Monthly Archives: ஒக்ரோபர் 2011

. “அஷ்வத் பயங்கரமான ஆளு… அவனை முந்தானையில ் முடிஞ்சிக்கோ…’

பட்டாம்பூச்சிகளின் கதை! (8)
E_1311232359.jpeg

அன்பு வாசகர்களே… "என்னடா­… எப்பப் பார்த்தாலும், பட்டாம்பூச்சிகளின் கதையில் ஒரே சோக கீதம்தான் வாசிக்கப்படுகிறது. கொஞ்சமும் இனிய கீதம் வாசிக்கப் படுவதில்லையே…’ என, சிலர் எழுதியிருந்தீர்கள். உங்களுக்காகவே நான் சந்தித்த, இந்த வெற்றி ஜோடியின் வாழ்க்கையை எழுதுகிறேன்…
நம் கதாநாயகன், கோடிகளில் புரளும் கோடீஸ்வரனின் மகன். இளவட்டம்; அபார மூளை. தங்கள் குடும்ப தொழிலை, தன்னுடைய இளம் மூளையை பயன்படுத்தி, மிக, மிக உயரத்துக்கு கொண்டு வந்து விட்டார். இளம் வயதிலேயே அளவுக்கு மிஞ்சிய பணம், புகழ். பிறகென்ன, நட்பு வட்டாரம் சேர கேட்கவா வேண்டும்; ஏகப்பட்ட நண்பர்கள்.
ஹீரோவின் பெயர் அஷ்வத்; சரியான ஜாலி பேர்வழி. கிண்டல், சுண்டல் என, வாழ்க்கை ஜாலியாகப் போக, ஏகப்பட்ட பெண் தோழியர்.
அரசல் புரசலாக மகனின் செய்தி காதில் விழ, உஷாரானார் அப்பா. "மகனைச் சுற்றியுள்ள பெண்கள், அவனை மடக்கிப் போட்டுட்டா என்ன செய்வது…’ என பயந்த அப்பா, சாதாரணமான மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த, அப்பாவி பெண்ணை பார்த்து, மகனுக்கு முடிவு செய்தார். "மிஸ் யுனிவர்ஸ்’ போன்ற பெண்களுடன் சுற்றித் திரிந்த அஷ்வத், அப்பா சொல்லை தட்டாமல், அப்பிராணி பெண்ணை மணந்தார். இதுதான் நம் ஹீரோவின் சாதனை.
பிறகென்ன, வழக்கம் போல் ஜாலி லைப்தான். "அஷ்வத் பயங்கரமான ஆளு… அவனை முந்தானையில் முடிஞ்சிக்கோ…’ என, புகுந்த வீட்டு சமையல்காரி முதல், அனைவருமே ஹீரோயினை எச்சரித்தனர்.
விழித்தாள் ஹீரோயின்; வயிற்றை பயம் சுருட்டி எடுத்தது. மிகவும் ஒழுக்கமாக வளர்க்கப்பட்ட ஹீரோயின், பூஜை, புனஸ்காரம், மாமியார், மாமனார், நாத்தனாரை அட்ஜஸ்ட் செய்து போவதில், கில்லாடியாக இருந்தாள்.
அஷ்வத் வெளியில் சுற்றினாலும், அன்பான, எதிர்த்துப் பேசாத, பிரச்னை இல்லாத மனைவியாக இருந்ததால், அவளை மிகவும் நேசிக்க ஆரம்பித்தான்.
"டேய் அஷ்வத்… உன் மனைவி அப்பாவியா இருப்பதால், நீ எங்கு போனாலும், வந்தாலும் கண்டுக்க மாட்றாங்க. நீ கொடுத்து வச்சவண்டா… எங்காளுங்கல பாரு… விடிந்ததும் லேடீஸ் கிளப், ஷாப்பிங், மாதர் சங்கம் என சுத்துறாளுக… பிள்ளைகளை ஒழுங்கா பாக்க மாட்றாளுங்க… பத்தாததற்கு அப்பப்ப போன் போட்டு, "நீ எங்க இருக்க… எவ கூட சுத்துற…’ என, பாடாய் படுத்துறாளுக. இவள்களை வச்சிக்கிட்டு ஒருத்திய கூட, "சைட்’ அடிக்க முடியல மச்சான்!’ என, நண்பர்கள் புலம்பி தீர்த்தனர்.
இதற்கிடையில் அஷ்வத்துக்கு, இரண்டு குழந்தைகள் பிறந்தன. அப்பவும் குடும்பப் பொறுப்பில்லாமல், பிசினசில் மட்டும் சிகரத்தை தொட்டார் அஷ்வத். நம் ஹீரோயினின் தோழிகள், "என்னடீ… உன் கணவர் அப்படி, இப்படின்னு பேசிக்கிறாங்களே… உனக்கு கோபம் வரல… நீ சண்டை போட மாட்டியா? எப்படி இதை எல்லாம் தாங்கிக்கிற…’ என்றனர்.
"என்ன செய்ய சொல்ற… எனக்கு எந்த விஷயமும் தெரியாது என உறுதியா நம்புறார். என் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை வச்சிருக்கிறார். அதை நான் கெடுத்துக்க விரும்பல… அந்த பயம் அவருக்கு இருக்கட்டும். இதையும் மீறி நான் சண்டை போட்டால் என்னாகும்? " ஆமாம்… வச்சிருக்கேன்…’ன்னு, "முதல் மரியாதை’ சிவாஜி ஸ்டைலில் சொல்லிட்டா என்ன செய்வது? என் பிள்ளைகளின் வாழ்க்கை, எதிர்காலம் எல்லாமே, எங்களுடைய சண்டையால் பாதிக்கப்படும். புகுந்த வீட்டில் என்ன பிரச்னை என்றாலும், அதை வெளியே தெரியாமல், மூடி மறைத்து, குடும்ப மானத்தை காப்பாற்ற வேண்டியது, ஒரு பெண்ணின் கடமை அல்லவா… என்னுடைய ஆத்திரத்தால், என் வாழ்க்கையை நானே அழித்துக் கொள்ள விரும்பவில்லை. என் பிள்ளைகளுக்காக, நான் இந்த தியாகத்தை செய்வதால், இன்று, எங்கள் குடும்ப வாழ்க்கை அமைதியாக போய்கிட்டிருக்கு…’ என்றாள்.
"ஏய்… நீயா அப்பாவிப் பெண். கில்லாடி குயின்டி. எப்படி கில்லியா பேசுறா பாரு… நாமளும் தான் இருக்கோமே… எதுக்கெடுத்தாலும் கணவனை சந்தேகப்பட்டு, இல்லாததையும் இருப்பதாக கற்பனை செய்து, சண்டை போட்டு திரிகிறோம்… இது, எங்களுக்கும் ஒரு பாடம் டீ!’ என்றனர் மேல்தட்டு மங்கையர்.
அஷ்வத்தின் குணமறிந்து, மிகவும் பக்குவமாக, அன்பாக நடந்து கொண்டதால், இன்று அஷ்வத்தும், "மை ஒய்ப்… மை ஒய்ப்…’ என, விழுந்து கிடக்கிறான். மனைவிக்கு மசாஜ் பண்ணுவதென்ன… பணத்தையும், அன்பையும் கொட்டுவதென்ன என, ஆளே மாறி போயிட்டான்.
நண்பர்கள் எல்லாம் ஆச்சரியப்படுவது ஒருபக்கம் இருக்க, "நம்ப மருமகள் எத்தனை சமத்து… எத்தனை நல்லவள்!’ என, குடும்பமே, தலையில் வைத்து கொண்டாடுகிறது. இன்று இவர்கள் மிகவும், "சக்சஸ்புல் ஜோடி!’
ஹீரோயின், தன் பிள்ளைகளையும், சில கோடீஸ்வர வீட்டு பிள்ளைகளைப் போல, தறுதலைகளாக வளர்க்காமல், நல்ல ஒழுக்கம், பக்தி நிறைந்த, நடுத்தர வீட்டு குழந்தைகளைப் போல் வளர்த்துள்ளது தான், "ஹை-லைட்’டான விஷயமே!
பாருங்கள்… சின்ன வயதிலேயே தன் மகனுக்கு மிடில் கிளாஸ் பெண்ணை தேர்ந்தெடுத்த அப்பா படுகெட்டி என்றால், அப்பாவின் பேச்சை தட்டாமல், "சுமார்’ பெண்ணையும், மனமுவந்து ஏற்றுக் கொண்ட நம் ஹீரோ அஷ்வத், பயங்கரமான கெட்டிக்காரனாகத் தெரிகிறார் அல்லவா…
அதிலும், ஏணி வைத்தாலும் எட்ட முடியாத கோடீஸ்வர குடும்பத்தில் மருமகளாக நுழைந்து, கணவரின் சறுக்கல்களை கண்டும், காணாமலும், தன் பிள்ளைகளுக்காக தியாகம் செய்து, கணவரையும் தன் கைக்குள் போட்டுக் கொண்ட நம் ஹீரோயினுக்கு, "சாதனைப் பெண்மணி’ பட்டம் கொடுக்கலாம் தானே!
புகுந்த வீட்டில் நுழைய இருக்கும் பட்டாம்பூச்சிகளே… நீங்களும், ஏன் இந்த வெற்றி பார்முலாவை கடைபிடிக்கக் கூடாது?
— தொடரும்.

ஜெபராணி ஐசக் source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

புலம்பெயர் தேசங்களில் தோற்கடிக்கப்படும ா மாவீரர் நினைவு தினம் ?

சொலமன் மன்னரின் அவையில் ஒரு விசித்திரமான வழக்கு விசாரணைக்கு வந்தது. ஒரு பிள்ளைக்கு உரிமை கோரி இரண்டு தாய்மார்கள் அரசனிடம் நீதி கோரினார்கள். சொலமன் மன்னருக்கோ ஆச்சரியம். ஒரே பிள்ளைக்கு இரண்டு அம்மாக்கள் எப்படி இருக்க முடியும்? என்று அரசவை குழப்பமுற்றது.

அந்தப் பிள்ளையை நானே பெற்றேன் என்று ஒரு தாயும், இல்லை… இல்லை, அந்தப் பிள்ளைக்கு நானேதான் தாய் என்று மற்றவரும் அடம் பிடித்தனர். முடிவாக, சொலமன் மன்னன் ஒரு தீர்ப்பை வழங்கினான். அந்தப் பிள்ளையை இரு கூறாக்கி, இருவரிடமும் பகிர்ந்து கொடுக்கக் கட்டளையிட்டான்.

