Category Archives: பார்பான்

என் பதிவுகளும்-ஆபாச தலைப்புகளும்

My Photo

அன்பான வாசக பெருமக்களுக்கு தெய்வமகன் எழுதுவது இம்மட்டும் நீங்கள் கொடுத்து வரும் தொடர் ஆதரவுக்கு நன்றி.இது வரை என் பதிவுகளுக்கு நான் ஆபாச தலைப்பு வைப்பதாக அநேகர் சொல்லி வந்தனர்.ஆனால் என்னுடைய நிலைப்படி தமிழ்மணத்தில் உலாவின பலர் தங்கள் பதிவுகள் சூடான இடுகையில் வர பல வழிகளில் முயற்சித்தனர்.ஆனால் எல்லாரும் கடைபிடித்த வழி தலைப்புகள் மற்றவர்களை ஈர்க்கும் படி வைத்தது.

என் பதிவை பொருத்த மட்டில் நான் என் கட்டுரைகள் எந்த பதிவரிடம் எடுத்தேனோ அந்த பதிவர் தன் கட்டுரையில் எழுதியிருந்த வரிகளை தலைப்பாக வைத்தேன்.அது படிப்பவர்களுக்கு ஆபாசமாக தெரிந்து இருக்கலாம்.ஆனால் என் கட்டுரைகளின் உள்ளே பெண்ணிய தக்குதல்கள்,திவிரவாதிகளின் முகமூடிகள்,சாதீய கொடுமைகள் ஆகியவற்றை பற்றியே எழுதப்பட்டு வந்துள்ளது.

சரி நீங்கள் கேட்பது தெரிகிறது இந்த மாதிரி கட்டுரைக்கு எதுக்கு ஆபாச தலைப்பு வைக்க வேண்டும் என்று.அதனால் இனி என் பதிவில் கட்டுரைக்கு சமந்தப்பட்ட வார்த்தைகள் மட்டுமே தலைப்பாக வைக்க முடிவு செய்துள்ளேன்.

ஆனால் எதற்கெடுத்தால்ம் ஆபாசம் என்று கத்தி நான் எழுதும் கருத்துக்களில் மற்றவர்கள் சிந்தை வைக்ககூடாது என்று ஒரு சில கும்பல் அலைந்து கொண்டிருக்கிரது.அவர்களை நான் மதிப்பதில்லை.

பெண் கற்பழிப்பு,தாகத உறவுகள்,உடலுறவு சம்மந்தமாக மார்க்க அடிப்படையில் பதில் என்று சொல்லி மாங்காமடையர்கல் இணையத்தில் எழுது கட்டுரைகளை ஆகியவற்றை பற்றி விமர்ச்சிக்கும் போது ஒரு சில வார்த்தைகள் தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிரது.

தமிழ்மண்த்தின் சூடான இடுகைகள் நீக்கப்பட்டதில் இருந்து என் வலைபதில் வரும் எந்த கட்டுரைக்கும் அந்த மாதிரியான தலைப்புகள் வைப்பது இல்லை.ஆனால் தமிழ்மணம் அந்த மாதிரியான தலைப்புகளை விரும்பினார்களோ என்னவோ தெரியவில்லை.என் நிலையை மாற்றிக்கொண்ட பின் என் பதிவை தமிழ்மணத்தில் இருந்து எந்த விதமான முன் எச்சரிப்பும் இல்லாமல் நீக்கினார்கள்.

ஆனாலும் இந்த நிலைக்கு நான் மற்றவர்களுக்கு அறிமுகமாவதற்கு தமிழ்மணம் எனக்கு உதவியது என்பதில் தமிழ்மணத்திற்கு நன்றிக்கடன் உண்டு.

தமிழ்மணம் நீக்கியும் ,தொடர்ந்து என் இடுகைகளுக்கு ஆதரவளித்து பல ஹிட்கள் கொடுத்தும், alexa ரேங்கில் என்னை உயர்த்தியும் வருகிர வாசகப்பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் தேன்கூடு,திரட்டி,மற்றும் பல தன் நிலை திரட்டிகள் அனைத்துக்கும் என் நன்றி.

எனக்கு இவ்வளவு ஆதரவளிக்கும் உங்கள் மனவிருப்பப்படி இனி நல்ல சீரிய முறையில் பதிவுகள் கொடுக்க முனைகிறேன்.பிண்ணூட்டம் இடும் அனைவருக்கு நன்றி.மற்றும் என்னை திட்டி பிண்ணூட்டம் இடும் அனானிகள் கொஞ்சம் நாகரீகமாக திட்டினால் பிண்ணூட்டம் அனுமதிக்க வசதியாக இருக்கும்

இப்படிக்கு உங்கள் அன்பு

தெய்வமகன்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஆபாசம், ஜிஹாதி, தலைப்பு, தெய்வமகன், பார்பான்