Category Archives: ஆமை

ராமதாஸ் அவர்களும்,அன்பு மணி ராமதாஸ் அவர்களும் கண்டிப்பாக படிக்க கூடாத செய்தி

ராமதாஸ் அவர்களும்,அன்பு மணி ராமதாஸ் அவர்களும் கண்டிப்பாக இந்த விலங்குடைய செய்தியை படிக்க வேண்டாம்

“தம்” அடிக்கும் ஆமை

ஜிலின்: சீனாவின் வடகிழக்குப் பகுதி நகரம் ஜிலின். அங்கு வசிக்கும் யுன் என்பவர் வளர்க்கும் ஆமைதான் இங்கே ஜோராக Ôதம்Õ அடிக்கிறது. புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட யுன், ஒருமுறை தனது செல்லப் பிராணி ஆமையின் வாயில் சிகரெட்டை விளையாட்டாக வைத்தாராம்.

அது பிடித்துப் போன ஆமை, எஜமானர் தம் பற்ற வைக்கும்போதெல்லாம் தனக்கும் வேண்டும் என்று அடம்பிடித்து காலைப் பிறாண்டுமாம். அப்போது முதல் Ôதம்Õமுக்கு அடிமையாகி விட்டது ஆமை. சிகரெட்டை லாவகமாக கவ்வி, உள்ளிழுத்து புகையை வெளிவிடுகிறது ஆமை.
http://www.dinakaran.com/

2 பின்னூட்டங்கள்

Filed under அன்பு மணி ராமதாஸ், ஆமை, புகை, ராமதாஸ்

ஆமை போல் இழுக்கும் ராஜாளி நண்டு (போட்டோவுடன்)

வித்தியாசமான விலங்கு போல காணப்படும் இது ராஜாளி நண்டு. அதிராம்பட்டினம் கடல் பகுதியில் நேற்று விஜயன் என்ற மீனவரின் வலையில் சிக்கியுள்ளது. எதிராளி யாரும் வருவதாக தெரிந்தால், ஆமை போல கால்களை பொசுக்கென்று ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கிறது. இதுதவிர பக்கவாட்டில் இறக்கை போன்ற அமைப்பும் இருக்கிறது. அதையும் லாவகமாக அசைத்து வேகமாக நகர்கிறது. மொத்த எடை அரை கிலோ. Ôஇந்த பகுதியில ஒரு காலத்துல ஏராளமா கெடச்சுது. 50 வருஷம் கழிச்சு இப்பதான் பார்க்கிறேன்Õ என்கிறார் 85 வயதாகும் மீனவர் ஒருவர்.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஆமை, நண்டு, ராஜாளி