வித்தியாசமான விலங்கு போல காணப்படும் இது ராஜாளி நண்டு. அதிராம்பட்டினம் கடல் பகுதியில் நேற்று விஜயன் என்ற மீனவரின் வலையில் சிக்கியுள்ளது. எதிராளி யாரும் வருவதாக தெரிந்தால், ஆமை போல கால்களை பொசுக்கென்று ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கிறது. இதுதவிர பக்கவாட்டில் இறக்கை போன்ற அமைப்பும் இருக்கிறது. அதையும் லாவகமாக அசைத்து வேகமாக நகர்கிறது. மொத்த எடை அரை கிலோ. Ôஇந்த பகுதியில ஒரு காலத்துல ஏராளமா கெடச்சுது. 50 வருஷம் கழிச்சு இப்பதான் பார்க்கிறேன்Õ என்கிறார் 85 வயதாகும் மீனவர் ஒருவர்.