போர் வீரன் ஒருவன் வாளை உருவி, அந்தப் பிள்ளையை இரு கூறாகப் பிளப்பதற்குத் தயாரானான். உடனே, ஒரு தாய் மன்னனின் காலில் வீழ்ந்து கதறினாள். ‘மன்னா! அது என் பிள்ளையே இல்லை… அதனை அவளிடமே கொடுத்து விடுங்கள்’ என்று கதறினாள். மற்றப் பெண்ணோ, மன்னனின் கட்டளையை நிறைவேற்றப்போகும் போர் வீரனின் கையில் பயத்துடன் வீறிடும் குழந்தையையும் பழிவாங்கும் நிறைவுடன் சிரித்தாள்.

மன்னன் எழுந்தான், வீரனைத் தடுத்து நிறுத்தினான். தன் காலில் வீழ்ந்து கதறிய அந்தத் தாயை ஆதரவுடன் தூக்கி நிறுத்தினான். பிள்ளையை அவளிடமே கொடுக்கும்படி கட்டளையிட்டதுடன், மற்றப் பெண்ணைச் சிறையில் அடைக்கும்படி கட்டளையிட்டான்.

இது இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றுச் சம்பவம். அதே போன்றதொரு வரலாற்றுச் சம்பவத்தைப் புலம்பெயர் தமிழர்கள் எதிர்கொண்டுள்ளார்கள். அங்கே, போர் வீரன் கைகளில் அலறிய குழந்தையின் நிலையில்தான் எங்கள் தேசத்தின் ஆன்மாக்களின் மாவீரர் தினம் இன்னொரு கொலைக் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கே, அந்தப் பிள்ளைக்கு உரிமை கோரிய இரண்டு தாய்மாரின் நிலையில், இங்கே இரண்டு அணிகள் மாவீரர் தினத்துக்கு உரிமை கோரி, மக்கள் முன் தங்கள் பக்க நியாயங்களைத் தெரிவித்து வருகின்றார்கள். மக்கள் மன்றத்தில் தீர்ப்புக்கான நாள் நெருங்கி வருகின்றது. பெற்றவள் ஜெயிப்பாளா? மற்றவள் ஜெயிப்பாளா? நீதி வெல்லுமா? அநீதி வெல்லுமா? என்று தமிழீழம் மௌனமாக அழுகின்றது.

முள்ளிவாய்க்கால் வரையிலும், அதற்குப் பின்னர் நடைபெற்ற இரு மாவீரர் தினங்களையும் நாங்களே எழுச்சியுடன் நடாத்தினோம். எங்கள் மீது தவறு இருந்தால் தண்டியுங்கள். அதற்காக மாவீரர்களையும், தமிழ் மக்களையும், தேசியத் தலைவர் அவர்களையும் தண்டித்து விடாதீர்கள் என்று விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்கள் கண்ணீர் விட்டுக் கதறுகின்றன.
மறு பக்கத்தில், மாவீரர் தினம் எங்களுக்கே உரியது. நாங்கள்தான் அதை நடாத்துவோம் என்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் கே.பி.யினால் உருவாக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தலைமைச் செயலகம் என்ற இரு அணிகளின் கூட்டு உரிமை கோருகின்றது.

அதற்காக, அவர்கள் சில குற்றச்சாட்டுக்களையும் தமிழ்த் தேசிய தளங்கள் மீது சுமத்துகின்றார்கள். மறு பக்கத்தில், தமிழ்த் தேசியத் தளம் சார்ந்தவர்கள், தேசியத் தலைவரின் அங்கீகாரத்துடனும், அனுமதியுடனும் இவ்வளவு காலமும் மாவீரர் தின நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இதில், குற்றம் காண்பிப்பவர்கள் தேசியத் தலைவர் மீதே குற்றப் பத்திரிகை வாசிப்பது போன்றது என்கிறார்கள். குழுவாக இணைந்து நின்று தமிழ்த் தேசிய தளங்கள்மீது குற்றப்பத்திரிகை வாசிப்பவர்களில் பலர், கடந்த 2010 மாவீரர் தினம் வரையும், அதற்குப் பின்னரும் மாவீரர் தின நிகழ்வு நடைபெற்ற விதம் குறித்தோ, அதில் மாற்றம் தேவை என்பது குறித்தோ தமிழ்த் தேசிய தளங்களுடனோ, அல்லது மக்களுடனோ எந்தக் கருத்துப் பகிர்வும் நடாத்தவில்லை. இவர்கள், தற்போது உள் நோக்கத்தோடும், பின்புல அறிவுறுத்தலுடனும் மாவீரர் தினத்தைச் சிதைப்பதற்கும், மக்களைப் பிளவு படுத்துவதற்கும் முயற்சி செய்கின்றார்கள் என்று மக்கள் மத்தியில் பரவலாகக் கேட்பவர்களுக்கு இவர்கள் எந்தப் பதிலும் சொல்வதாக இல்லை.

மாவீரர் தினம் நடைபெறும் விதம் குறித்த கருத்துப் பகிர்வு உள் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு, அதில் மாற்றங்கள் தேவையானால் ஜனநாயக முறைப்படி தீர்மானங்களை முன்னெடுத்திருக்க வேண்டும். மாறாக, மாவீரர் தினத்தை நாங்கள்தான் நடத்துவோம். மக்களுக்குக் கணக்குக் காட்டுவோம் என்று கூறுபவர்கள், இந்த வருட பிற்பகுதியில் தாங்கள் நடாத்திய சில விழாக்களின் கணக்குகளை எதற்காக மக்கள் முன் வைக்கவில்லை என்ற கேள்விக்கும் பதில் தரத் தயாராக இல்லை. பிரான்சில் மட்டும், இவர்களால் நடாத்தப்பட்ட ‘தமிழர் விளையாட்டு விழா’வில் ஒரு இலட்சம் ஈரோ வரை கிடைத்ததாக இவர்களே தெரிவித்திருந்தார்கள். அந்த ஒரு இலட்சம் ஈரோக்களுக்கு என்ன நடந்தது? என்ற தமிழ் மக்களது ஆதங்கத்திற்கு இதுவரை எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை.

ஆகையால், இவர்களது கணக்குப் பார்க்கும் கணக்கில் எங்கேயோ இடிக்கின்றது. மாவீரர் தினத்தைச் சிதைப்பதற்காக இந்தக் கோரிக்கை முன் வைக்கப்படுகின்றது என்பதே மக்கள் மத்தியிலான பொது அபிப்பிராயமாக உள்ளது. ‘தேசியத்தைக் காப்பாற்றுவதற்காக…’ என்ற இவர்களது கோசமும் மாவீரர் தினச் சிதைவு முயற்சியின் ஒரு அங்கமே தவிர வேறொன்றும் இல்லை என்பதே பலரது அபிப்பிராயமுமாக உள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவின்போதும், அதற்குப் பின்னரும் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், எத்தனையோ ஊர்வலங்கள், எத்தனையோ நடை பயணங்கள் என தமிழ்த் தேசிய தளத்தில் தொடர்ந்து நடைபெறும் எந்தப் போராட்டங்களிலும் இவர்களது முகத்தைக் காணவில்லையே? தமிழீழ மக்களது விடிவுக்கான, தமிழீழ மண்ணின் விடுதலைக்காக என நடைபெற்ற அத்தனை போராட்டங்களையும் உதாசீனம் செய்த இவர்களா இப்போது போராடப் புறப்பட்டுள்ளார்கள்? என்ற பல கேள்விகளும் மக்கள் மத்தியிலிருந்து எழுப்பப்படுகின்றன.

கேள்விகள் பல எழுந்தாலும், பிள்ளையைக் கூறுபோடுவதில் குறியாக இருந்த அந்தப் பழிகாரி போலவே, மாவீரர் தினச் சிதைவை நோக்கி இந்தக் குழுவினர் ஆவலுடன் நகர்கின்றனர். இந்த மாவீரர் தினச் சிதைவு முயற்சி தமிழீழ மக்களின் இறுதி நம்பிக்கைக்கு வைக்கப்படும் ஆணி என்பதை யாரும் நிராகரித்துவிட முடியாது. இந்த ஆணி உண்மையாகவே அடிக்கப்படுமானால், சிங்கள தேசத்திற்கான முள்ளைவாய்க்கால் வெற்றி பூரணப்படுத்தப்படும். சிங்கள தேசம் தமிழ்த் தேசியத்தின் இன்னொரு எழுச்சியை எதிர்பார்த்து அச்சப்படாத நிம்மதியைப் பெற்றுவிடும். ஏனென்றால், தமிழீழ மக்களின் உயிர் நாடியாகவும், தமிழீழ விடுதலைக்கான எழுச்சி வேதமாகவும் மாவீரர்களே உள்ளார்கள்.

அதனால்தான், சிங்கள அரசு மாவீரர் துயிலும் இல்லங்களை அழிப்பதில் பெரும் அக்கறை செலுத்துகின்றது. இங்கும், மாவீரர் தினத்தைச் சிதைப்பதற்காகக் களம் இறங்கியுள்ளது. இதில் யார் பக்கம் நின்று தமிழ்த் தேசியத்தையும், மாவீரர் கனவையும் தக்க வைத்து, தேசியத் தலைவர் அவர்களது இலட்சியப் பாதையில் பயணிக்கப் போகின்றோம் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

– அகத்தியன்

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிரான இலங்கையின ் ஆவணப்படம்: பிசு பிசுத்துப்போனது !

சனல் 4 தொலைக்காட்சி இலங்கையின் கொலைக் களங்கள் என்ற 30 நிமிட ஆவணப்படத்தை வெளியிட்டது. அதனை பல நாடுகள் பார்வையிட்டது மட்டுமல்லாது பல நாடுகளின் பராளுமன்றிலும் அவை காண்பிக்கப்பட்டது. இதனால் இலங்கைக்கு பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டது. இதனை நிவர்த்திசெய்ய தாமும் ஒரு ஆவணப்படத்தை இலங்கை எடுத்தது. அதனை முதன் முறையாக பிரித்தானியாவில் காட்ட அது முற்பட்டது. நேற்றைய தினம் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் அதனை பல எம்.பிக்களுக்கு முன் காட்ட இலங்கை அரசு முற்பட்டது. பல தமிழர்கள் அங்கேசென்று அதனைப் பார்வையிட்டு கேள்விகள் கேட்க முற்பட்டனர். இதனை முதலிலேயே அறிந்துகொண்ட இலங்கை அரசு பிரித்தானிய எம்பீக்கள் மட்டுமே இந் நிகழ்வுக்கு அணுமதிக்கப்படுவர் என அறிவித்தது.

