TNTJ வினரின் சூழ்ச்சிக்கும்,வீழ்ச்சிக்கும ் காரணம் என்ன? ஓர் அலசல் ரிப்போர்ட்


II தீமோத்தேயு 3:8 யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள்.

SAN உடன் “குர்ஆன் இறை வேதமா” என்ற தலைப்பில் விவாதிக்க TNTJ வினர் ஏன் பயந்தனர்?

அன்பான நண்பர்களே TNTJ வுடன் சென்னையில் 2012 ஜனவரி மாதம் 28,29 ஆகிய தேதிகளில் “குர்ஆன் இறைவேதமா?” என்ற தலைப்பில் நடைபெற இருந்த விவாதம் காவல் துறையினரால் தடைசெய்யப்பட்டது ஏன்? மற்றும் SAN உடைய கோரிக்கையை ஏற்று நேரடி ஒளிபரப்பை தவிர்த்து வெறும் வீடியோ ஒளிப்பதிவோடு தங்கள் அலுவலகத்திலேயே விவாதம் நடத்துவதற்கு முன்வராமல் TNTJ வினர் பயந்து ஓட காரணம் என்ன? என்ற கேள்விகளை நாம் எழுப்பும் போது, விவாதங்கள் தொடர்பாக இதுவரை நடந்த அனைத்து காரியங்களையும் ஒரு கோர்வையாக நாம் கவனித்து பார்க்கவேண்டியது அவசியமாகிறது.

இரண்டாவது முறை விவாத ஒப்பந்தம் செய்ய ஜூன் 3ம் தேதி TNTJ அலுவலகத்திற்கு சென்ற நாம், கிட்டத்தட்ட 10 மணி நேரங்கள் அவர்களுடன் பேசினோம். விவாதம் ஒவ்வொரு தலைப்பிலும் இரண்டு நாட்கள் நடத்தப்பட வேண்டும் என்று முதலில் அவர்கள் முன்மொழிந்தனர். நம்முடைய சகோதரர்களின் வசதியை முன்னிட்டு ஒருசில மணிநேர கலந்துரையாடலுக்கு பிறகு நாம் அதை ஒத்துக் கொண்டோம்.

அதேநேரம், ஒருவருடைய தலைப்பில் எதிர் தரப்பினரின் புத்தகத்தில் இருந்தும் ஆதாரங்களை எடுத்து வைக்கலாம் என்ற நிபந்தனையையும், இஸ்லாமியர்களின் எந்த புத்தகத்தில் இருந்தும் ஆதாரங்களை நாங்கள் எடுத்து வைப்போம் என்றும் நாம் சொன்னவுடன் அதிர்ந்து போன TNTJ வினர் ஆரம்பத்தில் முடிந்த அளவிற்கு அதை மறுத்தனர். “நாங்கள் இன்று வரை பல ஹதீஸ்களை தள்ளிவிட்டிருக்கிறோம், இனியும் தள்ளுவோம் எனவே நீங்கள் எடுத்து வைக்கும் ஹதீஸ்களின் பட்டியலைத் தாருங்கள், அதிலே சரியானவை எவை என்று நாங்கள் ‘டிக்’ செய்து கொடுக்கிறோம்” என்று அர்த்தமற்ற வாதத்ததை எடுத்துவைத்தார்கள்.

குர்ஆன் வசனங்களுக்கு குர்ஆன் வசனங்களே முரண்படும் போது குர்ஆனுக்கு ஹதீஸ்கள் நிச்சயமாக முரண்படும் என்று நாம் கூறினோம். உடனே அவர்களில் ஒருவர், “நீங்கள் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸைக் காட்டினால் அதையும் நாங்கள் நீக்கி விடுவோம்” என்றார்!!. இதிலிருந்தே இவர்கள் தங்களின் மதப்புத்தகங்களை எந்த அளவுக்கு திருத்தி வைத்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. ஹதீஸ் நீக்கம் என்பது இத்தோடு முடிந்து விடவில்லை நாளைக்கும் தொடரும் என்று சொல்லி தங்கள் கர்வத்தை வெளிச்சம் போட்டு காட்டினார்கள்.

நம்முடைய கிடுக்கி பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் இறுதியாக, “நீங்கள் எந்த இஸ்லாமிய புத்தகங்களை வேண்டுமானாலும் ஆதாரமாக வையுங்கள்” என்று கூறி தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டார்கள். இதுவே இவர்கள் விவாதத்திலிருந்து பின்வாங்கி ஓடியதற்கு மிக முக்கிய காரணமாகும்.

இதற்கு ஆதாரமாக, அவர்கள் தங்கள் இணையதளத்தில் ‘ஒப்பந்த வீடியோ’ என்ற இணைப்பில் கொடுத்திருந்த வீடியோக்களில் குறிப்பிட்ட இந்த வீடியோக்களை கடைசி வரை Upload செய்யவில்லை, பழைய சில வீடியோவையும், சில கட்டுரைகளையும் Upload செய்துவிட்டு குறிப்பிட்ட இந்த வீடியோக்களை மறைத்துள்ளனர். கீழே அவர்களின் இணையதள படங்களை ஆதாரமாக வெளியிட்டு அதோடு, குறிப்பிட்ட அந்த ஆதார புத்தகங்கள் குறித்த ஏறக்குறைய 2 மணி நேர வீடியோக்களையும் வெளியிடுகிறோம்.வீடியோக்கள்

இதிலிருந்தே இவர்கள் எந்த அளவுக்கு அரண்டுபோயிருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. ஆகவே அந்த ஒப்பந்தம் நடைபெற்றதிலிருந்தே இவர்கள் தங்கள் சூழ்ச்சியை ஆரம்பித்து விட்டனர்.
இவர்களின் விவாத ஒழுங்கு குழுவின் பிரதிநிதிகள் மூலம் பார்க்கப்பட்ட ஆடிட்டோரியம் அரசாங்கத்துக்கு சொந்தமானதாகும். “இந்த அரங்கத்தை ஒரு மாதத்திற்கு முன்பு தான் பதிவு செய்ய முடியும், ஆகையால் நாங்கள் அதற்கு ரூ 1000 லஞ்சம் கொடுத்து ‘புக்’ செய்து வைத்துள்ளோம்” என்று அவர்கள் நம்மிடம் சொன்னதை நாம் ஆடியோவில் பதிவு செய்து வைத்திருக்கிறோம்.

அப்படியிருந்தும், பைபிள் இறைவேதம் என்ற தலைப்பிற்கான நாட்களில் மட்டுமே அரங்கம் உள்ளது என்றும் குர்ஆன் இறைவேதம் என்ற தலைப்பிற்கான நாட்களில் அரங்கம் வேறு நிகழ்ச்சிக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி தங்கள் சூழ்ச்சிப் பணியைத் தொடங்கினார்கள். சூழ்ச்சி செய்வதில் அல்லாஹ் மட்டுமல்ல தாங்களும் சிறந்தவர்களே என்பதை நிரூபித்தார்கள்.

விவாத ஒப்பந்தத்தை மீறினார்கள்:-

விவாத ஒப்பந்தத்தில், பிளக்ஸ் போர்டு வைப்பது, வால்போஸ்டர்கள் ஒட்டுவது போன்றவற்றை செய்யக் கூடாது என்று இருதரப்பும் ஒப்பந்தமிட்டபிறகு பல்லாவரத்தில் ஒரு பெரிய பிளக்ஸ் போர்டை வைத்து பிரச்சனையை உண்டுபண்ணினார்கள். அவர்களின் மாநில பொறுப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த பிரச்சினையைப் பற்றி பேசிய போது, “எங்கள் மக்களில் கொஞ்சம் பேர் உணர்ச்சி வசப்பட்டு அப்படி செய்து விட்டனர்” என்றார் மேலும் அந்த பிளக்ஸ் போர்டு பிரச்சினை தொடர்பாக ஒரு சில கிறிஸ்தவர்கள் காவல் துறையை அணுகியிருப்பதாக தங்களுக்கு உளவுத்துறையிடமிருந்து தகவல் வந்திருக்கிறது என்றும் அவர் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய TNTJ வின் மாநில பொறுப்பாளர், தாங்கள் தமிழகத்திலே ஒரு பெரிய அமைப்பு என்றும் காவல் துறையினருக்கு தங்களைப் பற்றி நன்றாகத் தெரியும், ஆகவே எந்த பிரச்சினை வந்தாலும் நாங்கள் அதை கவனித்துக் கொள்கிறோம் என்றும் சொன்னார்கள், கூடவே அந்த பிளக்ஸையும் அகற்றிவிடுவதாகவும் கூறினார்கள். இவர்கள் பேசியவற்றையெல்லாம் நாம் ஆடியோவில் பதிவு செய்து வைத்திருக்கிறோம்.இவற்றை அவர்கள் மறுப்பார்களானால் ஆடியோ பதிவுகள் அனைத்தையும் வெளியிட தயாராக உள்ளோம்.

