Daily Archives: ஏப்ரல் 3, 2013

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22

சக்களத்திச் சண்டையும் வேதவெளிப்பாடும்

முஹம்மது நபி அவர்களுக்கு தேனை மிக விரும்பி உண்பார்.தினமும் ஒவ்வொரு மனைவியின் வீட்டுக்கும் செல்வது முஹம்மது நபி அவர்களுக்கு வாடிக்கை.ஜைனப் அவர்களின் முறை வரும் பொழுது சற்று கூடுதலான நேரம் தங்கி அவர் தரும் தேனைக் குடித்து மகிழ்வார். இதை மற்ற மனைவியர்களால் பொறுக்க முடியாமல் மனைவியருக்கிடையே ஏற்பட்ட சக்களத்தி சண்டையில் தேன் உண்பதை நிறுத்திவிடுவதாக கூறுகிறார்

(புகாரி 4912, 5267, 5268).

புகாரிஹதீஸ்-4912
ஆயிஷா (ரலி) அவர்கள்கூறியதாவது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம், அவர்களது (வீட்டில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப்பேசி முடிவு செய்து கொண்டோம் தேன் சாப்பிட்ட பின்) நம்மவரில் எவரிடம் நபி (ஸல்) அவர்கள் முதலில் வருவார்களோ, அவர், நபி (ஸல்) அவர்களிடம் கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா உங்களிடமிருந்து பிசினின் துர்வாடை வருகிறதே என்று கூறி விடவேண்டும். வழக்கம்போல ஸைனப்பின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டு விட்டு நபி (ஸல்) அவர்கள் வந்த போது நாங்கள் பேசிவைத்த பிரகாரம் கூறியதற்கு அவர்கள் இல்லை (பிசின் சாப்பிட வில்லை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (வீட்டில்) தேன் குடித்தேன். (இனிமேல்) நான் ஒரு போதும் அதைக் குடிக்கமாட்டேன், நான் சத்தியமும் செய்து விட்டேன் என்று கூறிவிட்டு இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே என்று கூறினார்கள்.

மனைவியர்களின் செயலால் வருத்தமடைந்த முஹம்மது நபி ஒரு மாத காலம் எந்த மனைவியர்களின் வீட்டிற்கும் செல்லாமல் இருக்கிறார்.

புகாரி ஹதீஸ் : 5203
அபூ ய அபூர் அப்துர் ரஹ்மான் பின் உபைத் அல்கூஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது

நாங்கள் அபுள்ளுஹா (ரஹ்) அவர்களிடம் (ஒரு மாதத்திற்கு எத்தனை நாள் என்பது குறித்து) விவாதித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வரும் ஹதீஸை)க் கூறினார்கள். ஒரு நாள் காலை நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர் அழுது கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அருகில் அவரவர் குடும்பத்தினரும் இருந்தனர். நான் (மஸ்ஜதுந் நபிவீ) பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்றேன். பள்ளிவாசல் மக்களால் நிரம்பியிருந்தது. அப்போது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் வந்து, நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த மாடியறைக்கு ஏறிச் சென்றார்கள். (நபி (ஸல்) அவர்களுக்கு) சலாம் (முகமன்) சொன்னார்கள். ஆனால் யாரும் உமருக்கு பதில் சலாம் சொல்லவில்லை. மீண்டும சலாம் சொன்னார்கள். அப்போதும் அவர்களுக்கு யாரும் பதில் சலாம் சொல்லவில்லை. பிறகு (மூன்றாம் முறையாக) சலாம் சொன்னார்கள். அப்போதும் யாரும் (உமர் (ரலி) அவர்களுக்கு) பதில் சலாம் சொல்லவில்லை. அப்போது உமர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, தங்கள் துணைவியரை (தாங்கள்) விவாக ரத்துச் செய்துவிட்டிர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை. ஆனால், ஒரு மாத காலம் (அவர்களை) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் (ஈலாஉ) செய்தவிட்டேன் என்று பதிலளித்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்கள் இருபத்தொன்பது நாட்கள் தங்கியிருந்துவிட்டுப் பிறகு தம் துணைவியரிடம் சென்றார்கள்

Bukhari Volume 3, Book 43, Number 648:
The Prophet did not go to his wives because of the secret which Hafsa had disclosed to ‘Aisha, and he said that he would not go to his wives for one month as he was angry with them when Allah admonished him.

(அல்லாஹ் அவரை (நபியை) எச்சரிக்கை செய்த நிகழ்ச்சியில், ஹஃப்ஸா ரகசியத்தை ஆயிஷாவிடம் தெரிவித்ததால் கோபமடைந்த அல்லாஹ்வின் தூதர் ஒரு மாதகாலம் அவர்களிடம் (மனைவியர்களிடம்) செல்ல மாட்டேன் என்று கூறினார்)

இவ்விஷயத்தில் ஹஃப்ஸா மீது மனவருத்தம் கொண்டு அவரை விவாகரத்து செய்ய நாடினார். இந்த விஷயங்கள் அல்லாஹ்வின் கவனத்திற்கு வருகிறது, அவ்வளவு எளிதில் விடுவானா? ஜிப்ரீலை உடனே அனுப்புகிறான். ஜிப்ரீல் தலையீடு காரணமாக தலாக் சொல்வது தடுக்கப்பட்டது. நபிக்கு எதிராக செயல்பட்ட மனைவியர்களை கடுமையாக எச்சரித்தான். உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு உணவை எப்படி நீங்கள் ஹராமாக்கலாம்? என்று உடனே வஹி அனுப்பி தேன் சாப்பிட வைத்தான்.

1. நபியே உம்முடைய மனைவியரின் திருப்திகளை நீர் நாடி அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை நீர் ஏன் ஹராமாக்கிக் கொண்டீர்? அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன் மிகக் கிருபையுடையவன்.

2.(இத்தகைய) உங்களுடைய சத்தியங்களை முறிப்பதை அல்லாஹ் உங்களுக்கு திட்டமாகக் கடமையாக்கி இருக்கிறான். அல்லாஹ் உங்களுடைய எஜமான் – அவன் முற்றும் அறிந்தவன் ஞானமுள்ளவன்.

3. இன்னும் நபி, தம் மனைவியரில் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாகச் சொல்லிய நேரத்தை (நினைவு கூர்க) அதனை அவர் (அம்மனைவி மற்றொரு மனைவிக்கு) அறிவித்து, அல்லாஹ் அவருக்கு (நபிக்கு) வெளியாக்கிய போது, அவர் (நபி) அதில் சிலதை அறிவித்தும் மற்றும் சிலதை புறக்கணித்தும் விட்டார். அவர் அதனை அவருக்கு (தம் மனைவியரில் ஒருவருக்கு) அறிவித்த போது இதனை உமக்கு அறிவித்தவர் யார்? என்று (மனைவியரான) அவர் கேட்டார் முற்றும் அறிந்தவனும் (எல்லாவற்றையும்) தெரிந்தவனாகிய (அல்லாஹ்) எனக்கு அறிவித்தான் என்று அவர் கூறினார்.

4. (நபியின் மனைவியரான) நீங்கள் இருவரும் அல்லாஹ்வின்பால் (தவ்பா செய்து) மீண்டால் (அது உங்களுக்கு நன்மையாகும்) ஏனெனில் உங்களிருவருடைய இதயங்களும் அவ்வேளையில் திட்டமாக சாய்ந்து விட்டன; நீங்கள் இருவரும் (நபிக்கு) எதிராக உதவி செய்து கொண்டால், அப்போது நிச்சயமாக அல்லாஹ் அவருடைய உதவியாளனாக இருக்கிறான். இன்னும் ஜிப்ரீலும் முஃமின்களில் ஷாலிஹானவர்கள் அவருக்கு உதவியாளர்களாவார்கள். அதற்குப் பின்னும் மலக்குகள் உதவியாளர்களாவார்கள்.

(குர்ஆன் 66:1-4)

நபியிடம், அல்லாஹ் கொண்ட அன்பை சொல்லில் விளக்க முடியாது.ஆனால் அல்லாஹ்விற்கு அந்த சக்களத்தி சண்டையை நிறுத்தத் தெரியவில்லை.அல்லாஹ்வை இதை விட வேடிக்கையாக சித்தரிக்க முடியாது. தேன் அனுமதிக்கப்ட்ட உணவாக இருப்பினும் கட்டாயமாக சாப்பிட வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லையே. நபி தேன் அருந்த மாட்டேன் என்று கூறுவதில் என்ன ரகசியம் இருக்க முடியும்?

நபி தேன் அருந்த மாட்டேன் எனக் கூறியது வெளியானால், நபியின் செயல் முறைகளை பின்பற்றிவரும் சஹாபாக்களும் தேன் அருந்தாமல் விட்டுவிடுவார்களோ என அஞ்சியே இந்த செய்தியை ரகசியமாக பாதுகாக்குமாறு நபி கூறினார் என்று விளக்கமளிக்கின்றனர்.

தேன் கெட்ட வாசனையுடையது அல்ல என்பது அனைவரும் மிக நன்றாக அறிந்த செய்தி. மக்ஃபிர் என்பது கருவேல மரத்தின் பிசின் என்கிறார்கள் சில அறிஞர்கள் பேரீச்சை மரத்தில் உருவாக்கப்படும் ‘கள்’ வகை மது என்கிறார்கள். எப்படியிருந்தாலும் தேனின் வாசனைக்கும் (Maghafir) மக்ஃபிர் -ன் வாசனைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. மக்ஃபிர் மிக மோசமான வாசனையுடையது. மனைவியர்கள் மக்ஃபிர் -ன் வாசனை வருகிறது என்று முஹம்மது நபி அவர்களிடம், பொய்யுரைத்தவுடன் அதை அப்படியே நம்பி தேன் அருந்துவதை கைவிடுவதாக முஹம்மது நபி கூறினாராம்.அல்லாஹ்வும் வஹீ அனுப்பி தேன் அருந்தச் செய்தானாம். அறிஞர்களால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஹதீஸ்கள் சிறிதும் பகுத்தறிவிற்கு பொருந்தவில்லை. தேனின் வாசனைக்கும் மக்ஃபிர்-ன் வாசனைக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவரா முஹம்மது நபி? அல்லது மக்ஃபிர் சாப்பிட்டு இருந்தாரா?

மேற்கண்ட ஹதீஸ் கூறும் நிகழ்ச்சியின் அடிப்படையான விஷயம் என்னவென்றால் முஹம்மது நபி அவர்களை, ஜைனப் பின்த் ஜஹ்ஷ் வீட்டில் அதிக நேரம் தங்குவதைத் தடுப்பது மட்டுமே நபியின் மற்ற மனைவியர்களான ஆயிஷா மற்றும் ஹப்ஸா ஆகியவர்களின் நோக்கம்; தேன் அருந்துவதை வெறுக்கச் செய்வது அல்ல. அதாவது கணவன் தனக்கு மட்டுமே சொந்தம் (Possessiveness) என்று எண்ணிய அப்பாவி மனைவிகளின் அன்பினால் ஏற்பட்ட சக்களத்திச் சண்டையே இந்நிகழ்ச்சி. இதில் வேறு எந்த சதித் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அல்லாஹ், மேற்கூறிய அடிப்படைக் காரணத்திற்கு சிறிதும் தொடர்பில்லாமல் மனைவியர்கள் சதி செய்து விட்டதாக கூறி, ஆயிஷா மற்றும் ஹப்ஸாவை எச்சரிக்கிறான். நபிக்கு உதவி செய்வதற்கு ஜிப்ரீல், முஃமின்களில் ஷாலிஹானவர்கள், மலக்குகள் என நிறைய பேர் உள்ளனர் என்றும் பட்டியலிடுகிறான். இஸ்லாமிய அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட "தேன் குடித்த" சம்பவத்தை என்னால் ஏற்க முடியவில்லை. அல்லாஹ்வே வஹீயின் மூலம் நபியின் மனைவியர்களை எச்சரிக்கை செய்கிறான் என்றால், நிச்சயமாக வலுவான வேறு காரணம் இருக்க வேண்டும்.

நாம் முதலில் பார்த்த ஹதீஸில், ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம், அவர்களது வீட்டில் தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். இதை விரும்பாத ஆயிஷாவும் ஹப்ஸாவும் சதி செய்ததாக கூறியது. பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்…

புகாரி ஹதீஸ் : 5268
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தேனும் இனிப்பும் மிக விருப்பமானவைகளாக இருந்தன. அஸ்ர் தொழுகையை முடித்ததும் நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியாரிடம் செல்வார்கள்: அவர்களில் சிலருடன் நெருக்கமாகவும் இருப்பார்கள். இவ்வாறு (ஒரு முறை) தம் துணைவியால் ஒருவரான ஹஃப்ஸா பின்த் உமா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் சென்று வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்து விட்டார்கள். ஆகவே நான் ரோஷப்பட்டேன். அது குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர சுத்த)த் தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கிளாள் என்றும் அதிலிருந்து தயாரித்த பானத்தை நபி (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது.…

தன்னுடைய வீட்டில், முஹம்மது நபி அதிக நேரம் தங்கி தேன் அருந்தியது ஹஃப்ஸாவிற்கு பிடிக்கவில்லையா? முஹம்மது நபி தன்னுடைய வீட்டிற்கு வருவதை ஹஃப்ஸா விரும்பவில்லையா? (என்னய்யா…! குழப்பம் இது?) 66 : 1–4 குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் கண்டிப்பது யாரை?

புகாரிஹதீஸ்-4913
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.

