Category Archives: சோனியா

கிறிஸ்தவ கோவிலுக்கு ராகுல் காந்தி சென்றாரா?பா.ஜனதா முதல்-மந்திரி கருத்து

கிறிஸ்தவ கோவிலுக்கு ராகுல் காந்தி சென்றாரா?
பா.ஜனதா முதல்-மந்திரி கருத்துக்கு காங்கிரஸ் மறுப்பு

போபால், ஏப்.30-

பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்கு அவர் சென்றதாகவும், திகம்கார் மாவட்டத்தில் பழங்குடியின பெண் ஒருவருக்கு நிதி உதவி வழங்குவதாக உறுதி அளித்தாகவும், அந்த மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

ஆனால் இந்த தகவலை அந்த மாநில காங்கிரஸ் தலைவர் சுரேஷ் பச்சூரி நேற்று மறுத்தார். ராகுல் காந்தி கிறிஸ்தவ கோவிலுக்கு செல்லவில்லை என்றும், விடுதியில் தன்னை பார்ப்பதற்காக காத்து நின்ற பள்ளிக்குழந்தைகளைத்தான் ராகுல் காந்தி சந்தித்தார் என்றும் அவர் நிருபர்களிடம் கூறினார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=409775&disdate=4/30/2008
 

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அரசியல், காங்கிரஸ், சோனியா, பிஜேபி, ராகுல் காந்தி