கடாஃபி நடத்திய செக்ஸ் பள்ளிக்கூடம்: அதிர ்சித் தகவல் !


லிபிய அதிபர் கடாஃபி , மக்கள் புரட்சி காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டார். பின்னர் கிளர்ச்சியாளர்களின் கைகளில் சிக்குண்டு பரிதாபமாக இறந்தார் என்ற விடையத்தைப் பலரும் அறிவோம். இருபுக்கரம் கொண்டு லிபியாவை கடாஃபி ஆட்சிசெய்தார் என்று அமெரிக்கா சொல்லிவந்தாலும், இறுதி நேரத்தில் அவர் கொல்லப்பட்ட விதம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு கடாஃபி தொடர்பாக ஒரு பரிதாபத்தையும் தோற்றுவித்தது. என்ன தான் இருந்தாலும் ஒரு நாட்டுத் தலைவரை இப்படியா கொல்வது என்று பலராலும் கடாஃபி பரிதாபமாகப் பார்க்கப்பட்டார். ஆனால் அவர் பின்னால் மறைந்திருக்கும் பல விடையங்களை பிரெஞ்சு பத்திரிகை ஒன்று முதல் முதலாக வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறது. கடாஃபி நடத்திய செக்ஸ் பள்ளிக்கூடம் என்னும் தலைப்பில் வெளியாகவுள்ள கதையில் வரும் முக்குயமான அம்சங்களை அதிர்வின் வாசகர்களுக்காக நாம் இங்கே தருகிறோம் !

கடாஃபி பல சிறுமிகளை பாலியல் அடிமைகளாக வைத்திருந்தார் என்று ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சயூரா என்னும் பெண் கொடுத்த வாக்குமூலம் மட்டுமல்ல, கடாஃபியின் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் சிலவற்றையும் இப் பத்திரிகை வெளியிடவுள்ளது. கடாஃபி குறிப்பாக 14, 15 மற்றும் 16 வயதுச் சிறுமிகளை பாலியல் அடிமைகளாக வைத்திருந்திருக்கிறார். அவர் ஒரு சமயம் பெண்கள் பள்ளிக்கூடம் ஒன்றுக்கு விருது வழங்கச் சென்றுள்ளார். அங்கே சாரணர் பயிற்சியில் ஈடுபட்டு, அதில் முதல் இடம் வகித்த சயூரா என்னும் பெண் அவர் விருதுகள் வழங்கும்வேளை உதவியுள்ளார். மிகவும் அழகான கட்டமைப்பு உடலைக் கொண்ட அப்பெண்ணின் தலையில் கை வைத்த கடாஃபி, வாழ்த்துக்களை தெரிவித்து விட்டுச் சென்றுவிட்டார். ஆனால் அவர் ஒரு பெண்ணின் தலையில் கைவைத்து விட்டால் என்ன செய்யவேண்டும் என்று, அவரது காவலாளிகளுக்கு நன்கு தெரியும். மறுநாள் அப்பெண்ணின் அம்மாவை அணுகிய கடாஃபியின் காவலாளிகள். சயூரா சில உதவிகளை கடாஃபிக்கு செய்யவேண்டும், அதனால் அவளை நாம் கூட்டிச் செல்கிறோம் என்று சொல்லி அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

வாகனத்தில் செல்லும்போதே சயூராவின் இரத்தத்தை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். பின்னர் ஒரு சிறிய பள்ளிக்கூடம் போன்றதொரு கட்டிடத்தில் அவர் உடைகளை களைந்து அந்தரங்க இடங்களில் உள்ள முடியை ஷேவ் செய்து அகற்றியுள்ளனர். இதற்கிடையே சயூரா என்னும் 15 வயதுச் சிறுமிக்கு நோய்கள் எதுவும் இல்லை என்ற ரிப்போட்டும் வந்துவிட்டது. இதன் பின்னர் கடாஃபியின் இரகசிய வீட்டிற்கு அச் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கெ நிர்வாணமாக நின்ற கடாஃபியை பார்து சயூரா நடுங்கிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். தான் 2004ம் ஆண்டு முதல் கடாஃபியின் பாலியல் அடிமையாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தன்னை வல்லுறவுக்கு உட்படுத்த கடாஃபி முனைந்ததாகவும் தான் மறுத்து ஆர்பாட்டம் செய்ததால் தன்னை ஒரு பள்ளிக்கூடத்தில் அவர் சேர்க்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இப் பள்ளிக்கூடத்தின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. ஆனால் சில பெண்களுக்காக மட்டும் பிரத்தியேகமாக இயங்கும் இப்பள்ளிக்கூடத்தில் செக்ஸை தான் பாடமாக எடுக்கிறார்கள். செக்ஸ் பற்றி அறிவூட்டலைக் கொடுக்கிறார்கள். தமது தற்காலிக வீட்டிற்குச் சென்று, படிக்க செக்ஸ் சி.டிக்களையும் , DVD க்களையும் கொடுத்து அனுப்பியுள்ளார்கள். இதனை அடுத்து குறிப்பிட்ட பெண்ணின் மனதில் பாலியல் ஆசைகளை வளர்த்து, பின்னர் சற்று மனம் மாறியபின்னர் , மீண்டும் கடாஃபியிடம் அழைத்து வந்து விடுகிறார்கள். இதற்காகவே அந்த பள்ளிக்கூடம் இயங்கியதாக அப்பெண் மேலும் குறிப்பிட்டுள்ளார். தான் திரும்பவும் கடாஃபியிடம் அழைத்து வரப்பட்டதாகவும், தன்னை பலமுறை வன்புனர்வுக்கு உள்ளாக்கிய கடாஃபி தன்னைத் தாக்கியதாகவும், சிலவேளைகளில் தன்மீது சிறு நீரைக் கழித்தாகவும் இப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

கடாஃபியின் இரகசிய வீட்டில் இருந்த கம்பியூட்டரை, சில கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி அதனை ஒரு பிரெஞ்சு நிறுவனத்திடம் கொடுத்துள்ளனர். இதில் பல தகவல்கள் அடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் இருந்தும், மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்தும், பெறப்பட்ட தகவல்களை மையமாகக் கொண்டே, குறிப்பிட்ட செய்தி வெளிவர இருக்கிறது. இவர் மகிந்தரின் நண்பர் என்பதில் ஆச்சரியம் இல்லை ! இச் செய்திகள் வெளியாகும் தருணத்தில் மகிந்தரின் முகத்திரையும் கிழியும் என்பதில் ஐயமில்லை !

கடாஃபியின் காம இச்சைக்கு பலியாகிய பெண்கள் பலர். இவர்களை தனது பெண் படைப்பிரிவினர் மூலமே பிடித்து வந்து கடாஃபி பாவித்துள்ளார். இவருக்கு என்று பிரத்தியேகமாகச் செயல்பட பெண் படைப் பிரிவு ஒன்று இருந்திருக்கிறது. இதனை புகைப்படத்தில் காணலாம்

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s