நான் ஒரு வருட காலமாக ஒரு வசனத்தைப் பற்றி உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்னார் மேலிருந்த (மரியாதை கலந்த) அச்சம் காரணமாகக் கேட்பதற்குத் தைரியம் வரவில்லை. (ஒருமுறை) உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டுச் சென்றபோது நானும் அவர்களுடன் புறப்பட்டேன். நான் (ஹஜ் முடித்துக் கொண்டு) திரும்பி வரும் வழியில் நாங்கள் (மர்ருழ்) ழஹ்ரான் எனும்) ஒரு சாலையில் இருந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள் தமது (இயற்கைத்) தேவை ஒன்றிற்காக அராக் மரத்தை நோக்கி ஒதுங்கிச் சென்றார்கள். அவர்கள், தமது தேவையை முடித்துக்கொண்டு வரும்வரை நான் அவர்களை எதிர்பார்த்தபடி அவர்களுக்காக நின்றுகொண்டிருந்தேன். பிறகு அவர்களுடன் செல்லலானேன். அப்போது நான் அவர்களிடம், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில், (நபியவர்களைச் சங்கடப் படுத்தும் வகையில்) கூடிப்பேசிச் செயல்பட்ட இருவர் யார்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷாவும் ஹஃப்ஸாவும்தாம் அந்த இருவர் என்று பதிலளித்தார்கள். ….

…பிறகு (பின் வருமாறு) தெரிவித்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக* அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்பதாக நாங்கள் கருதியதில்லை. அவர்களின் உரிமைகள் தொடர்பாக, தான் அருளிய (சட்டத்)தை அல்லாஹ் அருளும் வரையிலும், அவர்களுக்குரிய (செலவுத் தொகை, சொத்துரிமை ஆகிய பங்குதனைஅவன் நிர்ணயிக்கும் வரையிலும் (இந்நிலை நீடித்தது). (ஒருநாள்) நான் ஒரு விவகாரம் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது என் மனைவி, நீங்கள் இப்படிச் செய்யலாமே என்று (என்னிடம் ஆலோசனை) கூறினார். அதற்கு நான் அவரிடம், உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் தீர்மானிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் உன் தலையீடு எதற்கு? என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், கத்தாபின் புதல்வரே (இப்படிச் சொன்ன) உங்களைப் பார்த்து நான் ஆச்சர்யப்படுகிறேன். உங்களுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆனால், உங்களுடைய புதல்வி (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதித்ததால் அன்றைய நாள் முழுக்க அல்லாஹ்வின் தூதர் கோபமாக இருந்தார்கள் என்று சொன்னார். உடனே நான் எழுந்து, அதே இடத்தில் எனது மேலங்கியை எடுத்துக்கொண்டு, ஹஃப்ஸாவிடம் சென்று, என் அருமை மகளே, நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வாதம் புரிந்து, அதனால் அவர்கள் அன்றைய தினம் கோபமாக இருந்தார்களாமே (உண்மையா?) என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, அல்லாஹ்வின் மீதாணையாக (நபிகளாரின் துணைவியரான) நாங்கள் நபியவர்களுடன் விவாதிப்பதுண்டு என்றhர். அதற்கு நான், அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன். அருமை மகளே தன்னுடைய அழகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை-ஆயிஷாவை-ப் பார்த்து நீயும் துணிந்து விடாதே என்று (அறிவுரை) சொன்னேன். பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டு, (நபி (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியாரான உம்மு சலமாவிடம் அறிவுரை கூறச்சென்றேன். ஏனெனில், அவர் (என் தாய்வழி) உறவினராவார். இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு சலமா, கத்தாபின் புதல்வரே உம்மைக் கண்டு நான் வியப்படைகின்றேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டு வந்த நீங்கள் இப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் இடையும் தலையிடும் அளவிற்கு வந்துவிட்டீர்கள் என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக உம்மு சல்மா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடி பிடித்து விட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி கோப உணர்ச்சியை உடைத்தெறிந்துவிட்டார். ஆகவே நான், அவரிடமிருந்து வெளியேறி வந்துவிட்டேன். மேலும், அன்சாரிகளில் எனக்கொரு நண்பர் இருந்தார். நான் (நபி (ஸல்) அவர்களது அவையில்) இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை அவர் எனக்குத் தெரிவிப்பதும், அவர் இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை நான் அவருக்குத் தெரிவிப்பதும் வழக்கம். (அந்தக் காலக் கட்டத்தில் ஷாம் நாட்டு) ஃகஸ்ஸான் வம்ச மன்னர்களில் ஒருவனைப் பற்றிய அச்சம் எங்களுக்கு இருந்துவந்தது. அவன் எங்கள் (மதீனா) மீது படையெடுக்க விரும்புவதாக எங்களிடம் சொல்லப்பட்டிருந்தது. இதனால் அவனைப் பற்றிய அச்சம் எங்கள் நெஞ்சங்களில் நிரம்பியிருந்தது. இந்நிலையில், (ஒரு நாள்) அந்த அன்சாரி நண்பர் (என் வீட்டுக்) கதவைத் தட்டினார். திறங்கள், திறங்கள் என்று சொன்னார். (கதவைத் திறந்த) நான் ஃகஸ்ஸானிய மன்னன் (படையெடுத்து) வந்துவிட்டானா? என்று கேட்டேன். அதற்கவர், அதைவிடப் பெரியது நடந்து விட்டது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை விட்டு விலகிவிட்டார்கள் என்றார். உடனே நான், ஹஃப்ஸா, ஆயிஷா ஆகியோரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறிவிட்டு…

ஹஃப்ஸா செய்த விவாதத்தால், முஹம்மது நபி கோபமடைந்து ஒரு மாத காலம் மனைவியர்களை விட்டு விலகி இருந்ததுடன் அவர்களை விவாகரத்து கூறுமளவிற்கு சென்று விட்டதாக மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது.

தேன் குடித்ததற்கு இவ்வளவு பெரிய பிரச்சினையா? மற்ற மனைவியர்களையும் எதற்காக விலக்கி வைக்க வேண்டும்?

தன்னுடைய மகள் உட்பட நபியின் மனைவியர்கள் அனைவரும் தவறு செய்து விட்டதாக நினைத்து அறிவுரை கூறச் சென்ற உமர் அவர்களை, "அல்லாஹ்வின் மீதாணையாக உம்மு சல்மா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடி பிடித்து விட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி கோப உணர்ச்சியை உடைத்தெறிந்துவிட்டார்" என்று கூறுமளவிற்கு உம்மு சல்மா என்ன பதில் விளக்கத்தைக் கூற முடியும்?

ஒரு ஹதீஸ்,ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம், அவர்களது வீட்டில் தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள் என்று கூறுகிறது. மற்றொன்று ஹஃப்ஸா வீட்டில் சற்று அதிக நேரம் தங்கியதாக கூறுகிறது. இன்னொரு ஹதீஸ், ஹஃப்ஸாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்ததாக கூறுகிறது.

ஸைனப் பின்த் ஜஹ்ஷ் வீட்டில் அதிக நேரம் தங்கிவிடுவார்கள் என்று அறிவிப்பதும், ஹஃப்ஸா வீட்டில் சற்று அதிக நேரம் தங்கியதாக அறிவிப்பதும் ஆயிஷாதான். ஏன் இந்த ஆள்மாறட்ட குழப்பம்?

இதில் நமது வாதத்திற்கு சாதகமான ஒரு செய்தி மறைந்திருக்கிறது.
66 : 1–4 வரையுள்ள குர்ஆன் வசனத்திற்கு உண்மையை தேடிய பொழுது இன்னொரு விளக்கமும் கிடைத்தது. முஹம்மது நபி குடித்த தேன் எது?எங்கிருந்து வந்தது? இப்ன் ஸாத் –ன் தபாகத் தரும் விளக்கத்தைக் காண்போம்.

Reported by Ibn Sa’d in Tabaqat:
Waqidi has informed us that Abu Bakr has narrated that the messenger of Allah (PBUH) had sexual intercourse with Mariyyah in the house of Hafsah. When the messenger came out of the house, Hafsa was sitting at the gate (behind the locked door). She told the prophet, O Messenger of Allah, do you do this in my house and during my turn? The messenger said, control yourself and let me go because I make her haram to me. Hafsa said, I do not accept, unless you swear for me. That Hazrat (his holiness) said, by Allah I will not contact her again. Qasim ibn Muhammad has said that this promise of the Prophet that had forbidden Mariyyah to himself is invalid ? it does not become a violation (hormat). [Tabaqat v. 8 p. 223 Publisher Entesharat-e Farhang va
Andisheh Tehran 1382 solar h (2003) Translator Dr. Mohammad Mahdavi Damghani
]

honey-1.bmp

(நபி, ஒவ்வொரு மனைவியின் வீட்டிற்கும் தினமும் செல்லும் வழக்கமுடையவர். அவ்வாறு ஹப்ஸாவின் வீட்டிற்கு வரும் முறையன்று, ஹப்ஸாவிடம், உனது தந்தையார் உமர் கத்தாப் உன்னை பார்க்க விரும்புவதாக கூறுகிறார்.ஹப்ஸாவும், நபியின் ஆணையை ஏற்று தந்தையை காணச் சென்று விடுகிறார். இதற்கிடையில் அடிமைப்பெண் மரியத்துல் கிப்தியாவுடன் கலவியில் ஈடுபட்டு விடுகிறார். சற்று விரைவாகவே வீடு திரும்பிய ஹப்ஸா (கதவு அடைக்கப்பட்டிருந்ததால்) வாயிலில் காத்திருக்கிறார், நடந்த நிகழ்ச்சியை உணர்ந்து கோபமடைகிறார். அவர் நபியிடம் கூறுகிறார், "அல்லாஹ்வின் தூதரே, என் வீட்டிலா இதைச் செய்தீர்கள் அதுவும் என்னுடன் (இருக்க வேண்டிய) முறையில்?" ஹப்ஸாவை சமாதானம் செய்ய, வேறு வழியின்றி அல்லாஹ்வால் ஹலால் ஆக்கப்பட்ட மரியத்துல் கிப்தியா இனி தனக்கு ஹராம் எனக்கூறி ஹப்ஸாவை சமாதானம் செய்கிறார். அதற்கு ஹஃப்ஸா அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறினால் தவிர என்னால் ஏற்க முடியாது என்கிறார். வேறுவழியின்றி இனி மரியத்துல் கிப்தியாவுடன் தொடர்பு கொள்ள மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுகிறார். இந் நிகழ்சியை யாரிடமும் கூறக்கூடாது எனவும் கூறுகிறார். ஆனால் ஹப்ஸா, தன் தோழியான ஆயிஷாவிடம் கூற விஷயம் வெளியாகிறது)

இதைக் கேள்விப்பட்ட மற்ற மனைவியர்களின் ஏளனப் பார்வையை முஹம்மது நபியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தன்னுடைய மனைவியர்களுக்கு புத்தி புகட்டவே ஒரு மாத காலம் விலகியிருந்தார். விவாகரத்து செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

இந்த ஹதீஸைக் கூறிய வாகிதி ஒரு பொய்யர். எனவே இந்த ஹதீஸ் ஏற்புடையது அல்ல. தேன் குடித்த சம்பவமே சரியானது, அதுவே அறிஞர் பெருமக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹதீஸ் என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கம். 66:1-4 வரையுள்ள குர்ஆன் வசனங்களை சற்று கூர்ந்து கவனித்து அதன் பொருளைத் தெளிவாக உணர்ந்த பின், ஹஃப்ஸா வீட்டில் அதிக நேரம் தங்கியதாகக் கூறும் புஹாரியில் பதிவு செய்யப்பட்ட நம்பகமான ஹதீஸையும், அறிஞர்களால் பொய்யர் என புறந்தள்ளப்பட்ட வாகிதியால் கூறப்பட்ட ஹதீஸுடன் இணைத்து ஒப்பிட்டு பாருங்கள். ஹஃப்ஸா உட்பட மனைவியர்கள் அனைவரையும் மணவிலக்கு செய்யுமளவிற்கு வலுவான காரணம் எதனுடன் பொருந்துகிறது?

தேனா? மரியத்துல் கிப்தியாவா? நீங்களே சிந்தித்துப் பருங்கள். "தேன்" எனக் குறிப்பிடப்படுவது சங்கேத வார்த்தையே என்பதை நீங்களே அறியலாம். இருப்பினும் எங்களால் சங்கேத வார்த்தைகளையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது என்று கூறுபவர்களுக்காக, ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்டுள்ள புஹாரி ஹதீஸ் தமிழ்மொழிபெயர்ப்பில் 2468 ஆம் ஹதீஸின் 15 ஆம் அடிக்குறிப்பு மரியத்துல் கிப்தியா உடனான "ஜல்ஸா" நிகழ்ச்சியை உறுதி செய்கிறது என்பது கூடுதல் தகவல்.

source:http://www.iraiyillaislam.blogspot.in/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21

சில Instant வேதவெளிப்பாடுகள்

மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ என்னுமிடத்திலிருந்த கால்வாய் விஷயத்தில் முஹம்மது நபியின் (அன்சாரித்) தோழர் ஒருவருவருக்கும் முஹம்மது நபியின் உறவினரான ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் சச்சரவு ஏற்பட்டது. அந்த அன்சாரித் தோழர், ‘தண்ணீரைத் திறந்து ஓடவிடு” என்று கூறினார். ஸுபைர் (ரலி) ‘தண்ணீரைத்திறந்து விட) மறுத்துவிட்டார்கள். இந்தத் தகராறு முஹம்மது நபியிடம் பஞ்சாயத்திற்கு வந்தது. முஹம்மது நபி கூறிய தீர்ப்பு ஸுபைருக்கு சாதமாக இருந்தது. தீர்ப்பில் அதிருப்த்தியடைந்த அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, ‘உங்கள் அத்தை மகன் என்பதால் அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்களின் முகம் கோபத்தால் நிறம் மாறி சிவந்து விட்டது. அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி, ‘உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகைளச் சென்றைடயும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்” என்றுகூறினார்கள்.
அல்லாஹ்வால் அமைதியாய் இருக்க முடியவில்லை உடனே இறக்கிவிட்டான் வஹீயை!

புகாரிஹதீஸ்- 2359
அப்துல்லாஹ் பின்ஸுபைர் (ரலி) அவர்கள்கூறியதாவது
‘இறைவன் மீதாணையாக! ‘(முஹம்மேத!) உங்களுடைய இறைவன் மீதுசத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்ற பின்னர், நீங்கள் அளிக்கிற தீர்ப்புக் குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்’
(குர்ஆன் 04:65)

திருக்குர்ஆன் வசனம் இந்த விவகாரத்தில் தான் இறங்கியது என்று எண்ணுகிறேன்” என்று ஸுபைர் (ரலி) கூறினார்கள்.

