Monthly Archives: செப்ரெம்பர் 2011

“விக்கிலீக்ஸ்’ பார்வையில் விழுந்த திமுக

தி.மு.க.,வையும் விட்டு வைக்காத "விக்கிலீக்ஸ்’

புதுடில்லி:"கடந்த 2009ம் ஆண்டில், மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக, சோனியா பிரதமராக வேண்டும் என, தி.மு.க., விரும்பியது’ என்று, விக்கிலீக்ஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2008 ஜூனில், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி டென்னிஸ் டி.ஹூப்பருடன் பேசிய, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான சிவபிரகாசம் என்பவர், "காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரத்தில் தி.மு.க., ஒரு போதும் தலையிடாது. இருந்தாலும், 2009ம் ஆண்டில் மன்மோகன் சிங்கை விட, சோனியாவே பிரதமராக வேண்டும் என்பதே தி.மு.க.,வின் விருப்பம். சோனியா பிரதமராக வேண்டும் என்பதையே தமிழக மக்களும் விரும்புகின்றனர்.

அதே நேரத்தில், பிரதமர் பதவியை ஏற்க, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலும் விரும்பவில்லை. கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி, பிரச்னைகளைத் தீர்ப்பதில் வல்லவர் என்றாலும், அவர் பிரதமராக வேண்டும் என, வடமாநிலத்தவர் வேண்டுமானால் விரும்பலாம்; தென் மாநில மக்கள் அவரை விரும்ப மாட்டார்கள்’ என்று கூறியுள்ளார்.

மேலும், தி.மு.க., தலைவர் கருணாநிதியை சென்னையில், ஒரு காலகட்டத்தில் சந்தித்த, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கும், தான் பிரதமராக தி.மு.க., ஆதரவு தர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.இவ்வாறு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

கஸ்பர் ,கனிமொழியின் கூத்து அம்பலம்

சென்னையில் நடந்த சங்கமம் தில்லுமுல்லு !

என்னடா பாதர் ஜெகத் கஸ்பர் ரெம்பா நாளா மெளனமா இருக்காரே என்று பார்க்கிறீங்களா ? அஞ்ஞாதவாசம் சென்றவர் போல ஒரு அறிவித்தலும் விடாம அடக்கிவாசிக்கிறார் என்று பார்க்கிறீங்களா ? எல்லாமே ஆட்சி மாற்றம் தான். கருணாநிதியும் அவர் மகள் கனிமொழியும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவேளை அதைப்பாவிச்சு கொடி கட்டிப் பறந்த ஆள் ! அதுமட்டுமா "சாஞ்சனா அனுபவம்" என்று இல்லாத ஒரு யாழ்ப்பாணத்துப் பெண்ணை கற்பனையாக உருவாக்கி அவர் சொன்னார் என்று நக்கீரனில் பக்கம் பக்கமாக எழுதியவர். ஈழப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளின் தலைமையையும் விமர்சித்தவர். அதற்கு நக்கிப் பிழைக்கும் நக்கீரனும் ஒரு காலத்தில் களம் அமைத்துக்கொடுத்தது. ஆனால் தற்போது நக்கீரன் கோபாலுக்கும் காஸ்பருக்கு இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை வந்துவிட்டதாம், இப்ப இருவரும் "கா" (கதைக்க மாட்டாங்க) …

சரி விடையத்துக்கு வருமோமில…

கலைஞர் ஆட்சியில் இருந்த காலத்தில கனிமொழியை இவர் கைகுள் போட்டு பின்னர் ஆடாத ஆட்டம் இல்லை. தமிழ் நாட்டில் "தமிழ் மையம்" என்று ஒரு அமைப்பைத் தொடங்கினார் காஸ்பர். இதேவேளை உணர்வாளர் சீமான் அவர்கள் நாம் தமிழர் என்னும் இயக்கத்தை ஆரம்பித்தார். அப்பெயரையே தாம் உருவாக்கிக் கொடுத்ததாகவும் ஆனால் சீமான் தனக்கு துரோகம் செய்து தன்னை நாம் தமிழர் இயக்கத்தில் இருந்து விலக்கிவிட்டதாகவும் தொலைக்காட்சிக்கும் இணையங்களுக்கும் பேட்டிகொடுத்தவர் இந்த காஸ்பர் தான். இப்போது இவர் குறித்த செய்திகள் மெல்ல மெல்லக் கசிய ஆரம்பித்திருக்கு. இவர் வைச்சிருக்கும் தமிழ் மையத்தால் நடாத்தப்பட்ட "சங்கமம்" நிகழ்ச்சிக்கு தமிழ அரசு செலவழித்த காசு 5 கோடி ! இவர்கள் கூடித் கூத்தடிக்க மக்கள் வரிப்பணத்தில் இருந்து கலைஞர் பணம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்.

