Category Archives: யூதர்கள்

பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானி ரஹீம்

அளவற்ற அருளாளனும்

,நிகரற்ற அன்புடையோனுமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக (அஸ்லாமு அலைக்கு வ ரஹமத்துல்லாஹு பரகத்)

அன்பான இணைய சகோதரர்களே

,

முதலாவது நாம் எந்த பிண்ணணியில் இருக்கிறோம் என்பதை மறந்து உண்மை நிலையை ஆராய்ந்து பார்க்கும் மனநிலையோடு இந்த கட்டுரையை அலசினால் கண்டிப்பாக நாம் நினைப்பதுதான் சரி என்ற நிலையில் இருந்து கொஞ்சம் இறங்க வேண்டியதாக இருக்கும்

.

ஆபிரஹாமின் மதங்கள் என்று இணையத்தில் செல்லமாக

(கேவலப்படுத்தும் விதமாக) அழைக்கப்படும் யூத,கிறிஸ்தவ,இஸ்லாமிய மதங்கள் ஏதோ ஒரு வழியில் ஆபிரகாமை சொந்தம் கொண்டாடியே வருகிறது .

இதில் முதல் இடத்தில் இருப்பது யூதர்கள்

.இவர்கள் தங்கள் வேத நூலாகிய தோரா என்னப்படுகிற புத்தகத்தில் ஏறக்குறைய கிமு 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆதியாகமம் புத்தகத்தில் தங்களின் மூதாதையரான ஈசாக்கு வழியில் யாக்கோபு மூலமாக தங்கள் சந்ததி ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் தாங்களே கடவுளின் பிள்ளைகள் எனவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

இரண்டாவது இடம் கிறிஸ்தவர்களுக்கு

,இவர்களும் தங்களை ஆபிரஹாமின் சந்ததி என்று சொல்லிக்கொள்ளுகின்றனர் .ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக உலகின் அனைத்து மக்களும் இந்த சிலாக்கியத்தை அடைய முடியும் என்றும் உடல் சம்மந்தமான உறவில் ஒருவேளை ஆபிரஹாம் வம்சத்தில் வராவிட்டாலும் ஆன்மிக்க பிராகாரம் ஆபிரஹாமின் மகன் என்று அழைக்கப்படும் இயேசுகிறிஸ்து மூலமாக அந்த சந்ததிக்கு உரியவர்களாக ஆகமுடியும் என்பதே இவர்களின் வாதம் .

மூன்றாவது இடம் அரேபியர்கள் இவர்கள் சொல்லப்போனால் தங்களின் நாடோடிக்கதைகளில் மட்டுமே ஆபிரஹாமின் நினைவலைகளில் இருந்துள்ளனர்

.இவர்கள் முஸ்லிமாக மாறினது கிபி 665க்கு பின். முகமது நபி அவர்களின் மூலமாகவே தாங்கள் ஆபிராஹாமின் மூத்த சந்ததி என்றும்,அவர்களின் வழியில் வந்த இரண்டாவது, மற்றும் உலகின் கடைசி நபி முகமது என்றும் வாதிடுகின்றனர்.அதற்கு அவர்கள் சொல்லும் விசயம் ஆபிரஹாம் அவர்கள் தங்கள் மூத்த மகன் இஸ்மாயிலையே பலியிடக்கொண்டு போனார் என்று சொல்லி 1400வருடங்கள் இந்த பக்ரித் கொண்டாடுகிரார்கள்.

நபி

முகமது தன்னுடைய நிலை சரியாக வேண்டும் என்பதற்காக எடுத்த ஆயுதம் இதுதான் .”யூதர்கள்,கிறிஸ்தவர்களுக்கு வேதம் கொண்டு வந்த நபிகள் எல்லாம் நல்லவர்கள் ஆனால் யூதர்களும் ,கிறிஸ்தவர்களும் ஏமாற்றுபவர்கள்.அவர்கள் தங்கள் நபிகள் கொண்டுவந்த வேதத்தை காசுக்காக (அற்ப கிரயத்துக்காக ) மாற்றி எழுதி விட்டார்கள்.அவர்களிடம் வந்த நபிகளை கொன்றுவிட்டார்கள், நபிமார்களை கடவுளாக்கிவிட்டார்கள்,அவர்களின் மண்ணறைகளை வணக்கத்தளமாக்கிவிட்டார்கள்,இறைவனுக்கு பிள்ளைகள் ,மனைவி என்று சொல்லி இணைக்கற்பித்துவிட்டார்கள்என்பது போனற பல விஷயங்களை (அதாவது இதில் பல பழைய விசயங்கள் உண்டு) ஏதோ புதிய கண்டு பிடிப்பாக உபயோகப்படுத்தினார் .

ஆனால் சொன்னவர் எதையும் ஆதாரத்தோடு சொல்லவில்லை

.எல்லாம் இறைவன் தன் புத்தகத்தில் எழுதிவத்துள்ளார் .அதை எனக்கு இறக்கி தருகிறார் என்று பொத்தம் பொதுவாக சொல்லிவிட்டார்.

அதை அப்படியே நம்பும் என்னருமை

(முஸ்லீம்) சகோதரர்கள் அதை எப்படியாவது உண்மை ஆக்கி விடவேண்டும் என்பதற்க்காக வரலாற்று ஆதாரங்களை பைபிளில் தேடி அலைகிறார்கள் என்று சொன்னால் அது மிகை அல்ல .

முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது குரான் யூதர்கள் மீதும்

,கிறிஸ்தவர்கள் மீது சொல்லும் குற்றச்சாட்டுகள் தார்மீக அடிப்படையில் உண்மையானதா ? என்பதை தொடர்ந்து நாம் ஆராய்வோம்

வளரும்

இன்ஷா அல்லா

கர்த்தருக்கு சித்தமானால்

1 பின்னூட்டம்

Filed under அல்லா, இஸ்லாம், கிறிஸ்தவம், முகமது நபி, முஸ்லீம், யூதர்கள்