சல்மான் ருஷ்டி தலைக்கு ரூ.2.71 கோடி கூடுதல் சன்மானம்


டெஹ்ரான் : சர்ச்சைக்குரிய ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் தலைக்கு, ஈரான் முஸ்லிம் அமைப்பு, கூடுதலாக, 2 கோடியே 71 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சல்மான் ருஷ்டி எழுதிய, "சாத்தானின் வேதங்கள்’ என்ற புத்தகத்தில் முஸ்லிம்களைப் பற்றி அவதூறு செய்திகள் இடம்பெற்றிருந்ததாக புகார் கூறப்பட்டது. இதற்காக, ஈரான் முஸ்லிம் மதத் தலைவர் அயதுல்லா கோமெனி, ருஷ்டிக்கு மரண தண்டனை அறிவித்திருந்தார். இதன் காரணமாக, ருஷ்டி, பிரிட்டனில் பல ஆண்டுகள், தலைமறைவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. salman_rushdie.jpg
ஈரானின், "கொர்தாத் பவுண்டேஷன்’ என்ற அமைப்பு, சல்மான் ருஷ்டி தலைக்கு, அப்போது, 18 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்திருந்தது.
தற்போது, முஸ்லிம்களுக்கு எதிராக வெளியான சர்ச்சைக்குரிய அமெரிக்கப் படம், உலகம் முழுவதும் கலவரத்தைக் கிளப்பி உள்ளது.
எனவே, கொர்தாத் அமைப்பு, ருஷ்டியின் தலைக்கு தற்போது, கூடுதலாக சன்மானம் அறிவித்துள்ளது. "ருஷ்டியை முன்பே கொன்றிருந்தால், இஸ்லாமை அவமதிக்கும் இதுபோன்ற செயல்கள் நடந்திருக்காது. அவரைக் கொல்லாவிடில், இதுபோன்ற முஸ்லிம் அவமதிப்பு சம்பவங்கள் நடப்பது முற்றுப் பெறாது’ எனக் கூறி, அவரது தலைக்கு கூடுதலாக, 2 கோடியே 71 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்துள்ளது

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s