இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர் மானத்தை இந்தியா ஆதரிக்கும்


gallerye_143758911_429896.jpg

புதுடில்லி: ஐ.நா.,குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்றும், தமிழக மக்களின் எண்ணம் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் இன்று லோக்சபாவில் பிரதமர் அறிவித்தார். ஜனாதிபதி உரை குறித்த விளக்கவுரையில் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்: இந்த அரசின் வரைவு திட்டமே ஜனாதிபதியின் உரையில் அமைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி 7 சதமாக இருக்கும் என்பது நல்ல செய்தியாகும். உலக அளவில் கடந்த ஆண்டு பொருளாதார ஸ்திரம் பாதிக்கப்பட்டது. இது பெரும் சிரமாக இருந்து வந்துள்ளது. பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். எனவே கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விஷயங்கள் இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ளது. தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் நாட்டிற்கு மிக நல்லது. பயங்கரவாத அமைப்புகளை கண்டு அழிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை நடமுறைக்கு கொண்டுவர முழு நடவடிக்கை எடுக்கப்படும். மாநில முதல்வர்களுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.
திரிவேதி ராஜினாமா ஏற்பு: ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி ராஜினாமா ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. அவர் அமைச்சரவையில் இருந்து செல்வது தமக்கு கவலை தரும் விஷயம். இவரது ராஜினமா கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய ரயில்வே அமைச்சர் நியமிக்கப்படுவார்.
இலங்கை தமிழர் தொடர்பான விவகாரம் என்னிடம் தெரிவிக்கப்ட்டது. இதில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். இந்த உணர்வை நாங்கள் மதிக்கிறோம். மத்திய அரசு முழுக்கவனத்துடன் இதனை பார்த்து வருகிறது. அமெரிக்கா கொண்டு

வரும் தீர்மானத்தை முழுமையாக படிக்கவில்லை. ஆனாலும் குறிக்கோளை நிறைவேற்றும் பட்சத்தில் இருக்குமாயின் இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும். மேலும் தமிழர்களின் அதிகாரப்பகிர்வு குறித்தும் இலங்கையிடம்வலியுறுத்தப்படும். இலங்கை அரசு தமிழர் தேசிய கூட்டணி கட்சியினருடன் பேச்சு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதனை அறிவித்த நேரத்தில் அவையில் இருந்த தமிழக எம்.பி.,க்கள் கரகோஷம் எழுப்பினர்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி வரவேற்பு :பிரதமரின் இந்த அறிவிப்பிற்கு தி.மு.க.,தலைவர் கருணாநிதி வரவற்பு அளித்துள்ளார். முன்னதாக இது தொடர்பாக முழு நிலைக்கு வரவேண்டும் என வலியுறுத்தி வரும் 22 ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார். பிரதமர் அறிவிப்பு வந்த சில மணிதுளிகளில் உண்ணாவிரத போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s