இதனால் தமிழர் இக் கூட்டத்தில் கலந்துகொண்டு கேள்வி கேட்க்கும் வாய்ப்பு இல்லாது போனது. இருப்பினும் சாதூரியமாக 3 தமிழர்கள் அந்த நிகழ்வு நடக்கும் மண்டபத்துக்குள் நுழைந்தனர். அதில் அதிர்வின் நிருபரும் அடங்குகிறார். முதலில் காணொளி காண்பிக்கப்பட்டது. பின்னர் அது குறித்த கேள்விகளை கேட்கலாம் என நேரம் ஒதுக்கபப்ட்டது. சுமார் பிரித்தானிய எம்.பீகளில் 4 பேரே இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதிலும் அந்த 4 எம்.பீக்களில் மூவர் வெளியே சென்று விட்டனர். 1 எம்.பியோடு இந் நிகழ்வு நடைபெற்றது. சனல் 4 தொலைக்காட்சி பிரிவில் இருந்து யார் வந்தாலும் அவர்களை அனுமதிக்கவேண்டாம் என ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சாதூரியமாக ஊடுருவி இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் சனல் 4 வீடியோவைத் தயாரித்த தயாரிப்பாளரான பெண் மணி ஒருவர் அங்கே வந்து இலங்கை அரசைக் கேள்விமேல் கேள்வி கேட்டு சிக்கலில் தள்ளினார்.

அவரைத் தொடர்ந்து அதிர்வு நிருபருக்கும் கேள்வி கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சனல் 4 ஒளிபரப்பிய காணொளிக்கு எதிராக நீங்கள் பிறிதொரு காணொளியை படம் பிடித்து காட்டுகிறீர்களே, அதனை மேற்குலக நாடுகளில் காண்பித்து ஆதரவு தேட முனைகிறீர்களே, ஏன் மேற்குலகு சொல்வதைப் போல சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை இலங்கைக்குள் அனுமதிக்கக்கூடாது ? என்று அதிர்வு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு சரியான பதிலைக் கூறாது நழுவிய இலங்கைப் பேச்சாளர், மெளனம் சாதிக்க முன் வரிசையில் அமர்ந்திருந்த கம்சா அவர்கள் அதிர்வின் நிருபரை புகைப்படம் எடுத்து மற்றும் வீடியோவில் பதிவுசெய்து தாம் எல்லாவற்றையும் பதிவுசெய்வது போல மிரட்டினார். இதனையும் பொருட்படுத்தாது அதிர்வின் நிருபர் தொடர்ந்தும் தன் கேள்வியை முன்வைத்தார்.

அதற்குப் பின்னர் மற்றுமொரு தமிழர் எழுந்து தமிழ் பயங்கரவாதிகள் என்று ராஜீவ விஜயசிங்க குறிப்பிட்டதை வன்மையாகக் கண்டித்தார். தமிழ் பயங்கரவாதிகள் என நீங்கள் குறிப்பிடுவது அனைத்து தமிழர்களையும் தான் என்ற கருத்துக்கு அமைக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். இதனை அடுத்து தாம் இவ்வாறு பேசியிருந்தால் மன்னிப்பு கோருவதாக ராஜீவ விஜயசிங்க தெரிவித்தார். சுமார் 150 சிங்களவர்கள் அமர்ந்திருந்த அவ்விடத்தில் 3 தமிழர்கள் மட்டுமே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். ஒவ்வொரு முறை தமிழர்கள் பேச எழும் போதும் சிஙகவர்கள் கூச்சலிட்டும் நக்கலடித்தும் தமிழர்களை கொச்சைப்படுத்துவதை தமது வேலையாக நினைத்துச் செய்தார்கள். அங்கே வந்திருந்த சனல் 4 தொலைக்காட்சியின் கொலைக் களங்கள் தயாரிப்பாளரான் பெண் மணி பேச முற்படும்போதும் சிங்களவர்கள் கூச்சலிட்டனர். எள்ளி நகையாடினர்.

இறுதியாக இந் நிகழ்வு முடிவுக்கு வரமுன்னர் அனைத்து தமிழர்களும் எழுந்து வெளியே சென்றவேளை அவர்களை சூழ்ந்துகொண்ட சிங்களவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிதுக் கொண்டனர். அதிர்வு நிருபர் உட்பட மற்றைய 2வரும் ஒருவாறாக வெளியே வந்து தமக்கு நடந்த அனுபவங்களை மற்றைய செய்தியாளர்களுக்கு பகிர்ந்துகொண்டனர். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் இலங்கையின் காணொளி ஆரம்பமாகிய சில நிமிடங்களில் பிரித்தானிய எம்பீக்கள் தூங்க ஆரம்பித்து விட்டனர். 4 எம்பீகள் மட்டும் சமூகமளித்த நிலையில் அவர்களில் பலர் தூங்க ஆரம்பித்து விட்டனர். இலங்கை அரசின் ஊதுகுழல் பெண் மணி திருமதி ராஜேஸ்வரி அவர்கள் மட்டும் இலங்கைத் தமிழர்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்றும் சனல் 4 தொலைக்காட்சி இலங்கையில் மீண்டும் ஒரு போர் ஆரம்பிக்க உதவுவதாகவும் குற்றஞ்சாட்டினார். அதுமட்டுமல்லாது விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைமை மீதும் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

மொத்தமாகச் சொல்லப்போனால் இலங்கையின் காணொளி நாடகம் பிரித்தானியாவில் பிசு பிசுத்துப் போனது என்பதே உண்மையாகும். 150 சிங்களவர்கள் வந்திருந்தாலும் 3 தமிழர்கள் எழுப்பிய கேள்விகள் சிங்கள அரசின் பேச்சாளர்களை கதி கலங்க வைத்தது என்பதே உண்மையாகும்.

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

வளரட்டும் கூகுள்! வாழ்த்துக்கள்!

E_1318148901.jpeg
சென்ற செப்டம்பர் 27ல் கூகுள் தன் 13 வது பிறந்த நாளைக் கொண்டாடியது. ஏதேனும் சிறப்பு பெற்ற நாளாக இருந்தால், அதற்கேற்ற வகையில் தன் கூகுள் இலச்சினையை வடிவமைத்து வழங்குவது கூகுள் தேடுதளத்தின் சிறப்பாகும். இதனைத் தன் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கூகுள் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டில், தன் பெயரான கூகுள் என்ற சொல்லுக்குப் பின்னர் ஓர் ஆச்சரியக் குறியினை அமைத்து டூடுலாகக் (Doodle) காட்டியது கூகுள் நிறுவனம். (ஆங்கிலத்தில் Doodle என்பது, பொறுப்பின்றி எதனையேனும் கிறுக்கலாக அமைக்கும் சொல்லைக் குறிக்கும்.) அத்துடன் இலச்சினையே மறைக்கும் அளவிற்கு பிறந்தநாள் கேக், அன்பளிப்புகள், தொப்பிகள் மற்றும் பலூன்கள் இருந்தன. இனி, கூகுள் நடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.
1998: கூகுள் தன் பிறந்த நாளை செப்டம்பர் 27ல் கொண்டாடினாலும், செப்டம்பர் 15 அன்று தான், கூகுள் தளத்தின் இணையப் பெயர் பதியப்பட்டது. நிறுவனமாக உருவானது செப்டம்பர் 4. இரண்டு முறை இந்த இரண்டு தேதிகளை விலக்கி, கூகுள் தன் பிறந்த நாளை செப்டம்பர் 7ல் கொண்டாடியது. தன் தளத்தில் இதனை ஒரு டூடுலாக அமைத்தது அதன் நான்காவது பிறந்த நாள் (2002) கொண்டாடிய போதுதான். Larry Page and Sergey Brin ஆகிய இருவர் தான், இந்நிறுவனத்தை ஒரு கார் ஷெட்டில் ஆரம்பித்தனர். சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தை நிறுவியர்களில் ஒருவர், இதில் ஒரு லட்சம் டாலர் தொடக்க முதலீடாகத் தந்தார்.
1999: சில மாதங்களே கார் ஷெட்டில் கூகுள் இயங்கியது. ஜூன் 1999ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக, 2 கோடியே 50 லட்சம் டாலர் மூலதன நிதியைக் கொண்டதாக கூகுள் வளர்ந்தது.
2000: அதிசயப்படத்தக்க வகையில், கூகுள் நிறுவனத்திற்குப் போட்டியாக இயங்கிய யாஹூ நிறுவனம், கூகுளின் சர்ச் இஞ்சினைப் பயன்படுத்தப்போவதாக அறிவித்து செயல்படுத்தியது. கூகுள் தளத்தைத் தேடலுக்குப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை, ஒரு நாளில் 10 கோடியைத் தாண்டியது. இதனைத் தொடர்ந்து தனக்கு வருமானம் ஈட்டித் தரும் AdSense புரோகிராமினைக் கூகுள் தொடங்கியது.
2001: கூகுள் ஒரு பன்னாட்டு நிறுவனமாக இயங்கத் தொடங்கியது. முதல் முதலாக ஜப்பானில், டோக்யோவில் தன் அலுவலகக் கிளையைத் தொடங்கியது. Eric Schmidt இதன் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்று, நிறுவனத் தை வளர்ச்சியில் இமாலய மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
2002: புதிய சேவைகளை இணைத்து இலவசமாகவே வழங்கும் Google Labs தொடங்கப்பட்டது. ஷாப்பிங் தேடல்களுக்கு Froogle உருவானது. தொடர்ந்து Google News தொடங்கப் பட்டது.
2003: பைரா லேப்ஸ் (Pyra Labs) நிறுவனத்தினை வாங்கி, வலைமனை (Blogs) வசதியைத் தரத் தொடங்கியது. இப்போது கூகுள் புக் சர்ச் (Google Book Search) என்று அழைக்கப்படுகின்ற கூகுள் பிரின்ட்ஸ் வசதி தொடங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான நூல்கள் அதன் டிஜிட்டல் வடிவில் இலவசமாகக் கிடைத்தன.
2004: கூகுளின் தேடல் அட்டவணை பொருட்களின் எண்ணிக்கை (Search Index) 800 கோடியைத் தாண்டியது. கூகுள் ப்ளெக்ஸ் என்ற தன் சொந்தக் கட்டடத்திற்கு கூகுள் தன் அலுவலகத்தினை மாற்றியது. இந்த ஆண்டில் கூகுள் மேற்கொண்ட சிறப்பான மாற்றம், இணைய மெயில் வசதியான, ஜிமெயில் தளத்தைத் தன் ரசிகர்களுக்கு வழங்கியதுதான். இமெயில் சந்தையில் மட்டுமின்றி, மனித குல வரலாற்றிலும், இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
2005: கூகுள் மேப்ஸ் மீது தன் கவனத்தை கூகுள் திருப்பியது. அத்துடன் கூகுள் ரீடர் மற்றும் கூகுள் அனலிடிக்ஸ் என்ற இரு வேறு வசதிகளும் அறிமுகமாயின. Gmail, Blogger and Search ஆகியவற்றின் மொபைல் பதிப்புகளுக்கும் அடிப்படை அமைக்கப்பட்டது.
2006: யு-ட்யூப் வசதியை வாங்கியது கூகுள் நிறுவனம். கூகுள் மேப்ஸ் விரிவு படுத்தப்பட்டது. கூகுள் டாக்ஸ், ஜிமெயில் ஆகியவற்றின் வாடிக்கையாளர் எண்ணிக்கை புயல் வேகத்தில் உயர்ந்தது. கூகுள் மேப்ஸ் உடன் இணைந்து, கூகுள் தெரு நிலை போட்டோ சேவையினை வழங்கியது.
2008: ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போனுடன் போட்டியிடும் வகையில், மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது. குரோம் பிரவுசரை வெளியிட்டு, பிரவுசர் யுத்தத்தில் முன்னிலை இடம் பிடித்தது.
2009: தேடல், பிரவுசர் மற்றும் ஜிமெயில் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் பயன்படுத்து பவர் அனைவரையும் மடக்கிப் பிடிக்க, தன் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது கூகுள்.
2010: இணைய வெளியில் நீட்டத் தொடங்கிய தன் கரங்கள் தரும் சேவையினைப் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, ஒரு மிகப் பெரிய பலவானாக கூகுள் மாறியது.
2011: மோட்டாரோலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, தன் நிறுவனத்தின் சேவைத் தளத்தில் பெரிய விரிவாக்கத்தினை கூகுள் ஏற்படுத்தியது.
கடந்த 13 ஆண்டு காலத்தில், அனைத்து மக்களின் வாழ்வை எளிதாகவும், பொருள் பொதிந்ததாகவும் மாற்றுவதில் கூகுள் மிகப் பெரிய அளவில் உழைத்துள்ளது. ஒரு சில தவறுகளை கூகுள் ஏற்படுத்தி இருக்கலாம்; ஆனால் அவை தன்னைத் திருத்திக் கொள்ள ஏற்பட்டவையாக கூகுள் ஏற்றுக் கொண்டு தொடர்ந்து பல வசதிகளை மனித இனத்திற்குத் தந்துள்ளது. "கெட்டதாக இருக்காதே, கெட்டவற்றிற்குத் துணை போகாதே’ (“Don’t be evil”) என்ற தன் இலட்சியத்தை நடைமுறைப்படுத்துவதில் தன் நேரம் பலம் அனைத்தையும் கூகுள் செலவழித்து வெற்றியும் கண்டுள்ளது. இந்த வெற்றி இனியும் தொடரும் என்ற நம்பிக்கை கூகுள் நிறுவனத்திற்கு மட்டுமின்றி, நமக்கும் ஏற்பட்டுள்ளது. வளரட்டும் கூகுள்! வாழ்த்துவோம் அதனை

