Category Archives: சாமி

சாமிகும்பிட பெண் கொடுத்த விலை.இந்து மதத்தின் உன்னத நிலை

ஜார்கண்ட் மாநிலத்தில் தான்பாத் மாவட்டத்தில் விதவையொருவர் கிராமத்தில் விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி காளி கோவிலில் கும்பிட்டதால் கிராமமக்கள் அவருக்கு செருப்புமாலை அணிவித்து முகத்தில் கரி பூசினர். கலாவதி தேவி என்ற அவரின் கணவர் இறந்ததிற்கு அவரது துரதிருட்டமே காரணம் என கருதிய கிராமம் அவர் கோவிலுக்குள் சென்றால் அவரது 'கெட்ட' பண்பு அந்தக் கோவிலுக்குச் செல்லும் மற்ற சுமங்கலிப் பெண்களுக்கும் வந்துவிடும் என்ற மூடநம்பிக்கையினால் அவரை கோவிலுக்குள் செல்லக்கூடாது என தடுத்திருந்தனர். சென்ற செவ்வாயன்று இத்தடையை மீறி கலாவதி கோவில்லுச் சென்றார். இதனையடுத்தே கிராம மக்கள் அவருக்கு செருப்பு மாலை அணிவித்து கரி அப்பினர்.

தன்மீது இழைக்கப்பட்ட வன்முறையை யடுத்து அவர் ஆறு ஆண்கள் மற்றும் 30 பெண்களை அடையாளப்படுத்தி குற்றம் பதிவு செய்திருக்கிறார். இந்த வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்று கிராமமக்கள் காவல்நிலையம் முன்னர் தர்ணா நடத்தினர்.

 

http://satrumun.com/2008/04/04/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b5%e0%af%88/

2 பின்னூட்டங்கள்

Filed under இந்து, கலாவதி தேவி, சாமி, பெண்

மாட்டுச் சாமி பாத்தீங்களா?படம் போட்டுருக்கேன் பாருங்க.

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த இந்த காளை மாடு பிறக்கும்போதே 5 கால்களுடன் இருந்தது. மஞ்சள், குங்குமம் வைத்து காளையை வழிபடுபவர்கள், தெய்வ அம்சமாக கருதி கூடுதல் காலுக்கும் பொட்டு வைத்து வழிபடுகின்றனர்.

http://tm.dinakaran.co.in/firstpage.aspx#

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஐந்து கால், சாமி, மஞ்சள், மாடு