ஸ்ரீசாந்தை கன்னத்தில் ஹர்பஜன் அறைந்தது எப்போது?விளைவு பரபரப்பு தகவல்!!!!!!!
ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்த ஹர்பஜன் நீக்கம்
ஐபிஎல் அதிரடி

ஐபிஎல் போட்டியில் நேற்று முன்தினம் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. மும்பை கேப்டன் ஹர்பஜனுடன் கைகுலுக் கிய ஸ்ரீசாந்த், அப்போது அவரை கிண்டல் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ஹர்பஜன், ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்தார்.
நாளை விசாரணை: இந்த சம்பவம் குறித்து ஹர்பஜனிடம் நாளை விசாரணை நடக்கிறது. ஐசிசி விதிகளின்படி நடக்கும் இந்த விசாரணையை போட்டி நடுவர் பரூக் இன்ஜினியர் நடத்துகிறார். டெல்லியில் நடக்கவுள்ள இந்த விசாரணை யில் இரு அணி நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கை ஐபிஎல் சேர்மன் லலித் மோடியிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் ஹர்பஜனுக்கு தடை விதிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.