தமிழ் மையம் என்னும் அமைப்பில் காஸ்பர் கனிமொழி மற்றும் முன் நாள் தமிழகப் பெரும் புள்ளிகளும் இருக்கிறார்கள். இவர்கள் கூடி 2007ம் ஆண்டு சென்னையில் நடத்திய விழாவே "சங்கமம்" ஆகும். சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திராவும் இதில் கணிசமான பங்கு வகித்துள்ளார். இந்த விழா நடைபெறும்போது தமிழக அரசு இதற்காக சிறப்பு ஆணையை உள்துறை மூலம் பிறப்பித்து, விழா நடத்த அனைத்துத் துறைகளும் ஆதரவு தர வேண்டுமென உத்தரவிட்டது. நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள், விளம்பரப் பலகை, பத்திரிகைகளில் விளம்பரம் அனைத்துமே, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் வெளியிடப்பட்டன. இதனால், வேறு வழிகளில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு லாபமாகக் கிடைத்த தொகை, கனிமொழியின் விளம்பரத்துக்கு செலவிடப்பட்டது. 2007ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை, ஐந்து கோடி ரூபாய் அரசு பணம் இந்த வகையில் வீணடிக்கப்பட்டுள்ளது.

அப்போதைய முதல்வரின் மகளால் நடாத்தப்பட்ட நிகழ்ச்சி என்ற ஒரே காரணத்துக்காக, �சங்கமம்� நிகழ்ச்சிக்கு, கிஷ்கிந்தா நிறுவனம் தொப்பிகளை வழங்கியது. ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு ஆடைகள், தொப்பிகள் போன்றவற்றை தயாரித்து வழங்கியது. திரைப்படத் துறையினர் திரையரங்குகளில் இலவச விளம்பரம் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டனர்� என்று சட்ட சபையில் தெரிவிக்கப்பட்டது. அமைச்சரின் இந்தக் கூற்று தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சவுந்திரராஜன், �கனிமொழியைத் தவிர்த்து விட்டு, ஜெகத் கஸ்பாரையும் ஒதுக்கி விட்டு, இதே போன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தும் உத்தேசம் அரசுக்கு உள்ளதா? சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்ற அதே பாணியில் பாரம்பரிய கலைஞர்களை பயன்படுத்தி, அரசு சார்பில் அது போன்ற நிகழ்ச்சி நடத்தப்படுமா?� என்று கேட்டார்.

அப்படியொரு திட்டமே கிடையாது என்ற பதில்தான், சுற்றுலாத்துறை அமைச்சரிடமிருந்து வந்தது!

நான்கு வருடங்களில் ஐந்து கோடி செலவானதற்கு இந்த எகிறு எகிறுகிறார்களே, ஸ்பெக்ட்ரம் மூலம் நான்கே மாதங்களில் கிடைத்தது, எத்தனை கோடி என்பது தெரியுமா ?

இந் நிகழ்ச்சியின் பங்குதாரரான ஜகத் கஸ்பர் மட்டும் தப்பி இருப்பது எப்படி என்று தெரியவில்லை. இது தொடர்பாக அவர் விரைவில் கைதுசெய்யப்படலாம் என்ற சந்தேகங்களும் தற்போது எழுந்துள்ளது.

source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பரபரப்பு காணொளி-தூக்கில் போடவேண்டியவர் கள் வேறு மூவர

தூக்கில் போடவேண்டியவர்கள் வேறு மூவர் – பரபரப்பு காணொளி

மறைந்த பாராதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பாக திருச்சி வேலுச்சாமி குமுதம் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில் இதுவரை வெளிவராத இரகசியங்கள் பலதை வெளியிட்டுள்ளார்.

ராஜீவ்காந்தியைக் கொல்வதற்கு வெடிகுண்டு கட்டிச் சென்ற பெண் என்று கூறப்படும் தனுவின் நெற்றியில் உள்ள பொட்டை முக்கிய தடயமாக அவர் முன் வைத்தார்.

