முகம்மதுவும் மற்ற நபிமார்களும்


அலி சினாவின் கவனத்திற்கு,

உங்களுடைய இணைய தளத்திலுள்ள உங்களுடைய கருத்துக்களை சும்மா படித்தேன். கீழ்க்கண்ட கேள்விகளை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் அவற்றை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்.

1. முஹம்மதுவுடைய பணியில் நீங்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால் பிறகு மோசஸ், ஆப்ரஹாம் தாவீத், இயேசு &முகம்மதுவுக்கு பிறகு வந்தவர்களான, கடவுள் ஒருவரே என்று முஹம்மது கூறியதையே கூறியவர்கள் யார், அவர்கள் அனைவரும் அல்லாஹ்விடம் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
மோசஸ், ஆப்ரஹாம், இயேசு போன்றவர்களை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பது முஹம்மது ஒரு கபட வேடதாரி என்ற உண்மைக்கு சம்பந்தமில்லாதது.
முகம்மதுவுக்கு பிறகு வந்தவர்களை பற்றி கேட்கிறீர்கள். எந்த மற்றவர்கள்? ஒன்று முஹம்மது பொய்யராக இருந்தார் அல்லது இந்த மற்றவர்கள்தான். தனக்கு பிறகு எந்த நபியும்(தீர்க்கதரிசி) வரமாட்டார் என்று முஹம்மது உரிமை கோரினார். முஹம்மதுக்கு வக்காலாத்து வாங்கி வாதம் புரிவதன்மூலம் அவருக்கு பின்பு வந்த அனைவரையும் நீங்கள் தானாகவே புறந்தள்ளி விட்டீர்கள்.

படத்திலிருந்து(Picture) முகம்மதை வெளியே எடுத்து விடுங்கள். நீங்கள் இப்பொழுதும் மற்ற எல்லா மதங்களிலும் நம்பிக்கை கொள்ள முடியும். படத்தில் அவர் இருந்தால், அவருக்கு பின்பு வந்த எல்லோருடைய உண்மையையும் நீங்கள் மறுக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், எவர்களை தான் பின்பற்றுவதாக அவர் உரிமை பாராட்டினாரோ அவர்களிடமிருந்து முஹம்மதின் போதனைகளும் செயல்களும் மிகவும் வேறுபட்டு இருந்ததால், அவருக்கு முன்பு வந்தவர்களின் ஏற்புத்தன்மையையும் நீங்கள் கேள்வி கேட்க வேண்டியிருக்கும்.

moon+god-1.jpg

அல்லாஹ் என்பது உண்மையான பெயர் இல்லை. அது "அரசர்" அல்லது "அதிபர்" என்பதை போன்ற ஒரு பட்டம் தான். அது உறுதிப்படுத்தும் வார்த்தையான அல்(Al / The / அந்த) மற்றும் இலாஹ்(Ilah) என்பவற்றை கொண்டது.அதற்கு கடவுள் என்று அர்த்தம். கஅபா வில் இருந்த ஹபல் (ஹுபல்) என்ற சந்திரக் கடவுளையே அது குறித்தது.

எலிசபெத் II ஐ "ராணி" என்ற அவருடைய பட்டப்பெயரால் பிரிட்டிஷ் மக்கள் அழைப்பதை போலவே, அரபியர்களும் ஹபலை அதனுடைய பட்டப்பெயரால் அழைத்தனர். ஆனாலும், ஹபலும் (Habal) யாவேஹ்வும்(Yaweh) ஒன்றல்ல.அது ஹ(Ha) மற்றும் பால் (Baal) ஆகியவற்றை கொண்டு அமைகிறது. எபிரேயுவில் ஹ(Ha) என்பது உறுதிபடுத்தும் சொல். பால் (Baal) என்பது பொய்யான கடவுள் என்று பைபிளில் நிராகரிக்கப்படுகிறது. ஹபால் பைபிளில் கண்டனம் செய்யப்படும் மோவாபியர்களின்(Moabites) கடவுள்.

சந்திரக் கடவுள் ஹபால் தான் அரபியர்களின் அல்லாஹ் என்ற உண்மையானது பிறை (Crescent) இஸ்லாமின் அடையாளக்குறி என்பதில் ஆதாரமாக விளங்குகிறது.

moon+god-2.jpg

அரபி பேசும் கிறிஸ்தவர்களும் யூதர்களும் கூட கடவுளை அல்லாஹ் என்றே அழைத்தனர். ஆனால் அரபியர்களின் அதே கடவுளை அவர்கள் அர்த்தம் பண்ணிகொள்ளவில்லை. யாவேஹ் என்ற இஸ்ரவேலின் கடவுளையே அவர்கள் அர்த்தம் கொண்டனர். பல்வேறு ராஜ்யங்களில் உள்ள மக்கள் தங்கள் முடிவேந்தர்களை "அரசர்" என்று அழைக்கின்றனர். ஆனால் ஒரே முடிவேந்தர்களை அவர்கள் எண்ணிக் கொள்வதில்லை. அதேமாதிரிதான்,இஸ்ரவேலின் அல்லாஹ்வும் அரபியர்களின் அல்லாஹ்வும் இரு வேறு தெய்வங்கள்.
வஞ்சகத்தின் அடுக்குகளில் உங்களுடைய கேள்வி ரகசியமாக ஒளிந்திருக்கிறது என்பதை நீங்கள் காண்கிறீர்களா?இஸ்லாத்தை ஆராய்வது என்பது வெங்காயத்தை உரிப்பதுபோல் ஆகும். ஒரு அடுக்கை நீங்கள் நீக்கும் பொது இன்னொன்றை நீங்கள் காண்கிறீர்கள். அடக்கத்திலோ ஒன்றுமே இல்லை.

எந்த வகையிலும், கடவுள் ஒரு நபர்(Person) என்று நான் கருதவில்லை. அது நம்முடைய விஷயங்களில் தலையிடுகிறது, நம்முடைய பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறது அல்லது தூதர்களையோ அல்லது ரட்சகர்களையோ அனுப்புகிறது என்று நான் கருதவில்லை. கடவுள் ஒரு நபராக இருந்தால், இயற்கை பேரழிவுகளிலிருந்தும் சீற்றங்களிலிருந்தும் அவர் நம்மை காப்பாற்றியிருக்க முடியும் அல்லது வேண்டும்.
2. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் — நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், உங்களை பொறுத்தவரை உங்களுடைய கடவுள் யார்(கடவுளின் இருப்பில் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால்).

பல பில்லியன் வருடங்கள் பரிணாமத்தின் உற்பத்தி பொருட்கள் நாம்.
3. உங்களை பொறுத்தவரை, எல்லா ஜீவராசிகளையும் யார் படைத்து இருக்கிறார், இயற்கையாக நிகழ முடியாத இந்த சிக்கலான ஒன்றை.

எல்லா சிக்கலான விஷயங்களும் இயற்கையாக நிகழக்கூடியவைகள் தான். நோவாவின் (நூஹ்) பேழை என்ற கதையை நம்பும் படைப்புவாதிகளோடு நான் விவாதித்திருக்கிறேன். நோவா தன்னுடைய பேழையில் எப்படி அத்தனை உயிரினங்களை அடைக்க முடிந்தது என்ற கேள்வியை எதிர்நோக்கியபோது, நோவாவின் வெள்ளத்திற்கு பிறகு சிறிய அளவிலான பரிணாமங்களும் பன்மைப்படுத்தல்களும் நிகழ்ந்தன என்று அவர்கள் கூறுகின்றனர்.உதாரணத்திற்கு, புலிகளும் சிங்கங்களும் அப்பொழுது ஒரே உயிரினமாக இருந்தன என்பது. இது கேலிக்குரியது.நோவாவின் வெள்ளம் 5000 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. பூமியின் வாழ்நாளில் இது ஒரு கண் சிமிட்டல்தான். இந்த குறுகிய காலத்தில் இந்த அளவு வேறுபாடு அடைதல் சாத்தியமில்லாதது. இந்த சாத்தியமற்றதை அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் பாக்டீரியாவிலிருந்து நானூறு கோடி வருடங்களில் மனிதர்கள் பரிணமித்தார்கள் என்று நாம் கூறும்போது அவர்கள் காலை பின்வாங்குகிறார்கள். சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள்,சிறுத்தை புலிகள் மற்றும் மற்ற பூனை போன்ற விலங்குகள் பந்தேரா(Panthera) என்ற ஒரே இனத்தின் உறுப்பினர்களே. அவைகளுடைய பொதுவான மூதாதை முன்பு ஐம்பது லட்சம் வருடங்களுக்கு குறைவான காலத்திற்குள் வாழவில்லை. அவைகளுக்கு இடையேயான மாற்றங்கள் குறைந்தது ஐம்பது லட்சம் வருடங்களில் நிகழ்ந்தன, ஐந்தாயிரம் வருடங்களில் அல்ல.
4. மனிதர்களால் உருவாக்கப்பட்ட மற்ற எந்த மதத்தை காட்டிலும் இஸ்லாத்தின் வரலாறு தெளிவாக உள்ளது.

அது மிக தெளிவாக உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். முஹம்மது மேல் ஏற்றிக் கூறப்பட்ட பல பொய்யான ஹதீத்கள் உள்ளன. ஆனால் உண்மையான ஒன்றிலிருந்து அவைகளை பிரித்தெடுப்பது மிக சுலபமானதே.முஹம்மதின் உண்மையான வரலாற்றை நான் கட்டமைத்துள்ளேன். அவருடைய வன்முறை மனநோய்த்தனமான மனதை(Psychopathic mind) கூர்ந்து பார்த்துள்ளேன். அவருடைய வாழ்க்கை வரலாற்றின் தெளிவான தன்மைக்கு நன்றிகள் உரித்தாகுக.
5. கடைசியாக, நீங்கள் மரணிக்கும்போது உங்களுடைய ஆத்துமா எங்கே செல்லும் என்பதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

நன்கொடைகளை திரட்டும் உங்களுடைய இடைவிடாத அட்டவணையிலிருந்து சிறிது நேரத்தை எடுத்துக்கொண்டு நான் மேலே வைத்துள்ள விஷயங்களை பற்றி சிந்திக்க முயற்சி செய்யுங்கள்.

தங்களுக்கு நன்றி,
எஸ்.வாட்சன்
லண்டன்

உங்களுடைய மூன்றாவது கேள்வியை போன்றே, இது கேள்வியையே மன்றாடி வேண்டி கேட்டுக்கொள்வது என்று தர்க்க சாஸ்திரத்தில்(Logic) அறியப்படுகின்ற தவறான வாதம்(Fallacy) ஆகும். அதில் வாத அடிப்படைகள்(Premises) முடிவு செய்யப்பட்டதே (Conclusion) உண்மை என்ற உரிமை கோருதலை கொண்டவை.

மூன்றாவது கேள்வியில், "… இந்த சிக்கலான விஷயங்கள் இயற்கையாக நிகழ முடியாது" என்று நீங்கள் உறுதிபடுத்தினீர்கள். அந்த வாதத்தின் அடிப்படையே(Premise) தவறானது. சிக்கலான விஷயங்கள் இயற்கையாக நிகழ்கின்றன. அது காலத்தை பற்றிய கேள்விதான். பல நூறு கோடி வருடங்கள்(Billions of years) என்பது நீண்ட காலம். சின்னஞ்சிறு மாற்றங்கள் கூடுகின்றன. பல பத்து லட்ச(Millions of tiny changes) சின்னஞ்சிறு மாற்றங்கள் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்குகின்றன.

ஐந்தாவது கேள்வியில், ஆத்துமா இருக்கிறது, தொடர்ந்து ஜீவிக்கிறது என்று நீங்கள் அனுமானித்து அது எங்கே செல்கிறது என்று என்னை கேட்கிறீர்கள். நாம் ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்து, இந்த ஆத்துமா என்பது உள்ளதா என்றும் அது தொடர்ந்து ஜீவிக்குமா என்றும் கேட்போம். அந்த கேள்விகள் பதிலளிக்கப்பட்டவுடன், அது எங்கே செல்கிறது என்ற கேள்வியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோம்.

உடலை சாராமல் ஆத்துமா இருக்கிறதா? எனக்கு தெரியாது! அது இருக்க முடியும் என்பதை நான் மறுக்கவில்லை.ஆனால் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. அது ஒரு நம்பிக்கை (Belief) சார்ந்த விஷயம். நான் நம்பிக்கை சார்ந்த மனிதன் இல்லை. ஆத்துமாக்கள் தொடர்ந்து ஜீவிக்க கூடும் என்று நீங்கள் நம்பக்கூடும். அதனோடு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் உங்களோடு ஒத்துபோகவோ அல்லது மாறுபடவோ முடியாது. நான் சந்தேகவாதியாகவே (Skeptic) இருக்கிறேன்.

இப்பொழுது, ஆத்துமா தொடர்ந்து ஜீவிக்கும் என்று அனுமானித்துக் கொள்வோம். சுவர்க்கம் மற்றும் நரகம் பற்றிய முஹம்மதின் சித்தரிப்பு உண்மையானதாக இருக்க முடியாது என்பது நிச்சயமானது. பெரும்பாலான மக்கள் அதை புரிந்து கொள்வதை போன்று ஆவி உலகத்தை பற்றிய புரிதல் முகம்மதுவுக்கு இருந்ததில்லை. மரணத்திற்கு பிறகான வாழ்க்கை குறித்த அவருடைய கருத்துரு(Concept) ஸ்தூலமான(Physical), இந்த உலகத்துக்குரியதாகவே இருந்தது.அவருடைய சுவர்க்கம் என்பது வேசிகளும், பானங்களும், உணவுகளும், எல்லா வகையான விபச்சாரத்தனங்களும் சிற்றின்ப சந்தோஷங்களும் நிறைந்தது. அவருடைய நரகமும் கூட சித்திரவதையும் கொடூர வேதனையும் கொண்ட ஸ்தூலமான இடமே(Physical place).
நான் ஒரு முஸ்லிம் என்றும் என்னுடைய அன்புக்குரியவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்றும் வைத்துக்கொள்வோம்.காபிர்களாக (உண்மையை மறைப்பவர்கள் என்பது நேரடி பொருள்) இறந்துபோன என்னுடைய அன்புக்குரியவர்கள் நரகத்தில் எரிந்துகொண்டிருக்கும்போது சுவர்கத்தில் உடலுறவு கொள்வதை, அருந்துவதை, உண்பதை என்னால் ஆனந்தமாக அனுபவிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது! எனக்கு அதுவே நரகம். மாறாக, நான் அவர்களுடன் இருந்து அவர்களுடைய வலியையும் துன்பத்தையும் பகிர்ந்து கொள்வேன்.

ஆனால் முகம்மதுவால் அவ்வளவு தூரம் பார்க்க முடியவில்லை. இதை அவரால் காணமுடியாததற்கு காரணம் என்னவெனில், அவர் தன்னை மட்டுமே உயர்வாக நினைக்கும் மனநோயாளியாக (Narcissist) வும் மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் தன்மையை (Empathy) இழந்தவராகவும் இருந்தார். மற்றவர்களின் வலிகளை அவர் உணராததால் மற்றவர்களும் அவைகளை உணர்ந்து கொள்வதில்லை என்று அவர் அனுமானித்துக் கொண்டார்.வருத்தமான விஷயம், அவருடைய நீர்க்குமிழி பிரபஞ்சத்தில் மாட்டிக்கொண்டவர்களும் கூட தன்னை மட்டுமே உயர்வாக நினைக்கும் மனநோயாளிகளாக(Narcissists) வும் மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் தன்மை இல்லாதவர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட சுனாமி அல்லது நியூ ஆர்லியன்ஸில் ஏற்பட்ட சூறாவளி காற்று மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களில் மக்கள் இறக்கும்போது,முஸ்லிம்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியடைந்து அல்லாஹ்வை புகழ்கின்றனர்.அவர்களுடைய அவநம்பிக்கைக்காக அல்லாஹ் அவர்களை தண்டித்திருக்கிறார் என்று அவர்கள் நினைக்கின்றனர். எந்த மாதிரியான மனிதர்கள் இப்படி மனிதத்தன்மை அறவே இல்லாதவர்களாக இருக்க முடியும்?முஹம்மதுடைய பெருங்குடலின் பகுதிகளாக முஸ்லிம்கள் ஆகிவிட்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் நரகம் மற்றும் சுவர்க்கம் பற்றிய அவருடைய காட்சியில் எந்த தவறையும் காண்பதில்லை. தன்னை நம்பாததற்காக அவ்வளவு துன்புறுத்தி இன்பம் காணும் வகையில் மனிதர்களை என்றென்றைக்குமாக எரிக்கின்ற ஒரு தெய்வத்தை வணங்குவதற்கு ஒருவர் உண்மையாகவே முட்டாள்தனமாகவோ அல்லது இதயத்தில் தீமை கொண்டவராகவோ தான் இருக்க முடியும். மூளையை பயன்படுத்தாமல் தங்களுக்கு இட்ட கட்டளைப்படி மட்டுமே செயல்படுபவர்களாக(Zombies) முஸ்லிமாக சுருக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுடைய மனசாட்சியை இழந்துவிட்டிருக்கிறார்கள்.

எந்த வகையிலும், ஒவ்வொரு ஆன்மீக குருவும் அவருடைய/அவளுடைய சொந்த நற்குணத்தை கொண்டே ஆராயப்படவேண்டும். புத்தர், இயேசு, முஹம்மது மற்றும் டேவிட் கோரேஷ் ஆகியவர்களை ஒன்றாக சேர்த்து கட்டி அவர்கள் அனைவர் மேலும் ஒரே தீர்ப்பை நாம் வழங்க முடியாது. டேவிட் கோரேஷும் முகம்மதுவும் மிகத் தீமையான சீக்கு பிடித்த தனி மனிதர்கள்.

மூல ஆசிரியர் : அலி சினா
மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்

source:http://iraiyillaislam.blogspot.in

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s