Category Archives: குழந்தைகள்

குழந்தைகளுக்காக தயாரித்த சினிமாவுக்கு விருது!

மாநில அரசு விருது பெறும் அளவுக்குத் தரமான திரைப்படத்தைத் தயாரித்து சாதனை புரிந்திருக்கிறார்கள் கேரளாவைச் சேர்ந்த கிராம மக்கள்.
 

கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணபுரம் பஞ்சாயத்து கிராமத்தினர்தான் அவர்கள்.

இவர்கள் தயாரித்த `கலியொருக்கம்' என்ற படத்துக்கு 2007-ம் ஆண்டுக்கான `சிறந்த குழந்தைகள் படத்துக்கான விருது' கிடைத்துள்ளது. கடந்த 8-ம் தேதì இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன.

தங்கள் முதல் முயற்சியிலேயே விருது பெற்றதில் கிராம மக்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

கண்ணபுரம் பஞ்சாயத்து தலைவரான கே.வி. ஸ்ரீதரன் கூறுகையில், “ஒரு மேம்பாட்டு முனëமுயற்சியாக இந்த படம் தயாரிப்பு வேலையில் நாங்கள் இறங்கினோம். வழக்கமாக எல்லா பஞ்சாயத்துகளையும் போல பாலங்கள், சாலைகள் அமைப்பது போன்ற மேம்பாட்டுப் பணிகளில்தான் நாங்களும் கவனம் செலுத்துவோம். கலைத் துறையைப் பற்றியும், நாமும் ஒரு படம் தயாரிப்போம், அதற்கு மாநில விருது கிடைக்கும் என்றும் நாங்கள் நினைக்கவே இல்லை. மாநிலதëதில் நடைபெற்ற பல விழாக்களிலும் இந்தப் படத்துக்கு விருதுகள் கிடைத்திருக் கின்றன'' என்றார்.

படத்தின் இயக்குநரான எஸ்.சுனில் கூறுகையில், “நாங்கள் முதலில், திரைப்பட விமர் சனக் கலை குறித்த ஒரு பயிற்சிப் பட்டறையை குழந்தைகளுக்கு நடத்தலாம் என்றுதான் நினைத்தோம். அதற்கு ஆர்வத்துடன் 165 குழந்தைகள் வந்துவிட்டார்கள். இடவசதி போன்றவை காரணமாக 30 குழந்தைகளை மட்டும் தேர்ந்தெடுத்தோம். முதலில் இந்தப் பயிற்சிப் பட்டறையை விடியோ கேமிராவில் படம் பிடிப்பதாகத்தான் திட்டம். அப்புறம்தான், கேரள திரைப்பட மேம்பாட்டுக் கழகம் வழங்கும் மானியத் தொகையைப் பெற்று ஏன் நாமே ஒரு படம் தயாரிக்கக் கூடாது என்று யோசித்தோம். அதன் அடிப்படையில் இந்தப் படம் உருவானது. இப்படத்துக்குச் செலவான மொத்த தொகை 9 லட்ச ரூபாய்'' என்றார்.

 
 

இனëறைய நவீன காலத்தில் குழந்தைகள் எப்படி நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள் என்று விவரிக்கிறது இந்தப் படம். கிராமத்துச் சிறார்கள் சிலர் கோடை விடுமுறையில் விளையாடுவதற்கு மைதானம் இல்லாமல் தவிக்கின்றனர். முடிவில், அவர்களாகவே ஒரு மைதானத்தை உருவாக்குவது எனëறு முடிவெடுத்து வேலைகளில் இறங்கி, அதில் வெற்றியும் பெற்று விடுகின்றனர். ஆனால் மைதானம் தயாரான நிலையில் கிராமத்துப் பெரியவர்கள், அங்கே விளையாடக் கூடாது, அது கிராமத்துகëகுச் சொந்தமான இடம் என்று தடுத்து விடுகìனëறனர். இப்படி முடிகிறது அந்தப் படம்.

கோடி கோடியாய் கொட்டி மசாலா மலைகளாய் உருவாக்கப்படும் படங்களுக்கு மத்தியில், ஓர் அர்த்தமுள்ள திரைப்படத்தை உருவாக்கிய கிராமத்தவர்கள் பாராட்டுகëகுரியவர்கள் தான்!

***
http://www.dailythanthi.com/magazines/nyayiru_titbits.htm

பின்னூட்டமொன்றை இடுக

Filed under குழந்தைகள், சாதனை, சினிமா, விருது

இந்த படத்தை பார்த்தால் இவர்கள் இந்த குழந்தைக்ளை என்ன செய்கிறார்கள்

http://epaper.dinamalar.com/Web/Photographs/2008/04/28/016/28_04_2008_016_006_001.jpg

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அழுகை, குழந்தைகள், ஜப்பான்

தடுப்பூசி போட்டதில் பலியான 4 குழந்தைகள் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிதி உதவி: சட்டசபையில் கருணாநிதி அறிவிப்பு

தடுப்பூசி போட்டதில் பலியான 4 குழந்தைகள் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிதி உதவி: சட்டசபையில் கருணாநிதி அறிவிப்பு

திருவள்ளூர் மாவட் டத்தில் தடுப்பூசி போடப்பட்ட 4 குழந்தைகள் பலியான சம்பவம் குறித்து சட்டசபையில் உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினார்கள்.

இதன் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் அரி (அ.தி.மு.க.), சுதர்சனமம் (காங்கிரஸ்), சிவாஜி (தி.மு.க.), வேல்முருகன் (பா.ம.க.), மகேந்திரன் (மார்க்சிஸ்ட் கம்ï), பத்மாவதி (இந்திய கம்ï.), செல்வம் (விடுதலை சிறுத்தை ) ஆகியோர் பேசினார்கள்.

இந்த சம்பவத்துக்கு காரணம் என்ன என்பது பற்றி முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிக அளவில் நிதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்து சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் டாக்டர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது தட்டம்மை தடுப்பூசி போட்டதால் நந்தினி, பூஜா, மோகனப்பிரியா ஆகிய பெண் குழந்தைகளும், லோகேஷ் என்ற ஆண் குழந்தையும் இறந்து விட்டது.

மருத்துவ குழுவின் ஆய்வின்படி கடுமையான ஒவ்வாமை காரணமாக அந்த குழந்தைகள் இறந் திருக்கலாம் என்று தற் போது கருதப்படுகிறது. இந்த தட்டம்மை தடுப்பு மருந்து ஐதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வாங்கப்பட்டு உள்ளது. அது தயாரிக்கப்பட்ட நாள் பிப்ரவரி 2008. அது காலாவதி ஆகும் நாள் ஜனவரி 2010.

இந்த தடுப்பு மருந்து மற்றும் அதில் கலப்பதற்கு பயன்படுத்தப்பட்ட திரவம் ஆகியவை இமாசல பிரதேசத்தில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத் தில் 276 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதே தடுப்பு மருந்து வழங்கப்பட்டு அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர் பாக செவிலியர் மற்றும் மருந்தாளுனர் 4 பேர் தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மத்திய அரசு ஆய்வுக் குழுவும் வருகிறது. சம்பவம் பற்றி அறிந்ததும் முதல்-அமைச்சர் கருணநிதி கட்டளைப்படி நானும், உறுப்பினர் சிவா ஜியும் அங்கு சென்று குழந் தைகளை இழந்த பெற் றோருக்கு ஆறுதல் கூறி சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொண்டோம். மேலும் சந் தேகத்தின் அடிப்படை யில் மருத்துவ மனையில் சேர்க் கப்பட்ட குழந்தைகள் நல மாக உள்ளனர்.

அ.தி.மு.க. உறுப்பினர் பேசும் போது, இந்த சம்ப வத்தை குற்றச்சாட்டாக கூறினார்.

அ.தி.மு.க. ஆட்சியின் போதும் திருச்சி மாவட் டத்தில் யானைக்கால் மாத் திரை சாப்பிட்ட 4 பேர் இறந்தனர். இது போன்ற சம்பவங்கள் எதிர்பாராமல் நடப்பவை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவித் தொகை எவ்வளவு என் பதை முதல்-அமைச்சர் அறி விப்பார்.

இவ்வாறு கூறினார்.

பின்னர் முதல்- அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

உச்ச கட்ட சோகம் என்று சொல்லும் அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விஷ மருந்து அருந்தி வயதில் பெரி யவர்கள் இறப்பது போன்ற சம்பவம் அல்ல இது. ஏதும் அறியாத இளம் குழந்தைகள் 4 பேர் மரணத்தை தழுவி இருக்கிறார்கள்.

4 குழந்தைகளின் பெற்றோரும் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஆறுதல் கொள்ளும் அளவுக்கு அந்த குடும்பத்துக்கு உறு துணையாக அதிக நிதி வழங்க வேண்டும் என்று இந்த பிரச்சினை பற்றி பேசிய உறுப்பினர்கள் குறிப் பிட்டார்கள்.