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கலாநிதி, தயாநிதி – சி.பி.ஐ., தமாஷ்:

Tamil_News_large_329065.jpg

"ஏர்செல்’ நிறுவனத்தை விற்க நிர்பந்தம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக, சன் "டிவி’ கலாநிதி மற்றும் அவரது சகோதரர் தயாநிதியின் வீடுகள் உட்பட ஒன்பது இடங்களில் மட்டும் நேற்று சி.பி.ஐ., பெயரளவுக்கு ரெய்டு நடத்தியது. பரபரப்பான இந்த மெகா ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மலேசியா, மொரீஷியஸ் போன்ற வெளிநாடுகளிலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், இந்த வழக்கில் இப்போதைக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.

சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் விசாரணை கமிஷன், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி, கடந்த ஜனவரி மாதம் ஒரு அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. அதில், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்த போதும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தன என, குற்றம் சாட்டப்பட்டது. "தயாநிதி கடந்த 2004 – 2007ல் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தை விற்பதற்கு, தன் பதவியைப் பயன்படுத்தி, மறைமுகமாக நிர்பந்தம் செய்தார்’ என்று அந்நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன் கடந்த மே மாதம் புகார் கொடுத்தார். ஜனவரி, மே மாதங்களில் எழுந்த ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக, கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் தாமதமாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் துவக்கியது.

இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள தயாநிதி, கலாநிதி வீடுகள், சன், "டிவி’ அலுவலகம் மற்றும் டில்லி, ஐதராபாத் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் மட்டும் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சன், "டிவி’ நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் ஏராளமான அலுவலகங்கள் உள்ளன. இதன் துணை நிறுவனங்கள் வேறு ஏராளமாக உள்ளன. அந்த அலுவலகங்கள் பக்கம் சி.பி.ஐ., கவனத்தைச் செலுத்தவே இல்லை.

தலைநகர் டில்லியில் சி.பி.ஐ., வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தொலைத்தொடர்புத் துறை முன்னாள் மத்திய அமைச்சர் (தயாநிதி), சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குனர் (கலாநிதி), பிரிட்டன் மற்றும் மலேசியாவில் இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இயக்குனர், மற்றொரு மலேசிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைவர், சென்னை, மலேசியா, பிரிட்டனில் இயங்கும் மேலும் மூன்று தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் பெயர் தெரியாத அதிகாரிகள், நபர்கள் மீது, சி.பி.ஐ., நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்துள்ளது.இவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 120 (பி), ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 7, 12 மற்றும் 13 (1)(டி)யுடன் இணைந்த பிரிவு 13 (2)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரெய்டு குறித்து சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது:தயாநிதி மற்றும் கலாநிதி மீதான வழக்கு பற்றிய அத்தனை ஆவணங்களும் ஏற்கனவே எங்கள் வசம் உள்ளன. இப்போது நாங்கள் தேடிக் கொண்டிருப்பது, அவற்றுக்கான துணை ஆவணங்கள் மட்டுமே. இந்தச் சோதனையில் எந்த ஆவணமுமே கிடைக்காவிட்டாலும், வழக்கை நடத்த ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இப்போது நடக்கும் ரெய்டு வழக்கை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சி தான்.இன்னும் சில ஆவணங்கள், பத்திரிகைகள் மூலமாக, பொதுமக்களின் பார்வைக்கே வந்துவிட்டன. அந்த வகையில், கலாநிதி, தயாநிதி மீதான வழக்கு, சரியான திசையில் தான் சென்று கொண்டிருக்கிறது. கைது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, உடனடியாக எதுவும் சொல்வதற்கில்லை. இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பாதையில், இந்த வழக்கும் செல்லும்.சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பு இருப்பதால், எங்களுடைய செயல்பாடுகளில் எந்த வகையான அலட்சியமோ, கவனக்குறைவோ இருக்கப் போவதில்லை. இரு நாட்களுக்கு முன் தான், அவர்களிடம் டில்லியில் எங்கள் உயரதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர். அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையைத் தொடர்ந்து, மலேசியா, மொரீஷியஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் விசாரணை நடத்த வேண்டும். அதற்கு எத்தனை காலம் ஆகும் என இப்போது கூற முடியாது. அதன் பின் தான், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பெயரளவுக்கு நடந்த ரெய்டு, குற்றப் பத்திரிகை தாமதம் போன்றவற்றை வைத்து பார்க்கும் போது, தயாநிதி, கலாநிதி மீதான நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பு என்று தான் கூறப்படுகிறது. "ஒன்பது மாதங்கள் கழித்து, ஒரு சில இடங்களில் மட்டும் ரெய்டு நடத்தி எவ்வளவு ஆவணங்களை கைப்பற்றி விட முடியும்?முக்கியமான ஆவணங்கள் எல்லாம் இன்னுமா இந்த அலுவலகங்களில் இருக்கும்? வழக்கை திசை திருப்பவும், மத்திய அரசு சந்தித்து வரும் பிரச்னைகளில் இருந்து மீடியாக்களின் கவனத்தை திருப்பவும் தான் இது போன்ற நாடகத்தை சி.பி.ஐ., நடத்துகிறது,’ என, கம்யூனிஸ்ட், பா.ஜ., கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

தயாநிதி மீது முதல் தகவல் அறிக்கை, நேற்று முன்தினம் பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் தயாநிதி, கலாநிதி, ரால்ப் மார்ஷல், அனந்தகிருஷ்ணன் தவிர, சன் டைரக்ட் மலேசிய கம்பெனிகளான, ஆஸ்ட்ரோ, மேக்சிஸ் ஆகிய மூன்று கம்பெனிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அட்டை பெட்டிகளில் அள்ளி செல்லப்பட்டன:தயாநிதியின் டில்லி வீட்டிற்குள், காலை 7.30 மணிக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தத் துவங்கினர். இடைவிடாது அவர்கள் சோதனையைத் தொடர்ந்தனர். மதியம் உணவு இடைவேளையின்போது கூட, வெளியில் யாரும் வரவும் இல்லை. தயாநிதியின் வீட்டின் முன், செய்தியாளர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்தனர்.யாரையும் உள்ளே நுழைய விடாது கேட் இழுத்துப் பூட்டப்பட்டிருந்தாலும், உள்ளே கார் பார்க்கிங் ஏரியாவில் டவேரா கார் நின்று கொண்டிருந்தது. சோதனையை 4 மணி வாக்கில் முடித்துவிட்டு அந்த காரில் கிளம்பி, அதிகாரிகள் வெளியில் செல்லலாம் என்று எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்தனர். சோதனையின் முடிவில், நான்கு பெரிய அட்டைப் பெட்டிகள் டவேரா காருக்குள் ஏற்றப்பட்டன. அந்த பெட்டிகளில், சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. வேறு ஒரு வழியாக அந்த டவேரா கிளம்பிச் சென்றுவிட்டது. பின்னர் நடந்தே வெளியில் வந்த அதிகாரிகள், வீட்டின் முன் வந்து நின்ற இன்னொரு காரில் ஏறிச் சென்று விட்டனர்.