செய்யப்பட்டிருந்த அந்த விளம்பரம் யாரோ ஒரு சிலரால் எங்கேயோ ஒருப் பகுதியில் செய்யபட்டது அல்ல, பொதுவாக இவர்களுடைய கிளைகள் தாங்களாக எந்த விளம்பரத்தையும் செய்யமாட்டார்கள், விளம்பரம் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்களது தலைமையே முடிவு செய்யும். இதன் அடிப்படையில் அனைத்து கிளைகளும் தலைமையின் அனுமதிப்படியே தமிழகத்தின் பலப் பகுதிகளில் ஒப்பந்தத்தை மீறி பிளக்ஸ் போர்டு வைத்தும் வால் போஸ்டர்கள் ஒட்டியும் தாங்கள் மாபெரும் பொய்யர்கள் என்று தங்களை அடையாளம் காட்டியிருக்கின்றனர்.

அவர்கள் பகிரங்கமாக ஒப்பந்தத்தை மீறினதற்கான ஆதாரம் கீழேஇது வரை TNTJ நடத்திய கிறிஸ்தவ விவாதங்கள்:-

இவர்கள் இதற்கு முன்பு மதுரையில் ஒரு பாஸ்டர் அவர்களோடும், கும்பகோணத்தில் கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் யெகோவா சாட்சி பிரிவினர்களுடனும் விவாதங்கள் என்ற பெயரில் நடத்தியவை அனைத்தும் உண்மையில் விவாதங்களே அல்ல. இவர்கள் பரிசுத்த வேதாகமத்தை ஆபாசமாக இவர்களின் மனோ இச்சைக்கு ஏற்ப காம ரசனை சொட்ட சொட்ட விளக்கும் போது கிறிஸ்தவர்கள் இவர்களின் கீழ்த்தரமான செயல்களை கண்டு செய்வதறியாது திகைப்பதை வீடியோ பதிவு செய்து அதை மற்றவர்களுக்கு கொடுத்து எதையோ சாதித்துவிட்டதைப் போல பெருமையடித்துக் கொள்வார்கள். இறைப்பணியை உண்மையாக செய்ய வேண்டும் என்ற எண்ணமே இவர்களுக்கு கிடையாது, இஸ்லாத்திலே தங்களுக்கு இருக்கும் மற்ற போட்டி அமைப்புகளுக்கு முன் தங்களை உயர்வாக காண்பித்து தாங்கள் சொல்வதே சரி என்று மக்களை முட்டாள்களாக்கி நம்பவைக்க வேண்டும் என்பதே இவர்களது பிரதான நோக்கமாகும்.

முதல் விவாதத்தில் TNTJ விற்கு விழுந்த மரண அடி:-

இந்த TNTJ அமைப்பினர் ரசனை பொங்க ஆபாசமாக வர்ணிக்க அல்லது விமர்சிக்க சிறப்பு பயிற்சி பெற்றவர்களாவர். இவர்கள் தாங்கள் இதுவரை பின்பற்றி வந்த ஹதீஸ்களையே ஆபாசமாக ரசனை சொட்ட சொட்ட வர்ணித்து பிரசங்கிக்கும் திறமை பெற்றவர்கள்.

ஆனால் இவர்களின் சூழ்ச்சியை ஓரளவிற்கு அறிந்த நம்மிடம் (SAN) இவர்களின் ஆபாச விவாத திறமை எதுவும் பலிக்கவில்லை. விவாதத்தின் முதல் நாளாகிய 21 ம் தேதி காலை 10 மணி துவங்கி மாலை 7 மணி வரை ஆபாச ரசனை சொட்ட சொட்ட தங்கள் இச்சைக்கு ஏற்ப பைபிள் வசனங்களுக்கு தாறுமாறாக விளக்கம் கற்பித்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் நாமோ நம்முடைய தரப்பு விளக்கங்களை கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்களுடைய குர்ஆன் மற்றும் ஹதீஸில் உள்ள ஆபாசங்களில் ஒரு சிலதை மட்டும் எடுத்துப் போட்டு அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து நிலைகுலைய வைத்தோம்.

பீஜே அவர்கள் அரண்டுபோக காரணமான “மாதுளம்” கனி ஹதீஸ் :

எதிர் அணியினர் உன்னதப்பாட்டின் பழங்களிலிருந்து ஒரு வித காம அர்த்தம் கற்பித்த போது பதிலுக்கு நம் தரப்பு அவர்களுடைய ஹதீஸையே அவர்களுக்கு சுட்டிக்காட்டினோம். உடனே மற்ற இஸ்லாமியர்களிடம் இவர்கள் காண்பிக்கின்ற வித்தையையே நம்மிடமும் காண்பித்து அரபியில் அர்த்தம் இப்படித்தான் இருக்கிறது என்று சொன்னார்கள். ஆனால் தமிழில் உள்ள மொழி பெயர்ப்பின் அடிப்படையில் இப்படித்தான் உள்ளது என்று நாம் தெளிவு படுத்தியவுடன் அதற்கு ஆதாரம் கேட்டார்கள். சில நிமிடங்களுக்கு பிறகு நாம் ஆதாரத்தை அவர்களுக்கு கொடுத்தோம், ஆனால் நாம் கொடுத்த ஹதீஸ் புகாரியில் இல்லை என்று சொல்லி தங்களுக்கே உரிய பாணியில் மிரட்டல் தொனியில் குற்றம் சாட்ட ஆரம்பித்தனர். ஏதோ நாம் அந்த ஹதீஸில் இட்டுக்கட்டி எழுதியிருப்பதாகவும் அல்லது நாம் இந்த ஹதீஸை வேறு ஏதாவது இணையதளத்திலிருந்து திருடியிருப்போம் அப்படி நாம் திருடிய அந்த இணையதளத்தில் இட்டுக் கட்டியிருப்பார்கள் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசினார்கள். ஆனால் ரஹ்மத் டிரஸட் பக்கம் 321 ல் இருக்கும் அந்த ஹதீஸ் நாம் சொல்லிய படி தான் இருக்கிறது என்பதை முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்று மறைக்க நினைத்தனர். மேலும் தங்கள் ஆன்லைன்பீஜே இணையதளத்திலிருந்திருந்தான் நாம் இந்த ஹதீஸை எடுத்திருக்கிறோம் என்பது கூட தெரியமால் விமர்சனம் செய்து தங்களுடைய இணையதளம் தான் கள்ள போதனைகளின் இணையதள வரிசையில் முதலிடத்தில் இருக்கிறது என்று உறுதிபடுத்தியிருக்கின்றனர்.


onlinepj link: http://onlinepj.com/sahih_muslim/athiyayam_44/


‘இதுதான் பைபிள்’ புத்தகத்தின் பொய்யும் புரட்டும்:

‘இது தான் பைபிள்’ என்ற தலைப்பில் இவர்களின் ஆபாச கற்பனை நிரம்ப எழுதப்பட்டு 9 வது பதிப்பு வரை வெளியிடப்பட்டிருந்த புத்தகத்தில் இருக்கும் பொய் பித்தலாட்டத்தை எடுத்துக் காட்டி இவர்களின் முகத்திரையை கிழித்த போது இவர்கள் வாயடைத்துப் போனதை விவரிக்க முடியாது.

மூலப்பிரதி வாதத்தை எழுப்பி மூக்குடைந்து போனார்கள்:

இவர்களின் அனைத்து ஆபாச ஆயுதங்களும் முனை மழுங்கி போனபடியால் பைபிளின் மூலப்பிரதி வாதத்தை எழுப்பினார்கள். அப்போது, மூலப்பிரதிகளில் இருக்கும் பிரச்சினைக்கு நம்முடைய சகோதரர்கள் மிக நேர்த்தியாக அறிவுப்பூர்வமான விளக்கத்தை கொடுத்தார்கள். பைபிளுடைய சில மூலப்பிரதிகள் என்று சில துண்டு மூலப்பிரதிகளை LCD யில் போட்டு காட்டி ஜம்பம் அடித்த போது நம்முடைய சகோதரர்கள் ஹஸரத் முகமது அவர்கள் காலத்தில் எழுதப்பட்டதைப் போன்ற மூலப்பிரதி என்று குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டிருந்த ஒரு ஒட்டக ‘லெக் பீஸை’ திரையிட்டு காண்பித்த போது நொந்து போனார்கள்.

மேலும் எங்களுக்கு இருக்கும் இத்தனை ஆயிரம் மூலப்பிரதிகள் எங்களை ஒரிஜினலான அந்த ஆதாரத்திற்கு கொண்டு செல்லுகிறது ஆனால் உங்கள் ஒரிஜினல் குர்ஆனில் என்ன இருந்தது என்றே தெரியாத அளவிற்கு ஹஸரத் உத்மான் அவர்கள் அந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த அனைத்து குர்ஆன் பிரதிகளையும் சேகரித்து எரித்துப் போட்டார் என்று சொன்னபோது மூலப்பிரதி பிரச்சனையை எழுப்பிய TNTJ குழுவினரின் மூக்குடைபட்டது.

TNTJ வினருக்கு குர்ஆனை புரிய வைத்த SAN

பிஜே அவர்கள் குர்ஆன் மொழிபெயர்ப்பில் ”இறை வேதத்தில் கைவரிசை காட்டினர் – 2:79, 2:159, 2:174, 3:78, 3:187, 4:46, 5:13, 5:41”என்று விளக்கம் அளித்து இருந்தார்.பரிசுத்த வேதாகமம் குறித்து குர்-ஆன் கூறுவதைக் குறித்த போதனையில்
விவாதத்திற்கு முன்பு, பரிசுத்த வேதாகமம் திருத்தப்பட்டது என்று குர்-ஆன் போதிக்கிறது என PJ தன் குர்ஆன் மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்(குர்ஆன் விரிவுரையில் விளக்க எண் 4). அவர் எழுதியதாவது: “முந்தைய வேதங்களில் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிற குர்-ஆன் பல இடங்களில், “ அந்த புத்தகங்களில் மனிதக் கருத்துக்கள் சேர்க்கப்பட்டு, மாற்றப்பட்டு, மறைக்கப்பட்டு, திருத்தப்பட்டு இருக்கின்றன” என்றும் குறிப்பிடுகிறது (பின்வரும் குர்-ஆன் வசனங்களைப் பார்க்க, 2:75, 79, 3:78, 4:46, 5:13, 41).”

நீங்கள் பின்வரும் இணைப்பில் அதைக் (ஆங்கிலத்தில்) காணலாம், அவர்கள் மாற்றுவதற்கு முன்பு பாருங்கள்:http://onlinepj.com/quran-thafseer-in-english/4-previous-revelations

தமிழ்: http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/4-munnar-arulapattathu/

ஆனால், அந்த குர்-ஆன் வசனங்கள் அனைத்திற்கும் உள்ள அர்தத்தை SAN விளக்கி, PJ வின் தவறான புரிந்து கொள்ளுதலுக்கு மறுப்பு கூறி, அனேக குர்-ஆன் வசனங்களைக் காண்பித்து பரிசுத்த வேதாகம் குறித்து குர்-ஆன் கூறுவதைப் பற்றி PJ அவர்களுக்கு விளக்கியவுடன், ஹசரத் முகமது அவர்கள் காலத்துக்கு பிறகே வேதாகமம் திருத்தப்பட்டது என்று கூறி மழுப்பலான வாதத்தை வைத்தனர்.

தவறான ஆபாச வர்ணனைக்கு ஓர் உதாரணம்:

மத்தேயு 19:29 என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்

என்ற வசனத்தை எடுத்துக்கொண்டு இதில் தகப்பனை விட்டவர்களுக்கு நூறு தகப்பனை இயேசு தருவாராம்.உங்கள் அம்மாவை கேவலப்படுத்துகிறார் இயேசு என்று சொல்லி தங்களின் ஆபாச திறமையை நிரூபித்தனர்.

ஆனால் சலித்துப்போகாத நம் சகோதரர்கள் குர்ஆன் 33:6 ஹசரத் முகமது அவர்களின் மனைவிகள் அனைத்து முஸ்லீம்களுக்கும் தாய் என்று அல்லாஹ் சொன்ன வசனத்துக்கு TNTJ குழுவினர் பைபிள் வசனத்துக்கு கொடுத்த விளக்கத்தை கொடுக்க முடியுமா? அப்படி கொடுத்தால் ஹசரத் முகமது அவர்களின் மனைவிகளை படு கேவலத்துக்கு ஆளாக்கி விடுவீர்களே? என்று கேட்டவுடன் இஸ்லாமிய பார்வையாளர்கள் தலையில் கைவைத்துவிட்டார்கள்.TNTJ வினரின் இந்த ஆபாச விளக்கம் அவர்கள் குர்ஆனை எங்கு கொண்டு போய்விடும் என்ற கேள்வி அவர்கள் உள்ளத்தில் உருவாக்கியிருக்கும்.

 கடைசி ஆயுதம் விஷம்:

தங்களின் ஆபாச வர்ணனைகளும் மூலப்பிரதி வாதங்களும் புஸ்வானமாகிப் போனதுமட்டுமல்லாமல் தங்கள் நிலையையே மாற்றிக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டவுடன், என்ன செய்வது தெரியாமல் திணறினவர்கள் கடைசி ஆயுதமாக விஷப் பாட்டிலை எடுத்து, மாற்கு 16 ஆம் அதிகாரத்தில் விசுவாசிக்கிறவர்கள் விஷத்தை உட்கொண்டாலும் ஒன்றும் ஆகாது என்றிருக்கிறது எனவே நீங்கள் இந்த விஷத்தை உட்கொண்டு காட்டுங்கள் என்று விஷ பாட்டிலை நீட்டினார்கள். கிறிஸ்தவர்கள் அப்படியே திக்குமுக்காடிப் போய் விடுவார்கள் என்று கற்பனை கோட்டை கட்டியிருந்தனர் ஆனால் நாம் சிரித்துக் கொண்டே விஷத்தை வாங்கி நமக்கு முன் வைத்துக் கொண்டு அதற்கு விளக்கம் கொடுத்தோம். தீர்க்கதரிசிகள் யாரும் தேவனை பரீட்சை பார்க்க வில்லை என்றும் தேவனை பரீட்சை பார்க்கும் படி சாத்தான் தான் ஏவியிருக்கிறான் என்றும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சாத்தானுக்கு சொன்ன அதே பதிலைத் தான் நாங்கள் இப்போது உங்களுக்கு சொல்லுகிறோம் என்று நம்முடைய சகோதரர்கள் சொன்ன போது எதிரணியின் முகத்தில் பெருத்த ஏமாற்றம் வெளிப்பட்டது.

இத்தோடு நாம் விடவில்லை ஹஸரத் முகமது அவர்கள் சொன்ன ஆதாரப் பூர்வ ஹதீஸிலிருந்து, ஒற்றைப் படையில் அதாவது 1,3,5,7,9… என்ற கணக்கில் பேரீச்சை பழங்களை சாப்பிட்டால் விஷமுறிவு ஏற்படும் என்றும், அதை அவர் ஒரு மருந்தாக சொல்லியிருக்கிறதையும் சுட்டிக் காட்டி அந்த விஷப்பாட்டிலையும் நாம் கொண்டு போயிருந்த பேரீச்சை பழங்களையும் அவர்களுக்கு கொடுத்த போது கர்த்தர் அவர்களுக்கு வெட்கத்தை ஆடையாக அணிவித்தது போலிருந்தது.
எல்லா விவாதங்களிலும் செய்வதை பார்த்து காப்பி அடித்து இதை செய்தோம், நீங்கள் சுதாரித்து விட்டீர்கள் என்கிற அர்த்தத்தில் அசடு வழிந்து பதில் கொடுத்தனர்.

விவாதத்தின் இறுதிப்பகுதியில் கிறிஸ்தவ பார்வையாளர்கள் குறைவு:

விவாதத்தின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக் கிழமை இரவு 9.20 மணிக்கு முடிக்கப்படவேண்டிய விவாதம் தாமதமாக தொடங்கப்பட்ட காரணத்தினால் நேரத்தை அதிகரித்து இரவு 10.20 மணிக்கு முடிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த நேரம் மாற்றத்தை சரியாக அறிந்திராத கிறிஸ்தவ பார்வையாளர்கள் தங்கள் வாகன வசதியை முன்னிட்டு சற்று முன்பதாக கடந்து போயினர். மேலும் கிறிஸ்தவ பார்வையாளர்கள் அனைவரும் பல சபைகளைச் சேர்ந்த விசுவாசிகள் என்பதையும் அவர்கள் சாக்ஷி அமைப்பின் ஒட்டுமொத்த அங்கத்தினர் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதே நேரம் TNTJ தரப்பு பார்வையாளர்களாக வந்திருந்த பெரும்பான்மையானோர் TNTJ வின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களாக இருந்தனர். அப்படியிருக்கும் போது அவர்கள் எப்படி எழும்பிப் போக முடியும்?

விவாதத்தின் இறுதி அமர்வில் பேசிய TNTJ வினர் “உங்கள் தரப்பில் 85 பார்வையாளர்கள் புறப்பட்டு போய்விட்டனர் எங்கள் தரப்பு பார்வையாளர்கள் அனைவரும் அப்படியே உள்ளனர், இதிலிருந்தே உங்கள் பைபிள் இறைவேதம் இல்லை என்று நிரூபணமாகிறது” என்று குழந்தைத் தனமாக பேசியது விவாதத்தின் உச்சகட்ட காமெடியாக இருந்தது.

விவாதத்தில் TNTJ வினர் கற்றுக் கொண்ட பாடம்:-

1. மற்ற இஸ்லாமியர்களிடம் எடுபட்ட ஹதீஸ் நீக்கும் நாடகம் கிறிஸ்தவர்களிடம் எடுபடாது.

2. இனி இந்த ஆபாச வர்ணனைகள் கிறிஸ்தவர்களை அசைக்காது.

3. நீர்த்துபோன இந்த காரணங்களை எல்லாம் வைத்துக் கொண்டு குரானை இறைவனுடைய வார்த்தை என்று நிரூபிக்க முடியாது.

4. சொல்லொன்றும் எழுத்தொன்றுமாக இத்தனை காலம் திறமையாக தாங்கள் மறைத்து வைத்திருந்து பொய்மூட்டைகளை எல்லாம் கிறிஸ்தவர்கள் அம்பலமாக்கிவிட்டனர்.

5. இத்தனை காலம் எத்தனையோ இஸ்லாமிய அமைப்புகளை மட்டம் தட்டி மக்களை ஏமாற்றியது போல கிறிஸ்தவர்களை ஏமாற்ற முடியாது என்று உணர்ந்து கொண்ட TNTJ வினர் அல்லாஹ் வைப் போலவே தாங்களும் சூழ்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள்! எப்படியென்றால், காவல் துறையினரிடத்தில் தங்களுக்கு இருக்கும் ஒத்துழைப்பை பயன்படுத்தி விவாதத்தை ரத்து செய்வது, தந்திரமாக கிறிஸ்தவர்களை தங்கள் தலைமையகத்துக்கு அழைத்து விவாதம் நடத்தி அதை நேரடி ஒளிபரப்பு கொடுத்து கிறிஸ்தவர்கள் சட்டத்திற்கு புறம்பாக இங்கு வந்து பிரச்சினை செய்கிறார்கள் என்று நாடகமாடி கிறிஸ்தவர்களை சிக்க வைப்பது TNTJ வினரின் சூழ்ச்சியாகும்.

விவாதத்தை ரத்து செய்து தங்களுடைய ஒரு முயற்சியில் அவர்கள் வெற்றியடைந்த போதும் சட்ட ரீதியான பிரச்சினையில் கிறிஸ்தவர்களை சிக்க வைக்க வேண்டும் என்ற தங்களுடைய மற்றொரு சூழ்ச்சியில் ஏமாற்றமடைந்தனர். கீழே விழுந்தபிறகும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்ட வேண்டுமாம்! எனவே தான் நேரடி ஒளிபரப்பின்றி விவாதிக்க சம்மதிக்கும் படி நாம் கேட்ட போதும் அதை ஒத்துக் கொள்ளாத TNTJ வினர் SAN அணியினர் இல்லாமலேயே முழுநாள் விவாதம் என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள். அதிலும் கூட இரண்டு நாள் தாக்குபிடிக்க முடியாமல் 28 ம் தேதியான சனிக்கிழமையோடேயே விவாத கடையை மூடிவிட்டார்கள்!. இவர்களின் எல்லா பொய் முகங்களும் மக்களுக்கு வெளிப்பட்டு வருகிறது.கர்த்தருக்கே மகிமை அல்லேலூயா!.

SOURCE:IEMTINDIA.COM

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s