Category Archives: மதமாற்றம்

முஸ்லீம் அல்லாதவர் மதம் மாறினதற்காக முஸ்லீம்கள் கொலை மிரட்டல்

http://epaper.dinamalar.com

இவர் முஸ்லீமே இல்லை என்று ஒரு ஜிஹாதி தளம் செய்தி வெளியிட்டது.ஆனால் அந்த ஆளுக்கே இந்த நிலமை

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், குரான், மதமாற்றம், முஸ்லீம்

சகோதரர் சக்கரியா

சகோதரர் சக்கரியா

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

 

(தமிழ் மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல.ஆங்கிலம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

சகோதரர் சகரியா  

 

என்னுடைய வாழ்க்கையில் நடந்த காரியங்களையும், என்னை இயேசுவைப் பின்பற்றுபவனாக மாற்றிய சம்பவங்களைப் பற்றியும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

 

'தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும், நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்."

 

'இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?"

                                                                        (1 யோவான் 5: 4,5)

 

என் பெயர் சகரியா நான் தமிழ்நாட்டில் ஒரு வைராக்கியமான முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தேன். எனக்கு ஏழு சகோதரர்களும் நான்கு சகோதரிகளும் இருக்கிறார்கள். சமுதாயத்தில் என் பெற்றோருக்கு நல்ல மதிப்பிருந்தது என்னை அவர்கள் மதச்சம்பந்தமான காரியங்களில் சிறப்பாக வளர்த்தினார்கள். எங்கள் குடும்பத்தி;ல் எல்லாரும் அரபி மொழயில் எழுதவும் படிக்கவும் தேறியிருந்தனர். நான் கிறிஸ்தவ பள்ளியில் படித்திருந்தாலும் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை.

  

 என்னுடைய சட்டக் கல்லூரிப் படிப்பை முடித்ததும் எனக்கு எல்ஷி ஃபாத்திமா என்ற முஸ்லீம் பெண்ணுடன் திருமணம் நடந்தது அவள் தன்னுடைய பள்ளி நாட்களிலிருந்தே ஒரு இரகசிய கிறிஸ்தவளாயிருந்தாள்.  பத்து வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் அவள் தன்னுடைய விசுவாசத்தை என்னோடு பகிர்ந்து கொண்டாள். நான் மிகவும் வெறுப்படைந்தவனாக தொடர்ந்து ஆறு ஆண்டுகள் அவளை குறைகூறி வந்தேன். ஆனால் அவள் தன்னுடைய உறுதியான விசுவாசத்தை விடவில்லை.

  

  கடந்த வருடம் ஏற்பட்ட மாரடைப்பினிமித்தம் நான் வியாதிப்பட்டவனாக படுக்கையிலே கிடந்தேன், அது எனக்கு

மூன்றாவது முறையாகும். என்னுடைய எல்லா நண்பர்கள்,உறவினாகள் எல்லாரும் இனி நான் உயிர்பிழைக்கவே மாட்டேன் என்று எண்ணினார்கள். ஆனால் என்னுடைய மனைவி என்னுடைய ஆத்தும விடுதலைக்காகவும், சரீர சுகத்திற்காகவும் கண்ணீரோடு ஜெபித்துவந்தாள்.

 மிகவும் சோதனையான நேரத்தில் என்னுடைய மேல் வழக்கறிஞர், அவருடைய தலைமையில் தான் நான் வழக்குகளை கையாண்டு பயிற்சி எடுத்து வந்தேன் .அவர் என்னைப் பார்த்து சொன்னார் ' இத்தனை வருடங்களும் அவருடைய கருணையிருந்தாலும் நீ உதவியற்றவனாகவே இருக்கிறாய் " என்று . அவருக்கு என்ன பதில் கொடுப்பது என்று தெரியாமல் நான் என் இருதயத்திலே மௌனமாக இருந்தேன் . 2003 செப்டம்பர் 13 ம் தேதி ஒரு நாள் இரவில் நான் திடீரென்று விழித்தேன், அப்போது என் மனைவி ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். 'ஒரு கேள்விக்கு பதில் வேண்டும் "  என்ற  தமிழ் புத்தகம் அது. அதில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கும்படி என் மனைவி என்னை மிகவும் வேண்டினாள். நான் அந்த புத்தகத்தை அரைமணி நேரத்திற்குள் வாசித்து முடித்தேன், அது எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் என் மனைவிக்கு நான் எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டவில்லை. மறுநாளிலே ' நான் ஏன் கிறிஸ்தவனானேன்"  என்ற மற்றொரு புத்தகத்தை என்னிடம் கொடுத்தாள்;

அப்படியே நான் அதின் எல்லா தமிழ் மற்றும் அரபி வாக்கியங்களை படித்துமுடித்தேன். முதல் முறையாக என்னுடைய வாழ்க்கையில் நான் ஒரு சிறுபிள்ளைப் போல ஆண்டவரை நோக்கி கதறிஅழுதேன்.  ஆண்டவராகிய இயேசுவை அறிக்கையிட்டு இனி அவரைத் தான் பின்பற்றுவேன் என்று என்னை அர்ப்பணித்தேன்.  நான் ஜீவ வார்த்தையாகிய வேதாகமத்தை வாசிக்கத் தொடங்கினதிலிருந்து அது என்னோடு தனிப்பட்ட முறையில் பேசினது. என்னுடைய குடும்பத்தார் அனைவரும் என்னை ஒதுக்கிவிட்டனர் ஆனால் நான் அதைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை, அவருடைய முகத்தை மட்டுமே நான் நோக்கிப் பார்க்கிறேன்.நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன் ஏனென்றால் இந்ந உலகத்தின் பாவங்களிலிருந்தும், பாரம்பரியக் கட்டுகளிலிடருந்தும் நான் விடுதலையடைந்திருக்கிறேன். நாங்கள் திருமுழுக்கு பெற்று அவருக்கு சாட்சியாக இருக்கிறோம். எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

 

 

 
 
 
Brother . ZAKARIA

I am very glad to share my testimony with you all. What happened in my life and what made to follow lord Jesus Christ.

FOR WHATEVER IS BORN OF GOD OVERCOMES THE WORLD. AND THIS IS THE VICTORY THAT HAS OVERCOME THE WORLD OUR FAITH.

WHO IS he WHO OVERCOMES THE WORLD, but he who believes that Jesus is THE SON OF GOD ? ( 1 John's : 4,5)

I am zakaria, born in orthodox Islamic family, in 1959 at tamilnadu. I have seven brothers and four sisters. My parent are well to do in the society and they brought me in every realm of ceremonial and ritual laws. In my family, all are well-versed in Arabic reading and writing. Even though I have studies in Christian school, I did not have any friends.

After completing law degree course, I have married a muslim girl Elzi Fathima, who is secret believer from her school days. After ten years, One day she shared her faith with me. I was totally upset and criticized her down through six years. She did not give up any of her sound faith.

I was severely in sick bed due heart-attack last year, it was third time in my life. All of my relative friends and parents, they would thought that I might no more on earth. But, my wife, she has been shedding tears for my soul redemption and then next for physical recovery.

At my ordeal circumstances, my senior lawyer, under whom I have been practicing and attending cases, said to me that, " All through the years you are helpless even though under his mercy." I do not know what I should give answer to him. I kept silent in my heart. In, 2003 September, 13th, 2003, at night time I woke up suddenly. I

 

  saw my wife, she was reading a book, "A question that demands an answer "which is in Tamil. She requested me to read, " to see at least what is in it". I have read the book within half an hour. The book made certain impacts within me. But I did not express any thing to her. The next day, my wife gave another book, " why I became Christian".

Like wise, I have read all the literatures in Tamil and Arabic as well. In my life, first time I cried before the lord like a child. I confessed and committed my life the to follow Jesus Christ the lord. When I stared to read God's word, the living word spoke to me very specifically. Brother,  Ahamed, has taken me to meet many converts. All of my relatives, friends and parents rejected me, but I am never bothering anything, looking HIS face only. I am so happy because, I am released from bondage, tradition and clutches of sin of the world. I am having one daughter who is handy-capped, unable to walk since 16 years. My self and my took babtism one year back.

I have met my Junior lawyer, I said,' I know him, because of His grace I am living, this is the great miracle regarding to me." Please pray for my family and especially for my daughter.

 

 

http://unmaiadiyann.blogspot.com/2008/03/blog-post_1485.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இயேசு, இஸ்லாம், குரான், சக்கரியா, மதமாற்றம்

8 லட்சம் முஸ்லீம்கள் கிறிஸ்துவர்களாக மதம் மாறியுள்ளனர்

8 லட்சம் முஸ்லீம்கள் கிறிஸ்துவர்களாக மதம் மாறியுள்ளனர்

பதிப்பது எழில்லிடம் இருந்து:http://ezhila.blogspot.com/2008/02/8.html

 

 

பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் கிறிஸ்துவ மதம் வெகு வேகமாக பரவி வருகிறது. ஏராளமான முஸ்லீம்கள் மதம் மாறி கிறிஸ்துவ மதத்தை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானத்தில் 3 லட்சம் பேரும் பாகிஸ்தானில் .5 மில்லியன் பேரும் கிறிஸ்துவ மதத்துக்கு மதம் மாறியுள்ளனர் என்று ச்மரசம் பத்திரிக்கை தெரிவிக்கிறது.

நன்றி சமரசம்


முஸ்லிம்களை மதம் மாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள்!

"சுதந்திரத்திற்கான போர்" எனும் போர்வையில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவின் தாக்குதல்கள், பார்ப்பதற்கு மற்ற போர்களைப் போன்று தோன்றினாலும் திரைமறைவில் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ பிரச்சாரகர்கள் வெளிப்படையாகத் தங்களது நிர்மாணிக்கப்பட்ட இலக்கிற்காக மிகவும் முனைப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

ஜூலை மாதத்தில் (2007) தாலிபான், தென்கொரியாவைச் சேர்ந்த 21 நபர்களைக் கைது செய்த போதுதான் இவ்வுண்மை முதன் முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. மக்கள் சேவை செய்வதற்கென்றே இவர்கள் பணியாற்றுவது போன்று வெளியுலகிற்குத் தெரிந்தாலும் தாலிபான் அரசின் முடிவிற்குப் பிறகு 2001 லிருந்தே இந்த கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கைதானவர்கள் தாங்கள் சர்வதேச சேவை அமைப்பான (Shaltarnaw) ‘ஷல்டர்னாவ்’வுக்காக செயல் புரிவதாக ஒப்புக் கொண்டனர், இந்த அமைப்பானது மேற்குலகின் பலமான கிறித்தவ இயக்கமாகும், இது ஆப்கானிஸ்தானில் 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தென்கொரியாவைச் சேர்ந்தவர்களே இதில் பெரும்பாலோர் உள்ளனர், இவ்வமைப்பானது கடந்த 5 ஆண்டுகளில் பெரும் எண்ணிக்கையிலான ஆண்களையும், பெண்களையும் சேவைக்கென்று ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. இவர்கள் அங்கு கிறிஸ்தவ இலக்குகளை அடைய மிகப் பெரும் பங்காற்றியுள்ளனர்.

தாலிபான் அமைப்பு 2006 ல் இதே போன்ற ஒரு இத்தாலியக் குழுவைக் கைது செய்தது, இக்குழு ஓர் ஆப்கானிய நபரை (அப்துர் ரஹ்மான்) கிறிஸ்தவராக மாற்றி பிலிப்பைனுக்குக் நாடு கடத்தியது. இவர்களை (குழு) விடுதலை செய்ய வேண்டுமெனில் அந்நபரை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு வர வேண்டும் என்று தாலிபான் கேட்டுக் கொண்டது, ஆனால் இதில் வெற்றி கிடைக்கவைல்லை, ‘ஷல்டர்னாவ்’ போன்ற மற்ற கிறிஸ்தவ இயக்கங்கள் மருத்துவமனைகளை அமைத்தல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல் மூலம் கிறிஸ்தவப் பிரச்சாரத்துக்காக பல்வேறு விதமான நூல்களை மக்களிடையே விநியோகம் செய்கின்றன. இச்சேவை அமைப்புகள் அயராது உழைத்து நிறைய பேரை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றியுள்ளன. இவர்களின் முக்கிய இலக்கு போரில் காயம்பட்டு இவர்களுடைய மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளே.

ஆப்கனின் பல்வேறு இனத்தலைவர்கள் அதிபர் ஹாமித் கர்சாயியைச் சந்தித்து, இந்தச் சேவை அமைப்புகள் சேவை எனும் போர்வையில் கிறிஸ்தவக் கலாச்சாரத்தையும், குடியையும் வளர்ப்பதாக முறையிட்டனர், அவரோ இவர்களின் நன்மையளிக்கும் செயல்கள் தீமையான செயல்களைக் காட்டிலும் அதிகம் எனக் கூறி எந்த வித நடவடிக்கையும் எடுப்பதை நிராகரித்து விட்டார்.

1) வழிமுறைகள்

இக்கிறிஸ்தவ அமைப்புகள் இஸ்லாமியப் பெண்களுக்கு மேலைக் கல்வியைப் புகுத்துவதுடன் அவர்களை மதம் மாற்றவும் முயற்சிகளை மேற்கொள்கின்றன, பெண் ‘தாய்’ என்பதாலும் அவளே குழந்தைகளை வளர்க்க வேண்டியவள், பயிற்சியளிக்க வேண்டியவள் என்பதாலும் அவர்களைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதன் மூலம் முழு சமூகத்தையும் கிறிஸ்தவர்களாக்கி விடலாம் என்பதாலேயே இம்முயற்சிகள்.

2) அநாதைகளுக்கான கல்வி நிறுவனங்கள்

இவ்வமைப்புகள் அநாதைக் குழந்தைகளுக்காக பல்வேறு கல்வி நிறுவனங்களை நிறுவுவதுடன் தத்தம் அமைப்புகளில் பணிபுரிந்த, மேற்கத்திய கல்வி பயின்ற பெண்களையே இக்கல்வி நிறுவனங்களில் பணிக்கு அமர்த்துகிறது.

3) உடல் நலம்

இவ்வமைப்புகள் உடல் நலம் மற்றும் சிகிச்சை எனும் பெயரில் குழந்தைப் பிறப்பை தடை செய்வதற்காக பயிற்சி பெற்ற பெண்களின் குழுக்களை அமைக்கின்றன. இப்பெண்கள் ஆப்கானிஸ்தானிய பெண்களிடையே கருத்தடை மாத்திரைகளை விநியோகம் செய்கின்றனர், இது மட்டுமன்று, ஆப்கானிய பெண்களின் ஏழ்மைக்கும் , அறியாமைக்கும் காரணம் பர்தாவே என்றும் வலியுறுத்துகின்றனர். மேலும் ஆப்கான் பெண்களுக்கு ‘சிலுவை’யுடன் கூடிய மாலையை விலை மதிப்புமிக்க அணிகலனாக விநியோகிக்கின்றன.

4) முஹாஜிர்கள் முகாம்

கடினமான காலநிலை, உணவுப் பற்றாக்குறை போன்ற சூழ்நிலைகளில் பல்வேறு முகாம்களில் உணவுப் பொருட்களை விநியோகிப்பதுடன் ‘பஷ்து’ மொழிபெயர்ப்புடன் (ஆப்கானிய மொழி) கூடிய பைபிளையும் பலவிதமான கிறிஸ்தவ நூல்களையும் விநியோகிக்கின்றன.

5) ஒத்துழைப்போருக்கு வேலை வாய்ப்பு

இச்சர்வதேச மேற்குலகக் கம்பெனிகள் தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்போர் மற்றும் கிறிஸ்தவக் கல்வியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான உறுதி அளிக்கின்றன. இவர்களுக்கு ஏழ்மை சூழலில் உயரிய சம்பளத்தையும் சலுகைகளையும் அளிக்கின்றன.

ஐக்கிய கூட்டணி செயலாளர் ஜெனரல் மௌலானா பஜ்லுர் ரஹ்மான் இக்கம்பெனிகளைப் பற்றி பின்வரும் உண்மையை கண்டறிந்தார். 2004 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இவ்வமைப்புகள் மூன்று இலட்சம் பேர்களை கிறிஸ்தவர்களாக மாற்றியுள்ளன. மேலும் இவை உளவு நிறுவனங்களாகவும் செயலாற்றி, இரகசிய செய்திகளை சேகரித்து தங்களது தலைமைக்கு அனுப்பும் பணிகளையும் செய்கின்றன.

பாகிஸ்தானில் சேவை அமைப்புகளின் கிறிஸ்தவ செயல்பாடுகள்:

பாகிஸ்தானில் தற்போது ஏறக்குறைய 12,000 NGO-க்கள் இயங்கி வருகின்றன. காதியானிய இயக்கமும், பஹாயிஸமும் கோலோச்சியுள்ள, ஏழ்மையும், அறியாமையும் நிறைந்த பலுச்சிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்களில் நடைபெறும் கிறிஸ்தவ இயக்கங்களின் நடவடிக்கைகளை அரசு அறிந்தே உள்ளது என்பது பாகிஸ்தான் இயக்கங்களின் கருத்து.

இக்கம்பெனிகள் மிகவும் இலகுவாக இப்பகுதியில் தம்மை நிலை நிறுத்திக் கொள்வதுடன் இஸ்லாமிய உடை ஒழுங்குகளை அம்மக்களிடமிருந்து களைந்தெறியும் முயற்சிகளையும் மேற்கொள்கின்றன, இவ்வுண்மைகள் வெளியான போது பெரும்பாலான மேற்கத்திய கம்பெனிகள் பூகம்பம் பாதிக்கப்பட்ட இடங்களில் தாங்கள் சொன்ன பணிகளிலிருந்து விலகி கிறிஸ்தவ பிரச்சாரப் பணியை செய்வதாக பாகிஸ்தான் அமைப்புகள் குற்றம் சாட்டின. இவர்களின் இந்த அசெயல்களின் விளைவாக இது வரை ½ மில்லியன் பாகிஸ்தானியர்கள் கிறிஸ்தவ வாழ்க்கை முறையை ஏற்று வாழ்ந்து வரும் பேரிடியான செய்தியை மௌலானா பஜ்லுர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ இயக்கங்கள்:

1) Dorothea Mission:

இவ்வமைப்பு ரஷ்யாவிற்கும், ஆப்கானிஸ்தானிற்கும் நடைபெற்ற போரின் போது பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்த ஆப்கான் அகதிகளின் சேவைக்காக ஆரம்பிக்கப்பட்டது. இது சேவை அமைப்பாக வெளியுலகிற்குத் தெரிந்தாலும், கிறிஸ்தவ அழைப்புப் பணிக்கான திட்டமிட்ட முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

2) Fellowship Recording World Gospel:

இவ்வமைப்பானது கிறிஸ்தவ நூல்களை வெளியிடுதல், இலட்சக்கணக்கான கிறிஸ்தவ சொற்பொழிவுகள் கொண்ட ஒலிப்பேழைகளைத் தயாரித்தல் போன்ற பணிகளுடன் வானொலியில் உருது, புஷ்து, பார்சி, தரி (ஈரானிய மொழி) மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்குகின்றது.

3) சர்வதேச அமைப்புகள்:

ஆப்கானிஸ்தான் போரின் முடிவுக்குப் பிறகு இவ்வமைப்புகள் புதிய பெயர்களுடன் செயல்பட்டு வருகின்றன. தற்போது இவை பாகிஸ்தானின் பெரிய நகரங்களை குறிப்பாகக் கராச்சியைக் குறி வைத்து இயங்குகின்றன. இங்குள்ள ஏழை எளியவர்களுக்குத் திருமண ஆசை, பண ஆசை காட்டி கிறிஸ்தவ மதத்தில் இணைக்க முயன்று வருகின்றன.

2007 ஆகஸ்டில் இம்மிஷனரிகள் பைபிளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைக் கொண்ட நூலை வெளியிட்டன. இந்த நூல்களின் முகப்பில் மஸ்ஜிதே ஹராம். மஸ்ஜிதே நபவி, மஸ்ஜித் அக்ஸா ஆகியவற்றின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. முஸ்லிம்களை ஏமாற்றுவதே இதன் நோக்கம்.

பாகிஸ்தானிலும் ஆப்கனிலும் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ அமைப்புகளைப் பற்றிய குறைந்தபட்ச தகவல்களே இவை. இதை விட ஆச்சரியமளிக்கும் விஷயத்தை பிரான்ஸிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிக்கை கிறிஸ்தவ பணிகளின் பரவலைப் பற்றி வெளியிட்டுள்லது. தென்கொரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஏறத்தாழ அறுபதாயிரம் (60,000) கிறிஸ்தவப் பணியாளர்கள் தற்போது முஸ்லிம்களிடையே முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனராம்,

ஆக்கம்: ரிஸ்வானா ஷகீல், நன்றி: சமரசம் 16-31 ஜனவரி இதழ்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், கிறிஸ்தவம், மதமாற்றம், முகமது, முஸ்லீம்

உன் பொண்டாட்டிய லேச அடிப்பா!!!!!!!!!!!!!!!!!(தமிழச்சி,பெரியார் சீடர்கள்,பெண் விடுதலை விரும்பிகள் இதை படிக்க வேண்டாம்)

ஜாதி இல்லை என்பது போன்ற ஒரு மாயை ஆனால் பெண்களை அடிக்க(அடிமைபடுத்த)அனுமதி-இஸ்லாமிய பெண்ணின் கண்ணீர் சாட்சி

இது ஒரு இஸ்லாமிய பெண்ணின் கண்ணீர் சாட்சி முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க இந்த தொடுப்பில் செல்லவும்;  http://www.islamreview.com/testimonials/esthersstory.shtml
 
 
 
 
 
வாழ்வுக்கு வழிநடத்துகிற வழி

உண்மையான சமாதானத்தை நான் கண்டுபிடித்தேன்…………
 
 
 
யோவான் 3:21 சத்தியத்தின்படி செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்றுவெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
 

யோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில்வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.

நான் அமெரிக்காவில் ஒரு பாகிஸ்தானியப் பெற்றோருக்கு பிறந்தேன்

. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது , இஸ்லாம் தான் உண்மையான சமயம் நாமெல்லாம் இஸ்லாமைப் பின்பற்றுவதினால் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கற்றுக்கொடுக்கப்பட்டோம். கிறிஸ்தவர்களும், யூதர்களும் பாதி சத்தியத்தைத்தான் பெற்றுக்கொண்டார்கள் பின்னர் அதுவும் கறைபடுத்தப்பட்டுவிட்டது. இந்துக்கள் மரங்களையும் ,கற்களையும் வணங்கும்படி வஞ்சிக்கப்பட்டுவிட்டனர் .முகமது நபியின் வாழ்க்கையும் , இஸ்லாமின் ஐந்து தூண்களென்னும் கோட்பாடுகளும் எங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது .நான் சிறுபெண்ணாக இருந்தபோதும் தீவிரமாக முகமதுவைப்பற்றியும் ,இஸ்லாமைப்பற்றியும் அநேக புஸ்தகங்களை வாசித்தேன் . என்னுடைய வகுப்புத் தோழிகளுடன் என் கருத்துகளையும் , நம்பிக்கைகளையும் விவாதிப்பேன் அடிக்கடி என் கிறிஸ்தவ தோழிகளுக்கு மத்தியில் நான் ஒரு முஸ்லீம் பெண்ணாக தனித்து நிற்பேன் .என் பெற்றோருடன் பயணம் செய்யும் போதுகூட நான்

குர்ஆனையும்

,முகமதுநபியைப்பற்றிய புஸ்தகங்களையும் எடுத்து செல்வேன .சாப்பிடுகிற , அருந்துகிற காரியங்களில் கூட முகமதுநபியின் பழக்கத்தைப் போலவே நானும் கிழக்கு முகமாய் அமர்ந்துகொள்வேன். நான் என்னுடைய 9 வது வயதிலிருந்தே தொழுகை செய்யவும் நோன்பு இருக்கவும் ஆரம்பித்தேன் , ஒவ்வொரு ரமலான் தோறும் குர்ஆனை முழுவதுமாக வாசித்து வந்தேன் .

இவ்வளவும் நான் செய்து வந்தும் எனக்குள் ஒரு பெரிய மனஅழுத்தமும்

,தாழ்வு மனநிலையும் இருந்துகொண்டேயிருந்தது . நான் மிகவும் அசிங்கமாகவும் , பாவியாகவும் இருப்பதாக எனக்கு நானே உணர்ந்தேன் . நான் எத்தனை நல்ல காரியங்களை செய்ய முயற்சித்தும் ஏதோ தள்ளப்ட்டவளாகவும் , தனித்துவிடப்பட்டவளாகவும, இருப்பதைப் போல உணர்ந்தேன். எனக்கு நண்பர்கள் இருந்த போதும் உள்ளுக்குள்ளே நான் அநேக இரவுகள் அழுதுகொண்டேயிருந்தேன் . பல முறை என் குர்ஆன் திறந்திருக்க, முழங்காலில் நின்றவளாக அல்லாவிடம் முறையிட்டுக்கொண்டிருந்தேன் , குர்ஆன் வார்த்தைகள் மூலம் சமாதானத்தைத் தேடினேன். மாறாக அல்லா எனக்கு மிகத்தொலைவில் இருப்பதைப்போல ஒரு வெறுமையை உணர்ந்தேன் .

இருந்த

போதிலும் நான் தொடர்ந்து குரானை படித்தும்,தொழுகை செய்தும்,நோன்பு இருந்து வந்தேன்.நான் வளர்ந்த போது குரனை சற்று தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது.ஒரு நாள் சுரா 4 படித்துக்கொண்டிருந்தேன்.அப்பொழுது எனக்கு 14 வயது.தன்னுடைய கணவன் மற்றும் குழந்தைகளிடத்தில் ஒரு பெண்ணுக்கு இருக்கு உரிமை குறித்து எழுதியிருந்ததை வாசித்தேன்.ஒரு மனிதனுக்கு நான்கு மனைவிகளை திருமணம் செய்துகொள்ள இறைவன் அனுமதி அளித்து இருந்ததை வாசித்தேன்.இது ஒன்று புதியது அல்ல,இது போர் காலத்தில் எழுதப்பட்டது என்பதை நான் அறிந்திருந்தேன்.போரிலே ஆண்கள் தங்கள் ம்னைவி மற்றும் பிள்ளைகளை விதவைகளாகவும்,அனாதைகளாகவும் விட்டு மரித்துப்போவார்கள்.ஆனால் கீழே வருகிற காரியம் முதல் முறையாக என் கண்ணில் பட்டது.

4:34

الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاء بِمَا فَضَّلَ اللّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُواْ مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّهُ وَاللاَّتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلاَ تَبْغُواْ عَلَيْهِنَّ سَبِيلاً إِنَّ اللّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

 

அதிர்ச்சி

அடைந்தவளாக மறுபடியும் மறுபடியும் அதே பகுதியை வாசித்தேன்.வேகமாய் கீழே இறங்கி என்னுடைய தந்தயிடம் சென்று அந்த வார்த்தைகளை காட்டினேன்,அழுகையோடு "இறைவன் இதை எப்படி சொல்ல முடியும்" என்று வாதாடினேன்."அவர் எப்படி மனிதனிடம் மனைவியை அடிக்கும் படி சொல்லலாம்".என் தந்தையால் படித்தவற்றை நம்பமுடியவில்லை.அவரிடம் எந்த விளக்கமும் இல்லை.மிகுந்த வேதனையோடு மீண்டும் மேல் மாடிக்கு ஏறிச்சென்றேன்.எப்படியோ என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.நிச்சயம் இறைவன் ஒரு நாளில் இதன் காரணத்தை எனக்கு விளக்குவார் என்று நம்பினேன்.நாட்கள் நகர்ந்த போது நான் மிகவும் வேதனை அடைந்தேன்.சில நேரங்களில் தற்கொலைக்கு கூட முயற்சி செய்தேன்.ஏன் வாழ்கிறேன் என்பதன் காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.அந்த வேதனையில் இருந்து வெளியே வருவதற்கு இசை,அரசியல்,மற்றும் ஆண் நண்பர்கள் என்று என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.(ஆண் நண்பர்கள் பற்றிய விஷயத்தை என் பெற்றோரிடம் மறைத்திருந்தேன்).என்னுடைய பள்ளி நாட்களில் இசையில் சிறந்து விளங்கினேன்.ஆனால் எனக்குள்ளாக பெறும் துயரில் அமிழ்ந்து கொண்டிருந்தேன்.ஏன் என்றால் போதுமான அளவிற்கு நான் நல்லவளாக இல்லை என்பதினால்.

என்னுடைய

பள்ளி படிப்பின் இறுதி மூன்றறை வருடமாக ஒரு கிறிஸ்தவ இளைஞனோடு பழகினேன்.நான் ஒரு முஸ்லீம் என்னால் ஒரு கிறிஸ்தவளாக மாற முடியாது என்பதை அவனிடம் அடிக்கடி கூறுவேன்.அவன் என்னிடத்தில் அதை பற்றி வாக்கு வாதம் செய்ததே இல்லை.ஆனால் என்னை நன்றாக கவனித்துக் கொண்டான்.என்னுடைய துயரத்தில் இருந்து ஒரு தற்காலிகமாக ஒரு நிம்மதியை தவிர வேறு ஒன்றையும் இவைகள் எனக்கு அளிக்கவில்லை.

கல்லூரிப்

படிப்புக்கு செல்ல சமயம் வந்தபோது இறைவனைப் பற்றிய உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதை தொடர ஆரம்பித்தேன்.கல்லூரி வளாகத்தில் என்னுடைய உடமைகளை இறக்கி வைத்த உடனேயே இஸ்லாமைக் குறித்த வகுப்பில் பங்குகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.

முதல்

செமஸ்டரிலேயே ஒரு வகுப்பு எங்களுக்கு அளிக்கப்பட்டது.நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.என்னுடைய எல்லா கவலைகளும் விரைவில் மறையப்போகிறது என்ற நம்பிக்கை எனக்கு உண்டானது.பாடங்கள் ஆரம்பித்தவுடன் குரான்,மற்றும் ஹதீஸில் இருந்து எடுக்கப்பட்டவைகளை நான் படிப்பதற்கு நான் மிகுந்த ஆர்வமாய் இருந்தேன்.ஏன் என்றால் இவைகள் எனக்கு மிகுந்த பழக்கப்பட்டதாய் இருந்தது.இஸ்லாமுடைய தொடக்கம்,மற்றும் முகமதுவுடைய வாழ்க்கை ஆகியவற்றை குறித்து படிப்பது மிகுந்த உற்சாகம் அளிப்பதாக இருந்தது.

சில

ஆதாரங்கள் ஐரோப்பியர்களால் விளக்கவுறை எழுதப்பட்டு இருந்தது,ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய வரலாற்று புத்தகங்களை ஆரய முடிவு செய்தேன்.

வகுப்புகள்

தொடர்ந்த போது என்னுடைய ஆச்சரியம் திகைப்பாய் மாறினது.இஸ்லாமை பரப்புவதற்காக தொடரப்பட்ட இரத்த ஆறு பாய்ந்த யுத்தங்களை குறித்து படித்தேன்.நாஸ்திகர்கள்,கிறிஸ்தவர்கள்,மற்றும் யூதர்கள்,இஸ்லாமை தழுவாத இவர்கள் மீதான இஸ்லாமின் நடவடிக்கைகளை குறித்து படிக்க பக்கங்களை புரட்டினேன்.குரைஷி யூதர்களின் படுகொலை என்னை மிகவும் பாதித்தது.

(இந்த போரை பற்றி படிக்கவேண்டுமானால் (இப்னு ஹிஜாம் )நபியின் வாழ்க்கை சரித்திரம் வால்யும் 2ல் பக்கம் 40,41 வாசிக்கவும்)

எனக்குள்ளே

நான் மிகவும் போராடினேன்"இஸ்லாம் என்றால் சமாதானம்.ஆனால் இது எப்படி?"என்னுடைய திகைப்பு குழப்பமாக மாறியது.முகமதுவின் வாழ்க்கையைப்பற்றி நான் தொடர்ந்து படித்தப்போது அந்த குழப்பம் இஸ்லாமை மறுதலிக்கும் படி மாற்றியது. ஆண்கள் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும் என்னற்ற மறுமைனயாட்டிகளை கொள்வதற்க்கு முகமதுவிற்க்கு மட்டும் ஏன் சிற்ப்புச் சலுகை அளிக்கப்ப்ட்டது என்று தெரியவில்லை. நான் அவருடைய ஒன்பது வயது மனைவி ஆயிஷாவைப் பற்றிப் படித்தேன், அல் புக்காரியில் தொகுத்து அளிக்க்ப்பட்டுள்ள "பெண்களின் மனக்குறைபடுகள் " என்பதைப் படித்தேன். மேலும் நரகத்தில் பெரும்பண்மையான மக்கள் பெண்களே என்றும் அளிக்கப்ப்ட்டுள்ளதைப் படித்தேன்.

வெண்ணிற ஆடையுடுத்தி தன் தாயை மிகவும் மதித்திருந்த, அந்த புனித முகமது எங்கே இருப்பார் என்று நான் ஆச்சரியப்பட்டேன் . ஒரு நாள் , என்னால் தொடர்ந்து படிக்கமுடியவில்லை ஏனெண்றால் என் கண்ணீரை என்னால் அடக்கமுடியவில்லை. என்னுடைய எல்லா புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு , இதுதான் இறைவன் எனறால் என்னால் இனி அவரை ஆராதிக்கமுடியாது என்று எண்ணினேன் , இருந்தாலும் ஒரு உண்மையான இறைவன் இருக்கிறார் என்ற எண்ணமும் என் உள்ளத்தில் இருந்துகொண்டேயிருந்தது . ஆனால் நிச்சயம் அவர் முகமது மூலமாக தன்னை வெளிப்படுத்தவில்லை என்ற உறுதியோடு நூலகத்தை விட்டு வெளியேறினேன்,அப்போது இறைவன் என்னை மேலிருந்து கண்ணோக்கி பார்ப்பதைப் போல உணர்ந்தேன் . நான் இஸ்லாமை கைவிட்ட அந்த நாளிலேயே ஒரு வித்தியாசமான சமாதானம் என் உள்ளத்தை நிரப்பியது உண்மையான இறைவன் யார் என்பதை நான் கண்டுகொள்ளவேண்டும் என்பதற்காக அவர் காத்திருந்தது போல இருந்தது.

அதற்கு

பின் நான் உண்மையைத் தேடும் முயற்சியில் இறங்கினேன் . புத்த மதத்தில் இருந்து பகாய் மதத்திற்கு மாறியிருந்த ஒரு பெண்ணோடு சேர்ந்து நானும் பகாய் மத வழிபாட்டுக்கு சென்றேன் அங்கேயும் உண்மையில்லை என்று கண்டபோது நான் மிகவும் சோர்ந்து போனேன் விரக்த்தியோடு இருந்த எனக்கு என்னுடைய நண்பர்கள் புதிய ஏற்பாட்டை வாசிக்க

கொடுத்தார்கள்

"உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை செய்யாதிருப்பாயாக" என்றதை வாசித்தவுடனே இயேசு தான் என் தேவனாகிய கர்த்தர் என்ற ஆழ்ந்த விசுவாசம் எனக்குள் பிறந்தது. மேலும் சிலத் தெளிவான அடையாளங்களோடு இயேசு தன்னை உண்மையான தேவன் என்பதை எனக்கு நிரூபித்தார். 1989 ம் வருடம் ஏப்ரல் மாதம் நான் என் வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்தேன் . இயேசு இல்லாமல் பரலோக வாழ்விற்குள் பிரவேசிக்க முடியாது . இயேசுவே வழியும் , சத்தியமும் , ஜீவனுமாயிருக்கிறார் .

 நன்றி;http://unmaiadiyann.blogspot.com/2008/02/blog-post_05.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், பெண்கள், மதமாற்றம், முகமது, முஸ்லீம்

போலி முஸ்லீமாக இருந்தவர் தன் மதத்தை மாற்றினார்

அகமதிய இயக்கத்தை மற்ற இஸ்லாமிய அமைப்புகள் போலிகள் என்று சொல்லுகின்றனர்.அதனால் தான் இந்த தலைப்பு.
                                                                             
                                                                                தேவப்பிரியன்

 
 
ஒரு அகமதிய முஸ்லீமகா இருந்த நஸரத் அமன் அவர்கள் இயேசுகிறிஸ்துவை தான் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதை பற்றி விவரிக்கிறார்.இந்த கட்டுரையின் ஆங்கில மூலத்தின் தொடுப்பு;http://www.islamreview.com/testimonials/whychristian.shtml
 
 
 
 
நான் ஏன் கிறிஸ்தவனானேன் ? நஸரத் அமன்
1958 ம் வருடத்தில் ஒரு தீவிர இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தேன்;. பாகிஸ்தானில் அகமதியாக்கள் அமைப்பால் நடத்தப்படுகிற இஸ்லாமியப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தேன். இப்படி படித்துக் கொண்டிருந்தபோது, இஸ்லாம் மத்தைப் பற்றி படிக்க வேண்டும் என்ற விருப்பம் அதிகமானது, அதனால் நான் அகமதியாக்கள் அமைப்பில் சேர்ந்தேன். 1974 ம் வருடத்தில் பாகிஸ்தான் அரசாங்கத்தால் இந்த அமைப்பு ஒரு இஸ்லாமிய மதபேத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.

கிறிஸ்தவத்திற்கு எதிரான அகமதியாக்களின் நூல்களில் கிறிஸ்து அல்லது மேசியா என்ற பதங்களைக் கண்டேன்;. அகமதியாக்கள் அமைப்பின் ஸ்தாபகர் மிர்ஷா குலாம் அகமது தன்னை மஸிஸ்( வாக்குப் பண்ணப்பட்ட மேசியா) என்று அறிவித்திருந்தார். எனக்கு புதுமையும், கவரக்கூடியதுமாயிருந்த அகமதியக் கொள்கைகளையும், போதனைகளையும் பிரச்சாரம் செய்வதில் நான் மிகுந்த ஆர்வமுடையவனாயிருந்தேன். பைபிளிலுமு; குர்ஆனிலும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றியுள்ள குறிப்புகளை அர்த்தம் உணராமலேயே நினைவுகூர்ந்தேன்.

 
என்னை இரட்சித்த ஒரு தவறு

ஒரு நாள் நான் ஒரு சபையைக் கடந்து சென்றுகொண்டிருந்தேன், அப்போது அங்கேயிருந்த பாதிரியாரிடம் சென்று , அவர் ஏன் இன்னும் முஸ்லீமாக மாறவில்லை? தீர்க்கதாரிசனமாக சொல்லப்பட்ட அனைத்து பண்புகளும் முகமதுவில் நிறைவேறியிருக்கிறதே? என்று கேட்க சாரியான வாய்ப்பு என்று நினைத்தேன், அப்படியாக சென்று பாதிரியை சந்தித்தேன்;. என்னை ஒரு முஸ்லீம் என்று அறிமுகம் செய்துகொண்டேன், நான் பாதிரியிடம் , இயேசுவே முகமதுவின் பாதரட்சைகளைத் தான் சுமப்பதற்கும் தகுதியில்லாதவன் என்று சொல்லியிருக்கும்போது நீங்கள் ஏன் முகமது நபியை விசுவாசிப்பது இல்லை என்று கேட்;டேன். அதற்கு அவர் இதை இயேசு எங்கு சொல்லியிருக்கிறார் என்று ஏதாவது ஆதாரம் கொடுப்பீர்களா? என்று கேட்டார் . உடனே நான் மத்தேயு 3.11-12 வசனங்களை எடுத்து அவருக்கு வாசித்து காண்பித்தேன், அவர் முழு அதிகாரத்தையும் வாசிக்க சொன்னார். 1-17 வரையான அந்த முழு வசனங்களையும் வாசித்தபோது அது யாரால் யாரைப்பற்றி சொல்லப்பட்டது என்பது தெளிவாக புரிந்தது, யாரும் விளக்கவேண்டியதில்லை. நான் அவமானமடைந்தேன் உடனே மற்றொரு வசனத்தையும் அவருக்கு காண்பித்தேன் அது யோவான் 14. 30
இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை, இந்த உலகத்தின் அதிபதி வருகிறான் ,
அவனுக்க என்னிடத்தில் ஒன்றுமில்லை,
அந்த பாதிரி சொன்னார் நீ இந்த வசனத்தை முகமதுவிற்கு பொருத்திக்கூறுவாய் என்றால் நான் அதை மறுக்கமாட்டேன். பிறகு அவர் இந்த வசனத்;தை மற்ற வசனங்களின் வெளிச்சத்தில் விளக்கினார் உலகத்தின் அதிபதி என்ற இப்பதம் யோவான் 12. 32 மற்றும் 16.11 ஆகிய வசனங்களில் உலகத்தின் அதிபதி என்பது சாத்தானைக் குறிக்கிறது என்று விளக்கினார்.

நான் எனக்குள்ளே பெருத்த அவமானமடைந்தேன் என்னுடைய அமைப்பின் மீதும் இந்த குறிப்புகளை தன்னுடைய புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அந்த இரண்டாவது மேசியா என்று அழைத்துக்கொள்கிற அவர் மீதும் பயங்கரமான கோபத்தோடு பாதிரியின் அறையிலிருந்து வெளியேறினேன், அதற்கு பிறகு நான் குர்ஆனையும் பைபிளையும் ஆழமாக படிக்க ஆரம்பித்தேன். இதற்காக நான் பாகிஸ்தானில் உள்ள ஒரு வேதாகமப்பள்ளியில் புறக்கல்வி முறையில் படிக்கத் துவங்கினேன். ஒரு தீவிர இஸ்லாமிய பிரசங்கியாக இருந்த எனக்கு குர்ஆனையும் பைபிளையும் தெளிவாகக் கற்று மேசியா என்ற வார்த்தையின் ஆழ அர்த்தத்தை அறிய ஆவல் அதிகமானது. பைபிளில் வாக்குப் பண்ணப்பட்ட மேசியாவின் இரண்டாம் வருகையைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தபோது மேசியாவின் முதல் வருகையைப் பற்றியும் தீர்க்கதாரிசன நிறைவேறுதல்களைப்பற்றியும் அறிய எண்ணினேன்.

நான் குர்ஆனில் வசனங்களிலும் மொழிநடையிலும் அதிக பழக்கப்பட்டிருந்தபடியால் வேதத்தை படிக்கும் போதே இரண்டையும் ஒப்பிட்டுக்கொண்டிருந்தேன். கிறிஸ்தவ கிரேக்க வசனங்கள் ( புதிய ஏற்பாடு) என்னை மிகவும் கவர்ந்தது. அவை ஏதோ வாழ்க்கைச் ரித்திரம் மட்டுமல்ல ஆனால் ஒவ்வொரு வர்ணணையிலும் இறைவன் மனிதனோடு நடந்து வந்ததை வெளிப்படுத்தும் பல சம்பவங்கள் உண்டாயிருக்கிறது.

குர்ஆனைப் படிக்கும் போதோ எதுவும் விசேஷமாக இல்லை ழூன்றில் இரண்டு பங்கு பேய் வணக்கத்தின் கட்டுக்கதைகளும், தோராவிலிருந்து திரித்து கேலியாக சித்தாரிக்கப்பட்ட படைப்புகளாயிருந்தது. குர்ஆனைப் படிக்கும் போது எந்த ஒரு நபரும் தன்னுடைய கவனம் சிதறாமல்பார்த்துக்கொள்ள முடியாது ஏனென்றால் குர்ஆனில் தொடர்ச்சியாக ஒவ்வொரு இரண்டு ழூன்று வசனங்களுக்கும் பிறகு தலைப்புகளும் விஷயங்களும் மாறுகிறது.

இப்புவியின் ஊழியித்தில் இயேசு தன்னுடைய பெரிய அதிகாரத்தை வெளிப்படுத்தியதை உணர்ந்தேன். அவர் முழு நிச்சயமுடையவராகவும் அதிகாரமுடையவராகவும் தன்னை குற்றம்சொல்லுகிறவர்களை எதிர்க்ககூடியவராகவும் இருந்தார். அவரை குற்றம்சொல்லிக்கொண்டிருந்தவர்கள் ஒருநாளும் அவரை நேராக எதிர்க்ககூடாதவர்களாயிருந்தார்கள். (யோவான் 6 .41, 43 மற்றும் யோவான் 8. 38,44)

ஆனால் முகமதுவின் விஷயத்தில் அவரைக் குறைகூறினவர்கள் மிகவும் உறுதியாகவும் .எதிர்க்ககூடியவர்களாவும் இருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள் ,

 

(சுரா 17;90-93 திருப்புமுனை)

 

நான் குர்ஆனையும் பைபிளையும் மிகத் தீவிரமாக படித்தேன். குர்ஆனின் ஒரு வசனம் என்னை உலுக்கியது , என்னுடைய எல்லா நம்பிக்கைகளும் அர்ப்பணங்களும் தவிடுபொடியானது. குர்ஆனின் அந்த வசனம் சொல்லுகிறது .நான் வரப்போகிற புதிய துதன் இல்லை, எனக்கு என்ன செய்யப்படும் என்று எனக்குத் தெரியாது. நான் எனக்கு வெளிப்படுத்தப்பட்டதை மட்டுமே பின்பற்றுகிறேன். உங்களைத் தெளிவாக எச்சரிப்பதே என்னுடைய பணி ஆகும்

நியாயத்தீர்ப்பின் நாள் (அழிவு) மட்டும் காத்திருக்க எனக்கு பொறுமையில்லை , தன்னைப் பற்றியும் ன்மேல் விசுவாசம் வைப்பவர்களை பற்றியும் அறியாத ஒருவரை நான் எப்படி பின்பற்றமுடியும்?

மாற்றம

95 சதவீதம் முஸ்லீம்கள் இருக்கிற பாகிஸ்தானில் மதமாறுவது என்பது சமுதாய, பொருளாதார மற்றும் கலாச்சார சவாலாக இருந்தது. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு மதம்மாறுவது என்பது உறவுகளோடும் சமுதாயத்தோடும் உள்ள ஐக்கியத்ததை விடுவதாகும். எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்ற பயம் இருந்துகொண்டேயிருக்கும். இஸ்லாமின் பெயரால் முஸ்லீம் மக்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக எதைவேண்டுமானாலும் செய்யலாம், சொந்தக்காரர்களும் நண்பர்களும் கூட தங்கள் தனிப்பட்ட மற்றும் சொத்துபிரச்சனைகளை வைத்து கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக இவர்கள் முகமதுவையும் குர்ஆனையும் குறைகூறினார்கள் என்று சொல்லி பழிவாங்கமுடியும். தெய்வ தூஷணம் என்ற பெயரில் கிறி்ஸ்தவர்களுக்கு மரணதண்டனைகூட வழங்கப்படலாம் ஆனால் அல்லாவின் பெயரில் சொல்லப்படும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு எந்த தண்டணையும் கிடையாது,

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் கிறிஸ்துவை என்னுடைய சொந்தரட்சகரா ஏற்றுக்கொண்டு என் பெற்றோருக்கும் உறவினருக்கும் தெரியாமல் மறைமுகமாக 1979 ம் வருடத்திலே ஞானஸ்தானம் பெற்றேன.; 10 வருடங்கள் வரை நான் கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் கிறிஸ்தவனாகவும் என்னுடைய வீட்டில் முஸ்லீமாகவும் வாழ்ந்து வந்தேன். இறுதியாக ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுமாறு என் பெற்றோரின் கட்டாயம் அதிகமனபோது என்னால் என்ரட்சிப்பை மறைத்துவைக்கமுடியவில்லை,

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ஏனென்றால் தான் யார் என்பது என் ரட்சகருக்குத் தெரியும் (யோவான் 17 .14)

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14 .6)

இப்பொழுது இயேசு கட்டளையிட்டதுபோல் (மத்தேடூடூ 28. 20) சுவிஷேசத்தை பிரசங்கிப்பது தான் என்னுடைய பாரமாயிருக்கிறது. சுவிஷேசத்தை பிரசங்கியாவிட்டால் எனக்கு ஐயோ ( 1கொரி 9 . 16)

பாக்கிஸ்தானில் 2001 வரை commumity developmement project manager ஆக வேலை செய்துவந்தேன்.தற்பொழுது நான் கனடாவில் வசித்துவருகிறேன்.

கிறிஸ்தவத்தை குறித்த எந்த விதமான கேள்விகளுக்கும்,விவாதங்களுக்கும் என்னை தராளமாக தொடர்பு கொள்ளலாம்.

Nusrat Aman
E-mail:
naman@gosonic.ca
E-mail: nusrat04@hotmail.com
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அகமதியா, அல்லா, இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், மதமாற்றம், மிர்சா குலாம்

பிரபல இஸ்லாமிய நாதஸ்வர விதவான் இயேசுவை ஏற்றுக்கொண்டார்

பிரபல இஸ்லாமிய நாதஸ்வர விதவான் இயேசுவை ஏற்றுக்கொண்டார்

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

பால் ஷேக் சின்ன காசிம்
 
Image Image

PAUL SHEIK CHINNA KASIM

I was born in a small town in the southern part of India in the state called TamilNadu. Though a Muslim by birth i grew up in a  family that valued Indian tradition and culture more than religion. My ancestors had devoted their lives to Indian classical Music, especially to an instrument called Nadhaswara (pipe). I was also a part of this tradition until our Lord spoke to me through LIGHTNING and THUNDER and anointed me with His Holy spirit. Just as the Lord choose David who played the harp for Him , I feel He has predestined me to Glorify Him through my music . He called me for His Ministry seven years ago and since then I have been ministering His word to His people through the music of Nadhaswaram and the power of the Gift of the Word of God. He has blessed our ministry abundantly as He has used me to travel not only in many parts of India but also to many nations which include SRILANKA , MALAYSIA, SINGAPORE, UNITED ARAB EMIRATES, QATAR, SWITZERLAND, EUROPE, LONDON  CANADA AND USA .

Many people have come to know Christ through Gospel meetings held in many churches in these nations and are encouraged by the word of God.A part of my ministry is to explain the origin of Nadhaswaram and its relation to the Word of God. For ages this instrument has been forgotten by many but this instrument finds its roots in the Word of God. Indian classical music is loved through out the world and to know that God can use this instrument to Glorify Himself surprises many. I am blessed with two sons ages 12 and 14 and my wife has been a driving for my ministry. Her prayers for my salvation for 10 long years were finally answered when I had a personal encounter with Jesus Christ who transformed my life and gave me this ministry of "Lightning and thunder".  

Image  

PADMASHRI DR. SHEIK CHINNA MOULANA                                         

FAMILY    –   BACK GROUND     As they say Music runs in my blood. My family has always been in the limelight for our dedication to classical music. Especially my Grand Father PADMASHRI DR. SHEIK CHINNA MOULANA has performed Indian traditional Nadhaswaram concerts in different part's of the World  on behalf of Indian Government. Our family has been performing on Radio & Television also. A family which made India proud with its talents. My grandfather is the recipient of "PADMASHRI " the highest honor given to any Indian musician , the state Government of Tamil Nadu  has honored us with  DOCTORATE  &  KALAIMAMANI too.                               

http://www.paulsheik.org/index.php?option=com_content&task=view&id=14&Itemid=30

1 பின்னூட்டம்

Filed under அல்லா, இயேசு, இஸ்லாம், குரான், மதமாற்றம், முகமது

பால் ஷேக் சின்ன காசிம் நாதஸ்வரம்-1


பின்னூட்டமொன்றை இடுக

Filed under இசை, இஸ்லாம், கிறிஸ்தவம், நாதஸ்வரம், மதமாற்றம்

இஸ்லாம்;இயேசுவின் பெயரில் முடவனை சுகமாக்கிய முஸ்தபா,ஆவியானவரால் நடத்தப்படும் அக்பர்

இஸ்லாம்;இயேசுவின் பெயரில் முடவனை சுகமாக்கிய முஸ்தபா,ஆவியானவரால் நடத்தப்படும் அக்பர்


இந்த சாட்சியை ஆங்கிலத்தில் முழுமையாக படிக்கலாம்.அதன் தொடுப்பு; http://www.islamreview.com/testimonials/akbar.shtml

இங்கே அதை சுருக்கி கொடுக்கிறேன்.இந்த கட்டுரைகளை மொழிபெயர்க்க முழு அனுமதி அளித்துள்ள தள நிர்வாகத்துக்கு இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.






என்னுடைய வாழ்க்கை சாட்சி

இந்தியாவில் இருந்து அக்பர்

என்னுடைய பெயர் அக்பர் ,தந்தை முகமது காஜா மொஹினுதீன்,தாய் நவான்பீ

என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று அப் பவுல் ரோமர் 10:20ல் எழுதியபடி நாங்கள் அவரை தேடாமல் இருந்தும் எங்களுக்கு தம்மை வெளிப்படுத்தினார் . எனது ஒவ்வொரு மூச்சும் அவரை வாழ்த்த வேண்டும் .இனிய பாடல்களை பாடவேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன் .

என்னுடைய சாட்சி

என்னுடைய குடும்பத்தில 6 வது மகனாக நான் பிறந்தேன். எனது தந்தை மத்திய இரயிவேயில் புகைவண்டி ஓட்டுனராக இருந்தார் .என் தாய் இல்லத்தரசியாக இருந்தார்கள் .அவர்கள் சிறந்த குர் ஆன் ஆசிரியையாகவும் இருந்தார்கள் .இஸ்லாமின் நம்பிக்கைகள் ,கொள்கைகள் மற்றும் போதனைகள் மீது மிகுந்த பற்றுடையவர்கள். இஸ்லாம் மீது உள்ள இப்படிப்பட்ட நம்பிக்கையிலும் ,பயத்திலும் என் பெற்றோர் என்னை வளர்த்தார்கள் .

தேவன்

வெளிப்பட்டார்

என்னுடைய மூத்த அண்ணன் முஸ்தபா ஒரு நாள் சாலையி நடந்துகொண்டிருக்கும் போது தன்னுடைய பெயரைச் சொல்லி கூப்பிடுகிற ஒரு சத்தத்தை கேட்டார்

.”

முஸ்தபா “, முஸ்தபா என்னை நோக்கிப்பார்,நான் உன் தேவனாகிய கர்த்தர் “. அவர் சுற்றி முற்றிப் பார்த்தார் . ஆனால் அவரைத்தவிர வேறு யாரும் அந்த இடத்தில் இருக்கவில்லை. இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது .மீண்டும் இரண்டாவது தடவை சத்தம் வந்த போது , அது மேலே இருந்து வந்தது என்பதை முஸ்தபா உணர்ந்து கொண்டார் . ஆனால் அது யாருடைய சத்தம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே மின்சார சக்தி போன்ற ஒரு வல்லமை அவரை ஆட்கொண்டு கிறிஸ்தவக் கூடுகை நடந்துகொண்டிருந்த ஒரு சிறு கூடாரத்திற்கு வழிநடத்தியது. அங்கே பிரசங்கியார் இயேசுகிறிஸ்துவைக் குறித்து பிரசங்கித்துக்கொண்டு இருந்தார்.முஸ்தபாவை சுற்ரியிருந்த வல்லமை சொன்னதுஇந்த மனிதர் பிரசங்கிக்கிறவர் தான் உன்னோடே வ்ழியில் பேசினார்“.தன்னோடு பேசினது இயேசு என்று அறிந்தவுடன் ,அவரை தனது இரட்சகராகவும்,ஆண்டவராகவும் முஸ்தபா ஏற்றுக்கொண்டார்.பரிசுத்த ஆவியானவர் அவர் உள்ளத்தில் இடைப்பட்டார்.என்னுடைய சகோதரன் இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறகு தொடர்ந்து ஏழு நாட்கள் அவர் இயேசுவை தரிசித்தார். அன்றிலிருந்து அவருக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டது.அதற்கு பிறகு அவர் குர்ஆன் படிப்பதில்லை.எங்களோடு மசூதிக்கு வருவதில்லை.என் பெற்றோர் அவருக்கு கிறிஸ்துவில் இருந்த விசுவாசத்தை கண்டுபிடித்தனர் .

அவருடைய

கிறிஸ்தவ விசுவாசம் எங்களுக்கு விசனமாய் இருந்தது . இஸ்லாமியர்களான நாங்கள் இயேசுகிறிஸ்துவை தேவகுமாரன் என்று விசுவாசிக்கவில்லை. ஒரு நபியாகவே நம்புகிறோம் .

ஆனால்

என் சகோதரன் இயேசுவை தேவகுமாரன் என்று விசுவாசிப்பதினால் என் பெற்றோர் என் சகோதரன் மீது மிகவும் கோபமடைந்தனர்.அநேக நாட்கள் குர் ஆன் மற்றும் வேதத்தைப் பற்றிய விவாதங்களும் நடந்தன.யாரும் வேதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை .ஆனால் என் சகோதரன் இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கும்போது அற்புதங்கள் நிகழ்வதை என் பெற்றோர் கவனித்தார்கள்.கேன்சர் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் ,குருடர்கள்,முடவர்கள் ,பிசாசினால் பீடிக்கப்பட்டவர்கள் அனைவரும் அவர் இயேசுவின் நாமத்தினால் ஜெபித்தபோது சுகமானார்கள் .

ஒரு

நாள் என்னுடைய அத்தை முறையான உறவினர் ஒருவர் எங்களை பார்க்கவந்தார்கள் .அவர்கள் ” blood hemorrhage என்ற இரத்தம் சம்மந்தமான நோயினால் அவதிப்பட்டு வந்தார்கள் . அநேக நாட்களாய் தொடர்ச்சியாக இரத்தம் வெளியேறியதால் மிகவும் பலவீனமாக இருந்தார்கள் .என் தாயார் அவர்களை ஒரு நல்ல மருத்துவரிடம் கூட்டி செல்வார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அப்பொழுது என் தயார் என் சகோதரனிடம் அவர்களுக்காக ஜெபிக்கும் படி கூறினார்கள் .முஸ்தபா அவர்கள் தலையில் கை வைத்து ஜெபிக்க ஆரம்பித்தவுடனயே அவர்கள் தரையிலே விழுந்தார்கள் .”நான் இவளை விடமாட்டேன்,நான் இவளை விடமாட்டேன்என்ற கூச்சல் அவர்களிடமிருந்து வந்தது. அவர்கள் ஒரு அசுத்த ஆவியினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டோம் .என் சகோதரன் இயேசுவின் நாமத்தை சொன்னபோதெல்லாம் ஆவர்களுக்குள் இருந்த பிசாசு நடுங்கியது .தன்னுடைய கண்களை இறுக ,இறுக மூடிக்கொண்டார்கள்.”நீ யார்‘” என்று அந்த ஆவியை பார்த்து என் சகோதரன் கேட்டபோது,” இந்த பெண்ணுடைய எதிரியால் அனுப்பப்பட்ட ஒரு ஆவி நான் , இவளை இந்த நோயால் கொல்லும்படி நான் வந்தேன்“” உன்னால் தான் நான் இவளை விட்டு போகிறேன், வேறு யாராவது இருந்தால் இவளை கொன்றிருப்பேன் .என்று கூறிக்கொண்டு அந்த அசுத்த ஆவி அவர்களை விட்டு வெளியேறியது .அதற்கு பிறகு அவர்கள் பூரண சுகமடைந்தார்கள். அந்த வலியும் இல்லை,ரத்த வெளியேற்றமும் இல்லை . நிறைவான மகிழ்ச்சி அடைந்தார்கள் .

என்

கண்காண இவைகளை பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு அநேக கேள்விகள் எழும்பினது ?

ஏன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அசுத்த ஆவி விலகியது ? மற்ற தீர்க்கதரிசிகளின் பெயரகளில் ஏன் போவதில்லை? முகமதுவின் நாமத்துக்கு ஏன் அசுத்த ஆவிகள் கீழ்படிவது இல்லை? இயேசுவின் நாமத்துக்கு கீழ்படிவதேன்?இயேசுவின் நாமத்தில் என்ன வல்லமையும் ,அதிகாரமும் உள்ளது ?இப்படி பல சிந்தனைகளும், கேள்விகளும் எனக்குள் நிரம்பியது.

சத்தியத்தை

தேடுதல்

திறந்த

இதயத்தோடு உண்மையை தேடி நான் வேதத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.வாசித்துக்கொண்டிருந்த போது மாற்கு 16:16-18 வசனங்களுக்கு வந்தேன் .17வது வசனத்தில் சுமார் 2000 வருடங்களுக்கு முன் இயேசு சொல்லொயிருக்கிறார்.” என்னை விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன , என் நாமத்தினால் பிசாசுகளைத் துரத்துவார்கள் இதை படித்தபோது என் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டது.எத்தனை ஆச்சரியம் அந்த வார்த்தைகள் இன்றும் ஜீவனுள்ளதாயிருக்கிறது.என் கண் காண அவை நிறைவேறியது .

இந்த

சம்பவம் இயேசுகிறிஸ்துவின் வார்த்தை மீது எனக்கு ஒரு விசுவாசத்தை கொண்டு வந்தது.இயேசுவுக்கு சுவிஷேசம் கொடுக்கப்பட்டது .ஆனால் அவை அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டும் தான் என்று என்னுடைய இஸ்லாமிய மதத்தலைவர்கள் எனக்கு கற்றுகொடுத்திருந்தனர் .”அப்படியானால் இன்றைக்கும் இயேசுவின் அந்த வார்த்தை எப்படி கிரியை செய்கின்றது ? கண்டிப்பாக வேதத்தில் இயேசு கூறிய அனைத்தும் உண்மையாகத்தான் இருக்க முடியும்.”என்று சொல்லி நான் தொடர்ந்து வேதத்தை வாசித்தேன்.இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் , கிறிஸ்தவக்கொள்கைகளைப் பற்றியும் முஸ்லீம்கள் கூறும் ஆதாரமில்லாத கூற்றுகளுக்ககெல்லாம் எனக்கு பதில் கிடைத்தது.நான் தேவனுடைய வார்த்தையை வேதத்தில் வாசித்ஹ போதுஅது என்னை சரி படுத்தியது .இஸ்லாமிய மத அறிஞர்களால் கிறிஸ்தவத்திற்கு எதிராக நான் கற்றிருந்த எல்லா தவறான உபதேசங்களையும் புரிந்து கொள்ள உதவியது .

இயேசுகிறிஸ்துவின்

வார்த்தைகளால் என் வாழ்க்கையில் முதல்முறையாக என் மீது மிகுந்த அன்பாயிருக்கிற பிதாவினிடத்தில் பேசவும் , உறவு வைத்துக்கொள்ளவும் அறிந்து கொண்டேன்.முதல் முறையாக என் ஆவியில் இருந்த வெற்றிடம் நீங்கி தேவ அன்பும்,பிரசன்னமும் என்னை நிறைத்தது .சிலுவையில் மரித்து உலகத்தின் பாவத்தை எடுத்துப்போடுவதற்க்காக இயேசுவை அனுப்பினதின் மூலம் வெளிப்பட்ட தேவ அன்பையும் ,அவருடைய தீர்மானத்தையும் , அவருடைய நீயாயத்தீர்ப்பையும் நன்றாக புரிந்து கொண்டேன் .

1998

டிசம்பர் 24-ம் தேதி நான் இயேசுவை என்னுடைய சொந்த இரட்சகராகவும்,ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டு ஞானஸ்தானம் பெற்றேன். அந்த நாளிலிருந்து சுவிஷேசத்தை பிரசங்கிக்கவும்,அழிகின்ற மக்களுக்கு சத்திய வார்த்தைகளை அறிவிக்கவும் என் இருதயத்திற்குள் தேவனுடைய அழைப்பு எரிகின்ற நெருப்பைப்போல் ஏவத்தொடங்கியது.எனவே maltinationational company யிலிருந்து என்னுடைய வேலையை இராஜினாமா செய்துவிட்டு தேவனுடைய பணிக்கு என்னை அர்ப்பணித்தேன்.

ஊழியம்

நானும்

என் சகோதரன் முஸ்தபாவும் சேர்ந்து சுவிசேஷத்தை பிரசங்கிக்கத் தொடங்கினோம். இந்த செய்தி எங்கள் பட்டணம் முழுவதும் பரவியது.அது என் பெற்றோருக்கு பெரிய அவமானமாக இருந்தது.இஸ்லாமிய சமுதாயத்தில் முன்னுதாரனமாக இருந்த எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் என் பெற்றோருக்கு அவமானமாயிருந்தது.

ஆனால்

நாளடைவில் தேவன் அவர்களுடைய இருதயத்தை திறந்ததினிமித்தம் என் குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக அனைவரும் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டு இயேசுவிடம் வந்தார்கள்.

என்

தாயும், தகப்பனும் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்

என்னுடைய மகன்கள் பிரசங்கிப்பது உண்மையென்றால் நான் அதை பற்றி அறிந்துகொள்ளவேண்டும்என்று என் தாய் தேவனிடத்தில் கேள்வி கேட்டார்கள்.அப்படி அவர்கள் ஜெபித்தபோது ஒரு தரிசனம் கண்டார்கள்.அந்த தரிசனத்தில் தன் முழு சரீரத்தில் காயங்களோடு இயேசு காட்சி அளித்தார்.அவருடைய காயங்களிலிருந்து இரத்தம் புரண்டோடியது.அதை கண்ட என் தாயால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.உடனே அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.ஆனாலும் என் தந்தைக்கு பயந்து அவர்கள் ஒரு இரகசிய விசுவாசியாக இருந்தார்கள்.

ஒரு

நாள் ரெயிலை ஓட்டிக்கொண்டிருந்த என் தகப்பனார் ஓரிடத்தில் எஞ்சினை பரிசோதிக்கும் படி இறங்கி ,பரிசோதித்துவிட்டு மீண்டும் ஏறியிருக்கிறார். ஏதோ கடித்தது போல் இருந்தது .அதை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை .வேலை முடித்து வீட்டிற்கு திரும்பிய போது அவருடைய பாதம் மிகவும் வீங்கியிருந்தது .மருத்துவரிடம் சென்றோம் .”இது elephantiasis என்ற வியாதி இதை சுகப்படுத்த மருந்து எதுவும் கிடையாது என்று கூறிவிட்டார் .என் தகப்பனார் மிகவும் மனமுடைந்து போனார்.

நாங்கள்

இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு இயேசுகிறிஸ்துவைப் பற்றியும், அவர் சுகப்படுத்துவதையும் கூறினோம்.உடனே என் தந்தை சொன்னார் ,”அவர் என்னை சுகமாக்கினால் நான் அவரில் விசுவாசம் வைத்து என் இரட்சகராகவும்,தேவனாகவும் ஏற்றுக்கொள்வேன்“.நாங்கள் அவருக்காக ஜெபித்து ஒரு பாட்டிலில் எண்ணையைக் கொடுத்தோம்.” இந்த எண்ணை சிலுவையில் இயேசு உங்களுக்காக சிந்திய இரத்தத்தை பிரதிபலிக்கிறது .விசுவாசத்தோடு தடவுங்கள்என்று சொன்னோம் .

அதை

எடுத்து சென்ற அவர் வேலை நடுவில் தனக்கு நேரங்கிடைக்கும் போதெல்லாம் அதை தடவினார். இரண்டு நாள் கழித்து வீட்டிற்கு திரும்பியபோது அவருடைய பாதத்தில் வீக்கம் முழுவதும் சுகமாயிருந்தது . இந்த அற்புதத்தின் மூலம் இயேசுவை தனது இரட்சகராக ஏற்றுக்கொண்டார் .ஞானஸ்தானமும் பெற்றார் .

சமுதாயத்திலிருந்து

ஒதுக்கி வைக்கப்பட்டோம் .

எங்கள்

பகுதியிலிருந்த முஸ்லீம்களால் சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டோம். அருகில் இருந்தவர்களும்,உறவினர்களும் எங்களை கைவிட்டனர். தேவனுக்காக பாட்னுபவிப்பதை ஆசீர்வாதமாக கருதினோம் . அவருக்காக பாடுபட்டதும், இப்போது அனுபவிக்கிறவைகளும் அவருடைய சிலுவை மரணத்திற்கு முன் ஒன்றுமில்லை .

எங்களுடைய

பட்டணத்திலேயே தேவ அழைப்பின் பேரில் சபையை நிறுவி ஊழியம் செய்தோம் .ஆத்துமாக்கள் பெருகினர்.ஊழியமும் வளர்ந்து பெருகியது.

முஸ்லீம்கள்

மத்தியில் ஊழியம் செய்வதற்கு மும்பையில் ஒரு புதிய பணித்தளத்திற்கு தேவன் வழிநடத்தினார். நானும் என் மனைவி சூசனும் 2005- ல் மும்பைக்கு இடம் பெயர்ந்தோம் .

இயேசுவுக்காக

இஸ்லாமியர்களை ஆதாயம் செய்யும் ஊழியம் ;

இந்த

ஊழியம் இஸ்லாமியர்கள் மத்தியில் நடக்கிறது.இந்த Winning Muslims For Christ Ministry யின் தரிசனம் ,சபைகளில் இஸ்லாமியர்களைக் குறித்த பாரத்தை அளிப்பதும் ,இஸ்லாமியர்களுக்கான ஊழியத்தை செய்வதற்கு சபைகளை பக்குவப்படுத்துவதும். இந்த ஊழியத்தின் பயிற்சி முகாம்களையும் ,கருத்தரங்குகளையும் ,சிறப்பு வகுப்புகளையும் நடத்தி சபைகளையும் ,தனி னபர்களையும் முஸீம் சுவிசேஷத்திற்கு தயார்படுத்துகிறது.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லா, இஸ்லாம், காபா, கிறிஸ்து இயேசு, மதமாற்றம், முகமது, முஸ்லீம்

இஸ்லாமில் இருந்து இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள்

இஸ்லாமில் இருந்து இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள்

பிலிப் அன்சாரி, தமிழ் நாடு

http://sathyavaan.blogspot.com/2007/12/blog-post_1346.html




Philip Ansari
(ஆங்கிலம்)


http ://sathyavaan.blogspot.com/2007/12/from-crescent-to-cross-philip-ansari.html

பால் முகமது சினிராஜ்,இந்தியா http://sathyavaan.blogspot.com/2007/12/blog-post_4294.html



கே.கே.அலவி,இந்தியா
(இஸ்லாமிய மத குருவின் மகன்) http://sathyavaan.blogspot.com/2008/01/blog-post_7841.html






இஸ்மாயில்(இந்தியா) http://sathyavaan.blogspot.com/2007/12/blog-post_1151.html

குலாம் காதிர் குரைஷி,காஷ்மீர் http://sathyavaan.blogspot.com/2008/01/blog-post_01.html




முகமது ரிச்சர்ட்(பர்மா) http://sathyavaan.blogspot.com/2007/12/islam.html



கோர்ஸ்ரோவ்,(ஈரான்) http://sathyavaan.blogspot.com/2008/01/blog-post_2187.html




துல்சா ஓக்லஹோமா,
(முன்னால் இமாம்,ஈரான்) http://sathyavaan.blogspot.com/2007/12/blog-post_3021.html




டினி,(இந்தோனேசியா) http://sathyavaan.blogspot.com/2008/01/blog-post_9253.html





ஹன்னா,இமாமின் மகள்
(இங்கிலாந்து) http://sathyavaan.blogspot.com/2008/01/blog-post_371.html









முகமது(நைஜீரியா) http://sathyavaan.blogspot.com/2008/01/blog-post_5857.html







டாக்டர்.ஜெரேமியா http://sathyavaan.blogspot.com/2008/01/280000.html

குல்சான் எஸ்தர்,(பாக்கிஸ்தான்) http://sathyavaan.blogspot.com/2008/01/blog-post_9172.html




தீமோத்தேயு
ஆப்பிரஹாம் http://sathyavaan.blogspot.com/2008/01/converting-from-islam-to-christianity.html

டாக்டர்.மார்க் காபிரியேல்

(முன்னால் இமாம்,எகிப்து) http://sathyavaan.blogspot.com/2008/01/blog-post_9957.html




முகமது கமாலூதீன் முஜாஹிதீன்,
எகிப்து http://sathyavaan.blogspot.com/2008/01/blog-post_4974.html








முகமது(எகிப்து) http://sathyavaan.blogspot.com/2008/01/blog-post_7617.html



அப்துல் ரஹ்மான்,ஆப்கானிஸ்தான் http://sathyavaan.blogspot.com/2008/01/blog-post_5016.html






டேனியல் சாயெஸ்த்(ஆசிரியர்) http://sathyavaan.blogspot.com/2008/01/blog-post_03.html






அலி http://sathyavaan.blogspot.com/2008/01/blog-post_4136.html







பாலஸ்தீன முன்னால்
இஸ்லாமிய தீவிரவாதி http://sathyavaan.blogspot.com/2008/01/blog-post_1213.html




எராளமான சாட்சிகள் ஆங்கிலம் http://sathyavaan.blogspot.com/2008/01/blog-post_9370.html

இந்த பக்கத்துக்கு ஒரு நாளும் முடிவு இல்லை.தொடர்ந்துகொண்டே இருக்கும்.

வளரும்……………………..



பின்னூட்டமொன்றை இடுக

Filed under அல்லாஹ், இஸ்லாம், கிறிஸ்து, சாட்சிகள், மதமாற்றம், முகமது