Daily Archives: பிப்ரவரி 1, 2012

சாக்‌ஷி குழு Vs TNTJ குழுவினருடன் ”பைபிள் இறை வேதமா?” என்ற தலைப்பில் நடந்த விவாத வீடியோக்க ள் – PJ தோற்று ஓடினார்

PJ அவர்களால் உண்மையான விவாதத்தில் ஜெயிக்க முடியவில்லை. ஆகவே இரண்டாவது விவாதத்தை காவல் துறையினர் தடை செய்த போது, PJ அவர்கள் இணையதளத்தில் கண்டிப்பாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, சாக்‌ஷி குழுவினரின் பிரதிநிதிகள் இல்லாமலேயே தற்போது “விவாதம்” (யாரோடு?) செய்து கொண்டிருக்கிறார். சாக்‌ஷி குழுவினரின் பிரதிநிதிகள் இல்லாமல் இருப்பதுதான், சாக்‌ஷி குழுவினருடன் விவாதத்தில் PJ அவர்கள் ஜெயிப்பதற்கான ஒரே வழி ஆகும் :) . இக்காரணத்தினாலேயே சாக்‌ஷி குழுவினர் முன்வைத்தை நியாயமான ஆலோசனைகளைக் கூட நிராகரித்துவிட்டனர். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்புகளில் விவாத வீடியோக்களைப் பார்க்கும்போது PJ அவர்களின் பரிதாபமான நிலையை அறிந்து கொள்வீர்கள்.

source:http://iemtindia.com/?p=194

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சவூதிக்கு வேலைக்கு சென்ற இந்திய பெண்கள் சிறைபிடிப்பு: கட்டாயப்படுத்தி விபச்சாரம்

aryavathi.jpg

டெல்லி: வேலை வாங்கித் தருகிறேன் என்ற பெயரில் சவூதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 56க்கும் மேற்பட்ட இந்திய பெண்கள் அங்கு சிறைபிடிக்கப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.

கடந்த 2 மாதத்தில் டார்ஜிலிங், கலிம்பாங் மற்றும் நேபாலைச் சேர்ந்த 56க்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு ஏஜென்சிகள் மூலம் சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றனர். சவூதிக்கு சென்ற அவர்கள் அங்கு சிறைபிடிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சம்பாதிப்பவர்கள் அந்த அப்பாவி பெண்களின் பாஸ்போர்டுகளைப் பறித்து வைத்துள்ளனர்.

இதனால் அந்த பெண்கள் வேறு வழியின்றி தினம், தினம் நொந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் டார்ஜிலிங்கைச் சேர்ந்த நிஷ் ராய் என்ற பெண் மட்டும் எப்படியோ தனது பாஸ்போர்டை எடுத்துக் கொண்டு இந்தியாவுக்கு தப்பியோடி வந்துவிட்டார்.

இங்கு வந்தவுடன் தனக்கு நேர்ந்த கொடூரத்தை டார்ஜிலிங் போலீசில் தெரிவித்தார். மேலும் சவூதியில் இது போன்று 56க்கும் மேற்பட்ட இந்திய பெண்கள் சிக்கித் தவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து டார்ஜிலிங் போலீசார் கூறியதாவது,

மேற்கு வங்க அரசு மற்றும் சிஐடி போலீசார் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கவிருக்கின்றனர். சவூதியில் சிக்கியுள்ள பெண்களின் குடும்பத்தாரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக 2 ஏஜென்சி நிபுணர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.

source:tamil.oneindia

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இணையத்தில் ‘செக்ஸ்’ தேடலில் பாகிஸ்தான் மு தலிடம்.

இணையத்தளத்தில் ‘செக்ஸ்’ குறித்து அதிகம் தேடுதலை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன. கூகுள் இணையத்தளத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்கள் தொடர்பான தரவுகளின்படி, செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது. இந்தியா இரண்டாமிடத்திலும் வியட்நாம் மூன்றாமிடத்திலும் எகிப்து நான்காமிடத்திலும் இந்தோனேஷியா ஐந்தாமிடத்திலும் உள்ளதாக ‘கூகுள் ட்ரென்ட்ஸ்’ தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

இதேவேளை செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட 10 நகரங்களில் 8 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தானின் லாகூரும் வியட்நாமின் ஹனோயும் முதல் 10 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவை சாராத நகரங்களாகும். இவ்வருடத்தில் மாத்திரமல்லாது கூகுள் தேடல் தளத்தில் இதுவரைக்காலமும் அதிக செக்ஸ் தேடலை மேற்கொண்டோர் உள்ள நாடுகளின் பட்டியலும் பாகிஸ்தான் தான் முதலிடத்தில் உள்ளது. இதில் இந்தியாவை 3 ஆம் இடத்திற்கு தள்ளிவிட்டு வியட்நாம் இரண்டாமிடத்தில் உள்ளது.

’20 மில்லியன் இணைத்தள பாவனையாளர்களைக் கொண்டுள்ள நிலையில் அந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவரும் நிலையில், சகல வருடங்களுக்குமான உலகளாவிய ‘செக்ஸ் தேடல் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளது’ என பாகிஸ்தானின் த எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை பெப்ரவரி, ஓகஸ்ட் மாதம் தவிர்ந்த ஏனைய சகல மாதங்களிலும், செக்ஸ் என்ற வார்த்தையை தேடியவர்களை அதிகம் கொண்ட உலகின் முதல் 10 நகரங்களின் பட்டியலில் பாகிஸ்தானின் லாகூர் நகரம் இடம்பெற்றுள்ளது. பெப்ரவரி, ஓகஸ்ட் மாதங்களுக்கான பட்டியலில் எந்தவொரு பாகிஸ்தான் நகரமும் இடம்பெறவில்லை என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த வருடத்தில் செக்ஸ் என்ற வார்த்தையை தேடியவர்களை அதிகம் கொண்ட நகரங்களின் பட்டியலில் உலகளவில் இந்தியாவின் லக்னோ முதலிடத்தையும் கொல்கத்தா இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன. சென்னை உலகளவில் 7 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized