விலைவாசி ஏற்றத்தைக் கண்டித்து பல்வேறு கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. விலைவாசி உயர்வை விளக்கும் வகையில் சண்டிகரில் நூதன போராட்டம் நடந்தது. காய்கறிகள் விலைமதிப்பு மிக்கவை என்றும் அவற்றை வங்கி லாக்கரில் வைக்கப் போவது போலவும் பிரபல நகைச்சுவை எழுத்தாளர் ஜஸ்பால் பட்டியின் மனைவி சவிதா போராட்டம் நடத்தினார். காய்கறிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக கறுப்பு பூனைப் படையைப் போல வேடமணிந்தவர்கள் அருகில் உள்ளனர்.