Category Archives: முஸ்லிம்

செத்துப்போன பிணத்தைக்கூட நிம்மதியாக விடாத வெறியர்கள்

ஈராக்கில் தற்கொலை தாக்குதல் ; சவ ஊர்வலத்தில் குண்டு வெடித்து 45 பேர் பலி

பாக்தாத், ஏப். 18-

ஈராக்கில் அமெரிக்க படையை எதிர்த்து தீவிரவாதி கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி வருகிறார் கள். சன்னி, ஜியா முஸ்லிம் கள் இடையிலும் மோதல் உள்ளது.

இதன் காரணமாக ஈராக் நாட்டின் பல்வேறு பகுதி களில் குண்டுகள் வெடிக் கின்றன. இதற்கு அமெரிக்க ராணுவ வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் பலியாகி வருகிறார்கள்.

இந்த நிலையில் தெற்கு ஈராக்கில் உள்ள ஒரு கிராமத்தில், நடந்த சவ ஊர்வலத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. சன்னி முஸ்லிம்கள் அதிகம் வாழும் இந்த கிராமம் தெற்கு ஈராக்கில் உள்ள எண்ணெய் நகரமான கிர்குக்கில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

நேற்று காலை 11 மணி அளவில் நடந்த சவ ஊர்வ லத்தில் ஏராளமானோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று குண்டு வெடித்தது.

திடீரென்று நடந்த இந்த குண்டுவெடிப்பில் 45 பேர் உடல் சிதறி பலியானார்கள். தற்கொலைப்படை தாக்கு தலே இந்த குண்டு வெடிப் புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அல்-கொய்தா தீவிரவா திகள் அமெரிக்க படைக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். உள்ளூர் முஸ்லிம்களுக்கு இடையிலும் மோதல்கள் உள்ளன. குண்டு வெடிப்பு காரணம் குறித்து ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இஸ்லாம், ஈராக், சன்னி, முஸ்லிம், ஷியா