Category Archives: கம்ப்யூட்டர்

கம்ப்ïட்டரில் உள்ள தகவல்களை-அழிக்கும் வைரஸ் புரோகிராம்கள்

1.வைரஸ் ( VIRUS)

வைரஸ்கள் பல வகைகளாக உபயோகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் இதன் பொதுவான குணமானது ஒரு கம்ப்ïட்டரில் உள்ள.EXE எனப்படும் விரிவு கொண்ட புரோகிராம் களுடன் தானாகவே சென்று ஒட்டிக் கொள்ளும் திறன் கொண் டது. இது போன்று சேர்ந்து கொண்ட வைரஸ் புரோகிராமானது அந்த.EXE விரிவு கொண்ட புரோகிராமை உபயோகப்படுத்தும் போது நாம் எதிர்பாராத வகையில் அந்த புரோகிராமை இயக்க முடியாத வகையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். சில வைரஸ்கள் நமது புரோகிராம்களில் உள்ள சில கேரக்டர்களை,வேறு சில கேரக்டர்களாக (CHARACTER)மாற்றியோ அல்லது நமது புரோகிராம் வரிகளை காணாமல் செய்தோ பாதிப்புகளைஏற்படுத்தும். இதுவரை பல்லாயிரக் கணக்கான வைரஸ்கள் உலகில் உபயோகத்தில் இருந்து வந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த I LOVE YOUஎனப்படும் வைரஸ் கம்ப்ïட்டரில் ஏற்படுத்திய பாதிப்பை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.

2.டிராஜன் ஹார்ஸ் (TROJAN HORSE)

இது ஒரு புதுவகையான வைரஸ் ஆக கருதப்பட்டாலும் இதன் பாதிப்புகள் நாம் எதிர்பாராத வகையில் இருக்கும். ஏனென்றால் இந்த வகை வைரசானது ஒரு கம்ப்ïட்டர் புரோகிராமுடன் தானாகவே சென்று ஒட்டிக் கொண்டாலும், பல நேரங்களில் எதிர்பார்க்காத சிலவேலைகளைச்செய்யும் படி அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு USER தனது புரோகிராமை எடுத்து அதில் சில மாற்றங்களைச் செய்ய முற்படும் போது, அந்த புரோகிராமை அழித்துவிடும் தன்மை கொண்டது தான் இந்த டிராஜன் ஹார்ஸ் ஆகும். இது போன்று புரோகிராம்களை அழித்து விடுவதால் USER-கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பிப் போகும் நிலை உருவாகிறது.

3. வாம் (WORM)

இந்த வகை வைரஸ் ஆனது சற்று வேடிக்கையானதும் கூட. ஏனென்றால் ஒரு புரோகிராமை நாம் ஙஉஙஞதவ-யில் இஞடவ செய்யும் போது அதே போன்று அதே பெயரில் மற்றொரு புரோகிராம் ஒன்றும் உருவாகும். இந்த இரண்டு புரோகிராம்களின் அளவும் ஒரே SIZE ஆகவே காட்டும். ஆகையால், நாம் ஏதாவது ஒன்றை(DELETE)அழிக்க நினைத்து புரோகிராமை ERASE பண்ணி விடுவோம். அதன் பிறகு நம்மிடம் இருக்கும் அந்த மற்றொரு புரோகிராமை எடுத்து அதில் உள்ள தகவல்களை பார்த்தோமேயானால் ஒன்றுமே இருக்காது. ஒரு புரோகிராம் வரி கூட இல்லாமல் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக ஒரு அலுவலகத்தில் கம்ப்ïட்டரை உபயோகிக் கும் ஒருவர், ஒவ்வொரு முறையும் தனது SERVER கம்ப்ïட்டரில் இருந்து நஉதயஉத கம்ப்ïட்டருக்கு தகவல்களை அனுப்பும் போதும் இது போன்ற வைரஸ்கள் உள்ளதா என்று சோதனையிட வேண்டும். அது போன்று சோதனையிடும் போது இது போன்ற அபாயகரமான வைரஸ் புரோகிராம்களை அழித்து விட்டு பிறகு தான் அவற்றை கம்ப்ïட்டரில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

http://www.maalaimalar.com/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under கம்ப்யூட்டர், வைரஸ், TROJAN HORSE, VIRUS, WORM

டாய்லெட் சீட்டை விட,கம்ப்யூட்டர் கீபோர்டில் அதிக கிருமிகள்–விஞ்ஞானிகள் எச்சரிக்கை

http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/05/105/05_05_2008_105_002.jpg