***

முஹம்மது நபி அவர்களின் மனைவியர்கள் தங்களின் இயற்கை தேவைகளுக்காக இரவு வேளைகளில் திறந்தவெளியில் வருவதை உமர் அவர்கள் காண்கிறார். எந்தக் காரணத்திற்காகவும் பெண்கள் வெளியில் வருவதை அவர் விரும்பவில்லை. அப்படியே வந்தாலும் அப் பெண்கள் தங்களை இனம் காண முடியாதவாறு கடுமையாக மறைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பினார்

புகாரிஹதீஸ்- 4795
ஆயிஷா (ரலி) அவர்கள்கூறியதாவது
பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி (நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகின்ற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள். என்று சொன்னார்கள். சவ்தா (ரலி) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பி விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களது கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அப்போது ச்வதா (ரலி) அவர்கள் வீட்டினுள் வந்து, அல்லாஹ்வின் தூதரே நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர் (ரலி) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம சொன்னார்கள், என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (வேதவெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. எலும்புத் துண்டு அவர்களது கரத்தில் அப்படியே இருந்தது. அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னார்கள்.
(புகாரி 146,4795).

பெண்களைப் பர்தாவுக்குள் மூடிவைக்கப்பட வேண்டிய பொருள் என்ற உமர் நச்சரித்துக் கூறிய கருத்துக்களையே அல்லாஹ், முஹம்மது நபி அவர்களிடம் வஹீயாக அனுப்பினான் (குர்ஆன் 33:33,59).அதன் காரணமாகவே சவ்தா பர்தாவுடன் கழிப்பிடத்திற்கும் செல்கிறார். அங்கும் விடாது பின்தொடர்ந்து வந்து பர்தாவைப்பற்றி கூறுவதிலிருந்து உமர் அவர்களின் நச்சரிப்பின் வலிமையைப் புரிந்துகொள்ளலாம். இவரது வேறு சில நச்சரிப்புகளும் உடனடியாய் வஹீயாக வெளிப்பட்டுள்ளது. அவைகளிலிருந்து ஒன்றைக் காணலாம்,

***

புஹாரி ஹதீஸ் : 1269
இப்னு உமர் (ரலி ).அவர்கள் கூறியதாவது
(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான்.அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்கேள! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்க வேண்டும்” என்று கூறினார். உடேன நபி (ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, ‘(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்” என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடிய போது, உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களை இழுத்து, ‘நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்கைளத் தடுக்கவில்லையா?’ எனக் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘(ஜனாஸாத் தொழுவது, தொழாமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்தெதடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது’ எனக் கூறிவிட்டு, ‘நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமேம! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்கைள மன்னிக்கப் போவதே இல்லை"என்ற (திருக்குர்ஆன் 09:80)வசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே "அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்” என்ற (திருக்குர்ஆன் 09:84)வசனம் அருளப்பட்டது.

எனக்கு பிறகு ஒருவரை அல்லாஹ் நபியாக தேர்வு செய்தால், அது நிச்சயமாக உமராகத்தான் இருப்பார் என முஹம்மது நபி அவர்களும் பெருமை பாராட்டுகிறார்.

புஹாரி ஹதீஸ் : 2831
அல்பராஉ பின் ஆஸிஃப் (ரலி ) கூறியதாவது.
”இறை நம்பிக்கை கொண்டோரில் (அறப் போரில் கலந்து கொள்ளாமல்) தங்கி விடுவோரும், இறைவழியில் தம் உடைமைகளாலும் உயிர்களாலும் அறப்போர் புரிபவர்களும் சம அந்தஸ்து கொண்டவர்களாக முடியாது…” என்னும் வசனம் அருளப்பட்ட போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் இப்னுஸாபித் (ரலி) அவர்களை அழைத்தார்கள். அவர் அகலமான எலும்பு ஒன்றைக் கொண்டு வந்து, அந்த வசனத்தை எழுதினார். (அருகில் இருந்த கண்பார்வையற்ற) அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) தம் கண்பார்வையில்லாத நிலை குறித்து முறையிட்டார்கள். அப்போது, ‘…. தகுந்த காரணமின்றி ..” என்ற (வாசகம் சேர்ந்த) முழு வசனம் (திருக்குர்ஆன் 04:95)அருளப்பட்டது.
பார்வையற்ற ஒருவர் தனது இயலாமையைத் தெரிவித்த பின்னரே அல்லாஹ்விற்கு போருக்கு வராமலிருப்பதற்கு சில நியாயமான காரணங்களும் இருக்கிறதென்று தெரிந்ததா?
***

புஹாரி ஹதீஸ் : 4517
அப்துல்லாஹ் பின் மஃகல் (ரலி )கூறியதாவது.
நான் இந்தப் பள்ளிவாசலில் – அதாவது, கூஃபா நகரின் பள்ளிவாசலில் – கஅப்பின் உஜ்ரா (ரலி) அருகே அமர்ந்தேன். அவர்களிடம் (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பகாரமாக நோன்புகள் நோற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொட்டிக் கொண்டிருக்க, நான் நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். அவர்கள், ‘உங்களுக்கு இந்த அளவிற்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை” என்று கூறிவிட்டு, ‘உங்களுக்கு ஓர் ஆடு கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘மூன்று நாள்கள் நோன்பு வையுங்கள்! அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை ‘ஸாவு’ உணவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளியுங்கள்; உங்கள் தலையை மழித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். எனவே, இந்த (திருக்குர்ஆன் 02:196 வது) வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பட்டது. ஆனால், (அதன் சட்டம்) உங்களுக்கும் பொதுவானதாகும்” என்று கூறினார்கள்.

மனிதர்களின் தலைகளில் பேன்களால் ஏற்படும் சிரமத்தைக்கூட அல்லாஹ் அறியவில்லையா? அவனது தூதர் பேன்களின் தொல்லையைப் பற்றி தகவல் கூறியவுடன் முடியை மழித்துக் கொள்ள அனுமதி. என்னுடைய கேள்வி என்னவென்றால் அல்லாஹ்விற்கு எதுவும் தெரியாதா?மிகச் சாதாரணமான இந்த மனிதர்கள் சொல்வதை மறுஒலிபரப்பு செய்ய அல்லாஹ் எதற்கு? அற்ப நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வேதவாக்குகள் வெளிப்படுகிறேதே என்று நினைக்க வேண்டாம் அருவருப்பான அனுமதிகளும் வேதவாக்குகளான அற்புதங்களும் உண்டு

source:http://www.iraiyillaislam.blogspot.in/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?- 4

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?- 4

குர்ஆன் மற்றும் ஹதீஸ் இஸ்லாமின் அடித்தளம் என்ற போதிலும் குர்ஆன் மட்டுமே வேதம். எனவே அல்லாஹ்வின் உறுதிமொழி குர்ஆனுக்கு மட்டுமே பொருந்தும். இஸ்லாமின் ஒரு பிரிவு, போற்றிப் புகழும் புகாரி, முஸ்லீம் போன்ற ஹதீஸ் தொகுப்புகளை, மற்றொரு பிரிவு ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஹதீஸ்களின் உதவியில்லாமல் ஐவேளைத் தொழுகை என்ற கருத்தை அறியவே முடியாது.

தொழுகைகளின் எண்ணிக்கைபற்றி அல்லாஹ், நேரடியாகவே வழங்கிய கட்டளை குர்ஆனில் இடம் பெறவில்லை என்பது வேடிக்கையானது. எந்தக் காலத்திலும் குர்ஆன் பாதுகாப்பாக இருந்ததில்லை என்பதற்கு இது எளிய உதாரணம். ரமளான் நோன்பையும் அதன் சடங்கு முறைகளைப்பற்றியும் குறித்துவைத்தவர்கள் நோன்பைவிட முதன்மையான தொழுகையை எப்படி விட்டார்கள்?

அல்லாஹ் தனது வஹீயை மனிதக்கரங்களிலிருந்து பாதுக்காப்பதாக கூறிக் கொண்டாலும், அவைகளை மறைந்து போவதற்கான வழிமுறைகளை செயல்படுத்தியதாகத்தான் தோன்றுகிறது.

குர்ஆனின் முழு அத்தியாயங்களையும் மறந்துவிட்டதைப் பற்றி,

அபூமூசா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
பஸ்ராவாசிகளிலேயே நீங்கள்தாம் சிறந்தவர்கள் ஆவீர்கள் அவர்களிலேயே குர்ஆனை நன்கறிந்தவர்களும் ஆவீர்கள். எனவே (தொடர்ந்து) குர்ஆனை ஓதிவாருங்கள். காலம் நீண்டுவிட்டபோது உங்களுக்கு முன்வாழ்ந்த (வேதம் அருளப் பெற்ற சமுதாயத்த) வர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டதைப் போன்று உங்களுடைய உள்ளங்களும் இறுகிவிட வேண்டாம். நாங்கள் (நபி (ஸல்) அவர்களதுகாலத்தில்) ஓர் அத்தியாயத்தை ஓதி வந்தோம் கடுமை(யான எச்சரிக்கை விடுக்கும் தோரணை)யிலும் ‘பராஅத்" எனப்படும் (9ஆவது) அத்தியாயத்திற்கு நிகராக அதைநாங்கள் கருதினோம். ஆனால், அந்த அத்தியாத்தை நான் மறக்கச்செய்யப்பட்டு விட்டேன். ஆயினம், அதில் ‘ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை (சவக்குழியின் மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். மேலும், மற்றோர் அத்தியாயத்தயும் நாங்கள் ஓதிவந்தோம். அதை (சப்பஹ, யுசப்பிஹ, சப்பிஹ் என) இறைத்துதியில் தொடஙகும் அத்தியாயங்களில் ஒன்றுக்கநிகராகவே நாங்கள் கருதினோம். அந்த அத்தியாயத்தையும் நான் மறக்கச் செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும், அதில் ‘நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அவ்வாறுநீங்கள் செய்யாததைப் பிறருக்குச் சொல்வீர்களாயின்) அது உங்களுக்கு எதிரான சாட்சியாக உங்களுடைய கழுத்துகளின் மீது எழுதப்படும். பின்னர் மறுமைநாளில் அது குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன்.

முஸ்லீம்1897

வசனங்களை தவறவிடப்பட்டது பற்றி…

…He also said: Ibn Abu Maryam reported to us from Ibn Lahi`a, from Abu l-Aswad, from `Urwa b.l-Zubair, that A’sha said: ”During the time of the Prophet (s) two hundred verses of the chapter l-A¡zab were recited but when compiling the Quran Uthman was only able to collect what now exists”. ..

(உர்வா பின் ஜுபைர் அறிவிக்கிறார்
ஆயிஷா கூறினார்: தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் அஹ்ஜாப் அத்தியாயத்தில் 200 வசனங்கள் ஒதப்பட்டு வந்தது. குர்ஆனைத் தொகுத்த பொழுது, இப்பொழுது எவ்வளவு இருக்கிறதோ அதைமட்டுமே உத்மானால் திரட்ட முடிந்தது)

He also said: Ismail b. Ja`far reported to us from ‘l-Mubarak b. Fudala, from `Asim b. Abu l-Nujud, from Zirr b. Hubaish who said: Ubayy b. Ka`b told me:”How many verses do you count in the chapter ‘l-A¡zab? I said: ‘72 or 73 verses. ’He said: ‘At one time it had as many verses as ‘l-Baqara, including the verse on stoning which we used to recite.’ I said: What is the verse of stoning? ‘He said: ‘If a married man or woman fornicates, stone them without hesitation; a fitting punishment from God. God is Mighty, and all Wise’ a fitting punishment from God. God is Mighty, and all Wise.’

Al-Itqan fi Ulum al-Qur’an by Jalaluddin Suyuti

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன் என்று ஒருவர் கூறுவதே அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். உண்மையில், அவர் மறக்கவைக்கப்பட்டுவிட்டார்.

புகாரி 5039

குர்ஆன் வசனங்களில் மறதி முஹம்மதின் தோழர்களுக்கு மட்டுமல்ல,

ஆயிஷா(ரலி) கூறினார்
இரவு நேரம் பள்ளிவாசலில் ஒருவர் குர்ஆன் ஓதிக்கொண்டிருப்பதை நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபியவர்கள், ‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்! இன்ன அத்தியாயங்களிலிருந்து நான் மறந்துவிட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவூட்டிவிட்டார்’ என்று கூறினார்கள்.
புகாரி 5042

இதைப் போன்ற முரண்பாடுகளுக்கு, குறிப்பிட்ட அந்த ஹதீஸ்கள் பலவீனமானவைகளென்றுப் புறக்கணித்துக் கொண்டிருப்பதைத் தவிர இஸ்லாமியர்களிடம் வேறு எவ்விதமான பதிலும் இல்லை. இதற்கு அல்லாஹ் என்ன பதில் சொல்கிறான்?

இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும்.
குர்ஆன் 56:77, 78

அல்லாஹ் குர்ஆனை ஒரு பாதுகாப்பான ஏட்டில் வைத்திருப்பதாக கூறுகிறான். இஸ்லாமிய நம்பிக்கைகளின் படி, அது எங்கோ ஏழாம் வானத்தில் இருக்குமென்று நினைக்கிறேன். அது அவர்களுக்கு மட்டுமல்ல எவருக்குமே உதவப் போவதில்லை. நாம் இன்றிருக்கும் குர்ஆனின் கதையைப்பார்போம்.

ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்கள் கூறினார்.
யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்துவரக் கூறினார்கள். (நான் சென்றேன். அங்கே) அவர்களுக்கு அருகில் உமர் இப்னு கத்தாப்(ரலி) இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) கூறினார்கள்:

உமர் அவர்கள் என்னிடம் வந்து, ‘இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென கருதுகிறேன்’ என்று கூறினார்கள். நான் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?’ என்று உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்’ என்று கூறினார்கள்…
புகாரி 4679

குர்ஆனைத் தொகுக்கும்பணியை ஸைத் இப்னு ஸாபித் என்ற (22-23 வயது) இளைஞரை அழைத்து ஒப்படைக்கிறார்கள். அதற்கு அவர்,

…’அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது; குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், நபி(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப்போகிறீர்கள்?’…
புகாரி 4679

என்று மறுத்துவிடுகிறார். அபூபக்ர் மற்றும் உமரின் வற்புறுதல்களுக்குப் பிறகு ஒப்புக்கொள்கிறார். முஹம்மதின் காலத்தில் குர்ஆன் முழுத் தொகுப்பாக இருக்கவில்லையென்ற முடிவிற்கே நாம் வர வேண்டியுள்ளது(!).

அனஸ்(ரலி) அறிவித்தார்
இந்த நால்வரைத் தவிர வேறு எவரும் (குர்ஆனைக் கேட்டுத்) திரட்டியிராத நிலையில் நபி(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
1. அபுத்தர்தா
2. முஆத் இப்னு ஜபல்
3. ஸைத் இப்னு ஸாபித்
4.அபூ ஸைத்,
5. உபை இப்னு கஅப் (புகாரி 5004)
நாங்களே (என் தந்தையின் சகோதரர்களில் ஒருவரான) அபூ ஜைத்(ரலி) அவர்களுக்கு வாரிசானோம். (அன்னாருக்கு வேறு வாரிசுகள் இல்லை.)
புகாரி 5004
அதாவது குர்ஆன் தொகுக்கப்பட்ட காலத்தில் இந்த நபர்களைத் தவிர வேறு எவருக்கும் குர்ஆன் முழுமையாகத் தெரியாது. முஹம்மதை நிழல்போல பின்தொடர்ந்து கொண்டிருந்த அபூபக்கர், உமர், உஸ்மான் இன்னும் அவரது தோழர்கள் பலருக்கும் குர்ஆன் முழுமையாகத் தெரியவில்லை. யமாமா போரில் கொல்லப்பட்டவர்களுக்கும் குர்ஆன் முழுமையாகத் தெரியாது.

உண்மையிலேயே இவர்களைத் தவிர வேறு எவருக்கும் குர்ஆன் முழுமையாகத் தெரியாதா? அதை பிறகு கவனிப்போம். ஸைத் இப்னு ஸாபித் தலைமையிலான குழு தொகுத்த குர்ஆன், அபூபக்ர், உமர் ஆகியவர்களைக் கடந்து ஹப்ஸாவை அடைகிறது. அதன்பிறகு சுமார் 19 ஆண்டுகளுக்கு குர்ஆன் தொகுக்கப்பட்டதை அடியோடு மறந்துவிடுகின்றனர்.

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்
ஹுதைஃபாயமான் (ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின் போதும தீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர்பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றி கொள்வதற்கான போரில் கலந்து கொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம்நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்து வேறுபாடு கொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, ஹுதைஃபா (ரலி) உஸ்மான் (ரலி) அவர்களிடம், ‘யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடு கொண்டதுபால் இந்தச் சமுதாயமும் இந்த(த்திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்துவேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!’ என்றுகூறினார்கள்…

புகாரி 4987
அனஸ்(ரலி) அறிவித்தார்
உஸ்மான்(ரலி) (அன்னை ஹஃப்ஸாவிடமிருந்து குர்ஆன்பதிவுகளை வாங்கி வரச்செய்து) ஸைத் இப்னு ஸாபித், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர், ஸயீத் இப்னு ஆஸ், அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம் (ரலி) ஆகியோரை அழைத்து, (அவற்றைப் பிரதியெடுக்கப் பணித்தார்கள்) அவர்கள் ஏடுகளில் அவற்றைப் பிரதியெடுத்தார்கள். உஸ்மான்(ரலி) (அன்சாரியான ஸைத் இப்னு ஸாபித் தவிர உள்ள) குறைஷிகளின் மூன்றுபேர் கொண்ட அந்தக் குழுவிடம், ‘நீங்கள் மூவரும் ஸைத் இப்னு ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஒரு (எழுத்து இலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறைஷிகளின் மொழி வழக்கிலேயே அதை எழுதுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷிகளின் மொழி வழக்கில்தான் இறங்கியது" என்று கூறினார்கள். அக்குழுவினரும் அவ்வாறே செய்தார்கள்.
புகாரி 3506

ஹப்ஸாவிடமிருந்த குர்ஆன் தொகுப்பைப் பிரதியெடுப்பதோடு நின்றுவிடாமல் திருத்தங்களையும் மேற்கொள்கிறார். குர்ஆன் குறைஷிகளின் மொழிவழக்கில் மட்டுமே இறங்கியதென்பதை ஹதீஸ்கள் ஒப்புக்கொள்ளவேண்டுமே?

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரேயொரு (வட்டார) மொழி வழக்குப்படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழி வழக்குகளின்படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது.
புகாரி 3219

மேடை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பலகுரலில் பேசுபவர்கள், ஒரே வசனத்தை வெவ்வேறு நபர்கள், வேவ்வேறுவிதமான மொழிவழக்கில் பேசுவதைப் போன்று பேசி நம்மை வியக்க வைப்பதை பார்த்திருப்பீர்கள். ஜிப்ரீலிடம், முஹம்மதுவும் அத்தகைய ’மிமிக்ரி’ பயிற்சியை எடுத்திருக்கிறார்.

பலகுரல் வித்தையில் பயிற்சி பெறுவதைவிட அல்லாஹ்வின் வஹீயை குறைந்தபட்சமாக இன்னொரு மொழியிலும் வெளியிட முயன்றிருக்கலாம். இதை எதற்காகக் கூறுகிறேன் என்றால், அரபியில் உள்ளது மட்டுமே குர்ஆன் எனவும் மொழிபெயர்ப்பிலுள்ளவைகள் குர்ஆன் இல்லை எனவே தர்ஜமாவிலிருப்பவைகள் தவறான பொருளைக் கொடுத்தால் அதற்கு அல்லாஹ்வைக் குறைகாணக் கூடாது என்கிறனர்.

தமிழில் உள்ளது குர்ஆன் அல்ல..!

(முஹம்மதே!) அவர்கள் படிப்பினை பெறவே இதை உமது மொழியில் எளிதாக்கியுள்ளோம்.
குர்ஆன் 44:48

அவர்கள் படிப்பினை பெற்றார்களா? இல்லையா? என்பது நமக்குத் தேவையில்லை. அரபு அல்லாத மொழியைத் தாய்மொழியாக கொண்டவர்களுக்கு என்ன பதில்? என்பதையே நாம் கவனிக்கவேண்டும்! குர்ஆனை மற்ற பிறமொழிகளால் ஒருகாலும் புரிந்து கொள்ளவே முடியாது. உதாரணத்திற்கு, தமிழர் ஒருவர் சர்வ்வல்லமையுடைய அல்லாஹ்வின் கட்டளைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அரபியைப்பயின்று மொழியிலக்கணத்தில் கற்றுத்தேர்ந்து முனைவர் பட்டம் வாங்கினாலும் குர்ஆனை புரிந்து கொள்ள முடியாது!
ஏனெனில்,

அப்துல் வஹ்ஹாப், நிஜாம்தீன் மன்பயீ, அப்துல் காதிர், அஷஹைக் நாகூர் பிச்சை, முஹம்மது அபூபக்ரு அஸ்ஸித்தீக்,இக்பால் மதனி, அஷ்ஷைக் முஸ்தஃபா, அஷ்ஷைக் முஹம்மது, மக்தூம் அஹ்மது ஃபாரூக், அஷ்ஷைக் முத்து வாப்பா அப்துஸ் ஸமது… (இன்னும் உங்களுக்குத் தெரிந்த தமிழ்-அரபிமொழி வல்லுனர்களைச் சேர்த்துக் கொள்ளவும்) போன்ற அரைகுறை(?!) மொழிவல்லுனர்களும் மொழிபெயர்த்த குர்ஆனில் குறைவு ஏற்பட்டுவிட்டது.

இக்குறையை சரிசெய்ய அரபிகளுக்கே அரபி சொல்லிக் கொடுக்கும் அறிஞர் பீஜே மற்றும் அவரது உதவியாளர்கள் களத்திற்கு வந்தனர். அவர்கள் மொழிபெயர்த்தும் விதவிதமாக விளக்கமளித்தும் திருத்தங்கள் செய்த பிறகும் தமிழில் உள்ளதை அவர்களே குர்ஆனாக ஏற்கமறுக்கின்றனர், மட்டுமல்லாமல் குறைகள் இருக்குமென்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவும் செய்கின்றனர். அரபிமொழியைக் கற்பதால் அல்லாஹ்வின் வஹீயை நாம் புரிந்துகொள்ளலாம் என்ற கற்பனை அர்த்தமற்றது என்பதையே மொழிபெயர்ப்பாளர்களின் அனுபவங்கள் நமக்கு கற்றுத்தருகின்றன. மேலே குறிப்பிடப்பட்டவர்களும், இன்னும் அன்றாடம் பள்ளிவாசல்களிலும், மதரஸாக்களிலும் நாம் காணும் பல்வேறு அறிஞர்கள் அனைவருமே தங்களது வாழ்வின் பெரும்பகுதியை குர்ஆனைக் கற்றுத் தேர்வதற்காக அரபிமொழியை பயில்வதிலேயே செலவிட்டவர்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

குர்ஆனின் இந்நிலை ஏனெனில்,

இது, தாய் கிராமத்தை(மக்காவை)யும், அதைச் சுற்றியுள்ளவர்களையும் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காக நாம் அருளிய வேதம்.
குர்ஆன் 6:92

(மக்கா எனும்) நகரங்களின் தாயையும் அதைச் சுற்றியுள்ளவர்களையும் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காகவும், சந்தேகமே இல்லாத ஒன்று திரட்டப்படும் நாளைப் பற்றி எச்சரிப்பதற்காகவும் உமக்கு (தெரிந்த) அரபு மொழியில் குர்ஆனை அறிவித்தோம்.
குர்ஆன் 42:07

நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு மொழியில் இக்குர்ஆனை நாம் அருளினோம்.
குர்ஆன் 12:02

முஹம்மதையும் அவர் வாழ்ந்த பகுதியைச் சுற்றியிருந்தவர்களையும் மட்டும் திருத்தவேண்டுமென்பதே அல்லாஹ்வின் நோக்கம். அதனால்தான் மொழிபெயர்ப்புகள் பயனளிக்க மறுக்கின்றன(!?). உங்களுக்கு விளங்கும் வகையில் வேதம் வழங்கவேண்டுமென அல்லாஹ் விரும்பியிருந்தால்,

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்…
குர்ஆன் 14:04

உங்களது சமுதாயத்தின் மொழியிலேயே தூதர்களை அனுப்பியிருப்பான். மொழிபெயர்ப்புகளை அல்லாஹ்வும் விரும்புவதில்லை. காரணம்,

"ஒரு மனிதர் தான் இவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்” என்று அவர்கள் கூறுவதை அறிவோம். யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று மொழியாகும். இதுவோ தெளிவான அரபு மொழி.
குர்ஆன் 16:103

நமது எதிரணியினர், குர்ஆன், ஹதீஸ்களை நாம், நமது விருப்பங்களுக்கு ஏற்ப வளைத்து விளக்கமளிப்பதாக குறைபட்டுக் கொள்கின்றனர். எனவே அறிஞர் பீஜே அளித்த விளக்கங்களையும் இங்கு தருகிறேன்.

…எந்த மனிதர் நபிகள் நாயகத்துக்கு இரகசியமாகக் குர்ஆனைக் கற்றுக் கொடுக்கிறார் என்று கூறினார்களோ அந்த மனிதரின் தாய்மொழி அரபியல்ல. அவர் வேற்றுமொழியைச் சேர்ந்தவராவார். வேற்று மொழியைச் சேர்ந்த ஒருவர் அரபுமொழியில் மிக உயர்ந்த தரத்தில் எவ்வாறு இதைத் தயாரித்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி அவர்களின் அறியாமையைத் திருக்குர்ஆன் அம்பலப்படுத்தியது…
142. பிரமிக்கவைத்ததிருக்குர்ஆன்

…இதை நபிகள் நாயகம் (ஸல்) சுயமாகக் கற்பனை செய்து கூறுகிறார் என்று அம்மக்களால் நினைக்க இயலவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அடிக்கடி சந்திக்கும் ஒருவர்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இதைக்கற்றுக் கொடுப்பதாகக் கூறினார்கள். ஆனால் யார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதாகக் கூறினார்களோ அவரது தாய்மொழி அரபியல்ல. குர்ஆனோ தெளிவான அரபுமொழியில் அமைந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக அரபுமொழியில் அருளப்பட்டதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 16:103)..
227. அரபுமொழியில் வேதம்

அரபு அல்லாத மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களால் குர்ஆனைக் கற்றுக் கொடுக்க முடியாது. ஏனெனில் அதன் நுட்பம் அத்தகையது என்பதே அறிஞர் பீஜேவின் விளக்கம். எனவே பிறமொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களால், நமது அறிஞர் பீஜே உட்பட குர்ஆனை ஒரு பொழுதும் விளங்கிக் கொள்ள முடியாது என்ற முடிவிற்கே வரவேண்டியுள்ளது!

இதை அரபு மொழியில் அல்லாத குர்ஆனாக நாம் ஆக்கியிருந்தால் இதன் வசனங்கள் தெளிவுபடுத்தப்படக் கூடாதா? (இது) அரபியல்லாததாகவும், (இவர்) அரபியராகவும் இருக்கிறாரே?”…
குர்ஆன் 41:44

அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்”புவற்கு காரணம் இதே வசனத்தை மற்ற சமுதாயங்களும் ‘உல்டா’வாக தங்களுக்குத் தகுந்தவாறு கூறமுடியும் என்பதைக்கூட அல்லாஹ் அறியமாட்டானா?