எனவே இந்த சம்பவத்தில் நாமே கொன்று விட்டதாக கருதி இறந்த ஏழுமலை மகள் நந்தினி, அல்லிமுத்து மகள் பூஜா, மோகன் மகள் மோகனப் பிரியா, குப்பையா மகன் லோகேஷ் ஆகியோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் அரசு சார்பில் ரூ.12 லட்சம் வழங்கப்படும்.

இவ்வாறு முதல்- அமைச்சர் கருணாநிதி கூறினார்.

இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர் தவிர அனைத்து கட்சியினரும் வரவேற்று நன்றி தெரிவித்து பேசினர்.

http://www.maalaimalar.com/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under குழந்தைகள், தடுப்பூசி, திருவள்ளூர்

குழந்தைகளும் இன்டர்நெட்டும்

Webdunia
ரேகா, ஸ்ரீதர் இருவரும் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் 12 வயது மகன் திவாகர் கம்ப்யூட்டரில் ஆர்வம் காட்டியது அவர்களுக்கு பெருமையாக இருந்தது. ரூ. 8,000 தொலைபேசி கட்டணம் வந்த பிறகுதான் திவாகர் பல மணி நேரம் இன்டர்நெட்டில் வலம் வருவது அவர்களுக்குத் தெரிந்தது. மேலும் ஆராய்ந்ததில் அவன் செக்ஸ் வெப்சைட்களைப் பார்ப்பது தெரியவந்தது. இருவருக்கும் அதிர்ச்சி!

குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற விஷயங்களைப்பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ள இன்டர்நெட் உதவினாலும் தவறான வழிகளில் செல்லவும் இது உதவுகிறது.

குழந்தைகள் இன்டர்நெட்டை சரியான முறையில் உபயோகிக்க பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை :

குழந்தைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது :
பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பற்றி கேட்டுக்கொள்வதே இல்லை. இதனால் குழந்தைகள் வழி தவறும் போது பெற்றோருக்குத் தெரியாமலே போகிறது.

குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது :
குழந்தைகள் மனதில் எழும் சந்தேகங்களையும் குழப்பங்களையும் தீர்க்கவும், குழந்தைகளின் விருப்பங்களை அறியவும் அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லவும் இது உதவும்.

கம்ப்யூட்டரை பொதுவான இடத்தில் வைப்பது :
கம்ப்யூட்டரை குழந்தைகளின் அறையில் வைப்பதை தவிர்ப்பது நல்லது. தனிமையில் இருக்கும்போது தவறானவற்றை பார்க்கலாமே என்ற எண்ணம் தோன்றும்.

கம்ப்யூட்டரில் செலவிடும் நேரத்தை விதிப்பது :
இவ்வளவு நேரம் தான் கம்ப்யூட்டரில் குழந்தைகள் செலவிட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அவர்கள் விரும்பும் நேரத்தில் கம்ப்யூட்டரை உபயோகிக்காமல் இருக்க `பாஸ்வேர்ட்' உதவும்.

இன்டர்நெட் உபயோகத்தை கண்காணிப்பது :
வீட்டில் இன்டர்நெட்டுக்கு தடை விதித்தால் குழந்தைகள் `சைபர் கஃபே'களுக்குச் செல்லலாம். அங்கு பெற்றோர்கள் அவர்களை கண்காணிக்க முடியாமல் போகும். இதனால் தடுப்பதை விட கண்காணிப்பது சிறந்தது.

குழந்தைகளுக்கு நல்ல முறையில் புரியவைப்பது அவசியம். அதிகமான கண்டிப்பு தவறான பாதைக்கு அவர்களை அழைத்துச் செல்லலாம்.

http://tamil.webdunia.com/miscellaneous/kidsworld/inspirationalarticles/0705/27/1070527016_1.htm

பின்னூட்டமொன்றை இடுக

Filed under இன்டர்நெட், கல்வி, குழந்தைகள், பொழுதுபோக்கு, விளையாட்டு

அக்பர் அரண்மனையில் நடந்த சம்பவங்கள் ஒளி படங்களாக

1,[youtube=http://www.youtube.com/watch?v=5DGZHs3PhAI&hl=en”>

2,

3,

4,

1 பின்னூட்டம்

Filed under அக்பர், குழந்தைகள், பீர்பால், பொழுதுபோக்கு, விளையாட்டு