"டிவி’ தெரிந்த ரகசியம் : சென்னையில் உள்ள, சன், "டிவி’ தலைமை அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவே, பிரபல ஆங்கிலச் செய்தி சேனலின் நேரடி ஒளிபரப்பு வாகனம் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதிகாலை 6 மணியளவில் அந்த நிறுவனத்தின் நிருபர்கள் வந்தனர். பின்னர் தான் சி.பி.ஐ., அதிகாரிகள் ஒரு காரில் அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தனர். "சி.பி.ஐ., ரெய்டு குறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும்; அவர்கள் தான் எங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். ரெய்டு எல்லாம் சும்மா ஒப்புக்குத்தான்’ என அவர்கள் பேசிக் கொண்டனர்.

என்னென்ன பிரிவுகளில் வழக்கு?

இந்திய தண்டனைச் சட்டம் 120 (பி): குற்றச்சதி. இரண்டு ஆண்டுகளும் அதற்கு மேலும் தண்டனை வழங்கத்தக்க கிரிமினல் குற்றங்களுக்கு உரிய சதித் திட்டத்தைத் தீட்டுதல். இந்தப் பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு மாத சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7: ஏதேனும் ஒரு பொது ஊழியர், சட்டப்பூர்வமான வருமானம் தவிர, கூடுதல் ஆதாயத்துக்காக மேற்கொள்ளும் அலுவல் சார் நடவடிக்கை. இப்பிரிவின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு மாதத்தில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 12: ஏதேனும் ஒரு பொது ஊழியர், சட்டப்பூர்வமான வருமானம் தவிர, கூடுதல் ஆதாயத்துக்காக மேற்கொள்ளும் அலுவல் சார் நடவடிக்கைக்கு ஆதரவளிப்பது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், இப்பிரிவின்படியும் ஆறு மாதத்தில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 13 (2) உடனான 13 (1)(டி): ஒரு பொது ஊழியர் லஞ்சமாகவோ, சட்டவிரோதமான வகையிலோ, தனக்காகவோ, பிறருக்காகவோ அதிகார துஷ்பிரயோகம் செய்து, பொதுநல நோக்கமில்லாத செயலைச் செய்து, அதற்காக பொருளோ, பயனோ ஆதாயமாக அடைதல். இத்தகைய குற்ற நடத்தையில் ஈடுபடும் அரசு ஊழியருக்கு, ஓராண்டுக்கு குறையாமல், ஏழாண்டுகள் வரையிலான சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

சென்னையில் ரெய்டு நடந்த இடங்கள் :
1.போட் கிளப் ரோட்டில் முதல் அவென்யூவில் உள்ள தயாநிதி வீடு
2.2வது அவென்யூவில் உள்ள கலாநிதி வீடு
3.7மந்தைவெளிபாக்கத்தில் உள்ள சன், "டிவி’ அலுவலகம்
4.நுங்கம்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி சுனிதா ரெட்டி வீடு
5.கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை அலுவலகம்

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

குர்ஆன், கிருஸ்தவர்களால் திருத்தம் செய் யப்பட்டதே….!

இந்த கட்டுரையில் ஈசா அவர்களை பற்றிய சொர்கத்தின் கற்பனை தவிர மற்ற அனைத்து விசயங்களும் மிகவும் அழகாக இதன் ஆசிரியரால் விளக்கப்பட்டுள்ளது.வாசகர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்கின்ற படியால் வெளியிடுகிறோம்