அல்லாஹ்வின் வஹீயான குர்ஆனை புரிந்துகொள்ள அரபியைத் தாய்மொழியாகக் கொள்வதினாலும் பயனில்லை. ஏனெனில் குர்ஆனில் கையாளப்பட்டுள்ள அரபு மொழிக்கும் நடைமுறையில் இருப்பதற்குமுள்ள வேறுபாட்டை நீங்களே அறிவீர்கள். மந்தையில் ஆடு என்ற உன்னதமான மெய்யுணர்வு(!?) நிலையை அடைவதுதான் தலைசிறந்த வழிமுறையாகும். (எந்த மந்தை?)

குர்ஆன் தொகுக்கப்பட்டதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம் கவனம் வேறுதிசையில் சென்றுவிட்டது. குர்ஆன், குறைஷிகளின் மொழிவழக்கில் மட்டுமே இறங்கியது என்ற கலீபா உஸ்மானின் கருத்து தவறானது ஹதீஸ்களுக்கு எதிரானது. இது குர் ஆன் திருத்தப்பட்டது என்பதையே வலியுறுத்துகிறது.

உத்மான் தனது தொகுப்பிற்கு முரண்படும் இதர பிரதிகளை எரித்துவிடுகிறார். ஏனென்றால்,

…ஒருவர் தனக்கு கிடைத்த பத்து அத்தியாயங்களை குர்ஆன் என்று கூறுவார் இன்னொருவர் வேறு சில அத்தியாயங்களம் மட்டும் குர்ஆன் எனக் கூறுவார். இது போன்ற நிலை வரக்கூடாது என்றால் கஷ்டப்பட்டு அனைத்து அத்தியாயங்களையும் நபிகள் நாயகம் காலத்தில் இருந்தது போல் திரட்டிய பின் அறைகுறையாக எழுதி வைத்திருப்பதை அழிப்பது அவசியமானதே. அழிக்கப்பட்டதில் என்ன இருந்ததோ அவை அனைத்தும் உஸ்மான் பிரதியிலும் இருந்தன, அவர்கள் எழுதாமல் விட்ட விஷயங்களும் மேலதிகமாக இருந்தன. எரித்ததனால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டதே தவிர பங்கம் ஏற்படவில்லை…
இஹ்சாஸ் ஒன்லைன் என்ற இணைதளத்தின் கட்டுரையிலிருந்து…

உஸ்மான் தொகுப்பில் தவறவிடப்பட்டவைகளைப்பற்றி ஹதீஸ்கள் விளக்குவதை முன்பே கவனித்துவிட்டோம். குர்ஆனை பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, உஸ்மான் ஹப்ஸாவிடம் திருப்பி ஒப்படைத்துவிட்ட குர்ஆன் தொகுப்பை மர்வான் பின் ஹகாம் எரித்து விடுகிறார். தங்களது பார்வையில் முரண்படுபவைகள் எதுவானலும் அழித்துவிடுவதுதான் இஸ்லாமிய மரபு போலும்.

குர்ஆனைக் குழப்பமில்லாமல்(?) பாதுகாக்க தங்களுக்கு முரண்படுவதாகத் தோன்றும் பிரதிகளை அழித்தொழிக்க வேண்டுமென்ற அறிவு, முஹம்மதின் மிக நெருங்கிய நண்பரான அபூபக்கருக்கும், அடுத்த நபியாக அறிவிக்கப்படும் அளவிற்குத் தகுதியை பெற்றவர் என்று முஹம்மதால் புகழப்பட்ட உமருக்கும் கூட இல்லாமல் போய்விட்டது.
ஜைத் இப்ன் ஸாபித் தொகுத்த குர்ஆன் மட்டுமே சரியானது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?

எனவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள், போரிச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டிபோது) ‘அத்தவ்பா’ எனும் (9 வது) அத்தியாயத்தின் (கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை.
புகாரி 4679

வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி என்பவரிடம் இருந்து பெறப்பட்ட 9-ஆம் அத்தியாயத்தின் கடைசி இரண்டு வசனங்கள் குர்ஆனின் பகுதிகளே என்பதை எவ்வாறு உறுதிசெய்கிறார்கள்?

1. அபுத்தர்தா, 2. முஆத் இப்னு ஜபல், 3. ஸைத் இப்னு ஸாபித்,
4. அபூ ஸைத்(ரலி), 5. உபை இப்னு கஅப்

இந்த நபர்களைத் தவிர வேறு எவருமே குர்ஆனை முழுமையாக அறிந்திருக்கவில்லை என்பது எந்த அளவிற்கு உண்மை?

தொடரும்…

source:http://www.iraiyillaislam.blogspot.in/

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -3

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -3

குர்ஆனில் இல்லாத ‘வஹீ’க்களின் பரிதாப நிலையைபற்றி அறிஞர் பீஜே கூறுவதை கடந்த பதிவில் பார்த்துக் கொண்டிருந்தோம். ஹதீஸ்களின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நம்பிக்கை என்பதைத்தவிர இவர்களால் வேறெந்த பதிலையும் கூறமுடியாது; அதற்கு விடை தெரிந்திருந்தால், குர்ஆனியவாதிகளும், ரஷாது கலீபாவின் “Submitters” உருவாக வேண்டிய அவசியமில்லை.

குர்ஆனில் இல்லாத வஹீக்(ஹதீஸ்)களைப் பற்றிய அறிஞர் பீஜே வின் மாறுபட்ட நிலைகள்.

ஹதீஸ்களை ஏற்பதிலும் நிராகரிப்பதிலும் தங்களுக்கு எவ்விதமான பங்குமில்லை, அது ஹதீஸ் கலை ஆய்வாளர்களின் முடிவுதான் என்றவர், இன்று தனது மனம் போன போக்கிற்கு ஹதீஸ்களை நிராகரிப்பதப் பார்த்தோம். ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டவைகளல்ல என்பதுதான் அறிஞர் பீஜேவின் இந்த குழப்பங்களுக்குக் காரணம். அவர் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார். ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை எனும் பொழுது, குர்ஆனில் இல்லாத வஹீ என்ற கருத்து அர்த்தமற்றது.

நாம் முஹம்மதின் நிலையையும் சற்று கவனிக்கலாம்…

தனக்கு அறிவிக்கப்படும் செய்திகளை அதாவது ’வஹீ’க்களை, முஹம்மது எவ்வாறு பாதுகாத்தார்?

தனது தோழர்களின் உதவியால் எழுதி பாதுகாக்க முயன்றதாக ஹதீஸ்கள் கூறுகின்றன.
அல்பராஉ பின் ஆஸிஃப் (ரலி ) கூறியதாவது.

”இறை நம்பிக்கை கொண்டோரில் (அறப் போரில் கலந்து கொள்ளாமல்) தங்கி விடுவோரும், இறைவழியில் தம் உடைமைகளாலும் உயிர்களாலும் அறப்போர் புரிபவர்களும் சம அந்தஸ்து கொண்டவர்களாக முடியாது…” என்னும் வசனம் அருளப்பட்ட போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் இப்னுஸாபித் (ரலி) அவர்களை அழைத்தார்கள். அவர் அகலமான எலும்பு ஒன்றைக் கொண்டு வந்து, அந்த வசனத்தை எழுதினார்….
புஹாரி 2831

இவ்வாறு தனக்கு அறிவிக்கப்படும் செய்திகளை எழுதச் செய்துவந்தார் (இது மதீனாவில் நிகழ்ந்தது புரிதலுக்காக இங்கு குறிப்பிடுகிறேன்.) அவைகள் தவறுதலாக வேறு செய்திகள் எழுதப்பட்டுவிடக் கூடாதென்பதிலும் முஹம்மது கவனமாக இருந்ததாகவும் ஹதீஸ்கள் கூறுகின்றன.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் கூறுவதை எழுதி வைக்காதீர்கள். குர்ஆன் தவிர மற்றதை என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும்…
முஸ்லீம் 5734

பீஜே குர்ஆனில் கூறப்படாத வஹீ உள்ளதென்கிறார். ஆனால் முஹம்மதுவோ குர்ஆனைத் தவிர வேறெதையும் எழுத வேண்டாமென்கிறார். அதாவது தான் கூறுபவைகள் அனைத்துமே குர்ஆன் அல்ல, என்பதுதான் முஹம்மதின் பதில். அவர் குர்ஆன் என்ற ஏதோஒன்றை பிரித்து காண்பித்திருக்கிறார்; அதை தனக்குத் தெரிந்தமுறையில் பாதுகாகவும் முயற்சித்திருக்கிறார் என்பதுதான் இதன் பொருள்.

முஹம்மது சொல்-செயல் அனைத்துமே அல்லாஹ்வின் கட்டளைப்படியே இருந்ததென்ற இஸ்லாமிய நம்பிக்கையைக் கருத்தில் கொண்டால், அவர் இவ்வாறு எழுதச் செய்ததும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே இருந்திருக்கவேண்டும் மாறாக அவரது சொந்தவிருப்பமில்லை என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

…மனிதர்களிடம் குர்-ஆனை பாதுக்காக்கும் பொறுப்பை சாட்டாமல் அதனை தன்னளவில் வைத்துக்கொண்டான்.இதன் மூலம் உலகமுடிவு நாள் வரையிலும் குர்-ஆன் பாதுக்காப்பிற்கு எந்த ஒரு மனிதனும் தனிப்பட்ட முறையில் சிரத்தை மேற்கொள்ள தேவையில்லை என்பதை தெளிவாக இவ்வசனத்தில் விளங்கலாம்…
நான் முஸ்லீம் தளத்திலிருந்து…

முஹம்மதை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. நான் முஸ்லீம் தளத்திற்கு இருக்கும் அறிவுகூட இல்லாமல், மனனம் செய்து, கல், கட்டை, விட்டை, மரப்பட்டை, தோல், எலும்பு என்று கையில் கிடைத்தவற்றிலெல்லாம் எழுதிப் பாதுகாக்க முயன்றிருக்கிறார் என்பதை நினைத்தால் பரிதாபப்படாமல் வேறென்ன செய்யமுடியும்?

குர்ஆனை எழுத்தில் பாதுகாக்கும் முஹம்மதின் பணி எப்பொழுதிலிருந்து துவங்கியது?

மதீனாவில் முஹம்மது, தனக்குத் தானே அரசராக முடிசூட்டிக் கொண்டதும், அவருக்கு பணியாளர்கள் உதவியாளர்கள் அடிமைகள் என்று ஆட்களின் உதவி இருந்தது; தனக்கு வரும் வஹீயை எழுதச் செய்து கொண்டார்.

ஆனால் மக்காவில்?

அன்றைய அரேபியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் சிலர் இருந்துள்ளனர். ஏனோ அல்லாஹ்விற்கு எழுத்தறிவற்ற முஹம்மதைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் மிகுந்திருந்தது. இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, தனது தூதராக யாரைத் தேர்தெடுப்பது என்பது அல்லாஹ்வின் உரிமை அதில் நாம் தலையிடமுடியாது.

ஒரு பிரசங்கியாக முஹம்மதின் மக்கா வாழ்கையையை இரண்டாகப் பிரிக்கலாம். அதாவது முதல் மூன்றாண்டுகள் மறைமுக அழைப்புப் பணி, அதன் பிறகு பகிரங்க அழைப்புப்பணி என்று ஹிஜ்ரத் வரை, 13 ஆண்டுகள் மக்காவில் இருந்திருக்கிறார். அதன் பிறகு மதீனா வாழ்க்கை. முதலில் நாம் கவனிக்க வேண்டியது முஹம்மதின் மக்கா வாழ்க்கையைப் பற்றிதான். 13 ஆண்டுகளில் அவர் மிக சொற்பமான எண்ணிக்கையில்தான் (70-80) அடியாட்களைத் திரட்டியிருந்தார். அவர்களில் பெரும்பாலனவர்கள் அடிமைகளும், குடும்பத்திற்கு கட்டுப்படாமல் வெட்டித்தனமாக திரிந்து ஊரைச்சுற்றிக் கொண்டிருந்தவர்களும்தான். இந்த காலகட்டத்தில் முஹம்மதிற்கு எழுத்தர்கள் என்று எவரும் இருந்தாக ஹதீஸ்களில் தகவல் இல்லை.

முதலில் மறைமுக அழைப்பு என்ற காலகட்டத்தைக் கவனத்தில் கொண்டால், அவர் தனது உறவினர் மற்றும் நண்பர்கள் என்ற தனிநபர்களிடம் மட்டுமே தனது பணியை செய்திருக்கிறார். அப்பொழுது வெளியான ’வஹீ’க்கள் எவ்வாறு, யாரால் பாதுகாக்கப்பட்டது?

முஹம்மது மக்கவில் பகிரங்க அழைப்புப்பணி செய்த பொழுது எழுத்துவடிவிலான குர்ஆனின் பகுதிகள் இருந்துள்ளதாக இப்ன் இஸ்ஹாக் கூறுகிறது.

..Thereupon ‘Umar returned to his sister and brother-in-law at the time when khabbab was with them the manuscript of Ta Ha, which he was reading to them. When they heard ‘Umar’s voice Khabbab hid in a small room, or in a part of the house, and Fatima took the page and put under her thigh…

(Page 156, Life of Muhammad a Translation of Ibn Ishaq’s Sirat Rasul Allah By A.Guillaume)
உமரின் சகோதரி ஃபாத்திமாவிடம் இருந்த குர்ஆனின் பிரதி யாரால் எழுதப்பட்டது?

முஹம்மது எழுதவோ, படிக்கவோ தெரியாதவர் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. மிக சொற்பமான ஆட்களுடன் வலம் வந்து கொண்டிருந்த மக்கா கலகட்டத்தில், முஹம்மதின் எழுத்தர்கள், தெரிந்தோ தெரியாமலோ தவறாக எழுதியிருந்தாலும் எழுத்தறிவற்ற முஹம்மதால் எழுதப்பட்டவைகளை சரிபார்க்கவும் இயலாது. எழுத்தர்களின் பணியை சரிபார்த்தவர்கள் யார்?

இந்தக் கேள்வி, முஹம்மது மதீனாவிலிருந்த காலகட்டத்திற்கும் பொருந்தும். அவரது தோழர்கள் பலரும் அவரது வஹீயை எழுத்துவடிவில் தொகுத்துக் கொண்டிருந்தனர்.

