Category Archives: அந்திகிறிஸ்து

நீயூமராலிஜி-இந்த நம்பரை யார் பயன்படுத்தலாம்?

நீயூமராலிஜி-இந்த நம்பரை யார் பயன்படுத்தலாம்?நீயூமராலிஜி-இந்த நம்பரை யார் பயன்படுத்தலாம்?நீயூமராலிஜி-இந்த நம்பரை யார் பயன்படுத்தலாம்?
 

666.jpg

ஹாலிவுட்காரர்களுக்குக் கிடைத்த அல்வா தான் 666 என்னும் எண். சாத்தான் எங்கே வருகிறானோ அங்கெல்லாம் இந்த எண்ணைக் காட்டி விடுகின்றனர்.

666 விவிலியத்தில் எங்கே வருகிறது ஏன் வருகிறது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறதா என்பது ஆண்டவனுக்கும் அந்த 666 க்குமே வெளிச்சம்.

விவிலியத்தில் இந்த எண் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வருகிறது.

இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை. புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டோர் அவ்விலங்குக்குரிய எண்ணைக் கணித்துப் புரிந்து கொள்ளட்டும். அந்த எண் ஓர் ஆளைக் குறிக்கும். அது அறுநூற்று அறுபத்தாறு

இவ்வளவே இந்த எண்ணைக் குறித்து விவிலியத்தில் சொல்லப்படும் வசனம்.

பொதுவான கிறிஸ்த்தவப் பார்வை, உலகை ஓர் சாத்தான், எதிர் கிறிஸ்து, அரக்கன், கொடியவன் யாரோ ஒருவன் ஆள்வான். அவனே 666 எண்ணுக்குச் சொந்தக்காரன் என்பதே.

பொதுவாகவே பழங்கால நூல்கள் பூடகமாகப் பல செய்திகளைச் சொல்வதுண்டு. பழங்கால கலாச்சாரத்தினருடைய கட்டிடங்கள், நினைவிடங்கள் போன்றவை கூட பல ரகசியச் செய்திகளை உள்ளடக்கியிருப்பதாக ஆராய்ச்சிகள் அவ்வப்போது கூறி வருகின்றன.

விவிலியமும் அதே போல பல ரகசியங்களை உள்ளடக்கியதே. விவிலியம் ஏழு என்னும் எண்ணை (யூத நம்பிக்கை ) இறைவனுக்குரியதாகவும், முழுமையைக் குறிப்பதாகவும் சொல்கிறது.

அதேபோல ஆறு என்னும் எண் மனிதனைக் குறிக்கிறது. மனிதன் இறைவனை விட சற்றுக் குறைவானவனாய் காட்டப்படுகிறது. இதனால் தான் மனிதன் ஆறாம் நாள் படைக்கப்படுகிறான் !

ஆறு மனிதனைக் குறிப்பது போல 666 என்பது அழிவுக்கான சாத்தானைக் குறிக்கிறது.

இந்த நூலை எழுதிய யோவான் காலத்தில் நீரோ மன்னன் கிறிஸ்தவர்கள் மீது மிகவும் கொடுமையான அடக்குமுறையைக் கையாண்டான். நீரோ மன்னனின் பெயர் 666 என்பதைக் குறிக்கிறது என்கின்றனர் விவிலிய ஆய்வாளர்கள். எனவே ஒருவேளை யோவான் நீரோ மன்னனை மனதில் வைத்துக் கூட இந்த எண்ணை எழுதியிருக்கலாம் என கருதுகின்றனர் சிலர்.

ஆனால் நீரோ மட்டுமன்றி ரெமூலஸ், லேட்டினஸ், விகாரியஸ் என பலருக்கும் இந்த 666 பொருந்திப் போவதால் முழுமையாக நீரோவைக் கணக்கில் எடுத்துக் கொள்வதும் சரியல்ல.