bible_quran.jpg

அல்லாஹ்வின் வார்த்தைகளை ஒருவராலும் திருத்தம் செய்ய முடியாது…! இது குர்ஆனின் வாக்குமூலம். குர்ஆன் சுய பாராட்டல்களை செய்து கொண்டாலும், இத்தனை தூதர்களும் வேதங்களும் ஏன்? என்ற கேள்வியைத் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. சரி…! முஹம்மது நபி மற்றும் குர்ஆனின் தேவை எதன் காரணமாக ஏற்பட்டது? இதற்கான பதிலை குர்ஆனே கூறுகிறது.
…ஒருசாரார் அல்லாஹ்வின் வாக்கியத்தைச் செவியேற்று, பிறகு அதனை நன்கு விளங்கிய பின்னரும் அவர் அறிந்தவர்களாயிருக்கும் நிலையிலும் (தெரிந்து கொண்டே) அதை மாற்றி விட்டனர்.
(குர்ஆன் 2:75)
தனது தூதர்களின் வாயிலாக வெளிட்ட செய்திகளை மனிதர்கள் மாற்றிவிட்டனர் என்ற காரணத்தினால் புதிய தூதர்களையும், வேதங்களும் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதை அல்லாஹ் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறான். மேலும், முன்னர் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகளை, சரி கண்டதை மனிதர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக, உறுதிமொழிகளையும் வாரி வழங்குகிறான். இது ஒரு முரண்பாடாகும்.
நிச்சயமாக நாம்தாம் இந்த திக்ரை (நினைவூட்டல்) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதனை உறுதியாக பாதுகாப்பவராகவும் இருக்கிறோம்.
(குர்ஆன் 15: 9)
இதை ஏற்பதற்கில்லை, ஏனெனில் வழக்கம்போல குர்ஆனும் மனிதர்களால் மாற்றப்பட்டிருக்க வேண்டும். இம்முறை கிருஸ்துவர்கள் இத்திருப்பணியைச் செய்திருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
எப்படி என்கிறீர்களா?
குர்ஆன் கூறும் தூதர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால் ஈஸா நபியின் (இயேசு) செயல்பாடுகள் அன்பு நிறைந்ததாகவும், தெய்வீகத் தன்மை கொண்டதாகவும், முஹம்மது நபியின் செயல்பாடுகள் விநோதமாகவும் குரூரமாகவும் காட்சி செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். இது ஏன் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? இதை குர்ஆன், ஹதீஸ்களின் அடிப்படையில் ஆராயலாம்.
ஆதாரம் 1
ஈஸா நபியை, அல்லாஹ் தனது உயிரிலிருந்து ஊதி, புனிதத் தன்மையுடையவராகப் பிறக்கச் செய்தான்.
(அதற்கு) நிச்சயமாக நானோ – பரிசுத்தமான ஓர் ஆண்குழந்தையை உமக்கு நான் கொடையாக அளிப்பதற்காக (வந்துள்ள) – உம் ரப்பின் தூதர் என்று அவர் கூறினார்..
(குர்ஆன் 19:19)
முஹம்மதுவோ காதல், காமம், இச்சை என்ற அற்ப உணர்வுகள் காரணமாகப் பிறந்தவர். அதாவது ஈசாவின் பிறப்பு புனிதமானது என்றால் மனித உடலுறவுகளால் பிறப்பது புனிதமற்றதாக ஆகிவிடுகிறது. இதற்கும் நிறைய குர்ஆன் வசனங்கள் உள்ளன, மேலும் முஹம்மது நபி சிறுவராக இருக்கும் பொழுதே இதயத்தில் கருப்பு தசைக்கட்டியாக உருவாகுமளவிற்கு பாவங்களைச் செய்திருக்கிறார். பாவத்தை நீக்கி தூய்மைப்டுத்த அவருக்கு சிறப்பு இரண சிகிச்சை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. குழந்தைகளுக்கு செய்யப்பட்ட முதல் OPEN HEART SURGERY இதுதான். முஹம்மது விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னும் இதே இரணசிகிச்சை தேவைப்படுமளவிற்கு பாவங்களைச் செய்திருந்தார். (இஸ்லாம் அறிவியல்பூர்வமான மார்க்கமில்லை என்று எந்த முட்டாள் சொன்னது? பாவத்தை இரணசிக்சையின் முலம் நீக்கும் முறையை உலகிற்கு அறிமுகம் செய்ததது இஸ்லாம்தான்)
ஆதாரம் 2
ஒரு திரைப்பட நகைச்சுவை காட்சியில், கற்பில் சிறந்தவர் யார் என்று கூடியிருப்பர்களைப் பார்த்து ஒருவர் கேட்பார். உடனே ஒவ்வொருவரும், போட்டி போட்டுக்கொண்டு கண்ணகி, மாதவி, சீதை என்று புரணகாலத்து கதாபாத்திரங்களைக் கூறுவர். அப்பொழுது கேள்வியைக் கேட்டவர், உங்களது தாய், மனைவி, சகோதரிகள் உறவினர்கள் என்று ஒருவரும் கற்பில் சிறந்தவர்களாகத் தெரியவில்லையா? என்பார்.
இந்த காட்சியை குர்ஆனிலும் காணலாம். ஈஸா நபியின் தாயார் மரியம் அவர்களது கற்பிற்கு குர்ஆனின் பல வசனங்கள் சான்றிதழ்களை வழங்குகிறது. அம்மையாரது பெயரில் ஒரு அத்தியாயமே இருக்கிறது. ஆனால் முஹம்மது நபியின் தாயார் ஆமீனாவின் பெயர் ஒருமுறைகூட குறிப்பிடப்படவில்லை. மேலும் முஹம்மது நபியின் மனைவியர்கள் தங்களது கற்பை பேணிப்பாதுகாக்க வேண்டுமென்ற எச்சரிக்கைகளும் (குர்ஆன் 33:28-33) அறிவுறுத்தல்களுமே காணப்படுகிறது. ஹதீஸ்களோ முஹம்மது நபியின் மனைவியரின் கற்பு விமர்சனத்திற்குள்ளான உண்மைகளைக் கூறுகிறது
ஆதாரம் 3
ஈஸா நபி, கைக்குழந்தையாக இருந்த பொழுதே தனது பணியைப் பற்றித் தெளிவாக பேசியதாகக் குர்ஆன் கூறுகிறது.
(ஜிப்ரீல் என்னும்) பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு நான் உம்மை உறுதிப்படுத்திய பொழுது, தொட்டிலி(ல் குழந்தையாக நீர் இருந்த நேரத்தி)லும், வாலிபத்திலும் நீர் பேசியதையும்…
(குர்ஆன் 5:110, 19:29-33)
முஹம்மது நபி ஒரு தற்குறி வாழ்நாள் முழுவதுமே எழுதவும், படிக்கவும் பிறர் உதவியை எதிர்பார்த்திருந்தவர். அல்லாஹ் முஹம்மது நபியை மக்கள் தனது தூதரென்று நம்பவேண்டும் என்பதற்காக கல்லைப் பேச வைத்தான், சந்திரனைப் பிளந்து ஒட்டினான், விண்வெளிக்கு அழைத்துச் சென்றான், இப்படி எதை எதையோ செய்தான். ஆனால் அவரது நபித்துவ தொழிலுக்கு உதவுமாறு எழுத்தறிவை வழங்கியிருக்கலாமே…!
ஆதாரம் 4
ஈஸா நபி களி மண் பறவையைச் செய்து அதற்கு உயிரூட்டி பறக்கவிட்டவர். இதன் மூலம் அவரது உணவிற்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து கொள்ளும் திறமை இருந்ததை நம்மால் அறியமுடிகிறது.
என்னுடைய உத்திரவைக் கொண்டு களிமண்ணால் பறவையின் வடிவத்தைப்போன்று நீர் உண்டாக்கி அதில் நீர் ஊதியதும் என் உத்திரவைக்கொண்டு (உயிருள்ள) பறவையாக அது ஆனதையும்; …
(குர்ஆன் 5.110)
ஆனால் முஹம்மது நபி, தனது வயிற்றுப் பிழைப்பிற்காக மனைவியின் தயவை எதிர்பார்த்திருந்தார், வசதியான வாழ்க்கைக்காக, தன்னைவிட பதினைந்து வருடங்கள் மிகைத்த ஒரு மூதாட்டியை திருமணம் செய்ததை, புரட்சிகரமான விதவைத் திருமணம் என்றெல்லாம் புனைய வேண்டியிருந்தது. அல்லாஹ்விற்கோ, முஹம்மது நபியின் வழிப்பறிக் கொள்ளை, சூறையாடல்களை ஹலால் என அறிவிக்க வேண்டியிருந்தது.
அன்ஃபால் அல்லாஹ்வுக்கும் அவன் ரஸூலுக்கும் உரியவை;
(குர்ஆன் 8.1)
செல்வச் செழிப்பான மூதாட்டியின் மரணத்திற்குப் பிறகு அவரது பொருளாதாரம் படுபாதாளத்திற்குச் சென்றது. (சிங்கிள் "டீ"க்குகூட வழியின்றி தவித்தார்) இவ்வாறாக முஹம்மது தனக்கு தேவையான உணவிற்குக்கூட உழைக்கும் திறமையற்றவராக இருந்துள்ளார்.
ஆதாரம் 5
ஈஸா நபி இறந்த மனிதர்களையும் உயிரூட்டினார்.
என் உத்திரவைக் கொண்டு இறந்தவர்களை (மண்ணறையிலிருந்து) உயிருள்ளவர்களாக நீர் வெளியாக்கியதையும்;
(குர்ஆன் 5.110)
தன்னை சித்திரவதை செய்து சிலுவையில் அறைந்து கொல்ல முயன்ற பொழுதும் பொறுமையுடன் இருந்தார். எவரையும் தாக்க முயற்சிக்கவில்லை. ஆனால் முஹம்மது நபி தனக்கெதிரா சூழ்ச்சி செய்வதாகக் கூறிக்கொண்டு தன்னை மறுத்தவர்களைக் கொன்று குவித்தார். பனூ குறைழாவில், ஒரே நாளில் 900 பேர்களது தலைகளை வெட்டி எறிந்து உலக சாதனை படைத்தார்.
ஆதாரம் 6
ஈஸா நபி, பிறவிக் குருடருக்கும் பார்வையை வரவழைத்தார்.
இன்னும் என் உத்திரவைக் கொண்டு பிறவிக் குருடனையும் வெண்குஷ்டனையும் நீர் சுகப்படுத்தியதையும்;
(குர்ஆன் 5.110)
அல்லாஹ், ‘ஹலால்’ என்று அனுமதித்த கண்ணியமிக்க தொழிலான கொள்ளையடித்தல் மூலம் முஹம்மது நபி சேமித்து வைத்திருந்த ஒட்டகங்களை உக்ல் குலத்தைச் சேர்ந்த சிலர் ‘ஹராமான’ முறையில் திருடிச் சென்றனர் அவர்களை விரட்டிச் சென்று, மாறுகால் மாறுகை வெட்டி, அவர்களது கண்களையும் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால் குத்தி குருடாக்கினார் (புஹாரி ஹதீஸ் :6802).
ஆதாரம் 7
ஈஸா நபி பெண்களின் மீது இச்சையின்றி துறவு வாழ்கையை வாழ்ந்தவர். முஹம்மது நபி பல மனைவிகளுடனும், போர்களில் ஆண்களைக் கொன்று அவர்களது மனைவியர்களையும், பெண் குழந்தைகளையும் பாலியல் அடிமைகளாகக் கைப்பற்றினார். மேலும் மருமகள் (வளர்ப்புமகனின் மனைவி) மீதும் இச்சை கொண்டு அவரைத் தனது மனைவியாக்கிக் கொண்டார்.(குர்ஆன் 33.37) அல்லாஹ்வே(?) வெறுப்படைந்து இனி திருமணம் செய்யக்கூடாது (குர்ஆன் 33.52) என்று தடைவிதிக்குமளவிற்கு முஹம்மது நபியின் செயல்பாடுகள் இருந்தது.
ஆதாரம் 8
அல்லாஹ், ஈஸா நபியை அன்பானவராகவும் மன்னிக்கும் குணமுடையவராகவும் ஆக்கினான். அவர் அடிமைமுறையை வெறுத்தார். அல்லாஹ், முஹம்மது நபியை போர்களின் மூலம் அப்பாவி பொதுமக்களை அடிமைகளாகக் கைப்பற்றுபவராக ஆக்கினான்.
ஆதாரம் 9
தீராவியாதிகளான வெண்குஷ்ட நோயாளிகளையும், தொழு நோயாளிகளையும் ஈஸா நபி குணப்படுத்தியதாக குர்ஆன் கூறுகிறது.
இன்னும் என் உத்திரவைக் கொண்டு பிறவிக் குருடனையும் வெண்குஷ்டனையும் நீர் சுகப்படுத்தியதையும்;
(குர்ஆன் 5.110)
முஹம்மதிற்கு அப்படி எந்த ஒரு ஆற்றலும் இருக்கவில்லை. அவரிடம் அற்புதங்களை செய்து கண்பிக்குமாறு வற்புறுத்திய பொழுது,
“தம் இறைவனிடமிருந்து ஏதேனும் ஓர் அத்தாட்சியை அவர் நம்மிடம் கெண்டு வர வேண்டாமா? என்று அவர்கள் கூறுகின்றனர் முந்தைய வேதநூல்களிலுள்ள தெளிவு-விளக்கம் அவர்களிடம் வர வில்லையா?”
(குர்ஆன் 20:133)
என்று கூறி நிலைமையை சாமாளித்தார். அடிமைப்பெண் மரியத்துல் கிப்தியாவிற்குப் பிறந்த தனது மகன் இப்ராஹிமின் நோயை குணப்படுத்த, அல்லாஹ்விடம் முஹம்மது நபி பல இரவுகள் அழுதுபுலம்பி பிரார்த்தனை செய்தும் கூட, ஏனோ அல்லாஹ் செவிசாய்க்கவில்லை.
ஆதாரம் 10
ஈஸா நபி இறக்கவில்லை என்கிறது குர்ஆன், அவரைக் கொலை செய்ய முயன்றவர்களின் நிழல் கூட ஈஸா நபியின் மீது விழாமல் அல்லாஹ், அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டதாகவும் கூறுகிறது. இன்றுவரை மரணமடையால் இரண்டாம் வானில் வசித்து வருவதாக கூறுகின்றனர். முஹம்மது நபி தனது விண்வெளிப் பயணத்தின் பொழுது இத்தகவலை உறுதிசெய்துள்ளார் (அங்கு ஹூருலீன்களுடன் (சொர்கத்து கன்னிப் பெண்கள் உல்லாசமா இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை.)
ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
(குர்ஆன் 4:158)
இத்தகைய நல்லெண்ண நடவடிக்கைகளை முஹம்மது நபியின் விஷயத்தில் அல்லாஹ் மேற்கொள்ளவில்லை. முஹம்மது நபியை எதிரிகளின் விஷத்தால் கொடுமையான வேதனைகளை அனுபவித்து மரணமடையச் செய்து, (புஹாரி ஹதீஸ் -2617) அவரது உடலை மண்ணில் புதைத்து அழுகச் செய்தான்
மேற்கண்ட ஆதாரங்கள் கூறும் உண்மைகளைக் காணும் பொழுது இவை இஸ்லாமின் புனித புத்தகத்தின் மூலத்தில் இருப்பவைகளா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
எவர் (அல்லாஹ்வின்) ரஸூலுக்கு வழிப்படுகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு விட்டார்.
(குர்ஆன் 4:80)
இப்படி, அல்லாஹ்விற்கே இணையான முஹம்மது நபியை ஒரு மூன்றாம்தர குற்றவாளியைவிட கீழ்தரமாக சித்தரிப்பதிலிருந்தே குர்ஆன் கிருஸ்துவர்களால் மாற்றப்பட்டுள்ளதை அறியலாம். ஆனால் இதை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.
குர்ஆனுக்கான மூல படிவங்கள், முதல் திரட்டு ஆகியவைகளை உதுமான் கலிபாவாக இருக்கும்போது அழித்துவிட்டார் என்பதையும் இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

தஜ்ஜால்

source:http://iraiyillaislam.blogspot.com

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

குட்டைப் பாவாடையுடன் ஆர்ப்பாட்டம்’

குட்டைப் பாவாடையுடன் பெண்கள் போராட்டம்

குட்டைப் பாவாடையுடன் பெண்கள் போராட்டம்

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் குட்டைப் பாவாடைகளை அணிந்த பெண்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

அண்மையில் ஒரு பெண்ணை ஒரு குழு கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதற்கு, அந்தப் பெண் அணிந்திருந்த ஆடைகளே காரணம் என்று நகர ஆளுனர் கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை அந்தப் பெண்கள் செய்திருக்கிறார்கள்.

