைபியா ஒப்பந்தத்திலும்கூட குறைஷிகள், தங்கள் தரப்பிலிருந்து முஹம்மதிடம் வருபவர்களை திருப்பி தங்களிடமே அனுப்பிட வேண்டுமென்ற நிபந்தனை விதித்தனர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
முஹம்மதின் சீடர்களில் பெரும்பாலும், அடிமைகளும், போக்கிரித்தனமாக ஊரைச்சுற்றிக் கொண்டிருந்த சில இளைஞர்களுமே! அரேபியர்கள், அடிமைகளைத் தங்களது உடமைகளாகவே கருதிவந்தனர். உதாரணத்திற்கு, உங்களுக்குச் சொந்தமான கால்நடைகளை பகிரங்கமாக கவர்ந்து செல்லப்படுவதை நீங்கள் அனுமதிப்பீர்களா? நிச்சயமாக இல்லை! குறைஷிகள் அதையே செய்தனர்.
முஹம்மதின் மக்கா வாழ்க்கையில் யூதர்கள் இடம்பெறவில்லை, எனவே பழி குறைஷிகளின் தலையில் போடப்பட்டது. இதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது முஹம்மதிற்காக பரிந்து பேசிய அவரது பெரிய தந்தை இப்ன் அப்பாஸ், முஹம்மதையும், அவரது கூட்டத்தினரையும் அழிக்க அபூஜஹ்லுடன் இணைந்து பத்ருகளத்திற்கு வந்து, முஹம்மதிடம் கைதியாக மாட்டிக்கொண்டதுதான் (முஹம்மதின் கதை, மிகவும் பலவீனமான திரைக்கதை! முன்னாள் சென்றால் கடிக்கிறது பின்னால் சென்றால் உதைக்கிறது)
முஹம்மதியர்களிடம், ஹதீஸ்கள் ஏன் இவ்வளவு கேணத்தனமாக, முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது என்றால் அது யூதர்களின் சதி என்பார்கள். சில வாரங்களுக்கு முன், இஸ்லாமிய அறிஞர்கள் சிலருடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, ”கற்றறிந்த உங்களைப் போன்ற ஆலீம்களே குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் பலவிதமாக குழப்பமாக பொருள் கூறிக்கொள்வது ஏன்?” என்றேன். அதற்கு ஒரு ஆலீம் கூறினார், “இஸ்ரேலில், குர்ஆன், மற்றும் ஹதீஸ்களை தீவிரமாக ஆய்வு செய்வதற்கென்றே தனித்துறை ஒன்று செயல்படுகிறது. அங்கு நடைபெறும் மிக முக்கியமான பணி என்னவெனில், குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் தவறான, குதர்க்கமான பொருளையும், அதை முஸ்லீம்கள் மத்தியில் கூறும் போலி ஆலீம்களை உருவாக்கி, உலகம் முழுவதிலும் பரவச்செய்து குழப்பத்தை உருவாக்கி இஸ்லாமை அழிப்பதுதான் யூதர்களின் நோக்கம்” என்றார்.
நான், ”நமது ஆலீம்களான ஜாகீர் நாயக், பீஜே, அப்துல்லா ஜமாலி, சம்ஸுதீன் காஸிமி, Dr.K.V.S. ஹபீப் முஹம்மது போன்றவர்களும் அந்த யூதர்களின் மதரஸாவில் படித்தவர்களோ?” என்றபொழுது அந்த ஆலீமின் முகத்தில் தெறித்த எரிச்சலை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்! கருத்து சொன்னால் கேட்கவேண்டும் ஆராயக்கூடாது. இதுதான் இஸ்லாம்!
இவர்கள் இப்படியே தொடந்தால், இமாம்கள் அபூஅப்தில்லாஹ், அல்ஹஜ்ஜாஜ் போன்றவர்களின் வேடத்தில்கூட யூதர்கள் வந்தனர் என்று விரைவில் கூறிவிடுவார்கள் என்று நம்பலாம். அல்லாஹ்வின் மற்றொரு வஹீயான ஹதீஸ்களில் விதவிதமாக கைவரிசையை காட்டிய யூதர்கள், குர்ஆனை விட்டு வைத்திருப்பார்களா? நாம் ஹிஜ்ரத்தை தொடர்வோம்.
இவ்வாறாக யஸ்ரிப்(மதீனா)வாசிகள் தங்களது உயிரைகொடுத்து பாதுகாப்போம் என்று உறுதிமொழியளித்த பின்னர், தனக்குத் தக்கபாதுகாப்பு கிடைக்கும் என்று தெளிவடைந்த பிறகுதான் முஹம்மதிற்கு ஹிஜ்ரத் செய்வதற்கு அல்லாஹ்(!)விடமிருந்தும் அனுமதி வருகிறது. (இல்லாத) அல்லாஹ் எப்படியும் தன்னை பாதுகாப்பான் என்று குருட்டுத்தனமாக முடிவெடுத்து ஓடுவதற்கு அவரென்ன அப்பாவி முஹாஜிரா?
இல்லாத எதிரியைக் கண்டு அஞ்சி நடுங்கிய முஹம்மது, ஒருவழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு, கிபி 622 செப்டம்பர் 12ல் தனது நண்பர் மூளைசெத்துப்போன அபூபக்கர் துணையுடன் வீட்டிலிருந்து வெளியேறி கிபி 622 செப்டம்பர் 23ல் குபா சென்றடைந்தார். மதீனா வந்த பிறகும் முஹம்மதின் அச்சம் தீரவில்லை தனது கூடாரத்தை பாதுகாக்க இரவுநேர காவலுக்கும் ஏற்பாடுசெய்து கொள்கிறார். மலக்குகளின் பாதுகாப்பு என்னவாயிற்று? என்று குறுக்கு கேள்விகள் கேட்கக்கூடாது!

தஜ்ஜால்

source:iraiyillaislam.blogspot.in

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

முஹம்மது : கூட்டு படுகொலைகாரர்(A Mass Murderer)முஹம ்மது : கூட்டு படுகொலைகாரர்(A Mass Murderer)

யத்ரிபிலும் அதை சுற்றியும் பனு கைனுகா, பனு நதிர், பனு குரைலா என்ற மூன்று யூத குலத்தார் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்களுடைய புதிய தீர்க்கதரிசியாக(நபி) தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று முஹம்மது உணர்ந்து கொண்டவுடன், அவர்களுக்கு எதிராக அவர் திரும்பினார். முதல் இரண்டு குலத்தினரை, அவர்களுடைய சொத்துக்களையும் செல்வத்தையும் பறித்துக்கொண்ட பிறகு, அவர்களுடைய பூமியிலிருந்து துரத்திவிட்டுவிட்டு, கடைசி குலத்தினரை அவர் படுகொலை செய்தார்.
பனுகுரைலாவைஇனப்படுகொலைசெய்தது("முகம்மதுவை புரிந்து கொள்ளுதல்" என்பதிலிருந்து)
பனு குரைலாவே முஹம்மதின் பழிவாங்கும் படலத்திற்கு பலியான யத்ரிபின் கடைசி யூத குலம். அகழ் யுத்தம் முடிந்த உடனே, தங்களுடைய வணிக கூட்டங்களின் மீது தொடர்ந்து முஹம்மது செய்து வந்த அதிரடி கொள்ளை தாக்குதல்களால் வெறுத்துப்போன மக்கா வாசிகள், அவரை தண்டிப்பதற்காக மதினாவின் வாசல்கள் வரை வந்தனர். ஒரு பாரசீக நம்பிக்கையாளரால் அறிவுறுத்தப்பட்டபடி, முஹம்மதின் எதிரிகள்(சங்கத்தினர்கள்) நகருக்குள் நுழைவது என்பது கடினமாகி அவர்கள் பின்வாங்கி செல்லும்படி, அதை சுற்றிலும் அவர்கள் பள்ளம் தோண்டினர். முஹம்மது பனு குரைலாவின் மீது தன்னுடைய கண்ணை வைத்தார். தன்னுடைய வாளை உறையிலிருந்து வெளியே எடுத்து, துரோகம் இழைக்கும் பனு குரைலாவின் வசிப்பிடத்திற்கு சென்று அவர்களிடம் சண்டையிடும்படி பிரதான வானவரான ஜிப்ரீல் தன்னை சந்தித்து கேட்டுக்கொண்டதாக முஹம்மது உரிமை பாராட்டினார். "அவர்களுடைய கோட்டைகளை அசைத்து அவர்களுடைய இதயங்களில் பயத்தை ஏற்படுத்த, தான் வானவர்களின் பவனியோடு முன்னே செல்வேன் என்று ஜிப்ரீல் குறிப்பிட்டார்" என்று அல் முபாரக்பௌரி எழுதுகிறார். அல் முபாரக்பௌரி தொடர்கிறார் : " உடனே அல்லாஹ்வின் தூதர் தொழுகைக்கு அழைப்பவரை கூப்பிட்டனுப்பி பனு குரைலாவிற்கு எதிரான புதிய தாக்குதல்களை அறிவிக்குமாறு கட்டளை இட்டார்."
தொழுகைக்கான அழைப்பு என்பது போருக்கான அழைப்பும் கூட என்பதை இஸ்லாத்தை படிக்கும்பொழுது கவனிப்பது முக்கியமானது. எப்பொழுதுமே முஸ்லிம்களுடைய கலவரங்களும் காலித்தனமும் அவர்கள் தங்களுடைய தொழுகைகளை முடித்தபிறகு மசூதிகளிலிருந்தே ஆரம்பிக்கின்றன. வெள்ளிக்கிழமைகளிலும் புனித ரமலான் மாதத்தின்போதும் அவர்கள் மிகவும் விஷமத்தனமுள்ளவர்களாக இருக்கின்றனர். 1981 ல், முஹம்மதின் பிறந்த நாளை போற்றும் ஒரு மத சொற்பொழிவில், அயதுல்லாஹ் கொமெய்னி கூறினார் :
"மிஹ்ராப்(மசூதி) என்பதற்கு போர்க்களம், சண்டையிடும் இடம் என்றே அர்த்தம். மிஹ்ராப்களில் இருந்து போர்கள் புறப்பட வேண்டும். இஸ்லாமின் போர்கள் அனைத்தும் மிஹ்ராப்களில் இருந்து புறப்பட்டதைப்போலவே. மக்களை கொல்லுவதற்கு நபி வாளை வைத்திருந்தார். நம்முடைய புனித இமாம்கள் தீவிரவாதிகளாகவே இருந்தனர். அவர்கள் அனைவரும் போரிடுபவர்களாகவே இருந்தனர். அவர்கள் வாள்களை வீசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அவர்கள் மக்களை கொல்லுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். கைகளை வெட்டி துண்டாக்குகிற, தொண்டைகளை அறுக்கிற, மக்களை கல்லால் அடிக்கிற கலீபா நமக்கு தேவை. கைகளை வெட்டி துண்டாக்குவதை, தொண்டைகளை அறுப்பதை, மக்களை கல்லால் அடிப்பதை அல்லாஹ்வுடைய தூதர் வழக்கமாக கொண்டிருந்த அதே வழியில்."
அன்சார்கள் (உதவி புரிபவர்கள்) முஹாஜிர்கள் (புலம்பெயர்ந்தவர்கள்) ஆகியவர்களைக்கொண்ட முப்பது குதிரை வீரர்கள், மூவாயிரம் காலாட்படையினர் அடங்கிய படைக்கு முஹம்மது தலைமை தாங்கினார். குறைஷிகளோடு சேர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக சதி செய்ததாக பனு குரைலா மீது குற்றம் சாட்டப்பட்டது. உண்மையில், இந்த முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் இந்த குற்ற சாட்டை மறுத்து, மக்கா வாசிகள் பனு குரைலாவிடமிருந்து தங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் சண்டை இடாமல் பின்வாங்கி சென்றனர் என்று கூறுகின்றனர்.
முஹம்மது தன்னுடைய உள்நோக்கங்களை வெளிப்படுத்தியபோது, அவருடைய சித்தப்பா மகனும் தீவிர பின்பற்றியுமான அலி, அவர்களுடைய கோட்டையை பாதுகாக்கும் படையை திடீரென தாக்கி கைப்பற்றுவேன் அல்லது கொல்லப்படுவேன் என்று சபதம் செய்தார். இந்த முற்றுகை 25 நாட்களுக்கு நீடித்தது. இறுதியாக பனு குரைலாவினர் நிபந்தனை இன்றி சரணடைந்தனர். பெண்களும் குழந்தைகளும் தனிமையில் சிறைவைக்கபடும் அதே நேரத்தில், ஆண்களுக்கு கைவிலங்கு இடும்படி முஹம்மது ஆணையிட்டார். அப்பொழுது, பனு குரைலாவின் நண்பர்களான அவ்ஸ் குலத்தினர் அவர்களிடம் மென்மையாக இருக்குமாறு முஹம்மதிடம் சிபாரிசுசெய்து வேண்டினர். அவர்களிடையே முரட்டு துஷ்டனாக இருந்த, அம்பினால் மிக மோசமாக காயப்பட்டிருந்த சஅத் பின் முஆத் என்பவன் யூதர்களின்மேல் தீர்ப்பு வழங்கட்டும் என்று முஹம்மது பிரேரணை வைத்தார். சஅத் பனு குரைலாவின் முன்னாள் நண்பனாக இருந்தான், ஆனால் இஸ்லாத்திற்கு அவன் மதம் மாறியபின்பு அவர்களுக்கு எதிராக அவன் மனம் மாறி இருந்தான். அகழ் யுத்தத்தின்போது ஒரு மக்காவாசி எறிந்த அம்பினால் தான் அடைந்த மிக மோசமான காயத்திற்கு அவன் அவர்களை குறை கூறி இருந்தான். சஅத் பனு குரைலாவை பற்றி எப்படிப்பட்ட உணர்வுள்ளவனாக இருந்தான் என்பதை முஹம்மது அறிந்தே இருந்தார். அவன் அவருடைய மெய்பாதுகாவலனாக இருந்தவன் தானே, அவன் மசூதியிலேயே தூங்குவான்.
"அந்த குலத்தை சேர்ந்த வலிமையுள்ள எல்லா ஆண்களும் கொல்லப்பட வேண்டும், பெண்களும் குழந்தைகளும் கைதிகளாக்கப்பட வேண்டும், அவர்களுடைய செல்வம் முஸ்லிம் வீரர்களுக்கு பங்கிட்டு கொடுக்கப்பட வேண்டும்" என்பதே சஅத் தின் தீர்ப்பாக அமைந்தது.
இந்த கொடூரமான தீர்ப்பினால் முஹம்மது மகிழ்ச்சியடைந்து அல்லாஹ்வின் கட்டளையைகொண்டே சஅத் தீர்ப்பு வழங்கினார் என்று

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பாலியல் தொழில் நடத்திய பெண் மசூதி வகுப்ப ுக்கு செல்ல உத்தரவு

பாலியல் தொழில் நடத்திய பெண் மசூதி வகுப்புக்கு செல்ல உத்தரவு

பாலியல் தொழில் நடத்திய பெண் மசூதி வகுப்புக்கு செல்ல உத்தரவு

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் பாலியல் தொழில் விடுதி ஒன்றை நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பெண் ஒருத்தியை, ஒரு மாத காலம் தினமும் மசூதிக்கு சென்று மத வகுப்புகளில் கலந்து கொண்டு , தன்னைத் தானே மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி ஒருவர் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்தப் பெண்ணுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவைப் பிறப்பிக்கையில், பெஷாவர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தோஸ்த் முகமது கான், அந்த உத்தரவின் ஒரு பகுதியாக இந்த நிபந்தனையை விதித்தார்.

இந்த ஒரு மாத கால "கல்வி" முடிந்தது, அந்தப் பெண் எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறார் என்பதைப் பற்றி ஒரு அறிக்கை தருமாறு, மசூதியின் இமாமை நீதிபதி கேட்டுக்கொண்டார்.

பாகிஸ்தானிய நீதிபதி ஒருவர், இவ்வாரு ஒரு குற்றம் சாட்டப்பட்டவருக்கு, ஆன்மிக ரீதியிலான சீர்திருத்தத் தண்டனை தருவது என்பது மிகவும் அபூர்வமானது என்றும், ஒரு வகையில் முன்னுதாரணமற்றது என்றும் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

source:BBC

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சௌதியில் மதப்போலிசாரின் சில அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றன

சௌதி போலிஸ்

மதப்போலிஸாரின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன

சௌதி அரேபியாவில் மக்களின் கோபத்தைத் தூண்டியுள்ள, சௌதி மதப் போலிசாரின் சில அத்து மீறல்களைத் தடுக்க, அந்தப் போலிஸ் பிரிவினருக்கு புதிய நடைமுறை விதிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அப்பிரிவின் தலைமைப் போலிஸ் அதிகாரி கூறினார்.

நன்னடத்தையை மேம்படுத்தவும் தீய நடத்தையை தடுக்கவுமான ஆணையம் என்று அதிகாரபூர்வமாக அறியப்படும் இந்த போலிஸ் அமைப்பிற்கு இருக்கும் சில அதிகாரங்கள் நாட்டின் பிற துறைகளுக்கு வழங்கப்படும் என்று இந்தப் பிரிவின் தலைவர் ஷேக் அப்துல் லத்தீப் அப்துல் அஸிஸ் அல் ஷேக் கூறினார்.

இளைஞர்களும், வயது வந்த ஆண்களும் குடும்பத்தினர் இல்லாமல் தனியாக பல்பொருள் அங்காடி மையங்களுக்கு செல்வதை போலிசார் தடுத்து வந்தனர். மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்திய இந்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டாமென்று போலிசார் கூறப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.

source:BBC

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized