Category Archives: பணம்

விபச்சார விடுதியில் இருந்த தன் மனைவியை விலை கொடுத்து வாங்கிய கணவர்-உருக்கமான சம்பவம்

 
வெளிநாட்டில் வேலை என விபசாரத்துக்கு விற்பனை: மனைவியை விலை கொடுத்து வாங்கி மீட்ட கணவர்
 
 
கொச்சி, மார்ச். 30-

கேரள மாநிலம் மலப்புரத் தைச்சேர்ந்தவர் சலிம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 2 வருடத் துக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. மனைவியுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தார். திடீரென்று சலிமுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட் டது. குடும்பம் நடத்த கஷ்டப் பட்டார். இதனால் அரபு நாட்டில் வேலைக்கு போய் சம்பாதிக்கலாம் என மனைவி யோசனை கூறினார்.

இதையடுத்து கணவன்- மனைவி இருவரும் டிராவல் ஏஜெண்டு ஒருவரை சந்தித்தனர். அவர் சலிமின் மனைவிக்கு ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி விசா எடுத்து கொடுத்தார். சலிம் மனைவியை விமான நிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்தார்.

மனைவி ஓமன் போய்ச் சேர்ந்ததும் சில நாள் கழித்து கணவருடன் போனில் பேசி சொன்ன தகவல் சலிமுக்கு பேரிடியாக இருந்தது. வீட்டு வேலைக்காக அனுப்பி வைக் கப்பட்ட தன்னை விலை பேசி விபசார கும்பலிடம் விற்று விட்டதாகவும் தன்னால் இங்கு கொடுமை அனுபவிக்க முடிய வில்லை. எந்த நேரத்திலும் உயிரை மாய்த்துக் கொள்வேன்'' என்றார்.

இதையடுத்து சலிம், `உன்னை என்ன விலை கொடுத்தாவது மீட்டு விடுகிறேன்'' என்று கூறி மனைவிக்கு தைரியம் சொன்னார்.

அதன் பிறகு மனைவியை வெளிநாடு அனுப்பி வைத்த அதே ஏஜெண்டு மூலம் சலிமும் விசா எடுத்து ஓமன் நாடு சென்றார். அங்கு பல்வேறு விபசார புரோக்கர்களை மூலம் அணுகி தனது மனைவியின் இருப்பிடத்தை கண்டுபிடித் தார். மனைவி என்பது விபசார கும்பலுக்கு தெரிந்து விட்டால் நிலைமை மோசமாகி விடும் என்பதால் வாடிக்கையாளர் போல் சென்று மீட்க திட்ட மிட்டார்.

அதன்படி சலிம் சென்ற போது அவரது மனைவியை ஒரு சிறிய இடத்தில் அடைத்து வைத்து இருந்தனர். சலிமை கண்டதும் அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

பின்னர் சலிம் இந்திய தூதரகம் மூலம் ஓமன் போலீசில் புகார் செய்து தனது மனைவியை மீட்டார்.

முதலில் சலிமின்மனைவி ரூ.70 ஆயிரத்துக்கு விற்கப் பட்டு இருக்கிறார். பின்னர் கேரளா வைச்சேர்ந்த பெண் புரோக்கர் ஒருவர் அவரை ரூ.20 ஆயிரத்துக்கு வாங்கி இருந்தார். தினமும் 30 பேர் வரை உல்லாசம் அனுபவித் துள்ளனர். அதற்கு மறுத்த தால் அடித்து உதைத்து சித்ர வதை செய்வார்கள்.

இதுபற்றி சலிம் கூறுகை யில், "எனது மனைவி எனக்கு உயிருடன் கிடைப்பாளாப என்பதே சந்தேகமாக இருந் தது. அவளை நானே விலை கொடுத்து மீட்டு இருக்கிறேன். அவள் எனக்கு உயிருடன் கிடைத்ததே போதும்'' என்றார்.
 