பின்னூட்டமொன்றை இடுக

Filed under கம்ப்யூட்டர், கிருமிகள், கீபோர்டில், டாய்லெட், விஞ்ஞானிகள்

அழகிய பெண்ணா? கம்ப்யூட்டர் சொல்லி விடும்


கணவனின் பொய் கருத்து எடுபடாது

அழகிய பெண்ணா? கம்ப்யூட்டர் சொல்லி விடும்

வாஷிங்டன், ஏப். 7: மனைவியையோ, காதலியையோ பார்த்து Ôபொய் சொல்லப் போறேன்… நீ ரொம்ப அழகியடிÕ என்றெல்லாம் இனி நக்கல் அடிக்க முடியாது. ஆம். ஒருவரது தோலின் தன்மை, அணியும் உடை ஆகியவற்றைப் பொறுத்து அவர்களது அழகை இனி கம்ப்யூட்டர் சொல்லி விடும்.
இப்படி ஆண்களின் அடாவடி Ôதீர்ப்புகளில்Õ இருந்து பெண்களைக் காப்பாற்றும் தொழில்நுட்பத்தை இஸ்ரேலிய விஞ்ஞானிகள் கம்ப்யூட்டருக்குச் சொல்லிக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர்.
அதன்படி, ஒவ்வொரு பெண்ணின் மேக்கப், நடை, உடை பாவனைகளை வைத்து அழகை கம்ப்யூட்டர் மதிப்பிடும்.
கம்ப்யூட்டரை மனிதனின் தனிப்பட்ட பயன்களுக்குக் கொண்டு செல்லும் ஆராய்ச்சியின் ஒரு கட்டமாக இதை விஞ்ஞானிகள் செய்து காட்டியுள்ளனர். செயற்கையான அறிவுத் திறனை கம்ப்யூட்டரில் பெற இது உதவும்.
ÔÔஇதுவரை ஒருவரது அடிப்படை முக அமைப்பை அடையாளம் காண்பதற்கு கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படுகிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. புதிய சாப்ட்வேரில் உளவியல்ரீதியான தீர்ப்புகளை கம்ப்யூட்டர் அளிக்கும்ÕÕ என்றார் இஸ்ரேலிய இந்தியரும் டெல் அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானியுமான அமித் காகைன்.
ÔÔமுதல் கட்டமாக 30 ஆண்கள், பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அதே வயதுடைய 100 முகங்களைக் காட்டி அழகைப் பட்டியலிடக் கேட்டு குறித்துக் கொண்டு ரேட்டிங் தரப்பட்டது.
அதே முகங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து முகத்துக்கு கூடுதல் மென்மை, தோல் பளபளப்பு, தலைமுடி வண்ண மாற்றம் செய்து கம்ப்யூட்டரிடம் ரேங்கிங் பெறப்பட்டது. மனித உளவியல் மற்றும் கம்ப்யூட்டரின் கணிப்பு இரண்டின் முடிவுகளும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.
அதில் மனிதர்களின் தீர்ப்பைப் போலவே கம்ப்யூட்டரின் முடிவுகளும் அமைந்திருந்தது ஆச்சரியம்.
அழகை தனது மொழியில் கிரகித்து ஏற்கனவே பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பொருத்திப் பார்த்து தீர்ப்பளிக்கும் வகையில் இந்த சாப்ட்வேர் உள்ளது என்றும் அமித் தெரிவித்தார்.
எனவே, Ôசே… இந்த டிரஸ் உனக்கு எடுப்பா இல்லை, தலைமுடி கலர் சகிக்கல என்றெல்லாம் இனி சொல்லி அழகியைத் தீர்மானித்து விட முடியாது. கம்ப்யூட்டரில் படத்தை பதிவு செய்து மவுசைக் கிளிக்கினால் உங்கள் பொய்க் கருத்து அம்பேல் ஆகி, உதை பட வாய்ப்பு அதிகம், எச்சரிக்கை!
http://dkn.dinakaran.co.in/firstpage.aspx?global.eid=Dinakaran%20E1#

பின்னூட்டமொன்றை இடுக

Filed under அழகிய பெண்ணா, கம்ப்யூட்டர், மனைவி, வாஷிங்டன்

காணாமல் போன பொருளை கண்டு பிடிக்க புதிய கம்ப்யூட்டர் சாப்ட்வேர்

திருடனை கண்டுபிடிக்கலாம்
லேப்டாப் எங்கே? சாப்ட்வேர் காட்டும்

புதுடெல்லி, மார்ச் 30: லேப்டாப் கம்ப்யூட்டர் இனி தொலைந்துவிட்டாலும் கவலை இல்லை. மிக எளிதாக கண்டுபிடித்து விடலாம். காரணம், லேப்டாப் எங்கே இருக்கிறது என காட்டும் சாப்ட்வேர்கள் நிறைய வந்து உள்ளன.
அந்த சாப்ட்வேரை லேப்டாப் கம்ப்யூட்டர்களில் சுலபமாக பொருத்தலாம். யுனிஸ்டால் போன்ற நிறுவனங்கள் இச்சேவையில் இறங்கி உள்ளன.
இந்த சாப்ட்வேர் பொருத்தப்பட்ட லேப்டாப் கம்ப்யூட்டர் தொலைந்துவிட்டால், யுனிஸ்டால் நிறுவனத்தின் சர்வர்களுக்கு ஒருவித சிக்னல் கிடைக்கும். திருடன் கம்ப்யூட்டரை இயக்க ஆரம்பித்ததுமே இந்த சிக்னல்கள் கிடைக்கும். கம்ப்யூட்டரின் ஐ.பி. முகவரி உதவியோடு, அது எங்கே இருக்கிறது என்பதை அறிய முடியும்.
இத்தனையுமே, லேப்டாப் எங்கே என காட்டும் சாப்ட்வேர்களை பொருத்தினால் மட்டும்தான் நடக்கும.¢ இந்த சாப்ட்வேரை உருவாக்க ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டதாக யுனிஸ்டால் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன் விலை ரூ.3,000.
யுனிஸ்டால் சாப்ட்வேர் மட்டுமே அல்லாமல், `லெகேட் பிசி’, `ஸ்னாப் பைல்ஸ்’ சாப்ட்வேர்களிலும் இந்த வசதி உள்ளது. இதற்கு எந்த கட்டணமும் இல்லை.

http://dkn.dinakaran.co.in/firstpage.aspx#

5 பின்னூட்டங்கள்

Filed under கம்ப்யூட்டர், சாப்ட்வேர், திருடன், லேப்டாப்