Category Archives: தடுப்பூசி

தடுப்பூசி போட்டதில் பலியான 4 குழந்தைகள் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிதி உதவி: சட்டசபையில் கருணாநிதி அறிவிப்பு

தடுப்பூசி போட்டதில் பலியான 4 குழந்தைகள் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிதி உதவி: சட்டசபையில் கருணாநிதி அறிவிப்பு

திருவள்ளூர் மாவட் டத்தில் தடுப்பூசி போடப்பட்ட 4 குழந்தைகள் பலியான சம்பவம் குறித்து சட்டசபையில் உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினார்கள்.

இதன் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் அரி (அ.தி.மு.க.), சுதர்சனமம் (காங்கிரஸ்), சிவாஜி (தி.மு.க.), வேல்முருகன் (பா.ம.க.), மகேந்திரன் (மார்க்சிஸ்ட் கம்ï), பத்மாவதி (இந்திய கம்ï.), செல்வம் (விடுதலை சிறுத்தை ) ஆகியோர் பேசினார்கள்.

இந்த சம்பவத்துக்கு காரணம் என்ன என்பது பற்றி முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிக அளவில் நிதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்து சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் டாக்டர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது தட்டம்மை தடுப்பூசி போட்டதால் நந்தினி, பூஜா, மோகனப்பிரியா ஆகிய பெண் குழந்தைகளும், லோகேஷ் என்ற ஆண் குழந்தையும் இறந்து விட்டது.

மருத்துவ குழுவின் ஆய்வின்படி கடுமையான ஒவ்வாமை காரணமாக அந்த குழந்தைகள் இறந் திருக்கலாம் என்று தற் போது கருதப்படுகிறது. இந்த தட்டம்மை தடுப்பு மருந்து ஐதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வாங்கப்பட்டு உள்ளது. அது தயாரிக்கப்பட்ட நாள் பிப்ரவரி 2008. அது காலாவதி ஆகும் நாள் ஜனவரி 2010.

இந்த தடுப்பு மருந்து மற்றும் அதில் கலப்பதற்கு பயன்படுத்தப்பட்ட திரவம் ஆகியவை இமாசல பிரதேசத்தில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத் தில் 276 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதே தடுப்பு மருந்து வழங்கப்பட்டு அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர் பாக செவிலியர் மற்றும் மருந்தாளுனர் 4 பேர் தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மத்திய அரசு ஆய்வுக் குழுவும் வருகிறது. சம்பவம் பற்றி அறிந்ததும் முதல்-அமைச்சர் கருணநிதி கட்டளைப்படி நானும், உறுப்பினர் சிவா ஜியும் அங்கு சென்று குழந் தைகளை இழந்த பெற் றோருக்கு ஆறுதல் கூறி சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொண்டோம். மேலும் சந் தேகத்தின் அடிப்படை யில் மருத்துவ மனையில் சேர்க் கப்பட்ட குழந்தைகள் நல மாக உள்ளனர்.

அ.தி.மு.க. உறுப்பினர் பேசும் போது, இந்த சம்ப வத்தை குற்றச்சாட்டாக கூறினார்.

அ.தி.மு.க. ஆட்சியின் போதும் திருச்சி மாவட் டத்தில் யானைக்கால் மாத் திரை சாப்பிட்ட 4 பேர் இறந்தனர். இது போன்ற சம்பவங்கள் எதிர்பாராமல் நடப்பவை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவித் தொகை எவ்வளவு என் பதை முதல்-அமைச்சர் அறி விப்பார்.

இவ்வாறு கூறினார்.

பின்னர் முதல்- அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

உச்ச கட்ட சோகம் என்று சொல்லும் அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விஷ மருந்து அருந்தி வயதில் பெரி யவர்கள் இறப்பது போன்ற சம்பவம் அல்ல இது. ஏதும் அறியாத இளம் குழந்தைகள் 4 பேர் மரணத்தை தழுவி இருக்கிறார்கள்.

4 குழந்தைகளின் பெற்றோரும் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஆறுதல் கொள்ளும் அளவுக்கு அந்த குடும்பத்துக்கு உறு துணையாக அதிக நிதி வழங்க வேண்டும் என்று இந்த பிரச்சினை பற்றி பேசிய உறுப்பினர்கள் குறிப் பிட்டார்கள்.

எனவே இந்த சம்பவத்தில் நாமே கொன்று விட்டதாக கருதி இறந்த ஏழுமலை மகள் நந்தினி, அல்லிமுத்து மகள் பூஜா, மோகன் மகள் மோகனப் பிரியா, குப்பையா மகன் லோகேஷ் ஆகியோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் அரசு சார்பில் ரூ.12 லட்சம் வழங்கப்படும்.

இவ்வாறு முதல்- அமைச்சர் கருணாநிதி கூறினார்.

இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர் தவிர அனைத்து கட்சியினரும் வரவேற்று நன்றி தெரிவித்து பேசினர்.

http://www.maalaimalar.com/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under குழந்தைகள், தடுப்பூசி, திருவள்ளூர்