வெடிகுண்டு வெடிப்பதற்கு சுமார் 15 நிமிடங்கள் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிவராசனுக்கு அருகில் மாலையுடன் நிற்கும் தனுவின் நெற்றியில் பொட்டு இல்லை.

வெடிகுண்டு வெடித்து சிதறிக்கிடக்கும் தனுவின் சிதறிய உடலின் நெற்றியில் பொட்டு காணப்படுகிறது. இரண்டு படங்களையும் அவர் பகிரங்கமாகக் காட்டினார். பின் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.

பொட்டு வைத்தபடி குண்டைக் காவிச்சென்ற தனுவின் நெற்றியில் இருந்த பொட்டு குண்டு வெடிப்பில் அழிந்துவிட்டதென்றால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இறந்த பின்னர் அவருடைய நெற்றியில் பொட்டு வந்ததென்றால் அதில் என்ன நியாயம் இருக்கப்போகிறது..?

கொலையாளி ஒரு தமிழ் பெண்தான் என்று காட்டுவதற்காக அந்தப் பொட்டு அணிவிக்கப்பட்டதா..?

இல்லை சிதறிக் கிடக்கும் உடலம் தனுவின் உடலம் இல்லாமல் வேறொரு பெண்ணின் உடலமா..?

இல்லை புகைப்படம் எடுத்த பின் தனு பொட்டு வைத்தாரா..? அப்படி வைத்தால் அந்த நேரம் அவருக்கு எங்கிருந்து வந்தது பொட்டு..?

மேலும்…

சம்பவம் நடைபெற்றபோது ஒரு ஒளிப்படம் எடுக்கப்பட்டதாகவும், அதை இன்றுவரை உள்துறை செயலராக இருந்த கே.ஆர்.நாராயணன் விசாரணைக்காக ஒப்படைக்கவில்லை என்றும், இந்த வழக்கின் மர்மமே அதில்தான் புதைந்துள்ளதாகவும், சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மேலும் பல கேள்விகளை அவர் எழுப்பினார்.

கேள்வி 01. அன்று ராஜீவ்காந்தி விசாரணைகளுக்கு பொறுப்பாக இருந்த ப.சிதம்பரம் அந்த விசாரணை அறிக்கைகள் முற்றாக தொலைந்துவிட்டதாகக் கூறினார்.. இது சரியா..?

கேள்வி 02. கம்யூனிஸ்டான தா. பாண்டியன் அந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர். அவர் ப.சிதம்பரத்திடம் இதுபற்றி கேட்டபோது மழுப்பலான பதிலையே கொடுத்துள்ளார் ஏன் மழுப்பினார்..?

கேள்வி 03. அரசியலை விட்டு முற்றாக ஒதுங்குவதாகக் கூறிய நரசிம்மராவ் ராஜிவ் இறந்ததும் எப்படி மறுபடியும் பிரதமரானார்..?

கேள்வி 04. கொலை நடைபெற்று விசாரணைகள் தொடங்கவில்லை அதற்குள் புலிகளே காரணம் என்று சுப்பிரமணியசாமி முடிவுகட்டி சொன்னது எப்படி..?

கேள்வி 05. சாதாரண பஞ்சாயத்து தலைவராகக்கூட இல்லாத சுப்பிரமணியசுவாமிக்கு இன்றுகூட பூனைப்படையின் பாதுகாவல் எதற்கு..?

கேள்வி 06. ராஜிவின் சொத்துக்களையும் அரசியல் பலத்தையும் அனுபவிக்கும் முக்கியமான நால்வர் இந்த விவகாரத்தில் தொடர் மௌனம் காப்பது எதற்கு..?

கேள்வி 07. இந்த விவகாரத்தின் முக்கியமான சந்தேக நபர்கள் எல்லாம் உயர்ந்த பட்டம், பதவிகளில் தொடர்ந்து நீடிப்பது எப்படி..?

கேள்வி 08. சந்திராசாமிதான் அன்றைய வெடிகுண்டு பெல்டை பூசை செய்து சிவராசனிடம் எடுத்துக் கொடுத்தார் என்ற விவகாரத்தை சொன்ன நபரை கார்த்திகேயன் ஏன் தாக்கி பற்களை உடைத்தார்?

கேள்வி 09. கார்த்திகேயன் புலிகளை மட்டும் குற்றவாளிகளாகக் காட்டுவதற்கு மேல் விசாரணைகளை முன் நகரவிடாது ஏன் தடுத்தார்..?

மேற்கண்ட ஒன்பது கேள்விகளும் மேலும் பல புதிய கேள்விகளுக்கு தூண்டுதலாக அமைகின்றன. நேற்று முன்தினம் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டபோது பேரறிவாளன் உட்பட மூவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கலாம் என்ற முடிவை மு.கருணாநிதியே எடுத்தார்…என்றார். அப்படியானால் அந்த முடிவை அவர் எப்படி எடுத்தார். அவருக்கு பின்னால் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இருந்தாரா..?

கேள்வி 10. விடுதலைப்புலிகள் இதில் எப்படி மாட்டுப்பட்டார்கள்..? புதுமாத்தளன் இறுதி நேரத்திலாவது இந்த உண்மையை விடுவிக்காமல் அவர்கள் ஆடுகளத்தில் இறுகிய மௌனமாக இருநத்து ஏன்..?

கேள்வி 10. தென்னாசிய அரசியலில் என்ன நடக்கிறது.. என்ன நடந்தது.. ஈழத் தமிழர்கள் இதில் ஏன் பகடைக்காய்கள் ஆனார்கள்..?

இதோ திருச்சி வேலுச்சாமியின் பேட்டியைக் கேட்டுப் பாருங்கள்…

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

இலங்கையில் இறங்கிய அமெரிக்க உளவுத்துறைய ின் மர்ம விமானம்: அம்பலம் !

இதற்கு கணக்கு காட்டவேண்டி இருப்பதால் தற்போது தாம் எந்த எந்த நாடுகளுக்கு பயணம் செய்தோம், எங்கிருந்து கைதிகளை எந்த நாட்டிற்கு கொண்டுசென்றோம் என்று எல்லாம் அமெரிக்க உளவுநிறுவனம் சொல்லவேண்டி வந்துவிட்டது. இதனால் அவர்கள் அப்பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். அதில் 2003ம் ஆண்டு மட்டும் 2 தடவைகள் அவர்கள் இலங்கை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார்கள். இங்கே நாம் குறிப்பாக ஒன்றைக் கவனிக்கவேண்டும் அவர்கள் எரிபொருள் நிரப்ப அங்கே சென்றதாக எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை. பொதுவாக இந்தோனேசியாவில் இருந்து இலங்கை சென்றதாகவும், இலங்கையில் இருந்து பின்னர் பாகிஸ்தான் மற்றும் மலேசியா சென்றதாகவும் அவர்கள் பட்டியலிட்டுள்ளார்கள்.

அமெரிக்க உளவுநிறுவனம் பாவித்த தனியார் ஜெட் சேவையின் காசுக்கணக்கே தற்போது இப் பிரச்சனையைக் கிளப்பியுள்ளது. அப்படியாயின் தனியார் ஜெட் விமானத்தில் 2003 மற்றும் 2005 ம் ஆண்டுகளில் இவர்கள் யாரை ஏற்றிக்கொண்டு இலங்கை சென்றார்கள் இல்லை இலங்கையில் இருந்து யாரையாவாது ஏற்றிச் சென்றார்களா என்ற கேள்விகள் எழுகின்றன. பயங்கரவாதிகளை நாடுவிட்டு நாடு கொண்டுசெல்லவே தாம் தனியார் ஜெட் விமானங்களைப் பயன்படுத்தியதாகவும், தாம் தேசிய பாதுகாப்புக்காகவே இதனைச் செய்ததாகவும் சி.ஐ.ஏ யினர் சொல்லி இப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க முயல்கின்றனர். ஆனால் இலங்கை குறித்த கேள்விகளுக்கு இன்னும் விடை காணப்படவில்லை. இது தொடர்ந்தும் மர்மமாகவே உள்ளது. 2003ம் ஆண்டில் இந்தோனேஷியாவில் இருந்து கொழும்பு வந்துசென்றது 2 எழுத்து துரோகியாவும் இருக்கலாமோ தெரியவில்லை ! ஆனால் மர்மங்கள் தொடர்கின்றது.

sources: AFP & washingtonpost

tamil source:athirvu

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

பா.ஜ.,வில் ஐக்கியமாகிறார் ஆந்திரா ஜெகன் : க ாங்கிரசை காலி செய்ய “மாஸ்டர் பிளான்’

ஐதராபாத் : ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், கடப்பா எம்.பி.,யுமான ஜெகன் மோகன் ரெட்டி, கொஞ்சம் கொஞ்சமாக பா.ஜ., பக்கம் சாய்ந்து வருகிறார். சி.பி.ஐ., விசாரணைகளால் மனம் நொந்து போன அவர், ஆந்திராவில், காங்கிரசை வலுவிழக்கச் செய்யப் போவதாக சபதம் பூண்டு, இந்த முடிவுக்கு வந்ததாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி, காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர். அவர், முதல்வராகப் பதவியில் இருந்தபோதே, ஹெலிகாப்டர் விபத்தில், அகால மரணமடைந்ததை அடுத்து, முதல்வர் பதவி தனக்குக் கிடைக்கும் என, ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார், அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி. ஆனால், காங்., தலைமை, ரோசய்யாவை முதல்வராக நியமித்தது. கடுப்படைந்த ஜெகன், காங்., கட்சி, தன்னையும், தன் குடும்பத்தையும் ஓரம் கட்டுவதாகக் கருதி, எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்டார்; போராட்டங்கள் நடத்தினார். இதையெல்லாம், எதிர்கொண்ட காங்., தலைமை, ஜெகனை முற்றிலும் ஒதுக்கத் துவங்கியது.

கோபமடைந்த ஜெகன், காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக் கட்சி துவக்கினார். தனக்கு ஆதரவாளர்கள் அதிகம் உள்ளதாகக் காட்ட, பல பாத யாத்திரைகள் நடத்தினார். இதையடுத்து, ஜெகனுக்கு எதிராக, காங்கிரசின் நெருக்கடி தீவிரமடைந்தது.

சி.பி.ஐ.,யை ஏவி, ஜெகனின் சொத்துக்களை சோதனையிட்டது, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் இறந்து போன ராஜசேகர ரெட்டியை சேர்த்தது ஆகிய காங்கிரசின் நடவடிக்கைகள் தொடர்ந்தன.

இதை உணர்ந்த பா.ஜ., பார்லிமென்ட்டில் ஜெகனுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் துவங்கி உள்ளது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில்,"சி.பி.ஐ., என்பது காங்கிரஸ் ஆதரவு புலனாய்வு நிறுவனமாக மாறிவிட்டது. ராஜசேகர ரெட்டி உயிருடன் இருந்த போது அவரைப் புகழ்ந்த காங்கிரஸ், இப்போது அவரைப் பலிகடாவாக ஆக்கி விட்டது’ என்றார்.

ராஜ்யசபாவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, "வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்.,) இறந்து போன ஒய்.எஸ்.ஆர்., பெயரை சி.பி.ஐ., சேர்த்துள்ளது ஏன்? அவர் உயிருடன் இருந்த போது அவரது ஆட்சியில் ஊழலைப் பற்றி ஒரு காங்கிரஸ் தலைவரும் வாய் திறக்கவில்லை. அவர் இறந்த உடன், அவரது மகனைக் குறிவைத்து அவரது புகழை காங்கிரஸ் குலைக்கிறது’ என குற்றம்சாட்டினார்.

பா.ஜ.,வின் இந்த அதிரடி நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் ஜெகனுக்கு ஆதரவாகவே கருதப்படுகின்றன. ஆந்திராவில் தன் பலத்தை பா.ஜ., அதிகரிக்க வேண்டியுள்ளது. அதேபோல், சி.பி.ஐ., விசாரணையில் இருந்து வெளிவர, ஒரு தேசியக் கட்சியின் ஆதரவு ஜெகனுக்கு வேண்டியுள்ளது.

தற்போது கிருஷ்ணா மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், "என் தந்தை உயிருடன் இருந்த போது அவரைக் கடுமையாக விமர்சித்த பா.ஜ., தற்போது அவர் செய்துள்ள சேவைகளை பாராட்டுகிறது. ஆனால், என் தந்தையால் லாபம் அடைந்த காங்கிரசார், என் மீது புழுதி வாரித் தூற்றுகின்றனர். பா.ஜ.,வைப் பார்த்து காங்கிரஸ் வெட்கித் தலைகுனிய வேண்டும்’ என, சாலையோரக் கூட்டங்களில் காட்டமாகக் கூறி வருகிறார்.

இதையடுத்து, பா.ஜ.,வில் ஜெகன் ஐக்கியமாவார், அல்லது, எதிர்வரும் தேர்தல்களில் பா.ஜ.,வுன் கூட்டணி வைத்து, ஆந்திராவில் காங்கிரசின் பலத்தைக் குறைப்பார் என, ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

source:dinamalar

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized