Category Archives: ரஜினி

நான் எந்த மாநிலத்துக்கு போவேன்-ரஜினி புலம்பல்

நான் எங்கதான் போறது? மகராஷ்ட்ரா போனா தமிழன்னு சொல்றாங்க. கர்நாடகா போனா மராட்டிக்காரன்னு சொல்றாங்க. தமிழ்நாட்டுக்கு வந்தா கன்னடக்காரன்னு சொல்றாங்க. நான் எங்கதான் போறது… இப்படி வேதனையோடு புலம்பியவர் சாதாரணமானவர் அல்ல. உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு காவிரி பிரச்னையில் தமிழ் திரையுலகமே திரண்டு, நெய்வேலியில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்திய போது, அதில் ரஜினி பங்கேற்கவில்லை. அப்போது எழுந்த காரசாரமான விமர்சனத்தைத் தாங்க முடியாமல்தான் இப்படி தனது வேதனையை வெளியிட்டார் ரஜினி.
அதன்பின் மறுநாளே சென்னையில் காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருந்து தமிழகத்துக்கு தனது விசுவாசத்தைக் காட்டினார். இப்போது இரண்டாவது முறையாக, ஒகேனக்கல் குடிநீர் திட்ட விவகாரத்தில் கர்நாடகாவை கண்டித்து சமீபத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்கேற்று தான் தமிழன்தான், தமிழகத்துக்கு ஆதரவானவன்தான் என்பதை நிரூபித்தார்.
தமிழகத்தில் ரஜினிக்கு இந்தப் பிரச்னை என்றால் மகாராஷ்ட்ராவில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்புக்கு பிரச்னை. அமிதாப் தான் பிறந்து வளர்ந்த உத்தரப்பிரதேசத்தில் ஆஸ்பத்திரி கட்டியிருக்கிறார். தனது மருமகள் ஐஸ்வர்யா பெயரில் கல்வி நிறுவனம் ஆரம்பித்துள்ளார்.
பணம் சம்பாதிப்பது மும்பையில், முதலீடு செய்வது சொந்த ஊரிலா என மகராஷ்ட்ராவின் மண்ணின் மைந்தர்கள் குரல் கொடுக்க அமிதாப்புக்கு பிரச்னை ஆரம்பித்திருக்கிறது. பிரபலமாய் இருப்பதற்கான விலைதான் இதெல்லாம்.
பிறக்கும் ஊரிலேயே யாரும் பெரிய ஆளாய் ஆகிவிட முடியாது. அதற்கான வாய்ப்பும் வசதியும் எங்கு இருக்கிறதோ அங்குதான் அது நடக்கும். அதேபோல், தான் சம்பாதித்த பணத்தை செலவு செய்யவும் ஒருவருக்கு உரிமை இருக்கிறது. யாருக்கு தானமாய் கொடுக்க விரும்புகிறாரோ, அவருக்குக் கொடுக்கலாம். எங்கு காடு, கழனி வாங்க விரும்புகிறாரோ அங்கு வாங்கலாம். இதை குறை சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது.
சென்னையில் சம்பாதிக்கும் திருநெல்வேலிக்காரர் ஒருவர், நிலம் வாங்க விரும்பினால் எங்கு வாங்குவார்? சொந்த ஊரில்தானே. அப்படித்தானே எல்லோரும். இதில் என்ன தப்பு இருக்க முடியும்? இதை எப்படி பிரச்னை ஆக்க முடியும்? ஆனால் ஆக்குவார்கள்.