நவீன யுகத்தில் இதற்கு வேறு பல அர்த்தங்களும் கொடுக்கப்படுகின்றன. கணினி யுகத்தில் இருக்கும் மனுக்குலம் இன்னும் சில ஆண்டுகளில் தங்களின் உடலிலேயே ஸ்மார்ட் கார்ட் பொருத்தும் நிலை ஏற்படும். அதுவே மக்களின் நெற்றியில் எழுதப்படும் தனி எண் எனவும் மக்கள் சிந்திக்கின்றனர்.

விவிலியம் என்ன பொருளில் சொல்கிறது என்பதை ஆராய்ச்சிகள் முடிவு செய்ய முடியாது, நாம் இறைவனை நம்பினால் அவரே நமக்கு வெளிப்படுத்துவார். இதுவே உண்மை.

எப்படியோ 666 என்பது கிறிஸ்துவுக்கு எதிராக எழும் ஒரு தீய சக்தி என்பது தெளிவு. எனில் அதன் முடிவு தான் என்ன ?

"அவ்விலங்கு பிடிபட்டது. அதன் முன்னிலையில் அரும் அடையாளங்கள் செய்திருந்த போலி இறைவாக்கினனும் அதனோடு சேர்ந்து பிடிபட்டான். தான் செய்த அரும் அடையாளங்களால் அந்த விலங்குக்குரிய குறி இட்டுக்கொண்டவர்களையும் அதன் சிலையை வணங்கி வந்தவர்களையும் ஏமாற்றியவன் அவனே. அந்தப் போலி இறைவாக்கினனும் விலங்கும் கந்தகம் எரிந்துகொண்டிருந்த நெருப்பு ஏரியில் உயிரோடு எறியப்பட்டார்கள்"

என்கிறது விவிலியம்.

இறைவனின் ஆழமான நம்பிக்கையும், செயல்களில் அவருடைய வழிகாட்டுதலையும் கொண்டிருந்தால் எதுவுமே நம்மை அசைக்காது என்பதே இறைவன் தரும் செய்தி.
விவிலியத்தில் 666 குறித்து வரும் பகுதி (திருவெளிப்பாடு 13 )

1 அப்பொழுது ஒரு விலங்கு கடலிலிருந்து வெளியே வரக் கண்டேன். அதற்குப் பத்துக் கொம்புகளும் ஏழு தலைகளும் இருந்தன. அதன் கொம்புகளில் பத்து மணிமுடிகளும் தலைகளில் கடவுளைப் பழித்துரைக்கும் பெயர்களும் காணப்பட்டன.

2 நான் கண்ட அந்த விலங்கு சிறுத்தைபோல் இருந்தது. அதன் கால்கள் கரடியின் கால்கள்போன்றும் வாய் சிங்கத்தின் வாய்போன்றும் இருந்தன. அந்த அரக்கப்பாம்பு தன் வல்லமையையும் அரியணையையும் பேரதிகாரத்தையும் அதற்கு அளித்தது.

3 அந்த விலங்கின் தலைகளுள் ஒன்று உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய அளவுக்குப் படுகாயப்பட்டிருந்ததுபோல் தோன்றியது: ஆனால் அந்தப் படுகாயம் குணமாகியிருந்தது. மண்ணுலகு முழுவதும் வியப்புற்று அவ்விலங்கைப் பின் தொடர்ந்தது.

4 அரக்கப்பாம்பு அவ்விலங்குக்குத் தன் அதிகாரதத அளித்திருந்ததால் மக்கள் பாம்பை வணங்கினார்கள்: விலங்குக்கு ஒப்பானவர் யார்? அதனுடன் போரிடக் கூடியவர் யார்? என்று கூறி அவ்விலங்கையும் வணங்கினார்கள்.

5 ஆணவப் பேச்சுப் பேசவும் கடவுளைப் பழித்துரைக்கவும் அவ்விலங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது: நாற்பத்திரண்டு மாதம் அது அதிகாரம் செலுத்த விடப்பட்டது:

6 கடவுளையும் அவரது பெயரையும் உறைவிடத்தையும் விண்ணகத்தில் குடியிருப்போரையும் பழித்துரைக்கத் தொடங்கியது.

7 இறைமக்களோடு போர்தொடுக்கவும் அவர்களை வெல்லவும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது: குலத்தினர், மக்களினத்தினர், மொழியினர், நாட்டினர் ஆகிய அனைவர்மீதும் அதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

8 மண்ணுலகில் வாழ்வோர் அனைவரும் அதை வணங்குவர். இவர்கள் கொலை செய்யப்பட்ட ஆட்டுக்குட்டி வைத்திருக்கும் வாழ்வின் நூலில் உலகம் தோன்றியது முதல் பெயர் எழுதப்படாதோர்.

9 கேட்கச் செவி உடையோர் கேட்கட்டும்:

10 சிறையிலிடப்பட வேண்டியவர் சிறையிலிடப்படுவர்: வாளால் கொல்லப்பட வேண்டியவர் வாளால் மடிவர். ஆகவே இறைமக்களுக்கு மனவுறுதியும் நம்பிக்கையும் தேவை.

11 பின்னர் மற்றொரு விலங்கு மண்ணிலிருந்து வெளியே வரக் கண்டேன். ஆட்டுக்கடாவின் கொம்புகளைப் போன்று இரு கொம்புகள் அதற்கு இருந்தன. ஆனால் அது அரக்கப்பாம்பு போன்று பேசியது.

 12 அவ்விலங்கு முதலாம் விலங்கின் முழு அதிகாரத்தையும் அதன் முன்னிலையில் செயல்படுத்தியது. உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய படு காயத்தினின்று குணம் பெற்றிருந்த முதல் விலங்கை மண்ணுலகும் அதில் வாழ்வோரும் வணங்கும்படி செய்தது.

13 அது பெரிய அடையாளச் செயல்கள் செய்தது: மனிதர் பார்க்க விண்ணிலிருந்து மண்மீது நெருப்பு விழும்படியும் செய்தது.

14 இவ்வாறு முதல் விலங்கின் முன்னிலையில் அது செய்யும்படி அனுமதிக்கப்பட்டிருந்த அந்த அரும் அடையாளங்களால் மண்ணுலகில் வாழ்வோரை ஏமாற்றியது: வாளால் படுகாயப்பட்டிருந்தும் உயிர் வாழ்ந்த அவ்விலங்குக்குச் சிலை ஒன்று செய்யுமாறு அவர்களிடம் கூறியது.

15 அச்சிலையைப் பேசவைக்கவும் அதனை வணங்காதவர்களைக் கொலை செய்யவும் அதற்கு உயிர் கொடுக்குமாறு இரண்டாம் விலங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது.

16 சிறியோர், பெரியோர், செல்வர், வறியவர், உரிமைக் குடிமக்கள், அடிமைகள் ஆகிய அனைவரும் அவரவர் வலக் கையிலாவது நெற்றியிலாவது குறி ஒன்று இட்டுக் கொள்ளுமாறு செய்தது.

17 இவ்வாறு அந்த விலங்கின் பெயரையோ அப்பெயருக்குரிய எண்ணையோ குறியாக இட்டுக்கொள்ளாத எவராலும் விற்கவோ வாங்கவோ முடியவில்லை.

18 இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை. புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டோர் அவ்விலங்குக்குரிய எண்ணைக் கணித்துப் புரிந்து கொள்ளட்டும். அந்த எண் ஓர் ஆளைக் குறிக்கும். அது அறுநூற்று அறுபத்தாறு.

 

http://jebam.wordpress.com/2008/03/24/666/

1 பின்னூட்டம்

Filed under அந்திகிறிஸ்து, அல்லா, இயேசு, இஸ்லாம், கர்த்தர், குரான்