…ஆனால் இவ்வேதம் அருளப்பட்டகாலத்தில் வாழ்ந்த மக்களால் இந்தக் குர்ஆனைப் பாதுகாக்க முடியும் என்று கருத முடியாது. மிகவும் பலவீனமான நிலையிலும், எதிரிகளால் பலவகையான இன்னல்களுக்கு இலக்காக்கப்பட்ட நிலையிலும், படிப்பறிவற்ற நிலையிலும் உள்ள சமுதாயம் தமக்கு வழங்கப்படும் போதனையை முழுமையாகப் பாதுகாக்கும் என்று யாராலும் எண்ணிப்பார்க்க முடியாது…
143. பாதுகாக்கப்படும் திருக்குர்ஆன் onlinepj.com

மனிதர்களுக்காக ஒரு புத்தகத்தை வழங்குவதுதான் அல்லாஹ்வின் மிகமிக நீண்டகாலத் திட்டம். அதை ஏழாம் நூற்றாண்டில் ஏறத்தாழ கல்வியறிவற்ற ஒரு சமுதாயத்தில், அவர்களுக்கு அதற்குமுன் புத்தகமென்றால் என்ன, அதை எவ்வாறு கையாளுவது, எவ்வாறு பாதுகாப்பது என்றெல்லாம் அறிந்ததிராத சமூகத்தில் வழங்கினான். குர்ஆனை வெளியிட்டதாகக் கூறப்படும் அல்லாஹ்வோ அல்லது முஹம்மதுவோ அதைக் கற்பிக்கவில்லை என்பதையே பீஜேவின் விளக்கம் கூறுகிறது. இது அவர்கள் குர்ஆனில் அனைத்துவகை தவறுகளும் இடம்பிடிக்கச் செய்திருப்பார்கள் என்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

மட்டுமல்ல, அரபி எழுத்து முறை முழுமையாக வளர்ச்சியடையாத காலகட்டத்தில் குர்ஆன் வெளிப்பட்டுள்ளது. அரபியில் தோற்றத்தில் ஒரே மாதிரி உச்சரிப்பில் மாறுபடும் எழுத்துக்கள் உள்ளன. இது முஹம்மது மரணமடைந்து நீண்ட காலத்திற்கு பிறகே புள்ளிகளும், குறியீடுகளும் சேர்க்கப்பட்டு சரிசெய்யப்பட்டது. மேலும், கவிதையின் சில பகுதிகளை மட்டுமே கூறி எஞ்சியதை வாசிப்பவர்களின் முடிவிற்கு விடுவது என்ற வழக்கமும் இருந்துள்ளது. இன்றும் குர்ஆனில் இந்த நிலையைப் பார்க்கமுடியும். குர்ஆனின் இத்தகைய அமைப்பு பிற்காலத்தில், இஸ்லாமிய அறிஞர்களுக்கு அடைப்புக்குறிகளுக்குள் “கபடி” விளையாட ஏதுவாக அமைந்துவிட்டது.
முஹம்மதின் காலத்தில் குர்ஆன் எழுத்துவடிவத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார் பீஜே.

மக்காவில் முஹம்மதிற்கு எழுத்தர்கள் என்று எவரும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அறிஞர் பீஜே, குர்ஆன் பதிவு செய்யப்பட்டதை நேரில் கண்டதைப் போன்று அடித்து விளையாடுகிறார்.

முஹம்மது மக்காவிலிருந்து வெளியேறுவதற்குமுன் அல்லாஹ், முஹம்மதை அழைத்து ஒரு முக்கியமான பேரத்தை பேசியாதாகவும் இறுதியில் சில கட்டளைகளை நேரடியாக வழங்கியதாகவும் ஹதீஸ்கள் கூறுகின்றன.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது…
புகாரி 3207

“Open heart surgery”, ஈமானை நிரப்ப முடியுமா? அதென்ன அத்தகையதா? என்ற கேள்விகள் நியாயமானவைகளே! ஆனால் என்ன செய்வது இஸ்லாம் பகுத்தறிவை ஒப்புக்கொள்ள வேண்டுமே?

விண்வெளிப் பயணத்தின் துவக்க சடங்குகள், கனவு போன்ற காட்சியாம், புராக்கில் பறந்து சென்றது உண்மையான நிகழ்வாம். நடைமுறை வாழ்வுடன் முரண்படும் ஹதீஸ்களைப் புறக்கணிக்கவேண்டும் என்கிறார் அறிஞர் பீஜே. இப்படியொரு வாகனத்தை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

buraqflame.jpg

அறிஞர் பீஜே வேடிக்கையான மனிதர். ஹதீஸை அவரது விருப்பம் போல மறுத்துக் கொண்டிருக்கிறார். நாமும் அவரது விளக்கத்தின் வழியிலேயே சென்று, அல்லாஹ்வும் முஹம்மதுவும் நிகழ்த்திய நேரடி பேரத்தை கவனிக்கலாம்.

….நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘என்ன செய்தாய்?’ என்று கேட்க, ‘அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்" என்றேன். அதற்கு அவர்கள், ‘முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, ‘நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்" என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), ‘நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்" என்று அறிவிக்கப்பட்டது.
புகாரி 3207
இஸ்லாமின் அடிப்படை கடமைகளுள் ஒன்றான ஐங்காலத் தொழுகை என்பது குர்ஆனில் எங்குமே சொல்லப்படவில்லை. உருட்டி, மருட்டி, திரட்டி, திரித்து, திணித்தால் மட்டுமே ஐவேளைத் தொழுகை என்ற கருத்தைக் குர்ஆனிலிருந்து பெறமுடியும்.

முஹம்மதிடம் அல்லாஹ் கூறியவாறே சிறிய மாற்றம்கூட இல்லாமல் அல்லாஹ் நேரடியாக முஹம்மதிடம் வழங்கிய இந்தக் கட்டளைகளை அல்லாஹ் வழங்கியவாறே கூறமுடியுமா?

இங்கு அல்லாஹ் நேரடியாக ‘அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்" என்றேன்… நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்…" என்று வழங்கியதாகக் கூறப்படும் இந்தக்கட்டளை ஏன் குர்ஆனில் இடம் பெறவில்லை?

முஹம்மது குர்ஆன் என்ற ஒன்றைத் தணித்து பதிவு செய்ய முயன்றதை முஸ்லீம் ஹதீஸ் 5734-ல் கவனித்தோம். முஹம்மது கனவில் கண்டவைகளும், மனதில் உதித்தவைகளும் குர்ஆன் என்றும் அல்லாஹ்வின் கட்டளைகளென்றும் கூறி எழுதிவைத்துக் கொண்டவர்கள், அல்லாஹ், நேரடியாக வழங்கிய கட்டளைகளை காற்றில் பறக்க விட்டது ஏனோ?

குர்ஆன் பாதுகாப்பாக இருக்கிறதென்று ’பீலா’ விடுபவர்கள்,

பதில் சொல்லட்டும் திறமையிருந்தால்!
தொடரும்….
source:http://www.iraiyillaislam.blogspot.in

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -1

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.
குர்ஆன் 15:09

இஸ்லாமின் அடிப்படை, அல்லாஹ்வின் வார்த்தைகளாகக் கருதப்படும் குர்ஆன் மற்றும் அல்லாஹ்வின் வார்த்தைகளையும் முஹம்மதின் சொல்-செயல்களைக் கூறும் ஹதீஸ்களும்தான். இதில் முஹம்மது தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக வஹியை அதாவது வேதம் வெளிப்பட்ட முறையையே முன்வைத்தார். அல்லாஹ்வால் வழங்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டதென்று தனக்குத் தானே சாட்சி கூறிக்கொள்கிறது.

அண்மையில் ஒரு இஸ்லாமிய நண்பருடன் விவாதத்தில் இருந்தபொழுது பாதுகாக்கப்பட்ட குர்ஆன் என்பது ஒரு நம்பிக்கையே, நிரூபிக்கப்பட்ட உண்மையல்ல என்றேன்.

அதற்கு அவர், குர்ஆனின் ஒவ்வொரு எழுத்தும் அல்லாஹ் முஹம்மது நபிக்கு அருளியவாரே இன்றுவரை பாதுகாக்கப்பட்டுள்ளது; அதற்கு குர்ஆன் 15:09 ஆதாரம் என்றார். ஏனெனில் குர்ஆன் கடவுள் அல்லாஹ்வின் வார்த்தைகளாம். ’நான் முஸ்லீம்’ தளமும் அதே பதிலைத்தான் கூறுகிறது.

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (15:9)

இங்கு குர்-ஆனின் பாதுக்காப்புக்கு தானே பொறுப்பேற்பதாக இறைவன் கூறுகிறான்.ஆதாவது மனிதர்களிடம் குர்-ஆனை பாதுக்காக்கும் பொறுப்பை சாட்டாமல் அதனை தன்னளவில் வைத்துக்கொண்டான்.இதன் மூலம் உலகமுடிவு நாள் வரையிலும் குர்-ஆன் பாதுக்காப்பிற்கு எந்த ஒரு மனிதனும் தனிப்பட்ட முறையில் சிரத்தை மேற்கொள்ள தேவையில்லை என்பதை தெளிவாக இவ்வசனத்தில் விளங்கலாம்…

நான் முஸ்லீம்

நமது கேள்வியே குர்ஆனின் நம்பகத்தன்மையைக் குறித்துதான் அதற்கு பதிலைக் குர்ஆனிலிருந்தே கூறுவர். பொதுவாகவே முஸ்லீம்களின் வாதம் வளைவிற்குற்குள் சுற்றிக் கொண்டே இருக்கும். அந்த நண்பரிடம், குர்ஆன் தொகுக்கப்பட்ட கதையைக் கூறுங்கள் என்றதும், முடியாது என்று திடமாக மறுத்துவிட்டார். இதுதான் குர் ஆனின் யதார்த்த நிலை!

”நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்” என்ற இந்த இரண்டு வாக்குறுதிகளின் அவசியம் என்ன? அன்றைய மக்கத்துக் குறைஷிகள் இவர்கள் சொல்வதைப் போல முட்டாள்கள் அல்ல! அவர்கள் தெளிவாகவே, முஹம்மது கடவுளின் பெயரால் கதையளப்பதாகக் கூறினர். அதற்காகத்தான் ”நாமே இந்த அறிவுரையை அருளினோம்” என்ற மாபெரும் விளக்கம். இந்த பதிலைக் காணும் பொழுது, நாம் இன்று காணும் அரைவேக்காடு இஸ்லாமிய அறிஞர்களும், அப்பாவி முஸ்லீம்களும் எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது. அவர்கள், குர்ஆன் சர்வவல்லமையுடைய கடவுளின் வார்த்தைகளே என்பதை நிரூபிக்க, அவர்கள் மேற்கொள்ளும் சிரமங்களைப் பார்க்கையில் எனது கண்களில் நீர் தழும்பி நிற்கிறது.

சரி..! ”நாமே பாதுகாப்போம்” என்று எதற்காகக் கூறவேண்டும்? குர்ஆனை அழித்துவிட யாராவது முயன்றனரா? என்றால், முஹம்மது, குர்ஆனைக் கூறிக் கொண்டிருந்த காலத்தில் அப்படி எந்த ஒரு முயற்சியும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. பிறகு ஏதற்காக இப்படியொரு உறுதிமொழி?

அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.

குர்ஆன் 2:75

இவ்வாறு மற்ற வேதங்கள் மாற்றப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டை குர்ஆன் திரும்பத் திரும்பக் கூறுவதால், குர்ஆனின் தன்மை எத்தகையது என்ற கேள்வி எழுவதைத் தவிர்ப்பதற்காகக் கூறப்பட்டிருக்குமோ? அல்லது பிற்காலத்து இடைச்சொருகலா?

இஸ்லாமிய அறிஞர்கள் கூறும் விளக்கங்களைப் பார்ப்பதற்கு முன்பாக, நாம் அல்லாஹ்வின் இயல்பை சற்று கவனிக்கலாம். மூலப்பதிவேடு என்ற நூலில் துவங்கி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு புத்தகம் என்ற கணக்கில் எண்ணற்ற புத்தகங்களை, எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறான். முந்தைய வேதங்களாக அல்லாஹ் கூறும் தவ்ராத், ஸபூர், இஞ்ஜீல், மட்டுமல்லாது அவன் அனுப்பிய ஒவ்வொரு தூதர்களுக்கும் வேதங்களை வழங்கியுள்ளான். அன்றுமட்டுமல்ல இன்றும் தனது எழுத்தர்களை கொண்டு மனிதனது செயல்களைக் எழுதிக் கொண்டே இருக்கிறான்.

அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்துவந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (இன்னும் மேலே) உயர்ந்தார்கள். நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது (வானவர்கள் தலை விதிகளைப் பதிவு செய்துகொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்…

முஸ்லீம் 263

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம்.

குர் ஆன் 17:13

இவ்வாறாக அல்லாஹ்வின் அலுவலகத்தில் எழுத்துப்பணி இடைவிடாது இயங்கிக் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொன்றும் எழுத்துவடிவத்தில் பாதுகாக்கப்படுவதை குர்ஆனும் ஹதீஸும் கூறுவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மோசேவிற்கு கற்பலகைகளில் தனது கட்டளைகளை எழுதிக் கொடுத்துள்ளதாகவும் அதை அவர்கள் ஒரு பேழையில் (உடன்படிக்கைப் பெட்டி) வைத்திருந்ததாகவும் பழைய ஏற்பாடு கூறுகிறது.

பேழையின் மாதிரிப் படங்கள்.

Ark+Fig-1.png

Ark+Fig-2.png

குர்ஆனும் தனது பங்கிற்கு மூஸாவிடம் ஒரு பேழை இருந்ததாகக் கூறுகிறது

"அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டதற்கு அடையாளமாக, உங்களிடம் ஓர் அலங்காரப் பெட்டி வரும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து (உங்களுக்கு) மன நிறைவு இருக்கும். மூஸாவின் குடும்பத்தாரும், ஹாரூனின் குடும்பத்தாரும் விட்டுச் சென்றவற்றில் எஞ்சியது அதில் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அதில் உங்களுக்குச் சான்று உள்ளது” என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார்.