காரணம், பாழாய் போன அரசியல். அதற்கென ஒரு கூட்டம் ஒவ்வொரு இடத்திலும் இருக்கிறது. மண்ணின் மைந்தர்கள் என சொல்லிக் கொண்டு, மொழியையும், மண்ணையும் தூக்கிப் பிடிப்பது போல் பேசி, பிடிக்காதவர்களை பழி வாங்கும். அதற்கு பின்னணியில் பெரிய அரசியல் கட்சிகளும் இருக்கும்.
ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. காலையில் சென்னையில் குடும்பம் சகிதமாக டிபன். தொழில் கூட்டாளிகளுடன் சிங்கப்பூரில் லஞ்ச் மீட்டிங். பின்னர் மும்பையில் நண்பர்களுடன் டின்னர் என காலம் வேகமாய் பறக்கிறது. கடல் தாண்டி கம்பெனி மூலம் நாடு பிடித்தது அந்தக் காலம். இப்போது பல நாடுகளில் கம்பெனிகள்தான் ஆளும் அரசாங்கத்தையே முடிவு செய்கின்றன.
கோககோலாவும் பெப்சியும் உலக நாடுகள் அனைத்திலும் விற்பனையாகிறது. இந்தியரான ரத்தன் டாடா, இங்கிலாந¢தின் கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தை வாங்கினார். அமெரிக்காவின் போர்டு நிறுவனத்திடமிருந்து ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் நிறுவனங்களை வாங்குகிறார். இந்தியாவில் தயாராகப் போகும் டாடா நானோ கார் உலகம் முழுவதும் பவனி வரப் போகிறது.
இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் கொடி கட்டிப் பறக்கும் லட்சுமி மிட்டல், லக்சம்பெர்க் நாட்டைச் சேர்ந்த ஆர்சிலர் நிறுவனத்தை வாங்கினார். உலகிலேயே ஸ்டீல் உற்பத்தியில் நம்பர் ஒன் நிறுவனம் அது. விஜய் மல்லையா உலகின் பிரபலமான மது பிராண்டுகளை வாங்கி வருகிறார். அமெரிக்காவின் மோட்டாரோலா செல்போன் நிறுவனத்தை இந்தியாவின் வீடியோகான் வாங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
பணம். அதுதான் அனைத்தையும் முடிவு செய்கிறது. அது இருந்தால் யாரும் எந்த நிறுவனத்தையும் வாங்கலாம். எந்த நாட்டிலும் நிறுவனத்தைத் தொடங்கலாம். இதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம். புதிதாக முதலீடு கிடைக்கிறது. வேலை வாய்ப்பு உருவாகும் என அதை வரவேற்கிறோம். ஆனால் சினிமா பிரபலங்கள் இதைச் செய்தால் மட்டும் கடுமையான எதிர்ப்பு கிளம்புகிறது.
காவிரி பிரச்னையில் தமிழகம், கர்நாடகம் இடையே இவ்வளவு பகையுணர்வு தேவையில்லை. இரண்டு மாநிலங்களுமே இந்தியாவின் அங்கங்கள். இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வது ஒரு கையில் அரிவாளை எடுத்து, மறு கையை வெட்டுவது போன்றதுதான்.
எங்கேயோ எத்தியோப்பியாவில் பஞ்சம் என்றால் கண்ணீர் வடிக்கிறோம். பரிதவிக்கிறோம். இங்கே பக்கத்தில் குடிக்க தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டால், அதற்காக புதிதாக ஒரு திட்டம் கொண்டு வந்தால் அதை எதிர்க்கிறது ஒரு கோஷ்டி. இது என்ன நியாயம்?
இரு தரப்பிலும் பஸ் போக்குவரத்துக்கு தடை, தியேட்டர்கள், உணவகங்களில் ரகளை. இங்கேயும் கலைத் துறையினர் உண்ணாவிரதப் போராட்டம். அங்கேயும் இதே போல் போராட்டம். எல்லாம் சரி.. இதில் யாருக்கு லாபம்? யாருக்கும் இல்லை.
நஷ்டம்தான் இரு தரப்புக்கும். தமிழ் படங்களை கர்நாடகாவில் திரையிட முடியாததால் பல கோடி ரூபாய் நஷ்டம் தமிழ் பட உலகுக்கு. அதே போல், பிரம்மாண்டம், ஸ்டார் வேல்யூ, மெகா பட்ஜெட், சூப்பர் மசாலா என அனைத்தும் கொண்ட புதிய தமிழ் படங்களை பார்க்க முடியாததால், டப் செய்ய முடியாததால், திரையிட முடியாததால் அவர்களுக்கும் சில கோடி நஷ்டம்.
நாடுகளே ஒற்றுமையாய் நதி நீரைப் பிரித்துக் கொள்கின்றன. ஒன்று சேர்ந்து வன வளத்தைப் பாதுகாக்கின்றன. உலக வெப்பமயமாதலை தடுக்க கரம் கோர்க்கின்றன. ஆனால் இந்தியாவில் குடிநீர் பிரச்னையில் இரண்டு மாநிலங்கள் அடித்துக் கொள்கின்றன.
மாநிலங்கள் அடித்துக் கொள்ளும்போது, நியாயம் சொல்லி பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது என்கிறார்கள்.
சட்டம் அனைவருக்கும் பொதுதானே. இது இப்படித்தான் என அடித்துச் சொல்லி, பிரச்னையை தீர்க்க வேண்டியது மத்திய அரசுதான். அதற்கு வலுவான அரசு தேவை. அண்ணன், தம்பிகள் அடித்துக் கொண்டால், அப்பா தானே தீர்த்து வைப்பார்.
அதுபோல் மாநிலங்கள் அடித்துக் கொள்ளும்போது, அறிவுரை சொல்லியும், அடித்தும் திருத்த வேண்டியது மத்திய அரசுதான். வெளிநாடுகளில் இருந்து தாக்குதல் அபாயம் ஏற்பட்டால் மட்டும்தான் மார்தட்ட வேண்டும் என்பதில்லை. உள்நாட்டிலேயே ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும் போது, சட்டத்தின் துணையோடு, இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்கு இருக்கிறது.
ஒரு நாள் நள்ளிரவில் அப்போதிருந்த அனைத்து பெரிய வங்கிகளும் இரவோடு இரவாக தேசிய மயமாக்கப்பட்டன. அதே போல் ஒரு நாள் நதிகளும் தேசிய மயமாக்கப்படும். அப்போதுதான் காவிரி பிரச்னை போன்ற நதி நீர்ப் பங்கீடு பிரச்னைகள் முடிவுக்கு வரும். அந்த நாளும் வரும். அது வரைக்கும் காத்திருப்போம்.

http://www.dinakaran.com/daily/2008/apr/13/jannal.asp

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இஸ்லாம், தமிழ், ரஜினி

நான் பேசியதில் என்ன தவறு?கேட்கிறார் ரஜினி

http://epaper.dinamalar.com

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஓகேனக்கல், கன்னடம், ரஜினி

ரஜினிபேச்சுக்கு நடிகை ஜெயமாலா எதிர்ப்பு

சென்னை, ஏப்.8-

ஒகேனக்கல் கூட்டுகுடி நீர் திட்டத்தை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்ட கன்னட வெறியர்களை கண்டித்து தமிழ் திரையு லகினர் கடந்த 4-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதில் ரஜினி பங்கேற்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்க்கும் கன்னடர்களை கண்டித்து பேசினார்.

அவரது பேச்சுக்கு கர்நாட கத்தில் எதிர்ப்பு கிளம்பியது. கன்னட அமைப்புகள் ரஜினியின் கொடும்பாவியை எரித்தனர். ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.

இதற்கு பதில் அளித்த ரஜினி கன்னடர் மனம் புண்படும்படி எதுவும் பேசவில்லை என்று மறுத்தார்.

ஒகேனக்கல்லை சுற்றி யுள்ள எல்லைகள் தொடர் பாக தமிழ்நாட்டுக்கும் கர்நாட காவுக்கும் 50ஆண்டுகளுக்கு முன்பே ஒப்பந்தம் செய் யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரு மாநில மக்களும் அமைதியாக வாழ விடாமல் வன்முறையில் ஈடுபடுபவர்களை உதைக்க வேண்டாமா என்று தான் கேட்டேன். திரையரங்குகளை தாக்குவது, பஸ்களை எரிப் பது போன்ற செயல் களில் ஈடுபடுவோரை மனதில் வைத்துதான் அதை சொன் னேன். கன்னட மக்களை உதைக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. அந்த அளவுக்கு நான் முட்டாள் அல்ல என்று ரஜினி கூறினார்.

ரஜினியின் பதில் திருப்தி அளிக்க வில்லை என்று கன்னட நடிகை ஜெயமாலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- ரஜினி பேசிய பேச்சினால் கன்னடர்கள் மனம் புண்பட்டுள்ளது. கன்னடர்களை தாக்கி பேசவில்லை என்று கூறி மறுபடியும் அவர்தவறு செய்ய வேண்டாம்.

உண்ணாவிரதத்தில் ரஜினி பேசிய பேச்சின் வீடியோவை அவர் மீண்டும் பார்க்க வேண்டும் கன்னடர்களை ரஜினி இழிவாக பேசியது உண்மை.

எனவே அவர் கன்னட மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் அதுவே இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

இவ்வாறு ஜெயமாலா கூறினார்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியும் ரஜினி பேச் சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள் ளார். ரஜினி பேச்சு கன்னட மக்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அவர் மீது ஆத்திரமும் அடைந்துள்ளனர். ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி இருக்கிறார்.

அவர் மன்னிப்பு கேட்ப தால் அவரது பெருந் தன்மை உயருமே தவிர அதற்கு பாதிப்பு ஏற்படாது.கன்னட மக்களின் மனதை புண்படுத்தும் வார்த்தையை ரஜினி பயன்படுத்தி இருந்தால் அவர் மன்னிப்பு கேட்பதே சரியானதாக இருக்கும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under கன்னட மக்களை, ஜெயமாலா, ரஜினி

கன்னடர்களை இழிவாக ரஜினி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்-கன்னட பட தயாரிப்பாளர் சா.ரா.கோவிந்து, நடிகை ஜெயமாலா

கன்னடர்களை நான் தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன்

பெங்களூர், ஏப். 7: ஒகனேக்கல் விவகாரத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழ் திரையலகினரின் உண்ணாவிரத போராட்டத்தின் போது, கன்னடர்களின் மனது புண்படும்படியாக பேசவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கன்னட தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், கன்னடர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. கன்னடர்களை இழிவாக பேசும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. ஒகேனக்கல் விவகாரத்தில் அரசியல் லாபம் அடைய முயற்சிப்பவர்களை நீங்களே உதையுங்கள் என்றுதான் கூறினேன். இதையும், திரையரங்குளை தாக்குவது, பஸ்களை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மனதில் வைத்துதான் கூறினேன்.
மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நான் நடித்த படங்களை திரையிடவிடமாட்டோம் என்று சிலர் கூறி வருகின்றனர். இதனால் எனக்கு எந்த இழப்பும் இல்லை. நான் நடிக்கும் படங்களை தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மக்களும் ரசிக்கின்றனர். கர்நாடகத்தில் நான் நடித்த படங்களை திரையிடாவிட்டால், கன்னட ரசிகர்கள்தான் வேதனையடைவார்கள். நான் தவறிழைத்தாக கன்னட திரையுலகின் அம்பரீஷ், விஷ்ணுவர்த்தன், அஸ்வத் போன்ற மூத்த நடிகர்கள் மனசாட்சியுடன் கூறினால் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன். 5 கோடி கன்னடர்களை உதைப்பேன் என்று நான் கூறியதாக, சிலர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் எனது மனம் புண்பட்டுள்ளது.
இவ்வாறு பேட்டியில் ரஜினிகாந்த் கூறினார்.
கன்னட பட தயாரிப்பாளர் சா.ரா.கோவிந்து, நடிகை ஜெயமாலா ஆகியோர் கூறுகையில்,Ô ரஜினிகாந்த் மீது மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளோம்.
அதே சமயம் அவர் கன்னடர்களை இழிவாக பேசியதால் கன்னடர்களின் மனம் புண்பட்டுள்ளது. கன்னடர்களை தாக்கி பேசவில்லை என்று கூறி மறுபடியும் தவறிழைக்க வேண்டாம். தேவையானால், அவர் பேசிய காட்சிகள் அடங்கிய வீடியோ கிளிப்பிங்சை வரவழைத்து மறுபடியும் பார்க்கட்டும். கன்னடர்களை இழிவாக பேசியது உண்மை. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால், ரஜினி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்Õ என்றனர்.

http://dkn.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Dinakaran%20E1#

பின்னூட்டமொன்றை இடுக

Filed under கன்னடர், சா.ரா.கோவிந்து, நடிகை ஜெயமாலா, ரஜினி

ஒகேன‌க்க‌ல் :வைரமுத்து பேசியது சரியா?

ஆயிரக்கண்க்காண தொண்டர்கள் கூடியிருக்க நடிகர் சங்கங்க உறுப்பினர்கள் தங்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள்.
 
நேரம் செல்ல செல்ல ஒவ்வொருவராய் பேசிக்கொண்டிருந்தனர்.ஒரு சிலர் மைக்குக்கு முன்னால் வந்து ஏதோ பேசுகிறோம் என்று உளறி விட்டு சென்றனர்.
 
கமல்:நடுநிலை சாயல் தெரிந்தது இவர் பேச்சில்.குறிப்பிடும் படி எதுவும் இல்லை.சத்தியராஜ் சொன்னதை தாக்க முயற்சித்தார்.
 
ரஜினி:பேச ஆரம்பித்து சிறிது நேரம் வரை இவர் என்ன சொல்ல வருகிறார் என்ற குழப்பம் இருந்தது.பின்பு பாஜகாவின் எடியுரப்பாவை வாரினார்.பின்பு ஒட்டு மொத்தமாகா எல்லோரையும் எச்சரித்து அறிவுறை கூறினார்.ஒகேன‌க்க‌ல் திட்டம் வேண்டுமா? என்பதை பற்றி  குறிப்பாக எதுவும் சொல்லவில்லை.
 
சத்தியராஜ்:கிராமத்தில் சேரிப்பசங்க பாணியில் தமிழ் உணர்வை வெளிப்படுத்தினார்.ஆயுதம் எடுக்க ஆலோசனைக் கொடுக்க ரெடி
 
சரத்குமார்:தன் பாணியில் கொஞ்சம் அழுத்தமாக பேசினார்.பரவாயில்லை.சுமார்.
 
விஜயகாந்த்:எல்லோராலும் எதிர் பார்க்கப்பட்டவர்.நன்றாக சொதப்பினனர்.குழம்பின குட்டையில் மீன்கிடைக்காதா என்பது இவர் ஆசை.
 
மனோரம்மா ஆச்சி:எதேதோ பேசினார்கள்.
 
விவேக்;விட்டா காலில் விழுந்து இருப்பார் போல.
 
மற்ற நடிகர்,நடிகைகள்:நன்றாக டமிழ் பேசினார்கள்.
 
கவிஞர் வைரமுத்து:இந்த கூட்டத்தில் சொல்ல வேண்டியதை சும்மா நச்சுன்னு சொன்ன தமிழன்.நன்றாக வார்த்ததகளை ஸ்கேலில் அளந்து பேசினார்.பாராட்ட வேண்டிய விஷயம்.
 
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஒகேன‌க்க‌ல், சத்தியராஜ், ரஜினி, வைரமுத்து