4 பின்னூட்டங்கள்

Filed under கண்வர், பணம், பெண்கள், மனைவி, விபச்சாரம்

ரோட்டில் கிடந்த 70 லட்சம்,மறுத்தார் போலீஸ்

ஏர்போர்ட்டில் தொழிலதிபர் தவறவிட்ட ரூ.70 லட்சம் டி.டி. ஒப்படைப்பு

வெகுமதியை மறுத்தார் போலீஸ்

சென்னை, மார்ச் 28-தொழிலதிபர் ஒருவர் சென்னை ஏர்போர்ட்டில் தவறவிட்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள டி.டியை கண்டெடுத்த போலீஸ்காரர் அதை பத்திரமாக அவரிடம் ஒப்படைத்தார்.கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் பாலசுப்ரமணியம். இவர் சென்னையிலிருந்து கோவை செல்வதற்காக நேற்று மீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்தார். நுழைவாயிலில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எப்) போலீசாரிடம் விமான டிக்கெட்டை காட்டிவிட்டு விமான நிலையத்துக்குள் சென்றார். அப்போது, அவர் வைத்திருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள டி.டி கீழே விழுந்திருக்கிறது. இதை அவர் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சி.ஐ.எஸ்.எப் போலீஸ்காரர் அந்த டி.டி-யைக் கவனித்து விட்டார். இதுபற்றி மேலதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.டி.டி தொலைந்த தகவல் பற்றி விமான நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட தொழில் அதிபர் பாலசுப்ரமணியம், தனது டி.டி இருக்கிறதா என தேடினார். காணாததால், விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று, டி.டி தொலைந்த விஷயத்தை கூறினார். சரியான தகவல் மற்றும் ஆதாரங்களை காட்டி தனது டி.டி என்பதை நிரூபித்தார். இதையடுத்து அவரிடம் அந்த டி.டி ஒப்படைக்கப்பட்டது.மகிழ்ச்சியடைந்த தொழில் அதிபர் டி.டி யை எடுத்து கொடுத்த போலீஸ்காரருக்கு வெகுமதி அளிக்க முன்வந்தார். ஆனால், Ôதவறிய பொருட்களை ஒப்படைப்பது என் கடமைதானே..Õ என கூறிய போலீஸ்காரர் அவர் கொடுத்த வெகுமதியை ஏற்க மறுத்துவிட்டார். அவருக்கு சல்யூட் அடித்துவிட்டு நன்றி கூறி சென்றார் தொழில் அதிபர்.
http://tm.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Tamil%20Murasu%20E1#

பின்னூட்டமொன்றை இடுக

Filed under நியாயம், பணம், போலீஸ், ரோடு

ரோட்டில் கிடந்த 70 லட்சம்,மறுத்தார் போலீஸ்

ஏர்போர்ட்டில் தொழிலதிபர் தவறவிட்ட ரூ.70 லட்சம் டி.டி. ஒப்படைப்பு

வெகுமதியை மறுத்தார் போலீஸ்

சென்னை, மார்ச் 28-
தொழிலதிபர் ஒருவர் சென்னை ஏர்போர்ட்டில் தவறவிட்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள டி.டியை கண்டெடுத்த போலீஸ்காரர் அதை பத்திரமாக அவரிடம் ஒப்படைத்தார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் பாலசுப்ரமணியம். இவர் சென்னையிலிருந்து கோவை செல்வதற்காக நேற்று மீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்தார். நுழைவாயிலில் நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை(சி.ஐ.எஸ்.எப்) போலீசாரிடம் விமான டிக்கெட்டை காட்டிவிட்டு விமான நிலையத்துக்குள் சென்றார். அப்போது, அவர் வைத்திருந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள டி.டி கீழே விழுந்திருக்கிறது. இதை அவர் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சி.ஐ.எஸ்.எப் போலீஸ்காரர் அந்த டி.டி-யைக் கவனித்து விட்டார். இதுபற்றி மேலதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.
டி.டி தொலைந்த தகவல் பற்றி விமான நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட தொழில் அதிபர் பாலசுப்ரமணியம், தனது டி.டி இருக்கிறதா என தேடினார். காணாததால், விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று, டி.டி தொலைந்த விஷயத்தை கூறினார். சரியான தகவல் மற்றும் ஆதாரங்களை காட்டி தனது டி.டி என்பதை நிரூபித்தார். இதையடுத்து அவரிடம் அந்த டி.டி ஒப்படைக்கப்பட்டது.
மகிழ்ச்சியடைந்த தொழில் அதிபர் டி.டி யை எடுத்து கொடுத்த போலீஸ்காரருக்கு வெகுமதி அளிக்க முன்வந்தார். ஆனால், Ôதவறிய பொருட்களை ஒப்படைப்பது என் கடமைதானே..Õ என கூறிய போலீஸ்காரர் அவர் கொடுத்த வெகுமதியை ஏற்க மறுத்துவிட்டார். அவருக்கு சல்யூட் அடித்துவிட்டு நன்றி கூறி சென்றார் தொழில் அதிபர்.

http://tm.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Tamil%20Murasu%20E1#

பின்னூட்டமொன்றை இடுக

Filed under நியாயம், பணம், போலீஸ், ரோடு