குர்ஆன் 2:248

மூஸா விட்டுச் சென்ற பெட்டியை மலக்குகள் வானிலிருந்து சுமந்துவந்து மக்களின் முன்பாக வைத்தனர் என்றெல்லாம் விரிவுரைக்கதைகள் கூறுகின்றன. நாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு தேவையில்லாத காரணத்தினால் அதை பின்னர் பார்க்கலாம்.

இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, ஈஸா வானுலகிற்குக் கடத்திச் செல்லப்பட்டபொழுது தனது அடியார்களுக்கென்று இன்ஜீல் என்றொரு வேதப் புத்தகத்தை விட்டுச் சென்றிருக்கிறார். அந்த புத்தகம் என்ன ஆனது? இயேசு, அப்படி எந்த ஒரு எழுத்துப்பூர்வமான வேதத்தையும் விட்டுச் செல்லவில்லை என்பதாக கிருஸ்துவம் கூறுகிறது. இவர்களில் யார் சொல்வது சரியானது?

ஆக அல்லாஹ், வெளியிட்ட குர்ஆனுக்கு முந்தைய எந்த ஒரு வேதமும் இன்று உலகில் இல்லை. அவை மனிதக் கரங்களால் உருமாறிவிட்டது. அல்லது முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது என்பதுதான் இஸ்லாமியர்களின் வாதம்.

மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான்.

குர்ஆன் 2:213

முஸ்லீம்களின் வெவ்வேறு விதமான நம்பிக்கைகளின் அடிப்படையில் சுமார் 30-லிருந்து 1,24,000 வரை நபிமார்கள் வந்துள்ளதாக அறிகிறோம். மேற்கண்ட வசனத்தை கவனத்தில் கொண்டால் தவ்ராத், ஜபூர், இன்ஜீல் மட்டுமல்லாது இன்னும் அதிக எண்ணிக்கையில் வேதங்கங்கள் இருந்துள்ளதாக பொருள் கொள்ளலாம்.

”வேதங்களை மாற்றிவிட்டனர்” என்று குர்ஆனில் அல்லாஹ் புலம்புவதை அடிப்படையாகக் கொண்டால், வேதங்களை திருத்தம் செய்யக் கூடாது என்ற எச்சரிக்கைகளை, ஒவ்வொரு வேதத்திலும் நிச்சயம் கூறியிருக்க வேண்டுமில்லையா? தனது வேதங்களை மாற்றியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேதங்களைப் பாதுகாக்கவுமில்லை!

பொதுவாக, மனிதர்கள், தாங்கள் எழுதியவற்றை தகுந்த அனுமதியின்றி பிறர் திருத்தம் செய்வதை அனுமதிப்பதில்லை. ஆனால், அல்லாஹ்வோ என்னைக் கேட்காமல் எனது புத்தகத்தை திருத்திவிட்டார்கள் என்று புலம்பிக் கொண்டிருக்கிறான். கொடுமையான தண்டனை வழங்குவேன் என்றெல்லாம் மிரட்டல் விடுத்தும், அவனை அவர்கள் ஏனோ சிறிதுகூட பொருட்படுத்தவில்லை, பயம் கொள்ளவில்லை என்கிறது குர்ஆன். அல்லாஹ்வின் ஆணைகளயும், படைப்புகளையும் மனிதர்களால் அவனது அனுமதியின்றி மாற்றமுடியும் என்பதை அல்லாஹ்வும் ஒப்புக்கொள்கிறான்!

சர்வல்லமையுடைய கடவுளுக்கு அடுத்தடுத்து புதிய தூதர்கள் மற்றும் வேதங்களின் தேவையென்ன? எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய, அனைத்துவிதமான சட்டங்களையும் உள்ளடக்கிய ஒரே வேதத்தை ஏன் இறக்கிப்பாதுகாக்கவில்லை?

இறுதி நாள் வரை வரும் மக்களுக்கு வழிக்காட்டியாக குர்-ஆன் இலங்கவேண்டும் என்பதற்காகவே குர்-ஆனின் பாதுகாப்பு மட்டும் அவசியாமாகிறது "முழுமைப்படுத்தப்பட்ட தொகுப்பு மட்டுமே பாதுக்காக்கப்படுவதற்கு தகுதியானது!" என்ற அடிப்படையில் தான் முன்னர் அருளப்பட்ட ஏனைய வேதங்களை பாதுக்காக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லையேயொழிய வேலி தாண்டி ஆடுகள் தோட்டத்தை மேய்வதை தடுக்க சக்தியற்ற தோட்டக்காரன் அல்ல…உலகின் இறைவன்!

நான் முஸ்லீம்

இஸ்லாம் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் விரும்பியவர்களெல்லாம் கடவுளின் அந்தரங்க காரிதரிசியாக பதவியேற்கலாம். அல்லாஹ்வின் அருகிலிருந்து அவனது நடவடிக்கைகளை கண்காணித்தவர்களைப் போன்று எவ்வளவு நுணுக்கமான செய்திகளைக் கூறுகின்றனர். இவர்கள்தான் அல்லாஹ்விற்கே ஆலோசனைகள் வழங்கியதைப் போன்று அளந்து விடுகின்றனர். அவனால் எதுவும் செய்ய முடியாது என்ற துணிச்சல்தான்.

நாம் நாத்தீகர்களா? இல்லை அவர்களா? அண்மைக் காலங்களில் இந்த சந்தேகம் அடிக்கடி எழுகிறது.

தோட்டக்காரனுக்கு, இஸ்லாம் என்ற மததத்தை மன்னிக்கவும் மார்க்கத்தை வேலியமைத்து பாதுகாக்க சுமார் 5500-க்கும் அதிகமான ஆண்டுகள் தேவைபட்டிருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.

குர்ஆன் என்ற வேதம் வழங்குவதற்காகத்தான் மற்ற வேதங்களை பாதுகாக்க விரும்பவில்லையாம்! பாவம், அந்தத் தோட்டக்காரன் இத்தகைய விளக்கங்களை எதிர்பார்க்கவில்லை போலும், அவனது புலம்பலை பார்ப்போம்.

எனவே, தங்களின் கரங்களால் வேதத்தை (மாற்றி) எழுதி பிறகு அதன் மூலம் (உலகின்) சொற்ப கிரையத்தை வாங்குவதற்காக, இது அல்லாஹ்விடமிருந்துள்ளது என்று வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு; மேலும் அவர்களின் கரங்கள் (வேதத்தை மாற்றி) எழுதியதன் காரணத்தால் அவர்களுக்கு வைல் (என்னும் பெரும் நாசம்) உண்டு …

குர்ஆன் 2:79

முதலில் குர்ஆன் கடவுளின் வார்த்தைகளே என்பதை நிரூபித்த பிறகு தவ்ராத் மற்றும் இன்ஜீலையும் அதன் மூலப்பிரதிகளுடன் ஒவ்வொரு எழுத்தாக, வாக்கியமாக ஒப்பீடு செய்தபின்னர் இப்படியொரு முடிவைக் கூறியிருந்தால், ஏற்புடையதாக கருதலாம். ஆனால் திடீரென்று ”வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என்பதைப் போல வேதங்கள் மாற்றப்பட்டுள்ளன அறிக்கைசெய்வது குழந்தைத்தனமானது.

சனிக்கிழமை தடை நீக்கம், கொழுப்பு உண்பது அனுமதிக்கப்பட்டது என்று தவ்ராத்திற்கு மாற்றமான சில அனுமதிகள் பற்றி குர்ஆனில் உள்ளன. நமது விவாதம் அதைப்பற்றியல்ல என்பதை அறிவீர்கள்.

…வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் அவர்கள் மாற்றுகின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர்…

குர்ஆன் 5:13

முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டதாக குர்ஆன் கூறுவதில் முரண்பாடுகள் உள்ளன. இன்னும் சொல்வதென்றால் முஹம்மதின் காலத்தில் மட்டுமல்ல அதற்குப்பின்னும் குர்ஆனைவிட அவைகளே பாதுகாப்பாக இருந்துள்ளதாகத் தெரிகிறது.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் யூதர்கள் தம் சமுதாயத்தாரிலிருந்து விபசாரம் புரிந்து விட்டிருந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்து வந்தார்கள். (தீர்ப்பளிக்கும்படி கேட்டார்கள்) அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் விபசாரம் புரிந்தவரை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அவர்கள் ‘நாங்கள் அவ்விருவரையும் (அவர்களின் முகங்களில்) கரும்புள்ளியிட்டு அடிப்போம்’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘(உங்கள் வேதமான) தவ்ராத்தில் (விபசாரம் செய்தவருக்கு) ‘ரஜ்கி’ (சாகும்வரை கல்லால் அடிக்கும்) தண்டனையை நீங்கள் காணவில்லையா?’ என்று கேட்க, யூதர்கள், ‘(அப்படி) ஒன்றும் அதில் நாங்கள் காணவில்லை’ என்று பதிலளித்தனர். உடனே, (யூதமார்க்க அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), யூதர்களிடம், ‘பொய் சொன்னீர்கள், நீங்கள் உண்மையாளர்களாயின் தவ்ராத்தைக் கொண்டு வந்து ஓதிக் காட்டுங்கள்’ என்று கூறினார்கள். (அவ்வாறே தவ்ராத் கொண்டுவரப்பட்டு ஓதப்பட்டது). அப்போது அவர்களுக்கு வேதம் கற்பிக்கும் வேதம் ஓதுநர் ‘ரஜ்கி’ தொடர்பான வசனத்தின் மீது தம் கையை வைத்து (மறைத்துக்கொண்டு) தம் கைக்கு முன்னால் இருப்பதையும் அதற்கு அப்பால் உள்ளதையும் மட்டும் ஓதலானார். (கைக்குக் கீழே உள்ள) ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தைவிட்டு இழுத்துவிட்டு, ‘இது என்ன?’ என்று கேட்டார்கள். யூதர்கள் அதைப் பார்த்தபோது, ‘இது ரஜ்முடைய வசனம்’ என்று கூறினார்கள். எனவே, (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் தண்டனை வழங்கும்படி நபியவர்கள் ஆணையிட்டார்கள்…

புகாரி 4556

முஹம்மதின் காலத்தில் முந்தைய வேதங்கள் பாதுகாப்பாக இருந்துள்ளதாக குர்ஆனும் கூறுகிறது.

"அல்லாஹ் அருளியதை நம்புங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்களுக்கு அருளப்பட்டதையே நம்புவோம்” என்று கூறுகின்றனர். அதற்குப் பிறகு உள்ளதை (குர்ஆனை) மறுக்கின்றனர். அது உண்மையாகவும், அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. "நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதற்கு முன் அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை செய்தீர்கள்?” என்று (முஹம்மதே!) கேட்பீராக!

குர் ஆன் 2:91

மேற்கண்ட வசனம் இறக்கப்படும் பொழுது, யூதர்களிடமிருந்த தவ்ராத்தும், கிருஸ்துவர்களிடமிருந்த இன்ஜீலும் உண்மையாக இருந்துள்ளது என்பதுதான் இதன் பொருள்! கடவுள் அல்லாஹ்வின் கட்டளைகளென்று கூறிக்கொண்ட முஹம்மதின் குர்ஆனை மறுத்ததும், நபிமார்களைக் கொலை செய்ததும்தான் அவர்கள் செய்த குற்றம். தவ்ராத் மற்றும் இன்ஜீல் பாதுகாப்பாகவே இருக்கையில் மாற்றப்பட்டதாக புலம்புவது வேடிக்கையானது. மற்றப்பட்டதாக அல்லாஹ் குற்றம்சாட்டுவது எதை? சரி… பாதுகாப்பாக இருந்த அந்த தவ்ராத்தும் இன்ஜீலும் எங்கே?

தன்னுடைய தூதர்கள் கொலை செய்யப்படும் வரையில் அல்லாஹ் என்ன செய்து கொண்டிருந்தான்? கொலை செய்யப்பட்ட நபிமார்கள் யார்? இதற்கான பதில் விளக்கமாக நன்கு விவரிக்கப்பட்ட குர்ஆனில் இல்லை. பதில் வேண்டுமென்றால் மாற்றப்பட்ட(?) வேதங்களில்தான் தேடிப்பார்க்க வேண்டும்.

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின்படி முந்தையவேதம் பாதுகாப்பாகவே இருந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில் முஹம்மது துப்பறிந்து கண்டுபிடித்த “ரஜ்ம்” என்ற கல்லெறி தண்டனை பற்றிய அல்லாஹ்வின் அறிவிப்பு குர்ஆனில் இல்லை என்பதுதான்!

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

….நிச்சயமாக அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தீல் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மண முடித்தவர் விபச்சாரம் புரிந்தால் அவருக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்கி) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை’ என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன்…

புகாரி 6830

மட்டுமல்ல,

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

"குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்” என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப் பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

முஸ்லீம் 2876

அதென்ன சிலரால் மட்டும் ஓதப்பட்ட வசனம்? மற்றவர்கள் ஓதிப் பாதுகாக்கவில்லையா?

அண்ணல் அவர்களுக்கு அல்குர்-ஆன் "ஒலி" வடிவிலேயே இறக்கியருளப்பட்டது; மாறாக "வரி" வடிவில்லல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை எனவே நபிகளுக்கு முழு குர்-ஆனும் அருளப்பட்டது எழுத்து வடிவத்தில் இல்லை என்பது தெளிவாகிறது…

நான் முஸ்லீம் தளத்திலிருந்து

இந்த வசனமும் தற்பொழுதைய குர்ஆனில் இல்லை. ஒலிவடிவில் பாதுகாப்பாக இருக்கிறது என்பவர்களிடம் நாம் கேட்கவிரும்புவது,

முஹம்மதிடம் அல்லாஹ் கூறியவாறே சிறிய மாற்றம்கூட இல்லாமல் ரஜ்கி மற்றும் ஐந்தாகக் குறைக்கப்பட்ட பால்குடி எண்ணிக்கைத் தொடர்பான வசனங்களைக் கூறமுடியுமா? மனிதர்கள் பாதுகாக்கும் தற்பொழுதைய குர்ஆனில் அவர்களால் இணைக்க முடியுமா?

ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து குர்ஆனை எப்படி குறை கூறலாம்? நாய் வாலை ஆட்டலாம், வால் நாயை ஆட்டமுடியாது, ஆட்டக்கூடாது என்பதுதானே உங்களது ஆதங்கம்?
தொடரும்…

source:http://www.iraiyillaislam.blogspot.in

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? -2

கடந்த பதிவில் ஒலிவடிவில் பாதுகாக்கப்பட்ட குர்ஆனிலிருந்த குளறுபடிகளைப் பற்றி கவனித்துக் கொண்டிருந்தோம் கொண்டிருந்தோம்.

அண்ணல் அவர்களுக்கு அல்குர்-ஆன் "ஒலி" வடிவிலேயே இறக்கியருளப்பட்டது; மாறாக "வரி" வடிவில்லல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை எனவே நபிகளுக்கு முழு குர்-ஆனும் அருளப்பட்டது எழுத்து வடிவத்தில் இல்லை என்பது தெளிவாகிறது…
நான் முஸ்லீம் தளத்திலிருந்து

அதென்ன வரிவடிவ குர்ஆன்? எழுத்துபூர்வமான ஆவணமாக அல்லாஹ் வழங்கவில்லையாம். அல்லாஹ் எழுத்துபூர்வமாக வழங்கவில்லை எனில் எவ்வாறு முஹம்மதை வந்தடைந்தன?

வஹீ, அல்லாஹ்வின் தூதராக முஹம்மது பதவியேற்றதிலிருந்தே வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. ஹீரா குகையில் இருந்த பொழுது ஜிப்ரீல் “இறுக்கி அணைச்சு ஒரு உம்மா” கொடுத்ததிலிருந்து அவரது துர்மரணம்வரை தொடர்ந்துள்ளது. 23 ஆண்டுகள்வரை சிறிது சிறிதாக வெளியாகிக் கொண்டிருந்தது. ஹிரா குகையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் செய்திகள் சற்று விநோதமானவைகள்தான். அவைகள் நம்பிக்கை என்ற அடிப்படையில் மட்டுமே பார்க்கப்படுகிறது; அதை எந்த ஒரு முஸ்லீமும் ஆராயமுற்படுவதில்லை.

முஹம்மது, தனது குடும்ப வாழ்க்கையிலிருந்து சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு காணாமல் போவது வழக்கம். ஹீரா குகையில் தங்கி வழிபாடுகள் செய்வதாக எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தார். அவ்வாறான நிலையில், அங்கு திடீரென தென்படும் முன்பின் அறிமுகமில்லாத ஒருவர்,

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
…அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி அவர்களிடம் வந்து, ஓதுவீராக என்றார். நபி (ஸல்) அவர்கள், நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்று சொன்னார்கள் (பின்பு நடந்தவற்றை) நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள் வானவர் (ஜிப்ரீல்) என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டு விட்டு ஓதுவீராக என்றார் அப்போதும் நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு ஓதுவீராக என்றார். அப்போதும் நான் ஓதத்தெரிந்தவனில்லையே என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையாக கட்டித் தழுவினார்….
புகாரி 0003
உதாராணத்திற்கு நீங்கள் (மட்டுமே) தனிமையிலிருக்கும் பொழுது திடீரென தென்படும் ஒரு நபர் தான் யார், எதற்காக வந்துள்ளேன் என்ற எவ்விதமான அறிமுகமின்றி படாரென்று மூச்சு திணறுமளவிற்கு “இறுக்கி அணைச்சு ஒரு உம்மா” கொடுத்தால் என்ன செய்வீர்கள்?

அந்தத் ”தழுவலுடன் கூடிய உம்மா”வை விரும்பாத நபராக நீங்கள் இருக்கும்பட்சத்தில் எதிராளியின் கன்னங்களை அறைந்து சிவக்க வைத்திருப்பீர்கள் அல்லது குறைந்தபட்சம் அவரைத் தள்ளிவிட்டு விலகி ஓடியிருப்பீர்கள். மீண்டும் மீண்டும் அணைப்பிற்கு காத்திருந்தால் என்னவென்று சொல்லலாம்?

ஹதீஸிலுள்ள வானவர் அல்லது ஜிப்ரீல் என்ற விபரங்கள் பிற்காலச் சேர்க்கையாகும். உண்மையில், தனக்கு “உம்மா” கொடுத்தவர் யாரென்றே முஹம்மதிற்குத் தெரியாது. அது நாமூஸ் என்கிற ஜிப்ரீல் என்பதாக பார்வையற்ற ஒரு கிருஸ்துவர், தன்னிடமிருந்த பைபிளை ஆராய்ந்து கூறுகிறார். முஹம்மதின் மனைவி கதீஜாவோ வினோதமான ஒரு சோதனையின் மூலம் ஹீரா குகையில் வந்தது காம இச்சை கொண்ட ஜின் அல்ல ஒரு நல்ல ஜின்னாக இருக்கலாம் என்று உறுதி செய்ய வேண்டியிருந்தது. ஜிப்ரீலின் அணைப்பு ”ஒரு மாதிரியாக” இருந்ததோ என்னவோ? (கதீஜா செய்த ஆய்வுகளை ”இஸ்லாத்தைக் கடந்த சுவடுகளின் 17வது” பகுதில் பார்த்தோம்.) ஜிப்ரீல் தன்னை யாரென்ற அறிமுகத்துடன் வந்த காரணத்தையும் கூறியிருக்கலாம். முஹம்மதிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானே அதன்படி மட்டுமே ஜிப்ரீலால் செயல்படமுடியும். இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி அதுதான் பகுத்தறிவற்ற படைப்பாயிற்றே?

இப்பிரபஞ்சத்திற்கே அருளாகத் தேர்தெடுக்கப்பட்டவரிடம் சராசரி மனித நாகரீகத்தைக்கூட பின்பற்றாதது சற்று அல்ல மிகவுமே வினோதமானதுதான். கதீஜாவின் ஏடாகூடமான சோதனையை கண்டு வெறுத்துப்போன அல்லாஹ், அதன் பிறகு ஜிப்ரீலை மரியாதையாக நடந்து கொள்ளச் செய்ததுடன் ”ஒலி வடிவிலான” அல்லாஹ்வின் கட்டளைகளை முஹம்மதிடம் வழங்கியதாகவும் ஹதீஸ்கள் கூறுகின்றன. குர்ஆன் முழுவதுமே ஜிப்ரீல் என்ற இரண்டாம் நபர் கூற ஒலிவடிவிதான் வழியாக முஹம்மதை அடைந்ததா? என்றால், நிச்சயமாக அவ்வாறில்லை. முஹம்மதின் மனதில் உள்ளுதிப்பாகவும், கனவாகவும் தோன்றியிருக்கிறது. ஒலியல்லாத முறையிலும் வஹீ முஹம்மதை அடைந்துள்ளது. அல்லாஹ்வுடன் நேரடி உரையாடல் விண்வெளிப்பயணத்தில் பேரம் பேசியபொழுது மட்டுமே.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த வேதஅறிவிப்பு (வஹீ) தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவாகவே) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. …
புகாரி 0003
அவ்வப்பொழுது ஜிப்ரீல் தன்னிடம் கூறும் செய்திகளையும், அல்லாஹ் உள்ளுதிப்பாக உருவாக்கும் செய்திகளையும், கனவுகளையும் உறவினர், நண்பர்கள் அண்டைவீட்டார் என்று எல்லோரிடமும் கூறத் துவங்கினார். குர்ஆன் ஒலிவடிவில் மட்டுமே முஹம்மதை வந்தடைந்தன என்பது தவறானது மட்டுமல்ல, மக்களை ஏமாற்றும் கருத்தாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பெற்றே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆக வேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேதஅறிவிப்பு (வஹீ)தான்.
முஸ்லீம் 239

முஹம்மதிற்கு ’வஹீ’ என்ற முறையில் கூறப்பட்ட செய்திகள் எவை? அல்லாஹ் முஹம்மதிடம் வழங்கியதாகக் கூறும் “வஹீ” குர்ஆன் என்ற புத்தகத்தில் மட்டும்தான் உள்ளதா? என்றால் நிச்சயமாக அவ்வாறில்லை! ஹதீஸ்களிலும் தொடர்கிறது.

…"குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி; ஹதீஸ்கள் இறைச் செய்தி அல்ல” என்று வாதிடுவோரிடம் நாம் கேட்க விரும்புவது இது தான்:
பகலிலும், இரவிலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடக் கூடாது என்று ஏற்கனவே தடை இருந்ததாக அல்லாஹ் கூறுகிறானே அவ்வாறு தடை விதிக்கும் வசனம் எது? குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி என்று வாதம் செய்வோர் அந்தக் கட்டளையைக் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்ட வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மற்றொரு வஹீ மூலம் இவ்வாறு தடை செய்ய அதிகாரம் இல்லாமல் இருந்து அவர்கள் தடை செய்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் கண்டிக்கவில்லை. "நீங்கள் இரவில் அவ்வாறு நடந்து கொண்டது குற்றமில்லை, முஹம்மது தவறாகக் கூறி விட்டார்” என்று இறைவன் கூறியிருக்க வேண்டும்.

அவ்வாறு கூறாமல் "நீங்கள் செய்து கொண்டிருந்தது குற்றம் தான்; நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிட்டிருக்கும் போது அது குர்ஆனில் இல்லா விட்டாலும் அதை மீறுவது பாவம் தான்; என்றாலும் உங்களை நான் மன்னித்து விட்டேன்” என்ற பொருள்பட மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் அருளியுள்ளான்.

இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ குர்ஆன் மட்டுமல்ல. நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் இறைவன் போடுகின்ற கருத்துக்களும் வஹீ தான். அவற்றையும் பின்பற்றியாக வேண்டும் என்பதை இவ்வசனம் நிரூபிக்கின்றது.
50. நபிவழியும், மாற்றப்பட்ட நோன்பின் சட்டமும்
onlinepj.com

அறிஞர் பீஜே செல்வது சரிதான். இஸ்லாமில், குர்ஆனை மட்டும் வைத்துக் கொண்டு எந்த ஆணியையும் பிடுங்க முடியாது. குர்ஆனின் விளங்காத பகுதிகளுக்கு முஹம்மது மீண்டும் விளக்கம் கொடுத்திருப்பதைதான் நாம் ஹதீஸ்களில் காண்கின்றோம். அவைகளும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைகளே.

எனவே நாம் அதை ஓதும் போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக
பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.
குர் ஆன் 75:18-19
முஹம்மதின் காலத்திலேயே குர்ஆனுக்குத் தவறான பொருளைக் கூறி தர்க்கத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர்.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது இரண்டுபேர் குர்ஆனின் ஒரு வசனம் தொடர்பாகக் கருத்து முரண்பாடு கொண்டு சர்ச்சை செய்து கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முகத்தில் கோபம் தென்பட எங்களிடம் வெளியே வந்து, "உங்களுக்கு முன்னிருந்தோர், வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் அழிந்துபோயினர்” என்று சொன்னார்கள்.
முஸ்லீம் 5180

அன்றே அப்துல்லா ஜாமலியும் பீஜேவும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழல்களில் தர்க்கத்தினால் வெறுப்படைந்து போன அல்லாஹ், பொறுப்பை முஹம்மதிடம் சாட்டி விடுகிறான்.
…இன்னும், அவர்களின் மனங்களில் (பதியும் படியான) தெளிவான வார்த்தையை அவர்களுக்கு கூறிவீராக!
குர்ஆன் 4:63
குர்ஆனில் கூறப்படாத வஹீ இவ்வாறுதான் உருவாகியிருக்கவேண்டும். ஒலிவடிவில் அருளினான், இதயங்களில் பாதுகாப்பாக உள்ளது என்பவர்கள் குர்ஆனில் இல்லாத வஹீக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? குர்ஆனைத் தொகுத்தவர்களுக்கு இந்த “குர்ஆனில் இல்லாத வஹீ”யை ஏன் பொருட்படுத்தவில்லை? ஆக, தற்பொழுது நம்மிடமுள்ள இந்த 6666 வசனங்கள் மட்டுமே குர்ஆன் அல்ல என்பது தெளிவாகிறது.

பொதுவாக ஹதீஸ்கள் என்னதான் வலுவான அறிவிப்பாளர்கள் வரிசை கொண்டிருந்தாலும், குர்ஆனுக்கு, அதாவது ஆயிஷாவின் கணிப்பின்படி 6666 வசனங்களைக் கொண்ட தொகுப்பிற்கு (மற்றவர்களின் கணிப்பின்படி இதுவும் 6212 வரை மாறுபடுகிறது) முரண்பட்டால் நிராகரித்துவிடுகின்றனர். ’வஹீ’ ஹதீஸிலும் இருக்கிறது என்பது குழப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

மற்ற வேதங்கள் மாற்றப்பட்டுவிட்டதாக குர்ஆன் கூறுகிறது. “குர்ஆனில் இல்லாத வஹீ”க்களும் உண்டு என்கிறார் பீஜே. இப்பொழுது ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டவைகளா? என்ற கேள்வி தவிற்க முடியாததாகிறது.

ஹதீஸ்களின் நிலையை நான் சொல்வதைவிட அறிஞர் பீஜே சொல்வதைக் கேளுங்கள்.

பீஜே இங்கு, குர்ஆனில் சொல்லப்படாத வஹீயான ஹதீஸ்களின் பரிதாப நிலையைப்பற்றி மட்டும் கூறவில்லை. ஆவணத்தின் முக்கியத்துவத்தையும் பதிவு செய்கிறார். இதற்கு மேலும் நாம் ஹதீஸ்களைப்பற்றி விவாதிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.
தொடரும்…

source:http://www.iraiyillaislam.blogspot.in

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized