குட்டைப் பாவாடையுடன் பெண்கள் போராட்டம்
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் குட்டைப் பாவாடைகளை அணிந்த பெண்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
அண்மையில் ஒரு பெண்ணை ஒரு குழு கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதற்கு, அந்தப் பெண் அணிந்திருந்த ஆடைகளே காரணம் என்று நகர ஆளுனர் கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை அந்தப் பெண்கள் செய்திருக்கிறார்கள்.
”குட்டைப்பாவாடை அணிவது எனது உரிமை, நான் எப்படி உடை அணிவது என்பதை எனக்கு நீ சொல்லாதே…., பாலியல் வல்லுறவு செய்பவர்களை நிறுத்தச் சொல்லு…” என்று எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.
”தாம் பாலியல் வல்லுறவு உள்ளாவதைத் தவிர்ப்பதற்கு பெண்கள் பொதுப் பேருந்துகளில் குட்டைப் பாவாடை அணிவதை நிறுத்த வேண்டும்” என்று ஜகார்த்தா நகர ஆளுனர் பௌசி போவா வெள்ளியன்று கூறியிருந்தார்.
அவர் உடனடியாக மன்னிப்புக் கோரிவிட்டார். ஆனால் அவர் கூறிய கருத்து பரவலாக பிரசுரமாகிவிட்டது.
source:bbc.co.uk