http://epaper.dinamalar.com/Web/Photographs/2008/05/05/104/05_05_2008_104_004_001.jpg
Category Archives: லண்டன்
ஏழைக்குழந்தகளுக்கு உதவ தொண்டு நிறுவனங்கள் செய்த பிரமண்ட காலடித்தடம்-போட்டோ
Filed under ஏழை, கால்தட வடிவம், ட்ராபால்கர், போட்டோ, லண்டன்
குண்டாகாமல் இருக்க 8 மணி நேரம் தூங்கணும்
லண்டன், ஏப். 3-
இரவில் தினமும் எட்டு மணி நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கனடா நாட்டில் உள்ள லாவல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜீன் பிலிப்பி சாபுத் என்ற நிபுணர் தலைமையிலான குழு, இரவில் தூங்குவதால் ஏற்படும் உடல் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தது. இதில், தினமும் தவறாமல் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குபவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பதில்லை என்பது தெரிந்தது.
அதே நேரம், 6 மணி நேரத்துக்கு குறைவாகவோ அல்லது 9 மணி நேரத்துக்கு மேலாகவோ தூங்குபவர்களுக்கு எடை அதிகரிப்பதாக தெரிந்தது. ஏழு அல்லது 8 மணி நேரத்துக்கு குறைவாக தூங்குபவர்களுக்கு 2 கிலோ வரை எடை அதிகரிக்கிறது. தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேலாக குறைவான நேரமே தூங்கிக் கொண்டிருந்தால் 35 சதவீதம் பேருக்கு சுமார் 5 கிலோ வரை உடல் எடை அதிகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தூக்கத்தின்போது ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் இந்த பின்விளைவுகள் ஏற்படுவதாக பிலிப்பி கூறியுள்ளார்.

Filed under உடல் எடை, கனடா, ஜீன் பிலிப்பி சாபுத, லண்டன்
முட்டை வேக வைக்க புது கருவி
லண்டன் :மேற்கு லண்டனை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவர், முட்டை வேக வைக்க, புது கருவி கண்டுபிடித்துள்ளார். ஒரே ஒரு முட்டை மட்டுமே கொள்ளும் அளவுக்கான இந்த கருவியினுள், முட்டையை வைத்து, இயக்கினால், தண்ணீர் தேவை இன்றி, தானாகவே வெந்து விடுகிறது. "சாண்ட்விட்ச் டோஸ்டர்' போல இது செயல்படுகிறது. இக்கருவி எப்படி செயல்படுகிறது என்பது குறித்து, பி.பி.சி., "டிவி'யில் ஜேம்ஸ் விளக்கம் அளித்தார். ஆனால், கருவியினுள் வைத்த முட்டை உடைந்து, நிகழ்ச்சியை "சொதப்பி' விட்டது. எனினும், இவரது கண்டுபிடிப்பைப் பாராட்டி, வாழ்நாள் சாதனை விருதான, ரூ. எட்டு லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
Filed under ஜேம்ஸ், தண்ணீர், புது கருவி, முட்டை, லண்டன்