”குட்டைப்பாவாடை அணிவது எனது உரிமை, நான் எப்படி உடை அணிவது என்பதை எனக்கு நீ சொல்லாதே…., பாலியல் வல்லுறவு செய்பவர்களை நிறுத்தச் சொல்லு…” என்று எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.

”தாம் பாலியல் வல்லுறவு உள்ளாவதைத் தவிர்ப்பதற்கு பெண்கள் பொதுப் பேருந்துகளில் குட்டைப் பாவாடை அணிவதை நிறுத்த வேண்டும்” என்று ஜகார்த்தா நகர ஆளுனர் பௌசி போவா வெள்ளியன்று கூறியிருந்தார்.

அவர் உடனடியாக மன்னிப்புக் கோரிவிட்டார். ஆனால் அவர் கூறிய கருத்து பரவலாக பிரசுரமாகிவிட்டது.

source:bbc.co.uk

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ஈரானில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மதம் மாற்ற விவகாரம்!

ஈரானில் கிறிஸ்தவ மதகுரு ஒருவர் எதிர்நோக்கியுள்ள மரணதண்டனை தீர்ப்பு பெரும் சர்ச்சையை

ஏற்படுத்தியிருக்கிறது. யூசுஃப் நதர்கனி எனும் கிறிஸ்த்தவ மதகுருவான இவருக்கு, பாலியல் பலாத்காரம் மற்றும் பணம் பறிப்பு குற்றச்சாட்டின் கீழ் மரணதண்டனை விதிக்கப்படவுள்ளது.

எனினும் இவர் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து மதம் மாறியதற்காகவும், மத எதிர்ப்பு பிரச்சாரம் செய்தமைக்காகவுமே மரணதண்டனை வழங்கப்படவிருப்பதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

கிலான் மாகாணத்தின் துணை ஆளுனர், கொலோமாலி ரெஷ்வானி இதனை முற்றாக மறுத்துள்ளதுடன், மேற்குலக ஊடகங்கள் இவ்விவகாரத்தை தமக்கு சார்பாக பயன்படுத்த பார்க்கின்றன. அவர் ஒரு பாலியல் பலாத்கார குற்றவாளி, மற்றவர்களை மதம் மாற்றுகிறார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அல்ல, பணம்பறிப்பு மற்றும் ஏனைய சில குற்றங்களுக்காகவே அவருக்கு தண்டனை வழங்கப்படவிருக்கிறது என்கிறார்.

நதர்கானி தொடர்பான வழக்கு நீதிமன்றில் நடைபெற்ற போது, ‘என்னை மொஹ்மட் என அழைக்க வேண்டாம், நான் இஸ்லாமியன் அல்ல, கிறிஸ்தவன்’ என நதர்கானி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

நதர்கானியின் வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கையில், இவ்வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. நதர்கனிக்கு மரணதண்டனை வழங்கப்படாதிருப்பதற்கு 95% வீதம் வாய்ப்பிருக்கிறது. ஈரான், மத மாற்றத்திற்கு தூக்குதண்டனை வழங்கும் நாடல்ல’ என்றார்.

2010 நொவெம்பரில் கிறிஸ்தவ மதம் மாறிய நதர்கானி, ஈரானின், வீட்டு தேவாலயங்களின் நெட்வேர்க் தலைவராக இருக்கிறார். இதேவேளை நதர்கானிக்கு எதிராக மரணதண்டனை வழங்கப்படும் அபாயம் குறித்து அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் நேற்று வெள்ளிக்கிழமை விடுத்த அறிவிப்பில், ஈரானிய அரசின் போலியான அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிரான அனைத்து ஈரானியர்களுக்கும் அமெரிக்கா ஆதரவு தருகிறது. அவரவர் மத நம்பிக்கை என்பது உலகளாவிய உரிமை, ஈரானிய அரசு, நதர்கானியின் நம்பிக்கையை துறக்குமாறு, கட்டாயப்படுத்தி அறிவிக்க முயல்கிறது. இது மத காலாச்சாரத்தை மீறும் செயல். நாகரீகம் தொடர்பில் ஈரான் தனது சொந்த சர்வதேச கட்டுப்பாட்டு விதிகளின் எல்லையை தாண்டி நடக்க முயற்சிக்கிறது என குற்றம் சுமத்தினார்

source:4tamilmedia

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சுவாரஸ்யமான தகவல்கள்

ஒரு மீட்டர் தூரத்தை ஒரு வினாடியில் கடக்கும் ஆறு கால்களை கொண்ட ஒரே விலங்கு கரப்பான் பூச்சி மட்டுமே.

ஒரு வேளை அது மனிதன் அளவுக்கு உருவம் கொண்டிருந்தால் அது ஒரு மணி நேரத்தில் 300 மைல்களை கடக்கும்.

கண்ணாடி உடையும் போது சிதறும் துகள்கள்,எந்த திசையிலிருந்து விசை வந்ததோ அதன் எதிர் திசையிலேயே சிதறும் .

இங்கிலாந்தில் சபா நாயகருக்கு பேச அனுமதி இல்லை.

முதலைகள் கற்களையே விழுங்கும் திறன் பெற்றவை.அது அதனை ஆழத்தில் நீந்த உதவுகின்றன.

எந்த மனிதனாலும் தும்மும் பொழுது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது.

முதலை பிடியில் இருந்து தப்பிக்க, அதன் கண்விழிகலில் உங்கள் கட்டைவிரலை விட்டு நீங்கள் உடனடியாக தப்பிக்கலாம்.

ஒரு பெண் கானாங்கெளுத்தி (மீன்) ஒரே நேரத்தில் 500000 முட்டைகளை இடுகிறது.

கடல் அனைத்தும் தங்கம் கிடைக்கிறது என்றால் பூமியில் உள்ள வொவ்வொரு மனிதனுக்கும் 20 கிலோ தங்கம் கிடைக்கும்.

சூரிய கிரகணத்தின் அதிகபட்ச எண்ணிக்கை (பகுதி,வருடாந்திர அல்லது மொத்த) வருடத்திற்கு 5 உள்ளது.

ஒரு சராசரி மனிதனுக்கு பிறக்கும் போது 300 எலும்புகள் இருக்கும்.வயதாகும் போது அது 206 ஆக குறைந்துவிடும்.

உடலின் அளவை விட விகிதச்சாரத்தில் மூளை அளவு பெரிதகக்கொண்ட உயிரினம் எறும்பு.

இரத்த சிவப்பணுக்கள் உடலை சுற்றிவர 20 வினாடிகள் ஆகும்.

தினமும் 12 குழந்தைகள் தவறான பெற்றோர்களிடம் கொடுக்கப்படுகிறது.

கரப்பான் பூச்சிகள் அதன் தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயர் வாழம் ஆற்றல் பெற்றது.

பூனைகளால் நூற்றுக்கும் மேற்பட்ட குரல் ஒலிகளை உருவாக்க முடியும். ஆனால் நாய்களால் பத்து வித குரல் ஒலிகளை மட்டுமே உருவாக்க முடியும்.

மனித பற்கள் பாறைகள் போல கடினமாக உள்ளன.

பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும், ஆனால் பறக்க முடியாது.

அமெரிக்காவில் சுமார் 52.6 மில்லியனுக்கு மேற்பட்ட நாய்கள் இருக்கின்றன.

உலகில் மனிதர்களை விட அதிக கோழிகள் இருக்கின்றன.

அமெரிக்காவில் ஒவ்வொருவரிடமும் இரண்டு கிரெடிட் கார்ட்கள் உள்ளது.

உங்கள் இதயம் நாள் ஒன்றுக்கு 100,000 முறைகள் துடிக்கிறது.

பாலூட்டிகளில் யானைகளால் மட்டுமே குதிக்க முடியாது.

மின்சார நாற்காலியை ஒரு பல் மருத்துவர் கண்டுபிடித்தார்.

அமெரிக்கர்களில் 55% பேருக்கு மட்டுமே சூரியன் ஒரு நட்சத்திரம் என்று தெரியும்.

உங்கள் உடலில் உள்ள எலும்புகளில், கால் பங்கு உங்கள் பாதத்தில் இருக்கிறது.

நான்கு அமெரிக்கர்களில் ஒருவர் தொலைக்காட்சியில் தோன்றியுள்ளார்.

பூனையின் ஒவ்வொரு காதிலும் 32 தசைகள் உள்ளன.

சாதாரண வேகத்தில் பயணிக்கும் ஒரு முழுமையாக ஏற்ற சூப்பர் டேங்கர் நிறுத்த ஒரு குறைந்தது இருபது நிமிடங்கள் ஆகிறது.

source:a2ztamilnadu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பீஜேவிற்கு கேள்வி:குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா?

பீஜேவிற்கு கேள்வி:குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா? – ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் – பாகம் 1

       

பீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா?

ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் – பாகம் 1

இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதுபோல, குர்‍ஆன் வசனத்திற்கு வசனம், எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டவில்லை. அனேக வசனங்கள் தொலைந்துவிட்டன. தொலைந்த வசனங்கள் எவ்வளவு இருக்கும்? ஒரு வசனமா? ஐந்து வசனங்களா? பத்து வசனங்களா? அல்லது நூற்றுக்கும் அதிகமான வசனங்களா? உமர், ஆயிஷா மற்றும் உபை போன்றவர்களின் சாட்சி என்ன என்பதை நீங்களே படியுங்களேன். இதனை அறிந்துக்கொள்ள இஸ்லாமிய நூல்களிலிருந்து சில குறிப்புக்களை காண்போம்.

இப்னு உமர் அல் கத்தாப்:

குர்‍ஆன் முழுமையானதல்ல, குர்‍ஆனிலிருந்து அனேக வசனங்கள் தொலைந்துவிட்டன என்று இப்னு உமர் அல் கத்தாப் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்.

"என்னிடம் முழு குர்‍ஆனும் உள்ளது என்று உங்களில் யாரும் சொல்லக்கூடாது, தன்னுடமுள்ள குர்‍ஆன் முழுமையானது என்று அவனுக்கு எப்படித் தெரியும்?குர்‍ஆனின் பெரும் பகுதி தொலைந்துவிட்டது , ஆகையால் "குர்‍ஆனில் எவைகள் மீதமிருக்கிறதோ அவைகள் என்னிடமுள்ளன" என்று கூறுங்கள். (ஸுயூதி, இத்கான், பாகம் 3, பக்கம் 72)

"Let no one of you say that he has acquired the entire Qur’an for how does he know that it is all? Much of the Qur’an has been lost , thus let him say, ‘I have acquired of it what is available" (Suyuti: Itqan, part 3, page 72).

இப்னு உமர் கூறியதற்கு ஆதரவாக ஆயிஷா அவர்கள் (பக்கம் 72) கீழ்கண்ட விவரத்தை கூறுகிறார்கள்:

"இறைத்தூதர் வாழ்ந்த காலத்தில், " கூட்டங்கள் (Parties)" என்ற ஸூராவை ஓதும் போது இருநூறு வசனங்கள் இருந்தன . குர்‍ஆனின் பிரதிகளை உஸ்மான் உருவாக்கிய பிறகு, குர்‍ஆனில் இப்போதுள்ள வசனங்கள் மட்டுமே மீதமாக உள்ளது (73 வசனங்கள்)"

"During the time of the prophet, the chapter of the Parties used to be two hundred verses when read. When Uthman edited the copies of the Qur’an, only the current (verses) were recorded" (73 verses).

முஹம்மதுவின் தோழர்களில் சிறந்தவரான உபை இப்னு கஅப் என்பவரும், ஆயிஷா அவர்கள் கூறியது போலவே கூறியுள்ளார்.

ஸுயூதி, இத்கான், பாகம் 3, பக்கம் 72:

"ஒரு முஸ்லிமிடம் இந்த சிறப்புமிக்க தோழர் இவ்விதமாக கேட்டார், ‘ கூட்டங்கள் (Parties) என்ற அத்தியாயத்தில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன‌?’. இதற்கு அந்த முஸ்லிம் ’72 அல்லது 73 வசனங்கள்’ என்று பதில் அளித்தார். உபை அவரிடம் இவ்விதமாக சொன்னார், ‘அல் பகரா ஸூராவில் இருந்த வசனங்களுக்கு சமமான வசனங்கள் (கிட்டத்தட்ட 286 வசனங்கள்) இந்த ‘கூட்டங்கள் (Parties)’ அத்தியாயத்திலும் இருந்தன , அதில் கல்லெரிந்து கொல்லுதல் வசனமும் இருந்தது. அந்த மனிதர் உபையிடம் ‘அந்த கல்லெரிந்து கொல்லுதல் வசனம் என்ன?’ என்று கேட்டார். உபை அவரிடம், ‘அதாவது வயது சென்ற ஒரு ஆணோ அல்லது பெண்ணோ விபச்சாரம் செய்தால், அவர்கள் மரிக்கும் வரை கல்லெரிந்து கொல்லவேண்டும்’ என்பது தான் அந்த வசனம் என்று பதில் அளித்தார்.

"This famous companion asked one of the Muslims, ‘How many verses in the chapter of the Parties?’ He said, ‘Seventy-two or seventy-three verses.’ He (Ubay) told him, ‘It used to be almost equal to the chapter of the Cow (about 286 verses) and included the verse of the stoning .’ The man asked, ‘What is the verse of the stoning?’ He said, ‘If an old man or woman committed adultery, stone them to death."’

நபித்தோழருக்கும், ஒரு முஸ்லிமுக்கும் இடையே நடந்த மேலே கூறிய உரையாடலை அப்படியே பதிவு செய்து, இப்னு ஹஜம் என்ற இஸ்லாமிய அறிஞர், கீழ்கண்டவாறு கூறுகிறார் (தொகுப்பு 8, பாக‌ம் 11, ப‌க்க‌ங்க‌ள் 234 ம‌ற்றும் 235):

"அலி இப்னு அபூ தாலிப்பின் கூற்றின் ப‌டி, இந்த‌ ஹ‌தீஸ் ச‌ரியான‌ ஹ‌தீஸாகும் (ந‌ம்பிக்கையான‌ ச‌ங்கிலித் தொட‌ர் உடைய‌ ஹ‌தீஸாகும்) (The Sweetest [Al Mohalla] Vol. 8.).

"’Ali Ibn Abi Talib said this has a reliable chain of authority (The Sweetest [Al Mohalla] vol. 8.)."

இதனை "al-Kash-Shaf" என்ற தம்முடைய புத்தகத்தில் ஜமக் ஷாரி (Zamakh-Shari) என்பவரும் குறிப்பிட்டுள்ளார் (பாகம் 3, பக்கம் 518).

முஹம்மதுவின் ஹதீஸ்களையும், சரிதையையும், குர்‍ஆனின் விரிவுரைகளையும் உலகிற்கு காட்டிய இந்த இஸ்லாமிய தூண்களாகிய அவரது தோழர்கள் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களின் மேற்கண்ட கூற்றுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. இவர்களில் சிலர் "இப்னு உமர், ஆயிஷா, உபை இப்னு கஅப், மற்றும் அலி இப்னு அபூ தாலிப்" என்பவர்கள் ஆவார்கள்.

இப்னு உமரின் கூற்றுப்படி, குர்‍ஆனின் பெரும்பகுதி தொலைந்துவிட்டது.

ஆயிஷா மற்றும் உபை இப்னு கஅப் என்பவர்களின் கூற்றுப்படி, கு‍ர்‍ஆனின் "கூட்டங்கள் (Parties)" அத்தியாயத்திலிருந்து பெரும்பகுதியான தொலைந்துவிட்டது,

இதையே அலி கூட உறுதிப்படுத்துகிறார். இந்த நிகழ்ச்சிப் பற்றி ஸுயூதி தன் "இத்கான்" என்ற புத்தகத்தில் கீழ்கண்டவாறு பதிவு செய்கிறார் (பாகம் 1, பக்கம் 168):

குர்‍ஆன் தொகுக்கப்பட்டுக் கொண்டு இருந்த காலக் கட்டத்தில், மக்கள் ஸைத் இப்னு தாபித் என்பவரிடம் (தாங்கள் மனப்பாடம் செய்து வைத்திருந்த குர்‍ஆன் வசனங்களோடு)வருவார்கள். இரண்டு அத்தாட்சிகள் இருந்தால் மட்டுமே ஏற்பேன் இல்லையேல் அவைகளை குர்‍ஆனில் சேர்க்கமாட்டேன் என்றுச் சொல்லி அவர் மறுத்துவிடுவார். "அல் தவ்பா" என்ற அத்தியாயத்தின் கடைசி வசனம் "குஜைமா இப்னு தாபித்" என்பவரிடம் மட்டுமே இருந்தது. ‘இந்த வசனம் இவரிடம் மட்டுமே இருந்தாலும், அதனை பதிவு செய்யுங்கள், ஏனென்றால், குஜைமாவின் சாட்சி இரண்டு சாட்சிகளுக்கு சமம் என்று இறைத்தூதர் கூறியிருக்கிறார்’ என்று ஸைத் கூறினார். உமரும் "கல்லெரிதல்" வசனத்தை கொண்டு வந்தார், இருந்தாலும், அவர் கொண்டு வந்த‌ வசனம் குர்‍ஆனில் பதிவு செய்யப்படவில்லை, ஏனென்றால், இவ்வசனத்திற்கு உமர் மட்டுமே சாட்சியாக இருந்தார்".

"During the collection of the Qur’an, people used to come to Zayd Ibn Thabit (with the verses they memorized). He shunned recording any verse unless two witnesses attested to it. The last verse of chapter of Repentance was found only with Khuzayma Ibn Thabit. Zayd said, ‘Record it because the apostle of God made the testimony of Khuzayma equal to the testimony of two men.’ ‘Umar came with the verse of the stoning but it was not recorded because he was the only witness to it."

மேற்கண்டவைகளை ஒருவர் படித்தால் அவர் ஆச்சரியத்தோடு கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார்:

"உமருடைய சாட்சி உண்மையான சாட்சி தான் என்றுச் சொல்ல இன்னொரு சாட்சி அவசியமா?"

"அல்லாஹ்விற்கும், அவனது குர்‍ஆனுக்கும் எதிராக உமர் பொய்யை கூறுவாரா?".

அதன் பிறகு உமர் இவ்விதமாக கூறினார், ‘உமர் அல்லாஹ்வின் புத்தகத்தில் சேர்த்துவிட்டார் என்று என் மீது குற்றம் சொல்லாமல் இருப்பார்களானால், நான் அந்த கல்லெரிதல் வ்சனத்தை குர்‍ஆனோடு சேர்த்து இருந்திருப்பேன்".(இத்கான், பாகம் 3, பக்கம் 75). மேலும் "Skiek Kishk" என்பவரின் புத்தகத்திலும் இதனை காணலாம்.

ஆயிஷா அவர்களின் இன்னொரு அறிக்கை:

"இறக்கப்பட்ட வசனங்களில் "பத்து முறை மார்பக பால் கொடுத்தல்" வசனத்தை "ஐந்து முறை மார்பக பால் கொடுத்தல்" வசனம் இரத்து செய்துவிட்டது.இறைத்தூதர் மரித்துவிட்ட பிறகும் இந்த வசனம் குர்‍ஆனின் வசனமாக வாசிக்கப்பட்டுக்கொண்டு இருந்தது. இதனை அபூ பக்கர் மற்றும் உமர் மூலமாக அறிவிக்கப்பட்டது (பார்க்க ஸுயூதி, இத்கான் பாகம் 3 பக்கங்கள் 62 மற்றும் 63)

"Among the (verses) which were sent down, (the verse) of the ten breast feedings was abrogated by (a verse which calls for five breast feedings. The apostle of God died and this verse was still read as part of the Qur’an. This was related by Abu Bakr and ‘Umar" (refer to Suyuti’s qan, part 3, pages 62 and 63).

ஆங்கில மூலம்: Chapter Twelve – The Perversion of Qur’an and the Loss of Many Parts of It.

http://isakoran.blogspot.com/2011/10/1.html

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized